Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2026 at 01:29, குமாரசாமி said:

பலஸ்தீனமண் கறையான் அரித்துக்கொண்டு போவது போல் அரிக்கப்படுகின்றது. இது உங்களுக்கு உறுத்தவில்லையா?

மறுபடியும் அதே மரக் கேள்வி.

இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதுதான் தனது ஒரே நோக்கம் என்று ஈரான் சொல்கிறது, ஆனால் வத்திக்கானுக்கு அப்படி எந்த நாட்டையும் அழிக்கும் நோக்கம் இல்லையென்று நான் கூறினால், பலஸ்த்தீனம் அரிக்கப்படுவது எனது கண்களுக்குத் தெரியவில்லையா என்று கேட்கிறீர்கள். உங்களால் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லையென்றால் விட்டு விடுங்கள். பலஸ்த்தீனம் பற்றி வேறு ஒரு திரியில் நீட்டி விளக்கலாம்.

On 11/3/2026 at 01:29, குமாரசாமி said:

வத்திக்கானில் இருந்து மாதா மாதம் சம்பளமாக உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு போய்க்கொண்டிருக்கின்றது. அதை விட இதர கிறிஸ்தவ அமைப்புகளும் பணம் அனுப்பிய வண்ணமே இருக்கின்றன.

ஆக, வத்திக்கான் கிறீஸ்த்தவப் பயங்கரவாதிகளுக்கு மாதா மாதம் பணம் அனுப்பி அயலில் உள்ள நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி, அந்நாடுகளை உலக வரைபடத்திலிருந்து நீக்கக் கோரி உசுப்பேற்றி வருகிறது என்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு உறுதியாகச் சொல்வதால் அது உண்மையாக இருக்கலாம், ஆகவே தயவுசெய்து வத்திக்கான் பணம் அனுப்பி, அயல் நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் நாடுகளை இங்கே பட்டியலிட்டு விடுங்கள். இங்குள்ள அனைவருக்கும் அது பேருதவியாக இருக்கும்.

  • Replies 66
  • Views 2.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    இப்ப நடக்கிற சண்டையில ஒரு குருவியையும் நம்பேலாது கண்டியளோ..... ஈரானும் எல்லாத்திலையும் குண்டை போட்டுட்டு சாட்டுக்கு மன்னிப்பு கேக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் அரேபிகளை தூண்டி விடுறதுக்காக ஆங்காங்கே க

  • ஏன் என்றால் சிரியாவில் அமெரிக்கா இஸ்ரேல் நேரடியாக இறங்கவில்லை. யாழ்களத்திலும் நிகர் இப்படி இருக்கிறார்கள். அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் ஏதும் செய்தால் மட்டுமே அவர்களின் ரேடாரில் புலப்படும்😂.

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    இந்தியா,பாகிஸ்தான் போரில் கற்றுக் கொண்டிருப்பார்களோ? பாராளுமன்ற உறுப்பினர் என்றால் கடிதம் எழுத வேண்டும் என்ற எழுதாத விதி.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2026 at 01:29, குமாரசாமி said:

நேற்றைய செய்தியில் அதிக ஆயுத உற்பத்தியிலும் விற்பனையிலும் முக்கிய நாடுகள் பட்டியலில்.....

1)அமெரிக்கா

2)பிரான்ஸ்

2)ஜேர்மனி

என முன்னணி நாடுகள் என அறிவிக்கப்பட்டது.எதற்காக இவ்வளவு ஆயுத உற்பத்தியும் விற்பனையும்?

மக்கள் மீது பூ தூவவா?

மறுபடியும் அதே மாடும் மரமும். வத்திக்கான் பற்றிப் பேசினால், அமெரிக்காவும், பிரான்ஸும், ஜேர்மனியும் ஆயுதம் விற்கின்றனவே என்கிறீர்கள். உங்களுக்கு உண்மையாகவே நான் கேட்ட கேள்விகள் புரியவில்லையா, அல்லது உங்களின் பதில்களுக்கு ஏற்ற வகையில் எனது கேள்விகள் அமையவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. சரி, பரவாயில்லை, நீங்கள் கூறுவது இதுவாகத்தான் இருக்கும் என்று குத்துமதிப்பில் பதிலளிக்கிறேன்.

வத்திகான் என்பது தனியான ஒரு நாடு. கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசரும் அவரது உதவிக் குருக்களும் வசிக்கும் ஒரு சிறிய நாடு. இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்திருக்கும் வெறும் 0.5 சதுரக் கிலோமீட்டரே கொண்ட சின்னஞ்சிறிய இறையாண்மையுள்ள ஒரு நாடு. அவரது பாதுகாப்பிற்கென்று ஒரு சிறிய பொலீஸ் படையினை அவர்கள் வைத்திருக்கிறார்கள். வத்திக்கான் ஆயுதங்களைத் தயார் செய்வதில்லை. அவற்றை ஏற்றுமதி செய்வதில்லை. ஆயுதங்களையோ குண்டுகளையோ மக்கள் மீது தூவுவதும் இல்லை.

நீங்கள் வத்திகான் நாடு, அமெரிக்கா ஜேர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளை ஆள்வதாக நினைத்தால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. உண்மை என்னவென்றால் இந்நாடுகளை வத்திக்கான் கட்டுப்படுத்துவதுமில்லை, இந்நாடுகள் வத்திக்கானைக் கட்டுப்படுத்துவதுமில்லை.

On 11/3/2026 at 01:29, குமாரசாமி said:

சாத்தான்கள் பற்றி கிறிஸ்தவமும் அதிகமாக பேசுகின்றதல்லவா?

***

ஈரானிய அடக்குமுறையாளர்கள் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்றும், இஸ்ரேலினை சின்னச் சாத்தான் என்றும் அழைப்பது பற்றியே எனது கேள்வி அமைந்திருந்தது. அதாவது ஈரான் இப்படி அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அழைப்பது போல வத்திக்கானும் எந்த நாட்டையாவது "சாத்தான்" என்று அழைக்கிறதா என்று கேட்டால், "சாத்தான் எனும் சொல் கிறீஸ்த்தவத்தில் இருக்கிறது" என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு உண்மையாகவே நான் கேட்டது விளங்கவில்லை போலும், பரவாயில்லை, அதிகம் சிரமப்படாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2026 at 01:29, குமாரசாமி said:

அது எந்த நாட்டில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி அடக்கி வருகிறது?

தவறுதான். இருந்தாலும் முஸ்லீம் நாடுகளில் இருக்கும் பெரிய பிரச்சனை. தனியே ஈரான் மீது பழியை போட முடியாது.

உங்களுக்கு எனது கேள்விகள் புரியவில்லை என்பது உறுதியாகிறது.

ஈரான் பெண்களை அடக்கியாள்வது போல வத்திகானும் பெண்களை அடக்கியாள்கிறதா என்று கேட்டால், "ஈரானின் மீது மட்டுமே பழியைப் போட முடியாது" என்கிறீர்கள். எனது கேள்விக்குப் பதில் இதுவல்லவே? ஒன்றில், "ஆம் , வத்திகானும் பெண்களை அடிமைப்படுத்துகிறது", அல்லது, "இல்லை, வத்திக்கான் பெண்களை அடிமைப்படுத்தவில்லை" என்றுதான் உங்கள் பதில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், வழமைபோல் இங்கும் குழப்பி விட்டிருக்கிறீர்கள்.

On 11/3/2026 at 01:29, குமாரசாமி said:

அது எந்த நாட்டில் தனது குடிமக்களையே கொடுங்கோலாட்சிக்கெதிராக கோஷமிட்டதற்காக பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்து வருகிறது?

பிழைகள் உண்டு. இதற்கு முன்னுதாரணமாக அமைந்தவர்கள் சுரண்டல் மன்னர்களாகிய மேற்குலகினர் மட்டுமே.

மறுபடியும் அதே பித்தலாட்டமான பதில். ஈரானைப் போல் வத்திக்கானும் தனது நாட்டு மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளி கொடுங்கோலாட்சி புரிகிறதா என்று கேட்டால், "மேற்குத்தான் இதெல்லாவற்றையும் செய்கிறது" என்று பிதற்றுகிறீர்கள்.

ஒன்று செய்யுங்கள். முதலில் நான் உங்களிடம் என்ன கேட்டேன் என்பதை கவனமாகப் படியுங்கள். பின்னர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள். முடியவில்லையென்றால், சிரமத்தைத் தவிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இது உங்களிடம் நான் அவதானித்த ஒரு பிரச்சினை: Deduction என்பது சுத்தமாகக் கிடையாது. அத்தோடு ஒரு விடயத்தை ஒரு துவாரத்தினூடாக (tunnel vision) மட்டும் பார்த்து , அப்படியே நம்பி, இங்கே கொண்டு வந்து ஒட்டுவதை மட்டும் செய்வீர்கள்😂.

2015 JCOPA ஒப்பந்தப் படி மருத்துவத் தேவைகளுக்கான யுரேனியச் செறிவாக்கல் உதவிகள் (அது 60% வீதமாக இருக்க வேண்டியதில்லை என்பது வேறு விடயம்) ரஷ்யா உட்பட்ட சில ஐரோப்பிய நாடுகளால் வழங்கப் படும். எனவே, மருத்துவத் தேவைகளுக்காக ஈரான் செறிவாக்கவில்லை.

ஈரானிடம் அணுசக்திக் கடற்கலம் ஒன்று கூட இல்லை, அவை தயாரிப்பு நிலையிலும் இல்லை. எனவே அதற்கும் 60% செறிவாக்கல் பயன்படவில்லை.

இந்தத் தகவல்களைத் தொடர்பு படுத்தி நிலைமையைப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லையா, அல்லது புரிந்து கொண்டால் உங்கள் தரப்பான ஈரானுக்கு ஆதரவாக எழுத இயலாது என்பதால் தவிர்க்கிறீர்களா என்பது உங்களுக்கே வெளிச்சம்.

இந்த நிலையில், ஓட்டையினூடாகப் பார்ர்க்காமல் எல்லா விடயங்களையும் கணக்கிலெடுத்து இங்கே பகிர்வோருக்கு அட்வைஸ் மழை வேற😂!

ஈரான் மட்டுமல்ல இன்னும் பிற நாடுகளும் Nuclear threshold states எனும் நிலையில் அணு நீர் மூழ்கி இல்லாமலே இருக்கின்றன, உண்மையில் அணுவாயுதம் செய்வதற்கு ஈரான் விரும்பியிருந்தால் 2021 இலேயே 60% யுரேனிய செறிவூட்டல் தகமை கொண்ட நாடு எதற்காக 5 வருடங்கள் பொறுக்க வேண்டும்?

இங்கு நீங்கள் ஈரான் அணுவாயுதம்தான் செய்யப்போக்கிறது என எதனை கொண்டு கருதுகிறீர்கள்?

உலகிலே ஈரான் போல வேறு நாடுகள் இருக்கும் போது ஈரான் மட்டும் அணுவாயுதத்தினை தயாரிக்க போவதாக எவ்வாறு கண்டுபிடித்தீர்கள் (IAEA கூட ஆதாரம் எதுவும் இல்லை எனும் நிலையில்?)

இந்த 60% செறிவூட்டல் தகமை ஈரானுக்கு 5 வருடங்களுக்கு முன்னரே இருந்துள்ள நிலையில் இது வரை அது எந்த அணுகுண்டினையும் செய்யவில்லையே?

உங்களது சந்தோசத்திற்காக ஈரான் அணுகுண்டிற்காகவே 60% யுரேனிய செறிவூட்டல் செய்துள்ளது என கூறி சம்பாசனையினை நிறுத்த நான் தயாராகவே உள்ளேன் ஆனால் கேள்விகள் புதிய புரிதல்களை உருவாக்கும், எனது நோக்கம் யாருடனும் தேவையற்று முரண்படுவதில்லை, ஆனால் ஆரோக்கியமான சம்பாசனைகள் எனது புரிதலையும் மற்றவர்களது புரிதலையும் அதிகரிக்கும், உங்களுக்கு தர்ம சங்கடத்தினை ஏற்படுத்துவது எனது உண்மையான நோக்கம் அல்ல.

நீங்கள் விரும்பினால் ஈரான் அணுகுண்டு தயாரிப்பதற்காகவே 60% செறிவூட்டல் யுரேனியத்தினை தயாரித்த காரணத்தினை வெளிக்கொணரலாம் (நீங்கள் இரகசியமாக வைத்திருக்கும் காரணத்தினை), இல்லாவிட்ட்டால் சந்தேகத்தினடிப்படையில் என்னை போன்றவர்கள் இதனை ஒரு சதிக்கோட்பாடாகவே நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

😂

கிறிஸ்மஸ் தாத்தா….

மூட்டை மூட்டையாக ரஸ்ய ஆதரவு கட்டுரைகளை அவிழ்த்து விடுவார் என ஆவலோடு எதிர்பார்க்கும் குழந்தை நான்😂.

நான்மட்டும் அல்ல, யாழ்களத்தில் கருத்து எழுதும் இன்னும் பலரும் இப்படியான குழந்தைகளே😂.

ஒரு விசயம் சொல்லட்டுமா…

மேலே உள்ளவருக்கும், யாழில் யூடியூப் இணைப்போருக்கும் முன்பே சொன்னதுதான்…

Keep an eye on your engagement figures….

இது கருத்துக்களம் - சொந்த சரக்குத்தான் - விற்பனை ஆகும்.

கூகிள் டிரான்சிலேடரின் கொச்சை தமிழில், பந்தியில் கடைசி வரிக்கு வரும் போது முதல் வரியில் என்ன வாசித்தோம் என்பதே மறந்து போகும் அளவுக்கு எழுத்து நடை உள்ள கட்டுரைகளை எவரும் வாசிக்க போவதில்லை. தலையங்கத்தை வாசித்து விட்டு போவார்கள்.

சொல்ல வேண்டியது என் கடன்…

இல்லை…

கதவை தட்டும் யெஹொவா சாட்சிகள் போல - நற்போதனை செய்து, மக்களுக்கு ரஸ்யாவின் அருமை பெருமைகளை புகட்டியே ஆவேன் என்றாலும் ஓக்கேதான்.

இந்த கட்டுரைகள் ரியூட்டர், பைனான்சியல் ரைம்ஸ் போன்ற மேற்கு நாட்டு பத்திரிகளில் வந்த கட்டுரையே! , மற்றவர்கள் வாசிக்க மாட்டார்கள் என கூறுகிறீர்கள் (ஏனென்றால் அது இரஸ்சிய சார்பாக இருப்பதாலா), இந்த பத்திரிகைகளுக்கு இந்த விடயம் புரியாமல் இருக்கின்றது.

தகவல் தடைகள் மிக மோசமான அழிவுகளுக்கு வழிவகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, vasee said:

ஆம் இந்த பத்திரிகைகளில் சகல கோணங்களிலும் கட்டுரை வரும் இல்லையா வசி….(நீங்கள் எப்போ மேற்கு ஊடகங்களை நம்ப ஆரம்பித்தீர்கள்😂)

ஆனால்….ரஸ்ய ஆதரவு கட்டுரைகளை மட்டும்தான் நாம் தேடி, தேடி இணைப்போம் இல்லையா😂.

இதன் பெயர் தகவல் வழங்கல் இல்லை வசி….பிரச்சாரம்.

செய்வதைத்தான் செய்கிறீர்கள்…அண்மையில் ஒரு உதாரணத்தில் சுட்டி காட்டியது போல் “டமண, கரண மரண” என்பது போல் கூகிள் டிரான்சிலேட்களை வெட்டி அப்படியே ஒட்டாமல்…கொஞ்சம் சிரத்தை எடுத்து அதை புரியும் தமிழில் மொழி பெயர்த்தாவது ஒட்டுங்கள்.

இல்லை என்றாலும் உங்கள் இஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

செய்வதைத்தான் செய்கிறீர்கள்…அண்மையில் ஒரு உதாரணத்தில் சுட்டி காட்டியது போல் “டமண, கரண மரண” என்பது போல் கூகிள் டிரான்சிலேட்களை வெட்டி அப்படியே ஒட்டாமல்…கொஞ்சம் சிரத்தை எடுத்து அதை புரியும் தமிழில் மொழி பெயர்த்தாவது ஒட்டுங்கள்.

கூகிள் மொழி பெயர்ப்பு சிலசமயம் அதன் அர்த்தத்தினைத்தான் தவறாக பிரதிபலிக்கும், ஆனால் நீங்கள் கூறும் தமிழின் மெல்லின எழுத்து பிரச்சினை உங்கள் போனில் உள்ள உலாவியின் தவற்றாகவும் இருக்கலாம், கூகிள் மொழி மாற்றி எனது கட்டுரை மட்டுமல்ல இங்குள்ள பெரும்பாலான வெளிநாட்டு ஊடகங்களின் தமிழ் வடிவத்திலும் கருத்து பிறழ்வு காணப்படுகிறது.

7 hours ago, ஏராளன் said:

"ஒவ்வொரு ஆட்சிமுறையும் இறுதியில் முடிவுக்கு வரும். உண்மையான கேள்வி அதன் காலம்தான்." என்று கூறும் அவர், காமனெயியின் மரணம் இந்த ஆட்சிமுறைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்று குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பெரும்பாலான கட்டுரைகளிலும் காணப்படுகிறது.

சர்ச்சைக்குரிய கட்டுரைகளை இணைப்பதன் இன்னொரு நோக்கம் கள வாசகர்கள் தொடர்ச்சியாக இணைந்திருக்க வைத்திருக்கும், அந்த கட்டுரைகள் தொடர்பிலான கருத்துக்களை வைக்க உதவும் என கருதுவதால்.

உங்களுக்கு அந்த கட்டுரை பாதிப்புக்களை ஏற்படுத்திகின்ற நிலையில் கட்டுரைகளை இணைக்காமல் விடுகிறேன் (பொதுவாக வேலையால் வந்த பின் குழந்தைகளை பாடசாலைக்கு கூட்டி செல்லும் இடைவேளைகளில் இப்பதிவுகளை பதிவதும் கொஞ்சம் கடினம்தான்).

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, vasee said:

கூகிள் மொழி பெயர்ப்பு சிலசமயம் அதன் அர்த்தத்தினைத்தான் தவறாக பிரதிபலிக்கும், ஆனால் நீங்கள் கூறும் தமிழின் மெல்லின எழுத்து பிரச்சினை உங்கள் போனில் உள்ள உலாவியின் தவற்றாகவும் இருக்கலாம், கூகிள் மொழி மாற்றி எனது கட்டுரை மட்டுமல்ல இங்குள்ள பெரும்பாலான வெளிநாட்டு ஊடகங்களின் தமிழ் வடிவத்திலும் கருத்து பிறழ்வு காணப்படுகிறது.

ம்ம்ம் ஐபோனில்தான் பிழை…😂

மெல்லின வல்லின குளறுபடி அல்ல, அண்மையில் நீங்கள் ஒட்டிய ஒரு பதிவில்…அர்த்தமே இல்லாத எழுத்துக்கள் சேர்ந்து பல சொற்களாகி ஒரு வசனம் அமைந்திருந்தது.

நானும் இது என்ன மொழி என கேட்க நீங்களும் நகைசுவையாக பதில் சொன்னீர்கள்.

இது மட்டும் அல்ல, நீங்கள் இணைக்கும் பல கூகிள் மொழிமாற்று கட்டுரைகளில் இப்படியான ஒரு செயற்கைதனமான எழுத்து அதனால் ஏற்படும் கருத்து சிதைவு, மயக்கம் அதிகம் இருக்கும்.

சத்தியமாக இவற்றை எவரும் பொறுமையாக வாசிப்பார்கள் என நான் எண்ணவில்லை. விளையாட்டு திரிகளிலும், வாணிப திரியிலும் கூட இதுவே நிலமை என்பது என் ஊகம்.

நீங்கள் கூட கட்டுரையை ஆங்கிலத்தில் வாசித்து விளங்கிய பின் அதை தமிழில் மொழி பெயர்த்து ஒட்டுகிறீர்கள் என எண்ணுகிறேன்.

ஒரு சுயபரிசோதனை செய்து பாருங்கள்.

கட்டுரை ஒன்றை ஆங்கிலத்தில் அன்றி, தமிழில் கூகிள் மொழி மாற்றி பின் அதை படித்து பாருங்கள். நான் சொல்வது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, vasee said:

உங்களுக்கு அந்த கட்டுரை பாதிப்புக்களை ஏற்படுத்திகின்ற நிலையில் கட்டுரைகளை இணைக்காமல் விடுகிறேன்

எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை வசி.

நீங்கள் இப்படி இணைத்த எந்த கட்டுரைக்காவது நான் எதிர்வினை ஆற்றி உள்ளேனா?

இல்லை, அதை நான் தலைப்புக்கு அப்பால் படிப்பதே இல்லை. சிலதை படிக்க முனைந்து தலை சுத்தியதே மிச்சம்.

இந்த திரியில் கூட உங்கள் கருத்துக்குத்தான் பதில் எழுதினேன் - கட்டுரைக்கு அல்ல.

பிகு

சிலவேளை பலர் உங்கள் மொழிமாற்ற கட்டுரைகளை வாசித்து பயன் பெறக்கூடும். தனியே நான் ஒருவன் கூறியதை வைத்து முடிவெடுக்க வேண்டாம்.

நீங்கள் கருத்து எழுதினால் நான் ஆமோதித்தோ, எதிர்த்தோ வழமை போல் எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

மறுபடியும் அதே மரக் கேள்வி.

இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதுதான் தனது ஒரே நோக்கம் என்று ஈரான் சொல்கிறது

ஏன் ஈரான் அப்படி சொல்கிறது! இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதைப்போல் அகன்ற இஸ்ரேலை உருவாக்குகிறேனென்று அருகில் உள்ள மற்றய நாடுகளையும் சுரண்டாமல் இருப்பதற்காகவே!

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்கெதிராக 135 நாடுகள் ஐநா பாதுகாப்புச்சபையில் பிராந்திய போர் தூண்டலுக்கெதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது, இதன் மூலம் ஐநாவின் 51 வது சாசனத்திற்கமைய ஈரான் தாக்குதலால் பாதிக்கப்படும் நாடுகள் பதில் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது.

இந்த போரினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஈரான் தரப்பிலிருந்து 3 கோரிக்கைகள் உள்ளது.

  1. ஈரானின் இறையாண்மை சட்ட ரீதியாக மதிக்கப்படல்.

  2. எதிர்வரும் காலத்தில் தன் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் (உக்கிரேனிற்கான பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய தீவிர நிலைப்பாடு கொண்ட ஐரோப்பிய / மேற்கு சமூகத்தினை இராஜதந்திர ரீதியான அணுகல் ).

  3. போர் இழப்பீடு (இதுவும் உக்கிரேன் நிலை போன்ற).

அதே சமயம் வலிந்து தாக்கும் அமெரிக்க இஸ்ரேல் தரப்பு ஒரு ஆட்சி மாற்றம் கோரி நிற்கின்றது (ஒரு தரை வழி போரில்லாமல் அது சாத்தியப்படுமா?)

இதனடிப்படையில் பார்ர்கும் போது போர் நீண்டு செல்ல வாய்ப்புண்டு, பெற்றோல் விலை பல மடங்காக அதிகரிக்கலாம் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, vasee said:

649831471_1538740690954836_2447462675036

ஐக்கிய நாடுகள் சபை… எப்போதும், அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட நாடுகளின் பக்கமே நிற்கும்.

இந்தச் சபை இதுவரை… பாதிக்கப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க மக்களுக்கு நீதி வழங்கியதே இல்லை. இதனை இழுத்து மூடி விடுவது நல்லது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

ஏன் ஈரான் அப்படி சொல்கிறது! இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதைப்போல் அகன்ற இஸ்ரேலை உருவாக்குகிறேனென்று அருகில் உள்ள மற்றய நாடுகளையும் சுரண்டாமல் இருப்பதற்காகவே!

ஒரு நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழிப்போம் என்று சொல்வதற்கும், அதை நடைமுறையில் சாதிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. இங்கே ஈரான் செய்வது இரண்டாவது வகை, அதாவது இஸ்ரேலினை முழுவதுமாக அழித்தல்.

ஆகவே, தன்னை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டியிருக்கும் விரோத அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு நாடு நிச்சயம் தனது பாதுகாப்புக் குறித்து அதீத கவனம் செலுத்தும், தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்தும் உச்சத்தில் வைத்திருக்கும், தனது எல்லைகளுக்கு அப்பால் எதிரிகளை தடுத்து நிறுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்யும். அதைத்தான் இஸ்ரேல் இன்று செய்கிறது.

பலஸ்த்தீனம் என்பது இஸ்ரேல் எனும் நாட்டிற்குள் ஆக்கிரமிப்பின் மூலம் உட்பிரவேசித்த‌ அரேபியர்களின் வழித்தோன்றல்களால் வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு பகுதி. பலஸ்த்தீனர்களுக்கு இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டே வந்தன. இரு தேச யோசனை முதன்முதலாக 1947 ஆம் (1) ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் முன்வைக்கப்பட்டபோது பலஸ்த்தீனிய அரபுத் தலைமை அதனை முற்றாக நிராகரித்தது. பின்னர் 2000 ஆண்டில் (2) அமெரிக்காவின் காம்ப் டேவிட் பேச்சுக்களின்போது இஸ்ரேலின் பிரதமர் இகுட் பராக்கினால் பெரும்பாலான மேற்குக்கரை மற்றும் காஸா உட்பட்ட பகுதியைப் பலஸ்த்தீன தேசம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜெருசலேத்தை இரு தேசங்களும் பொதுவான பகுதியாகப் பயன்படுத்தலாம் என்றும் பிரகடனம் செய்தபோது அன்றைய பலஸ்த்தீனத் தலைவர் யாசீர் அரபாத் அதனை நிராகரித்தார். பின்னர் 2008 இல் (3) இஸ்ரேலியப் பிரதமர் இகுட் ஒல்மேர்ட் 75 வீதமான மேற்குக்கரையினையும், கிழக்கு ஜெருசலேத்தின் பல பகுதிகளையும், இதற்கு மேலதிகமாக‌ பலஸ்த்தீனர்கள் இழக்கும் பகுதிகளுக்குப் பதிலாக இஸ்ரேலின் ஏனைய பகுதிகளில் மாற்று நிலப்பரப்பினைத் தருவதாகவும் அறிவித்தபோது அன்றைய பலஸ்த்தீன ஜனாதிபதி மகுமூட் அப்பாஸ் அதனை நிராகரித்தார்.

பலஸ்த்தீனர்கள் 1993 ஆம் ஆண்டிலிருந்து இரு தேசக் கொள்கைக்கு ஆதரவானவர்கள் என்று வெளியுலகில் அவ்வப்போது காட்டி வந்தாலும்கூட, இஸ்ரேல் அதனை வெளிப்படையாக தர முன்வந்தபோது அகதிகள், இறையாண்மை, எல்லைகள் என்று சாட்டுக்களைக் கூறி நிராகரித்தே வந்திருக்கின்றார்கள்.

ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயங்கரவாத நடவ‌டிக்கைகளால் இஸ்ரேலின் அணுகுமுறையும் இறுக்கமடையத் தொடங்கியது. குறிப்பாக 2024 ஐப்பசி 7 ஆம் திகதியன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் இரு தேசக் கொள்கையென்பதை இஸ்ரேல் முற்றாகக் கைவிட்டு விட்டது.

இன்று தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல இஸ்ரேல் தயாராகியிருப்பதாகவே தெரிகிறது.

இரு தேசக் கொள்கையினை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலுடன் ஒரு நாட்டில் சமத்துவமாக வாழ்வதை விரும்பாது, ஆயுதம் மூலம் இஸ்ரேலினை அழித்து வெற்றி காணலாம் என்கிற மமதையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட பலஸ்த்தீனர்களின் (இல்லாத) தேசம் அரிக்கப்பட்டு வருவது எனக்கு வியப்பளிக்கவில்லை.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Eppothum Thamizhan said:

ஏன் ஈரான் அப்படி சொல்கிறது! இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதைப்போல் அகன்ற இஸ்ரேலை உருவாக்குகிறேனென்று அருகில் உள்ள மற்றய நாடுகளையும் சுரண்டாமல் இருப்பதற்காகவே!

"அகண்ட இஸ்ரேல் உருவாக்க அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும்" என்று அதி வலதுசாரி இஸ்ரேல் கட்சிகள் கூட அறிக்கை விடவில்லை. எங்கே இதை அறிந்தீர்கள் எனச் சொன்னால் நாமும் அறிந்து கொள்ளலாம்.

இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்கி, ஆக்கிரமித்து வரும் ஒரு பிரதேசம் பலஸ்தீனம். இஸ்ரேலின் தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்த வரை, பலஸ்தீனம் ஒரு அண்டை நாடு அல்ல. எனவே, குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிக்கிறார்கள். இதை சர்வதேச நாடுகள் பல ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனெனில் இது தவறான விடயம்.

அண்டை நாடுகளைப் பொறுத்த வரையில் இஸ்ரேலின் கொள்கை அது உருவானது முதல் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுத்தால், தற்போது ஈரானுக்கு நடப்பது போல சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தாக்குவார்கள். தமக்கு அச்சுறுத்தல் தராத அரபு நாடுகளை எதுவும் செய்ய மாட்டார்கள். 1967 இல் 6-நாள் யுத்தம் சிறந்த உதாரணம். எகிப்து, சிரியா, சவூதி (மறைமுகமாக) இணைந்து இஸ்ரேலைத் தாக்க, மீளத் தாக்கிய இஸ்ரேல் 6 நாட்களில் இஸ்ரேல் நாட்டின் பரப்பளவை விட 2 , 3 மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றியது. கடைசியில் எகிப்து சமாதான உடன் படிக்கை செய்தது, அதன் சினாய் நிலப்பரப்பு எகிப்திற்குத் திரும்பக் கொடுக்கப் பட்டது. சிரியா சமாதானத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை, சிரியாவிடம் இருந்து கைப்பற்றிய கோலான் குன்றுகள் இன்னும் இஸ்ரேல் வசம் தான் இருக்கின்றன.

இவ்வளவு ஏன்? இஸ்ரேல், பலஸ்தீன நாடுகள் உருவாக்கவென பிரிட்டனால் ஒதுக்கப் பட்ட நிலத்தில் இருந்து , யூத வெறுப்பாளரான சேர்ச்சில் ஒரு துண்டைப் பிரித்து ஜோர்தானை உருவாக்க உதவினார். இஸ்ரேல் உருவான போது பலஸ்தீனர்களுக்கு உதவிய ஜோர்தான், பின்னர் அவர்களுடைய குரங்குச் சேட்டைகள் பொறுக்காமல் இஸ்ரேலுடன் சமாதானம் செய்து கொண்டது. இன்று வரை மேற்குக் கரைக்கு அக்கரையில் இருக்கும் ஜோர்தானுக்கு இஸ்ரேலினால் ஒரு தொல்லையும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Eppothum Thamizhan said:

ஏன் ஈரான் அப்படி சொல்கிறது! இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதைப்போல் அகன்ற இஸ்ரேலை உருவாக்குகிறேனென்று அருகில் உள்ள மற்றய நாடுகளையும் சுரண்டாமல் இருப்பதற்காகவே!

தான் யுத்தம் மூலம் கைப்பற்றிய, கோலான் குன்றுகள் தவிர மிகுதி பல இடங்களை சிரியாவிடம், ஜோர்தான் நதியை ஓட்டிய கிழக்கு கரையை ஜோர்தானிடம், சினாய் பாலை வெளியை எகிப்திடமும் இஸ்ரேல் ஒப்பந்தங்கள் மூலம் தானாகவே மீள கொடுத்துள்ளது. தெற்கு லெபனானை கூட சில தடவை பிடித்து மீளக்கொடுத்துள்ளது.

அப்படி இருக்க இஸ்ரேல் அண்டை நாடுகளை பிடித்து அகண்ட இஸ்ரேல் அமைக்கும் என்பது சரியாக படவில்லை.

மேற்குகரை, ஏனைய பலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிப்பது உண்மை.

ஆனால் உலக யுத்த முடிவில் உருவான Palestinian Protectorate இன் எல்லைகளுக்குப்பால் இஸ்ரேல் காலை அகட்ட விரும்புகிறது என்பதற்கு அதிக ஆதாரம் இல்லை.

9 hours ago, vasee said:

ஈரானுக்கெதிராக 135 நாடுகள் ஐநா பாதுகாப்புச்சபையில் பிராந்திய போர் தூண்டலுக்கெதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது, இதன் மூலம் ஐநாவின் 51 வது சாசனத்திற்கமைய ஈரான் தாக்குதலால் பாதிக்கப்படும் நாடுகள் பதில் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது.

இந்த போரினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஈரான் தரப்பிலிருந்து 3 கோரிக்கைகள் உள்ளது.

  1. ஈரானின் இறையாண்மை சட்ட ரீதியாக மதிக்கப்படல்.

  2. எதிர்வரும் காலத்தில் தன் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் (உக்கிரேனிற்கான பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய தீவிர நிலைப்பாடு கொண்ட ஐரோப்பிய / மேற்கு சமூகத்தினை இராஜதந்திர ரீதியான அணுகல் ).

  3. போர் இழப்பீடு (இதுவும் உக்கிரேன் நிலை போன்ற).

அதே சமயம் வலிந்து தாக்கும் அமெரிக்க இஸ்ரேல் தரப்பு ஒரு ஆட்சி மாற்றம் கோரி நிற்கின்றது (ஒரு தரை வழி போரில்லாமல் அது சாத்தியப்படுமா?)

இதனடிப்படையில் பார்ர்கும் போது போர் நீண்டு செல்ல வாய்ப்புண்டு, பெற்றோல் விலை பல மடங்காக அதிகரிக்கலாம் என கருதுகிறேன்.

  1. சூப்ரீம் லீடரின் பேச்சு என ஒண்டை சில மணி நேரம் முன்பு ஈரான் வாசித்தது. அமெரிக்க படை தளங்கள் அகலும் வரை போர் தொடருமாம்😂. ஹர்மூஸ் மூடலும் தொடருமாம். பண்ணியில் பண்ணி பாருங்கோவன்😂.

  2. ஈரானிய பெசீஜ் எனப்படும் மக்களை துன்புறுத்தும் உள்ளூர் பொலிஸ் காவாலிகளின் வீதி தடைகள் மீது இஸ்ரேல் நேற்றிரவு முதல் டிரோன் தாக்குதல் நடத்துகிறது. இந்த யுத்தம், காலாட்படைகளுக்கு பதில் தானியங்கிகள் இறங்கிய முதல் யுத்தம் என பதிவாகும் என நினைக்கிறேன்.

  3. இப்போதைக்கு எண்ணை விலைக்கு ஏறுமுகம் என்பதை ஏற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஒரு நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழிப்போம் என்று சொல்வதற்கும், அதை நடைமுறையில் சாதிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. இங்கே ஈரான் செய்வது இரண்டாவது வகை, அதாவது இஸ்ரேலினை முழுவதுமாக அழித்தல்.

ஆகவே, தன்னை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டியிருக்கும் விரோத அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு நாடு நிச்சயம் தனது பாதுகாப்புக் குறித்து அதீத கவனம் செலுத்தும், தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்தும் உச்சத்தில் வைத்திருக்கும், தனது எல்லைகளுக்கு அப்பால் எதிரிகளை தடுத்து நிறுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்யும். அதைத்தான் இஸ்ரேல் இன்று செய்கிறது.

பலஸ்த்தீனம் என்பது இஸ்ரேல் எனும் நாட்டிற்குள் ஆக்கிரமிப்பின் மூலம் உட்பிரவேசித்த‌ அரேபியர்களின் வழித்தோன்றல்களால் வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு பகுதி. பலஸ்த்தீனர்களுக்கு இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டே வந்தன. இரு தேச யோசனை முதன்முதலாக 1947 ஆம் (1) ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் முன்வைக்கப்பட்டபோது பலஸ்த்தீனிய அரபுத் தலைமை அதனை முற்றாக நிராகரித்தது. பின்னர் 2000 ஆண்டில் (2) அமெரிக்காவின் காம்ப் டேவிட் பேச்சுக்களின்போது இஸ்ரேலின் பிரதமர் இகுட் பராக்கினால் பெரும்பாலான மேற்குக்கரை மற்றும் காஸா உட்பட்ட பகுதியைப் பலஸ்த்தீன தேசம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜெருசலேத்தை இரு தேசங்களும் பொதுவான பகுதியாகப் பயன்படுத்தலாம் என்றும் பிரகடனம் செய்தபோது அன்றைய பலஸ்த்தீனத் தலைவர் யாசீர் அரபாத் அதனை நிராகரித்தார். பின்னர் 2008 இல் (3) இஸ்ரேலியப் பிரதமர் இகுட் ஒல்மேர்ட் 75 வீதமான மேற்குக்கரையினையும், கிழக்கு ஜெருசலேத்தின் பல பகுதிகளையும், இதற்கு மேலதிகமாக‌ பலஸ்த்தீனர்கள் இழக்கும் பகுதிகளுக்குப் பதிலாக இஸ்ரேலின் ஏனைய பகுதிகளில் மாற்று நிலப்பரப்பினைத் தருவதாகவும் அறிவித்தபோது அன்றைய பலஸ்த்தீன ஜனாதிபதி மகுமூட் அப்பாஸ் அதனை நிராகரித்தார்.

பலஸ்த்தீனர்கள் 1993 ஆம் ஆண்டிலிருந்து இரு தேசக் கொள்கைக்கு ஆதரவானவர்கள் என்று வெளியுலகில் அவ்வப்போது காட்டி வந்தாலும்கூட, இஸ்ரேல் அதனை வெளிப்படையாக தர முன்வந்தபோது அகதிகள், இறையாண்மை, எல்லைகள் என்று சாட்டுக்களைக் கூறி நிராகரித்தே வந்திருக்கின்றார்கள்.

ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயங்கரவாத நடவ‌டிக்கைகளால் இஸ்ரேலின் அணுகுமுறையும் இறுக்கமடையத் தொடங்கியது. குறிப்பாக 2024 ஐப்பசி 7 ஆம் திகதியன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் இரு தேசக் கொள்கையென்பதை இஸ்ரேல் முற்றாகக் கைவிட்டு விட்டது.

இன்று தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல இஸ்ரேல் தயாராகியிருப்பதாகவே தெரிகிறது.

இரு தேசக் கொள்கையினை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலுடன் ஒரு நாட்டில் சமத்துவமாக வாழ்வதை விரும்பாது, ஆயுதம் மூலம் இஸ்ரேலினை அழித்து வெற்றி காணலாம் என்கிற மமதையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட பலஸ்த்தீனர்களின் (இல்லாத) தேசம் அரிக்கப்பட்டு வருவது எனக்கு வியப்பளிக்கவில்லை.

அருமையான வரலாற்று விளக்கம்.

தெற்காசியாவின் Temu முஸ்லிம்கள் இதை ஏற்க தயங்க காரணம் கண்மூடித்தனமாம மதப்பற்று.

எம்மை போன்ற மக்கள் கூட்டம் கூட இந்த புரிதல் இல்லாமல் இருப்பதும், சொன்னாலும் ஏற்க மறுப்பதும் ஏன் என்பதுதான் எனக்கு விளங்காத விடயம்.

8 hours ago, தமிழ் சிறி said:

649831471_1538740690954836_2447462675036

ஐக்கிய நாடுகள் சபை… எப்போதும், அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட நாடுகளின் பக்கமே நிற்கும்.

இந்தச் சபை இதுவரை… பாதிக்கப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க மக்களுக்கு நீதி வழங்கியதே இல்லை. இதனை இழுத்து மூடி விடுவது நல்லது. 😂

இங்கே முக்கியம் பெறுவது ஐநா அல்ல -மாறாக 135 அங்கத்துவ நாடுகளின் இணை அனுசரனை.

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க், அவுஸ்ரேலியாவில் இரு ஈரானிய இராஜதந்திரிகள் அசைலம் அடித்துள்ளார்களாம்.

ஈரானுக்கு உள்ளே தெஃரான் புறநகர் ஒன்றில் புரொஜ்டரில் பறக்க விடப்பட்ட இஸ்ரேல் கொடியாம்.

இது ஏ ஐ இல்லை என்கிறது க்ரொக்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.