Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்

hindutamil-prod%2F2026-03-21%2F0azxb8jy%

மாஸ்கோ: ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடர்கிறது என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புத்தாண்டை முன்னிட்டு அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி, அதிபர் மசூத் பெஷெஷ்கியான் ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஈரானிய மக்கள் கடுமையான சோதனைகளை கண்ணியத்துடன் கடந்துவர வேண்டும் என விளாடிமிர் புதின் வாழ்த்தினார்.

மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் ஈரானின் விசுவாசமான நண்பனாகவும், நம்பகமான கூட்டாளியாகவும் ரஷ்யா தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரானுக்கான ரஷ்ய உதவிகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள், ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் படுகுழியில் தள்ளி, ஒரு பெரிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக புதின் குற்றம்சாட்டி இருந்தார். ஈரானின் உச்சத் தலைவர் வஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஈரானில் ஆட்சியில் இருந்த அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா, பதவியில் இருந்து 1979-ல் அகற்றப்பட்டார். அது முதல் ரஷ்யா, ஈரானின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. எனினும், தற்போதைய போர் நெருக்கடியில் சிக்கியுள்ள ஈரானுக்கு ரஷ்யா எவ்வித உதவியும் வழங்கவில்லை என ஈரானிய வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஈரான் போர் காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தப் போர் ரஷ்யாவுக்கு சாதகமானதாகவும் அமைந்தது கவனிக்கத்தக்கது.

“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஏராளன் said:

மாஸ்கோ: ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடர்கிறது என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

அதே மாதிரி ரம்புக்கும் நான் நண்பேன்டா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரான் - அமெரிக்க,இஸ்ரேலிய போர் மூலம்....பல ஆப்புகள் புதிதாக முளைக்கவிருக்கின்றன போல் தெரிகின்றது.

உக்ரேன் பல இழப்புகளை சந்திக்கப்போகின்றது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேன் விடயத்தில் பலத்த தோல்வியை சந்திக்கும். உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி முடக்கம் குத்துவிளக்கு வைத்து ஆரம்பிப்பது போல் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2026 at 14:30, ஏராளன் said:

ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்

இதுவரைக்கும் எல்லாம் நல்ல படிதான் போய்கொண்டிருந்தது…

செத்த கிளி வாய தொறந்துட்டுது..

இனித்தான் இருக்கு ஈரானுக்கு ஏழரை

இவ்வண்,

மதுரோ, அசாத், சதாம், கடாபி

உண்மையில் ஈரானின் உற்ற நண்பனாக நிற்பது சீனா.

தருணம் பார்த்து எண்ணை விற்கும் செத்த கிளி பச்சை கள்ளன். செத்த கிளி எண்ணை விற்க மறுத்தால் தம்பர் மீதான நெருக்கடி இன்னும் கூடும்.

On 21/3/2026 at 15:03, ஈழப்பிரியன் said:

அதே மாதிரி ரம்புக்கும் நான் நண்பேன்டா.

Edited by goshan_che

ஏற்கனவே ரஷ்யாதான் அமெரிக்காவின் தளங்களை ஈரானுக்குக் காட்டிக் கொடுக்கிறது என்று ரம்பின் காதுக்குள் கூறப்பட்டதாகப் பேசப்பட்டது. ஆனால் இவர்தான் கேளாத மாதிரி இருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தருணம் பார்த்து எண்ணை விற்கும் செத்த கிளி பச்சை கள்ளன். செத்த கிளி எண்ணை விற்க மறுத்தால் தம்பர் மீதான நெருக்கடி இன்னும் கூடும்.

அதிக அழுத்தம் தேவையற்ற பிரச்சினையினை உருவாக்கிவிடும்.

இங்கிலாந்து தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்துள்ளது, மேலும் அணு நீர்மூழ்கியினை அனுப்பிவைத்துள்ளதாக இன்னொரு திரியில் கூறப்பட்டுள்ளது, ஜப்பான் அதிபர் 6 மாதங்கள் இந்த நிலை நீடித்தால் ஜப்பான் வங்குரோத்தாகும் என கூறியிருந்த நிலையில் தற்போது ஜப்பானினது எரிபொருளை ஈரான் அனுமதிக்கின்றது.

அதிக அழுத்தம் பாதிப்புள்ளாகும் நாடுகளை ஈரானுக்கெதிராக அணிதிரள வைக்கும், அதனால் தேவையற்ற பிரச்சினை உருவாகும், தற்போதும் ஈரான் எரிபொருள் ஏற்றுமதிக்கு பிரச்சினை இல்லை, குறிப்பிட்ட சில மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்க தாக்குதலுக்க்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதியே பாதிக்கிறது அதனை இரஸ்சிய எரிபொருள் ஒரு சிறு பகுதியினையே நிரப்ப முடியும் ஆனால் அவர்கள் குறைந்த உற்பத்தியில் அதிக உற்பத்தியினை விட அதிகமாக இலாபம் ஈட்டுவார்கள் (விலை நெகிழ்ச்சி கேள்வியினை விட ஒன்றுக்கு அதிகமாக காணப்படும் ஏனெனில் அத்தியாவசிய பொருள்).

ரியூட்டர் செய்தி; தென் கொரியா இரஸ்சியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது பற்றி சிந்திப்பதாக, அப்படி நடந்தால் அங்கிருந்து அவுஸ்ரேலியாவிற்கும் இரஸ்சிய எண்ணெய் எதிர்காலத்தில் வரும்.

இரஸ்சியா மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றிற்கு $90 இருக்கும் போது நாளொன்றிற்கு 150 மில்லியன் மேலதிக வருவாய் பெறுகிறது என கூறினார்கள், தற்போட்கு $ 107 மேல் உள்ளது.

இந்த போர் தொடங்கியபின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்தே சென்றுகொண்டிருந்த நிலையில் இங்கு சில இடங்களில் $2.49 வரை சென்றிருந்த பெற்றோல் இன்று $2.39 விலையில் உள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு வராது என கருதுகிறேன், ஆனால் விலை அதிகமாகவே காணப்படும், இரஸ்சியா போன்ற நாடுகள் தமது உற்பத்தியினை அதிகரித்தால் ஓரளவு விலை குறையலாம், ஆனால் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல இந்த போர் முடிந்த பின்னரும் பல மாதங்கள் எடுக்கும் என கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2026 at 02:03, ஈழப்பிரியன் said:

அதே மாதிரி ரம்புக்கும் நான் நண்பேன்டா.

இல்லை ரம்பினை இரஸ்சிய தரப்பு மிக ஆபத்தான எதிரியாகவே பார்க்கின்றது, அமெரிக்க அதிபராக வருவதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கெதிராக தற்போது ரம்ப் செயற்படுகிறார் (போர் வேண்டாம் என்றவர்), ஒருவரரது அடிப்படை சிந்தனை வேறாக இருந்தாலும் நாட்டின் கொள்கை ஒன்றே, அதில் மாற்றம் இருக்காது, அப்படி பார்க்கும் போது ட்ரம்ப் மற்ற அதிபர்களை விட ஆபத்தானவர் (எதிர் பாராத விடயங்களை செய்பவர்).

அமெரிக்கா தனது எதிரியாக இரஸ்சியாவினை பார்ப்பதாலேயே உக்கிரேனினூடக இரஸ்சியாவுடன் மோதியது (தற்போது முழுப்பொறுப்பையும் ஐரோப்பாவிடம் விட்டுள்ளது).

அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தையிலீடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இரஸ்சிய அதிபரின் வீட்டின் மேல் தாக்குதல் நடாத்தப்பட்டது, அவர்களுக்கு தெரியும் சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டுள்ளார்கள் என.

ட்ரம்பினை அகற்ற வேண்டிய தேவை இரஸ்சியாவிற்கும் உள்ளது, இரஸ்சியா; ட்ரம்பினை விட வேறு அதிபர்கள் பதவிக்கு வருவதனையே விரும்பியிருக்கும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அதிக அழுத்தம் தேவையற்ற பிரச்சினையினை உருவாக்கிவிடும்.

இங்கிலாந்து தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்துள்ளது, மேலும் அணு நீர்மூழ்கியினை அனுப்பிவைத்துள்ளதாக இன்னொரு திரியில் கூறப்பட்டுள்ளது, ஜப்பான் அதிபர் 6 மாதங்கள் இந்த நிலை நீடித்தால் ஜப்பான் வங்குரோத்தாகும் என கூறியிருந்த நிலையில் தற்போது ஜப்பானினது எரிபொருளை ஈரான் அனுமதிக்கின்றது.

அதிக அழுத்தம் பாதிப்புள்ளாகும் நாடுகளை ஈரானுக்கெதிராக அணிதிரள வைக்கும், அதனால் தேவையற்ற பிரச்சினை உருவாகும், தற்போதும் ஈரான் எரிபொருள் ஏற்றுமதிக்கு பிரச்சினை இல்லை, குறிப்பிட்ட சில மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்க தாக்குதலுக்க்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் எரிபொருள் ஏற்றுமதியே பாதிக்கிறது அதனை இரஸ்சிய எரிபொருள் ஒரு சிறு பகுதியினையே நிரப்ப முடியும் ஆனால் அவர்கள் குறைந்த உற்பத்தியில் அதிக உற்பத்தியினை விட அதிகமாக இலாபம் ஈட்டுவார்கள் (விலை நெகிழ்ச்சி கேள்வியினை விட ஒன்றுக்கு அதிகமாக காணப்படும் ஏனெனில் அத்தியாவசிய பொருள்).

ரியூட்டர் செய்தி; தென் கொரியா இரஸ்சியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது பற்றி சிந்திப்பதாக, அப்படி நடந்தால் அங்கிருந்து அவுஸ்ரேலியாவிற்கும் இரஸ்சிய எண்ணெய் எதிர்காலத்தில் வரும்.

இரஸ்சியா மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றிற்கு $90 இருக்கும் போது நாளொன்றிற்கு 150 மில்லியன் மேலதிக வருவாய் பெறுகிறது என கூறினார்கள், தற்போட்கு $ 107 மேல் உள்ளது.

இந்த போர் தொடங்கியபின் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்தே சென்றுகொண்டிருந்த நிலையில் இங்கு சில இடங்களில் $2.49 வரை சென்றிருந்த பெற்றோல் இன்று $2.39 விலையில் உள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு வராது என கருதுகிறேன், ஆனால் விலை அதிகமாகவே காணப்படும், இரஸ்சியா போன்ற நாடுகள் தமது உற்பத்தியினை அதிகரித்தால் ஓரளவு விலை குறையலாம், ஆனால் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல இந்த போர் முடிந்த பின்னரும் பல மாதங்கள் எடுக்கும் என கூறுகிறார்கள்.

நீங்கள் அவுசில் NSW வில் இல்லை போல் உள்ளது?

அங்கே தட்டுப்பாடு ஓரளவு வர தொடங்கி விட்டது போல் தெரிகிறது.

இதில் உள்ள வீடியோ நம்பகமானது என நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.