Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் விடியோ வெளியிட்டார். ஆனால் தனது தவறினாலும் தனது கட்சி ஏற்பாட்டாளர்கள் தவறினாலும், இவ்வளவு மக்கள் இறந்ததற்கு வருத்தம் மன்னிப்பை கோரினாரா?

  • Replies 237
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சம்பவ இடத்துக்கு அருகில் தங்க விரும்பினேன், ஆனால் மேலும் அசம்பாவிதம் வரும் என சொல்லி என்னை அகற்றினர்.

இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இந்த 3 நிமிட விளக்கத்திற்கு 3 நாட்கள் ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ ரிலீஸ் செய்த விஜய்க்கு திமுகவின் 9 கேள்விகள்

30 Sep 2025, 8:24 PM

TVK VIjay DMK

கரூர் துயர சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் நடிகர் விஜய்-க்கு திமுக 9 கேள்விகளை முன்வைத்து விளக்கம் கேட்டுள்ளது.

விஜய் பிரசாரம் செய்த கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கரூர் துயரம் தொடர்பாக அரசு தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, அதில் தமிழக அரசை குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. திமுகவின் @DMKNRIWing
எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டுள்ளதாவது:
தான் நடத்திய ஒரு கூட்டத்தில் மாபெரும் துயரம் ஒன்று நடைபெறும்போது, அதற்கான பொறுப்பை முதலில் தான் ஏற்றுக்கொள்வதுதான் தலைமைக்கான பண்பு. அந்தப் பண்பு உங்களிடம் துளியும் இல்லை என்பது, முழுக்க முழுக்க அரசாங்கத்தைக் குற்றம்சாட்டி நீங்கள் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெளிவாகிறது.

சரி, நீங்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போங்கள். “நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் சொல்லும் உங்களுக்கு சில கேள்விகள்:

  1. நாமக்கல் மாவட்டத்தில் காலை 8.45 மணிக்கு பரப்புரை செய்வதாக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, சென்னையிலிருந்தே காலை 8:30 மணிக்கு கிளம்பியது ஏன்?

  2. மதியம் 12.30 மணிக்கு வரவேண்டிய கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்தது ஏன்?

  3. உங்களைப் பார்ப்பதற்காக காலை முதல் காத்திருந்த உங்கள் ரசிகர்களுக்கு தண்ணீர், உணவு என்று எதையும் கொடுக்காமல் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது ஏன்?

  4. கூட்டம் அளவு கடந்து செல்வதால், பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி காவல்துறை அறிவுறுத்தியபோது, அதை மதிக்காதது ஏன்?

  5. காவல்துறையிடம் நீங்கள் கேட்ட மூன்று இடங்களுமே குறுகலானவை என்று தெரிந்தும், காவல்துறை சரியான இடத்தை வழங்கவில்லை என்று பொய் கூறுவது ஏன்?

  6. நீங்கள் பரப்புரை செய்த பகுதியில் அரசாங்கம் மின் துண்டிப்பு செய்யவில்லை என்றும், ஜெனரேட்டர் இருக்கும் பகுதியின் மேல் உங்கள் ரசிகர்கள் சென்று விழுந்ததால், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் ஜெனரேட்டரை அணைத்தார் என்பது வீடியோ ஆதாரமாகவே உள்ள சூழ்நிலையில், அரசாங்கம் மின் துண்டிப்பு செய்தது என்று பொய் பரப்பியது ஏன்?

  7. உங்களால் கரூர் செல்ல முடியாததற்கு காரணம் சொல்லும் நீங்கள், மூன்று நாட்களுக்குப் பிறகும் உங்கள் கட்சியினரைக் கூட அனுப்பி உதவிகள் செய்யச் சொல்லாதது ஏன்?

  8. கரூரில் மட்டும் ஏன் இந்த சம்பவம் நடைபெற்றது என்று விஷமத்தனமாக கேட்கும் நீங்கள், மற்ற ஊர்களிலும் இவ்வாறு நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களா?

  9. கரூரில் உங்களைப் பார்க்க வந்து இறந்த பலர் உங்கள் ரசிகர்களோ தொண்டர்களோ அல்ல என்று உங்கள் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியது ஏன்? இதுதான் நீங்கள் இறந்த உங்களுடைய ரசிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையா?

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், “எந்த ஒரு தலைவரும் தன்னைப் பார்க்க வந்தவர்கள் இறக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்” என்றார். ஆனால் நீங்களோ, எந்த ஒரு பொறுப்பும் எடுத்துக்கொள்ளாமல், பிரச்சனையை அரசின் பக்கம் திசைதிருப்பி விடும் வகையிலும், உங்களுடைய ரசிகர்களைத் தூண்டிவிடும் வகையிலும் சினிமா பாணியில் வீடியோவில் பேசியிருக்கிறீர்கள்.

ஒரு தலைவருக்கும் நடிகருக்கும் உள்ள வேறுபாடு இதுதான். தொடர்ந்து நடியுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/karur-tragedy-dmk-poses-9-questions-to-vijay-after-his-video-release/#google_vignette

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

அருணா கமிசன் விசாரணை, பொலிஸ் குற்றவியல் விசாரணை நடக்கும் போது அமுதா ஐ ஏ எஸ் சுக்கு இப்படி ஒரு கூட்டம் போடும் அவசியம் என்ன?

வழக்கை குழப்பும் முயற்சி என எடப்பாடி ஒரு பிடி பிடித்துள்ளார்.

எது எப்படி இருப்பினும் கரூர் அசம்பாவிதத்தை வைத்து ஏனைய தமிழ்நாட்டு கட்சிகள் நல்ல அறுவடை செய்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

2 hours ago, goshan_che said:

கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் அவசரமாக அனுமதி

இவர் கைது செய்யப்பட வேண்டியவர்தான்.ஏனென்றால் சம்பவம் நடந்த உடனேயே எவ்வித ஆதாரமும் இல்லாமல் தேவையில்லாத குற்றங்களை மற்றவர்கள் மீது அடுக்கிக்கொண்டிருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

விஜய் விடியோ வெளியிட்டார். ஆனால் தனது தவறினாலும் தனது கட்சி ஏற்பாட்டாளர்கள் தவறினாலும், இவ்வளவு மக்கள் இறந்ததற்கு வருத்தம் மன்னிப்பை கோரினாரா?

இல்லை. ஆனால்…

நாங்கள் சொன்ன விதிகளின் படி நடந்து கொண்டோம். என சொல்லி உள்ளார்.

இதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன்.

நீங்கள் இடத்தை கொடுத்தீர்கள், நீங்கள் விதிகள் போட்டீர்கள் அதன்படி நாம் நடந்தோம்.

இடம் பொருத்தமில்லை என்பதால் தள்ளுமுள்ளு எனில் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

எனவே நான் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை.

இதுதான் நிலைப்பாடு என நினைக்கிறேன்.

அத்தோடு உண்மை விரைவில் வெளியே வரும் என்றால்…

தப்பு தவெக மீது இல்லை என்பதுதானே அர்த்தம் (விஜை பார்வையில்).

2 hours ago, புலவர் said:

இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்

இல்லை. கரூரில் கலவரம் வரும் எனில். திருச்சியில் ஒரு ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்றிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

இந்த 3 நிமிட விளக்கத்திற்கு 3 நாட்கள் ஏன்?

இது என்னுடைய வாழ்க்கை அனுபவம் சார்ந்த ஊகம் மட்டுமே.

Shell shock பாதிப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஆளை வீடியோவில் பார்க்க trauma வில் இருந்து மீளவில்லை என்பது போலவே உள்ளது.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி நம்மை நேசித்த மூன்றாம் நபர்கள் நம் கண்முன்னே இறப்பது என்பது ஜீரணிக்க கடினமான விடயம்.

கூட்டத்திலேயே இந்த திகிலை காண முடிந்தது.

நானும் மனிதனே, மனதளவில் நொருங்கியுள்ளேன் என்ற வார்த்தைகள் சொல்லாமல் சொல்லும் செய்தி இது என நினைக்கிறேன்.

இதை உடைத்து சொல்ல முடியாது.

பைத்தியம் என கதையை முடித்து விடுவார்கள்.

ஆனால் அவர் ஒரு நடிகர் என்பதால் இது நடிப்பாகவும் இருக்கலாம்.

இல்லாமலும் இருக்கலாம்.

கூகிள் ஜெமினியில் இருந்து

Overview

நடிகர் விஜய்யின் தங்கை வித்யா, லுகேமியா (leukemia) எனும் நோயால் உயிரிழந்தார். விஜய்க்கு தன் தங்கை மீது மிகுந்த அன்பு இருந்ததாகவும், அவருடைய இழப்புதான் விஜய்யை மிகவும் அமைதியாக்கியது என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.  

தங்கை இழப்பின் பின்னணி: 

  • விஜய்க்கு தனது தங்கை வித்யா மீது மிகுந்த அன்பு இருந்தது.

  • வித்யாவுக்கு மூன்று வயது இருக்கும்போது லுகேமியா நோய் தாக்கியது.

  • இந்த நோயின் காரணமாக, அவர்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் இழந்தனர்.

தந்தையின் கருத்து: 

  • விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

  • வித்யா தான் விஜய்யின் உலகம் என்றும், அதன் இழப்பு அவனை அமைதியாக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

PTSD எப்போ, எப்படி கிளம்பும் என கணிக்க முடியாத ஒரு விடயம். நீறுபூத்த நெருப்பாக இருந்து பல பத்தாண்டுகளின் பின் கூட ஒரு trigger இல் வெடிக்கும்.

இது 100% எனது ஊகம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதவ் அர்ஜூனாவும் ஐந்து வயதிலேயே தாயை இழந்து விட்டதாகவும், அதே துக்கத்தையே இங்கேயும் அனுபவிப்பதாகவும் சொல்லிக் கொண்டு மறைந்திருக்கின்றார். ஆனாலும் அப்படியே 'புரட்சி...........புரட்சி...........' ஒரு ட்வீட் போட்டு விட்டு, அதை எதிர்ப்புக் காரணமாக அழித்தும்விட்டார்.

இவை ஒரு தலைமைக்குரிய ஒரு பண்பே கிடையாது. சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடும் தன்மைகளே இவை. மருத்துவக் காரணங்கள் இருந்தால், ஒரு தேசத்தையே அழிக்காமல், இவர்கள் இப்பவே ஒதுங்கிக் கொள்வது நலம்.

இப்பொழுது கூட இவர்கள் தங்களின் தவறுகளை உணராவிட்டால், இவர்கள் இறுதி வரை நிற்கப் போவது ஒரு சிறு வட்டம் ஆகவே இருக்கப் போகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரசோதரன் said:

ஆதவ் அர்ஜூனாவும் ஐந்து வயதிலேயே தாயை இழந்து விட்டதாகவும், அதே துக்கத்தையே இங்கேயும் அனுபவிப்பதாகவும் சொல்லிக் கொண்டு மறைந்திருக்கின்றார். ஆனாலும் அப்படியே 'புரட்சி...........புரட்சி...........' ஒரு ட்வீட் போட்டு விட்டு, அதை எதிர்ப்புக் காரணமாக அழித்தும்விட்டார்.

ஓம் அந்த பேட்டியையும் பார்த்தேன்.

பிந்திய செய்தி ஆதவ் இரவோடிரவாக கைதாகலாமாம்.

24 minutes ago, ரசோதரன் said:

இவை ஒரு தலைமைக்குரிய ஒரு பண்பே கிடையாது. சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடும் தன்மைகளே இவை. மருத்துவக் காரணங்கள் இருந்தால், ஒரு தேசத்தையே அழிக்காமல், இவர்கள் இப்பவே ஒதுங்கிக் கொள்வது நலம்.

மிக சரியான கருத்து.

வாழ்க்கையில் எம்மால் என்ன இயலும் என்பதை விட, என்ன இயலாது என்பதை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியம்.

தனக்கிடா சிங்களம் தன் பிடரிக்கு மட்டும் அல்ல நாட்டுக்கே சேதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக உடல், உள பிரச்சனைகளை வைத்து நாம் ஒருவரை ஒரு தொழில் அல்லது சேவையில் இருந்து ஒதுங்க சொல்லமாட்டோம்.

ஆனால் இதற்கு அரசியல் விதிவிலக்கு.

நாளைக்கே ஒரு பெருவெள்ளம் அல்லது சுனாமி வந்து சில நூறு உயிர்கள் போனதும், முதல்வர் போய் வீட்டுக்குள் பூட்டி கொண்டால் அது சரிவராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரூர் கேஸ்.. விஜய்க்குத்தான் பெரிய பின்னடைவு.. நீதிபதி கேட்ட வலுவான கேள்விகள்.. தடுமாறும் தவெக

Shyamsundar IUpdated: Tuesday, September 30, 2025, 15:06 [IST]

What really happened in the Vijay Tamilaga Vetri Kazhagam Case at Karur Court

கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் இன்று வாதம் வைத்தனர். ஏற்கனவே கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவெகவிற்கு பின்னடைவு

இந்த வழக்கில் இன்று தவெகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. வழக்கில் இன்று வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

தவெக தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், எங்களுக்கு தான் அதிக வருத்தம், விஜய் அதனால் தான் வரவில்லை. எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள், அந்த வருத்தத்தால் தான் விஜய் வரவில்லை. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கட்சிக்காரர்களை தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான். சாலை நடுவே உள்ள சென்டர்மீடியனை எடுத்து கொடுத்திருந்தால் பரப்புரை சுலபமாக இருந்திருக்கும்.

Also Read

FIR வேண்டாம்! கடைசி நேரத்தில் ராகுல் காந்தியிடம் உதவி கேட்ட விஜய்! 2 நாட்கள் பனையூரில் நடந்தது என்ன?

அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். நாங்கள் முறையாக விதிகளை பின்பற்றினோம். கூட்டத்தில் சட்ட விரோதிகள் நுழைந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வர வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் இல்லாத நேரத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே வந்தது.

சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று கணித்தோம் . சனிக் கிழமை சம்பள நாள். அதனால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள். கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம்.. மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான், என கணித்தோம் என்று தவெக தரப்பு மழுப்பலான வாதத்தை கோர்ட்டில் வைத்து உள்ளது.

போலீஸ் வைத்த வாதம்

தமிழ்நாடு காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது. அதில், கால தாமதமாக வந்தது மட்டும் இன்றி, விஜய் வாகனம் ராங் ரூட்டில் வந்தது. பரப்புரை கூட்டத்தில் விஜய் பேசும்போது இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தது. விஜய் கேரவனுக்குள் சென்றதும் கூட்ட நெரிசலுக்கு காரணம்.

Recommended For You

என்ன செய்றதுன்னு தெரியல.. விஜய் புலம்பல்! புஸ்ஸி தலைமறைவு.. மற்றவர்கள் Switch Off.. ஆட்டம் கண்ட தவெக

சொன்ன நேரத்திற்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சொன்னபடி 3 மணிக்கே வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் கூறினோம். இன்னும் முன்னே செல்ல வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார்

அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே?, என்று குற்றச்சாட்டுகளை வைத்தது.

நீதிபதிகள் கண்டிப்பு

இதில் நீதிபதிகள் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்ததோடு, அவர்களுக்கு கடுமையான கேள்விகளையும் எழுப்பியது. அதில், கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை. உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் உடனோ மற்ற கட்சித் தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் 10,000 என்று கணித்ததே தவறு. அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே? இபிஎஸ்-க்கு வருவது கட்சிக் கூட்டம்; விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.

தமிழக அரசிடம் 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் எப்படி சொன்னார். எதை வைத்து 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று சொன்னீர்கள்? விஜய்க்கு இது தெரியுமா? அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா தெரியாதா? சொல்லுங்க? மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை.

நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்? என கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார்.

https://tamil.oneindia.com/news/chennai/what-really-happened-in-the-vijay-tamilaga-vetri-kazhagam-case-at-karur-court-739575.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

மிக காத்திரமான, நியாயமான கேள்விகளை தவெக விடம் கேட்டுள்ளார் நீதிபதி.

காவல்துறையிடம்?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

நீதிபதி

இதற்கு 3 நீதிபதிகளை நியமித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

இவை ஒரு தலைமைக்குரிய ஒரு பண்பே கிடையாது. சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடும் தன்மைகளே இவை. மருத்துவக் காரணங்கள் இருந்தால், ஒரு தேசத்தையே அழிக்காமல், இவர்கள் இப்பவே ஒதுங்கிக் கொள்வது நலம்.

உண்மை!இப்படிப்பட்ட உளவியல் பாதிப்புள்ள ஒருவரால் எப்படி மக்களை வழிநடத்த முடியும்.முதலில் விஜை ரசிகர்மன்றத்தலைவரை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தூக்கி விட்டு விஜயகாந் பண்ருட்டி இராமச்சந்திரனை வைத்திருந்தது போல அரசியல் அறிவு கொண்ட அரசியல் சாணக்கியரை பொதுச்செயராளராக அமர்த்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் சம்பவத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அனுப்பியிருப்பது சில செய்திகளை சொல்கிறது.

கரூர் துயர சம்பவத்துக்கு திமுக காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லார் மனதிலும் இருக்கிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பரிடம் இந்த செய்தியை சொன்னபோது அவரது முதல் ரியாக்ஷன் திமுகவை பற்றி தான் இருந்தது. ஏரியா மளிகை கடை அண்ணாச்சி திமுகவை வறுத்தெடுத்து விட்டார். மக்கள் செண்டிமெண்ட் விஜய் பக்கம் தான் இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. விஜய் பக்கம் தவறு இருக்கிறது என்றாலும் அதை மன்னிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

திமுகவின் வேகமான நடவடிக்கைகளே அவர்களுக்கு வில்லனாகி போனது. கரூர் அரசு மருத்துவமனையின் முதல் விஷுவல் காட்சிகளை மக்கள் பார்க்கும் பொழுது அங்கெ செந்தில்பாலாஜி இருந்தது, அடுத்த ஒரு மணி நேரத்தில் அன்பில் மகேஷ் அங்கெ வந்தது, சென்னையில் முதல்வர் தலைமை செயலகம் சென்றது, சம்பவம் நடந்து முழுமையாக இறப்பு எண்ணிக்கை கூட வெளிவருவதற்கு முன்னதாக 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. அதையடுத்து உடனடியாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது, இரவோடு இரவாக ஸ்டாலின் கரூர் வந்தது, துபாயிலிருந்து உதயநிதி வந்து சென்றது என திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் ஜெட் வேகத்தில் துல்லியமாக இருந்தது. அந்த அதீத துல்லியமே சந்தேகப்பட வைத்தது.

இதே திமுக ஆட்சியில் நடக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுங்கள் என்று பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொண்டை தண்ணீர் வத்த கத்திய போதும் கண்டுகொள்ளாத ஸ்டாலின் அரசு, இந்த சம்பவத்தில் யாருமே எதையுமே கேட்கும் முன்னர், எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டது. திமுக இவ்வளவு விரைவாக செயல்படுவதிலேயே சந்தேகம் பலமானது.

தனது துரித செயல்பாடுகள் மூலம் ஒட்டுமொத்தமாக விஜயின் மீது பழி போட்டுவிடலாம் என்கிற திமுகவின் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் மண்ணை வாரி போட்டன. எடப்பாடி, சீமான் இருவருமே அடக்கி வாசித்தனர். உச்சமாக அண்ணாமலையின் பிரஸ்மீட் மக்களின் பார்வையை ஒட்டுமொத்தமாக திமுக பக்கம் திருப்பியது. அரசு, மக்கள், விஜய் என்று அனைவர் மீதும் குறை சொன்னவர், அரசின் நிர்வாக தோல்வியை தெளிவாக சுட்டிக்காட்டியதை கட்சி பாகுபாடின்றி மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

அந்த பக்கம் திமுகவும் தன் பங்குக்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை இறக்கி விட்டது. அரசின் மீது எந்த தவறும் இல்லை, விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மீது தான் மொத்த தவறும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த வாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் அண்ணாமலை சொன்னது போல் மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டரை சஸ்பெண்ட் செய்திருந்தால் கூட ஓரளவு திமுக பக்கம் நியாயம் இருந்திருக்கும்.

நேற்று வரை விஜய்க்கு தனது பூரண ஆதரவை வழங்கிய மீடியா அப்படியே யூடர்ன் போட்டது. கரூர் பிரச்சார காட்சிகளை வைத்து தவறு எங்கே நடந்தது என்று விசாரணை ஆரம்பித்தார்கள், விஜய் ரசிகர்களின் அடாவடிகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பினார்கள்.

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பி வந்தார்கள்.

திமுகவின் தொடர் நடவடிக்கைகளை போல் பாஜகவும் தொடர்ச்சியாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழக பாஜக தலைவர்கள் அனைவருமே கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மத்திய நிதியமைச்சர் நேரில் கரூர் விரைந்தார். இதற்கு அடுத்த கட்டமாக தான் உண்மை கண்டறியும் குழு.

இத்தனை அரசியல் நிகழ்வுகளையும் சேர்த்து பார்த்தால் இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் நமக்கு புரிகிறது.. ஏனெனில் அரசியல் கட்சிகள் ஒரு பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள் என்றால் அதன் மூலம் சில ஆதாயங்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம்.

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை காட்சிகளை பார்த்த பொழுதே அவர்களது அறிக்கை எப்படி இருக்கும் என தெளிவாக தெரிகிறது.

அதே போல் உண்மை கண்டறியும் குழுவிடம் மக்கள் சொன்ன விஷயங்கள், மற்றும் அவர்களது கேள்விகளை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஆளும்கட்சிக்கு எதிராக தான் அறிக்கை கொடுப்பார்கள் என்பது வெளிப்படை.

ஆக இந்த சம்பவத்தில் திமுகவுக்கு நேர் எதிர் நிலைப்பாடு எடுக்கிறது பாஜக.

அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்பதற்காக இதை செய்கிறது என்று கடிவாளம் கட்டியது போல் ஒற்றை பார்வையில் இந்த நிகழ்வுகளை பார்க்கக்கூடாது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணிகள் இருக்கிறது.

அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்பதை விடவும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் கூட அது பாஜகவுக்கு வெற்றி தான். ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருக்கிறார் என்ற செய்தியை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ராகுல் + விஜய் பேச்சு செய்தி பரவக்கூடாது என்பதற்காக தான் விஜய் + குருமூர்த்தி சந்திப்பு என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்பது இப்போது புரியும்.

கரூர் துயரத்துக்கு பின்னால் திமுக இருக்கிறது, செந்தில்பாலாஜி இருக்கிறார் என்ற சந்தேகங்களை இன்னும் மக்கள் மனதில் ஆழமாக விதைத்தால் கூட அது தேர்தல் அரசியலுக்கு பயன்படும்.

2026 தேர்தலில் செந்தில்பாலாஜியை பெரிதும் நம்பியிருக்கிறது திமுக. அந்த இடத்தில கொஞ்சம் டேமேஜ் செய்ய முடியும். நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் செண்டிமெண்ட் ஒத்துழைத்தால் செந்தில்பாலாஜியை தள்ளி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது செந்தில்பாலாஜியால் திமுகவுக்கு பயனில்லாத ஒரு நிலையை உருவாக்கலாம்.

அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு நேர் எதிரான ஒரு அறிக்கையை பாஜக முன்வைக்கும் போது, திமுகவுக்கு எதிராக இருப்பவர்கள் அதை ஆதரித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இங்கே பாஜகவுக்கு எதிராக ஒரு பொதுக்கருத்தை முன்வைத்து அதை எப்படி அனைத்து கட்சிகளையும் திமுக ஏற்றுக்கொள்ள வைத்ததோ, அதே அரசியலை இன்று திமுகவுக்கு எதிராக செய்யப்போகிறது பாஜக.

கரூர் சம்பவத்தில் மக்கள், ஒன்று திமுகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும், அல்லது பாஜகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். விஜயும் பாஜக வெளியிடும் அறிக்கையை ஆதரித்தே ஆக வேண்டும். இது போன்ற செக்மேட் அரசியலை திமுக தான் எப்போதும் செய்யும், இன்று பாஜக அதை திறம்பட செய்கிறது.

அரசுத்தரப்பின் தோல்விகளை நீதிமன்றம் கேள்வி கேட்கும் பொழுது திமுகவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும். திமுக எப்போதும் கேள்விகளுக்குள் சிக்கிக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் தற்போது விஜய் தரப்பு மற்றும் பாஜக தரப்பு இணைந்து கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதனால் தான் விஜய் பாஜக பக்கம் போகிறார், விஜயை ஆர் எஸ் எஸ் தான் இயக்குகிறது என்ற நேரெட்டிவை நேற்றே கையில் எடுத்திருக்கிறது திமுக.

ராகுல் + விஜய் பேச்சு அவர்கள் தொடர்பில் இருப்பதை காட்டுகிறது. விஜயுடன் ராகுல் பேசியிருக்கிறார் என்று தெரிந்து தான், ஸ்டாலினை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார் ராகுல் என்று செய்தி வெளியே வந்ததோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஸ்டாலினை தொடர்பு கொண்டது பற்றி ராகுல் ட்வீட் போடவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

கரூர் துயர சம்பவம் தமிழக அரசியலில் சில திருப்பங்களை ஏற்படுத்த போகிறது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.

பின்குறிப்பு : இந்த பதிவு விஜயை நியாயப்படுத்துவதோ, திமுகவை நியாயப்படுத்துவதோ, அல்லது பாஜகவை நியாயப்படுத்துவதோ அல்ல. நடக்கின்ற சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியலை சுட்டிக்காட்டுவதற்கான பதிவு. இவையனைத்துமே என்னுடைய அனுமானங்கள் மட்டுமே. இந்த சம்பவத்தை பொறுத்தவரை விஜய், அரசு, மக்கள் என்ற வரிசையில் அனைவரின் மீதும் தவறு இருக்கிறது என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

இது ஒரு பாஜக ஆதரவாளரின் கருத்து என்றாலும் சிலவிடயங்களில் கேள்விகளில் நியாயமிருக்கிறது.

தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்தவர்களைக் கண்டு பிடிக்காமல் இருக்கும் திமுக அரசு இரவோடு இரவாக இவ்வளவு வேகமாக ஏன் செயல்படுகிறது?

11 hours ago, goshan_che said:

கரூர் கேஸ்.. விஜய்க்குத்தான் பெரிய பின்னடைவு.. நீதிபதி கேட்ட வலுவான கேள்விகள்.. தடுமாறும் தவெக

Shyamsundar IUpdated: Tuesday, September 30, 2025, 15:06 [IST]

What really happened in the Vijay Tamilaga Vetri Kazhagam Case at Karur Court

கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் இன்று வாதம் வைத்தனர். ஏற்கனவே கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவெகவிற்கு பின்னடைவு

இந்த வழக்கில் இன்று தவெகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. வழக்கில் இன்று வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

தவெக தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், எங்களுக்கு தான் அதிக வருத்தம், விஜய் அதனால் தான் வரவில்லை. எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள், அந்த வருத்தத்தால் தான் விஜய் வரவில்லை. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கட்சிக்காரர்களை தடுக்கலாம், மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான். சாலை நடுவே உள்ள சென்டர்மீடியனை எடுத்து கொடுத்திருந்தால் பரப்புரை சுலபமாக இருந்திருக்கும்.

Also Read

FIR வேண்டாம்! கடைசி நேரத்தில் ராகுல் காந்தியிடம் உதவி கேட்ட விஜய்! 2 நாட்கள் பனையூரில் நடந்தது என்ன?

அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். நாங்கள் முறையாக விதிகளை பின்பற்றினோம். கூட்டத்தில் சட்ட விரோதிகள் நுழைந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வர வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் இல்லாத நேரத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே வந்தது.

சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று கணித்தோம் . சனிக் கிழமை சம்பள நாள். அதனால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள். கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம்.. மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான், என கணித்தோம் என்று தவெக தரப்பு மழுப்பலான வாதத்தை கோர்ட்டில் வைத்து உள்ளது.

போலீஸ் வைத்த வாதம்

தமிழ்நாடு காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது. அதில், கால தாமதமாக வந்தது மட்டும் இன்றி, விஜய் வாகனம் ராங் ரூட்டில் வந்தது. பரப்புரை கூட்டத்தில் விஜய் பேசும்போது இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தது. விஜய் கேரவனுக்குள் சென்றதும் கூட்ட நெரிசலுக்கு காரணம்.

Recommended For You

என்ன செய்றதுன்னு தெரியல.. விஜய் புலம்பல்! புஸ்ஸி தலைமறைவு.. மற்றவர்கள் Switch Off.. ஆட்டம் கண்ட தவெக

சொன்ன நேரத்திற்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. விஜய் சொன்ன நேரத்திற்கு வராததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சொன்னபடி 3 மணிக்கே வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் கூறினோம். இன்னும் முன்னே செல்ல வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார்

அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே?, என்று குற்றச்சாட்டுகளை வைத்தது.

நீதிபதிகள் கண்டிப்பு

இதில் நீதிபதிகள் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்ததோடு, அவர்களுக்கு கடுமையான கேள்விகளையும் எழுப்பியது. அதில், கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை. உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் உடனோ மற்ற கட்சித் தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம். அவர் டாப் ஸ்டார். பெண்கள், குழந்தைகள் அதிகம் வருவார்கள். நீங்கள் 10,000 என்று கணித்ததே தவறு. அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே? இபிஎஸ்-க்கு வருவது கட்சிக் கூட்டம்; விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.

தமிழக அரசிடம் 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் எப்படி சொன்னார். எதை வைத்து 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று சொன்னீர்கள்? விஜய்க்கு இது தெரியுமா? அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா தெரியாதா? சொல்லுங்க? மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை.

நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்? என கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார்.

https://tamil.oneindia.com/news/chennai/what-really-happened-in-the-vijay-tamilaga-vetri-kazhagam-case-at-karur-court-739575.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

மிக காத்திரமான, நியாயமான கேள்விகளை தவெக விடம் கேட்டுள்ளார் நீதிபதி.

காவல்துறையிடம்?

என்னய்யா இது?விஜய் தரப்பு வாதம் உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது.பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் சண்டை பிடித்து ஆசிரியரிடம் முறையிடுவது போன்று குழைந்தனமாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

என்னய்யா இது?விஜய் தரப்பு வாதம் உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது.பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் சண்டை பிடித்து ஆசிரியரிடம் முறையிடுவது போன்று குழைந்தனமாக இருக்கின்றது

எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

ஆனால் இந்த விடயத்தில் ஒன் இந்தியா (தட்ஸ்தமிழ்) கொஞ்சம் அல்ல ரொம்பவே திமுக சார்பு நிலை எடுக்கிறது (வழமையாக தேர்தல் நெருங்கும் போது திமுக சார்ப்பாக மாறுவார்கள் -கவனித்துள்ளேன்). ஆகவே இப்படித்தான் நடந்ததா என தெரியவில்லை.

விகடன் எழுதினால் தெரியும்.

ஆதவ் டெல்லி போயுள்ளாராமே?

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் சம்பவத்தால் நெருக்கடியில் தவெக: ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் டெல்லி பயணம்

1 Oct 2025, 10:55 PM

Aadhav Arjuna

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, 5 பேருடன் தனி விமானத்தில் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தவெக தலைவர் நடிகர் விஜய் கரூரில் நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் நிர்மல் குமார் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். முன்னதாக, கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஆதவ் அர்ஜூனா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த பரபரப்பான- நெருக்கடியான சூழ்நிலையில் ஆதவ் அர்ஜூனா திடீரென டெல்லி சென்றுள்ளார் என்கின்றன தகவல்கள்.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் 5 பேருடன் ஆதவ் அர்ஜூனா டெல்லி சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

https://minnambalam.com/karur-tragedy-puts-tvk-in-crisis-aadhav-arjuna-flies-to-delhi-on-private-jet/

  • கருத்துக்கள உறவுகள்

https://x.com/sindhan/status/1973707471329116265?s=12https://x.com/sindhan/status/1973707471329116265?s=12

22 hours ago, goshan_che said:

ஆதவ் டெல்லி போயுள்ளாராமே?

14 hours ago, கிருபன் said:

சென்னையில் இருந்து தனி விமானத்தில் 5 பேருடன் ஆதவ் அர்ஜூனா டெல்லி சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

டெல்லியில் கொள்கை எதிரிகள்தான் இருக்கிறார்கள்.அவர்களைச்சந்தித்து ஒரு பேக்கரி டீல் போடப்போகிறார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

https://x.com/sindhan/status/1973707471329116265?s=12https://x.com/sindhan/status/1973707471329116265?s=12

டெல்லியில் கொள்கை எதிரிகள்தான் இருக்கிறார்கள்.அவர்களைச்சந்தித்து ஒரு பேக்கரி டீல் போடப்போகிறார்களோ?

அதான் கரூரில் ஒரு மூ.சந்தில் வைத்து வீரவாகுவை முங்கு முங்கு எண்டு மொங்கிவிட்டார்களே…இனி ஐயரிடம் டீல் போடுவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வீரவாகு வந்திருக்க கூடும்.

வீரவாகு கொடுப்பதை கொடுக்க ஒத்து கொண்டால், ஐயர் பேக்கரியை கொடுப்பார்.

ஆனால் இது வெளியே கடுகளவு கசிந்தாலும் வீரவாகு மானம் அம்பேல்😂.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

வீரவாகு கொடுப்பதை கொடுக்க ஒத்து கொண்டால், ஐயர் பேக்கரியை கொடுப்பார்.

விஜை எனக்கு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தாலும் கொள்கை எதிரி சும்மா விடுவாரா?தங்களுக்கு ஆதரவான அறிக்கை விடுமாறு கேட்பார்கள்.அவரும் அரசியல் எதிரியால் எனது ரசிகர்கள்41 பேரைப் பல கொடுத்து விட்டேன்.கொள்கை எதிரியை விட அரசியல் எதிரி மேல் என்று சொல்லி ஆதரவாக அறிக்கை விடச்சொல்வார்கள்.

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, புலவர் said:

விஜை எனக்கு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தாலும் கொள்கை எதிரி சும்மா விடுவாரா?தங்களுக்கு ஆதரவான அறிக்கை விடுமாறு கேட்பார்கள்.அவரும் அரசியல் எதிரியால் எனது ரசிகர்கள்41 பேரைப் பல கொடுத்து விட்டேன்.கொள்கை எதிரியை விட அரசியல் எதிரி மேல் என்று சொல்லி ஆதரவாக அறிக்கை விடச்சொல்வார்கள்.

கருணா இயக்கத்தை விட்டு விலகிய பின்னும்….

சுப முத்துகுமார் கொலைக்கு சற்று முன் சீமானுக்கு ஏற்பட்டதை போன்றதுமான…

ஒரு இக்கட்டு விஜைக்கு ஏற்பட்டுள்ளது என்கிறீர்கள்.

வாய்ப்புகள் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் எதிரியை விட கொள்கை எதிரி மேல் என்று நினைக்கும் வாய்ப்பு உள்ளது.

சீமான் அனைத்து இழப்புகளையும்(சுப முத்துக்குமார்,கலயாணசுந்தரம் ,ராஜீவ் காந்தி ,காளியம்மாள்) தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.அதுதான் ஒரு உறுதியான தலைமைக்கு இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/19ip5pJTWa/

போற போக்க பார்த்த ஒருத்தனுக்கும் ஜாமீன் கிடைக்காது போல

விஜய்-க்கு விழுந்த அடிமேல் அடி - நீதிமன்றத்தின் 10 கண்டனங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.