Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

03 Nov, 2025 | 02:46 PM

image

இலங்கையில் குடித்தொகை பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர், "செந்தமிழ்ச் சொல்லருவி" சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார்.

உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழாவானது ஞாயிற்றுக்கிழமை (03) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது. 

அந்த விழாவில் கலந்துகொண்டு பிரதம விருந்தினர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்து தத்துவ நெறியிலே எமது முன்னோர்கள் யுகங்களை, கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்காக வகுத்தார்கள். இப்போது நடைபெறுவது கலியுகம். தலைமுறைகள் பற்றியும் சொன்னார்கள்.

1945ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்களை அமைதியான தலைமுறையினர் என்றார்கள். அவர்கள் பெரிதாக குடித்தொகை பெருக்கத்தை காட்டவில்லை. 1945ஆண் ஆண்டு உலகப்போர் முடிவடைந்தது.

இதன்காரணமாக உலகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது, உலகத்திலே மக்கள் தொகை குறைந்து விட்டது என்றும், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒரு கோஷம் எழுந்தது.

அந்த கோஷம் யாழ்ப்பாணத்திலும் ஒலித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தான் மிதமிஞ்சிய அளவில் பிள்ளைகளை பெற்றார்கள்.

1945 -1950ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒரு வீட்டில் 10,12 பிள்ளைகளை பெற்றார்கள். அதனால் குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 

இலங்கையின் குடித்தொகை கணக்கெடுப்பு தரவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்தன. ஒரு காலத்தில் 13 இலட்சம்பேர் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். 

தற்போது ஐந்தரை இலட்சம்பேர் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள். ஏனையோர் புலம்பெயர் தேசங்களுக்கு சென்று அங்கே குடித்தொகையை பெருக்குகின்றார்கள். 

இங்கே, நாம் இருவர் நமக்கிருவர் என்ற காலம் போய், நாமிருவர் நமக்கேன் ஒருவர் என்று கேட்கின்ற காலம் வந்துவிட்டது.

குறிப்பாக தமிழர்களின் குடித்தொகை பெருக்கமானது குறைந்திருக்கிறது. இஸ்லாமியர்களின் குடித்தொகை பெருக்கம் 10.5 வீதத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளது. 

தமிழர்களது குடித்தொகை பெருக்கமானது 11.5 வீதத்திலேயே உள்ளது. தமிழர்களின் குடித்தொகை பெருக்கம் மெல்ல மெல்லமாக உயர்கிறது என்று சொல்கின்ற அளவிற்குகூட இல்லை என்றார்.

தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு | Virakesari.lk

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் சொல்வது சரியென்று தெரியவில்லை. இலங்கை தமிழர்களின் சனத்தொகை 11.1 வீதத்திலிருந்து 12.3 வீதமாக அதிகரித்திருக்கின்றது என்றே பகிரப்பட்ட தரவுகளில் இருக்கின்றது. இது இங்கு களத்தில் கூட ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு செய்தி.

large.IMG_4132.jpeg.db55399467a869ef7be5

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் சொல்வது சரியென்று தெரியவில்லை.

நீங்கள் சொன்னது சரி . இலங்கையில் தமிழர்களின் சன தொகை 2024 அதிகரித்திருக்கின்றது.

அப்படியிருக்க பதற வைக்கும் தமிழர்களின் வீழ்ச்சி என்று காணொளியும் ஒன்று உலாவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீடு: இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு – உண்மையும் பின்னணியும்!

வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்.

adminNovember 4, 2025

pop1.jpg?fit=900%2C504&ssl=1

இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீடு: இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு – உண்மையும் பின்னணியும்

வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

📈 ஆச்சரியம் அளிக்கும் புதிய தகவல்: தமிழர்களின் வீதாசாரம் அதிகரிப்பா?

(நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை )

அண்மையில் வெளியான இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீட்டின் அடிப்படை தகவல்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2012இல் 11.1% ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள், 2024இல் 12.3% ஆக அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி, இனவாதிகளின் வன்மத்தையும் அதிகரித்துள்ளது.

ஒரு இனத்தின் குடித்தொகை வீதாசாரம் அதிகரிக்க, பொதுவாக கருவளம் (பிறப்பு வீதம்) அதிகரிக்க வேண்டும், இறப்பு வீதம் குறைய வேண்டும் அல்லது குடியேற்றம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அனைத்துக் காரணிகளும் குடித்தொகை வீதாசாரத்தைக் குறைக்கும் திசையிலேயே இருக்கின்றன.

📉 வரலாற்றுப் போக்கு: வீழ்ச்சியும் முரண்பாடான மாற்றமும்

உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து, இலங்கைத் தமிழரின் வீதாசாரம் தொடர்ச்சியாகக் குறைந்து வந்தது:

ஆண்டு

இலங்கைத் தமிழர்களின் வீதாசாரம்

முஸ்லிம்களின் வீதாசாரம்

1981

12.7%

7.0%

2012

11.2%

9.2%

இந்த அடிப்படையில், 2031ஆம் ஆண்டு இடம் பெறப்போகும் குடித்தொகைக் கணிப்பீட்டில் முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர்களை முந்திச் செல்வர் என்று நான் எதிர்வு கூறியிருந்தேன். இப்போது இந்த எதிர்வு கூறல்களுக்கு முரணாக வீதாசாரம் அதிகரித்து இருப்பது ஏன் என்பதை நாம் ஆராய வேண்டும்.

🔍 உண்மை வெளிச்சம்: அடையாள மாற்றமே அதிகரிப்பின் காரணம்

இந்த அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள உண்மை என்னவென்றால், குடிசன மதிப்பீட்டின் போது சேகரிக்கப்படும் தகவல்களது உண்மைத்தன்மையானது பரிசீலிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுவதில்லை. மாறாக வாய்வழியாகக் கேட்கப்படும் வினாக்களுக்குக் குடியிருப்பாளர் வழங்கும் பதில்கள் நேரடியாக எவ்வித ஆதாரச் சரிபார்ப்புகளும் இன்றிக் குடிசன மதிப்பீட்டாளரால் பதிவு செய்யப்படுவதே நடைமுறையாகும்.

இந்திய வம்சாவளித் தமிழர்களின் அடையாள மாற்றம்:

1981ஆம் ஆண்டு 5.5% ஆக இருந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள், அவர்களின் பிறப்பு வீதம் அதிகமாக இருந்தபோதிலும், தம்மைத் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதன் காரணமாக:

2012இல் 4.2% ஆகக் குறைந்தது.
2024இல் 2.8% ஆக மேலும் குறைவடைந்துள்ளது.

சில ஆய்வாளர்கள் இதை இந்திய வம்சாவளித் தமிழர்களின் கருவளத்தை வேரறுக்கும் சூழ்ச்சித் திட்டங்களால் ஏற்பட்டது எனக் கருத்துக் கூறுகின்றனர். தற்போது வெளியாகிய குடிசனமதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிற தகவல்கள் மற்றும் ஆய்வுகள் இந்திய வம்சாவளித்தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம் என்ற கருதுகோளினை உறுதிப்படுத்தும் விதமாகவே காணப்படுகின்றன

தரவுகள் தெளிவுபடுத்துகின்றன:

மொத்த தமிழர்களின் வீதாசாரம்: (இலங்கைத் தமிழர்கள் + இந்திய வம்சாவளித் தமிழர்கள்) 2012இல் (11.1+4.1=15.2) ஆக இருந்தது, 2024இல் (12.3+2.8=15.1) ஆக, அதாவது வெறும் 0.1% மட்டுமே குறைந்துள்ளது.
மத ரீதியான கணிப்பீடு: இந்துக்களின் வீதாசாரம் 2012 இல் இருந்து 2024 வரை 12.6% ஆக மாறாமல் இருப்பது இந்த அடையாள மாற்றத்துடன் ஒத்துப் போகிறது.
பிராந்திய உதாரணம் (பதுளை மாவட்டம்): 2012 இல் இலங்கைத் தமிழர்கள் 2.7% இலிருந்து 2024இல் 9.4% ஆக அதிகரித்துள்ள அதே வேளையில், இந்திய வம்சாவளித் தமிழரின் வீதாசாரம் 18.5% இலிருந்து 11.0% ஆகக் குறைந்துள்ளது.

(நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை)

இலங்கைத் தமிழர்கள் பதுளைக்கு இடம்பெயர்ந்தமைக்கான காரணங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையில், இந்திய வம்சாவளித் தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருந்தாலே அன்றி வேறு எந்தக் காரணியும் மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரத்திற்கான விஞ்ஞானபூர்வ விளக்கமாக அமையாது

⚖️ அரசியல் சூழ்ச்சிகளும் வாக்கு வங்கி அரசியலும்

சனத்தொகை மதிப்பீட்டில் தமிழர்கள் கூறுபடுத்தப்படுதை நாம் கவனமாக இங்கு அவதானிக்க வேண்டும். அதாவது 1981ஆம் ஆண்டு முதல் தாழ்நிலச் சிங்களவர்கள் மற்றும் கண்டியச்

சிங்களவர்கள் சிங்களவர்களாக ஒன்றிணைக்கப்பட்டு கணக்கிடப்படுகிறார்கள். எனினும், ஆரம்பகாலங்களில் தமிழர்களாகக் கணக்கிடப்பட்டவர்கள் 2012 முதல் மேலும் பல

உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இலங்கை செட்டி மற்றும் பரதவர்கள் என்று திட்டமிட்டவகையில் பிரிக்கப்பட்டுக் கணக்கிடப்படுகிறார்கள்.

இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்கவேண்டுமானால், 2012ஆம் ஆண்டிலேயே தமிழர்கள் “தமிழர்” என்று ஒன்றுபட்டு தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால், அதை தமது சுயநல நோக்கங்களுக்காக, வாக்கு வங்கி சரிந்து விடும் என்று கருதிச் சில மலையக தலைமைகள் எதிர்த்து இருந்தன.

🚨 தமிழ் அரசியல் கட்சிகள் மீதான நேரடி விமர்சனம்

தமிழர்களது இருப்பைத் தக்கவைக்கும் அடிப்படைப் பொருண்மிய மேம்பாடு குறித்துத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகள் எவையும் அக்கறைப்படாதிருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

புலிகளின் காலத்தில் அவர்கள் போரின் மத்தியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை முன்னெடுத்து இருந்தார்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக, பல தசாப்தங்களாகத் தமிழ் தேசியம் பேசிவரும் தமிழரசு கட்சி (ITAK) மற்றும் தமிழ் காங்கிரஸ் அல்லது இந்திய ஐந்தாம் படையுடன் இணைந்து செயல்படும் ஏனைய தமிழ்க் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கோ இன்றுவரை தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதே பாரிய பிரச்சினையாக இருக்கிறது.
தமிழர்களுக்கு உரிமைகளைப் பெறுவதாக உணர்ச்சிகளைத் தூண்டிப் போராட்டம் நடத்துவதையும், உரிமைகளை இழந்தமைக்கு ஏனையவர்களைக் குற்றம் சாட்டுவதையும் செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் இலக்கை அடைவதற்கு முயற்சி செய்தார்களே தவிர, இதுநாள் வரையில் குறித்த அரசியல் தலைமைகள் இனத்தின் இருப்பினைக் காப்பதற்காக ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போடவில்லை என்பதே நிதர்சனம்.

💡 தமிழர்களின் இருப்புக்குத் தீர்வு: பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்

அதிகரித்த திருமண வயது, சீதனம், சோதிட நம்பிக்கை, சாதீயம், பிராந்தியவாதம், மதவாதம் போன்ற பல காரணிகள் தமிழர்களின் பிறப்பு வீதத்தைக் குறைத்தாலும், நலிவடைந்த பொருளாதாரமே முதன்மைக் காரணியாகத் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும், குறைந்த பிள்ளைகள் பெறுவதையும் தூண்டுகிறது.

தமிழர்களின் குடித்தொகையை இலங்கையில் அதிகரிக்க வேண்டுமானால், தமிழர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
தமிழர்களின் நலிவடைந்த பொருளாதாரம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் தமிழர்களின் புள்ளிவிபரங்களினாலும், அதிகரித்த மந்த போசணை மற்றும் தாய்-சேய் இறப்பு வீதங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்திடம் இருந்து கற்க வேண்டிய பாடம்:

இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மைக்கு மத்தியிலும், தமக்கென வங்கி கட்டமைப்பு, பள்ளிவாசல்கள் மூலம் ஒன்றுபட்ட சமூக பொருளாதார வேலை திட்டங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

இவ்வாறான வேலைத்திட்டங்கள் எவற்றைப் பற்றியும் சிந்திக்காது, தமிழினம் விசர் தனமான பதிவுகளை யூடீயுப் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவேற்றி மற்றவர்களைக் குற்றம் சாட்டியும், நக்கலடித்தும் மகிழ்ந்து கொண்டிருப்பது தமிழினத்தின் சாபக்கேடு என்றே சொல்லவேண்டும்.

வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

சமுதாய மருத்துவ நிபுணர், குடித்தொகையியல் ஆய்வாளர்

4.11.2025

https://globaltamilnews.net/2025/222281/

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

சமுதாய மருத்துவ நிபுணர் (தற்போது புதிதாக "குடித்தொகையியல் ஆய்வாளர்") தகுதியில் இருக்கும் முரளி வல்லிபுரநாதனும் "ஊகங்களை" வைத்துத் தான் தமிழர் குடித்தொகையைப் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டியிருக்கிறதா😂?

"தமிழர் குடித்தொகை பிறப்பு வீதம் காரணமாக வளர்ந்திருக்கிறதா?" என்று திடமாகக் கண்டறிய தமிழர் பகுதிகளில் இருக்கும் பிறப்புகளின் எண்ணிக்கையை கடந்த 10 வருடங்களுக்குப் பின்னோக்கிப் பார்த்து ஒரு அறிக்கை தயாரிக்க முடியாதா? இதை விட்டு விட்டு இதைப் போன்ற தரவுகளை சந்தேகத்திற்குள்ளாக்கும் வேலைகளை ஒரு நிபுணரே செய்தால், ஏனையோர் எப்படி நடந்து கொள்வர்?

பிகு: அண்ணளவான பிறப்பு இறப்பு வீதங்கள் 2020 ஆண்டுக்குரியவை இலங்கையின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப் பட்டிருக்கின்றன.

https://www.statistics.gov.lk/Resource/en/Population/Vital_Statistics/CrudeBirthRatesCrudeDeathRatesProvinceDistrictSex2019-2022.pdf

அதன் படி பார்த்தால், தேசிய மட்ட பிறப்பு இறப்பு வீதங்களில் காணப்படும் மாற்றங்கள் (national trend) தான் தமிழ் மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இது இலங்கை முழுவதற்கும் பொதுவான ஒரு போக்கு, தமிழர்களுக்கென்று தனியான சனத்தொகை வளர்ச்சிக் குறைபாடெதுவும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சனத்தொகை பேணப்பட வேண்டுமானால் வட கிழக்கில் பொருளாதார நிலை உயர்வு காணவேண்டும். வாழ்ககை தரமல உயர்வதற்கு சகஜமான வாழ்ககை நிலை ஏற்படவேண்டும். புலம்பெயர் முதலீடுகள் வட கிழக்கு நோக்கி நகரவேண்டும். அரசிடம் உரிமைகளை வலியுறுத்தி பெறும் அதே வேளை தெற்குமன் நல்லுறவை பேணவேண்டும். ஒரு comfort zone ல் மக்கள் வாழ்வதாக உணரும் போது குடியகல்வுகள் கட்டுப்படுத்தப்படும். சனத்தொகையில் இயல்பான வளர்சசி போக்கு ஏற்படும்.

அத்தோடு இலங்கை தமிழரின் சனத்தொகையை உயர்த்திக் காட்டும் நோக்குடன் மலையக தமிழர் இலங்கை தமிழர்களாக அடையாளப்படுத்துவது எந்த வகையில் மக்களுக்கு பலன் தரும் என்று தெரியவில்லை. ஏனெனில் குடித்தொகை கணக்கெடுப்பு என்பது வீட்டுவசதிகள் மற்றும் இன்னாரென்ன மக்கள் வாழ்வாதார திட்டங்களுடன் தொடர்பு பட்டது என்பதால், இதில் மலையக தமிழர் இலங்கை தமிழராக பதிவு செய்தால் மலையக தமிழருக்கான வீட்டுவசதி நிதி ஒதுக்கீடு போன்றவை குறைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாதா? இது குறித்த விபரங்களை @Justin @goshan_che போன்ற கருத்தாளர்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இலங்கை தமிழரின் சனத்தொகையை உயர்த்திக் காட்டும் நோக்குடன் மலையக தமிழர் இலங்கை தமிழர்களாக அடையாளப்படுத்துவது

மலையக தமிழர்கள் எப்போது இலங்கை தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்?

இலங்கை தமிழர் என்று அரசால் வரையறை செய்யப்பட்ட தமிழர்கள் பிறக்கும்போதே இலங்கை குடியுரிமை கொண்டவர்களாக பிறக்கிறார்கள், மலையக தமிழர்கள் எனப்படுவோர் காலம் காலமாக இலங்கைக்கு பொருளாதார ரீதியாக தமது ரத்தத்தை செலவிட்டாலும்

காலம் காலமாக சிங்கள தேசியகட்சிகளுடன் இணைந்தே அவர்கள் பயணித்திருந்தாலும் பல தசாப்தங்களாக அவர்களுக்கு இலங்கை பிரஜை என்ற குடியுரிமை இல்லாமலிருந்ததே வரலாறு.

ஒரே இனம் மொழி என்ற ரீதியில் மானசீகமாக மலையக தமிழர் எமது இனம் என்று நோக்கப்பட்டாலும், சட்டரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ இலங்கை தமிழரும் மலையக தமிழர்களும் சேர்ந்து பயணித்ததாக வரலாறே இல்லை.

On 3/11/2025 at 09:30, பிழம்பு said:

ஒரு காலத்தில் 13 இலட்சம்பேர் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். 

தற்போது ஐந்தரை இலட்சம்பேர் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள்.

அவர் யாழ்ப்பாண மக்கள் தொகையை குறிப்பிடபோய் இலங்கை தமிழர்களுடன் குழப்பிக்கிட்டார் என்று தோன்றுகிறது, 2023 கணக்கின்படி 6 லட்சத்து 30 ஆயிரமாக இருந்த யாழ்மக்கள் தொகை படிபபடியாக குறைந்து செல்கிறது என்பதே யதார்த்தம்.

யாழுக்கென்று ஒரு சிறப்பு உண்டு யாழ்மண்ணில் வாழும் மக்கள் தொகையைவிட இந்தியா அமெரிக்க ஐரோப்பிய மற்றும் வேலைவாய்ப்புக்காய் மத்திய கிழக்கு என்று புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் யாழ் மக்கள் தொகை ஏறக்குறைய அதிகம். போதாக்குறைக்கு படித்துவிட்டு வேலைதேடி கொழும்பு நோக்கி பெயரும் தமிழர்களும் கணிசம் அவர்களில்பெரும்பாலானோர் யாழுக்கு திரும்பி அங்கே வாழ்வதில்லை.

ஆனால் ஒன்று இன்னும் ஓரிரு தசாப்தங்களில் இலங்கையில் முதல் சிறுபான்மையினம் முஸ்லீம்களே, அவர்களுக்கும் எமக்குமான சனதொகை வித்யாசம் வெறும் மூன்றரை லட்சங்கள் என்றே நினைக்கிறேன்.

அதைவிட முக்கியம் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமிழர்களைபோல் பெரும் எடுப்பில் நாட்டைவிட்டு வெளியேறிவதில்லை, போதாகுறைக்கு பெரும்பான்மை தமிழர்களால் யாழ்ப்பாணம் நிறைந்திருப்பது சிங்களவர் முஸ்லீம்களின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

அதனால்தான் மஹிந்த கோத்தபாய, மைத்திரி ஆட்சியில் சிங்களவர்களை யாழ்ப்பாணத்தில் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, இன்று முஸ்லீம்கள் அதனை முயற்சிக்கிறார்கள், அதன் பிரதிபலிப்பே எந்த தடையும் இல்லாதபோதும் இன்றும் வாராவாரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று கூவுகிறார்கள்.

அதன் அப்பட்டமான சூழ்ச்சியே யாழிலிருந்து வெளியேற்றதாக சொல்லப்படும் முஸ்லீம்களைவிட அதற்கு சம்பந்தப்படாத முஸ்லீம்களே வெளியேற்றம்பற்றி அப்பப்போ தூண்டிவிடுவதும் துவேசத்தை வளர்ப்பதும்.

யாழின் மக்கள் தொகையை பேண இந்தியாவில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி தகர கொட்டகைகளிலும் தவிக்கும் வெய்யிலிலும் வாழும் எம்மக்கள் தாயகம் திரும்பலாம், ஆனால் ஏற்கனவே தாயகத்தை விட்டு விலகிய நாம் அவர்களை திரும்பு என்று சொல்லும் தகுதியை இழந்துவிடுகிறோம், ஆனாலும் அங்கு படும் கஷ்டத்தைவிட,

வெளியேற்றப்பட்டோம் வெளியேற்றப்பட்டோம் என்று சொல்லி யாழை செல்லரிக்க காத்திருக்கும் கூட்டத்தின் சதியை முறியடிக்கவாவது அங்கு துயரப்படும் எம் மக்கள் சுய விருப்பில் தாயகம் திரும்பலாம் என்பது மனக்கிடக்கை, கட்டளை அல்ல.

இன்று இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்கபோவதா சொல்கிறார்கள், அப்படி கொடுத்தாலும் எத்தனை தலைமுறையாக அங்கு வாழ்ந்தாலும் சிலோன் அகதிகள் என்றே தமிழகத்தில் பெரும்பாலானோர் அழைப்பார்கள். அது அவர்களில் பெரும்பாலானோர் குணம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

மலையக தமிழர்கள் எப்போது இலங்கை தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்?

குடிசன கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதனின் கருத்துகள் தொடர் பாகவே எனது கருத்தை கூறியிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
  1. நான் கணக்கில ரொம்பவே வீக்- ஆனாலும். இலங்கை தமிழர் தொகை எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் போக்கை என்னால் கூட காண முடிகிறது. 30 வருட போரில் இளையோரை அதிகம் காவு கொடுத்ததன் பின் விழைவு, இன்னும் சில பத்தாண்டுகளுக்காவது இலங்கை தமிழர் பிறப்பு வீதத்தில் தெரியத்தான் செய்யும். ஆனாலும் ஒட்டு மொத்தமாக இது 15 வருடத்துள் மீள நேர்மறை வளர்சிக்கு வந்துள்ளது நல்ல செய்தியே.

  2. ஆனால் இது மட்டுமே நல்ல செய்தியாக எனக்கு படுகிறது. எமது மக்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் குறிப்பாக, யாழ், மட்டகளப்புக்கு அப்பால் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் வீழ்சியை அல்லது மந்த நிலையை காட்டுவது கவலையான விடயம். யாரையும் ஒரு மாவட்டத்தில் இரு என கட்டாயம் செய்ய முடியாது. வாய்புக்கள் தேடி கொழும்பு இதர பகுதிகளுக்கு போவது இயல்பே. ஆனால் 1980 ற்கு முந்திய காலம் போல் இப்படி போவபர்கள், ஊருக்கு வருவதையோ, வாக்களிப்பு பதிவை ஊரில் வைத்திருப்பதையோ இப்போ செய்வதில்லை. கொழும்பு போனால் சில வருடங்களில் அங்கே ஐக்கியமாகி விடுகிறார்கள்.

  3. யாழ் மாவட்டத்தில் கூட நகருக்கு 10 கிமிக்குள் இருக்கவே பலர் விரும்புகிறனர். மட்டகளப்பிலும் எழுவான்கரையில்தான் அநேகர்.

  4. தரவுகளை பார்த்தால் - சனத்தொகை அடர்த்தி குறைந்த முதல் எட்டு மாவட்டமும் எமதுதான். ஒரு ஒற்றையாட்ட்சி நாட்டில் - குறைந்தளவு மக்கள், இப்படி அதிகளவு மண்ணை ஒரு அளவுக்கு மேல் பிடித்து வைக்க முடியாது. ஏனைய மாவட்டங்களில் வளப்பற்றாக்குறை ஏற்படும் போது, கவனம் எமது மாவட்டங்கள் மீதே திரும்பும். இது மேலும் எமது மாவட்டங்களில் எமது எம் வீதத்தை குறைக்கும்.

  5. எமது தனித்துவத்தின் அடிப்படையே எமது மண்ணில் நாம் அறுதி பெரும்பான்யாக இருப்பதுதான்.

  6. ஆகவே ஒட்டு மொத்தமாக சதவீதம் கூடி விட்டது என்ற நற்செய்தியை விட எமது பாரம்பரிய வாழிடத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பாரதூரமான விடயம்.

  7. இதை சரிக்கட்டும் அளவுக்கு வாய்புகளை ஏற்படுத்த முடியாவிடினும், மூன்று பிள்ளைகள் பெற்று, 8 மாவட்டங்களில் ஒன்றில் வாழ்வோருக்கு மாதாந்த தொகை போல ஏதும் கொடுத்தால் ஒரு சிறிய மாற்றம் வரலாம். ஆனால் நான் உட்பட சிறிய குடும்பமே நன்று என்ற மனநிலை தமிழ் சிங்கள மக்கள் இடையே ஊறிவிட்டது. இதை உதவி தொகைகள் பெரிதாக மாற்ற சாத்தியமில்லை.

  8. முஸ்லிம்களை பிழை சொல்ல முடியாது. அவர்கள் ஒன்றும் திட்டமிட்டு இதை செய்வதில்லை. எண்ணிக்கையே பலம், இறைவன் கொடுக்கும் அருள் பிள்ளைகள் என அவர்கள் இயல்பாக நம்புவதால், எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கிறது.

  9. அப்போ சிங்களவர், தமிழர் எண்ணிக்கையை கூட்ட என்ன செய்ய வேண்டும்? முதலில் தத்தம் மாவட்டங்களுக்கு பதிவு அளவிலாவது மீள வேண்டும். இன்றைய வேகமான உலகில் இது சாத்தியமே. அடுத்து, தனித்துவத்தை பேண நாம் எம் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற கூட்டு மனோநிலை உருவாக வேண்டும். அப்படி உருவாகி பிறக்கும் பிள்ளைகளை தெருவில் விடாமல், பராமரிக்க சமூக அமைப்புகள் இருக்க வேண்டும். குடும்பகட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்புகள் போல, பிறப்புவீதத்தை ஊக்குவிக்கும் பிரச்சார அமைபுகளும் இருக்க வேண்டும்.

  10. இப்படி எல்லாம் முயன்றுமே - ஸ்கெண்டிநேவிய நாடுகளின் இது போன்ற திட்டங்கள் தோல்விதான்.

  11. ஆகவே இதற்கு silver bullet முடிவு ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

மலையக தமிழருக்கான வீட்டுவசதி நிதி ஒதுக்கீடு போன்றவை குறைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாதா? இது குறித்த விபரங்களை @Justin @goshan_che போன்ற கருத்தாளர்களிடம் இருந்து எதிர்

நான் நினைக்கிறேன் - இது அவர்கள் சுயமாகவே, கேள்விகள் கேட்கும் போது இப்படி பதிகிறார்கள் என.

அரசு அப்படி ஒன்றாக கருதவில்லை.

வட, கிழக்கு, மேற்கு மாகாணத்தில்தான் இப்படி நடக்க்க வாய்புண்டு.

மலையக மக்கள் என்ற அடையாளத்தால் கிடைக்கும் ஒதுக்கலில் இருந்து வருங்கால சந்ததிகளை பாதுகாக்கும் வகையில் இதை செய்ய கூடும்.

இதற்கு யாழ்பாண சாதி அமைப்பின் வரலாற்றில் ஒரு உதாரணமும் உண்டு. பல்வேறு இடைநிலையில் வைக்கப்பட்ட சாதிகள், தம்மை தாமே அடையாள மாற்றத்துக்குட்படுத்தி, வெள்ளாளர் என்ற குடையின் கீழ் வந்ததாயும், இதனால்தான் வெள்ளாளருக்குள் கூட ஏற்ற தாழ்வு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள்.

மலையகத்தில் இந்த போக்கு இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருக்கும்வரை அவர்களுக்கான உரிமை, சலுகைகளை இது பாதிக்கவும் வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பதிலுக்கு நன்றி. நான் கேட்டதற்கு காரணம் வைத்திய கலாநிதி வல்லிபுரநாதனில் கட்டுரையில் குடிநன மதிப்பில் இலங்கைத்தமிழராக மலையக தமிழரை பதிவு நல்லது என்று கூறியிருந்தார். வெறும் பதிவில் எமது எண்ணிக்கையை கூட்டிகாட்ட மட்டும் அவர்களைச் சேர்க்காமல் அவர்களை நம்மை போல் நடத்துவதே சிறந்தது. ஆனால் அப்படி நடக்க இலங்கை தமிழர் மனநிலை ஒரு போதும் சம்மதியாது என்பதால் அவர்களுக்கு இழப்பு மட்டுமே தான் வரும் என்பது எனது அபிப்பிராயம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.