Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்

Jan 14, 2026 - 04:06 PM

திருகோணமலை சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது. 

எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது. 

இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இதன்போது, குறித்த குழுவினரை ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmkdvy4ch03xdo29nqe9mtqro

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இனியென்ன புத்தபிக்கு பயங்கரவாதிகள் இவர்கள் விடுதலை வேண்டி அஜாரகங்கள் உட்பட வீதி மறியல் செய்து போராட்டங்கள் செய்வார்கள்.

அரபு நாடுகளைப்போல் ஸ்ரீலங்காவும் இன/மதவாத தீவிர அரசியல் கொண்ட நாடு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

புத்தபிக்கு பயங்கரவாதிகள் இவர்கள் விடுதலை வேண்டி அஜாரகங்கள் உட்பட வீதி மறியல் செய்து போராட்டங்கள் செய்வார்கள்.

இப்போது பயங்கரவாத சட்டத்தை பாவித்து வெளியே வராதவாறு சிறையில் அடைக்கவேண்டும். புத்தபிக்குகளுக்குத்தான் இப்போ நாட்டில் வன்முறை ஒன்று வேண்டும். இவர்களின் காவியை பறித்து வீட்டுக்கு அனுப்பவேண்டும். பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஒரு விஷக்கிருமி!

  • கருத்துக்கள உறவுகள்

போலீசாரை அறைந்த பிக்கரும் அந்த பதினொன்றிற்குள் அடக்கமோ தெரியவில்லை கச்சாமியே ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலையை வைத்த தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்!

14 Jan, 2026 | 04:02 PM

image

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு தேரர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (14) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கானது இன்றையதினம் (14) புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். 

குறித்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்ணங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவ்வாறாயின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டபோது எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கின்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில் 9 பேர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப  தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 தேரர்கள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில்  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/236031

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சந்தித்தார் விமல் வீரவன்ச!

16 Jan, 2026 | 03:30 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மற்றும் அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவங்ஸ நாயக்க தேரர் உள்ளிட்ட பலர் இன்று வெள்ளிக்கிழமை (16) திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை தந்து கஸ்ஸப தேரரை சந்தித்து சுகம் விசாரித்து சென்றனர்.

இன்று காலை 10.00 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச 1 மணி நேரத்திற்கு மேலாக கஸ்ஸப தேரருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சந்தித்தார் விமல் வீரவன்ச! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Jan 19, 2026 - 04:31 PM

கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று (19) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmkl21ty3044to29nb21v87yo

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்!

11 Feb, 2026 | 11:40 AM

image

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (11) காலை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

https://www.virakesari.lk/article/238368

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு பிணை!

11 Feb, 2026 | 03:51 PM

image

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்ட விவகாரம் தொடர்பில், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

இவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் ரூபா 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளை மேற்படி 10 எதிராளிகளும் சமர்பிக்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அனைத்து எதிராளிகளும் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் தவறாது சமூகமளிக்க வேண்டும், சாட்சிகளை பயமுறுத்த கூடாது, பிரதேசத்தின் பொது அமைதி மற்றும் சமய சகவாழ்விற்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனைகளும் மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவ் நிபந்தையில் ஒன்றோ அனைத்துமோ எதிராளிகளால் மீறப்பட்டால் பிணை உடனடியாக இடைநிறுத்தப்பட்டு விளக்கமறியல் நடைமுறைக்கு வரும் எனவும் மேல் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.

இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/238397

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரவுக்கு கஸ்ஸப தேரர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

பயங்கர யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவ வீரர்களின் பிராண வாயுவை சுவாசிக்கும் எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் இன்று (12.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, தொடர்ந்துரையாற்றிய அவர், “ஜனாதிபதி என்பவர் இந்த நாட்டின் தற்காலிக பாதுகாவலர்.அவருக்கு தெரிய வேண்டும், இந்த சிங்கள பௌத்த இராச்சியத்தை எதிர்கால தலைமுறைக்கு பாதுகாத்து வழங்க வேண்டும் என. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை மீறி பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டுள்ளனர்.

அநுர இந்திய ஒப்பந்தங்கள்

சிங்கள பௌத்த விரோத துரோகிகளான இந்த ஆட்சியாளர்களால் நாம் 29 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம்.

ரில்வின் சில்வாவுக்கு இந்த கதை தெரியும்.தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து இதை இப்படி தீர்த்து கொள்வோம் என்றார்.ஆனால் நாங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுக்கவில்லை.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். இந்தியாவின் துறைமுக நகரமொன்றை அமைக்கவே ஜனாதிபதி அநுர முயற்சிக்கிறார்.

அமைச்சர் சுனில் வட்டகல, கடிதத் தலைப்பொன்றை எடுத்து கொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு குறிப்பிட்டார்.ஏனென்றால் இந்த காணியை இந்தியாவுக்கு வழங்கி அதில் ஹோட்டல் ஒன்றை அமைக்கவே திட்டமிட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

https://ibctamil.com/article/no-one-can-threaten-kassapa-thero-threatens-1770902994

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள்! கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

எங்கள் உடம்பில் இரத்தம் வழிந்தது, எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

அதற்குப் பிறகு சிறையில் உயர் அதிகாரி ஒருவர் 'உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்' என்று தங்களை மிரட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு மகா சங்கத்தினர் உட்பட சிங்கள பௌத்த சமூகம் பல துன்பங்களுடன் வாழ்கிறது.

வரலாற்று ரீதியாக வடக்கு மக்களிடம் மிகவும் சுய கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம்.

எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள்! கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு | Balangoda Kassapa Thero Says At A Media Conference

பொலிஸ் அதிகாரிகள் சுற்றிவளைப்பு

அன்றைய தினம் புத்த சிலையை வைத்து பிரித் சொல்லி மக்கள் சென்ற பிறகு பொலிஸ் அதிகாரிகள் 200 பேர் வரையில் அவ்விடத்தை சுற்றிவளைத்தனர்.

இதன்போது ஏன் சுற்றிவளைக்கிறீர்கள் என கேட்டபோதும் பதில் கிடைக்கவில்லை. உள்ளே வருவதற்கான கதவுகள் இருக்கும் போதும் கம்பி வேலிகளை வெட்டி உள்ளே வந்து எங்களை அடித்தார்கள்.

புத்தர் சிலையை பறித்து கொண்டு சென்றார்கள். நாம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அடித்தார்கள். எமது உடம்பிலிருந்து இரத்தம் வழிந்தது. எது நடந்தாலும் நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள்! கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலங்கொட கஸ்ஸப தேரரின் கூற்று அப்பட்டமான பொய்!

Feb 13, 2026 - 11:56 PM

பலங்கொட கஸ்ஸப தேரரின் கூற்று அப்பட்டமான பொய்!

தன்னைப் பற்றி ஊடகங்களுக்குப் பொய்யான கூற்றுக்களைத் தெரிவிப்பதன் மூலம் பலங்கொட கஸ்ஸப தேரர் எதிர்பார்க்கும் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

தாமோ அல்லது தனது பிரதிநிதி ஒருவரோ பலங்கொட கஸ்ஸப தேரருக்குப் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை என்று பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர், 28 நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றத்தினால் கடந்த 11ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நேற்று (12) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர் பல விடயங்களை வெளிப்படுத்தியதுடன், அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் தமக்கும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தேரர்களுக்கும் அழைப்பு விடுத்து அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

கஸ்ஸப தேரரின் இந்தக் கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, "முசாவாதா வேரமணி சிக்காபதம் சமாதியாமி (பொய் பேசுவதைத் தவிர்த்தல்) என்ற வாசகத்தை எமக்குக் கற்றுக்கொடுப்பவர்களே கௌரவ தேரர்கள்தான். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது கஸ்ஸப தேரருக்கு நன்றாகத் தெரியும்" எனக் குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmll7yaf3000g356n8nihy1bn

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எங்கள் உடம்பில் இரத்தம் வழிந்தது, எங்கள் அங்கிகள் கழறும் வரை பொலிஸார் எம்மை தாக்கினார்கள் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

சரி, ஏன் இவர் வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்து குறித்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை? தமக்கு ஏற்பட்ட காயங்களையும் ஊடகவியலாளர் சந்திப்பில் காட்டியிருக்கலாமே உண்மையாயின்? நாட்டில் ஒரு கலவரத்தை தூண்டி ஆட்சி பிடிக்க இந்த குப்பை பிக்குகள் துணை போகுதுகள், இதுகள் அஹிம்சயை போதிக்கவில்லை வன்முறையை பரப்புதுகள்.

1 hour ago, ஏராளன் said:

"முசாவாதா வேரமணி சிக்காபதம் சமாதியாமி (பொய் பேசுவதைத் தவிர்த்தல்) என்ற வாசகத்தை எமக்குக் கற்றுக்கொடுப்பவர்களே கௌரவ தேரர்கள்தான்.

இலங்கையில் இதுகள் சொல்வதுதான் வேதம். இதற்கு முன்னுரிமை கொடுத்தால் என்னவாகும் என்பதை நாங்கள் சொல்லும்போது கேட்கவில்லை இப்போ அது இவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஒரு அநிஞாயத்தை தட்டிக்கேட்காமல், தண்டிக்காமல் நிஞாயப்படுத்தியதன் விளைவு இதுதான். இதன் பின்னும் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அனுரவின் ஆட்சிக்கு இந்த மதமே சவால். எல்லா எதிர்க்கட்சிகளும் இந்த அனுமான்களின் காவியில் கொழுத்திவிட்டு காத்திருக்கிறார்கள் கொழுந்து விட்டு எரிவதற்காக. பிக்குகளின் அடாவடிகளை இப்போதே அடக்கவேண்டும், மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். இதுகளின் கால்களை வேறு தொட்டு கும்பிடுகிறார்கள். கோத்தபாய வேறு பிக்குவாகப்போகிறாராம். செய்கிற அநிஞாயம் எல்லாம் செய்துபோட்டு தண்டனை பெறும் காலத்தில் விகாரைகளில் தஞ்சம் புகுவது. இதுகள் வெளியே இருந்தாலென்ன விகாரையில் இருந்தாலென்ன அழிவைத்தான் போதிப்பார்கள், தூண்டுவார்கள், செய்வார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.