Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமணிக்கு வைகோ கேள்வி

Featured Replies

வீரமணிக்கு வைகோ கேள்வி

.

Monday, 05 November, 2007 01:51 PM

.

சென்னை, நவ.5: ஈழத் தமிழர்களுக்கு சேகரிக்கப் பட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்காமல் துரோகம் செய்யும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். அத்தகைய மத்திய கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என்று கூறுகின்ற துணிச்சல் திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு உண்டா? என்றும் அவர் வினவியிருக்கிறார்.

.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு நிலை மேற்கொண்டு உள்ள அதிமுகவோடு மதிமுக கூட்டணி தொடர்வது சரியல்ல என்றும், விலக வேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழப்பிரச்சனையில் விடுதலைப்புலிகள் குறித்த அதிமுக வின் அணுகுமுறையை அறிந்து இருந்த நிலையில் தான் வீரமணி, 2006 சட்டமன்றத் தேர்தலில் வைகோ அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்றும் வற்புறுத்தினார். தானே தூது செல்வதாகவும் கூறினார். பின்னர் திடீரென்று அவரே திமுகவை ஆதரித்தார். தற்போது அதிமுகவை வைகோ எதிர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்.

மதிமுகவை அழிக்க நினைக்கின்ற சக்திகளும், அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுகவை வேறு படுத்த திட்டமிட்டு விமர்சனங்களைச் செய்கிறார்கள். அவர்கள் அனைவ ருக்கும் பதில் சொல்லும் முகமாகத் தான் சில கேள்விகளை எழுப்புகிறேன்.

தமிழ் ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் கடந்த ஆண்டு நான் ஆதரித்து பேசியதற்குக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, என்னை கைது செய்ய வேண்டும் என்றும், மதிமுகவை தடை செய்ய வேண்டும் என்றும் கூக்குரல் எழுப்பினார்களே, அப்போதெல்லாம் இந்த ஆலோச னையாளர்கள் வாய் மூடிக்கிடந்தது ஏன்?

மதிமுக அமைப்பு செயலாளர் சீமா பசீரும், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறனும், தமிழக அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது அதைக் கண்டிக்காதது ஏன்?

சிங்கள அரசு நடத்தும் இன படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்டு ரேடார்களையும், ஆயுதங் களையும் வழங்கி மன்மோகன் சிங் அரசு ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்து வருகிறதே?

பசியால், நோயால் மடிகின்ற ஈழத்தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் திரட்டப்பட்ட உணவையும், மருந்தையும் அனுப்பிட, செஞ்சிலு வைச் சங்கத்துக்கே அனுமதி வழங்காமல் மத்திய அரசு வஞ்சகம் புரிகிறதே?

தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் அந்த அரசில் இருந்து, திமுக வெளியேற வேண்டும் என்று வீரமணி உள்ளிட்டோர் கூறும் துணிச்சல் உண்டா?

புலிகளை மன்னிக்க மாட்டோம்' என்று இன்றும் சொல்லுகிற காங்கிரசுடனான உறவை, திமுகவும் மற்ற கட்சிகளும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்ல வீரமணி தயாரா?

1998ம் ஆண்டில், திமுக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஜெயின் கமிஷனிலும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாகக் கூறி, அந்தத் திமுகவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றாததால் ஐக்கிய முன்னணி அரசைக் கவிழ்த்த அதே காங்கிரஸ் கட்சியோடு, 2004ல் திமுக எந்த அடிப்படையில் கூட்டணி அமைத்தது?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டவர்களா? எத்தனையோ பிரச்சனைகளில் எதிரும் புதிருமான நிலையைத்தானே மேற் கொள்ளுகின்றனர்?

மதிமுக தனது அடிப்படைக் கொள்கைகளில், லட்சியங்களில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் அதிமுக உடன் தோழமையோடு மதிப்பும், அன்பும், நம்பிக்கையும் கொண்டு, தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிற திமுக பாசிச அரசை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டும் ஜனநாயகக் கடமையைத் தொடர்ந்து செய்யும் என்று வைகோ கூறியுள்ளார்.

செய்தி மூலம் மாலைச்சுடர்

Edited by sukan

ஆக மொத்தத்தில் "ஏன் களவெடுக்கிறாய்?" என்று கேட்டால் அதற்க்கு, "நீ ஏன் களவெடுத்தாய்?" என்று எதிர் கேள்வி கேட்கும் நிலைக்கு போய்விட்டார் வை. கோ**

அதாவது தனது கருத்தும் செயற்பாடும் வேறு வேறு என்று அரசியல் கற்றுத்தருகிறார்.

இந்தக் கூட்டணி அமைக்கப்பட்ட போது இங்கே களத்தில் யாரோ கூறினார்கள், "தேர்தலில் யார் வென்றாலும் இனி தமிழகம் ஈழத்தமிழர்களுக்கே ஆதரவு, ஏனென்றால் வை.கோவின் அழுத்தத்தால் அ.தி.மு.க வாலாட்டாது என்றும், வைத்தியர் இராமதாசு கலைஞருக்கு கால்கட்டுப் போட்டுவிடுவார்" என்று ஆனால் இப்போது ஒருவர் கவிதை வடிக்கிறார், அடுத்தவர் ஆட்சியை கலைக்கச் சொல்கிறார்.

Edited by எழுவான்
பண்போடு கருத்துக்களை முன்வைக்கவும் - எழுவான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2004 ல் நடந்த நாட்ளுமன்ரத் தேர்தலின் போது தி.மு.க உடன் சேர்ந்து, அதே காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருந்ததையும்,

பாசிச ஜெயலலிதாவின் ஆட்சியை எதிர்த்து நெல்லையில் இருந்து, சென்னைக்கு நடை பயணம் மேற்கொண்டதையும் , கேவலம் கூடுதல் இடங்களுக்காகவும், ஜெயலலிதா தந்த பணத்திற்காகவும், 19 மாதங்கள் பொடா சட்டத்தில் அநியாயமாய் கைது செய்து வைத்திருந்த அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த வை.கோ மறந்துவிட்டார் போல் இருக்கிறது. இவர் எல்லாம் ஒரு அரசியல் வியாபாரி தானே ஒழிய, மக்கள் நலனுக்காக போராடும் தூய்மையான அரசியல்வாதி கிடையாது.

நண்பர்களே அவர்களின் அரசியல் நமக்கு வேண்டாம் வைகோவும் முக்கியம் கலைஞரும் முக்கியம் ராமதாஸும் முக்கியம் ஆகவே நாம் எம் வட்டதுகுள் நிற்போம் வீணாக அவர்களின் அரசியலை விமர்சிக்கவேண்டிய தேவை நமக்கு இல்லை என நினைகிறேன் இன்றும் நமக்கு தேவை ஆதரவே நாம் எழுதுவதால் நாம் என்ன செய்ய முடியும் வீணான விவாதத்தால் நமக்கு இருக்கும் ஆதரவு தன்மையை வீணாக இழக்க வேண்டுமா யாழ் களம் தமிழ் நாட்டு முக்கிய புள்ளிகள் பார்வையிடும் தளம் ஆகவே ஆராய்ந்து கருத்துகளை பதிந்தால் சிறப்பு என நான் நினைகின்றேன்

தமிழ்நாட்டு முக்கிய புள்ளிகள் பார்வையிடுவார்களா? அடடா இன்னும் காரமாக எழுதவேண்டும் போல் உள்ளது, ஆனால் களவிதிகள்தான் தடுக்கிறது.

ஏன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவானேன்? அரசியல்வாதிகள் தமாக உணர்ந்து எதையும் செய்வதில்லை. அழுத்தங்களுக்கும் வாய்ப்புகளுக்குமே பணிபவர்கள் இவர்கள். இன்று தோள்கொடுக்காதவர்கள் நாளை நாம் வென்ற பிறகு எதற்கு?

ஈழத்தை ஆதரிக்கும் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை களைந்து ஈழத்தமிழருக்காக அவர்களின் உயிர்களுக்கா ஒருதரம் ஒன்றுபடலாம் தானே?

இதன் மூலம் ஆட்சியைகலைக்க முடியாத ஒரு நெருக்கடியை மத்திய அரசிற்க்கு கொடுத்து, அதன் மூலம் வாய்ப்பேச்சுகளில் அன்றி நடமுறையில் எமக்கு உதவலாம் தானே?

  • தொடங்கியவர்

அரசியலில் எப்படி அணிசேர்ந்தாலும் ஈழத்தமிழருக்கான ஆதரவு அரசியலுக்கும் அப்பால் தொடரும் என்பதற்கு வைகோ நல்ல உதாரணம். ஜெயலலிதாவுக்காக அவர் ஈழத்தமிழருக்காக குரல்கொடுப்பதை சற்றும் குறைத்ததில்லை. அந்தவகையில் வைக்கோ மிக போற்றப்பட வேண்டியவர்.

தமிழக மக்கள் சார்ந்த அரசியல் மிக சிக்கல் நிறைந்தது. மத்திய அரசின் ஆதிக்கம். கன்னட ஜெயலலிதா சுப்பிரமணிய சாமி சோ போன்ற ஆதிக்க சக்கதிகளின் கெடுபிடிகள். சாதாரண இரங்கலுக்கே ஆட்சிக்கவிழ்ப்பு பற்றிய கோசங்கள் என்ற வகையில் உள்ளது.

ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்து 19 மாதங்கள் சிறை இருந்தும் அவர் தனது குரலை நிறுத்தியதில்லை. இந்த தண்டனையை ஏற்படுத்திய கன்னட ஜெயலலிதாவுடன் அரசியல் கூட்டு என்பதும் அதைதாண்டியும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பது என்பதும் தனியே அரசியல் முகத்துடன் அணுகுவதற்கும் அப்பால் அவரின் உணர்ச்சி நிலையை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய,அதிலும் தமிழ் நாட்டு அரசியல் நிலைமைக்கு ஏற்ப பல்டி அடிக்க வேண்டியது அங்குள்ள நியதி.வை. கோ அதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.ஆனால் அன்றும் இன்றும் வை.கோ ஈழ தமிழருக்காக குரல் கொடுக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இப்போது ஒருவர் கவிதை வடிக்கிறார், அடுத்தவர் ஆட்சியை கலைக்கச் சொல்கிறார்.

வைக்கோ கண்டித்தார்.

கலைஞர் கவிதை எழுதினார்

கலைஞரை ஜெயலலிதா கண்டித்தார்.

காங்கிரஸ் கலைஞரைக் கண்டித்தது.

காங்கிரஸ் கலைஞரைக் கண்டித்தபின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. அதேபோல வைக்கோ - ஜெயலலிதா கூட்டணி தொடர்வதில் தவறில்லை.

ஜெயலலிதாவின் விரோதம் வாய்ப்பேச்சில் மட்டும்தான் நிற்கிறது. ஆனால் மத்திய அரசின் செயல் ரேடர்கள் போராயுதங்கள் எண்டு ஈழத்தமிழரை அழிக்கும் வகையில் தொடர்கிறது. ஆனால் கலைஞர் கண்டும் காணாது போலத்தான இருக்கிறது.

கேவலம் கூடுதல் இடங்களுக்காகவும், ஜெயலலிதா தந்த பணத்திற்காகவும், 19 மாதங்கள் பொடா சட்டத்தில் அநியாயமாய் கைது செய்து வைத்திருந்த அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த வை.கோ மறந்துவிட்டார் போல் இருக்கிறது. இவர் எல்லாம் ஒரு அரசியல் வியாபாரி தானே ஒழிய, மக்கள் நலனுக்காக போராடும் தூய்மையான அரசியல்வாதி கிடையாது.

ஜெயின் கொமிசனின் அறிக்கையைத் தொடர்ந்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த மூன்றாவது அணியிலிருந்து திமுகவை விலக்கவில்லை என்ற தமது வற்புறுத்தலை அந்த அணி ஏற்கவில்லை என்பதற்காக அதன் ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது.

அதனைத் தொடர்ந்து வந்த பிஜேபி ஆட்சி ஒரு வருடத்திற்குள் பதவியிழந்தபோது தமது கொள்கைக்கு எதிர் துருவமாக இருந்த பிஜேபியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு பின்னர் திமுக ஆட்சியில் பங்கேற்க வில்லையா?

அதனைத் தொடர்ந்து வந்த தேர்தலில் முன்னர் தம்மை அவமானப்படுத்திய காங்கிரசுடன் திமுக மீண்டும் கூட்டணி அமைக்கவில்லையா?

மத்தியில் எதிர் எதிர் கட்சிகளுடன் கூட்டணியமைத்தபோது திமுக என்ன கொள்கைகளைப் பார்த்ததா? தமக்கு நடந்த அவமானத்தைப் பார்த்ததா?

தயவுசெய்து தமிழக அரசியல் எங்களிற்கு வேண்டாம். தமிழகத்திலிருந்து நீட்டப்படும் அனைத்து ஆதரவுக் கரங்களையும் பற்றிக்கொள்வோம். தேவையற்ற விமர்சனங்களை விட்டுவிடுவோம்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய கட்சிகளில் ஒன்று மட்டும் தான் ஆட்சி அமைக்க முடியும். மற்றைய கட்சிகள் இக்கட்சிகளில் ஒன்றுக்கு ஆதரவு குடுத்துத்தான் தங்களது இருப்பினை நிலை நாட்ட முடியும். அந்த வகையில் தான் வை.கோ அவர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்தார். ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்தாலும் அவர் ஈழத்தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் கொண்டுள்ள பற்றினால் தொடர்ந்து ஈழத்துக்கு ஆதரவு தந்து வருகிறார். எங்களுக்காக சிறைச்சாலை சென்றவர். நன்றி உணர்வற்று அவரை விமர்சிக்காதீர்கள்.

தற்போது இலங்கை அரசின் சபாநாயகராக இருப்பவர் ஜ.தே.கட்சியைச் சேர்ந்தவர். இக்கட்சியின் ஆட்சியின் போது தான் 83ல் தமிழர்கள் கொழும்பில் கொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களின் நூலகம் எரிக்கப்பட்டது. இன்னும் பல பல கொடுமைகளைத் தமிழர்கள் இக்கட்சியின் ஆட்சி போது அனுபவித்தார்கள். அப்படிப்பட்ட ஜ.தே.கயைச் சேர்ந்தவர் சபாநாயகராக வருவதற்கு தமிழ்த்தேசியக்கூட்டணி ஜ.தே.கட்சிக்கு ஆதரவு ஆளித்தது. ஜக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளில் ஒன்று தான் சபாநாயகராக வரலாம் என்பதினால் அச்சமயத்தில் இருந்த அரசியல் நிலைமையினைக் கருத்தில் கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சரியான முடிவை எடுத்தது.

வை.கோவின் மதிமுக முதலில் தமிழ் நாட்டு அரசியலில் இருப்பினைப் பெற வேண்டும். முன்பு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் ஒரு ஆசனத்தையும் பெறவில்லை(தனியாகப் போட்டி இட்டது) . அக்கட்சிக்கு ஆசனம் தேவை. அக்கட்சி பலம் பெற வேண்டும். ஆனால் திமுக அரசு அக்கட்சிக்கு குறைந்த ஆசனங்களை ஒதுக்கியது. அத்துடன் ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பான்மையானது மதிமுக கட்சி வெல்லமுடியாத ஆசனங்கள். ஆகவே மதிமுக அரசு அதிமுகவுக்கு ஆதரவு அளித்து 6 இடங்களில் வெற்றி பெற்றது. அத்துடன் திமுக அரசு ஸ்டாலினுக்கு போட்டியாக வைகோ வருவார் என்பதை நினைவில் இருத்தி வைகோவுக்கு எதிராகச் மறைமுக வேலைகள் செய்தது.

எமக்காக எப்பொழுதும் ஆதரவு தருபவர்களை விமர்சிப்பது ஒட்டகம் தனது தலையில் மண்ணைப் போடுவதற்கு சமமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ யார் கூட இருப்பது என்பது இந்திய அரசியல் சார்ந்தது. அதை ஈழப்பிரச்சனையோடு முடிச்சுப் போடாமல் இருப்பது நல்லது.

கருணாநிதி காங்கிரஸ் கூட வைத்திருக்கும் கூட்டணி போலவே, வைகோ செயலலிதா என்ற ஈழஎதிரியிடம் கூட்டு வைத்திருக்கின்றார்.

அதைப் பற்றிக் கதைப்பது என்பது தேவையில்லாத சிக்கலை நமக்கு உருவாக்கும். நமக்குள்ள இவ்வளவு பிரச்சனையில் அடுத்தவர்கள் முதுகைச் சொறிவது தேவையா?

எமக்காக எப்பொழுதும் ஆதரவு தருபவர்களை விமர்சிப்பது ஒட்டகம் தனது தலையில் மண்ணைப் போடுவதற்கு சமமாகும்.

அட அட இந்த டயலக் நல்லா இருக்கே :lol: கந்தப்பு தாத்தா ஆனாலும் பேபியான எனக்கு ஒரு சந்தேகம் ஓட்டகம் மண்ணை எடுத்து தலையில போட்டா ஏதாவது பிரச்சினை இருக்கா :) தாத்தா!!ஓட்டகத்தின் தலை ஓட்டகம் அது விருப்பபட்டு போடும் அதை நாம் எப்படி போட வேண்டாம் என்று சொல்லுறது :lol: !!ஓட்டகத்தின் சுகந்திரதிற்கு தடை அல்லவா இதை நான் வன்மையாக கண்டிகிறேன் ஓட்டகம் சார்பாக!! :wub:

அப்ப நான் வரட்டா!!

இப்படிக்கு!!

ஓட்டக பாதுகாப்பு சங்க தலைவர்,

ஜெனரல் ஜம்மு பேபி.

Edited by Jamuna

வைக்கோ கண்டித்தார்.

கலைஞர் கவிதை எழுதினார்

கலைஞரை ஜெயலலிதா கண்டித்தார்.

காங்கிரஸ் கலைஞரைக் கண்டித்தது.

காங்கிரஸ் கலைஞரைக் கண்டித்தபின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. அதேபோல வைக்கோ - ஜெயலலிதா கூட்டணி தொடர்வதில் தவறில்லை.

ஜெயலலிதாவின் விரோதம் வாய்ப்பேச்சில் மட்டும்தான் நிற்கிறது. ஆனால் மத்திய அரசின் செயல் ரேடர்கள் போராயுதங்கள் எண்டு ஈழத்தமிழரை அழிக்கும் வகையில் தொடர்கிறது. ஆனால் கலைஞர் கண்டும் காணாது போலத்தான இருக்கிறது.

ஜெயின் கொமிசனின் அறிக்கையைத் தொடர்ந்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த மூன்றாவது அணியிலிருந்து திமுகவை விலக்கவில்லை என்ற தமது வற்புறுத்தலை அந்த அணி ஏற்கவில்லை என்பதற்காக அதன் ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது.

அதனைத் தொடர்ந்து வந்த பிஜேபி ஆட்சி ஒரு வருடத்திற்குள் பதவியிழந்தபோது தமது கொள்கைக்கு எதிர் துருவமாக இருந்த பிஜேபியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு பின்னர் திமுக ஆட்சியில் பங்கேற்க வில்லையா?

அதனைத் தொடர்ந்து வந்த தேர்தலில் முன்னர் தம்மை அவமானப்படுத்திய காங்கிரசுடன் திமுக மீண்டும் கூட்டணி அமைக்கவில்லையா?

மத்தியில் எதிர் எதிர் கட்சிகளுடன் கூட்டணியமைத்தபோது திமுக என்ன கொள்கைகளைப் பார்த்ததா? தமக்கு நடந்த அவமானத்தைப் பார்த்ததா?

தயவுசெய்து தமிழக அரசியல் எங்களிற்கு வேண்டாம். தமிழகத்திலிருந்து நீட்டப்படும் அனைத்து ஆதரவுக் கரங்களையும் பற்றிக்கொள்வோம். தேவையற்ற விமர்சனங்களை விட்டுவிடுவோம்.

நீங்கள் சொல்வது அறிவுடைமை. இந்திய அரசியலில் சோரம் போகாதவர், பத்தரை மாற்றுத்தங்கம் என்று தேடினால் ஒருவரும் கிடைக்க மாட்டார்கள்.

மாடுவிற்கும் சந்தையில் போய் நின்று கொண்டு குதிரை வேண்டும் அதற்கு கொம்பும் இருக்க வேண்டும் என்றால் எப்படி?!!!

Edited by vettri-vel

மின்னலின் பதிவு அருமை நான் ஏலவே குறிப்பிட்டபடி எமக்கு வரும் ஆதரவுகளை அவர்களின் அரசியலை விமர்சித்து குறைத்து கொள்ளவோ மழுங்கடிக்கவோ வேன்டியதில்லை

இங்கு அனைவரும் தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகவோ அல்லது ஏற்படப்போவதான ஓரு பாரிய எதிர்பார்ப்பில் இருப்பது புரிகிறது.

எனக்கும் அப்படி ஒரு ஆசைதான், ஆனால் அது ஒரு நப்பாசை என்று எனக்கு நன்றாகவே தெரியும்!

ஏனென்றால் விரைவிலேயே குஸ்பு "பெண்கள் காட்சட்டை அணிவது பாதுகாப்பானது" என்று கூற ஒட்டு மொத்த தமிழகமும் கூழ்முட்டை தக்காளியை தேட இந்த சந்தடியில் எங்கள் தமிழ்செல்வன் மறந்து போய்விடும் அவர்களுக்கு!

அப்படியும் இந்த எழுச்சி அடங்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது ஆராட்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனம்! இந்திய எல்லைக்குள் ஒரு அடையாளம் தெரியாத இலகு ரக விமானம் பறந்ததாக கூறி காக்கா காட்டி அடக்கிவிடுவார்கள்.

ஒவ்வோருமுறையும் பாரிய இழப்புக்கள் வரும்போது மட்டும் எழுந்து மறைகின்ற அலையாக தமிழகம் இருந்தால் விரைவிலேயே ஈழதமிழர் முற்றாக அழிந்து விடுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.