Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 1

09 Oct, 2025 | 07:45 AM

image

இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தங்கள் அமைதித் திட்டத்தின், முதற்கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக்கு திரும்பப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கப்படுகிறது.

"இது அனைத்துப் பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஒரு வலிமையான, நீடித்த மற்றும் நிரந்தரமான சமாதானத்திற்கான முதல் படியாக இஸ்ரேல் தமது படைகளை ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்குள் விலக்கிக் கொள்ளும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், அர்த்தப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம், காஸாவில் போரை நிறுத்துவதற்கும், குறைந்தது சில பணயக் கைதிகளையும், கைதிகளையும் விடுவிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால், பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இரு வருட காலப்போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/227268

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-102.jpg?resize=750%2C375&ssl

காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப இஸ்ரேலும் ஹமாஸும் உடன்பாடு.

67,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று மத்திய கிழக்கை மறுவடிவமைத்த காசாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்டமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன.

காசா மீதான இஸ்ரேலின் பேரழிவுகரமான தாக்குதலைத் தூண்டிய ஹமாஸ் போராளிகளின் எல்லை தாண்டிய தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஒரு நாள் கழித்து, எகிப்தில் நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள், பாலஸ்தீனப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் 20-அம்ச கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டின.

இந்த ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிராந்திய மோதலாக உருவெடுத்த போரை நிறுத்துவதற்கான முந்தைய எந்த முயற்சியையும் விட இரு தரப்பினரும் நெருக்கமாக அமைதிருக்குத் திரும்புவார்கள்.

இந்த ஒப்பந்தம் பற்றிய செய்தி இஸ்ரேல், காசா மற்றும் அதற்கு அப்பால் கொண்டாட்டங்களைத் தூண்டியது.

இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் பட்டாசுகளை வெடித்தன, பாலஸ்தீனியர்கள் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Qatar, US announce Gaza truce agreement and hostage release deal

எனினும், புதன்கிழமை (08) தாமதமாக ட்ரம்ப் அறிவித்த ஒப்பந்தம் விவரங்கள் குறைவாகவே இருந்தது.

மேலும் முந்தைய அமைதி முயற்சிகளில் நடந்தது போல, அதன் சரிவுக்கு வழிவகுக்கும் பல தீர்க்கப்படாத கேள்விகளை விட்டுச் சென்றது.

இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பது குடியரசுக் கட்சி ஜனாதிபதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெளியுறவுக் கொள்கை சாதனையாக இருக்கும்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (09) தனது அரசாங்கத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாகக் கூறினார்.

திட்டத்தின் முதல் கட்ட ஒப்புதலுடன், எங்கள் அனைத்து பணயக்கைதிகளும் நாட்டிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றதுடன், இது இஸ்ரேல் அரசுக்கு ஒரு இராஜதந்திர வெற்றி என்றார்.

அதேநேரம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியது, 

இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலியர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுவது மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் ஆகியவை அடங்கும் என்று கூறியது.

2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவ பதிலடி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து 67,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் காசா அதிகாரிகள் கூறுகின்றனர். 

சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காசாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 48 பணயக்கைதிகளில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

எவ்வாறெனினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கைகள் எழுந்துள்ள போதிலும், நேரம், காசா பகுதிக்கான போருக்குப் பிந்தைய நிர்வாகம் மற்றும் ஹமாஸின் தலைவிதி உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

https://athavannews.com/2025/1449915

  • கருத்துக்கள உறவுகள்

காசா அமைதி திட்டம் : இஸ்ரேல் - ஹமாஸ் இணக்கம் ; ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு

Published By: Digital Desk 3

09 Oct, 2025 | 09:53 AM

image

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளமையை ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

 எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் எக்ஸ் தளத்தில், 

"அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்," 

“இந்த மிகவும் தேவையான முன்னேற்றத்திற்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா, கட்டார், எகிப்து மற்றும் துருக்கியின் இராஜதந்திர முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

“சம்பந்தப்பட்ட அனைவரும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/227277#google_vignette

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

67,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று மத்திய கிழக்கை மறுவடிவமைத்த காசாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்டமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன.

டொனால்ட் ரம்ப் அவர்களே! நீங்கள் என்னதான் ஆரியக்கூத்தாடி காரியத்தில் கண்ணாய் இருந்தாலும் நோ நோபல் பிறைஸ் 😜

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் இணக்கம்

Published By: Digital Desk 3

10 Oct, 2025 | 10:24 AM

image

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 48 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தியது. 2 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 67 ஆயிரத்து 194 பேர் உயிரிழந்துள்லனர்.

இதனிடையே, பணய கைதிகள் விடுதலை, இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டார். அதன் பயனாக போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.

ஒப்பந்தப்படி காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இதையடுத்து, 72 மணிநேரத்தில் இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டும். அதன்படி, உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகள், கொல்லப்பட்ட 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் சடலங்களை ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 2 ஆயிரத்து 250 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர்.

இந்நிலையில், காசா முனையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அமைச்சரவை இன்று இணக்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இன்றுமுதல் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. தற்போதைய போர் நிறுத்தம் தற்காலிகமானதாகும். இரு தரப்பும் ஒப்பந்தப்படி அனைத்து விதிகளையும் பின்பற்றும் பட்சத்தில் தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு தரப்பு மீறினாலும் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/227379

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

டொனால்ட் ரம்ப் அவர்களே! நீங்கள் என்னதான் ஆரியக்கூத்தாடி காரியத்தில் கண்ணாய் இருந்தாலும் நோ நோபல் பிறைஸ் 😜

ட்றம்ப்… இன்னும் தனது நோபல் பரிசு ஆசையை கைவிடவில்லை என்று, இன்றைய ஜேர்மன் தொலைக்காட்சி செய்தியாக இருந்தது.

ரஷ்ய - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டுவர புட்டினுக்கு அழுத்தமும் கொடுக்கின்றாராம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இரான்மீதான அடுத்த தாக்குதல், மற்றும் கட்டாரின் மீஹான தாக்குதல் பதற்றம் குறையும் வரை இந்த நாடகம் போகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம்: காஸாவில் அடுத்து என்ன நடக்கும்?

ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம்: காஸாவில் அடுத்து என்ன நடக்கும்?  முடிவுக்கு வரும் போர்: காஸா மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

பட மூலாதாரம், Anadolu via Getty Images

கட்டுரை தகவல்

  • காத்தரின் ஹீத்வுட்

  • பிபிசி உலக சேவை

  • 10 அக்டோபர் 2025, 03:46 GMT

    புதுப்பிக்கப்பட்டது 10 அக்டோபர் 2025, 05:24 GMT

காஸா போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வியாழனன்று அறிவிக்கப்பட்ட முதல் கட்ட உடன்பாடு, மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பாலத்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கும், இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுவதற்கும், காஸாவிற்குள் உதவிகள் நுழைவதற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கான விவரங்கள் மற்றும் கால அவகாசம் இந்த திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

கடந்த செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2023 ஹமாஸ் தாக்குதல் நடத்தி இரண்டு ஆண்டுகள் ஆகின. அந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

இந்த ஒப்பந்தம் ஒரு ஆரம்ப கட்டம் மட்டுமே, காஸாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய பல விவரங்கள் இன்னும் தெளிவாக்கப்பட வேண்டும்.

டிரம்பின் திட்டத்தின் கீழ் காஸாவை யார் நடத்துவார்கள்?

டொனால்ட் டிரம்ப் தலைமையிலான மற்றும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் உள்ளடக்கிய ஒரு "அமைதி வாரியத்தால்" மேற்பார்வையிடப்படும் பாலத்தீனிய தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒரு தற்காலிக இடைக்கால குழுவால் காஸா நிர்வகிக்கப்படும் என்று டிரம்பின் திட்டம் முன்மொழிகிறது.

டிரம்பின் குழு வெளியிட்ட திட்டத்தின் படி, பாலத்தீன அதிகார சபை "அதன் சீர்திருத்த திட்டத்தை முடித்தவுடன்" காஸாவின் நிர்வாகம் இறுதியில் அதனிடம் ஒப்படைக்கப்படும்.

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காஸாவின் நிர்வாகத்தில் ஹமாஸுக்கு எதிர்காலத்தில் பங்கு இருக்காது.

ஹமாஸ் உறுப்பினர்கள் அமைதியான சகவாழ்வுக்கு உறுதியளித்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் அல்லது வேறு நாட்டிற்கு பாதுகாப்பாக செல்ல வழி வழங்கப்படும் என்று திட்டம் கூறுகிறது.

காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஹமாஸின் தாக்குதலுக்கான இஸ்ரேலின் ராணுவ பதிலடி நடவடிக்கையில் காஸாவில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

காஸாவில் உள்ள மக்களுக்கு இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?

இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

லண்டனில் உள்ள ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில் (ECFR) எனும் சிந்தனைக் குழுவின் மூத்த கொள்கை வகுப்பாளர் ஹக் லோவாட், , போர்நிறுத்த ஒப்பந்தம் என்பது காஸா மக்கள் "இனி தங்கள் உயிருக்கு பயப்படக்கூடாது" என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார்.

"மூன்று விஷயங்கள் - கொல்லப்படாமலும், இடம்பெயராமலும், பட்டினி கிடக்காமல் இருப்பதும் - காஸா மக்களுக்கு இந்த நேரத்தில் மூன்று மிக முக்கியமான அளவுகோல்கள்" என்று அவர் பிபிசிக்கு தெரிவித்தார்.

"தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் பிறகு, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியவுடன், அவர்கள் நிச்சயமாக, தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்," என்று லோவாட் கூறுகிறார்.

உண்மையில், காஸா மக்கள் இந்த செய்தியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்.

காஸாவில் வசிக்கும் ஜுமா ரமலான் அபு அம்மோ பிபிசி நியூஸ் அரபு சேவைக்கு அளித்த பேட்டியில், "எங்கள் வீட்டின் இடிபாடுகளை முதலில் அகற்ற வேண்டும், அவற்றை அகற்றி எனது தாத்தா மற்றும் பாட்டியின் உடல்களை மீட்கப் போகிறேன்" என்றார்.

"அதன் பிறகு, நாங்கள் வீட்டை மீண்டும் கட்டத் தொடங்குவோம். கடவுள் விரும்பினால், நாங்கள் காஸா முழுவதையும் மீண்டும் கட்டியெழுப்புவோம், அது முன்பை விட சிறப்பாக திரும்பும்" என்றார்.

அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் ராணுவ பதிலடி நடவடிக்கையில் காஸாவின் பெரும்பாலான கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அழிந்துவிட்டன.

காஸாவின் ஹமாஸ் நடத்தும் அரசாங்க சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, போரில் 67,000 க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் - 18,000 க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர். .

அதன் புள்ளிவிவரங்கள் பொதுவாக ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் நம்பகமானவை என்று கருதப்படுகின்றன.

காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, உதவிகள் பெறுவது காஸா மக்களுக்கு மிகவும் கடினமாகியுள்ளது.

காஸாவுக்கான உதவிகள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது?

டிரம்பின் 20 அம்ச திட்டத்தில், ஆகஸ்ட் மாதம் ஐ.நா ஆதரவிலான நிபுணர்களால் பஞ்சம் உறுதிப்படுத்தப்பட்ட காஸா பகுதிக்கு உடனடியாக "முழு உதவி" அனுப்ப அனுமதிப்பதும் அடங்கும்.

இந்த (உதவிகளின்) அளவு "மனிதாபிமான உதவி தொடர்பான 19 ஜனவரி 2025 ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டவற்றுடன் ஒத்துப்போக வேண்டும்" என்று திட்டம் கூறுகிறது.

ஒவ்வொரு நாளும் 600 (உதவிப் பொருட்களை கொண்டு செல்லும்) லாரிகள் வழங்கப்படும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் தினசரி குறைந்தபட்சம் 400 லாரிகள் வரும் என்றும், அதன் பிறகு இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் பாலத்தீனிய தரப்பை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், காஸாவில் உள்ள மக்களை சென்றடைய புகழ்பெற்ற சர்வதேச உதவி நிறுவனங்கள் பாதுகாப்பாக உணரும் ஒரு சூழல் இருக்க வேண்டும் என்று லோவாட் வலியுறுத்துகிறார்.

முந்தைய ஐ.நா தலைமையிலான உணவு விநியோக முறையை மாற்றிய சர்ச்சைக்குரிய காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்னவாகும் என்பதை டிரம்பின் திட்டம் குறிப்பிடவில்லை.

லோவாட் பிபிசியிடம் கூறுகையில், "கடந்த போர் நிறுத்தம் முறிந்ததில் இருந்து உதவித் தளங்களைச் சுற்றி பாதுகாப்பு சூழல் கணிசமாக மோசமடைந்துள்ளது என்பதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

ஒப்பந்தம் நிலைக்குமா?

இந்த உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிலிருந்தும் காணப்பட்ட மிக உயர்ந்த முன்னேற்றமாகும்.

ஆனால் டொனால்ட் டிரம்பின் 20 அம்ச திட்டம் உண்மையில் ஒரு சில பக்கங்கள் மட்டுமே உடையது என்று ஜெருசலேமில் உள்ள பிபிசி நிருபர் டாம் பென்னட் சுட்டிக்காட்டுகிறார்.

இரு தரப்பினரும் தீர்க்க இன்னும் முக்கிய விசயங்கள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்ற முக்கிய இஸ்ரேலிய கோரிக்கை, அத்துடன் இஸ்ரேலிய (படைகளின்) திரும்பப் பெறுதலின் அளவு மற்றும் காஸாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதற்கான திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

டிரம்ப் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த முடியும் என்று தான் நினைக்கிறேன் என்று லோவாட் பிபிசியிடம் கூறினார், ஆனால் அதன் பிறகு என்ன நடக்கும் என்பது உறுதியாக இல்லை, ஏனெனில் இஸ்ரேலிய "சிவப்புக் கோடுகளை" கடக்க முடியாது.

"வெள்ளை மாளிகையுடனான தனது பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு நெதன்யாகு காஸாவில் இருந்து முழு இஸ்ரேலிய வெளியேற்றம் இருக்காது என்றும், பாலத்தீன அரசு இருக்காது என்றும் கூறினார்," என்கிறார்.

"திட்டத்தை செயல்படுத்துவதில் இவை வெளிப்படையாக இரண்டு பெரிய தடைகள், ஏனென்றால் இஸ்ரேல் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேறாவிட்டால் திட்டத்திற்கான பாலத்தீனிய உறுதிப்பாட்டை பராமரிப்பது கடினம்," என்று அவர் மேலும் கூறினார்.

காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செப்டம்பர் மாத இறுதியில் சந்தித்துக் கொண்டனர்.

டிரம்ப் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறார்?

இந்த சமாதான முயற்சிகளில் உள்ள முக்கிய வேறுபாடு அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட ஈடுபாடு ஆகும். அவர் ஹமாஸ் மீது மட்டுமல்ல, இஸ்ரேல் மீதும் ஒரு ஒப்பந்தத்திற்காக அழுத்தம் கொடுத்துள்ளார் என்று ஜெருசலேமில் உள்ள பிபிசியின் ஹியூகோ பச்சேகா கூறுகிறார்.

இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வது டிரம்பின் இன்றுவரையிலான மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை சாதனையாக இருக்கும். அக்டோபர் 10 வழங்கப்படவுள்ள உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசை அவர் விரும்புகிறார் என்ற உண்மையை அவர் ரகசியமாக வைத்திருக்கவில்லை.

லோவாட் கூறுகையில், "இஸ்ரேலிய அல்லது மத்திய கிழக்கு ராஜதந்திரத்தில், குறிப்பாக இஸ்ரேல்-பாலத்தீனிய ராஜதந்திரத்தில் அமெரிக்கா எப்போதும் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் கோட்பாட்டளவில், நிகரற்ற கட்டுப்பாடு கொண்டுள்ளது, அதை இஸ்ரேல் மீது பயன்படுத்த முடியும். டிரம்ப், உள்நாட்டு அரசியல் மற்றும் நிலைப்பாட்டின் காரணமாக, அந்த விஷயத்தில் குறிப்பாக நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன்."

டிரம்ப் வரும் நாட்களில் எகிப்துக்கு பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு அவரது பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு ஒப்பந்தத்தில் பணியாற்றி வருகின்றனர். வெள்ளிக்கிழமை அவர் அங்கு செல்வது குறித்து பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78n2mzj1l9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.