Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரசோதரன் said:

🤣...............

அல்வாயன் எனக்கு சீனியர்................ இங்கு களத்தில் மட்டும் இல்லை, பாடசாலையிலும் கூட.....................😜.

பாஸ்போட் கொப்பி அனுப்புறன் ....இணைத்து விடுங்கோ ரசோ...

  • Replies 1.8k
  • Views 56.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣...............

அல்வாயன் எனக்கு சீனியர்................ இங்கு களத்தில் மட்டும் இல்லை, பாடசாலையிலும் கூட.....................😜.

களத்தில் கனபேருக்கு கனபேரைத் தெரிந்திருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

எங்கயோ ஜாலியா சுத்துறார் போல கிடக்கு

large.IMG_5595.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

கண் தப்பு கனநாளாய் கதிரையை ஆக்கிரமித்து உள்ளார். சுத்தி நிக்கிற ஆட்கள் ஆட்டுறது காணாது.

பெரும்பாலும் அரை இறுதி போட்டி முடிவில் நான் பின்னுக்கு போவேன். பின்னுக்கு போவதற்கு,அவுஸ்திரேலியா பாகிஸ்தானில் படுதோல்வி அடைந்தது தெரிந்தும் தென்னாபிரிக்காவை தெரிவு செய்யாமல் அவுஸ்திரேலியாவை தெரிவு செய்ததும், இங்கிலாந்திடம் 3-0 க்கு என்ற கணக்கில் இலங்கை தோல்வி அடைந்தது என்பது தெரிந்தும் இலங்கை நியூசிலாந்து போட்டியில் இலங்கையை தெரிவு செய்ததும் முக்கிய காரணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு - என்ன செய்ய வேண்டும். இலங்கையை 64 ஓட்டங்களால் வெல்ல வேண்டும், அல்லது 13.1 பந்துப் பரிமாற்றங்களில் துரத்திப் பிடிக்க வேண்டும்.

எனக்கென்றால், இது நடக்கும் போல் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

கண் தப்பு கனநாளாய் கதிரையை ஆக்கிரமித்து உள்ளார். சுத்தி நிக்கிற ஆட்கள் ஆட்டுறது காணாது.

இனி ஏணி வைச்சாலும் எட்டாது போல.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

large.IMG_5595.jpeg

என்ஜோய் ஜி.

அப்படியே ஒரு எட்டு தெஃரானுக்கும் போட்டு வாறது😂.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

இனி ஏணி வைச்சாலும் எட்டாது போல.

என்ன பகிடி விடுகிறீர்கள். நீங்கள்தான் வெல்லப் போகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

91/0 பாகிஸ்தான் நல்ல ஆரம்பம், ஃபரான் ஆட்டம் சிறப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் விக்கட் இழப்பின்றி 120 தாண்டிட்டினம். பெரிய ஓட்டம் அடிக்கப் போகினம் போல.

ஒரு தாக்குதலோடதான் வந்திருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

150-0

எவ்வளவு அடிப்பினம். ஒரு 230 அடிப்பினமா. இன்னும் 36 பந்து இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது 64 ஓட்டவித்தியாசங்களுக்குல் இலங்கையை பாகிஸ்தான் அணியை வென்றால் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் தெரிவாகிவிட்டது என்றே நினைகிறேன்.

11 hours ago, கிருபன் said:

large.IMG_5595.jpeg

ஜி,

உங்கினிக்கயும் 2 மிசை விழுந்ததாமே? பத்திரமா இருங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பாகிஸ்தான் தெரிவாகிவிட்டது என்றே நினைகிறேன்.

ஜி,

உங்கினிக்கயும் 2 மிசை விழுந்ததாமே? பத்திரமா இருங்கோ.

விழுந்தது என்றுதான் சொல்கின்றார்கள். ஆனால் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

விழுந்தது என்றுதான் சொல்கின்றார்கள். ஆனால் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றார்கள்

நல்லது.

புர்ஜ் கலிபா பில் ஏறி பார்த்தால் - உச்ச மாடியில் ஒரு தங்க vending machine இருக்கும் - அதில் எனக்கு ஒரு பிஸ்கெட் வாங்கி வரவும்😂


சனத் பதவி விலகினார்.

1 hour ago, கந்தப்பு said:

குறைந்தது 64 ஓட்டவித்தியாசங்களுக்குல் இலங்கையை பாகிஸ்தான் அணியை வென்றால் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகிவிடும்

இலங்கை 148 அடிக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

கீவீஸ் உள்ளே பாக்கீஸ் வெளியே 😂.

எனக்கு புள்ளிகள் கன்பர்மெடு😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

கீவீஸ் உள்ளே பாக்கீஸ் வெளியே 😂.

எனக்கு புள்ளிகள் கன்பர்மெடு😂

இனி வயசுக்கு வந்தென்ன..

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

இனி வயசுக்கு வந்தென்ன..

😂 நாளைக்கி இந்தியாவும் வென்றால் 4 செமி பைனல் அணியை சரியாக கணித்தேன் என என்னை நானே ஆறுதல் படுத்த முடியும் என்பதால் ஒரு சின்ன சந்தோசம்😂

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கடைசியா இப்பிடி முடிந்துதே. சானகா கடைசியில் ஒரு காட்டுக் காட்டி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தோத்தாலும் பாகிஸ்தான கலைச்சு விட்டதால, இலங்கை வென்ற மாதிரித்தானே. இலங்கையைத் தெரிவு செய்தாக்களுக்கும் இரண்டு புள்ளிகள் குடுக்கலாமே. 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் புயல் வேக செஞ்சுரியான 100 (60 பந்துகள்) ஓட்டங்களுடனும், பக்கர் ஸமனின் மின்னல் வேக 84 (42 பந்துகள்) ஓட்டங்களோடும் 8 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது..

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தும், பவன் ரத்தநாயக்கவின் அதிரடியான 58 (37 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தசுன் ஷானகவின் விளாசலான ஆட்டமிழக்காமல் எடுத்த 76 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் வேறு இலக்கை அண்மித்தும், இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

எனினும் நியூசிலாந்தை ஓட்ட விகிதத்தில் முந்துவதற்கு இலங்கையை 147 ஓட்டங்களுக்குள் சுருட்டி வெல்ல வேண்டியிருந்த நிலையில், சிறிலங்கா அணி 207 ஓட்டங்களை எடுத்ததால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @சுவைப்பிரியன் க்கும் புள்ளிகள் கிடையாது!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

large.IMG_5595.jpeg

8 minutes ago, செம்பாட்டான் said:

இலங்கை தோத்தாலும் பாகிஸ்தான கலைச்சு விட்டதால, இலங்கை வென்ற மாதிரித்தானே. இலங்கையைத் தெரிவு செய்தாக்களுக்கும் இரண்டு புள்ளிகள் குடுக்கலாமே. 😉

என்னையா ..நீங்கதனே இப்ப உதவி கமிசனர் ...கிருபன் ஜீ உடன் கதையுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு 01 மார்ச் இரு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, ஸிம்பாப்வே (X2) எதிர் தென்னாபிரிக்கா (X4)

ZIM எதிர் SA

ஐந்து பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எனினும் ஒருவரும் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை.

17 பேர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும் @vasee இப்போட்டியில் விளையாடாத நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

AUS

ஏராளன்

AUS

வசீ

NZ

புலவர்

AUS

சுவைப்பிரியன்

AUS

அல்வாயன்

AUS

ஈழப்பிரியன்

SA

நியூ பலன்ஸ்

AUS

வாத்தியார்

AUS

கறுப்பி

AUS

வாதவூரான்

AUS

வீரப் பையன்26

AUS

சுவி

AUS

கிருபன்

SA

கோஷான் சே

SA

அஹஸ்தியன்

SA

கந்தப்பு

AUS

நியாயம்

AUS

எப்போதும் தமிழன்

SA

ரசோதரன்

AUS

பிரபா

AUS

நிலாமதி

AUS

நந்தன்

AUS

இப்போட்டியில் தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடைக்குமா? horse_1f40e.gif

backhand-index-pointing-down_1f447.png

64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், இந்தியா (X1) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (X3)

IND எதிர் WI

அனைவரும் இந்தியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை!

அத்தோடு இப்போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

IND

ஏராளன்

IND

வசீ

IND

புலவர்

IND

சுவைப்பிரியன்

IND

அல்வாயன்

IND

ஈழப்பிரியன்

IND

நியூ பலன்ஸ்

IND

வாத்தியார்

IND

கறுப்பி

IND

வாதவூரான்

IND

வீரப் பையன்26

IND

சுவி

IND

கிருபன்

IND

கோஷான் சே

IND

அஹஸ்தியன்

IND

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

IND

பிரபா

IND

நிலாமதி

IND

நந்தன்

IND

இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா? poodle_1f429.gif

  • கருத்துக்கள உறவுகள்

நாளை தென்னாபிரிக்கா வெல்லும் என கணித்த 5 பேரும் கிரிகெட் மேதைகள் என்பதை நாளைய போட்டி முடிவு உறுதி செய்யுமா 😂.

நாளை இந்தியா வென்றால் எனக்கு இங்கும், பின் அரையிறுதி கணிப்பிலும் புள்ளிகள் வரும்.

ஆனால் இந்தியா தோற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தியா தோற்பதற்கான தியாகமா என் புள்ளிகள் போகட்டும் 😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.