Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போலீசார் சிறிய குறுக்கு வீதிகளிலேயே மறைந்திருந்து கெல்மெட் போடாத உந்துருளி ஓட்டுநர்களிடம் கைலஞ்சம் வாங்குவது வழமை, கொடுத்து செல்வது நம்மவர் வழமை. ஒன்று, நேரமினக்கேடு மற்றது, கொடுக்காவிட்டால் கள்ள கேஸ் போடுவது, போதைப்பொருள் வைத்து கைது செய்வது. இது கள்ளன் போலீஸ் விளையாட்டு. ஒருவராவது நான் தவறு செய்தால் நீதிமன்றுக்கு அனுப்பு நான் அங்கே சரி செய்கிறேன் என்று சொல்வதில்லை, சொன்னாலும் அது நடக்கபோவதுமில்லை. தவறுகளில் இருந்து லஞ்சம் கொடுத்து மீளுவது. நடுராத்திரி லஞ்சம் வாங்குவது சுலபம், இவர்கள் கொடுத்து வேறு பழக்கியிருக்கிறார்கள், நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். தீயவர் நட்பு இப்படித்தான் முடியும். அவர்கள் தவறு செய்திருந்தால் வாகனத்தை நிறுத்த பல வழிகள் உண்டு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதில் என்ன பிரச்சனை பொலிஸாருக்கு? எதையோ மறைப்பதற்காக அவரை சுட்டு, மற்றவர்களை அச்சுறுத்தி, ஆதாரங்களை சோடித்து, என்ன வேலை அது? இருபக்கமும் லஞ்சம் பெற்ற கை ஒருநாள் இப்படித்தான் முடியும். எல்லா ஆவணங்களும் கைவசம் வைத்திருப்பவர்களையே மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இந்த வழிப்பறித்திருடர். சில மாதங்களுக்கு முன் தெற்கில் சில இளைஞர் வாகனத்தில் எங்கோ சென்று விட்டு நடுராத்திரி திரும்பிக்கொண்டிருந்த போது போலீசார் அவர்களை இடைமறித்து லஞ்சம் கேட்டிருக்கிறார்கள், அவர்கள் மறுக்கவே போலீசார் வாகனத்தை சோதனையிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள், அவர்களும் சம்மதித்து வாகனத்தில் இருந்து இறங்கி வழி விட்டிருக்கிறார்கள். ஒரு போலீசார் தனது காற்சட்டை பையிலிருந்த போதைப்பொருளை வாகனத்தில் வைத்துவிட்டு கண்டெடுப்பதுபோல் அவர்களை மிரட்டியுள்ளார், அவர்கள் இளைஞர், விடவில்லை, கடைசியில் போலீசார் கைது செய்யப்பட்டு வேலையிழந்தார். நம் ஊரில் மக்களை பயமுறுத்தி இப்படி பல சேட்டைகள் நடந்துள்ளன. போலீசாரை சோதனைக்கு அமர்த்தும்போது போதைப்பொருள், மது பரிசோதனை, உடமையேதும் அவர்கள் வசம் உண்டா என்பதை பரிசோதித்து கடமைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், அவர்கள் உடலில் கமெரா பொருத்தப்படவேண்டும் இல்லையேல் கடமைக்கு அனுமதிக்க கூடாது.

  • Replies 80
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்

  • இவை எல்லாமும் மட்டும் அல்ல அதிபர் ஆனந்தராஜா போன்றோர் கொலைகளும் அரங்கேறின. இவை அரசியல் கொலைகள். ஆனால் களவுக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியதாக நான் அறியவில்லை. கப்பம் கேட்டு கொடுக்காத போது புளொட் சுட்டு

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    கள்ள மாடு உட்பட திருட்டுக்கு சிங்கள தேசத்தில் தினமும் சிங்கன பொலிஸ் சிங்களவரை சுடுகுதா??? வாகனம் நிற்காமல் போனால் துரத்தி பிடிக்கலாம். தீவகத்துக்க வர போக ஒற்றை வீதி தானே இருக்கு. அதில தடை போட்டு வாகனத

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

ஒருவராவது நான் தவறு செய்தால் நீதிமன்றுக்கு அனுப்பு நான் அங்கே சரி செய்கிறேன் என்று சொல்வதில்லை,

எங்கு தவறு செய்தோமோ அங்கேயுள்ள நீதிமன்றுக்குத் தான் போக வேண்டும்.

அதனாலேயே பலர் அப்பவே ஏதோ கொடுத்துவிட்டு போவோம் என்கிறார்கள்.

இது வான் சாரதிகள் மூலமாக தெரிந்து கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

எங்கு தவறு செய்தோமோ அங்கேயுள்ள நீதிமன்றுக்குத் தான் போக வேண்டும்.

அதனாலேயே பலர் அப்பவே ஏதோ கொடுத்துவிட்டு போவோம் என்கிறார்கள்.

இது வான் சாரதிகள் மூலமாக தெரிந்து கொண்டது.

உண்மை. அலைச்சல், நேரமினக்கேடு, நட்டம் இதனால் கேட்டதை கொடுத்துவிட்டு போய்விடுகிறார்கள். அதையே சாதகமாக வைத்து துரத்துகிறார்கள். ஒருநாளைக்கு கொடுக்க முடியவில்லையென்றால் கதையையே முடித்து விடுகிறார்கள். இவர்களோடு பழக்கம் வைப்பது, கொடுப்பது, நன்மை பெறுவது, உதவி செய்வது எல்லாமே ஒருநாள் ஆபத்திற்தான் முடியும். பொதுவாக இளைஞர்களையே இவர்கள் சிநேகிதம் பிடிப்பார்கள். முன்பெல்லாம் கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகளின் நிலை கவலையாக இருக்கும். ஒவ்வொரு செக் பொயிண்ட்டிலும் கொடுக்க வேண்டும். வாகனத்திற்கு பெற்றோல், அதற்குரிய ஒயில், சேவிஸ், செலவு, சாரதி சம்பளம் இப்படி எவ்வளவோ செலவு. சில நேரம் அவர்களிடம் கொடுக்க முடியாவிட்டால் நீதிமன்றம் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் கதையை கேட்கும்போது கவலையாக இருக்கும். இப்போ எப்படியென்று தெரியவில்லை. தமிழ்ப்பிரதேசத்தில் வேலை செய்வதென்றால் அவர்களுக்கு அவ்வளவு குஷி. மாற்றம் வந்துவிட்டால் தங்களுக்கு தெரிந்த கூலிகளை கொண்டு மாற்றவேண்டாம் என்று கோரிக்கை கடிதம் அனுப்பச்சொல்வார்கள். இங்கே வேலை செய்தால் சம்பளம் கூட, அதைவிட மேலதிக வருமானம். தமிழரில் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கே வினை செய்வது.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2026 at 19:51, goshan_che said:

அருமையான கருத்து.

ஏன் அண்ணை முன்பு போல் இப்போ யாழுக்கு வருவதில்லை?

நன்றி. கோஷான். ஜேர்மனியில். பென்சன். குறைவு. எனவே. பகுதி. நேர. வேலை. தேடினேன். முதலாளி. சொன்னான். முழு நேரமாக. செய். என்று. எனக்கு. விருப்பமில்லை. முழுநேரம். செய்வது. ஆனால். வயது. போனாவர்கள். வேலை. எடுப்பது. இங்கே. கஸரம். எனவே. செய்கிறேன். பேஸ்புக்கில். இந்த. கொலையை. ஆதரித்து. பல. தமிழர்கள். கருத்துப் போட்டார்கள். அது. தான். யாழ் எப்படி. என்று. எட்டிப் பார்த்தேன். இங்கேயும். அதே. கதை. தான் அதே நேரம். 1987 இல். ஜேரமனியில். நடந்த. ஒரு. சம்பவம். நினைவுக்கு. வந்தது. அந்த. நேரம். வேலை செய்ய. இங்கு. அனுமதியில்லை.

காட்ஸ். விளையாடுவது.

பியர். பெட்டியாக. எடுத்து வைத்து. குடிப்பது.

நகருக்குள். சுற்றி திரிவது. பொழுதோபோக்கு. இப்படி. குடித்த. ஒருவர். கார் ஒடிப் போனார். இடையில். பொலிஸ்சார். மறித்தார்கள். அவன். பயந்து. நிறுத்தாமல். ஒடி. 57. இலக்கம். Auto Bahn க்கு. எடுத்து. வேகமாக. ஒடினான். இரண்டு. பொலிஸ். கார் துரத்தி. பின்னுக்கும். முன்னுக்கும். நின்று. மறித்துவிட்டார்கள். மாறாக. சுடவில்லை. முதலில். கை கொடுத்தார்கள். குடித்து. இருகிறியா. என்று. கேட்டு. பரிசோதித்து. சில. புள்ளிகள. குறைத்து. ஆறு. மாதம். கார் ஒட. தடை. செய்தார்கள். அவன் இன்று அவுஸ்ரேலியாவில். குடும்பமாக. வாழ்கிறான். தமிழர்கள். இதை ஏன். ஆதரிக்கிறார்கள் ? நன்றி. வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

பகுதியாகவேனும் வேலையில் தொடர்வது… பர்சுக்கு மட்டும் அல்ல, உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லதுதான்.

நேரம் கிடைக்கும் போது யாழுக்கும் வாருங்கள்.

இதை ஏன் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்? எப்போதும் வன்முறையை வீரம் என்றும், பிற்போக்குதனத்தை மானம் எனவும் விளங்கி கொள்வதால்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இதை பொலிஸின் படுகொலையை ஏன் ஆதரிக்கின்றார்கள் என்றால் அநுரகுமார திசாநாயக்க அரசை ஆதரித்து பிரசாரம் செய்பவர்கள் தமிழர்கள் ஆகவே அவர்கள் பொலிஸின் படுகொலையையும் ஆதரிக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கே அவருக்கு என்ன வேலை என்றும் கேட்கின்றனர். நேரம் பார்த்து தான் இலங்கையில் பிரயாணம் செய்ய வேண்டும் அல்லது சுட்டு கொன்று விடுவார்கள் 😢

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.