Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ எல் சோதனை முடிச்சு போட்டு, ஒரு இரெண்டு மாசம்…

வெறும் இரண்டே மாசம்…

அடுத்து என்ன செய்யலாம் (செகண்ட் ஷை எடுப்பதில்லை, விரும்பாத யூனி டிகிரியும் படிப்பதில்லை என தெளிவாக முடிவு எடுத்த பின்) என நினைக்கும் காலப்பகுதியில்….

வழமையாக கிரிக்கெட் அடிக்கும் கிரவுண்டில்/தெருவில்….

கடற்கரை கல்லு கும்பத்தில்….

கதிரேசன் கோவில் முற்றத்தில் என எல்லா இடத்திலும்…

வழமையாக வரும் தோஸ்துகள் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது…

மச்சான் ஒஸ்ரேலியா ஸ்டூடன் விசா ஓகே டா….

பவளோ ஸ்கொல் கிடைச்சிட்டுடா…

கனடாவுக்கு ஏஜென்சி நாளைக்கு ஏத்திறாண்டா…

யூனிக்கி போக முன் கெல்ட் கோர்ஸ் போய் இங்கிலீஸ் படிக்கோணும்டா…

வாப்பா பெட்டா ஷொப்ப என்னிய பார்க்க சென்னார்டா…

தினுசு தினுசான காரணங்களுடன் ஒவ்வொருவராக போய் விட…

கடைசியில் நானும் என நண்பன் கிசோவும் ஒரு கடற்கரை கல்லில்…

மச்சி இனி இங்க வாறேல்ல…எதாவது செய்யோணும்டா…

என முடிவெடுத்து கொண்டோம்.

சற்றேற குறைய 30 வருடங்கள் ஓடிவிட்டன…

ஒரே மாற்றம்…

அன்று நானும் கிசோவும்…

இன்று….

நானும் வாதவூரனும்😂

பிகு

அன்று எதிர்காலம் எம் கையில் இருந்தது, இன்று 8 நாடுகளின் கையில்😂

கதையின் சூழமைவுக்கு 👇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

🤣...........

இரண்டு மாதங்களே இப்படி என்றல் இரண்டரை வருடங்கள் என்றால் எப்படியிருக்கும் என்கின்றீர்கள்.................... 87ம் ஆண்டில் ஏ லெவல் எடுத்து பல்கலை அனுமதி கிடைத்தது. இலங்கை அரசு ஜேவிபி பிரச்சனையை தற்காலிகமாக இல்லாமல் ஆக்கி தெற்குப் பல்கலைகளை மீண்டும் திறக்கும் போது 90ம் ஆண்டு ஆகிவிட்டது......... அவ்வளவு நாட்களும் ஊரிலேயே இருந்தேன். நண்பர்கள் கனடா, லண்டன், ஜேர்மனி, கப்பல் என்று போய்க் கொண்டேயிருந்தார்கள். கடைசி ஆளாக ஓரிருவர் நின்று கொண்டிருந்தோம். வழியே இல்லை என்று தான் நினைத்தேன்.

இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், மீண்டும் இலங்கை இராணுவம், இயக்கங்கள் என்று வாழ்க்கை ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தது. மினி சினிமாவில் நிறையப் படங்கள் பார்த்தேன். அதற்காகவே ஒரு மினி சினிமாவில் வேலை செய்தேன்................😜.

ஊரில் உள்ள சில வாசிகசாலைகளின் சாவிகள் கூட என்னிடம் இருந்தன..................🤣.

90ம் ஆண்டுக்கு பின் நடந்தது அதை விட விசித்திரம். முன்னைய நாட்களில் எங்கள் ஊரவர்கள் கடல் கடந்து கோடியாக்கரைக்கு போய் படம் பார்ப்பார்கள் என்று சொல்லுவார்கள். என் அம்மா கூட அவரின் சிறு வயதில் தானே படம் பார்க்க கோடியாக்கரைக்கு வள்ளத்தில் போனதாகச் சொல்லியிருக்கின்றார்...............🫢.

பல்கலைக்கு போய் சில நாட்களிலேயே இந்தியாவில் இருந்து ஒரு கடிதம்.......... இந்தியாவில் இருந்து நமக்கு யாரடா கடிதம் போடுகின்றது என்று பார்த்தால்................ படம் பார்க்க இந்தியா போகின்ற கோஷ்டி குடும்பமாக ஊரையே காலி செய்து விட்டு, தமிழ்நாட்டுக்கு போய்ச் சேர்ந்து விட்டார்கள்....................... அதை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்கள். செய்தியை புறாவின் காலில் கட்டி அனுப்பாமல் விட்டார்களே..............🤣.

ஆனாலும் களத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பது போலவே, என்னுடைய தெரிவுகள் அப்பப்ப சரியாக வேலை செய்தன.............. அம்மா செய்த புண்ணியங்கள் போல................

இங்கு அமெரிக்காவில் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். வயதானவர். இந்தியர். நான் கோவிலுக்கு போவதில்லை என்பதையும், என் மனைவி எப்போதும் கோவிலுக்கு போவதையும் அவதானித்து இருந்தார். ஏன் போவதில்லை என்று கேட்டார். பெரிதாக நம்பிக்கை இல்லை என்றேன். நீ அங்கே கும்பிட வேண்டாம், ஆனால் நன்றி சொல்ல வேண்டும், யாருக்காவது நீ நன்றி சொல்ல வேண்டும்.................. இப்படி ஒரு வாழ்க்கை எத்தனையோ கோடி மக்களுக்கு இந்த உலகில் கிடைப்பதில்லை என்றார்...................

போகும் போதெல்லாம் 'மிக்க நன்றி கடவுளே.............' என்று சொல்லுகின்றேன்.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

உண்மையில் உங்கள் ஆண்டு மாணவர்களோடு ஒப்பிடும் போது, ஏதுவும் நல்லது நடக்காமல் இருந்தாலுமே நாம் எங்காவது போய் ஒரு மைல் கல்லுக்காவது நன்றி சொல்ல வேண்டும்.

எனது அக்கா ஒருவருக்கும் எனக்கும் 8 வயது வித்தியாசம். ஒரே விடயத்தை நான் படித்து முடிக்க ஒரு வருடம் முன்புதான் அவர் இலங்கையில் முடித்திருந்தார் 😂. உள்ளே போகவே மூணு வருச வெயிட்டிங். பின் ஸ்டிரைக் லொட்டு, லொசுக்கு எண்டு பாதி வாழ்க்கை கம்பசிலேயே கழிந்து விட்டது. நல்லவேளையாக ஐடி, அக்கவுண்டன்சி போன்ற படிப்புகளி வெளிவாரியாக தொடர்ந்ததால் தகமையை வளர்த்து கொண்டார்.

நானும் அந்த காலத்தில் மினி சினிமா போவதுண்டு. கெஞ்சி கூத்தாடினால் உள்ளே விடுவார்கள். அதுவும் சண்டை படம் மட்டும்தான்.

கொமாண்டோ, பிளட்டூன், ரம்போ, இப்படி பல.

நீங்கள் சொல்லுவது போல் தெரிவுகள் ஓரளவு சரியாகத்தான் அமைகிறன, 2ம், 3ம் முயற்சியில் இங்கிலாந்து போல் தட்டு தடுமாறியாவது செமி பைனல் வந்து விடுகிறேன்😂.

  • கருத்துக்கள உறவுகள்

கதை மூலம் என்னமோ கதைக்கிறியள்....ஒன்றுமாப் புரியவில்லை ...எழுத்துமுறை நல்லாயிருக்கு...இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, alvayan said:

கதை மூலம் என்னமோ கதைக்கிறியள்....ஒன்றுமாப் புரியவில்லை ...எழுத்துமுறை நல்லாயிருக்கு...இருவருக்கும் வாழ்த்துக்கள்

நன்றி அல்வாயன்.

எங்களுகே புரியவில்லை😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

8 hours ago, goshan_che said:

நன்றி அல்வாயன்.

எங்களுகே புரியவில்லை😂

@அல்வாயன் இப்ப புரியுதா உங்களுக்கு ......... இதுதான் கமலும் T . ராஜேந்திரரும் கதைப்பது . ........! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

@அல்வாயன் இப்ப புரியுதா உங்களுக்கு ......... இதுதான் கமலும் T . ராஜேந்திரரும் கதைப்பது . ........! 😂

அது சரி இதில யார் கமல் யார் டீ ஆர்😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

எப்பிடியும்நான் தான் உங்களை வெல்லபோறன் கடைசி இடத்துக்கு (எப்பிடியும் வீட்டை ஆட்டையைப்போடுறது போடுறது தான்)

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாதவூரான் said:

எப்பிடியும்நான் தான் உங்களை வெல்லபோறன் கடைசி இடத்துக்கு (எப்பிடியும் வீட்டை ஆட்டையைப்போடுறது போடுறது தான்)

சே சே அதெல்லாம் உறுதியாய் சொல்ல முடியாது .......நாமிருவர் அங்கேதான் இருக்கிறோம் . ....... ஏற்கனவே அந்த வீட்டில் வாழ்ந்த அனுபவம் நமக்கு உண்டு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்வது நன்று . .....! 😂

42 minutes ago, goshan_che said:

அது சரி இதில யார் கமல் யார் டீ ஆர்😂

அது இருவரையும் நேரில் பார்த்தால்தான் சொல்ல முடியும் . .......முடியை சிலுப்புபவர் டீ .ஆர் . .......... அதை ஹங்கரில் மாட்டுபவர் கமல் . .......! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

எப்பிடியும்நான் தான் உங்களை வெல்லபோறன் கடைசி இடத்துக்கு (எப்பிடியும் வீட்டை ஆட்டையைப்போடுறது போடுறது தான்)

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே😂

1 hour ago, suvy said:

சே சே அதெல்லாம் உறுதியாய் சொல்ல முடியாது .......நாமிருவர் அங்கேதான் இருக்கிறோம் . ....... ஏற்கனவே அந்த வீட்டில் வாழ்ந்த அனுபவம் நமக்கு உண்டு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்வது நன்று . .....! 😂

நீங்கள் கொலிடே ல வந்து தங்கினவர்.

வீடு என்ர பரம்பரை வீடு😂

1 hour ago, suvy said:

அது இருவரையும் நேரில் பார்த்தால்தான் சொல்ல முடியும் . .......முடியை சிலுப்புபவர் டீ .ஆர் . .......... அதை ஹங்கரில் மாட்டுபவர் கமல் . .......! 😂

அப்ப நான் டீ ஆர் 😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

நானும் அந்த காலத்தில் மினி சினிமா போவதுண்டு. கெஞ்சி கூத்தாடினால் உள்ளே விடுவார்கள். அதுவும் சண்டை படம் மட்டும்தான்.

கொமாண்டோ, பிளட்டூன், ரம்போ, இப்படி பல.

இதுக்குப் போய் கெஞ்சிக் கூத்தாடி மினி சினிமா போயிருக்கிறீங்கள் என்பதை அறியும் போது..எனக்கு இரத்தக் கண்ணீர் வருகிறது😂!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

இதுக்குப் போய் கெஞ்சிக் கூத்தாடி மினி சினிமா போயிருக்கிறீங்கள் என்பதை அறியும் போது..எனக்கு இரத்தக் கண்ணீர் வருகிறது😂!

அப்ப எனக்கு வயது <12 அண்ணா.

எனது தகப்பானரை பொறுத்தவரை டிவி என்பது ஒரு சாத்தானின் பெட்டி. எனக்கு பதின்ம வயது முடிய சில வருடங்கள் இருக்கும் போதுதான் வீட்டில் டிவி யை அனுமதித்தார்.

ஆனால் சித்தி வீட்டில் போய் கிரிகெட் பார்க்க அனுமதி இருந்தது. இன்ன படம் என சொன்னால் நம்பி மினிசினிமாவுக்கு அனுப்பும் அளவுக்கு நம்பிக்கையும் இருந்தது.

கெஞ்சி கூத்தாடுவது மினிசினிமா நடத்தும் அண்ணையிடம்😂.

உள்ளே போனால் ஓமம் வளர்தது போல் ஒரே புகையாய் இருக்கும்😂

பின்னாளில் சவோய்யில் தொப்பியை போட்டு வரிசையில் நின்று, டிக்கெட் எடுத்து பார்த்த படங்களுக்கு யாரிடமும் அனுமதி கோரவில்லை😂

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2026 at 14:10, goshan_che said:

கடற்கரை கல்லு கும்பத்தில்….

வெளிநாடு போவதற்கு 77 களில் கொம்பனித்தெருவில் நின்ற நேரம்

பிற்பகலில் தொடரூந்து ஏறி வெள்ளவத்தை தெகிவளை போய் திரும்ப வருவோம்.

கொஞ்ச நாளில் வெளிநாடு போகாவிட்டாலும் பரவாயில்லை பிற்பகலில் இந்த தொடரூந்து பயணம் மட்டும் கைவிட முடியவில்லை.

அப்படி என்ன தான் பார்த்திருப்பேன்.

ஊரில் இருந்து வந்த புதிதில்

கற்பாறைகளுக்குள் தாழம் பற்றைக்குள் நடக்கும் திருவிளையாடல்கள்

வெளிநாட்டை விட சொர்க்கமாக தெரிந்தது.

கடைசிவரை சலிக்கவே இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதை வைத்து ஒரு கதை இருக்கிறது…எழுதலாமா என யோசித்து கொண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வெள்ளவத்தை இப்ப வெளிச்சவத்தையாய் இருபதைக் கண்டு கண்ணீர் தாரையாக ஓட விடுதில் நானும் ஒருவன் அய்யா....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதை வைத்து ஒரு கதை இருக்கிறது…எழுதலாமா என யோசித்து கொண்டிருக்கிறேன்.

எழுதுங்க எழுதுங்க

ஆவலாக இருக்கிறோம்.

52 minutes ago, alvayan said:

வெள்ளவத்தை இப்ப வெளிச்சவத்தையாய் இருபதைக் கண்டு கண்ணீர் தாரையாக ஓட விடுதில் நானும் ஒருவன் அய்யா....

வடக்கில் குக்கிராமத்தில் இருந்து போனநேரம்

திடீரென கிளுகிளுப்பான காட்சிகளைப் பார்க்க

அட இதை விட்டுவிட்டு வெளிநாடா

என்ற மாதிரி இருந்தது.

இதே மாதிரியே விக்டோரியா பார்க்கும்.

அவர்கள் பார்க்கிறவர்களைப் பற்றி கவலையே இல்லாமல்

தமது கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

எழுதுங்க எழுதுங்க

ஆவலாக இருக்கிறோம்.

வடக்கில் குக்கிராமத்தில் இருந்து போனநேரம்

திடீரென கிளுகிளுப்பான காட்சிகளைப் பார்க்க

அட இதை விட்டுவிட்டு வெளிநாடா

என்ற மாதிரி இருந்தது.

இதே மாதிரியே விக்டோரியா பார்க்கும்.

அவர்கள் பார்க்கிறவர்களைப் பற்றி கவலையே இல்லாமல்

தமது கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

எழுதலாம்….சில தனிபட்ட தகவல்களை தவிர்த்து விட்டு எழுத வேண்டும்….

அத்தோட @suvy அண்ணா தனது 18+ பாணியை நான் கையில் எடுப்பதாக குறைபடவும் கூடும்😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

எழுதுங்க எழுதுங்க

ஆவலாக இருக்கிறோம்.

வடக்கில் குக்கிராமத்தில் இருந்து போனநேரம்

திடீரென கிளுகிளுப்பான காட்சிகளைப் பார்க்க

அட இதை விட்டுவிட்டு வெளிநாடா

என்ற மாதிரி இருந்தது.

இதே மாதிரியே விக்டோரியா பார்க்கும்.

அவர்கள் பார்க்கிறவர்களைப் பற்றி கவலையே இல்லாமல்

தமது கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

அது ஒரு கனாக்காலம் ...அண்ணன்மாரோடை போனாலும் ..அதிலை ஒரு யூ ரேண் அடித்துப் பார்ப்பதில் ஒரு தனி சந்தோசம் ..அண்ணன்டை ஆபீசு விக்க்டோரியப் பாக் பக்கத்திலை ....சிலவேளை மதியச் சாப்பாடு கொடுக்கப் போனால் ...வீட்டைவர அண்ணன் நிற்பார்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

எழுதலாம்….சில தனிபட்ட தகவல்களை தவிர்த்து விட்டு எழுத வேண்டும்….

அத்தோட @suvy அண்ணா தனது 18+ பாணியை நான் கையில் எடுப்பதாக குறைபடவும் கூடும்😂

இந்தக் கவிதையில் என்ன விரசம். மனச்சாட்ச்சியைத் தொட்டு சொல்லுங்கள். அதன் முதல் பந்தியிலேயே நான்கு திருத்தலங்களின் தரிசனம் உண்டே அது ஏன் யார் கண்ணிலும் படவில்லை . .......!

தலைப்பு கொஞ்சம் கவர்ச்சிதான் - மறுக்கவில்லை

துள்ளி வந்து விழும் வார்த்தைகளின்

துடுக்கு அடக்கித்தான் எழுதுவது

ஆயினும் என்ன எழுதுவது

ஏன் இனி எழுதுவது .......

கருத்துக்களை எழுதிப் போட்டு கை தட்டிவிட்டுப் போகலாம் .......!

( கோஷான் - சே இது உங்களுக்கானது அல்ல , பொதுவானது என் மனக்குமுறல் மட்டுமே..... நான் என்ன செய்வது எவ்வளவோ வருடத்து வாசிப்பு பழக்கம் , ஏராளமான எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பரிட்சயம் எழுதினால் அப்படித்தான் வருகின்றது. அந்தக் கவிதைகூட அந்த நிமிடத்தில் எழுதியதுதான். கதையோ , கவிதையோ எண்ணி வைத்திருந்து எழுதியதில்லை. எண்ணம் கூடிவரும்போது எழுதுவதே அவ்வளவுதான். தயவுசெய்து யாரும் குறைநினைக்க வேண்டாம் ) .......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

ஐயோ அண்ணை…

முற்றிலும் தவறாக விளங்கி கொண்டுள்ளீர்கள்.

நீங்கள் எழுதியது அறவே விரசம் அற்றது…

மிக அப்பட்டமாக எழுதியிருக்க கூடியதை அற்புதமாக அதே நேரம் அதன் பொருட்சுவை குன்றாமல் எழுதி உள்ளீர்கள்.

உண்மையில் அதை 18+ என எழுதியது தப்புத்தான்.

நீங்கள் எழுதியதன் முழு கனபரிமாணத்தையும் கிரகிக்க ஒருவர் குறைந்தது 35+ ஆகவாவது இருக்க வேண்டும்.

இப்படி நான் சொல்ல வரும் விடயத்தை என்னால் எழுத முடியுமா என்பதே என் தயக்கத்துக்கு காரணம்.

என்னை போல் நேரடியாக எழுத தமிழில் எழுத தெரிந்தால் போதும்.

ஆனால் (யாரின் பாதிப்போ இல்லையோ) உங்களின் இது போன்ற எழுத்துக்கள்தான் அதை “இலக்கியம்” என்ற அடுத்த படி நிலைக்கு உயர்த்துவன.

தயவு செய்து தொடர்ந்து “இதே போல்” எழுதுங்கள்🙏

பிகு

ஏனைய கள உறவுகள் பார்வையிம் என்னை போலவே என நம்புகிறேன்.

விரசமான படைப்பு என நான் கருதி இருப்பின் அதை முதலாம் பதிவிலே நேரடியாக சொல்லி இருப்பேன் அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

வெள்ளவத்தை இப்ப வெளிச்சவத்தையாய் இருபதைக் கண்டு கண்ணீர் தாரையாக ஓட விடுதில் நானும் ஒருவன் அய்யா....

ஓம்…இது பெரும்பாலும் கடல் அரிப்பால் நிகழ்ந்துள்ளது. ஒரு காலத்தில் நாங்கள் கிரிகெட் விளையாட கூடிய அளவு மணல் இருந்த இடமெல்லாம் இப்போ கடல்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

ஐயோ அண்ணை…

முற்றிலும் தவறாக விளங்கி கொண்டுள்ளீர்கள்.

நீங்கள் எழுதியது அறவே விரசம் அற்றது…

மிக அப்பட்டமாக எழுதியிருக்க கூடியதை அற்புதமாக அதே நேரம் அதன் பொருட்சுவை குன்றாமல் எழுதி உள்ளீர்கள்.

உண்மையில் அதை 18+ என எழுதியது தப்புத்தான்.

நீங்கள் எழுதியதன் முழு கனபரிமாணத்தையும் கிரகிக்க ஒருவர் குறைந்தது 35+ ஆகவாவது இருக்க வேண்டும்.

இப்படி நான் சொல்ல வரும் விடயத்தை என்னால் எழுத முடியுமா என்பதே என் தயக்கத்துக்கு காரணம்.

என்னை போல் நேரடியாக எழுத தமிழில் எழுத தெரிந்தால் போதும்.

ஆனால் (யாரின் பாதிப்போ இல்லையோ) உங்களின் இது போன்ற எழுத்துக்கள்தான் அதை “இலக்கியம்” என்ற அடுத்த படி நிலைக்கு உயர்த்துவன.

தயவு செய்து தொடர்ந்து “இதே போல்” எழுதுங்கள்🙏

பிகு

ஏனைய கள உறவுகள் பார்வையிம் என்னை போலவே என நம்புகிறேன்.

விரசமான படைப்பு என நான் கருதி இருப்பின் அதை முதலாம் பதிவிலே நேரடியாக சொல்லி இருப்பேன் அண்ணை.

பரவாயில்லை கோஷான் சே ......நான் யார்மீதும் குறை சொல்லவில்லை .... நீங்கள் உட்பட ........விமர்சனங்களை ஏற்கத்தான் விடும் . ......அதிகம் எழுத நேரமில்லை . ....எனது மைத்துனர் ஜெர்மனியில் இன்று அதிகாலை காலமாகி விட்டார். 3 நாட்களுக்கு முன் தம்பி முறையானவர் டென்மார்க்கில் காலமாகி விட்டார். இன்னும் எடுக்கவில்லை ..... அதுதான் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் ......சரி போகட்டும் விடுங்கோ . ........ பின்பு சந்திக்கலாம் ......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

பரவாயில்லை கோஷான் சே ......நான் யார்மீதும் குறை சொல்லவில்லை .... நீங்கள் உட்பட ........விமர்சனங்களை ஏற்கத்தான் விடும் . ......அதிகம் எழுத நேரமில்லை . ....எனது மைத்துனர் ஜெர்மனியில் இன்று அதிகாலை காலமாகி விட்டார். 3 நாட்களுக்கு முன் தம்பி முறையானவர் டென்மார்க்கில் காலமாகி விட்டார். இன்னும் எடுக்கவில்லை ..... அதுதான் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன் ......சரி போகட்டும் விடுங்கோ . ........ பின்பு சந்திக்கலாம் ......!

சரி அண்ணை. உங்கள் அண்மைய இழப்புகளுக்கு அனுதாபங்கள்.

பத்திரமாக போய் வாருங்கள்.

பிகு

வந்து கட்டாயம் எழுத வேணும்🙏.

நான் எனக்காக மட்டுமே கதைக்க முடியும், நான் சொன்னது விமர்சனமே அல்ல, விதந்துரைப்பு மட்டுமே. அதை சொன்ன விதம் பிழை எண்டால் மன்னித்து கொள்ளவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.