Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, தமிழ் சிறி said:

விலை ஏறின பொருள் என்றும் என்றும் விலை குறைந்த வரலாறே இல்லை.

நேற்றில் இருந்து… முதல் முறையாக ஒரு லீற்றர் பெற்றோல் 2 ஐரோவை தாண்டியது.

ரஷ்யாவும் இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தன் எரிசக்திகளை விற்க தடை என ஆணித்தரமாக கூறிவிட்டது.

மயான காண்ட கூத்து ஆரம்பமாகுகின்றது என நினைக்கின்றேன்.

  • Replies 59
  • Views 2.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்த ஈரான் கப்பல்... காத்தான்குடி இணைய போராளிகளை, ஈரான் போருக்கு அழைத்துப் போக வந்ததாக சொல்கிறார்கள். 😂 அதனை கேள்விப்பட்ட அமெரிக்கா... இதனை தாட்டுப் போட்டுதாம். 🤣

  • புலவர்
    புலவர்

    இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியா

  • நியாயம்
    நியாயம்

    அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இந்த வருச... நல்லூர் திருவிழாவுக்கு போக ஏலாது போல கிடக்கு. 🤣

அனுரா அம்மான் ஒர் ராஜதந்திரி நிச்சயம் சுழிச்சு ஓடி எங்களை நல்லூரானின் திருவடியை வணங்க வைப்பார் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IRIS Dena கப்பல் மீட்பு பணிகள் தொடர்கின்றன

Mar 6, 2026 - 12:27 PM

IRIS Dena கப்பல் மீட்பு பணிகள் தொடர்கின்றன

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் போர்க் கப்பலான IRIS Dena வில் இருந்து மூழ்கிய ஈரானிய கடற்படையினரை மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.

குறித்த பணிகளில் கடற்படை ஈடுபடும் காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன.

IRIS Dena கப்பல் மீட்பு பணிகள் தொடர்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2026 at 13:41, தமிழ் சிறி said:

பெப்ரவரி 2026 இல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மதிப்பாய்வுக்கு வந்த ஐந்தே வயதான 100 மிட்டர் நீளமான ஈரானிய கடற்படைக்கப்பலான IRISDena அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மார்க் 48 டோப்பிடோ (Mark 48 torpedo) என்னும் நீரடி ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டு காலி கடற்கரையில் இருந்து 40 கடல் மைல்கள் தூரத்தில் மார்ச் மாதம் 4ம் திகதி அதிகாலை மூழ்கடிக்கப்பட்டது. இதில் 60 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 87 பேர் இறந்துள்ளதாகவும், 32 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இதுவரை வந்த செய்திகளில் கூறப்படுகின்றது.

இந்தியாவுக்கு விருந்தாளிகளாக போனவர்களை இக்கட்டான தருணத்தில் வெளியேற்றி

நல்லபிள்ளை பட்டம் எடுக்க அமெரிக்காவிடமும் போட்டுக் கொடுத்துள்ளது.

முதுகில் குத்த இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்கணும்.

இதனாலேயே இந்திய கப்பல் தீப்பற்றி எரிகிறது.

ஈரானின் அறிக்கையிலும்

ருசியா சீனா பாகிஸ்தான் கப்பல்கள் மட்டுமே ஜலசந்தி ஊடாக பயணிக்கலாம் என்கிறார்கள்.

ஈரானிய கப்பல்களை காட்டிக் கொடுத்து தனது விசுவாசத்தைக் காட்டிவிட்டது.

அமெரிக்கா இலங்கை கடலில் வைத்து தாக்கி அழித்துவிட்டு சர்வதேச கடலில் வைத்து அழித்ததாக சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவுக்கு விருந்தாளிகளாக போனவர்களை இக்கட்டான தருணத்தில் வெளியேற்றி

நல்லபிள்ளை பட்டம் எடுக்க அமெரிக்காவிடமும் போட்டுக் கொடுத்துள்ளது.

முதுகில் குத்த இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்கணும்.

இதனாலேயே இந்திய கப்பல் தீப்பற்றி எரிகிறது.

ஈரானின் அறிக்கையிலும்

ருசியா சீனா பாகிஸ்தான் கப்பல்கள் மட்டுமே ஜலசந்தி ஊடாக பயணிக்கலாம் என்கிறார்கள்.

ஈரானிய கப்பல்களை காட்டிக் கொடுத்து தனது விசுவாசத்தைக் காட்டிவிட்டது.

அமெரிக்கா இலங்கை கடலில் வைத்து தாக்கி அழித்துவிட்டு சர்வதேச கடலில் வைத்து அழித்ததாக சொல்கிறது.

இந்தியா... எவனுக்கும் உண்மையாக இருந்தது இல்லை.

அவன் எமக்கு செய்த, இப்போதும் செய்து கொண்டு இருக்கும் துரோகங்கள்....

எண்ணில் அடங்காதவை. வெட்கம் கெட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ரஷ்யாவும் இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தன் எரிசக்திகளை விற்க தடை என ஆணித்தரமாக கூறிவிட்டது.

மயான காண்ட கூத்து ஆரம்பமாகுகின்றது என நினைக்கின்றேன்.

எண்ணை விலை ஏற... மற்றைய அனைத்துப் பொருட்களும் விலை ஏறும்.

இப்போதைய நிலையில்... மக்களுக்கு இதனை தாங்கும் சக்தி இல்லை என்றே கூற வேண்டும்.

விரைவில்... மின்சாரம், எரிவாயுவின் விலையும் இரட்டிப்பு ஆகும் என்று கூறுகின்றார்கள்.

சண்டை பிடிக்கின்றவர்கள்தான்... இந்த விலையேற்றத்துக்கும், தமது பணத்தை கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால்தான்... மூடிக் கொண்டு இருப்பார்கள்..

யாரோ... சண்டை பிடிக்க... அதற்கு சம்பந்தம் இல்லாதவன், விலை கொடுக்க வேண்டி உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூழ்கடிக்கப்பட்ட இரான் போர்க்கப்பல் - இந்தியா என்ன செய்திருக்க முடியும்?

அமெரிக்க பாதுகாப்புத் துறை வழங்கிய இந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இரானிய போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் டெனா'வை  மூழ்கடிப்பது காட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,US Department of Defense via Getty Images

படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புத் துறை வழங்கிய இந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில், 2026 மார்ச் 4 அன்று இலங்கை கடற்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கைக்கு ஆதரவாக அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இரானிய போர்க்கப்பலான 'ஐஆர்ஐஎஸ் டெனா'வை மூழ்கடிப்பது காட்டப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • ஜுகல் புரோகித்

  • பிபிசி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மார்ச் 4, புதன்கிழமை அன்று அமெரிக்கா ஒரு வீடியோவை வெளியிட்டு, தனது நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் இரான் நாட்டின் போர்க்கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்ததாகத் தெரிவித்தது.

பிபிசி சிங்கள மொழிச் சேவைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் தாக்குதல் புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் தெற்கு இலங்கை நகரமான காலி அருகே நடந்தது.

இதுவரை 32 மாலுமிகள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 84 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் கூற்றுப்படி, இந்த கப்பலின் பெயர் 'டெனா'. இதில் சுமார் 130 மாலுமிகள் இருந்தனர். இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் வந்திருந்தது என்றும், எந்த எச்சரிக்கையும் இன்றி இது மூழ்கடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் செய்தி வெளியான பிறகு, சில கேள்விகள் எழுந்துள்ளன.

இரான் நாட்டிலிருந்து இவ்வளவு தொலைவில் இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இந்தத் தாக்குதல் சட்டப்படி சரியானதா?

இதன் பொருள் இந்தப் போர் இப்போது இந்தியாவிற்கு இன்னும் நெருக்கமாக வருகிறதா? இது தொடர்பாக இந்தியா என்ன செய்ய முடியும்? இரானியப் போர்க்கப்பலின் பாதுகாப்புக்கு இந்தியாவுக்கு எந்த வகையிலும் பொறுப்பு இருந்ததா?

இந்தியப் பெருங்கடலில் இரானின் போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ ஏவுகணை மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத்

தாக்குதல் பற்றி தெரிந்தது என்ன?

இரானியப் போர்க்கப்பலை மூழ்கடிக்க 'மார்க் 48' நீர்மூழ்கி ஏவுகணைகளை பயன்படுத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இது எதிரியின் நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது போர்க்கப்பல்களைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் அல்லது விமானங்களிலிருந்தும் ஏவ முடியும்.

அமெரிக்கக் கடற்படையின் கூற்றுப்படி, அவர்களின் அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களிலும் இந்த மார்க் 48 நீர்மூழ்கி ஏவுகணைகள் உள்ளன. அமெரிக்கக் கடற்படை கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த வகை நீர்மூழ்கி ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இதன் புதிய பதிப்பின் எடை சுமார் 1700 கிலோ கிராம் ஆகும்.

இரான் நாட்டிலிருந்து இவ்வளவு தொலைவில் இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது?

இந்தக் கேள்விக்கு மார்ச் 2 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அமெரிக்க விமானப்படை ஜெனரல் டான் கேன் பதிலளித்திருந்தார்,"முழு பிராந்தியத்திலும் உலகம் முழுவதிலும் எங்களது நடவடிக்கைகள் தொடரும்."

இந்த வார்த்தைகள் அமெரிக்காவின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.

இந்தத் தாக்குதல் சட்டப்படி சரியானதா?

பிபிசி சிங்களத்தின் செய்தியின்படி, இந்தப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட இடம் தெற்கு இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல்கள் (சுமார் 35 கிலோமீட்டர்) தொலைவில் இருந்ததாக இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

நிபுணர்களின் கூற்றுப்படி, 'இந்தச் சம்பவம் இலங்கையின் சிறப்பு பொருளாதார் மண்டலத்தில் நடந்திருந்தால், அதை சர்வதேச அளவில் எழுப்ப இலங்கைக்கு முழு உரிமை உண்டு'.

பட மூலாதாரம்,Ishara S. KODIKARA/AFP via Getty Images

கடல்சார் மற்றும் சர்வதேச வர்த்தக சட்ட நிபுணரான மூத்த வழக்கறிஞர் ராகுல் நரிச்சானியா, பிபிசி ஹிந்தியிடம், "எந்தவொரு நாட்டின் கடற்கரையிலிருந்தும் 12 கடல் மைல்கள் வரையிலான பகுதி 'பிராந்திய கடல் பகுதி' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் அங்கு நடக்கும் எந்தவொரு சம்பவமும் நிலத்தில் நடந்தது போலவே கருதப்படும், மேலும் சட்ட விதிகளும் அவ்வாறே பொருந்தும்.

இதற்கு அப்பால், 200 கடல் மைல்கள் வரையிலான பகுதி 'சிறப்புப் பொருளாதார மண்டலம்' ஆகும். இங்கே நாட்டுக்கு எண்ணெய்-எரிவாயு, மீன்பிடித்தல் போன்றவற்றில் சில வணிக உரிமைகள் கிடைக்கும். ஆனால் இந்தப் பகுதி பிராந்திய கடல் பகுதி போன்றது அல்ல," என்றார்.

"இப்போது, இந்தச் சம்பவம் இலங்கையின் பகுதியில் நடந்திருந்தால், அந்தப் பிரச்னையை சர்வதேச அளவில் எழுப்ப இலங்கைக்கு முழு உரிமை உண்டு. உதாரணமாக, இந்தக் கப்பல் மூழ்கியதால் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இருந்தாலோ, அல்லது மற்ற கப்பல்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டாலோ, அல்லது இலங்கையின் வணிக நலன்கள் பாதிக்கப்பட்டாலோ, இலங்கை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்."

இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரி ரியர் அட்மிரல் சுதீர் பிள்ளை, "அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த மோதலைத் தொடங்கியது சட்டபூர்வமானதா அல்லது அரசியல் ரீதியாகச் சரியானதா என்பது தனித்த மற்றும் விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் போர் தொடங்கிய பிறகு, திறந்த கடலில் அமெரிக்காவின் எதிரி போர் கப்பல் (இரான்) இருந்தால் அது ஒரு சட்டபூர்வமான ராணுவ இலக்காக கருதப்படும்'' என்றார்.

சர்வதேச கடற்படை ஆய்வு 2026-இன் போது வங்காள விரிகுடாவில் இரானியக் கப்பல் டெனா.

பட மூலாதாரம்,AP

படக்குறிப்பு,இரானியக் கப்பல் டெனா

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் வரைபடத்தின்படியும், மார்ச் 4 அன்று ஜெனரல் டான் கேன் அளித்த தகவலின்படியும், 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' கப்பல் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.

பிப்ரவரி தொடக்கத்திலிருந்தே இரான் சுற்றியுள்ள பகுதிகளில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரையை ஒட்டிய அரபிக் கடலிலும் காணப்பட்டன.

அமெரிக்கக் கடற்படை தனது துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

பிப்ரவரி 28 அன்று இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தவிர வளைகுடா நாடுகளையும் குறிவைத்ததிலிருந்து இந்தத் தாக்குதல்களின் தொடர்ச்சி காணப்படுவதாக எங்களுடன் பேசிய நிபுணர்கள் கூறுகின்றனர். இலங்கை அருகே நடந்ததையும் அந்தச் சூழலிலேயே பார்க்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

இந்தத் தாக்குதல் குறித்து இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதையும், அமெரிக்கா தான் எடுத்த இந்த நடவடிக்கைக்காகப் வருத்தப்படும் என்று அவர் கூறியுள்ளதையும் புரிந்துகொள்வது அவசியமாகும்.

அந்தக் கப்பலைத் தாக்குதலிலிருந்து காக்க இந்தியா சட்டப்பூர்வமாக என்ன செய்திருக்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அந்தக் கப்பலைத் தாக்குதலிலிருந்து காக்க இந்தியா சட்டப்பூர்வமாக என்ன செய்திருக்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.

இந்தியா என்ன செய்திருக்க முடியும்?

இரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கையுடன் இணைந்து தானும் பல உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இந்தியக் கடற்படை மார்ச் 5 அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அட்மிரல் சுதீர் பிள்ளை கருத்தின்படி, இந்தச் சூழலில் இந்தியா அந்தக் கப்பலைத் தாக்குதலிலிருந்து காக்கச் சட்டப்பூர்வமாக எதையும் செய்திருக்க முடியாது. ஏனெனில் அப்படிச் செய்திருந்தால் இந்தியாவே இந்த மோதலில் ஒரு தரப்பாகக் கருதப்பட்டிருக்கும்.

"அந்தக் கப்பல் இந்தியப் பிராந்திய கடல் எல்லைக்குள் அல்லது இந்தியத் துறைமுகத்தில் இருந்திருந்தால், இந்தியாவின் நடுநிலைத்தன்மை காரணமாக அதற்குப் பாதுகாப்பு கிடைத்திருக்கும், மேலும் எந்தவொரு தரப்பும் அங்குத் தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்காது.

ஆனால் கப்பல் நமது எல்லைக்குள்ளும் இல்லை, நமது துறைமுகத்திலும் இல்லை எனும் போது, கடற்படை போர் விதிகளின்படி போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் அதை ஒரு ராணுவ இலக்காகக் கருதலாம். இந்தியா அந்தக் கப்பலுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருந்தால், அது மோதலில் இந்தியா ஒரு பக்கம் சேருவதாகப் பார்க்கப்பட்டிருக்கும்."

நாங்கள் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் நடந்த கடற்ப்படை பயிற்சிக்குப் பிறகு, அந்தப் போர்க்கப்பலின் பாதுகாப்பு என்பது அந்த நாடு மற்றும் அந்தக் கப்பலின் சொந்தப் பொறுப்பாகும்.

தூதரக ரீதியாக இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கிறது மற்றும் இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மூழ்கடிக்கப்பட்ட இரான் போர்க்கப்பல் - இந்தியா என்ன செய்திருக்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவுக்கு விருந்தாளிகளாக போனவர்களை இக்கட்டான தருணத்தில் வெளியேற்றி

நல்லபிள்ளை பட்டம் எடுக்க அமெரிக்காவிடமும் போட்டுக் கொடுத்துள்ளது.

முதுகில் குத்த இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்கணும்.

இதனாலேயே இந்திய கப்பல் தீப்பற்றி எரிகிறது.

ஈரானின் அறிக்கையிலும்

ருசியா சீனா பாகிஸ்தான் கப்பல்கள் மட்டுமே ஜலசந்தி ஊடாக பயணிக்கலாம் என்கிறார்கள்.

ஈரானிய கப்பல்களை காட்டிக் கொடுத்து தனது விசுவாசத்தைக் காட்டிவிட்டது.

அமெரிக்கா இலங்கை கடலில் வைத்து தாக்கி அழித்துவிட்டு சர்வதேச கடலில் வைத்து அழித்ததாக சொல்கிறது.

அண்ணை வர வர நீங்களும் தமிழ் ஆய்வாளர்கள் போல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  1. இந்தியா போ என்று சொன்னதாய் எந்த தகவலும் இல்லை. விசாகபட்டினத்தில் இருந்து கொச்சிக்கு மாறும் போதே அடி விழுந்ததாக சிலர் சொல்கிறனர். இப்போ இரெண்டாம் கப்பல் இலங்கையிடம் சரண் அடைந்தது போல் இந்த கப்பலும் இந்தியாவிடம் சரண் அடைந்திருந்தால், இந்தியா சர்வதேச சட்டத்துக்கு அமைய கப்பலையும், மாலுமிகளையும் intern பண்ணி இருக்கும். போர்காலத்தில் நடுநிலை நாடுகள் கப்பல்கள் விடயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என சட்டம் நன்றாக விபரிக்கிறது.

  2. இந்தியாவுக்கும் எண்ணை கப்பல் போகலாம் என ஈரான் கூறியுள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கடல் சட்டங்கள், நாடுகள் இடையான அணுகுமுறை பற்றி அறியாமல் பலர் இந்தியாவை காட்டி கொடுத்துட்டான் பாவி ரேஞ்சில் எழுத, வீடியோ போட்ட படி உள்ளார்கள்.

ஆனால் IRIS Lavan என்ற இன்னொரு ஈரானிய கப்பல் இலங்கையில் 2ம் கப்பல் சரணடைந்தது போல் இந்தியாவிடம் சரண் அடைந்து கொச்சியில் நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

அண்ணை வர வர நீங்களும் தமிழ் ஆய்வாளர்கள் போல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

எங்களில் ஒராள் இப்படி முன்னுக்கு வந்து விடக்கூடாதே!🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.