Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பது....

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது பாக்கிஸ்தான் அணி வீர‌ர்க‌ளின் விளையாட்டு

குறைந்த‌ ஓட்ட‌த்துக்கு ஆப்பு வைப்பாங்க‌ள் போல் இருக்கு............................

  • கருத்துக்கள உறவுகள்

பத்து.

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியா த‌ன‌து ஓவ‌ரின் விக்கேட் கீப்ப‌ர் கைச்சை வுட்ட‌துக்கு கோவ‌ப் ப‌ட்டார்

அடுத்த‌ ப‌ந்தில் குல்டிப் கைச்சை விட‌ அது சிக்ஸ்சுக்கு போய் விழ‌ கோவ‌ப் ப‌ட்டார் ஹா ஹா...........................

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வீரப் பையன்26 said:

வாய்ப்பில்ல்லை

பாக்கிஸ்தான் ப‌ந்து வீச்சாள‌ர் ஒருவ‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் அதிர‌டியா ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்ட‌ கூடிய‌ வீர‌ர்க‌ள்..............100ர‌ன்ஸ்ச‌ க‌ட‌ப்பின‌ம்................................

ஆமால்ல 114 அடித்து விட்டார்கள்.

13 minutes ago, வீரப் பையன்26 said:

ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது பாக்கிஸ்தான் அணி வீர‌ர்க‌ளின் விளையாட்டு

குறைந்த‌ ஓட்ட‌த்துக்கு ஆப்பு வைப்பாங்க‌ள் போல் இருக்கு............................

பாடசாலைப் பசங்க மாதிரி விளையாடுகிறார்களே?

18 minutes ago, புலவர் said:

பாகிஸ்தான் தூக்கி அடிக்கும் ஒரு பந்தும் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் இந்திய வீரர்களின் கைகளுக்குள் போய் விழுகிறது.

இன்று சிவராத்திரி விரதம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமால்ல 114 அடித்து விட்டார்கள்.

பாடசாலைப் பசங்க மாதிரி விளையாடுகிறார்களே?

இன்று சிவராத்திரி விரதம்.

ஷான் அப்பிரிட்டியால் குறைந்த‌ ர‌ன்ஸ்சில் இருந்து த‌ப்பித்து விட்டின‌ம்.................

2005 ம‌ற்றும் 2006 இந்த‌ கால‌ப் ப‌குதியில் பாக்கிஸ்தான் அணி இந்தியாவை அதிக‌ வாட்டி வென்று இருக்கின‌ம்.............இப்ப‌ பாக்கிஸ்தானுக்கு எல்லா விளையாட்டிலும் இந்தியா அடிக்குது.......................

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, புலவர் said:

5 சதத்துக்கு உதவத் விளையாட்டு

அப்பிடிச் சொல்லாதையுங்கோ ...நமக்கு வெற்றியும் புள்ளியும்.....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ப‌ரிட்சையில் பாஸ்...................

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று சிவராத்திரி விரதம்.

அதுதான் ஜெய்சா இந்த நாளைத் தெரிவுசெய்தவர்....அது சரி பிரியன் இன்றைக்கும் நம்ம ஆட்சிதானா..

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமால்ல 114 அடித்து விட்டார்கள்.

பாடசாலைப் பசங்க மாதிரி விளையாடுகிறார்களே?

இன்று சிவராத்திரி விரதம்.

சில‌ ச‌மைய‌ம் அப்ப‌டித் தான்.................

தொட‌க்க‌ம் இன்று பாக்கிஸ்தானுக்கு ந‌ல்ல‌ ப‌டியாய் அமைய‌ வில்லை................

பாக்கிஸ்தான் சூப்பர்8க்கு போவில் அடுத்த‌ விளையாட்டில் ந‌ம்பீயா அணிய‌ வென்றால் தான் போக‌ முடியும் தோத்தால் சூப்ப‌ர்8க்கு அமெரிக்கா போய் விடும்.................அமெரிக்கா சூப்ப‌ர்8க்கு போனால் ப‌ல‌ரால் ந‌ம்ப‌ முடியாம‌ல் போகும் ஹா ஹா😄..........................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

அதுதான் ஜெய்சா இந்த நாளைத் தெரிவுசெய்தவர்....அது சரி பிரியன் இன்றைக்கும் நம்ம ஆட்சிதானா..

தொட‌ர்ந்து உங்க‌ட‌ ஆட்ச்சி தான்

ஆனால் அவ‌ர் என‌க்கு கீழ‌ என்று நினைக்கிறேன்........................

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு அவுஸ்ரேலியா இல‌ங்கையை வெல்ல‌னும்

இல‌ங்கையிட‌ம் தோத்தால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌

நாளையான் போட்டி மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்...............................

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு அவுஸ்ரேலியா இல‌ங்கையை வெல்ல‌னும்

இல‌ங்கையிட‌ம் தோத்தால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌

நாளையான் போட்டி மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்....................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு அவுஸ்ரேலியா இல‌ங்கையை வெல்ல‌னும்

இல‌ங்கையிட‌ம் தோத்தால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌

நாளையான் போட்டி மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்....................

அப்படியென்றாள் நமக்கு பாயிண்டு வரும் பையன்சார்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆரம்பத்தில் பாகிஸ்தான் வென்றுவிடும் என்றே நினைத்திருந்தேன் .........ஆனால் எதோ ஒரு அதிசயம் நடந்து விட்டது .......! 😂

vivek-comedy.gif

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பில்டப்பு இதுக்குத்தான் போட்டனாங்கள்.... கொன்னுட்டீங்களேடா

May be an image of text that says 'இதுக்கு தான்டா விளையாட வர மாட்டோம்னு சொன்னோம்.. 10%பொழுதுபோக்கு GI mi PCB'

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா .. இந்த தீவு அதிபர் தனக்கு வருமானத்திற்காக நம்மளை ஏமாற்றி மாட்டிவிட்டிட்டானே

May be an image of text that says 'PAKIS PAKISTAN ANTAN பேசாம வீட்டிலே மூடிட்டு இருந்து mt இருக்கலாம் Troll memes mt இங்க வந்து பாகிஸ்தான் மானம் தான் போச்சு ม AI'

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

அதுதான் ஜெய்சா இந்த நாளைத் தெரிவுசெய்தவர்....அது சரி பிரியன் இன்றைக்கும் நம்ம ஆட்சிதானா..

எனக்கு இரண்டு முட்டை.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2026 at 13:13, செம்பாட்டான் said:

சிம்பாப்வேயின் வெற்றி ஒரு குருட்டு அதிஷ்டம் என்று சொல்ல முடியாது. துடுப்பாட்டம் ஆகட்டும், பந்துவீச்சு ஆகட்டும், களத்தடுப்பு ஆகட்டும், மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். மிகச் சரியான தயாரிப்புடன் வந்திருந்தார்கள். துடுப்பாடும் போது, வெகப்பந்துவீச்சாளர்களை மிகவும் இலகுவாக சமாளித்தார்கள். ஒரே ஒரு முறையான சுழற் பந்துவீச்சாளரான சாம்பாவை, நிதானமாக கையாண்டார்கள்.

அவர்களின் முறையான பந்துவீச்சும் துல்லியமான களத்தடுப்பும் வெற்றிக்கு வழி சமைத்தது. பிளெசிங்க் முசரபாணி தனது உயரத்தை மிகச் சிறப்பாக பாவித்தார். அவர்களின் பந்துவீச்சில் ஒவ்வொரு துடுப்பாட்டக்காரருக்கும், சரியான களத்தடுப்பை அமைத்தார்கள். இங்கிலீஷுக்கு போட்ட பந்து சரியாக தாசிங்க முசாக்கியாவின் கையில் வந்து பிடியாக விழுந்தது. அவர் நின்ற இடத்தில்தான் இங்கிலீஷ் நிறைய தடவை பிடி குடுத்து ஆட்டமிழந்திருக்கிறார்.

அத்தோட களத்துடுப்பு. அபாரம். ஒவ்வொருவரும் நெருப்பாக நின்றார்கள்.

உண்மையிலேயே, ஒரு சிறப்பான வெற்றி.

வார இறுதி முழுவதும் வேலை அத்துடன் ஒரு சின்ன அணியினை பெரிய அணி துவைத்து எடுப்பதனை பார்க்க ஏனோ மனம் வருவதில்லை, ஆனால் இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் வேலை இடைவேளையில் பார்த்திருப்பேன்.

சிம்பாவே ஓமானுடன் விளையாடும் போட்டி வேலையிடையே சிறிது பார்த்தேன், ஒமானுக்கு புள் செய்யமுடியாமலும் கட் செய்ய முடியாமலும் ஒரு லெந்தில் மிக துல்லியமாக பந்து வீசினார்கள், இவர்கல் சுப்பர் 8 போவார்கள் போல இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிகள் முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆயிற்று. கிருபன் ஐயா கொஞ்சம் ஒருக்கால் வந்து இன்றைக்கு கதிரையில் குந்துவது யார் சுத்த வர நின்று கதிரையை பிடித்து ஆட்டுவது யார் யார் என்ற ஒழுங்கை சட்டு புட்டு என்று அறிவிச்சுவிட்டு போனால் நாங்கள் எங்கள் வேலைகளை பார்க்க போயிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

அப்படியென்றாள் நமக்கு பாயிண்டு வரும் பையன்சார்...

என‌து தெரிவு அவுஸ்ரேலியா................அவுஸ்ரேலியா இல‌ங்கையை வென்று விடும்..............இல‌ங்கை சிம்பாவேய‌ வென்றால் அவுஸ்ரேலியா வெளிய‌...................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயம் said:

போட்டிகள் முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆயிற்று. கிருபன் ஐயா கொஞ்சம் ஒருக்கால் வந்து இன்றைக்கு கதிரையில் குந்துவது யார் சுத்த வர நின்று கதிரையை பிடித்து ஆட்டுவது யார் யார் என்ற ஒழுங்கை சட்டு புட்டு என்று அறிவிச்சுவிட்டு போனால் நாங்கள் எங்கள் வேலைகளை பார்க்க போயிடலாம்.

ஒரு நியாயம் வேண்டாமாய்யா 😁

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, vasee said:

வார இறுதி முழுவதும் வேலை அத்துடன் ஒரு சின்ன அணியினை பெரிய அணி துவைத்து எடுப்பதனை பார்க்க ஏனோ மனம் வருவதில்லை, ஆனால் இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் வேலை இடைவேளையில் பார்த்திருப்பேன்.

சிம்பாவே ஓமானுடன் விளையாடும் போட்டி வேலையிடையே சிறிது பார்த்தேன், ஒமானுக்கு புள் செய்யமுடியாமலும் கட் செய்ய முடியாமலும் ஒரு லெந்தில் மிக துல்லியமாக பந்து வீசினார்கள், இவர்கல் சுப்பர் 8 போவார்கள் போல இருக்கிறது.

சிம்பாவே சூப்ப‌ர்8க்கு போவ‌து என்றால் அய‌ர்லாந்தை வெல்ல‌னும்

சிம்பாவே அய‌ர்லாந்தை வென்றால் புள்ளி ப‌ட்டிய‌லில் சிம்பாவே ந‌ல்ல‌ நிலையில்............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த பில்டப்பு இதுக்குத்தான் போட்டனாங்கள்.... கொன்னுட்டீங்களேடா

May be an image of text that says 'இதுக்கு தான்டா விளையாட வர மாட்டோம்னு சொன்னோம்.. 10%பொழுதுபோக்கு GI mi PCB'

இதை பின‌லில் காட்டுவாங்க‌ள் அப்ப‌ தெரியும் லொள்😄....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி, டிபேந்திர சிங் ஐரீயின் வேகமான 58 (47 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆடாததால் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் ஆட்டமிழக்காத அதிரடியான 61 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிம்ரோன் ஹெட்மயரின் ஆட்டமிழக்காத வேகமான 46 (32) ஓட்டங்களுடனும் 15.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் 134 ஓட்டங்கள் எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாகவும் தகுதி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @வாத்தியார் க்குப் புள்ளிகள் இல்லை.


இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி சஞ்சய் கிருஷ்ணமூர்த்தியின் ஆட்டமிழக்காத மின்னல்வேக 68 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், மொனாக் பட்டேலின் புயல்வேக 52 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லோரன் ஸ்டீன்கம்ப்பின் வேகமான 58 (39 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆடிப் பங்களிக்காததால் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை.


எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டஇந்திய அணி இஷன் கிஷானின் மின்னல்வேக 77 (40 பந்துகள்) ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவின் நிதானமான 32 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பற்கொடுத்து வெளியேறியதால் 34 ஓட்டங்களிலேயே 4 முக்கிய நட்சத்திர விக்கெட்டுகளை இழந்திருந்தது. விக்கெட் காப்பாளர் உஸ்மான் கான் அதிரடியாக 44 ஓட்டங்களை எடுத்த போதிலும் அவரின் விக்கெட் வீழ்ந்த பின்னர் எவரும் நிலைத்து ஆடாததால் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

முடிவு: இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த மூவருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5163.jpeg

முதல்வர் நாற்காலியிலும் இறுதி சுமைதாங்கியிலும் மாற்றம் இல்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.