Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது சுழிபுரம் கிழக்கு கிராமத்தில் 55 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மாடிக்கட்டிடம் அ.மி.த.க பாடசாலையில் திறக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னயாவிலும் புண்ணியம் கோடி…

நன்றி டாக்டர் 🙏 ராஜையா குடும்பத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

மகத்தான சேவை . ....... மக்களுக்கு அவசியமானதும் கூட ........! 🙏

நன்றி ஏராளன் .........!

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினருக்கும் நன்றி சொல்ல வேணுமல்லோ ...

அச்சா இராணுவம் ,சொக்கான இராணுவம் ,அகிம்சை

போதனை செய் இராணுவம்..அமைதியான இராணூவம்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, putthan said:

இராணுவத்தினருக்கும் நன்றி சொல்ல வேணுமல்லோ ...

அச்சா இராணுவம் ,சொக்கான இராணுவம் ,அகிம்சை

போதனை செய் இராணுவம்..அமைதியான இராணூவம்

எதிலும் இராணுவத்தை பொதுச்சேவைகளில் வலிந்து புகுத்தி அவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என மக்களாலும் சர்வதேசத்தாலும் புகழப்படவேண்டும், அவர்கள் செய்த கொலைகள், குற்றங்கள் மறக்கப்பட, மறைக்கப்பட வைக்கவேண்டும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை, விசாரணை நடத்தப்படக்கூடாது. பாருங்கள்! சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, நாமல், பிக்குகள் இனி மேல் பிரச்சாரம் எப்படியிருக்குமென்று. நமது மக்களுக்கெல்லாம் இப்படியான கட்டிடங்கள் கட்டத்தெரியாது. இதற்கு முன் தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ பாடசாலைகள், கோயில்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டனவே, அப்போதெல்லாம் இல்லாத ஆரவாரங்களும் பாராட்டுகளும் இப்போது ஏன்? ஒன்றை மறைக்க இன்னொன்று. பாடசாலைகளையும் கோவில்களையும் வீடுகளையும் வைத்தியசாலைகளையும் இடித்து தரை மட்டமாக்கியவர்கள், மக்களை அழித்து ஏதிலியாக்கியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் இப்போ முன்னிலையில். நாளைக்கு இதற்கு பக்கத்தில் ஒரு விகாரையும் கட்டுவார்கள். முன்பே இங்கு விகாரை கட்ட திட்டமிட்டு சலசலப்பு ஏற்பட்டது, இப்போ தானாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் தட்டு வைத்தழைத்து.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டாக்டர் 🙏 ராஜையா குடும்பத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இராணுவத்தினருக்கும் நன்றி சொல்ல வேணுமல்லோ ...

அச்சா இராணுவம் ,சொக்கான இராணுவம் ,அகிம்சை

போதனை செய் இராணுவம்..அமைதியான இராணூவம்

இராணுவத்தை ஈடுபடுத்தாமல் நீங்கள் மானிப்பாயில் இப்படி ஒரு காரியத்தை செய்யும் போது அதை இதை விட இரு மடங்கு பாராட்டுவோம் அண்ணா😂.

#நொட்டைக்கு குறையில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் இந்த மக்களை அழித்து, பொருளாதாரத்தில் நசுக்கி, உறவுகளை கொன்று, அவர்களின் தொழில் வளங்களை அபகரித்து வாழ விடாமல் செய்து ஏதிலிகளாக்கியது, அதையே சுட்டிக்காட்டுகிறோம். செலவு செய்தது தமிழன், அதை யாரும் நொட்டை சொல்லவில்லை. இராணுவத்தின் அடாவடிகளை, அவர்களால் காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி அவர்களின் குடும்பத்தினர் தெருவில் அலைகின்றனர் நிஞாயம் தேடி. இன்னொருபுறம் அவர்களுக்கு மாலை, மரியாதை, ஆரத்தி, தமிழரின் நிலங்களில் இராணுவம். நேற்று ஒரு செய்தி படித்தேன், இராணுவம் வெளியேறுவதை வடக்கு கிழக்கு மக்கள் விரும்பவில்லையாம். அதற்கு ஆதாரமாக இந்தச்செய்தி இன்று. ஏழை மக்களின் நிலங்கள் விடுவிக்க சந்தர்ப்பமே இல்லைப்போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பச்சை இனவாதியாக உள்ள ஒரு நாட்டில்தான் இப்படி எல்லாம் நடக்கும் 😂.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது அன்பிற்கும் மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் அமைதியும் அபி விருத்தியும் கொண்ட தமிழர்கள் பிரதேசங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அப்படி ஒரு காலகட்டத்திலேயே தேசியத்தலைவரும் ஆயுதம் தூக்கி போராடினார். நாம் போராட முடியாத நிலை ஆனால் அவர்களை தவிர்த்திருக்கலாம். தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து அழைக்கத்தேவையில்லை என்பதே எங்களின் தவிப்பு. எங்களுக்காக போராடியவர்களை அவமதிக்கும் செயல் இது. இராணுவத்தை மரியாதைப்படுத்தும் போதெல்லாம் நம் வீரர்களை குற்றவாளிகளாக்குகிறோம்.

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி சுதந்திர தினத்தில் இராணுவத்தினரை மரியாதை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படும்போது, நமது மக்கள் அவர்களுக்கு தட்டு வைத்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து மரியாதை அளித்துள்ளனர். இப்போ அனுராவுக்கு எதிராக தெற்கில் என்ன விமர்சனம் எழும்? அதுதான் எனது கவலையெல்லாம். யுத்த குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்று வேறு அறிவித்திருக்கிறார், அவருக்கு நாம் சொல்லும் செய்தியென்ன?

அனுரா காவடி என்று ஏளனம் வேறு. தவறை தவறு என சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டும்போது எனக்கு எதிராக காவடி தூக்குகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? சாத்தான் எது கூறினாலும் குற்றம் கண்டுபிடித்து விரட்டுவோம் என்பதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

1 hour ago, goshan_che said:

இராணுவத்தை ஈடுபடுத்தாமல் நீங்கள் மானிப்பாயில் இப்படி ஒரு காரியத்தை செய்யும் போது அதை இதை விட இரு மடங்கு பாராட்டுவோம் அண்ணா😂.

#நொட்டைக்கு குறையில்லை 😂

😂செய்தால் அதை சொல்லி காட்டி படம் காட்ட வேண்டிய தேவை இல்லை...இந்த இராணுவத்தினர் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த சம்பளத்தில் கட்டி கொடுக்கின்றனர் ....ஏதோ உருகி செய்த மாதிரி கதை விட்டு நல்ல பிள்ளை சேர்டிவிக்கேட் எடுக்க நிற்கினம் ....அதை வைத்து சமாதான் புறாக்கள் பறக்க போகுதாம் போராட்டம் தொடங்கிய காலத்தில இருந்து நாங்கள் நொட்டை தானே கதைக்கிறோம் ...

பறளை முருகன் கோவில் அரச மரம் புத்தருக்கு சொந்தமாம்...

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

பறளை முருகன் கோவில் அரச மரம் புத்தருக்கு சொந்தமாம்..

இராணுவத்தினருக்கு வரவேற்பு அளித்த இந்தப்பாடசாலைக்கு அண்மையிற்தான் பறாளை முருகன் ஆலயம் உள்ளது, வசதியாக போய்விட்டது. பாடசாலைக்கு அருகில் விகாரை!

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, putthan said:

😂செய்தால் அதை சொல்லி காட்டி படம் காட்ட வேண்டிய தேவை இல்லை...இந்த இராணுவத்தினர் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த சம்பளத்தில் கட்டி கொடுக்கின்றனர் ....ஏதோ உருகி செய்த மாதிரி கதை விட்டு நல்ல பிள்ளை சேர்டிவிக்கேட் எடுக்க நிற்கினம் ....அதை வைத்து சமாதான் புறாக்கள் பறக்க போகுதாம் போராட்டம் தொடங்கிய காலத்தில இருந்து நாங்கள் நொட்டை தானே கதைக்கிறோம் ...

பறளை முருகன் கோவில் அரச மரம் புத்தருக்கு சொந்தமாம்...

ம்ம்ம்….உது செய்தவர்…செய்யாதவர் எல்லாரும் வழமையா அடிக்கிற கேட்டு புளிச்சு போன டயலாக்தான் அண்ணை 😂.

தலைவர் வெளிநாட்டுக்கு பல்மருத்துவம் படிக்க அனுப்பினவர் என்பது தொட்டு யாழில் எத்தனை கஞ்சா கப்ஸா கதையளை நாங்களும் கேட்டு வாறம்😂.

நீங்கள் செய்யலாம்…ஆனால் அதை சொன்னால்தானே நாங்கள் பாராட்ட முடியும்.

சொல்லவும் மாட்டியள், எனவே பாராட்டவும் முடியாது, சொல்லி செய்பவரை பாராட்டினால் அதையும் நொட்டை சொன்னால்?

இங்கே ஆமி விளையாடும் கேம் புரியாத பபாக்கள் அல்ல யாரும்.

உன்னிப்பாக கவனித்தால்…ராசையா குடும்பத்தை பாராட்டிய எவரும் ஆமியை பற்றி ஒரு வரி குஇட எழுதவில்லை என்பது புரியும்.

37 minutes ago, satan said:

ஆமாம் அப்படி ஒரு காலகட்டத்திலேயே தேசியத்தலைவரும் ஆயுதம் தூக்கி போராடினார். நாம் போராட முடியாத நிலை ஆனால் அவர்களை தவிர்த்திருக்கலாம். தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து அழைக்கத்தேவையில்லை என்பதே எங்களின் தவிப்பு. எங்களுக்காக போராடியவர்களை அவமதிக்கும் செயல் இது. இராணுவத்தை மரியாதைப்படுத்தும் போதெல்லாம் நம் வீரர்களை குற்றவாளிகளாக்குகிறோம்.

அனுரவுக்கு இத்தனை காவடி எடுத்த நீங்கள் இப்படி எழுத வெட்கமாயில்லை?

இராணுவத்தை, மகிந்தவை முள்ளிவாய்க்கால் அவலத்தை வெளிநாட்டு அளுத்தத்துக்கு இணங்கி நிறுத்தி விடாதீர்கள், எம் ஆதரவு உண்டு என நெட்டி தள்ளிய பச்சை இனவாதி அனுர, ஜேவிபி.

அனுரவுக்கு காவடி தூக்கும் உங்களுக்கு ஆமியை கண்டதும் மாவீரர் நினைவு வந்திட்டாம். நல்ல மாய்மாலம்😂.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அவர்களுக்கு மாலை, மரியாதை, ஆரத்தி, தமிழரின் நிலங்களில் இராணுவம். நேற்று ஒரு செய்தி படித்தேன், இராணுவம் வெளியேறுவதை வடக்கு கிழக்கு மக்கள் விரும்பவில்லையாம். அதற்கு ஆதாரமாக இந்தச்செய்தி இன்று. ஏழை மக்களின் நிலங்கள் விடுவிக்க சந்தர்ப்பமே இல்லைப்போலுள்ளது.

அதாவது வடக்கு கிழக்கு மக்களுக்கு தீங்கு விளைவித்தது "தமிழ் பாராமிலிட்டரி" மட்டுமே ....அதற்கான விசாரனையை அனுரா மாத்தையா கோஸ்டி முடுக்கி விட்டுள்ளது ...அதிரடியாக கைது செய்யப்பட்டு மெல்ல மெல்ல விசாரணை செய்து ராஜமரியாதை அவர்களுக்கும் கொடுக்க படும்...

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, satan said:

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி

கிஸ் அடிக்காத குறை 😂.

ஆமியாவது சம்பளத்துக்கு மாரடிப்பவன்.

அனுர இரத்தத்தில் இனவாதம் ஊறிய விஷ ஜந்து.

43 minutes ago, satan said:

இப்போ அனுராவுக்கு எதிராக தெற்கில் என்ன விமர்சனம் எழும்? அதுதான் எனது கவலையெல்லாம். யுத்த குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர்

அனுரவின் சின்னம்மா கூட இப்படி பதற மாட்டார் என நினைக்கிறேன்😂

44 minutes ago, satan said:

அனுரா காவடி என்று ஏளனம் வேறு.

சீச்சி நீங்கல் ஆனுர தூக்கு காவடி. அதை நிறுவ மேலே உள்ள பந்தி மட்டுமே போதும்.

46 minutes ago, satan said:

இவர்களின் பிரச்சனைதான் என்ன?

அனுர ஈரச்சாக்கை போட்டு ஒட்டு மொத்தமாக தமிழ் தேசிய உணர்வை அழிப்பதை தெரிந்தும்….

சில்லறை லைக்சுக்காக படம் காட்டும் யூடியூப்பர்கள் போல யாழில் வந்து அனுர காவடி ஆடுவது.

  • கருத்துக்கள உறவுகள்

அனுராவை பாராட்ட வேண்டிய இடத்தில பாராட்டுவதும் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளியிடுகிறேன். இதற்கு ஏன் நான் வெட்கப்படவேண்டும்? நீங்கள் ஒருபக்க சார்பாக என்னை அனுரா காவடி என்று விமர்ச்சிக்கும்போதே, நான் உங்களுக்கு வெறுப்பேற்ற எழுதுகிறேன். சிங்கள கட்சிகளுக்கு தமிழ் மக்களின் முழு வாக்கையும் வாங்கி கொடுத்து, தங்கள் சுயநலனை பார்த்து மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிகேட்காத, நிஞாயப்படுத்திய காவடிகளை விடவா நான் காவடி ஆடுகிறேன்? அப்போ யாரும் இப்படி எதிர்ப்போ, ஏளனமோ செய்யவில்லையே, ஏன்? அவர்களுக்கு வக்காலத்து வேறு வாங்கினார்களே அது மட்டும் ஏன் என அறிய ஆவல்! அவர்களை விட நான் ஏதும் செய்யவில்லையே, எதற்காக இவ்வளவு வக்கிரம் என்மேல்? ஒருவர் என்னை இங்கிருந்து துரத்த இவ்வாறான வசைவுகளை பாடினால், எல்லோரும் சேர்ந்தே நான் கருத்து வைத்தவுடன் என்னை துரத்துவதேன்? மற்றைய ஜனாதிபதிகள் செய்தபோது முனகியவர்கள், மௌனம் காத்தவர்கள் அனுராவின் மீதும் அவரை ஏசாதவரை கண்டு பதறுவது ஏன்? இனி வருங்காலத்தில் தமிழர் பிரதேசங்களில் அனுராவுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகும், அதற்கு காரணம் இந்த காழ்ப்புணர்ச்சி, தமிழ் அரசியற்தலைவர்களின் எசேச்சாதிகாரமுமே. வடக்கு மக்களே அனுராவை அழைத்து பொங்கல் கொண்டாடினார்களே அவர்களை ஏன் அனுரா காவடி என வர்ணிக்கவில்லை? ஆக, சாத்தான் கருத்து வைக்கக்கூடாது ஒழிய வேண்டும், தாங்கள் புகழாதவரை சாத்தான் ஏதும் சொல்லக்கூடாது.

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க என்று மேலே ஒருவர் குறிப்பிட்டபடி நான் கருத்து வைத்தது தப்பா? அவர் ஏளனமாக வைத்திருந்தால்; நானும் ஏளனமாகவே கருத்து வைத்தேன். இதுதான் சமயம் என்று வந்து விடுவார்கள் விரிந்து கட்டிக்கொண்டு.

நானும் அறிவேனோ பாவி…

என்னை பிடித்தாட்டுது சனி 😂

நான் அனுரவை எதிர்த்து எழுதினால் நீங்கள் ஆதரித்து எழுதுவீர்களா?

அப்போ எங்கே போனது உங்கள் மாவீரர் மீதான அபிமானம்?

கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்?

இந்த off ramp எல்லாம் காலம் கடந்து விட்டது.

நான் எழுதா திரிகளில் கூட நீங்கள் அனுர காவடி ஆடியதை களம் கண்டுள்ளது.

இனி வேறு பெயரில் வந்தால் தான் உண்டு.

முன்பு இன்னொரு பெயரில் வந்தவர் தானே?

பரமாத்மா அடுத்த அவதாரம் எடுக்க நே கூடி வந்துள்ளது 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மூலமாக ஒப்பந்தம் செய்து 2.5 லட்சம் முற்பணமும் வழங்கி வேலையை தொடங்கச் சொன்னால் அவர் தொடங்காது காலந்தாழ்த்திக்கொண்டிருந்தார்.

காலதாமதமாவதால் அதிருப்தி அடைந்த வைத்தியர் தனது கொழும்பு றோயல் கல்லூரி நண்பர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் ஊடாக பிரதமர் ஹரிணியின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் இப்பிரச்சனையை சொன்னபோது அவர் தான் இராணுவத்தினரைக் கொண்டு கட்டும்படி கூறியிருக்கிறார். அவ்வாறு தான் இந்த பாடசாலை கட்டப்பட்டது. இராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த 50 பேருக்கு மேல் இப்பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த பிரிவில் 30 மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மேலும் 5 லட்சத்தை ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வாங்கிவிட்டார்.

அப்பாவின் தாய் மாமாவின் மகன் தான் இந்த வைத்தியர். 2010 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்தியருடைய அம்மாவின் இறுதிச்சடங்கின் போது அப்பா அவரிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தவர். டொக்ரர் ஆறுமுகம் இராசையா நினைவாக அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது செய்யும்படி. அதனை ஞாபகம் வைத்திருந்தாரோ என்னவோ இந்த அரும்பணியை செய்து முடித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

தலைவர் வெளிநாட்டுக்கு பல்மருத்துவம் படிக்க அனுப்பினவர் என்பது தொட்டு யாழில் எத்தனை கஞ்சா கப்ஸா கதையளை நாங்களும் கேட்டு வாறம்😂.

சொல்லவும் மாட்டியள், எனவே பாராட்டவும் முடியாது, சொல்லி செய்பவரை பாராட்டினால் அதையும் நொட்டை சொன்னால்?

இங்கே ஆமி விளையாடும் கேம் புரியாத பபாக்கள் அல்ல யாரும்.

இங்கு கருத்துக்கள் எழுதுபவ்ர்கள் பாப்பாக்கள் அல்ல ஆனால் அந்த பாப்பாக்கல் எல்லோரும் ஏதோ ஒரு வித கருத்தாதிக்க த்தினால் கட்டுப்பட்டுள்ளனர்.அந்த கருத்துக்கு எதிராக மற்றவ்ர்கள் கருத்து வைக்கும் பொழுது எங்களை அறியாமல் துள்ளுகிறோம் ...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

முன்பு இன்னொரு பெயரில் வந்தவர் தானே?

பரமாத்மா அடுத்த அவதாரம் எடுக்க நே கூடி வந்துள்ளது

ஹ்ஹஹ்ஹா.... உங்களின் இந்தக்கண்டுபிடிப்புபோற்தான் எல்லாமும். திருடன் நினைப்பு தன்னைப்போலத்தான் எல்லாரும் என்று. நான் கருத்து வைக்கத்தொடங்கிய காலத்திலிருந்து இப்போதுவரை ஒரே பெயரில்த்தான் எழுதிவருகிறேன், வேறொரு பெயரில் அல்லது இரு பெயரில் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை, இனியும் வராது. எதுவாக இருந்தாலும் நேரடியாக எழுதுவேன் அந்த துணிச்சல் எனக்குண்டு. இப்போது மடை மாற்றுவது யார்?

6 hours ago, goshan_che said:

அப்போ எங்கே போனது உங்கள் மாவீரர் மீதான அபிமானம்?

மாவீரர் மீதான அபிமானம் எனக்கு எப்போதுமுண்டு. அனுரா ஆட்சிக்கு வந்த முதல், மாவீரர் நினைவு அமைதியாக நடந்தேறியது. நீதிமன்றம் அதற்கெதிராக தடையேதும் பிறப்பிக்கவில்லை, போலீசார் தடையுத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடவில்லை, எடுபிடியில்லை. நான் யாருக்கும் போட்டியாக எழுதவேண்டிய தேவையில்லை. என்னை வம்புக்கிழுப்பது நீங்கள் நான். தவறுகளை சுட்டிக்காட்டும்போது நீங்கள் நித்திரைக்கு போய்விடுவீர்கள், சாதகமாக எழுதினால் வரிஞ்சு கட்டிக்கொண்டு ஓடி வருவீர்கள். நான் ஒன்று எழுதினால் நீங்கள் அதற்கு புறம்பான வேறொன்றை எழுதி நான் மடைமாற்றுகிறேன் என்று கதறுவீர்கள். யார் மடை மாற்றுவது, யார் மற்றவர்களை சீண்டுவது என்பது வாசகருக்கு தெரியும். தன் குற்றத்தை மற்றவர் மேல் திணித்து அவர்களை குற்றவாளியாக்குவது சிலருக்கு கைவந்த கலை.

6 hours ago, goshan_che said:

கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்?

6 hours ago, goshan_che said:

நான் எழுதா திரிகளில் கூட நீங்கள் அனுர காவடி ஆடியதை களம் கண்டுள்ளது.

ஹிஹி.....நான் யாருக்கும் போட்டியில்லை. எழுத வேண்டியதை வேண்டிய நேரத்தில் எழுதுகிறேன். எனக்குப் பிடித்தவர் என்பதற்காக அவர்கள் செய்யும் தவறை அடக்கி வாசிப்பதுமில்லை, பிடிக்காதவர் என்பதற்காக அவர்கள் செய்யும் நல்லதை கடிந்து கொள்வதுமில்லை. 👇

9 hours ago, goshan_che said:

அனுரவுக்கு இத்தனை காவடி எடுத்த நீங்கள் இப்படி எழுத வெட்கமாயில்லை?

நான் உங்களுக்கு போட்டியாக எழுதவே வருகிறேனென நீங்கள் கற்பனை பண்ணினால் அது எனது தவறல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

ஹ்ஹஹ்ஹா.... உங்களின் இந்தக்கண்டுபிடிப்புபோற்தான் எல்லாமும். திருடன் நினைப்பு தன்னைப்போலத்தான் எல்லாரும் என்று. நான் கருத்து வைக்கத்தொடங்கிய காலத்திலிருந்து இப்போதுவரை ஒரே பெயரில்த்தான் எழுதிவருகிறேன், வேறொரு பெயரில் அல்லது இரு பெயரில் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை, இனியும் வராது. எதுவாக இருந்தாலும் நேரடியாக எழுதுவேன் அந்த துணிச்சல் எனக்குண்டு. இப்போது மடை மாற்றுவது யார்?

மாவீரர் மீதான அபிமானம் எனக்கு எப்போதுமுண்டு. அனுரா ஆட்சிக்கு வந்த முதல், மாவீரர் நினைவு அமைதியாக நடந்தேறியது. நீதிமன்றம் அதற்கெதிராக தடையேதும் பிறப்பிக்கவில்லை, போலீசார் தடையுத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடவில்லை, எடுபிடியில்லை. நான் யாருக்கும் போட்டியாக எழுதவேண்டிய தேவையில்லை. என்னை வம்புக்கிழுப்பது நீங்கள் நான். தவறுகளை சுட்டிக்காட்டும்போது நீங்கள் நித்திரைக்கு போய்விடுவீர்கள், சாதகமாக எழுதினால் வரிஞ்சு கட்டிக்கொண்டு ஓடி வருவீர்கள். நான் ஒன்று எழுதினால் நீங்கள் அதற்கு புறம்பான வேறொன்றை எழுதி நான் மடைமாற்றுகிறேன் என்று கதறுவீர்கள். யார் மடை மாற்றுவது, யார் மற்றவர்களை சீண்டுவது என்பது வாசகருக்கு தெரியும். தன் குற்றத்தை மற்றவர் மேல் திணித்து அவர்களை குற்றவாளியாக்குவது சிலருக்கு கைவந்த கலை.

ஹிஹி.....நான் யாருக்கும் போட்டியில்லை. எழுத வேண்டியதை வேண்டிய நேரத்தில் எழுதுகிறேன். எனக்குப் பிடித்தவர் என்பதற்காக அவர்கள் செய்யும் தவறை அடக்கி வாசிப்பதுமில்லை, பிடிக்காதவர் என்பதற்காக அவர்கள் செய்யும் நல்லதை கடிந்து கொள்வதுமில்லை. 👇

நான் உங்களுக்கு போட்டியாக எழுதவே வருகிறேனென நீங்கள் கற்பனை பண்ணினால் அது எனது தவறல்ல.

இன்னும்…இன்னும்…மேலே…மேலே….

அடுத்த முறை காவடி தோளுக்கு ஏறும் போது அந்த திரியில் சந்திப்போம்.

51 minutes ago, putthan said:

இங்கு கருத்துக்கள் எழுதுபவ்ர்கள் பாப்பாக்கள் அல்ல ஆனால் அந்த பாப்பாக்கல் எல்லோரும் ஏதோ ஒரு வித கருத்தாதிக்க த்தினால் கட்டுப்பட்டுள்ளனர்.அந்த கருத்துக்கு எதிராக மற்றவ்ர்கள் கருத்து வைக்கும் பொழுது எங்களை அறியாமல் துள்ளுகிறோம் ...

முகம் காட்டும் கண்ணாடி…

நிஜம் காட்டும் எப்போதும் 😂

நீங்களும், நானும். ஏற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மூலமாக ஒப்பந்தம் செய்து 2.5 லட்சம் முற்பணமும் வழங்கி வேலையை தொடங்கச் சொன்னால் அவர் தொடங்காது காலந்தாழ்த்திக்கொண்டிருந்தார்.

காலதாமதமாவதால் அதிருப்தி அடைந்த வைத்தியர் தனது கொழும்பு றோயல் கல்லூரி நண்பர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் ஊடாக பிரதமர் ஹரிணியின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் இப்பிரச்சனையை சொன்னபோது அவர் தான் இராணுவத்தினரைக் கொண்டு கட்டும்படி கூறியிருக்கிறார். அவ்வாறு தான் இந்த பாடசாலை கட்டப்பட்டது. இராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த 50 பேருக்கு மேல் இப்பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த பிரிவில் 30 மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மேலும் 5 லட்சத்தை ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வாங்கிவிட்டார்.

அப்பாவின் தாய் மாமாவின் மகன் தான் இந்த வைத்தியர். 2010 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்தியருடைய அம்மாவின் இறுதிச்சடங்கின் போது அப்பா அவரிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தவர். டொக்ரர் ஆறுமுகம் இராசையா நினைவாக அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது செய்யும்படி. அதனை ஞாபகம் வைத்திருந்தாரோ என்னவோ இந்த அரும்பணியை செய்து முடித்துள்ளார்.

மேலதிக விளக்கத்துக்கு நன்றி.

தமிழ் கொண்டிராக்டர் நல்ல விசயம் என தெரிந்தும் இழுத்தடித்து, மேலும் பணமும் வாங்கி தான் தமிழன் என்பதை நிறுவி உள்ளார்.

இடையில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி, ஈரச்சாக்கை போத்தி ஹரினி தான் சிங்களவர் என்பதை நிறுவி உள்ளார்😂.

இதை பார்க்கும் ஒரு 18 வயதுக்கு கீழான சுழிபுரத்து பிள்ளை மனதில் ஆமி பற்றிய விம்பம் எப்படி இருக்கும்? நாளை அது தையிட்டிக்கு போராட போகுமா?

இப்படிதான் தமிழர் தோற்பதும் சிங்களவர் தொடர்ந்து வெல்வதும் நடக்கிறது.

ஆனால் இராசையா குடும்பம் வேறு வழி இல்லாமல் ஆமி மூலம் கட்டி கொடுத்துள்ளது, அதை குறை சொல்ல முடியாது.

தானம் கிடைக்கும் மாட்டை பல்லை தூக்கி பார்க்கும் இடத்தில் நாமும் இல்லை.

இந்த மகன் எத்தனையாம் ஆண்டு ஏ எல் எடுத்தவர் என தெரியுமா?

இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்:

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இதை பார்க்கும் ஒரு 18 வயதுக்கு கீழான சுழிபுரத்து பிள்ளை மனதில் ஆமி பற்றிய விம்பம் எப்படி இருக்கும்? நாளை அது தையிட்டிக்கு போராட போகுமா?

ம்... இதை நான் சொன்னால் ஏளனம். வெட்கமில்லையா என்று கேள்வி. புத்தன் சொன்னால் நொட்டை. குரு செய்தால் குற்றமில்லை, சிஷ்யன் செய்தால் குற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, satan said:

ம்... இதை நான் சொன்னால் ஏளனம். வெட்கமில்லையா என்று கேள்வி. புத்தன் சொன்னால் நொட்டை. குரு செய்தால் குற்றமில்லை, சிஷ்யன் செய்தால் குற்றம்.

அனுரா பாவம், பபா அவருக்கு இனவாதம் இல்லை, பொறுத்திருக்கிறார், காலம் கனிய செய்வார், இன்னும் பலவாறு கடைந்தெடுத்த இனவாதியான இலங்கையின் முப்படை பிரதானியை புகழ்ந்தேத்தும் உங்களுக்கு இதை சொல்லும் தார்மீக உரிமை இல்லை.

1 hour ago, goshan_che said:

இதை பார்க்கும் ஒரு 18 வயதுக்கு கீழான சுழிபுரத்து பிள்ளை மனதில் ஆமி பற்றிய விம்பம் எப்படி இருக்கும்? நாளை அது தையிட்டிக்கு போராட போகுமா?

இப்படி ஒரு 10% விம்பத்தை சிங்களவர் எழுப்பினால் அதை 100% ஆக்க பெருபித்து காட்டுபவர்கள் உங்களை, யுடியூப்பர்ஸ் போன்ற காவடிக்கூட்டம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.