Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலர் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் நல்லா முட்டுக்கொடுக்கிறார்கள்! அதில் ஒருவர் இனி யூதர்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்! இன்னொருவர் சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது என்கிறார். இஸ்ரேலும் அமெரிக்காவும் எந்த சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படுகிறது!

இதேபோலத்தான் ஒரு பயங்கரவாத அமைப்பிடம் கடற்படை, வான்படை இருப்பது ஆபத்தானது என்று கூறி புலிகளை அழித்தனர்! பலரின் இரட்டை முகங்கள் இப்போதுதான் வெளிவருகின்றன!

மேற்காலும் அமெரிக்காவாலும் ஏற்கனவே தலைமை அழிக்கப்பட்ட ஈராக், லிபியா, சிரியா, ஆப்கான் போன்ற நாடுகளின் இன்றய நிலை யாருக்கும் புரியவில்லை போலும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களை மட்டும் வைத்து கொண்டு உணர்ச்சி மற்றும் வெற்று பிடிவாதத்துடன் அறிவில்லாமல் சண்டை செய்தால் அழிவு நிச்சயம் என்பதற்கு ஈரானும் உலகத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

வெற்றி வெற்றி ....

இஸ்லாமிய உச்ச பயங்கரவாதி கமேனி .... கொல்லப்பட்டான் ...

🤣🤣🤣 ஒரே மகிழ்ச்சியாக உள்ளது ...

உலகை பயங்கரவாதத்திடமிருந்து காத்த அமெரிக்க இஸ்ரேலிய வான்படையினருக்கு வாழ்த்துக்கள்

🎉🎉🎉


இந்த காத்தான்குடி புத்தளத்தானுகளை இப்ப Facebook இல பாக்கோனும்.... சுடுதண்ணி குடிச்ச %@#% மாதிரி ஓடுப்பட்டு திரிகிறானுகள்...

மதமென்டால் எல்லாத்தையும் போட்டுட்டு முன்னுக்கு வாறவனுகள், இண்டைக்கு ஒழிச்சிட்டாங்கள்...🤣🤣

இந்த பதிவுக்கான பதிலை எனது முகப்புத்தக மேய்ச்சலில் கிடைத்தது ...இதனைப் பார்த்ததும் எனக்கு நாலுபுறத்தில் இருந்துதாக்குதல் ...அடியும்விழும் ...கவுரவ பட்டமளிப்பையும் தருவார்கள் ..ஆனால் நான் எந்தவித கருத்தும் எழுதமாட்டேன் ...இது இன்னொருத்தரின் கருத்து ..மேற்குறிப்பிட்ட கருத்துக்கு ஒத்து வந்ததுபோல் இருந்தது ...பிரதி பண்ணி விட்டேன் . நிர்வாகம் நீக்கினால்கூட ..மகிழ்ச்சி அடைவேன்

பால்சோறும்.. பட்டாசு கொளுத்தியும் தன்னுடைய சொந்த இனம் அழியும்போது றபான் அடித்து டான்ஸ் ஆடி கொண்டாடிய மனிதாபிமான அற்ற கூட்டம் .. இன்று

எங்களைப் பாத்து நீ யெல்லாம் மனிதனா மனிதாபிமானம் இல்லையா என்று கேக்கிறார்கள் 🤷"

அடேய் நீங்கள் எல்லாம் இன்றும் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு இலங்கைல இருக்கிற தமிழர்களை எப்படியாவது விரட்டனும், அவர்களுடைய வரலாறுகளை அழிக்கனும் என்று துடிக்கிறிங்கள்..

நீங்கள் புனித ரமலான் மாதத்தில் பேசுகின்ற வார்த்தைகளை பாக்கும்போது உங்களுக்கு, இஸ்லாத்தைவிட துவேசம் தான் முக்கியம் என்று புரிகிறது..

ஈரானிய பிரச்சனைகளை பற்றி பேசும்போது எதற்கடா இலங்கைக்குள்ள போறிங்கள், ஏனென்றால் உங்களுடைய எண்ணம் சிந்தனையெல்லாம் இலங்கைலுள்ள தமிழினம் அழியவேண்டும் என்ற வெறி ஊறிப்போனதால்தான்... அதனால்தான் ஈரானிய பிரச்சனைக்குரிய பதில்களை வழங்காது அங்கு ஓடுறிங்க..

உங்களுக்கு ஒன்று தெரியமா அடுத்துவரும் சட்டத்திருத்தங்களிலோ அல்லது யாப்புகளிலோ இலங்கையில் இரண்டு இனம் மட்டும்தான் என முன்மொழியப்பட்டுள்ளது.. தமிழர்கள் தமிழர்கள் என்று நாங்கள் சொல்லும்போது கேக்காத நீங்கள் இனி இலங்கை அரசே சொல்லுது நீங்க தமிழர்களென்று 🤣"

ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் பெட்டி படுக்கையை கட்டிட்டு ராஜஸ்தான் போக வேண்டியதுதான்..

இல்லாட்டி கண்ணாடியைப்பார்த்து பீ தமிழன் என்று சொல்லி காறித்துப்புங்கள் உங்க முகறையில்.

எங்களுக்கு என்றைக்கும் ஒரே ஒரு தலைவன்தான் அவருக்காக நிறைய கடமைப்பாடு உள்ளது.. அதுவரை என்னை உணர்ந்தவன் என்னுடன் நில்லு மற்றவன் எல்லாம் நடையை கட்டுங்கள்...

கொள்கை கோட்பாடு அற்ற இஸ்லாமியர்களுக்கு இந்த உலகில் எங்கெல்லாம் இஸ்லாத்தை தழுவி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கென்று ஒரு தலைவன் இருப்பான்....

நன்றி.....

iroshan Sivakumar

.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

இது இறைவனால் தீர்மனிக்கப்பட்டதாம். இஸ்லாமிய இணையத்தளம் ஒன்று இவ்வாறு எழுதியுள்ளது :

"மிகவும் கீழ்த்தரமான பயங்கரவாதிகள் மற்றும் மனிதகுலத்தின் கொலையாளிகளின் கைகளால் அவர் வீரமரணம் அடைந்தது, இந்த மாபெரும் தலைவரின் நேர்மைக்கும் அவரது உளமார்ந்த சேவைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கும் ஒரு அடையாளமாகும்."

வென்றாலும் கடவுளருள் தோற்றாலும் கடவுளருள்.

அவர்கள் பக்கம் இழப்பு என்றால் அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சொல்லி தாளிப்பார்கள், அவர்கள் பக்கம் வெற்றி என்றால் அல்லாஹு அக்பர் என்று குமுறுவார்கள்

காசா போரின்போது சின்வார் தளபதியாக நியமிக்கப்பட்டபோது அவர் சிங்கம் இஸ்ரேலால் அவரை நெருங்ககூட முடியாது என்று கதறினார்கள், எண்ணி மூன்றேநாளில் இஸ்ரேல் அவர் கதையை முடித்தபோது என்ன இழவை சொல்லி சமாளிக்குறது எண்டு தெரியாமல் இது ஒன்றும் இழப்பில்லை அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சடைஞ்சார்கள்,

அப்போ காசாவில் மக்கள் சாகிறார்கள் ஐநா காப்பாத்து அல்லாஹ் காப்பாத்து என்று ஏன் கதறுகிறீர்கள் அவனிடம்தானே போகிறார்கள் என்று கேட்டேன், அதுக்கு செத்துபோன எங்கவீட்டு கிழவியிலிருந்து சித்தி பெரியம்மா வரை தோண்டி எடுத்து சிறப்பான தமிழில் திட்டினார்கள். சரி அவங்க மார்க்க கடமையைதானே செய்கிறார்கள் என்று பேசாமலே வந்துட்டேன்.

மக்கள் உயிர் இழப்பை கேலி செய்யும் எந்த நோக்கமும் இல்லை, ஆனால் மக்கள் இழப்பைபற்றி அவர்கள் கவலைபடுவது அவர்கள் பக்கம் அதிக இழப்பு என்றால் மட்டுமே மக்களை இழுத்து திசை திருப்புவார்கள். மற்றும்படி மற்றவர்களை கொன்றுவிட்டு இறைவன் பெரியவன் என்பதே கோஷமாக இருக்கும்.

எந்த ஒரு விஷயமும் தமக்கு சாதகமாக இல்லையென்றால் அப்படியே எந்த திசைக்கு வேணுமென்றாலும் மாற்றி உருட்டுவார்கள், உருட்டுவதில் இவர்களிடம் பிதாமகன் சூர்யா தோற்றுபோனார் என்றே சொல்லவேண்டும் .iammoviebuff007 Sakthi in pithamagan 😌💯

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிப்போம் எண்டவன் எங்கடா இப்ப?

அது சரி செத்தகிளியிண்ட சிலமனையும் காணேல்லை. 🤣 அதிண்ட வாடகைக் குஞ்சுகள்தான் பாவம் அதுகளும் இலவுகாத்த செத்தகிளிகளாக நிக்குதுகள்! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இங்கே பலர் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் நல்லா முட்டுக்கொடுக்கிறார்கள்! அதில் ஒருவர் இனி யூதர்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்! இன்னொருவர் சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது என்கிறார். இஸ்ரேலும் அமெரிக்காவும் எந்த சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படுகிறது!

இதேபோலத்தான் ஒரு பயங்கரவாத அமைப்பிடம் கடற்படை, வான்படை இருப்பது ஆபத்தானது என்று கூறி புலிகளை அழித்தனர்! பலரின் இரட்டை முகங்கள் இப்போதுதான் வெளிவருகின்றன!

மேற்காலும் அமெரிக்காவாலும் ஏற்கனவே தலைமை அழிக்கப்பட்ட ஈராக், லிபியா, சிரியா, ஆப்கான் போன்ற நாடுகளின் இன்றய நிலை யாருக்கும் புரியவில்லை போலும்

இங்கே பேசப்பட்டுக்கொண்டிருப்பது ஆயுதங்கள் பற்றியல்ல, அணு ஆயுதங்கள் பற்றியதே இரண்டு ஆயுதங்களும் ஒன்றல்ல, இரண்டும் வேறுவேறானவை.

இரண்டாம் உலக போரின் பின்னர் அணுஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் அனைத்துமே அணுஆயுத ஒப்பந்தத்தை உறுதியாக கடைப்பிடித்தே நடந்து வந்திருக்கின்றன, அவை அணு ஆயுத போரில் ஈடுபட்டதாக உங்களிடம்கூட ஆதாரங்கள் இருக்க வாய்ப்பில்லை.

ஆயுதமோதல்களில் உலகில் யார்தான் ஈடுபடவில்லை அதுவும் அணுஆயுதபோரும் ஒன்றல்ல.

புலிகள் அமைப்பிடம் கடற்படை வான்படை இருந்த காரணத்தினால்தான் உலகம் அது ஆபத்தானது என்று சொல்லி அவர்களை அழித்தது என்று நீங்கள் படித்த ஆதாரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் அறிந்தால் தவறில்லையே.

செப்11ன் பின்னர் உலகின் போக்கே மாறியதால்தான் எம் போராட்டமும் சுற்றி வளைக்கப்பட்டது, அதேநேரம் புலிகளை முழு பயங்கரவாதிகள் என்று உலகம் முடிவு செய்திருந்தால் ஜெனீவா தாய்லாந்து நோர்வேக்கெல்லாம் ராஜதந்திரிகளுக்குரிய கெளரவத்துடன் அழைத்து பேசியிருக்காது. அவர்களிடம் அணு ஆயுதமோ ரசாயன ஆயுதங்களோ இருந்திருந்தால் கதை ஒருபோதும் அப்படி அமைந்திருக்காது.

காலங்கள் சிறிது ஓடிவிட்டால் கண்முன்னே கண்டதெல்லாம் சிறிது மறந்து போய்விடுகிறது. அது மனித இயல்புதான்.

புலிகளிடம் அன்றைய போர் சூழலில் இலங்கை அரசைவிட வலுவான ஆயுதங்கள் ஆளணி இருந்திருந்தால் உலகம் தூர நின்று வேடிக்கைதான் பார்த்திருக்கும். பேச்சு வார்த்தைக்கு போக சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கும், அதற்கும் அணுஆயுத தயாரிப்புக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இங்கே பலர் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் நல்லா முட்டுக்கொடுக்கிறார்கள்! அதில் ஒருவர் இனி யூதர்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்! இன்னொருவர் சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது என்கிறார். இஸ்ரேலும் அமெரிக்காவும் எந்த சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படுகிறது!

எப்போதும் தமிழன், நீங்கள் கேட்டதனால் சில விடயங்களை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

முதலில் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் முட்டுக் கொடுப்பதற்காக நான் எனது பதிவினை இடவில்லை.

இரண்டாவது, இன்று அணுவாயுத வல்லமை பெற்ற நாடுகளைப் பார்த்தீர்கள் என்றால், அந்நாடுகள் புதிதாக எந்த நாட்டிற்கும் அணுவாயுதத்தைக் கொடுக்கப்போவதில்லை, தம்மிடம் இருக்கும் அணுவாயுதங்களை சிறிது சிறிதாக குறைத்துக்கொள்வது, எந்த நாடும் தனது சக்தித் தேவைகளுக்காக சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வழிகளில் வீரியம் குறைந்த அணுச் சக்தி நிலைகளை உருவாக்கிக்கொள்வது எனும் கொள்கைகளை மட்டுமே கொண்ட அணுவாயுத பரவல்த் தடுப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் அமெரிக்கா, ரஸ்ஸியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தன. பின்னாட்களில் அணுவாயுதத்தை உருவாக்கிக்கொண்ட இந்தியா, பாக்கிஸ்த்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இவ்வொப்பந்தத்தில் இதுவரை கைச்சாத்திடவில்லை. வடகொரியா 2003 ஆம் ஆண்டளவில் இவ்வொப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது.

இவற்றுள், வடகொரியாவைத் தவிர ஏனைய நாடுகள் அனைத்துமே அணுவாயுதத்தினை ஒருபோதும் பாவிக்கப்போவதில்லை என்பதே சர்வதேசத்தின் எண்ணம். வடகொரியாவினை ஆளும் சர்வாதிகாரி எந்நேரத்திலும் அணுவாயுதத்தைப் பாவிக்கலாம் எனும் அச்சம் இன்றுவரை இருந்தே வருகிறது.

ஆனால், ஈரானின் அணுவாயுத ஆசைக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. அதுதான் இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக அழித்துவிடுவதென்பது. ஆகவேதான் எப்பாடுபட்டாவது அணுவாயுத வல்லமையினைப் பெற்றுவிட அது துடிக்கிறது. மதவெறிபிடித்து அலையும் ஈரானிய முல்லாக்கள் தமது கைகளில் அணுவாயுதம் கிடைத்தவுடன் அதனை எந்நாட்டின் மீது ஏவுவார்கள் என்பதை அனுமானிப்பது அவ்வளவு கடிணமான விடயமாக உங்களுக்கு இருக்கப்போவதில்லை.

சர்வாதிகாரியான கிம் உங் ஜுன் இடம் இருக்கும் அணுவாயுதத்தின் ஆபத்தினை எதிர்கொள்ளும் உலகு, மதவாதிகளான ஈரானிய முல்லாக்களின் அணுவாயுத அச்சுருத்தலினையும் எதிர்கொள்ளவேண்டுமா என்பதே இன்றிருக்கும் கேள்வி. அதனால்த்தான் ஈரான் அணுவாயுதத்தினை உருவாக்கிக்கொள்வதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டிய தேவை இருக்கிறது. இதனால்த்தான் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலினை நான் ஆதரிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இஸ்ரேலும் அமெரிக்காவும் எந்த சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படுகிறது!

நீங்கள் கேட்பது சரிதான்.

இன்று சர்வதேச வல்லரசுகளோ, பிராந்ர்திய வல்லரசுகளோ எந்த சட்டத்திற்கும் கட்டுப்படுவதில்லை என்பது உண்மையே.

அமெரிக்கா நடத்திய வியட்னாம், ஈராக் மற்றும் அப்கானிஸ்த்தான் மீதான தாக்குதல்கள், ரஸ்ஸியா நடத்திய அப்கானிஸ்த்தான், மோல்ட்டோவா, ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு வல்வளைப்புக்கள், சீனா நடத்திய தீபெத், தென்சீனக் கடற்பகுதி மற்றும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மீதான ஆக்கிரமிப்புக்கள் என்று எல்லா வல்லரசுகளும் தம் பங்கிற்கு தமது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி சர்வதேசச் சட்டங்களை மீறி வருகின்றன.

ஆனால், இவை எதுவுமே தம்மிடம் இருக்கும் அணுவாயுதத்தினை சட்டங்களை மீறும் செயற்பாடுகளில் பாவித்ததில்லை, இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீதான தாக்குதலைத் தவிர.

3 hours ago, Eppothum Thamizhan said:

இதேபோலத்தான் ஒரு பயங்கரவாத அமைப்பிடம் கடற்படை, வான்படை இருப்பது ஆபத்தானது என்று கூறி புலிகளை அழித்தனர்! பலரின் இரட்டை முகங்கள் இப்போதுதான் வெளிவருகின்றன!

புலிகளையும் ஈரானின் முல்லாக்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதன் மூலம் போரட்டத்தையல்லவா கொச்சைப்படுத்துகிறீர்கள்.

இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதுவே தலையாய கடமையென்று அணுவாயுத உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஈரானைப்போல, புலிகள் ஏதாவதொரு இனத்தை அழிப்பதே தமது தலையாய கடமை என்று செயற்பட்டார்களா? அப்படிச் செயற்பட்டார்கள் என்றால் அதனை இங்கே குறிப்பிடுங்கள் பார்க்கலாம்.

அடுத்ததாக, புலிகளிடம் கடற்படையும், வான்படையும் இருப்பதனால்த்தான் அழிக்கப்பட்டார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? இதனை நிரூபிக்க உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் இங்கே பகிரலாமே? இந்தியா தனது பழிவாங்கலுக்காகவே புலிகளை அழிக்கக் கங்கணம் கட்டிச் செயற்பட்டது என்று நன்கு தெரிந்தபின்னரும் ஏன் மீண்டும் மீண்டும் புதிதாக காரணங்களைக் கொண்டுவந்து இணைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

மேற்காலும் அமெரிக்காவாலும் ஏற்கனவே தலைமை அழிக்கப்பட்ட ஈராக், லிபியா, சிரியா, ஆப்கான் போன்ற நாடுகளின் இன்றய நிலை யாருக்கும் புரியவில்லை போலும்

ஈராக்கின் சதாம் உசேன் எவ்வாறான அரசதிபர்? ஜனநாயக தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்பட்டவரா? அவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி, சதிப்புரட்சிமூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர். மிகவும் கொடூரமான சர்வாதிகாரியாக வலம் வந்தவர். அவரது ஆட்சியில் குர்திஸ்கள் உட்பட அவரின் இனத்தைச் சாராத பல மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். குர்திஸ்கள் மீது இரசாயண ஆயுதத்தினைப் பிரயோகித்தார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. ஆனாலும் குவைத்தினை ஆக்கிரமிப்பென்பதென்று அவர் எடுத்த முடிவே அவருக்கு எமனாக மாறியது. 1990 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளின் யுத்தம் அவரை குவைத்திலிருந்து வெளியேற்ற நடத்தப்பட்டது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னரான காலத்தில் சதாம் எடுத்த நிலைப்பாடும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பதில் அவர் காட்டிய தீவிரமும் 2003 இல் ஈராக்கினை அமெரிக்கா மீண்டும் தாக்கவேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்தியது. இப்போரிற்காக அமெரிக்கா முன்வைத்த காரணங்கள் வலுவற்றவையாக இருந்தபொழுதிலும், பாரிய அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மீதான சதாமின் ஆசை இரகசியமல்ல.

ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், உலகெங்கிலும் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்குவதற்காக ஈராக்கினுள் வந்து குவிந்தார்கள் அதன் விளைவாக ஏற்பட்ட போர்களும், சியா ‍- சுன்னி பிரிவுகளுக்கிடையிலான போரின் விளைவுகளுமே ஈராக்கினை முற்றான அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.