Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

565116609_1113775507405586_8225514060313

கொலைக்கு பின் தப்பிச் சென்ற வழிகளை வெளிப்படுத்திய இஷாரா செவ்வந்தி.!!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விதம் குறித்து நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, பாதுகாப்புப் பிரிவிடம் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கொலை சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு மாதங்களுக்கும் மேலாக மத்துகம மற்றும் தங்காலை பகுதிகளில் தலைமறைவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இலங்கை பொலிஸ் குழுவினர், அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சந்தேக நபர்களை ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

நேற்று (15) மாலை 6.52 மணியளவில் சந்தேக நபர்களுடன் விமானம் நாட்டை வந்தடைந்தது.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் பல்வேறு பொலிஸ் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்படி, இஷாரா செவ்வந்தி, டுப்ளிகேட் இஷாரா எனப்படும் தக்‌ஷி, ஜே.கே. பாய் மற்றும் ஜப்னா சுரேஷ் ஆகியோர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கம்பஹா பபா, களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவிடமும், நுகேகொடை பபி, மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கை தொடர்பான பல முக்கிய தகவல்கள் 'அத தெரண'வுக்கு கிடைத்துள்ளன.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் கிஹான் சில்வா என்ற பொலிஸ் அதிகாரி ஆகியோர் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்த நடவடிக்கைக்காக நேபாளம் சென்றுள்ளனர்.

அங்கு, நேபாள துணைத் தூதுவர் சமீரா முனசிங்க மற்றும் அவரது கணவர் ஆகியோர் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி, அந்நாட்டு பொலிஸாரையும் தொடர்புபடுத்தி உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து செயற்பட்ட இலங்கை விசாரணை அதிகாரிகள், மற்றொரு தரப்பின் மூலம் ஜே.கே. பாயை கைது செய்துள்ளனர்.

அவரிடம் இஷாரா குறித்து ரொஹான் ஒலுகல வினவியபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், அவரிடமிருந்து இஷாராவின் தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் பெற்றுள்ளனர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், இஷாரா தங்கியிருந்த இடம் கண்டறியப்பட்டு, ஒலுகல மற்றும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, அவர் வசித்த வீட்டிலிருந்து ஐந்து வீடுகள் தள்ளி தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேபாள பொலிஸாரைக் கொண்டு அந்த இடத்தை சோதனையிட்டபோது, இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வந்த தமிழினி என்ற பெண், ஒரு ஈரடுக்கு மாடி வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருப்பது தெரியவந்தது.

இதற்காக அவர் மாதந்தோறும் 6,000 நேபாள ரூபாய் செலுத்தியதும் கண்டறியப்பட்டது.

மேலதிக விசாரணையில், தமிழினி என்ற பெயரில் தங்கியிருந்தது இஷாரா என்பது உறுதி செய்யப்பட்டது.

அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்திய பின்னர், நேபாள பொலிஸாருடன் அந்த இடத்திற்குச் சென்ற ஒலுகல மற்றும் மற்றுமொரு அதிகாரி, கீழ் தளத்தில் தங்கியிருந்து, அவர்களை மேல் தளத்திற்கு அனுப்பி இஷாராவை கைது செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, நேபாள பொலிஸார் அவரைக் கைது செய்தபோது அவர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

பின்னர், ஒலுகல அவர் இருந்த இடத்திற்குச் சென்று, "எப்படி இருக்கிறீர்கள் செவ்வந்தி?" என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், "நன்றாக இருக்கிறேன் சேர்" என்று கூறியுள்ளார்.

"தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று ஒலுகல கூறியபோது, "சேர், எனக்கு இந்த நாடே வெறுத்துப்போயிருந்தது" என்று அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு சுமார் ஒரு மாதம் மத்துகமவில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்ததாக இஷாரா கூறியுள்ளார்.

பின்னர், பத்மேயின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதிக்குச் சென்று அங்கும் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்துள்ளார்.

அப்போது 'பெக்கோ சமன்' என்பவர் அவருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.

பின்னர், யாழ்ப்பாணம் சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்து, ஜே.கே. பாயுடன் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இதற்கு சுமார் ஐந்து மணி நேரம் ஆனது என்றும், ஒரு பெரிய படகில் சிறிது தூரம் சென்று, பின்னர் ஒரு சிறிய படகு மூலம் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும் இஷாரா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தபோது, ஜே.கே. பாய் அவருக்கு 'தமிழினி' என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன் பின்னரே நேபாளம் சென்றதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், தன்னுடன் ஜே.கே. பாய் தவிர மேலும் நான்கு பேர் இருந்ததாக இஷாரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கம்பஹா பபா, நுகேகொடை பபி, ஜப்னா சுரேஷ் மற்றும் இஷாராவின் தோற்றத்தில் இருந்த தக்‌ஷி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்படுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜப்னா சுரேஷும் தக்‌ஷியும் விமானம் மூலம் நேபாளம் வந்துள்ளனர்.

அவர்கள் ஆறு பேரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த நிலையில், பத்மே கைது செய்யப்பட்ட பின்னர், ஆறு பேரும் ஆறு வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தக்‌ஷியின் விபரங்களைப் பயன்படுத்தி செவ்வந்தியை ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்ப பத்மே ஏற்பாடு செய்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மன்னார், பேசாலை பகுதியிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டதாகவும், அதற்கான ஏற்பாடுகளை 'பெக்கோ சமன்' என்பவர் மூலம் பத்மே செய்ததாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

அவர் 2019 ஆம் ஆண்டு கொஹுவல, ஜம்புகஸ்முல்ல பிரதேசத்தில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அன்றே டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Eastern News7 

  • Replies 103
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இர

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வரும்….ஆனா வராது.

குற்றவாளிகளும் தமக்குள் இனபேதமின்றி புரிந்துணர்வுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். இனவாதத்தை மக்களுக்குள் விதைத்த இருபக்க அரசியல்வாதிகளும் தமக்குள் இனபேதம் இன்றி இணைந்து பணியாற்றுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்தியும் ஊடகங்களும்

--- -------------

*குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்புக் கூறுமா?

*வெள்ளைத் துணியால் தலையை போர்த்தும் நடைமுறை தவிர்க்கப்பட்டது ஏன்?

----------------------

கொலை செய்த அல்லது கொலைக்கு நேரடியாக உதவி செய்ததாக நம்பப்படும், குற்றவியல் குற்றம் (Criminal Offence) புரிந்த கைதிகளை பொலிஸார் அழைத்து வரும் போது, அவர்களின் தலையை வெள்ளைத் துணியால் மூடிக் கொண்டு வருவது வழமை.

ஆனால், இலங்கை குற்றப் புலனாய்வு பொலிஸார் செவ்வந்தி உள்ளிட்ட கைதிகளை, நேபாளத்தில் இருந்து ஆடம்பரமான முறையில் அழைத்து வந்திருக்கின்றனர் போல் தெரிகிறது.

செவ்வந்தி விமானத்தில் இருந்து இறங்கி வரும் முறையும், விமான நிலைய ஆசனத்தில் அமர்ந்திருந்து சிரித்துக் கொண்ட முறையும், கொலைக் குற்ற சந்தேகநபர் என்ற உணர்வை மறைத்திருக்கின்றன.

அத்துடன் அவர் தன்னுடைய பயணப் பொதியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போன்று கொண்டு வருகிறார்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் செவ்வந்தியை சுற்றி பாதுகாப்பு வழங்கிக் கொண்டு வருகின்றனர்.

சில பிரதான ஊடகங்களில் இந்த ஆடம்பரமான காட்சி வெளியாகியுள்ளது. அந்த ஊடகங்களின் சமூக வலைத்தளங்களிலும் அக் காட்சி வெளியாகியுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் அதனை பார்த்துமுள்ளனர்.

நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்பது வேறு.

ஆனால் ---

அவரை கொலை செய்வதற்கு நேரடியாக களம் இறங்கி ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்து கொண்டு வரும்போது, கைதிகளுக்கான நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?

இந்த நடைமுறை செவ்வந்தி கைது விவகாரத்தில் பின்பற்றப்படவில்லையே!

இங்கே குற்றவியல் பொலிஸாரும் கொழும்பில் உள்ள சில பிரதான ஊடகங்களின் சில செய்தியாளர்களும் தவறு இழைத்துள்ளனர் என்றே பொருள் கொள்ள முடியும்...

சமூக ஊடகங்கள் பொறுப்பின்றிச் செயற்படுகின்றன என்று இலகுவாக குற்றம் சுமத்த முடியும்.

ஆனால் --

செவ்வந்தியை அழைத்து வந்த காட்சிகளை வீடியோ எடுப்பதற்கும் செய்தி சேகரிப்பதற்கும் பிரதான ஊடகங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

யூடியூபர்ஸ் அங்கு செல்லவில்லை.

பிரதான ஊடகங்களில் வெளியான காட்சிகளை செம்மையாக்கம் (Editing) செய்தே சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை பிரசுரித்திருந்தன.

சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் ஆடம்பரமாகவும் நகைச்சுவையாகவும் அதனை எல்லோரும் சிரித்து ரசிக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியிருந்தன.

இது சமூகத்தில் பிழையான கற்பிதத்தை கொடுத்துள்ளது ---

அதாவது ---

கொலை செய்து விட்டுத் தப்பினாலும் கைது செய்யப்படும் போது, அரச மரியாதை போன்ற உணர்வுகள் கிடைக்கும் என்ற ஒரு தவறான புரிதலை அக் காட்சிகள் சமூகத்தில் விதைக்கின்றன.

அது மாத்திரமல்ல ---

கொலை என்பது மிக இலகுவான காரியம் என்ற பார்வையும், இளைஞர்கள் - பெண்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது.

ஏனெனில், செவ்வந்தியின் வயது 26.

அத்தோடு ----

கொலை செய்தால் அல்லது கொலைக்கு உதவி செய்து ஓடி ஒழித்துக் கொண்ட பின்னர் கைது செய்யப்பட்டால், அரச மரியாதையின் தரத்துக்கு பிரதான ஊடகங்களும் தங்களை காண்பிக்கும் என்ற தவறான புரிதலும் சமூகத்தில் மேலோங்கியுள்ளன.

அதேநேரம், யூடியுபர்ஸ் ஊடக ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல,

அல்லது அவர்களை ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறு கோரவும் முடியாத ஒரு சூழல் இருக்கும் நிலையில் ----

------ சில பிரதான ஊடகங்கள் செவ்வந்தி விவகாரத்தில் பொறுப்பின்றி செயற்பட்டமை கண்டனத்துக்குரியது.

பொலிஸாரிடம் தனியான ஊடகப் பிரிவு உள்ளது. அந்த ஊடகப் பிரிவினரால், செவ்வந்தியும் ஏனைய கைதிகளும் அழைத்து வரப்பட்ட காட்சிகளை பதிவு செய்து, பின்னர் பிரதான ஊடகங்களுக்கு அதனை வழங்கியிருக்கலாம்.

அல்லது வெள்ளைத் துணியால் முகத்தை மூடிக் கொண்டு வந்திருக்கிலாம்.

ஆனால் --

பொலிஸார் அவ்வாறு செய்யத் தவறியுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களம் இத் தவறுக்கு பொறுப்புக் கூறுமா?

அதேநேரம், மக்களுக்கான அரசாங்கம் என்று மார் தட்டும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதற்கு பொருத்தமான பதில் தருமா?

விளக்க குறிப்பு ---

பல மாதங்களாக வியூகம் வகுத்து செவ்வந்தியை கைது செய்ததாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமக்குள் பெருமைப்படக் கூடும்.

ஆனால் செவ்வந்தி அழைத்து வரப்பட்ட முறையானது, குற்றப் புலனாய்வு பொலிஸாரின் அப் பெருமைகளை மலினப்படுத்தியுள்ளது எனலாம்.

செவ்வந்தியின் இயற்கை அழகுக்கு ஏற்ப சமூக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் கைதுக்கான நோக்கத்தை தரம் குறைத்துள்ளது என்றே பொருள் கொள்ள முடியும்...

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0ZMDz5MhEf8WbyEAjBzoMhept4BnN1SFaRcLnJgsjrjkNU4ehvECDQZ1fvudjHkPel&id=1457391262

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

குற்றவாளிகளும் தமக்குள் இனபேதமின்றி புரிந்துணர்வுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். இனவாதத்தை மக்களுக்குள் விதைத்த இருபக்க அரசியல்வாதிகளும் தமக்குள் இனபேதம் இன்றி இணைந்து பணியாற்றுகிறார்கள்.

குற்றவாளிகள், பாலியல் விடயங்களில் ஈடுபடுவோர், அரசியல்வாதிகள் இந்த மூவரும் தமக்கு தேவைப்படின் இனபேதம் பார்ப்பார்கள். தேவைப்படின் இணைந்தும் செயல்படுவார்கள்.

அன்றும் இன்றும்.

முன்பும் கொழும்பின் பல குடு காங்சிகள் மூவின பிரதிநிதிதுவத்தை கொண்டிருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

குற்றவாளிகள், பாலியல் விடயங்களில் ஈடுபடுவோர், அரசியல்வாதிகள் இந்த மூவரும் தமக்கு தேவைப்படின் இனபேதம் பார்ப்பார்கள். தேவைப்படின் இணைந்தும் செயல்படுவார்கள்.

அன்றும் இன்றும்.

முன்பும் கொழும்பின் பல குடு காங்சிகள் மூவின பிரதிநிதிதுவத்தை கொண்டிருந்தன.

உண்மை தான். பண்டாரநாயக்கா ஆட்சியில் நாகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது Mr. Naganathan is a diabetic patient. We should take care of him என்று, சிறை சாப்பாடு அவருக்கு ஒத்து வராது என்று பிரதமர் வீட்டில் இருந்து அவருக்கு உணவு சென்றதாம். பிரதமர் தனது வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்டதால் பயந்து போயிருந்த சிறீமாவோ அவரது பிள்ளைகளை பாதுகாக்க நாகநாதன் வீட்டில் சில காலம் தங்க வைத்தாராம். 90 களில் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது நாகநாதனுன் மகள் தான் இலங்கை தூதராக ஜேர்மனியில் இருந்தார்.

1977 தேர்தல் மேடைகளில் இரும்பு மனிதன் நாகநாதன் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாகநாதன் என்ற ரேஞ்சுக்கு வீர உரைகள் கதையாடல்கள் நடந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

உண்மை தான். பண்டாரநாயக்கா ஆட்சியில் நாகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது Mr. Naganathan is a diabetic patient. We should take care of him என்று, சிறை சாப்பாடு அவருக்கு ஒத்து வராது என்று பிரதமர் வீட்டில் இருந்து அவருக்கு உணவு சென்றதாம். பிரதமர் தனது வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்டதால் பயந்து போயிருந்த சிறீமாவோ அவரது பிள்ளைகளை பாதுகாக்க நாகநாதன் வீட்டில் சில காலம் தங்க வைத்தாராம். 90 களில் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது நாகநாதனுன் மகள் தான் இலங்கை தூதராக ஜேர்மனியில் இருந்தார்.

1977 தேர்தல் மேடைகளில் இரும்பு மனிதன் நாகநாதன் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாகநாதன் என்ற ரேஞ்சுக்கு வீர உரைகள் கதையாடல்கள் நடந்தன.

இரும்பு….

தேவைப்பட்டால் துருப்பிடிக்கும் 🤣

நல்ல ராணி காமிக்ஸ் புத்தகங்கள் போல பெயர் வைத்துள்ளார்கள்…

இரும்பு மனிதன்…

மாயாவி…

மங்கயர்கரசி அம்மா என்ன லேடி ஜேம்ஸ்பாண்டா🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இஷாரா செவ்வந்தி, டுப்ளிகேட் இஷாரா எனப்படும் தக்‌ஷி, ஜே.கே. பாய் மற்றும் ஜப்னா சுரேஷ் ஆகியோர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கையில் விடுதலைப்போர் போர் முடிந்த கையோடேயே, தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, விடாமுயற்சியை, கல்வியை குறிவைத்து அடுத்த போர் தமிழருக்கெதிராக தொடங்கப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில், நடைபெறும் எல்லா சமூக விரோத செயல்களிலும் ஜவ்னாவையும் இழுத்து விட்டு, அவர்களே இவற்றிற்கு காரணம் என்று தாம் தப்பித்துக்கொள்வது என முடிவு செய்து செயற்பட்டுள்ளார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

தக்‌ஷியின் விபரங்களைப் பயன்படுத்தி செவ்வந்தியை ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்ப பத்மே ஏற்பாடு செய்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

12 hours ago, தமிழ் சிறி said:

ஜே.கே. பாய் அவருக்கு 'தமிழினி' என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழரின், சொந்த விபரங்களை பயன்படுத்தி பல சிங்களவர்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் சிலர் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பதாக கடந்த அரசாங்கங்கள் கூறிவந்தன. அன்றைய அமைச்சர் ஒருவர் ஐ. நாவிலும் இந்த கருத்தை வைத்திருந்தார். இந்த சம்பவத்தை வைத்துப்பார்க்கும் போது அதுவும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இந்திய அடையாள அட்டையை தயாரிக்க இவர்களால் முடிந்திருக்கிறதென்றால், உள்நாட்டில் தயாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லையே இவர்களுக்கு. பல வருடங்களுக்கு முன் போர் முடிந்த கையோடு ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது. அதாவது நாமல் வாட பகுதியில் உள்ள தமிழரின் காணிகளை குறைந்த விலையில் பெற்றுக்கொண்டு அவர்கள் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல தூண்டப்படுவதாக. அந்தசெய்தியில் சில உண்மைகளும் இருக்கத்தான் செய்யும். ஒரு நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தவர்களில், இலங்கை சட்ட விரோத கடற் பயணங்களை தடுக்க அமைக்கப்பட்ட கடலோரக்காவல் பணியில் இருந்த ஒரு கடற்படை சிப்பாய், தன் நாயோடு தஞ்சம் அடைந்திருந்ததாக செய்திகள் வந்தன. அவர் மட்டுமல்ல, பல சிங்களவர்கள் இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். நாட்டில் எல்லாத்துறைகளிலும் ஊழல், மோசடி, விசேடமாக போலீஸ், பாதுகாப்பு படைகளில் முழுவதும் இது பரவியிருக்கிறது. அரச துறைகள் முழுவதும் மாற்றியமைக்கப்படவேண்டும். தமிழருக்கெதிரானது என உருவாக்கப்பட்டது, நாட்டையே விழுங்கி விட்டிருக்கிறது. சுட்டுப்படுகொலைசெய்யப்பட கணேசமுல்ல சஞ்சீவ காரணமில்லாமல் அன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது எப்படி? உடனடியாக மத்துகமவுக்கு இஷாரா தப்பிச்செல்ல முடிந்தது எப்படி? போலீசார் மத்துக்கமவுக்கு தேடுதலுக்காக சென்றபோது மித்தெனியாவுக்கு தப்பிச்சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று, கென்னடி பஸ்ரியனிடம் இஷாராவை கையளித்தது யார்? சாதாரண பொதுமகனால் முடியுமா இதனை செய்ய? போலீஸ் புலனாய்வாளர்கள் நேபாளத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது வரை, ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படாதது வரை வெளியில் கசிந்தது எப்படி? அப்படியென்றால்; குற்றவாளிகள் புலனாய்வுப்படைக்குள் இவர்களுடன் பயணிக்கின்றனர். மகிந்த காலத்தில் போலீஸ், இராணுவப்படைகளுக்கு அதிகளவு அதிகாரம், செல்வாக்கு, தண்டனைகளிலிருந்து விலக்கு இத்தியாதி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் நாட்டை காப்பாற்றியவர்கள் என்கிற விளக்கம் கொடுக்கப்பட்டது. அது போதைப்பொருள் கடத்தலாக இருந்தாலென்ன, கொலை கொள்ளையாக இருந்தாலென்ன. நாட்டை காப்பாற்ற வேண்டியவர்கள் நாட்டை அழிப்பதற்கு பயன்படுத்தபட்டார்கள். அனுராவுக்கு உயிர் அச்சுறுத்தல் இங்கே தான் உண்டு. அனுரவைத்தவிர வேறொருவர் ஆட்சி ஏற்றிருந்தால் இவையெல்லாம் நிறைவேறியிருக்காது. இப்போ நாமல் சொல்கிறார், இந்த குற்றவாளிகளின் பின்னால் செயற்படுபவர் யார், இந்த கள்ள அடையாள அட்டைகளை விநியோகித்தவர்கள் யார், புலனாய்வுத்தகவல்களை அளிப்பவர்கள் யாரென அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாம். ஏன் இவ்வளவு அவசரம் இவருக்கு? தன் பெயரை தெரிந்து கொண்டுவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள ஆவலா? அல்லது தகவல் கொடுப்போரை அழிப்பதற்காகவா? இவரை சுற்றி ஏலவே கண்காணிப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இவர் அறிய வில்லையா? அதைவிட இஷாரா இவரின் முன்னாள் காதலியென்கிற பேச்சும் அடிபடுகிறது. இவர்களின் ஊதுகுழல்கள் அடங்கிவிட்டனவே, இனிமேல் எது பேசினாலும் அது தமக்கு எதிராகவே திரும்புமென உணர்ந்து கொண்டனரோ? அவர்கள் தம் பாட்டில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் என சொந்த நாட்டிலேயே கொடிகட்டிப்பறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அனுரா ஆட்சியேறியவுடன் நாட்டை விட்டு வெளியேறி, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து, கைதாகவும் வேண்டி வந்தது, ராஜபக்ச குடும்பத்துக்கு வந்த சோதனை. அவர்களின் கோர முகத்தையும், இருண்ட ஆட்சியையும் உலகிற்கும் சொந்த மக்களுக்கும் வெளிக்காட்டியுள்ளது. ஆனால் எல்லா துறைகளையும் மாற்றியமைக்க வேண்டியது, அனுராவுக்கு இன்னும் நாட்டை முன்னேற்றகரமாக கொண்டுசெல்ல உதவும். தமிழ் மக்களை மட்டுமல்ல சொந்த மக்களையும், உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களையும், இவர்களுக்காக, இவர்களை காக்க, தம் சொந்த உயிரையும் பணயம் வைத்து ஏவல் வேலை செய்து இவர்களை செழிப்பாக்கி அழகு பார்த்தவர்களையும் கொலை செய்த இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.

14 hours ago, goshan_che said:

இந்த விடயத்தில் அனுரா ஜேவிபி அரசை நானும் போற்றுகிறேன்.

ஹி.... ஹி..... நீங்கள் அவர் செய்தவற்றை கண்டதால் போற்றுகிறீர்கள். நாங்கள் அவர் சாதிப்பார் என நம்பினோம், கேலி செய்தீர்கள் அன்று, என் போன்றவர்களை.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வௌிப்படுத்திய இஷாரா!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 

விசாரணையின் போது, தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவர் மூலம், 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரைத் தான் அறிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். 

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை 'பத்மே' தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

" எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" என்று 'பத்மே' தனக்குக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, அவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு கொலையைச் செய்யுமாறு தான் அவரை இயக்கியதாகவும் இஷாரா தெரிவித்துள்ளார். 

'கெஹெல்பத்தற பத்மே' உடனான நட்பு காரணமாக, கொலைக்காக எந்தப் பணமும் பெறவில்லை என்றும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 

கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட அதே நாளில், அதாவது கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு, தான் வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு தங்கியிருந்ததாகவும், அடுத்த நாள் 'கெஹெல்பத்தற பத்மே'வின் நெருங்கிய நண்பரான மத்துகம ஷான் என்பவரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் தொடங்கொட பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதன் பிறகு, ஏப்ரல் 13 ஆம் திகதி, தொடங்கொடவில் இருந்து மித்தெனிய பிரதேசத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். 

புத்தாண்டுக் காலம் என்பதால், பொலிஸ் அதிகாரிகள் வருடப் பணிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், அன்றைய தினத்தை அவர்கள் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அங்கு தங்கியிருந்த அவர், மே மாதம் 6 ஆம் திகதி, அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற நாளில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். 

பொலிஸ் அதிகாரிகள் அன்றைய தினம் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்ததால், அந்த நாளைத் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் காலப்பகுதியில் தான் எந்தவொரு கையடக்கத் தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி இன்று மத்துகம பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பின்னர் அவர் தங்கியிருந்த மித்தெனிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். 

அவருக்கு அடைக்கலம் கொடுத்த வெலிபென்ன வீட்டில் உரிமையாளரையும், அவருடைய மருமகனும் அளுத்கம பொலிஸில் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளையும் கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. 

அத்துடன், தொடங்கொட வீட்டில் அடைக்கலம் கொடுத்த நபரையும், மித்தெனிய பிரதேசத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டில் இருந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

எவ்வாறாயினும், அந்தக் கைது செய்யப்பட்ட பெண், 'ஹரக் கட்டா'வைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊழியரின் மனைவி என்று பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகள், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன. https://adaderanatamil.lk/news/cmgv328sh012oo29ntya4do2i

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-200.jpg?resize=750%2C375&ssl

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள், அவரின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1450657

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இப்போ நாமல் சொல்கிறார், இந்த குற்றவாளிகளின் பின்னால் செயற்படுபவர் யார், இந்த கள்ள அடையாள அட்டைகளை விநியோகித்தவர்கள் யார், புலனாய்வுத்தகவல்களை அளிப்பவர்கள் யாரென அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாம். ஏன் இவ்வளவு அவசரம் இவருக்கு? தன் பெயரை தெரிந்து கொண்டுவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள ஆவலா? அல்லது தகவல் கொடுப்போரை அழிப்பதற்காகவா? இவரை சுற்றி ஏலவே கண்காணிப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இவர் அறிய வில்லையா? அதைவிட இஷாரா இவரின் முன்னாள் காதலியென்கிற பேச்சும் அடிபடுகிறது.

565077419_1375446300809510_4050582376865

564787495_1375446354142838_3844234680707

பாதாள உலக குழுக்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அரசு நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும். இதை அரசியல் மயப்படுத்தக் கூடாது எனவும் நாமல் ராஜபக்ச வேண்டுகோள்.

அண்மையில் இந்தோனேசியாவில் பிடிபபட்ட, பாதாள குழு தலைவன் "கெஹல்பத்தர பத்மே"... இரண்டு படத்திலும் மகிந்தவிற்கு வலது புறம் நிற்கிறார்.

கெஹல்பத்தர பத்மே.... மகிந்தவுடன் நெருக்கத்தில் இருக்கும் படம்.
மகிந்த கெஹல்பத்தர_பத்மே செவ்வந்தி
இதான் உண்மை என்பதற்கு, இந்தப் புகைப்படம் போதுமே.

Deepan Djr

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

564070078_1221957693312379_3583296760496

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர்.

பொலிஸாரின் இந்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmgwbcdjm0132o29nuzrdgz3l

  • கருத்துக்கள உறவுகள்

562376212_2124879444929344_6957388536633

செவ்வந்தியை... சுமார் 8 மாதங்களாக, மறைத்து வைத்திருந்து உதவிய "மதுகம ஷான்" என்பவரின் தொடர்புகள் குறித்த படங்கள் தற்போது கிடைத்துள்ளன

(நீல நிறத்திலான சேர்ட் அணிந்தவர்.)

Fais Journalist

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

ஹி.... ஹி..... நீங்கள் அவர் செய்தவற்றை கண்டதால் போற்றுகிறீர்கள். நாங்கள் அவர் சாதிப்பார் என நம்பினோம், கேலி செய்தீர்கள் அன்று, என் போன்றவர்களை.

நான் ஒரு விடயத்தில் மட்டும் அவர்களின் நடவடிக்கையை போற்றி உள்ளேன்.

ஆனா தமிழர் உரிமைக்கு ஜேவிபி ஏனையோரை விட அல்லது நிகரான ஆபத்து என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

எனது நிலைப்பாடு - மாற்றான் தோட்டம் முழுவதும் நாற்றம் எடுத்தாலும் அதில் ஒரு மல்லிகை இருப்பின் மணக்கும்.

நீங்கள் அனுர காவடி.

இரெண்டும் ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நான் ஒரு விடயத்தில் மட்டும் அவர்களின் நடவடிக்கையை போற்றி உள்ளேன்.

அரச, காவற்துறை, இராணுவ, புலனாய்வின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் பாதுகாப்போடும் நாடு முழுவதும் பரப்பப்பட்டு கொடிகட்டிப்பறந்த போதை பாதாள உலக வியாபார கலாச்சாரம், தப்பி வெளிநாடுகளுக்குள் மறைந்தவற்றை வெளிக்கொணர்ந்துள்ளார். மிகுதி, போகபோகத்தொடரும். அப்போ நீங்களும் தொடர்ந்து பாராட்டக்கூடும், பொறுத்திருந்து பாப்போம். நான் அனுராவின் காவடியாகவே இருந்து விட்டுப்போகிறேன். நல்லது செய்ய முயற்சிப்பவரில் எதிர்பார்ப்பு வைப்பதில் தப்பில்லை. அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தேசியத்தலைவர், தெய்வம் என்கிறார். இதுவே முன்னைய அரசாங்கமாக இருந்திருந்தால்; பயங்கரவாத சட்டமோ வெள்ளை வானோ இவரை இல்லாமல் செய்திருக்கும். சுமணரத்ன தேரர் வேறு புலம்புகிறார், மஹிந்த காலத்தில், வடக்கு கிழக்கில் சுதந்திரமாக பௌத்த கொள்கைத்திட்டங்களை ஆற்றினோம், அனுரா வந்து தொல்பொருள் பௌத்த கொள்கைகளை தடுத்து விட்டார் என, தனது கொள்ளை தொழில் பறிபோன கடுப்பில் அங்கலாய்க்கிறார். மெல்லெனப்பாயும் நீர், கல்லையும் உருக்கிப்பாயுமாம். உங்கள் பார்வையும் வெறுப்பும் எண்ணங்களும் மாறலாம். அதற்காக, அனுரா தமிழீழத்தை தூக்கி தந்துவிடுவார் என நான் சொல்ல வரவில்லை. தமிழர் பயங்கரவாதிகள், வந்தேறு குடிகள், அவர்களுக்கு இந்த நாட்டில் அதிகாரமில்லை, எந்த அரசியல் உரிமையும் தேவையில்லை என்கிற வாதம் தகர்க்கப்பட வாய்ப்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அரச, காவற்துறை, இராணுவ, புலனாய்வின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் பாதுகாப்போடும் நாடு முழுவதும் பரப்பப்பட்டு கொடிகட்டிப்பறந்த போதை பாதாள உலக வியாபார கலாச்சாரம், தப்பி வெளிநாடுகளுக்குள் மறைந்தவற்றை வெளிக்கொணர்ந்துள்ளார். மிகுதி, போகபோகத்தொடரும். அப்போ நீங்களும் தொடர்ந்து பாராட்டக்கூடும், பொறுத்திருந்து பாப்போம். நான் அனுராவின் காவடியாகவே இருந்து விட்டுப்போகிறேன். நல்லது செய்ய முயற்சிப்பவரில் எதிர்பார்ப்பு வைப்பதில் தப்பில்லை. அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தேசியத்தலைவர், தெய்வம் என்கிறார். இதுவே முன்னைய அரசாங்கமாக இருந்திருந்தால்; பயங்கரவாத சட்டமோ வெள்ளை வானோ இவரை இல்லாமல் செய்திருக்கும். சுமணரத்ன தேரர் வேறு புலம்புகிறார், மஹிந்த காலத்தில், வடக்கு கிழக்கில் சுதந்திரமாக பௌத்த கொள்கைத்திட்டங்களை ஆற்றினோம், அனுரா வந்து தொல்பொருள் பௌத்த கொள்கைகளை தடுத்து விட்டார் என, தனது கொள்ளை தொழில் பறிபோன கடுப்பில் அங்கலாய்க்கிறார். மெல்லெனப்பாயும் நீர், கல்லையும் உருக்கிப்பாயுமாம். உங்கள் பார்வையும் வெறுப்பும் எண்ணங்களும் மாறலாம். அதற்காக, அனுரா தமிழீழத்தை தூக்கி தந்துவிடுவார் என நான் சொல்ல வரவில்லை. தமிழர் பயங்கரவாதிகள், வந்தேறு குடிகள், அவர்களுக்கு இந்த நாட்டில் அதிகாரமில்லை, எந்த அரசியல் உரிமையும் தேவையில்லை என்கிற வாதம் தகர்க்கப்பட வாய்ப்புண்டு.

எனது அரசியல் அபிலாசை மிகவும் சின்னது.

ஈழத்தமிழர் - கெளரவமான, தமது அலுவல்களை தாமே நிர்வகிக்கும், அவர்களின் நில உரிமை பறிபோகாத, மொழி உரிமை பாதுகாக்கபட்ட, இன ஒதுக்கலுக்கு உள்ளாகாத வாழ்வை இலங்கை தீவில் வாழ வேண்டும் என விரும்புகிறேன்.

இதை தராத எந்த சிங்கள அரசும் எனக்கு ஒன்றே.

தவிர போதை பொருள், சட்சம் ஒழுங்கு போன்ற அனைவருக்கும் பயந்தரக்கூடிய நடவடிக்கைகளை சிங்கள அரசுகள் எடுத்தால் அதை பாராட்டலாம்.

ஆனால் அப்படியே உச்சி குளிர்ந்து போய்…இது ஆரம்பம்…அடுத்தது தமிழருக்கு உரிமைதான் என காவடி எடுத்தல் ஆகாது.

இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்.

இவர்கள் போதைக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

சுக அரசில் மகிந்த தொழில்துறை அமைசராக பல நல்ல தொழிலாளலர் திட்டங்களை கொண்டு வந்தார்.

நாட்டை திறந்த பொருளாதாரம் ஆக்கி சுதந்திர வர்த்க வலையங்களை, ஆடை தொழில்சாலைகளை ஜே ஆர் கொண்டு வந்தார்.

கம் உதாவ - பிரேமதாச…

இப்படி சிங்கள அரசுகள் முன்பும் நல்ல விடயங்கள் செய்துள்ளன.

2005 க்கு முதல் இருந்த அத்தனை அரசுகளும் போதை பொருளை நன்கு கட்டுப்படுத்தினர்.

ஆகவே இது பத்தோடு பதினொன்று.

இதை போற்றலாம்.

ஆனால் நீங்கள் தூக்கும் காவடி…

ஜஸ்ட் டூ மச்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வெறுப்பு என்னிலா? அனுரா அரசிலா? சிங்களத்தின் சுய குணத்தை மாற்ற இயலாது. ஆனாலும் அனுரா சிறிது மாற்றி யோசிக்கிறார். அதிலும் ரில்வின் சில்வா தனது கடும் போக்கை சிறிது தளர்த்துவது போல் எனக்குத் தெரிகிறது. குறை சொல்வதை விடுத்து மாற்றத்தை ஏற்று ஊக்கப்படுத்துவதே நமக்கு இப்போதுள்ள ஒரு வழி. எழுபத்தாறு ஆண்டுகள் திட்டமிட்டு, தீனி போட்டு வளர்க்கப்பட்ட இனவாதத்தை சில ஆண்டுகளில் மாற்றி அழித்துவிட முடியாது. அதற்கு காரணமானவர்கள், காரணம், வெளிக்கொணர்ந்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும், பயத்தை நீக்கவேண்டும், உண்மையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அதற்கு முதல், அதை ஏற்படுத்துபவர்கள் நடந்தது தவறு என ஏற்று, பொறுப்பெடுக்க வேண்டும். இதெல்லாம் சில ஆண்டுகளில் நடைபெறாது. அதை ஏற்படுத்துவதற்கு, சுயநல அரசியல்வாதிகளின் போலி முகங்களை களைவதற்கு, பல சவால்களை சந்திக்க வேண்டும். ஆமா.... இதை வாசித்ததன் பின், எனக்கு என்ன பெயர் சூட்டுவதாக உத்தேசம்?

அதையும் அனுராவின் சவாலாக ஏற்றுக்கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

சிங்களத்தின் சுய குணத்தை மாற்ற இயலாது. ஆனாலும் அனுரா சிறிது மாற்றி யோசிக்கிறார்.

தனிப்பட்டு உங்கள் மீதும் இல்லை அனுர மீதும் வெறுப்பு இல்லை.

ஆனால் இனப்பிரசனை விடயத்தில் அனுரா மாத்தி யோசிக்கிறார் என பச்சை உருட்டை உருட்டும்…கருத்துக்கள் மீது நிச்சயம் வெறுப்பு உண்டு.

ஜேவிபி பற்றி நிக்சன் எழுதியதை வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

குறை சொல்வதை விடுத்து மாற்றத்தை ஏற்று ஊக்கப்படுத்துவதே நமக்கு இப்போதுள்ள ஒரு வழி. எழுபத்தாறு ஆண்டுகள் திட்டமிட்டு, தீனி போட்டு வளர்க்கப்பட்ட இனவாதத்தை சில ஆண்டுகளில் மாற்றி அழித்துவிட முடியாது. அதற்கு காரணமானவர்கள், காரணம், வெளிக்கொணர்ந்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும், பயத்தை நீக்கவேண்டும், உண்மையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அதற்கு முதல், அதை ஏற்படுத்துபவர்கள் நடந்தது தவறு என ஏற்று, பொறுப்பெடுக்க வேண்டும். இதெல்லாம் சில ஆண்டுகளில் நடைபெறாது. அதை ஏற்படுத்துவதற்கு, சுயநல அரசியல்வாதிகளின் போலி முகங்களை களைவதற்கு, பல சவால்களை சந்திக்க வேண்டும்.

ப்ரோ…

அந்த இனவாதத்தை ஊட்டி வளர்த்த மேய்பன்களில் நீங்கள் நம்பும் ஜேவிபியும், அனுராவும் அடக்கம் ப்ரோ.

ஜே ஆரும், சந்திரிகாவும், மகிந்தவும், ரணிலும் கொடுக்க இசைந்த, கொடுத்த மாகாண சபையை கூட தமிழருக்கு கொடுக்க கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக நின்று, அதற்காக ஒரு இரத்த களரியையே உருவாக்கியவர்கள் ஜேவிபி.

நீதி மன்று போய் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள்.

சந்திரிக்காவோடு சேர்ந்து நோர்வே சமாதான முயற்சியை, PToMS ஐ குழப்ப முழு மூச்சாக முன்னின்றவர்கள்.

அனுர, டில்வின் இருந்த அதே தலைமைபீடத்தில் இருந்து சோமவன்ச, வீரவன்ச, முசமில் யுத்த நேரம் சொன்னவை உள்ளதே? அதுதான் எப்போதும் ஜேவிபியின் நிலைப்பாடு.

மேற்கின் அழுத்தத்துக்கு பணிந்து முள்ளிவாய்க்கால் அவலத்தை நிறுத்த கூடாது, விரைந்து முடிக்கவும் என மகிந்தவுக்கு கெடு வைத்தவர் அனுர.

நீங்கள் இவர்கள் இனவாதத்தை இலங்கையில் களைவார்கள் எண்டு இங்கே பேயோட்ட பார்கிறீர்கள்🤣

28 minutes ago, satan said:

இதை வாசித்ததன் பின், எனக்கு என்ன பெயர் சூட்டுவதாக உத்தேசம்?

அனுர காவடி என்பது பொருத்தம் என்றாலும், நீங்களாகவே பதவி உயர்வு கேட்பதால்…

அனுர தூக்கு காவடி …

பிடித்திருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

7 hours ago, goshan_che said:

இனப்பிரசனை விடயத்தில் அனுரா மாத்தி யோசிக்கிறார் என பச்சை உருட்டை உருட்டும்

மாற்றம் ஒன்றே மாறாதது. மஹிந்த, தான் அரசியலில் நிலைத்து நிற்பதற்காக இனவாதத்தை கையிலெடுத்தார், இன்று அவரின் மாயையிலிருந்து மக்கள் விலகி விட்டனர். பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தது. நாடு முன்னேற வேண்டுமானால், மக்கள் அனுராவை தொடர்ந்து அரசியல் செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களிலிருந்து வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

7 hours ago, goshan_che said:

அனுர தூக்கு காவடி …

நீங்கள் தந்தால் வேண்டாமென்றா சொல்வேன் நான்?

  • கருத்துக்கள உறவுகள்

1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரியே நடத்தப்பட்டது.

ரணிலுக்கும் தலைவருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட, இடைக்கால நிர்வாக சபை, சமாதானத்திற்கான யுத்த நிறுத்தம் என்று அனைத்தையும் சந்திரிக்காவோடும் தெற்கின் தீவிர இனவாதிகளுடனும் சேர்ந்து எதிர்த்ததே இதே அநுரவின் கட்சிதான். 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் மூலம் 2007 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி பிரித்துப் போட்டதே அநுரவின் கட்சிதான்.

மகிந்தவின் போர்முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்கி வந்து, தெற்கின் இனவாதத் தீயினை அணையாது வளர்த்து, தனது ஆதரவாளர்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு உதவி புரிந்து, தமிழர்களின் விடுதலை நம்பிக்கையினை நிரந்தரமாகவே அழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டதும் அதே அநுரவின் கட்சிதான்.

போர்க்குற்றங்கள் நடக்கவில்லை, இனக்கொலை என்றே ஒன்று இல்லை, கொல்லப்பட்டதெல்லாம் பயங்கரவாதிகள் என்று இன்றும் நியாயம் கற்பிப்பதும், எமது இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம், சர்வதேச விசாரணை என்பதை ஏற்கமாட்டோம், வடக்குக் கிழக்கும் இணைய முடியாது, இருப்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையே, இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று இன்றும் கூறுவதும் அநுரவின் கட்சிதான்.

அவரது அரசு இன்று செய்வது ஊழல்வாதிகளை மக்கள் முன் காட்டி, அரசியலில் தமது எதிரிகளை பலவீனப்படுத்துவதும் , தாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை உறுதிசெய்துகொள்வதும்தான்.

அநுரவிற்குக் காவடி தூக்கும் தமிழ்த் தேசியவாதிகள் அவர் முன்வைக்கவிருக்கும் தமிழருக்கான தீர்வு என்னவென்பதை அவரிடம் எப்போது கேட்கப் போகிறார்கள்? வடக்குக் கிழக்கு இணைப்பு எனும் பேச்சிற்கே இடமில்லை என்று அவர் அடிமடியில் கை வைத்திருக்கும் நிலையில் அவரைத் தமிழர்கள் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்? தெற்கின் ஊழல்களுக்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் தமிழர்களின் பிரச்சினைக்கும் இடையே இருக்கும் தொடர்புகள் என்ன? அல்லது தெற்கினை தூய்மைப்படுத்திவிட்ட உடனேயே தமிழருக்கான தீர்வைத் தரப்போகிறேன் என்று அநுர எங்காவது சொன்னாரா?

8 hours ago, goshan_che said:

அந்த இனவாதத்தை ஊட்டி வளர்த்த மேய்பன்களில் நீங்கள் நம்பும் ஜேவிபியும், அனுராவும் அடக்கம் ப்ரோ.

ஜே ஆரும், சந்திரிகாவும், மகிந்தவும், ரணிலும் கொடுக்க இசைந்த, கொடுத்த மாகாண சபையை கூட தமிழருக்கு கொடுக்க கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக நின்று, அதற்காக ஒரு இரத்த களரியையே உருவாக்கியவர்கள் ஜேவிபி.

நீதி மன்று போய் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள்.

சந்திரிக்காவோடு சேர்ந்து நோர்வே சமாதான முயற்சியை, PToMS ஐ குழப்ப முழு மூச்சாக முன்னின்றவர்கள்.

அனுர, டில்வின் இருந்த அதே தலைமைபீடத்தில் இருந்து சோமவன்ச, வீரவன்ச, முசமில் யுத்த நேரம் சொன்னவை உள்ளதே? அதுதான் எப்போதும் ஜேவிபியின் நிலைப்பாடு.

மேற்கின் அழுத்தத்துக்கு பணிந்து முள்ளிவாய்க்கால் அவலத்தை நிறுத்த கூடாது, விரைந்து முடிக்கவும் என மகிந்தவுக்கு கெடு வைத்தவர் அனுர.

நீங்கள் இவர்கள் இனவாதத்தை இலங்கையில் களைவார்கள் எண்டு இங்கே பேயோட்ட பார்கிறீர்கள்

இரத்திணச் சுருக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

articles2FAvpY3KKE4aTcCJbKOC0f.jpg?resiz

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய மத்துகமவைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுகமவைச் சேர்ந்த குறித்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, அந்த பெண் நீதிமன்றத்தின் சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மதுகம – வெலிபென்னவைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளரான 52 வயதுடைய குறித்த பெண் இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளதாக தெரியவந்த நிலையில் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1450749

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

மாற்றம் ஒன்றே மாறாதது. மஹிந்த, தான் அரசியலில் நிலைத்து நிற்பதற்காக இனவாதத்தை கையிலெடுத்தார், இன்று அவரின் மாயையிலிருந்து மக்கள் விலகி விட்டனர். பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தது. நாடு முன்னேற வேண்டுமானால், மக்கள் அனுராவை தொடர்ந்து அரசியல் செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களிலிருந்து வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டும்

இனவாதத்தை பொறுத்தவரை…..

தமிழருக்கு எதுவும் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில்…..மகிந்தவுக்கும் அனுரவுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

இப்படி சிந்தித்த ஒரே சிங்கள தலைவர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ன மட்டுமே.

ஆனால் அவரை சிங்களவர்கள் ஒரு மாநகரசபை உறுப்பினராகா கூட ஆக்கவில்லை.

இதுதான் மாறாத சிங்கள பேரினவாதம்.

இது மாறிவிட்டது….

அல்லது அனுர மாற்ற முயல்கிறார் என்பதற்கு ஒரு குண்டு மணி அளவு கூட ஆதாரம் இல்லை.

நீங்கள் சும்மா கற்பனையில் அடித்து விடும் கதைகள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரியே நடத்தப்பட்டது.

ரணிலுக்கும் தலைவருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட, இடைக்கால நிர்வாக சபை, சமாதானத்திற்கான யுத்த நிறுத்தம் என்று அனைத்தையும் சந்திரிக்காவோடும் தெற்கின் தீவிர இனவாதிகளுடனும் சேர்ந்து எதிர்த்ததே இதே அநுரவின் கட்சிதான். 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் மூலம் 2007 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி பிரித்துப் போட்டதே அநுரவின் கட்சிதான்.

மகிந்தவின் போர்முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்கி வந்து, தெற்கின் இனவாதத் தீயினை அணையாது வளர்த்து, தனது ஆதரவாளர்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு உதவி புரிந்து, தமிழர்களின் விடுதலை நம்பிக்கையினை நிரந்தரமாகவே அழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டதும் அதே அநுரவின் கட்சிதான்.

போர்க்குற்றங்கள் நடக்கவில்லை, இனக்கொலை என்றே ஒன்று இல்லை, கொல்லப்பட்டதெல்லாம் பயங்கரவாதிகள் என்று இன்றும் நியாயம் கற்பிப்பதும், எமது இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம், சர்வதேச விசாரணை என்பதை ஏற்கமாட்டோம், வடக்குக் கிழக்கும் இணைய முடியாது, இருப்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையே, இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று இன்றும் கூறுவதும் அநுரவின் கட்சிதான்.

அவரது அரசு இன்று செய்வது ஊழல்வாதிகளை மக்கள் முன் காட்டி, அரசியலில் தமது எதிரிகளை பலவீனப்படுத்துவதும் , தாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை உறுதிசெய்துகொள்வதும்தான்.

அநுரவிற்குக் காவடி தூக்கும் தமிழ்த் தேசியவாதிகள் அவர் முன்வைக்கவிருக்கும் தமிழருக்கான தீர்வு என்னவென்பதை அவரிடம் எப்போது கேட்கப் போகிறார்கள்? வடக்குக் கிழக்கு இணைப்பு எனும் பேச்சிற்கே இடமில்லை என்று அவர் அடிமடியில் கை வைத்திருக்கும் நிலையில் அவரைத் தமிழர்கள் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்? தெற்கின் ஊழல்களுக்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் தமிழர்களின் பிரச்சினைக்கும் இடையே இருக்கும் தொடர்புகள் என்ன? அல்லது தெற்கினை தூய்மைப்படுத்திவிட்ட உடனேயே தமிழருக்கான தீர்வைத் தரப்போகிறேன் என்று அநுர எங்காவது சொன்னாரா?

இரத்திணச் சுருக்கம்!

இந்த கேள்விகளுக்கு எந்த பதிலும் அவர்களிடம் இல்லை.

கோரஸ் பாடுபவர்களிடம் கொள்கை விளக்கம் கேட்கும் நம்மில்தான் பிழை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.