Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலச்சினை,அடையாளங்கள் ஏதுமில்லாமல் பணிகளை தொடரலாம் என்பது என் கருத்து.விளம்பரங்கள் இப்போதைக்கு தேவையுமில்லை.காலம் இருக்கிறது. அனுபவங்கள் வரும். அதன் பின் அத்திவாரங்களை போடலாம்.

எனக்கு ஏராளன் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்தான் என் அத்திவாரம். மிகுதியை காலம் போக போக பார்க்கலாம்.

  • Replies 166
  • Views 9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • ஏராளன்
    ஏராளன்

    அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்த

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உண்மையில் இன்னும் நான் அதை நேரடியாக ஆரம்பிக்கவில்லை. வேலையிடத்தில் எதிர்பாராத ஒரு இழப்பு ஏற்பட்டதால் அனேகமான வேலைச்சுமைகள் என் தலையில் வீழ்ந்து விட்டது.

மீண்டு வர பல நாட்கள் எடுக்கலாம் என நினைக்கின்றேன்.

சுடுது மடியை பிடி என அவசரப்படாமல் ஆறுதலாக சென்றால் நினைத்த இலக்கை அடையலாம் என்பது என் கருத்து.

இது பற்றி உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

அப்படியே செய்யலாம் அண்ணை.

முதலில் நாங்கள் ஏனையோர் கொண்டு வரும் கொடையாளிகளின் பணத்தில் வேலைகளை மெல்ல, மெல்ல செய்ய ஆரம்பிப்போம்.

தொடர்சியாக நீங்கள் வேலையிட பளு குறைந்த பின் உங்கள் ஆட்களை சேர்க்கலாம்.

அவசரப்பட்டு செய்ய எந்த அவசியமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

சுடுது மடியை பிடி என அவசரப்படாமல் ஆறுதலாக சென்றால் நினைத்த இலக்கை அடையலாம் என்பது என் கருத்து.

உண்மை இங்கே எந்த ஒரு அவசரமும் இல்லை

3 hours ago, goshan_che said:

முதலில் நாங்கள் ஏனையோர் கொண்டு வரும் கொடையாளிகளின் பணத்தில் வேலைகளை மெல்ல, மெல்ல செய்ய ஆரம்பிப்போம்.

எங்களால் முடிந்த அளவிற்கு ஏற்றமாதிரி உதவிகளை செய்யலாம்

பேனர் தொடர்பாக நானும் முன்னர் எழுதி விட்டேன் .

எனது அனுபவப்படி இப்போதைக்கு அது தேவையில்லை

செயலில் காட்டிவிட்டு விளம்பரம் செய்யலாம் என நினைக்கின்றேன்

அடுத்து ஒரு மலசல கூடம் அமைப்பதற்கான நிதி சேர்ந்தவுடன் அந்த வேலையை ஆரம்பிக்கலாம் .

முதலில் எங்கே ஆரம்பிப்பது என்பதை எராளன் தெரியப்படுத்தவும்.

கள உறவுகளும் அதற்கான சம்மதத்தைத் தெரியப்படுத்திய பின்னர்

ஆரம்பிக்கலாம் .

எப்படியும் மாசி மாதத்தில் குறைந்தது ஒன்றையாவது கட்டி பயனாளியின் கைகளில் ஒப்படைக்கலாம் என்று நினைக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

வேலையிடத்தில் எதிர்பாராத ஒரு இழப்பு ஏற்பட்டதால் அனேகமான வேலைச்சுமைகள் என் தலையில் வீழ்ந்து விட்டது.

மீண்டு வர பல நாட்கள் எடுக்கலாம் என நினைக்கின்றேன்.

சரி அண்ணை.

13 hours ago, குமாரசாமி said:

இலச்சினை,அடையாளங்கள் ஏதுமில்லாமல் பணிகளை தொடரலாம் என்பது என் கருத்து.விளம்பரங்கள் இப்போதைக்கு தேவையுமில்லை.காலம் இருக்கிறது. அனுபவங்கள் வரும். அதன் பின் அத்திவாரங்களை போடலாம்.

எனக்கு ஏராளன் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்தான் என் அத்திவாரம். மிகுதியை காலம் போக போக பார்க்கலாம்.

நன்றி அண்ணை, படிப்படியாக தொடருவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

செயலில் காட்டிவிட்டு விளம்பரம் செய்யலாம் என நினைக்கின்றேன்

சரி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அடுத்து ஒரு மலசல கூடம் அமைப்பதற்கான நிதி சேர்ந்தவுடன் அந்த வேலையை ஆரம்பிக்கலாம் .

முதலில் எங்கே ஆரம்பிப்பது என்பதை எராளன் தெரியப்படுத்தவும்.

கள உறவுகளும் அதற்கான சம்மதத்தைத் தெரியப்படுத்திய பின்னர்

ஆரம்பிக்கலாம் .

எப்படியும் மாசி மாதத்தில் குறைந்தது ஒன்றையாவது கட்டி பயனாளியின் கைகளில் ஒப்படைக்கலாம் என்று நினைக்கின்றேன் .

புதிய மலசலகூடம் இனி கட்டுவது காரைநகரில் தான் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அடுத்து ஒரு மலசல கூடம் அமைப்பதற்கான நிதி சேர்ந்தவுடன் அந்த வேலையை ஆரம்பிக்கலாம் .

முதலில் எங்கே ஆரம்பிப்பது என்பதை எராளன் தெரியப்படுத்தவும்

காரைநகர் வேலைக்குரிய தகவல்களை ஏராளன் திரட்டி கொண்டிருக்கிறார் என எண்ணுகிறேன்.

கொடையாளியை நாளை நேரில் சந்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடக் குழி கல்லு கட்டும் வேலை நடைபெறுகிறது.

munn-vadd-south.jpg

M-V-S.jpg

காரைநகர் புதிய மலசலகூடத்திற்கான மாதிரி அளவுத்திட்டம்.

Karainagar-new-toilet-plan.jpg

  • கருத்துக்கள உறவுகள்

vaddu-south.jpg

வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி கட்டும் பணி நடைபெறுகிறது.

Munnody-BS-2026-02-01.jpg

வங்கிப் பரிவர்த்தனை விபரம்.

Munnody-2026-02-01-BB.jpg

தற்போதைய வங்கி மீதி சேமிப்பு வட்டியுடன் ரூபா 168,123.35 சதம்.

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பு 168,123.35 +10,680.27=178,803.62 தற்போதைய வங்கி மீதி.

இன்று ரூபா 10,680.27 சதம் வங்கிக்கணக்கிற்கு நன்கொடை வந்துள்ளது. அனுப்பி வைத்த நன்கொடையாளரிற்கு உளப்பூர்வமான நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

vaddu1.jpg

vaddu2.jpg

vaddu3.jpg

வட்டு தெற்கு நா.பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி கட்டும் பணி நிறைவு பெற்றது. வெள்ளை அடிக்க வேண்டும்.

vaddu4.jpg

வட்டு தெற்கு நா.பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி வெட்டிக் கட்டும் செலவு விபரம்.

@goshan_che அண்ணை, @வாத்தியார் அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா, பரராஜசிங்கம் ஐயாவிற்கு நாம் ஒத்துக்கொண்ட மிகுதி 50000 ரூபாவை வழங்கட்டுமா?

பொன்னாலை வேலைகள் சீலனுடைய தாமதத்தால் (வைத்தியசாலையில் நெருங்கிய உறவினர் இருந்ததால்) பிந்துகிறது. நாளை எஞ்சியுள்ள 3 பைக்கற், குறைப் பைக்கற் சீமந்தில் கல் அறுப்பதாக கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

ஆம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

பரராஜசிங்கம் ஐயாவிற்கு நாம் ஒத்துக்கொண்ட மிகுதி 50000 ரூபாவை வழங்கட்டுமா?

உடன்படுகின்றேன்

இப்போது நேரம் குறைவாக இருப்பதால் அதிகம் எழுத முடியவில்லை

மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு 3 தடவைகளாக 50000 ரூபா வீதம் 150000 ரூபா மொத்தமாக மலசலகூடத்தை பூரணப்படுத்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளோம்.

Pararajasingam.jpg

On 3/2/2026 at 17:29, ஏராளன் said:

இருப்பு 168,123.35 +10,680.27=178,803.62 தற்போதைய வங்கி மீதி.

இன்று ரூபா 10,680.27 சதம் வங்கிக்கணக்கிற்கு நன்கொடை வந்துள்ளது. அனுப்பி வைத்த நன்கொடையாளரிற்கு உளப்பூர்வமான நன்றிகள்.

இருப்பு 178,803.62 +50025=128,778.62 தற்போதைய வங்கி மீதி.

வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு மூன்றாவது தடவையாக 50000 ரூபா வைப்பிடப்பட்டது.

காரைநகர் புதிய மலசலகூடம் மற்றும் குழி வெட்டிக் கட்டும் பணிக்கு ஒப்பந்தகாறர் 4 லட்ச ரூபா கேட்கிறார் என திட்டமிடல் உத்தியோகத்தர் தெரிவித்தார், எழுத்தில் வாங்கித்தர கேட்டுள்ளேன். வேறு சிலரை கேட்கச் சொல்லி உள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2026 at 17:02, ஏராளன் said:

வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு 3 தடவைகளாக 50000 ரூபா வீதம் 150000 ரூபா மொத்தமாக மலசலகூடத்தை பூரணப்படுத்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளோம்.

Pararajasingam.jpg

இருப்பு 178,803.62 +50025=128,778.62 தற்போதைய வங்கி மீதி.

வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு மூன்றாவது தடவையாக 50000 ரூபா வைப்பிடப்பட்டது.

காரைநகர் புதிய மலசலகூடம் மற்றும் குழி வெட்டிக் கட்டும் பணிக்கு ஒப்பந்தகாறர் 4 லட்ச ரூபா கேட்கிறார் என திட்டமிடல் உத்தியோகத்தர் தெரிவித்தார், எழுத்தில் வாங்கித்தர கேட்டுள்ளேன். வேறு சிலரை கேட்கச் சொல்லி உள்ளேன்.

நன்றி

நான் கேட்டவரிடம் 280-300,000 இடையே வரும் எண்டுதான் கேட்டேன்.

இனிப்போய் 4 என சொல்லுவது அழகாக இராது. பார்ப்போம் அதையும் ஏனையதையும் போட்டு செய்யலாம்.

On 11/2/2026 at 17:02, ஏராளன் said:

காரைநகர் புதிய மலசலகூடம் மற்றும் குழி வெட்டிக் கட்டும் பணிக்கு ஒப்பந்தகாறர் 4 லட்ச ரூபா கேட்கிறார் என திட்டமிடல் உத்தியோகத்தர் தெரிவித்தார், எழுத்தில் வாங்கித்தர கேட்டுள்ளேன். வேறு சிலரை கேட்கச் சொல்லி உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நான் கேட்டவரிடம் 280-300,000 இடையே வரும் எண்டுதான் கேட்டேன்.

இனிப்போய் 4 என சொல்லுவது அழகாக இராது. பார்ப்போம் அதையும் ஏனையதையும் போட்டு செய்யலாம்.

அண்ணை, நான் வேறு சிலரிடமும் 1 மலசலகூடம் கட்டுவதற்கான செலவுத் திட்டம் கேட்டுப் பார்க்கிறேன்.

காரைநகர் கொட்டப்புலம் பகுதி சற்று கல் உள்ள பகுதியாம், வேறு இடங்கள் மணல் தரை என கூறுகிறார்கள்.

4 லட்சம் லாபம் உழைப்பதற்காக கேட்கிறார்கள், 2 லட்சம் தொடக்கம் 2.5 லட்சம் போதும் என பல தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தெரிவித்தவர்கள்.

பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் வீட்டு உரிமையாளர்களிடம் 2 லட்சம் ரூபா(படிப்படியாக) தந்தால் அவர்களே ஆள் பிடித்து பொருட்கள் வாங்கி கட்ட முடியுமா எனக்கேட்டபோது சம்மதித்தவர்களாம். ஏனைய ஒப்பந்தகாரர்களின் விபரங்களைப் பார்த்தபின் வரும் வாரத்தில் ஒரு தெளிவான முடிவை எடுத்து பணிகளைத் தொடங்கலாம்.

@வாத்தியார் அண்ணை, @goshan_che அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

படிப்படியாக பணத்தை கொடுத்து அவர்களயே செய்ய சொல்வது விலை குறைவாக தெரிந்தாலும், வேலை சொன்னபடி, சொன்ன நேரத்தில் முடியுமா என்பது பற்றியும் யோசிக்க வேண்டும்.

4 hours ago, ஏராளன் said:

ஏனைய ஒப்பந்தகாரர்களின் விபரங்களைப் பார்த்தபின் வரும் வாரத்தில் ஒரு தெளிவான முடிவை எடுத்து பணிகளைத் தொடங்கலாம்.

ஓம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.