Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!

image_f43045a2c7.jpg

பாலியல் குற்றங்கள் குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளன. அவரது பேச்சுக்குப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா நேரடியாகவும் கடுமையாகவும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய பேச்சு

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எஸ்.வி. சேகர், சமூகத்தில் ஒழுக்கம் குறைந்து வருவதாகவும், குழந்தைகளுக்குக் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், அனைத்துத் தவறுகளுக்கும் அரசாங்கத்தையே குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசிய அவர், சர்ச்சையைத் தூண்டும் வகையில் சில உதாரணங்களைக் கூறினார்:

"தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. நான் என் வீட்டைப் பூட்டாமல் விட்டுவிட்டு, திருடன் திருடினான் என்றால் அதற்குச் சட்டம் எப்படிப் பொறுப்பாகும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

"பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வெளியே சென்றால் ஒருவரைத் துணைக்கு அனுப்ப வேண்டும்," என்றும் குறிப்பிட்டார்.

மிக முக்கியமாக, அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "ஒரு பெண் புதருக்குள் சென்றதாகச் சொல்கிறார்கள்; அவர் ஏன் அங்கு சென்றார்? புதருக்குள் பொலிஸாரால் மின்விளக்கு பொருத்த முடியுமா?" எனக் கேட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணையே குறை கூறும் வகையில் அமைந்த இந்த வரிகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைக் கிளப்பின.

பாதிப்புக்குள்ளான பெண்ணின் பக்கம் நின்ற சின்மயி

எஸ்.வி. சேகரின் இந்த கருத்துக்குப் பாடகி சின்மயி தனது 'எக்ஸ்' (X) பக்கத்தில் நேரடியான பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில் உள்ள முக்கிய அம்சங்கள்:

"ஒரு பெண் ஏன் புதருக்குள் சென்றார் என்று கேட்கிறீர்கள். அந்த இடத்தில் கழிவறை வசதியே இல்லையென்றால் அவர் வேறு என்ன செய்வார்?" எனச் சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்தப் பெண் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகவே அங்கு சென்றார் என்ற தகவலை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், திறந்தவெளியைப் பயன்படுத்தும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது இது முதல் முறையல்ல என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

எவ்விதக் கூச்சமும் இன்றிப் பொதுவெளியில் ஜிப்பை கழற்றி சிறுநீர் கழிக்கும் ஆண்களிடம் கேள்வி கேட்காதவர்கள், பாதுகாப்பற்ற சூழலில் தள்ளப்படும் பெண்களைக் குறை கூறுவது ஏன் என அவர் சாடியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல், அவர்களின் மீதே பழி போடும் மனநிலையைச் சின்மயி தனது பதிவின் மூலம் கடுமையாகச் சாடியுள்ளார்.

https://www.tamilmirror.lk/cinema/கூச்சமில்லாமல்-ஜிப்பை-கழற்றுபவர்கள்-சின்மயி-கடும்-பதிலடி/54-374632

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்தியாவில் போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், திறந்தவெளியைப் பயன்படுத்தும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது இது முதல் முறையல்ல என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

வல்லரசாம் இந்தியாவின் வளர்ச்சி நிலை இது தான்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.வி. சேகர் போன்ற சங்கி மங்கிகளிடம் இருந்து இப்படியான கருத்துக்கள் வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

🫣...................

இப்படியான பிரபலங்களுடன் தான் ஒரு சாதாரண மனிதன் மல்லுக்கட்டி வாழ்ந்து, முன்னோக்கிப் போக வேண்டிய நிலை. பிரபலங்கள் சொல்வதால் அதை சரியென்று அப்படியே மேற்கோள் காட்டும் அறியாமையும், அவசரமும் வேறு எங்களின் சமூகத்தில் ஊறி நிற்கின்றது.

பல வருடங்களின் முன்னர், கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லுவது தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டுகின்றது என்று சொன்னார். அன்று கேரளாவில் அவரின் கூற்றுக்கு எதிராக ஒரு போராட்டமே நடந்தது. ஜெயமோகன் கூட ஜேசுதாஸ் ஒரு பெரியவர், அவரை மன்னித்து விடலாம் என்று ஒரு கட்டுரை எழுதியதாக ஞாபகம். இப்பொழுது ஜேசுதாஸ் டெக்சாஸில் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். இப்பொழுதாவது அவர் மாறியிருப்பார் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் உடை-வரலாற்றுக்கு வயது 5000….

5000 வருடத்தில் மாறாத ஒரே விடயம்….

பெண்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கும் அவல நிலை….

1 hour ago, ரசோதரன் said:

டெக்சாஸில் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

35+ வருட புலம்பெயர் வாழ்வை கொண்ட தமிழர்கள் பலரும் இங்கே ஈரான் நல்லம், ஆப்கானிஸ்தான் அப்படி ஒண்டும் மோசமில்லை என எழுதும் போது….

ஜனநாயகத்தை விட இப்படியான நாடுகள் உசத்தி என்றே எழுதும் போது, தள்ளாத வயதில் டெக்சஸ் போன ஜேசுதாஸ் மாறி இருக்க வாய்புகள் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

பெண்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கும் அவல நிலை….

தரமான Tik Tok இணைப்பு. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sasi_varnam said:

தரமான Tik Tok இணைப்பு. நன்றி

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

பெண்களின் உடை-வரலாற்றுக்கு வயது 5000….

5000 வருடத்தில் மாறாத ஒரே விடயம்….

பெண்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கும் அவல நிலை….

அண்ணை, பெண்கள் மீதான ஆடைக்கட்டுப்பாடு ஆணின் பயத்தில் இருந்தே வருகிறது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

பெண்கள் உடை எப்படி இருக்க வண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கும் அவல 35+ வருட புலம்பெயர் வாழ்வை கொண்ட தமிழர்கள் பலரும் இங்கே ஈரான் நல்லம், ஆப்கானிஸ்தான் அப்படி ஒண்டும் மோசமில்லை என எழுதும் போது….

ஜனநாயகத்தை விட இப்படியான நாடுகள் உசத்தி என்றே எழுதும் போது, தள்ளாத வயதில் டெக்சஸ் போன ஜேசுதாஸ் மாறி இருக்க வாய்புகள் குறைவு.

நீங்கள் சொல்வது ஒரு வகையில் மிகச் சரியே. சில விருப்பு, வெறுப்புகள் மனிதர்களை விட்டு அகல்வது இல்லை. இதன் அடிப்படை வெறுப்பு என்றே நினைக்கின்றேன். அமெரிக்காவின் மீதும், மேற்கு நாடுகளின் மீதும் இருக்கும் வெறுப்பே அவர்களை நீங்கள் சொல்லியிருக்கும் அடுத்த பக்கம் என்று ஒன்றுக்கு தள்ளிவிடுகின்றது. இஸ்லாமிய மக்களின் மீதான வெறுப்பு, இந்தியர்களின் மீதான வெறுப்பும் இவ்வாறானவையே. இங்கு இன்னொரு பார்வையே சம்பந்தப்பட்டவர்களிடம் கிடையாது.

ஆனால் கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்கள் என்று மனிதர்கள் கருதுவதில் காலப்போக்கில், வாழும் நாட்களிலேயே, நெகிழ்வுகள் உண்டாகின்றன என்றே தெரிகின்றது. நெகிழ்வே இல்லாமல், கல்தூண் போல இருந்து மறைபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் போல............. ஆகக் குறைந்தது பேரப் பிள்ளைகளின் உலகமும், எங்களின் உலகமும் ஒன்றல்ல என்ற புரிதலாவது கிட்டியிருக்கும் என்று நினைக்கின்றேன்.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.