Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல்

இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்)

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்)

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன.

இந்திய வெளியுறவு அமைசகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெர்ஸ்வால் சனிக்கிழமை இத்தகவலை அளித்தார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியாவுக்கு வரக்கூடிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன. ஷிவாலிக், நந்தா தேவி எனும் இரண்டு இந்திய கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன, அவை தற்போது இந்திய துறைமுகங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன." என்றார்.

இரு கப்பல்களிலும் தலா 46,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான எல்பிஜி எரிவாயு என, மொத்தமாக சுமார் 93,000 மெட்ரிக் டன்கள் எரிவாயு உள்ளது என அவர் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பாக வெளியுறவு துறை, பெட்ரோலிய துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த தகவலை தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா), அசீம் மஹாஜன் கூறுகையில், மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதலால் இந்தியர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார் என்றார்.

தற்போதைய சூழலில், அப்பகுதியில் இருக்கும் இந்திய அதிகாரிகள் முழு நேரமும் அதுகுறித்து பணியாற்றி வருகின்றனர், சூழல் குறித்து கண்கானித்து வருகின்றனர்.

அவர் கூறுகையில், "முந்தைய சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார். ஓமன், இராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் சென்றடைவதற்கும் காணாமல் போனவரை தேடுவதையும் உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்." என்றார்.

வளைகுடா பிராந்தியத்தில் எத்தனை இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளன?

ரந்தீர் ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ரந்தீர் ஜெய்ஸ்வால்

ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பல இந்திய கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும், இந்தியா அதன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

அவரை பொறுத்தவரை, இந்த கப்பல்கள் பாதுகாப்பாகவும் தங்குதடையுமின்றி கடக்க சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் ஒருங்கிணைத்துவருவதாகவும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "இந்த மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் விமான இடையூறுகள் காரணமாக, இந்தியாவில் இரானிய குடிமக்கள் பலர் சிக்கியுள்ளனர். இந்த குடிமக்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துவர இரானிய அதிகாரிகள் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலாவாக வந்தவர்கள் அல்லது ராஜ்ஜீய அதிகாரிகளாக வந்தவர்களும் இதில் அடங்கும்." என்றார்.

"இந்த விமானம் கொச்சியை வந்தடைந்துள்ளது. ஐஆர்ஐஎஸ் லாவன் விமானத்தின் விமான குழுவினர் உட்பட பயணிகள் கப்பலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த விமானம் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது." என்று அவர் மேலும் கூறினார்.

மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில், பாரசீக வளைகுடாவில் இந்திய கொடிகளை ஏந்திய 22 கப்பல்கள் உள்ளன.

இதுதொடர்பாக, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா கூறுகையில், இதில் 6 எல்பிஜி டேங்கர்கள், ஒரு எல்என்ஜி டேங்கர், நான்கு கச்சா எண்ணெய் டேங்கர்கள், ரசாயன பொருட்கள் ஏந்திய ஒரு டேங்கர், மூன்று கொள்கலன் கப்பல்கள், இரண்டு பெரிய தாங்கு கப்பல்கள், நீருக்கு அடியில் தோண்டுவதற்கு பயன்படும் டிரெட்ஜர் கப்பல் ஆகியன அடங்கும்.

"மேலும், ஒரு கப்பல் 'எம்ப்டி பாலஸ்ட்' நிலையில் உள்ளது; மூன்று கப்பல்கள் 'டிரை டாக்' நிலையில் உள்ளன. 'எம்ப்டி பாலஸ்ட்' என்பது அந்த கப்பல் எந்த சரக்கையும் எடுத்துச் செல்லாமல் இருப்பதை குறிக்கும். 'டிரை டாக்' என்பது அந்த கப்பல்கள் வழக்கமான பழுது பார்க்கும் பணிகளில் இருப்பதை குறிக்கும்." என அவர் தெரிவித்தார்.

புதிய உத்தரவுகளை வெளியிட்ட அரசு

உள்நாட்டு எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கிறது. சனிக்கிழமை, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 இன் விதிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், குழாய் மற்றும் எல்பிஜி இணைப்புகள் இரண்டையும் வைத்திருக்கும் நுகர்வோர் எல்பிஜி இணைப்பை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. அத்தகைய நபர்கள் எந்த அரசு நிறுவன விநியோகஸ்தர் மூலமாகவும் தங்கள் வீட்டு எல்பிஜி சிலிண்டர்களை மீண்டும் நிரப்ப முடியாது.

அத்தகையவர்கள் உடனடியாக தங்கள் எல்பிஜி இணைப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

குழாய் எரிவாயு இணைப்பு உள்ள நுகர்வோருக்கு எல்பிஜி இணைப்பு வழங்கப்படாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் தொடர்பான அறிவிப்பு சனிக்கிழமையே வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

வெளிப்படையாக, இந்த உத்தரவு குழாய் எரிவாயு கிடைக்கும் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பின் நிலை என்ன?

சுஜாதா சர்மா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,சுஜாதா சர்மா

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடந்து வரும் போர், உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளது மற்றும் அதன் விலைகள் அதிகரித்துள்ளன.

இந்தியாவில், உள்நாட்டு எரிவாயு விநியோகத்தில் இதன் தாக்கம் குறிப்பாகத் தெரிகிறது. பல நகரங்களில் எல்பிஜி எரிவாயுக்கான நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன, மேலும் வணிக நுகர்வோர் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை நடைபெற்ற ஒரு மாநாட்டில், பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, "எங்களிடம் (இந்தியா) போதுமான அளவு கச்சா எண்ணெய் விநியோகம் உள்ளது, மேலும் எங்கள் சுத்திகரிப்பு நிலையங்களும் முழு திறனுடன் செயல்படுகின்றன. சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு இல்லை என எந்த தகவலும் இல்லை" என்றார்.

"இந்தியாவிடம் போதுமான அளவு டீசல் மற்றும் பெட்ரோல் கிடைக்கிறது. தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான டீசல் மற்றும் பெட்ரோலை நாங்கள் உற்பத்தி செய்கிறோம், எனவே, இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை." எனவும் அவர் உறுதி கூறினார்.

மேலும் பேசிய சுஜாதா ஷர்மா கீழ்க்காணும் கருத்துக்களை தெரிவித்தார்.

"இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, எல்பிஜி விநியோகம் தடைபடும் இடங்களில் வணிக நுகர்வோரை பிஎன்ஜி இணைப்புகளுக்கு மாற்ற அரசாங்கம் விரும்புகிறது. இதற்காக, இந்திய எரிவாயு ஆணையம் லிமிடெட் பல ஆபரேட்டர்களுடன் சந்திப்புகளை நடத்தி, அவர்கள் வழங்கக்கூடிய வணிக நுகர்வோருக்கு உடனடியாக பிஎன்ஜி இணைப்புகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

"எல்பிஜி விநியோகத்தைப் பொறுத்தவரை, புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு இன்னும் கவலையளிக்கும் விஷயம் என்று நான் கூறுவேன். மக்கள் பீதியில் எரிவாயுவை முன்பதிவு செய்கிறார்கள். நேற்று முன்தினம் 75 லட்சம் முன்பதிவுகள் இருந்தன, அவை இன்று 88 லட்சமாக அதிகரித்துள்ளன. இது மக்கள் பீதி காரணமாக முன்பதிவு செய்கிறார்களே தவிர வேறில்லை."

"நாட்டு மக்கள் பீதி அடைவதைத் தவிர்த்து, தேவைப்படும்போது மட்டுமே முன்பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது அனைவருக்கும் நல்லது."

உரங்களும் பாதிக்கப்படுமா?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் இந்தியாவில் எரிவாயு நுகர்வோர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் இந்தியாவில் எரிவாயு நுகர்வோர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய கிழக்கு மோதல் காரணமாக இந்தியாவில் எழுப்பப்படும் மற்றொரு கவலை உர விநியோகம். இந்தியாவின் தற்போதைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருப்பதாக அரசாங்கம் கூறினாலும் இந்த கவலை உள்ளது.

"இந்தியாவின் யூரியா கையிருப்பு கடந்த ஆண்டில் இதே சமயத்தில் இருந்ததை மிக அதிகமாக உள்ளது. DAP (டை அமோனியம் பாஸ்பேட்) கையிருப்பு கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். அதேபோல், எங்கள் NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) கையிருப்பும் கடந்த ஆண்டை விட மிக அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

"இந்தியாவின் உள்நாட்டு யூரியா உற்பத்தியைப் பொறுத்தவரை, தற்போதைய உற்பத்தி வழக்கமான நுகர்வை விட அதிகமாக இருக்கும், குறிப்பாக ராபி பருவம் முடிவடையவிருப்பதால். மேலும், சில ஆலைகளின் திட்டமிடப்பட்ட வருடாந்திர பராமரிப்பை நாங்கள் ஏற்கெனவே முடித்துவிட்டோம், அதாவது கிடைக்கக்கூடிய எரிவாயுவைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும்."

"தற்போதைய சூழ்நிலையை எதிர்பார்த்து, உரத் துறை ஏற்கெனவே உலகளாவிய டெண்டர்களை முன்கூட்டியே வெளியிட்டிருந்தது. போட்டி அடிப்படையில் 'உடனடி எரிவாயுவை' (spot gas) வாங்க உரத் துறை முடிவு செய்துள்ளது, மேலும் கொள்முதல் முதல் கட்டம் செவ்வாய்க்கிழமைக்குள் நிறைவடையும்."

"இந்தியாவின் அனைத்து சர்வதேச கூட்டாளிகளும் எந்த இடையூறும் இல்லாமல் விநியோகம் செய்து வருகின்றனர், மேலும் காரீஃப் பருவத்தில் உரங்களுக்கான தேவை உச்சத்தை எட்டும் மே 15 ஆம் தேதிக்குள் போதுமான மற்றும் பாதுகாப்பான உரங்கள் இருப்பில் இருக்கும் என்று நம்புகிறோம்."

இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் உண்மைகளின் அடிப்படையில் பேச வேண்டும் என்றும், முழுமையான தகவல்கள் இல்லாமல் ஊகங்கள் மூலம் மக்களிடையே பீதியை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx24873441mo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சிக்னல் அணைப்பு' - 2 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

'சிக்னல் அணைப்பு' -  2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை அருகே பல கப்பல்கள் சிக்கியுள்ளன (கோப்புப் படம்)

26 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரு திரவ பெட்ரோலிய எரிவாயு கப்பல்களான நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகியவை கடந்த சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

கப்பல்களின் பயணத்தை கண்காணிக்கும் இணையதளம் மரைன் டிராபிக் வழங்கிய தகவலின்படி, இந்த இரண்டு கப்பல்களும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன.

கப்பல்களின் பயணத் தகவல்கள்படி, நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகிய இரு கப்பல்களும் கத்தாரில் உள்ள துறைமுகத்தில் எரிவாயுவை ஏற்றிக் கொண்டுள்ளன.

அதன் பிறகு அவை ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது தானியங்கி அடையாள அமைப்பு (AIS - ஏஐஎஸ்) என்ற சிக்னலை அணைத்துவிட்டு பயணம் செய்துள்ளன.

2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

பட மூலாதாரம்,MarineTraffic

ஏஐஎஸ் என்பது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சிக்னல். இதன் மூலம் கப்பல்களின் பயணத்தை இணையத்தில் கண்காணிக்கலாம்.

வரைபடத்தில் காட்டப்படும் புள்ளி கோடு அந்த கப்பல்கள் எவ்வாறு சென்றிருக்கலாம் என்று கணிக்கப்பட்ட பாதையைக் காட்டுகிறது.

மார்ச் 14 அன்று, அந்த எரிவாயு கப்பல்கள் ஏஐஎஸ் சிக்னலை அணைத்திருந்த நேரத்தில், அந்தப் பகுதியில் இரண்டு இந்தியப் போர்க் கப்பல்கள் இருப்பதையும் காண முடிகிறது.

2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

நந்தா தேவி கப்பல், இரானின் கேஷம் தீவில் பல நாட்கள் நின்றிருந்தது. அந்த கப்பல் நாளை இந்தியாவின் கண்ட்லா துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு கப்பலான சிவலிக் இன்று காலையே இந்தியாவின் முந்தரா துறைமுகத்தை வந்து சேர்ந்தது.

ஜெய்சங்கர் கூறியது என்ன?

இரானுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இந்தியக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வர உதவியுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்னதாக தெரிவித்தார்.

இந்திய கப்பல்கள் செல்வதற்கு 'சாதாரண' அல்லது 'நிரந்தர ஒப்பந்தம்' எதுவுமில்லை என்றும், இதற்கு 'இரான் எதையும் பிரதிபலனாகப் பெறவில்லை' என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பைனான்சியல் டைம்ஸ்' இதழிடம் தெரிவித்தார்.

அவர் அந்தப் பேட்டியில், "நான் தற்போது அவர்களுடன் பேசி வருகிறேன். எனது பேச்சுவார்த்தை சில முடிவுகளைத் தந்துள்ளது. இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பலன் அளிக்கும் பட்சத்தில், இயல்பாகவே நான் இதைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்." என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cddn1z019d2o

நேற்று பாகிஸ்தான் எண்ணைக் கப்பல் ஒன்று இந்த நீரிணையைக் கடந்துள்ளது. Automatic Identification System (AIS) மூலம் ஈரானால் இனம்காணப்பட்டு இக் கப்பல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானுடன் முன்கூட்டியே கப்பல் அனுமதிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

நேற்று பாகிஸ்தான் எண்ணைக் கப்பல் ஒன்று இந்த நீரிணையைக் கடந்துள்ளது. Automatic Identification System (AIS) மூலம் ஈரானால் இனம்காணப்பட்டு இக் கப்பல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானுடன் முன்கூட்டியே கப்பல் அனுமதிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம்.

இந்த கப்பல் அபுதாபியில் யுவானில் எண்ணை வாங்கியதாக சொல்கிறாகள்.

@vasee

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இந்த கப்பல் அபுதாபியில் யுவானில் எண்ணை வாங்கியதாக சொல்கிறாகள்.

@vasee

இந்த செய்தியின் உண்மைதன்மையை க்ரோக் ஏ ஐ மூலம் சோதித்ததில்.

யுவான் பரிவர்தனையை உறுதிபடுத்த முடியவில்லை ஆனால் பாகிஸ்தான் கப்பல்கள் முன்பும் ஈரானிடம் யுவானில் வாங்கின என்கிறது.

ஆனால் அபுதாபியில் யுவானில் வாங்கியதா என்பது உறுதியாக தெரியவில்லை.

இத்தோடு 2 கிரேக கப்பல்கள் உட்பட மேலும் 3 கப்பல்கள் ஈரான் அனுமதியோடு பயணித்ததாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இந்த செய்தியின் உண்மைதன்மையை க்ரோக் ஏ ஐ மூலம் சோதித்ததில்.

யுவான் பரிவர்தனையை உறுதிபடுத்த முடியவில்லை ஆனால் பாகிஸ்தான் கப்பல்கள் முன்பும் ஈரானிடம் யுவானில் வாங்கின என்கிறது.

ஆனால் அபுதாபியில் யுவானில் வாங்கியதா என்பது உறுதியாக தெரியவில்லை.

இத்தோடு 2 கிரேக கப்பல்கள் உட்பட மேலும் 3 கப்பல்கள் ஈரான் அனுமதியோடு பயணித்ததாக தெரிகிறது.

செய்தி நிறுவனங்கள் எதுவும் இதனை உறுதிப்படுத்தவில்லை என கருதுகிறேன் (இணையத்தில் தேடிப்பார்த்ததில்).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்தியாவின் 22 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வழித்தடம்

hindutamil-prod%2F2026-03-21%2F1sp2zzof%

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கப்பலும் சிக்கியது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வர வேண்டிய 24 ஆயில் டேங்கர் மற்றும் காஸ் டேங்கர் கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கி யானுடன் பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின் இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது. இந்தியாவுக்கு சமையல் காஸ் ஏற்றி வந்த கப்பல் வழக்கமான பாதையில் வராமல் ஈரானின் லார்க் தீவைச் சுற்றி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. இந்த வழியாக வந்தால் ஈரான் கடற்படை இந்திய கப்பலின் அடையாளத்தை நேரடியாக பார்த்து உறுதி செய்ய முடியும்.

இந்த பாதுகாப்பான வழித்தடத்தில் இந்தியாவின் 22 எரிபொருள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரவுள்ளதாக கடல்சார் தரவு மற்றும் உளவு நிறுவனம் லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் (எல்எல்ஐ) தெரிவித்துள்ளது. இது மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து இந்தியாவின் 22 கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வழித்தடம்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

இந்த பாதுகாப்பான வழித்தடத்தில் இந்தியாவின் 22 எரிபொருள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரவுள்ளதாக கடல்சார் தரவு மற்றும் உளவு நிறுவனம் லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் (எல்எல்ஐ) தெரிவித்துள்ளது. இது மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இந்தியா ஈரானுக்கு முதுகில் குத்தியும் ஈரான் நியாயமாக நடந்து கொள்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் கடற்கரைக்கு அருகில் சென்று ஹோர்மூஸ் நீரிணையை 2 இந்திய கப்பல்கள் கடந்தது எப்படி?

'இரான் கடற்கரைக்கு மிக அருகில்' - இந்தியாவின்  2 எரிவாயு கப்பல் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,இந்த மாத தொடக்கத்தில் ஹோர்மூஸ் நீரிணையை கடந்து இந்தியா வந்த கப்பல்

கட்டுரை தகவல்

  • ஸ்ருதி மேனன்

  • 24 மார்ச் 2026, 11:48 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரைத் தொடங்கியதிலிருந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் டேங்கர் கப்பல்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துள்ளது.

கப்பல் போக்குவரத்திற்கு எதிராக இரான் விடுத்துள்ள அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பயணத்தை மேற்கொள்ளும் பல கப்பல்கள், தங்களைக் கண்டறிவதைக் கடினமாக்குவதற்காக தங்களின் ஏஐஎஸ் (AIS) கண்காணிப்புக் கருவிகளை அணைத்து வைத்துள்ளன.

ஆனால் ஒரு சில கப்பல்கள் தங்களின் டிரான்ஸ்மிட்டர்களை தொடர்ந்து இயக்கி வருகின்றன. இது தங்களைத் தாக்க மாட்டார்கள் என்ற அதிகப்படியான நம்பிக்கையை உணர்த்துகிறது.

நேற்று, மரைன் டிராஃபிக் தரவுகளின்படி மூன்று கப்பல்கள் தங்களின் டிரான்ஸ்மிட்டர்கள் இயங்கிய நிலையில் அந்தப் பயணத்தை மேற்கொண்டன.

அந்தக் கப்பல்கள் ஒன்றாக நெருங்கிப் பயணிப்பதையும், வழக்கத்தை விட இரானிய கடற்கரைக்கு மிக அருகில் உள்ள, குறைவாகப் பயன்படுத்தப்படும் பாதையைத் தேர்ந்தெடுப்பதையும் காண முடிந்தது.

ஹோர்மூஸ் நீரிணையை 3 கப்பல்களும் கடந்த பாதை

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை 3 கப்பல்களும் கடந்த பாதை

3 கப்பல்கள்

அந்த மூன்று கப்பல்கள், இந்தியாவிற்குச் சொந்தமான திரவப் பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) டேங்கர்களான பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் மற்றும் சீனாவிற்குச் சொந்தமான ரசாயன டேங்கர் பிரைட் கோல்ட் ஆகும்.

கடந்த வாரம், பாகிஸ்தானுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் டேங்கர் ஒன்று இரான் கடற்கரைக்கு அருகில் அதே பாதையில் தனது கண்காணிப்புக் கருவி இயக்கப்பட்ட நிலையில் சென்றது.

அமெரிக்கப் பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ரேண்ட் கார்ப்பரேஷனின் மூத்த ஆராய்ச்சியாளரும், முன்னாள் அமெரிக்கக் கடற்படை கேப்டனுமான பிராட்லி மார்ட்டின், ''ஹோர்மூஸ் நீரிணையில் எங்காவது கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருந்தால், இந்தப் பாதுகாப்பான பாதையை இரான் வழங்கியிருக்கலாம். இந்தக் கப்பல்கள் அந்தப் பாதையைப் பின்பற்றியிருக்கலாம்'' என்று தெரிவித்தார்.

ஹோர்மூஸ் நீரிணை அருகே தாக்கப்பட்ட ஒரு கப்பல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை அருகே தாக்கப்பட்ட ஒரு கப்பல்

முன்பு சிக்னல் அணைப்பு

முன்னதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரு திரவ பெட்ரோலிய எரிவாயு கப்பல்களான நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகியவை கடந்த 14-ஆம் தேதி ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்தன.

கப்பல்களின் பயணத் தகவல்கள்படி, நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகிய இரு கப்பல்களும் கத்தாரில் உள்ள துறைமுகத்தில் எரிவாயுவை ஏற்றியுள்ளன.

அதன் பிறகு அவை ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது தானியங்கி அடையாள அமைப்பு (AIS - ஏஐஎஸ்) என்ற சிக்னலை அணைத்துவிட்டு பயணம் செய்தன.

ஹோர்மூஸ் நீரிணை

போரின் மையமான ஹோர்மூஸ் நீரிணை

உலகின் கடல்வழிப் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமாக உள்ள ஹோர்மூஸ் நீரிணையை போர் தொடங்கியதில் இருந்து இரான் கட்டுப்படுத்தி வருகிறது.

இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டு கச்சா எண்ணெய் முதல் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுக்கு கெடு ஒன்றை விதித்தார். 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் இரானின் மின் நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்.

டிரம்ப் தனது மிரட்டலை செயல்படுத்தினால், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து எரிசக்தி கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குவோம் என இரானும் பகிரங்கமாக எச்சரித்தது.

ஆனால், இரானோ தங்கள் எதிரிகளுக்கு மட்டுமே ஹோர்மூஸ் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறது.

இரானிய ஊடக செய்திகளின்படி, அமெரிக்கா இரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்தால் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்றும், அழிக்கப்பட்ட மின் நிலையங்கள் மீண்டும் கட்டி முடிக்கப்படும் வரை ஹோர்மூஸ் திறக்கப்படாது என்றும் இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை எச்சரித்திருக்கிறது.

14-ஆம் தேதி ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்

பட மூலாதாரம்,PTI

படக்குறிப்பு,14-ஆம் தேதி ஹோர்மூஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்

இருப்பினும் இரானுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடந்திருப்பதால் இரானின் மின் நிலையங்கள் மீதான தாக்குதல்களை தாமதப்படுத்தியிருப்பதாக திங்களன்று டிரம்ப் அறிவித்தார்.

ஆனால் இரானின் நாடாளுமன்ற சபாநாயகர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை மறுத்ததுடன் அதை ''போலிச் செய்தி'' என நிராகரித்தார்.

அதே நேரம் பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் மூத்த இரான் அதிகாரி ஒருவர் "மத்தியஸ்தர்கள் வழியாக அமெரிக்காவிலிருந்து சில முன்மொழிவுகள் எங்களிடம் வந்துள்ளன. அவை தற்போது பரிசீலனையில் உள்ளன" என தெரிவித்தார்.

''இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு தயாரிப்பாகும். ஆனால் பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை, அவை உறுதிப்படுத்தப்படவும் இல்லை'' என சிபிஎஸ் கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78rdpp514go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

hindutamil-prod%2F2026-03-25%2F1wj5c7pa%

புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.

ஈரான் ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய எரிவாயு (எல்பிஜி) கப்பல்கள், ஜக் லட்கி என்ற கச்சா எண்ணெய் கப்பல் ஆகியவை இந்தியா வந்தன. இந்த சூழலில் ஜக் வசந்த், பைன் காஸ் ஆகிய 2 எரிவாயு கப்பல்கள் ஈரான் ராணுவ சிறப்பு அனுமதியுடன் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன.

இந்த கப்பல்கள் நேற்று சர்வதேச கடல் எல்லை பகுதியை வந்தடைந்தன. அவற்றுக்கு இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. மார்ச் 26 முதல் 28-ம் தேதிக்குள் இரு எரிவாயு கப்பல்களும் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் ராஜஷ் குமார் சின்ஹா கூறும்போது, “இரு எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்த கப்பல்களில் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி காஸ் இருக்கிறது’’ என்றார்.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை வட்டாரங்கள் கூறியதாவது: சமையல் காஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நாள்தோறும் உள்நாட்டில் 55,000 டன் எல்பிஜி உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கெனவே வளைகுடா நாடுகளில் இருந்து 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. தற்போது மேலும் 2 எரிவாயு கப்பல்கள் விரைவில் இந்தியா வந்து சேர உள்ளன.

இவை தவிர நெதர்லாந்தில் இருந்து ஹெலாஸ் கிளாடியேட்டர், அமெரிக்காவில் இருந்து காஸ் ஜுபிட்டர் ஆகிய 2 கப்பல்கள் தலா 24,000 டன் எல்பிஜி காஸுடன் இந்தியா வருகின்றன. இவை வரும் 30-ம் தேதி விசாகப்பட்டினம் துறைமுகத்தை வந்து சேரும். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அடுத்தடுத்து எல்பிஜி காஸ் கப்பல்கள் இந்தியாவுக்கு வர உள்ளன.

இதேபோல ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. வளைகுடா பகுதியில் முகாமிட்டுள்ள12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.