Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலே எதுவும் ஊகம் இல்லை.

கோபுர நிழல் கிழே விழும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மண் கும்பி போன்று செய்து கல்லை மேலே கொண்டு போனார்கள் என்பதுதான் ஒரு ஊகம். சாய்வாக உருவாக்கப்படும் உறுதியான மண்கும்பித் தோற்றம் மிகப் பலமான கோபுரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மண்கும்பியின் பிடிமானம் தரையிலும் இருக்கும். 80டன் கல்லை தாங்கி நிற்கும்படி மிகப் பலமான முறையில் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஊகம் தவறு என்று சொல்வதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன.

அதே வேளை "இந்த ஊகம் தவறு, ஒரே கல் மேலே கொண்டு செல்லப்படவில்லை, பல சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு, கோபுர விமானம் கட்டப்பட்டுள்ளது" என்று முனைவர் கலைக்கோவன் நிறுவியுள்ளார். இதுதான் சரியானது. இங்கே ஊகத்திற்கு இடம் இல்லை.

ஆகவே கோபுரத்தில் கல் இருப்பதில் விளங்க முடியாத அற்புதம் இதுவும் இல்லை. மனித உழைப்பின் சாதனை அது.

நிழலை பற்றி நான் ஒரு போதும் குறிப்பிடவில்லை. சிறிய கல்லென்பதும் ஊர்ஜிதப்படுத்த படவில்லை.

ஆனால் நீங்கள் காட்டிய படம் என்பது ஊகித்து கற்பனையால் வரையபட்டது.

ஆனால் இராமர் அணை படம் சட்டலைட் மூலம் தெளிவாக எடுக்கபட்டது.

எனது சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்காமல் தவிர்த்து விடுகின்றீர்கள் ஏன்???

சீதை இலங்கையிலா சிறை வைக்கபட்டாள்? அப்படியாயின் எந்த இடம்??

திருகோணமலை கடலினுள் இருக்கும் கோயில் எப்படி இராமாயணத்தினுள் வந்தது?

அங்கு இருக்கும் வெந்நீர் ஊற்றுக்கள்

  • Replies 144
  • Views 25.3k
  • Created
  • Last Reply

தமிழினக்ஸ்!

உங்களுக்கு நான் தெளிவாகத்தான் எல்லாவற்றையும் சொல்லி வருகிறேன்.

சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு கோபுர விமானம் அமைக்கப்பட்டதுதான் உண்மை. அதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஓரே கல்லை கொண்டு போய் கட்டினார்கள் என்பது ஒரு தவறான நம்பிக்கை. அப்படித்தான் பல ஆண்டுகளாக நம்பி, கல் மேலே எப்படிப் போயிருக்கம் என்பதற்கு சில ஊகங்களை வெளியிட்டு வந்தார்கள். அப்படியான ஒரு ஊகம்தான் நான் இணைந்த அந்தப் படம். ஆனால் அதை நான் ஏற்றுக் கொள்கவில்லை. ஏற்றுக்கொள்ளாத ஒன்றிற்கு நான் விளக்கம் தரவும் தேவையில்லை.

ஒரு கல் மேலே கொண்டு செல்லப்பட்டது என்ற கருத்து தவறு. ஆகவே அதில் விளங்க முடியாத அற்புதம் எதுவும் இல்லை. பல சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு அங்கே கோபுர விமானம் அமைக்கப்பட்டது.

இராமயணம் என்பது ஒரு அரசியல்ரீதியான கற்பனைக் கதை. திராவிட ஆரியப் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை. அதில் குறிப்பிடப்படும் இடங்களின் பெயர்கள் இன்றைக்கும் இருப்பதனால், அந்தக் கதை உண்மையாகி விடாது.

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

திருகோணமலைக் கடலினுள் இருக்கும் கோயில் பற்றி இராமாயணத்தில் எங்கே வருகின்றது? அப்படி எதுவும் வரவில்லை. சிறுபிள்ளையில் உங்களை சாப்பிடச் செய்வதற்காக உங்களுடைய பாட்டி ஏதாவது கதை சொல்லியிருப்பார். அதையெல்லாம் நம்பிக் கொண்டு கேள்வி கேட்காதீர்கள்.

நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன், நீங்கள் சொல்வது பற்றி இராமாயணத்தில் உள்ள குறிப்புகளை தாருங்கள் என்று.

இல்லாத ஒன்றைப் பற்றி நாம் விவாதிக்க முடியாது.

ஆனால் இராமர் அணை படம் சட்டலைட் மூலம் தெளிவாக எடுக்கபட்டது.

நாசா எடுத்த படத்தில் பாலம் இருக்கு எண்டு நாசா சொன்னதா? இல்லையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினக்ஸ்!

.

சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு கோபுர விமானம் அமைக்கப்பட்டதுதான் உண்மை. அதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

இராமயணம் என்பது ஒரு அரசியல்ரீதியான கற்பனைக் கதை. திராவிட ஆரியப் போரை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை. அதில் குறிப்பிடப்படும் இடங்களின் பெயர்கள் இன்றைக்கும் இருப்பதனால், அந்தக் கதை உண்மையாகி விடாது.

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

திருகோணமலைக் கடலினுள் இருக்கும் கோயில் பற்றி இராமாயணத்தில் எங்கே வருகின்றது? அப்படி எதுவும் வரவில்லை. சிறுபிள்ளையில் உங்களை சாப்பிடச் செய்வதற்காக உங்களுடைய பாட்டி ஏதாவது கதை சொல்லியிருப்பார். அதையெல்லாம் நம்பிக் கொண்டு கேள்வி கேட்காதீர்கள்.

நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன், நீங்கள் சொல்வது பற்றி இராமாயணத்தில் உள்ள குறிப்புகளை தாருங்கள் என்று.

இல்லாத ஒன்றைப் பற்றி நாம் விவாதிக்க முடியாது.

சிறிய கற்கள் என்பதும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்தே. ஆதாரபூர்வமாக நிருபிக்கபடவில்லை.

கற்பனை கதையாக இருக்கலாம். ஆனால் அதில் சரியாக குறிப்பிட்ட இடத்தில் அந்த பாலம் எப்படி அமைந்தது என்பதே கேள்வி இப்போ?

சீதை சிறைவைக்கபட்ட இடம் இராமாயணத்தில் குறிப்பிடபடவில்லை.

இராவணன் சீதையை இங்கே தான் வைத்திருக்கிறேன் என்று சொல்ல முட்டாளா :rolleyes:

திருக்கோணேஸ்வரம்...நீங்களே சொல்கின்றீர்கள் இராமாயணத்தில் எங்கே வருகின்றது என்று.

ஆனால் திருக்கோணேஸ்வர ஆலயம் இராவணன் வழிபட்ட தலம் என்று வரலாறு சொல்கின்றது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இரண்டு முக்கிய விடயங்கள் கவனிக்கபட வேண்டும்

1- சீதை சிறை வைக்கபட்ட இடம் தெரியாது

2- திருக்கோணேஸ்வர ஆலயமும் கூறிப்பிட படவில்லை.

ஆனால் அந்த ஆலயம் கடலுக்குள் உள்ளது நிருபிக்க பட்டுள்ளது. அப்போ இராவணன் இருந்தது உண்மை என்றே நினைக்க தோன்றுகிறது.

அதேபோல இராமேஸ்வரத்தில் இராமாயணத்தில் கூறிப்பிட் இடத்தில் பாலம் அமைந்துள்ளது.

இது இராமர் இருந்தது உண்மை என்றே நினைக்க தோன்றுகிறது.

சீதை இலங்கையில் இரு இடங்களுக்கு யுத்தம் தொடங்கியவுடன் இராவணனால் மாற்றப்பட்டது போல இருக்கின்றது.

1- Wellawaya (http://www.mysrilanka.com/travel/lanka/nature/water_falls.htm)

2-Thisamagrakama (யாரும் இந்த பகுதி சிங்கள மக்கள் இருந்தால் கேட்டு பாருங்கள்)

இன்றும் மக்கள் இந்த இடங்களை இராவணன் பெயரை சொல்லி தான் அழைக்கின்றார்கள்

How did the writers without super space-ranging satellites know about the existence of this bridge? In these ancient accounts, written over 5,000 years ago

இங்கு பாலத்தை கடவுளின் அவதாரமான ஸ்ரீ ராமன் கட்டவில்லை என்று வாதிடும் சபேசன் டங்குவார் போன்றவர்களை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

சபேசன் மனிதரின் சாதனை கடுமையான உழைப்புத்தான் அதைக் கட்டினது இதைக் கட்டினது என்று புருடா விடுறார். இல்லைத் தெரியாமல் தான் கேக்கிறன் எம்பெருமான் பரம்பொருள் வீற்றிருக்கும் இமைய மலையும் மனிதரோ கட்டினது?

டங்குவார் ஒப்பிட்டு காட்டும் கணக்கு அதை விட பெரிய புருடா. எல்லாம் வல்ல ஆதியும் அந்தமும் இல்லாப் பரம்பொருள் கட்டிய பாலத்தை பாவப்பட்ட ஜென்மங்களான மனிதரினால் கட்டக் கூடிய வசதிகளோடு ஒப்பிட்டு 5 நாட்களில் 34கிலோ மீற்றர் கட்ட முடியாதாம்.

விஞ்ஞானம் பகுத்தரிவு என்று மேலும் மேலும் பாவத்தை தேடாது பிராயச்சித்தங்கள் செய்து எப்படி பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து அவனடி சேர்வது என்று யோசியுங்கோ. முதலில் மனிதக் கழிவுகளை அள்ளி ஆன்மீக அனுபவம் பெற்று பாவங்களைக் குறைத்து அடுத்த பிறப்பிலாவது மனிதனாக பிறக்க பாருங்கள்.

குளிக்கத் தெரியாதவர்கள் முகச்சவரம் செய்யத் தெரியதாவர்களின் அறிவுரைகளை தூக்கி வைத்துக் கொண்டு கலாச்சார சீரழிவுகளில் ஈடுபடுபவர்களிற்கு எப்படி மெஞ்ஞான வழி தெரியப்போகுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசா எடுத்த படத்தில் பாலம் இருக்கு எண்டு நாசா சொன்னதா? இல்லையே

ஜயோ தொல்லை :rolleyes: இல்லை....

அதேபோல இராமேஸ்வரத்தில் இராமாயணத்தில் கூறிப்பிட் இடத்தில் தான் உங்கள் வாதத்தின் படி மணல் மேடு or what ever (பாலம்) அமைந்துள்ளது.

முனைவர் கலைக்கோவன் சிறிய கற்கள் மூலம் கோபுர விமானம் கட்டப்பட்டதை நிறுவியிருக்கிறார். அதன் பிறகே கோயில் பற்றிய ஆவணங்கள் பலவற்றில் இருந்து "ஒரு கல் விவகாரம்" நீக்கப்பட்டது. இன்றைக்கு தஞ்சை கோயில் பற்றிய இணையத்தளங்களில் பெரும்பாலானவற்றில் "ஒரு கல்" பற்றி எதுவும் இல்லை. நீக்கப்பட்டுவிட்டன. காரணம் ஒரு கல் என்பது தவறு என்று நிறுவப்பட்டு விட்டது.

நீங்கள் இராமாயணத்தை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதை மக்களின் மனதில் ஒரு சிறப்பான இடம் பிடித்து விட்டது. அதன் அடிப்படையில் பல புதிய கதைகளை உருவாக்கினார்கள். அவைகள்தான் நீங்கள் சொல்கின்ற கதைகள்.

ஒரு பாறை வெட்டப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தைக் கண்டார்கள். உடனடியாக அதை இராவணன் வெட்டு என்று பாமர மக்கள் பெயரிட்டார்கள். ஆனால் இராவணன் பாறையை வெட்டியது பற்றி இராமாயணம் எதையும் சொல்லவில்லை. மக்களாக பின்பு உருவாக்கிய கதை அது.

இதுதான் இராவணன் வெட்டிய பாறை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

இங்குதான் சீதை இருந்தாள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

ஒரு கற்பனைக் கதைக்கு பிற்சேர்க்கையாக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகளை, அந்தக் கற்பனைக் கதைக்கு ஆதரமாகக் கட்டுவதில் எதாவது அர்த்தம் இருக்கிறதா?

நீங்கள் இராமாயணத்திற்கு புவியியல் ஆதாரங்களை காட்ட விரும்பினால், அதை சரியான முறையில் செய்யுங்கள்!

உதாரணத்திற்கு இராமாயணத்தால் வர்ணிக்கப்படும் ஒரு இடத்தை குறிப்பிடுங்கள். அந்த இடம் இராமாயணத்தில் எந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அதன் பிறகு அதையும் தற்பொழுது உள்ள இடங்களையும் ஒப்பிட்டு, இராமாயணத்தில் சொல்லப்பட்ட இடம் இதுதான் என்று தர்க்கரீதியாக நிறுவங்கள்.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

ஆனால் உங்களுக்கு இராமாயணமும் தெரியவில்லை. இராமாயணத்திற்கு பின்பு உருவான கதைகள் பற்றியும் தெரியவில்லை.

பாமர மக்கள் பொழுது போகமால் நாலு கதைகளை சொல்வார்கள். கேட்பதற்கு அவைகள் சுவையாக இருக்கும். இவைகளை கர்ண பரம்பரைக் கதைகள் போன்று கொள்ள முடியுமே தவிர, ஒரு ஆதாரமாக காட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப ரொம்ப துத்துவம் பேசுராறுறுறுறுறுறுறுறுறுறு :rolleyes:

ஜஸ்டினுக்கு செய்திகள் தகவல்கள் எல்லாம் அவதார புரசர்கள் மூலம் தான் வருகின்றன :rolleyes:

விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும்

அப்போ நீங்க மட்டும் பெயர் தகுதி ஓட வந்து இங்கே எழுதிரிங்களோ :wub:

MOHAN PLEASE Justin Biodata provide பண்ணுங்கோ :o:icon_mrgreen:

"கேட்பவன் ஏமாளியாக இருந்தால் எருதும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்" என்பதைத்தான் சந்தர்ப்பத்திற்கேற்ற மாதிரி மாற்றிச் சொல்லியிருந்தேன். நீங்கள் அதைத் தத்துவமாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

1.விக்கிபீடியா என்பது கட்டற்ற கலைக் களஞ்சியம். திறந்த அந்தப் புத்தகத்தில் யாரும் தமக்கு வேண்டிய மூலங்களிலிருந்து தகவல்களைத் திரட்டித் தர முடியும். அதனால் எல்லாத் தகவல்களும் விக்கிபீடியாவில் தவறாக இருக்கின்றன என்று அர்த்தமில்லை. ஆனால் ஒருவர் குரங்கின் நரம்பியல் மற்றும் நடத்தையியல் தெரியாமல் சாதாரண பத்திரிகைச் செய்திகளிலிருந்து குரங்கு ரொக்கட்டில் கீ போர்ட் விளையாடியது என்று எழுதினால் அது நிச்சயமாக நம்பகமில்லாத தகவல் தான். இதற்கு மாற்றீடு நீங்கள் கூறியது போல அவதார புருஷர்களிடம் போவதல்ல.உசாத்துணைப் பட்டியலில் என்ன போட்டிருக்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும். அவை சாதாரண செய்திகளா அல்லது விஞ்ஞான சஞ்சிகைகளில் வந்தவையா எனப் பார்க்க வேண்டும்.நீங்கள் சொல்வது போல அதிபுத்திசாலித்தனமான வேலைகளைக் குரங்கு செய்ததாக நான் நம்பக்கூடிய எந்த மூலத்திலும் காணவில்லை.நான் இருக்கும் பல்கலையில் எலிகளைப் பயன்படுத்தி சில ஆளிகளை இயக்கி அதன் நடத்தையியலைப் படிக்கிறார்கள். அதனால் எலி மனிதரோடு ஆய்வு கூடத்தில் வேலை செய்கிறது என்று நாம் சொல்வதில்லை.

2. தினமுரசின் பின்பக்க வண்ணமயமான பகுதியில் வரும் செய்திகள் சில சமயம் உண்மையான அறிவியல் செய்திகளை இலகு படுத்துகிறோம் பேர்வழி என்று திரித்துக் கூறப்பட்டதையே குறிப்பிட்டேன்."குதிரைக்கு எயிட்ஸ், பாம்பு முகத்துடன் பிறந்த குழந்தை" இப்படி வண்ணமயமான செய்திகளை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது.சுண்டல் தினமணியிலிருந்து சுட்டுப் போடும் சில செய்திகள் இப்படிப்பட்டவை. இதனால் தான் இவை நம்பிக்கையான அறிவியல் மூலங்கள் அல்ல என்றேன்.

3.என் தகுதி பற்றிய உங்கள் தனிப்பட்ட எள்ளல்? விவாதம் செய்கையில் உங்கள் நாகரீகமான நடத்தையின் வெளிப்பாடு. அவ்வளவே!

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை பெரும் கோவில் கட்ட கற்களை எப்படி வெட்டி எடுத்தார்கள் என்று பார்த்தீர்களா?

காலத்துக்கு காலம் தொழில் நுட்பம் மாறலாம்.

இப்பொ கடினமான பாறைகளை துளையிட CO2 Laser Beam மூலம் முடியும் என்கிறார்கள்.

அண்மையில் சன் டிவியில் ஒரு தமிழ் நாட்டு இளைஞர் உலோகத்தாலான ஒரு கரண்டியை தனது கண்ணால் உற்று நோக்கிய படி அதை தடவும் போது கரண்டி முறிந்து விழுந்தது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?

அட சீ லைட்ட அடிச்சு பாறையில ஓட்டை போடுறதா சொல்லுறாங்க. என்ன மாதிரி எல்லாம் கயிறு விடுறாங்க :lol::unsure: இது தான் எமது நிலைமை

ஓரு அணுவை எம்மால் அதாவது எமது பார்வையின் சக்த்தியால் அசைக்க முடியும்

பல அணுக்களால் ஆன ஒரு பொருளை நாம் சிறிது சிறிதாக பிரித்து (பார்வையால்) சிறு சிறு அணுக்களாக்கினால் எமது பார்வையாலேயே ஒரு பொருளை அசைக்க முடியும் இது விஞ்ஞானம்

இதனை பலரும் நிருபித்திருக்கிறார்கள் அவ்வாறான ஒன்றே அந்த தமிழ்நாட்டு இளைஞனின் முயற்சியும்.

தஞ்சை பெரியார் கோவில் கோபுரம் ஓரே ஒரு கல்லில் மட்டுமே செதுக்கப்பட்டிருப்பது அதன் இன்னொரு சிற்ப்பு. அதை உந்து கோல் சக்த்தியை பல ஆயிர கணக்கான ஆட்கள் பாவித்து எற்கனவே மரக்குத்திகளால் அமைத்திருந்த சாய்வான பாதையால் உருட்டி சென்றார்கள் தஞ்சை கோவில் 1500-1600 இற்கு இடைப்பட்ட காலத்திலேயே கட்டப்பட்டது அதில் வியப்பிற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் அந்த மனிதர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

எகிப்த்து நாட்டில் அமைந்திருக்கும் பிரமிட்டுக்கள் எத்தனையோ தொன் எடையுள்ள கற்களால் ஆனவை

அதை ஓருவிதமான பரசூட் போன்ற ஒன்றை பாவித்தே காற்றில் பறக்க கூடிய ஒன்றின் உதவியுடனேயே மேலே துக்கினார்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முனைவர் கலைக்கோவன் சிறிய கற்கள் மூலம் கோபுர விமானம் கட்டப்பட்டதை நிறுவியிருக்கிறார். அதன் பிறகே கோயில் பற்றிய ஆவணங்கள் பலவற்றில் இருந்து "ஒரு கல் விவகாரம்" நீக்கப்பட்டது. இன்றைக்கு தஞ்சை கோயில் பற்றிய இணையத்தளங்களில் பெரும்பாலானவற்றில் "ஒரு கல்" பற்றி எதுவும் இல்லை. நீக்கப்பட்டுவிட்டன. காரணம் ஒரு கல் என்பது தவறு என்று நிறுவப்பட்டு விட்டது.

நீங்கள் இராமாயணத்தை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதை மக்களின் மனதில் ஒரு சிறப்பான இடம் பிடித்து விட்டது. அதன் அடிப்படையில் பல புதிய கதைகளை உருவாக்கினார்கள். அவைகள்தான் நீங்கள் சொல்கின்ற கதைகள்.

ஒரு பாறை வெட்டப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தைக் கண்டார்கள். உடனடியாக அதை இராவணன் வெட்டு என்று பாமர மக்கள் பெயரிட்டார்கள். ஆனால் இராவணன் பாறையை வெட்டியது பற்றி இராமாயணம் எதையும் சொல்லவில்லை. மக்களாக பின்பு உருவாக்கிய கதை அது.

இதுதான் இராவணன் வெட்டிய பாறை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

இங்குதான் சீதை இருந்தாள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

ஒரு கற்பனைக் கதைக்கு பிற்சேர்க்கையாக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகளை, அந்தக் கற்பனைக் கதைக்கு ஆதரமாகக் கட்டுவதில் எதாவது அர்த்தம் இருக்கிறதா?

நீங்கள் இராமாயணத்திற்கு புவியியல் ஆதாரங்களை காட்ட விரும்பினால், அதை சரியான முறையில் செய்யுங்கள்!

உதாரணத்திற்கு இராமாயணத்தால் வர்ணிக்கப்படும் ஒரு இடத்தை குறிப்பிடுங்கள். அந்த இடம் இராமாயணத்தில் எந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அதன் பிறகு அதையும் தற்பொழுது உள்ள இடங்களையும் ஒப்பிட்டு, இராமாயணத்தில் சொல்லப்பட்ட இடம் இதுதான் என்று தர்க்கரீதியாக நிறுவங்கள்.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

ஆனால் உங்களுக்கு இராமாயணமும் தெரியவில்லை. இராமாயணத்திற்கு பின்பு உருவான கதைகள் பற்றியும் தெரியவில்லை.

பாமர மக்கள் பொழுது போகமால் நாலு கதைகளை சொல்வார்கள். கேட்பதற்கு அவைகள் சுவையாக இருக்கும். இவைகளை கர்ண பரம்பரைக் கதைகள் போன்று கொள்ள முடியுமே தவிர, ஒரு ஆதாரமாக காட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

என்ன சபேசண்ணா இப்படி சொல்லிவிட்டீர்கள்???

நான் சீதையை இராவணன் சிறை வைத்திருந்த இடத்தை கண்டியிலே நேரிலே சென்று பார்த்திருக்கிறேன்

அதை எவ்வாறு உங்களால் மறுக்க முடியும் எல்லாமுமே ஆதாரத்துடன் அங்கே இருக்கின்றன

குறிப்பிட்டு சொல்வதென்றால் .................. சீதை விட்ட கண்ணீர் ஒரு அருவியாக ஒடியதற்கான அடையாளங்கள் அங்கே இருக்கின்றன சில காலங்களிற்கு முன்பு நீர் ஒடியது போன்று அப்படியே தெரிகின்றது. அதை ஒருவர் சொல்லி சொல்லி இடங்களையும் காட்டினார் தன்னை ஒரு ஆசிரியை என்று எனக்கு ஏற்கனவே தன்னை அறிமுக படுத்தி கொண்ட ஒருவர் உடனே இ;த அடங்களில் எல்லாம் தொட்டு கும்பிட்டார்............... என்க்கு ஒரே ஒரு கேள்வி தலையை பித்துக் கொண்டிருந்தது ஆதாவது..................... சீதைவிட்ட கண்ணீரே இப்படி ஆறாக ஒடியிருப்பின்????? ***

சிங்கள பொத்ததர்கள் திட்டமிட்டே மகாவலிகங்கையின் மகிமையை மறைத்துவிட்டார்களோ???????

இந்த இந்திய ஆய்வாளர்கள் மகாவலியை ஆராயமல் விடுவது நல்லது காரணம் பல கிராமத்து வறியமக்கள் மகாவலி நீரைத்தான் குடி நீராக பாவிக்கின்றார்கள்.

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுகஸ்... அவர் மேல கருத்து எழுதி அரை மணித்தியாலம்

தானே ஆகுது. மட்டுஸ் வந்து பார்த்து பிறகு வெட்ட வேண்டாமோ?

அதுக்குள்ள என்ன அவசரம்? :unsure:

இது ஒரு எடுத்துக்காட்டு. இதற்கு முன்னரும் பல விடயங்கள் பலராலும் எழுதப்பட்டு இங்கு விடப்பட்டுள்ளது. இவற்றுள் பல இந்துக்களை மனம் நோகடிக்கச் செய்யும் செயல். மதக் கலவரத்தை தூண்டக் கூடியது. குஸ்பு என்ற இஸ்லாமிய நடிகை.. இந்துக்கடவுளின் முன் செருப்போட இருந்து அதைச் சொன்னா அது மதக்கலவரத்தைத் தூண்டும் என்றால்.. சீதையை பற்றிய பகுத்தரிவு துப்பிகளின் விவாதம் மட்டும் மதக்கலவரத்தைத் தூண்டாதாம்.

குஸ்பு இஸ்லாமியப் பெண் என்பது உண்மை. அவர் இஸ்லாத்துக்கு எதிரானவரோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால் மக்கள் மதிப்பளிக்கும் ஒரு விடயத்தில் அது அறிவுபூர்வமா இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்.. அதற்கு மதிப்புச் செய்ய வேண்டும். பள்ளிவாசலில் போய் குஸ்பு இப்படிச் செய்வாரா..??! குஸ்பு செய்யுறதை குஸ்பை வைச்சுத்தானே சொல்ல முடியும். அதுக்கு மதக்கலவரத்தை ஊட்டிறது என்று நுணுக்கம் பார்ப்பவர்களுக்கு இங்கு எத்தனையோ தலைப்புக்களில் இந்துக்களின் மதிப்புக்குரிய.. சீதை இராமர் என்ற நிலைகள் கேவலப்படுத்தப்படுகின்றன. அதையேன் மதக்கலவரத்தைத் தூண்டும் செயலாப் பார்க்காம.. சமூக விழிப்புணர்வாப் பாக்கினம்.

இஸ்லாமிய நாடுகளில் ஒரு இந்துக்கடவுளை வைத்து வணங்க முடியாது. ஆனால் குஸ்பு இந்துக்கடவுளின் முன் செருப்போட இருக்க முடியும். அந்தளவுக்கு இந்து மதத்தின் நெகிழ்வுப் போக்குத்தான் இவ்வளவுக்கும் சுதந்திரமான விமர்சனங்களை உள்வாங்க அனுமதிச்சிட்டு இருக்குது. இந்துக்களாலும் இவற்றை பெரிய விடயங்களாக்கி கலவரத்தை மூட்ட முடியும்..! ஆனால் அவங்க அந்தளவுக்கு தீவிரமான மதவெறியர்கள் அல்ல..!

எழுவானின் செயல் குஸ்புக்கு வழிபாடும் செய்யும் நிலையையே என்னில் பிரதிபலிக்கிறது. எழுவானின் செயலை வன்மையாகவே கண்டிக்கிறேன். எனிமேலும் அவர் பாரபட்சமாக நடக்கக் கூடாது. நடப்பின் அவரின் மட்டுறுத்தினர் பதவி என்பது எம்மாலும் மதிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது..! :lol::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

1.விக்கிபீடியா என்பது கட்டற்ற கலைக் களஞ்சியம். திறந்த அந்தப் புத்தகத்தில் யாரும் தமக்கு வேண்டிய மூலங்களிலிருந்து தகவல்களைத் திரட்டித் தர முடியும். அதனால் எல்லாத் தகவல்களும் விக்கிபீடியாவில் தவறாக இருக்கின்றன என்று அர்த்தமில்லை.

2. தினமுரசின் பின்பக்க வண்ணமயமான பகுதியில் வரும் செய்திகள் சில சமயம் உண்மையான அறிவியல் செய்திகளை இலகு படுத்துகிறோம் பேர்வழி என்று திரித்துக் கூறப்பட்டதையே குறிப்பிட்டேன்."குதிரைக்கு எயிட்ஸ், பாம்பு முகத்துடன் பிறந்த குழந்தை" இப்படி வண்ணமயமான செய்திகளை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது.சுண்டல் தினமணியிலிருந்து சுட்டுப் போடும் சில செய்திகள் இப்படிப்பட்டவை. இதனால் தான் இவை நம்பிக்கையான அறிவியல் மூலங்கள் அல்ல என்றேன்.

3.என் தகுதி பற்றிய உங்கள் தனிப்பட்ட எள்ளல்? விவாதம் செய்கையில் உங்கள் நாகரீகமான நடத்தையின் வெளிப்பாடு. அவ்வளவே!

இதுவும் உங்களால் தான் எழுதப்பட்டது

விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும் துணுக்குச் செய்திகளாகவோ தான் தெரிகின்றன. இதைப் பார்த்து ஒருவர் அறிவியல் இது தான் என்று நம்பிக் கொண்டிருந்தால், மிக்க மகிழ்ச்சி,

இதிலிருந்து என்ன விளங்குகின்றது? :lol::unsure::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனைவர் கலைக்கோவன் சிறிய கற்கள் மூலம் கோபுர விமானம் கட்டப்பட்டதை நிறுவியிருக்கிறார். அதன் பிறகே கோயில் பற்றிய ஆவணங்கள் பலவற்றில் இருந்து "ஒரு கல் விவகாரம்" நீக்கப்பட்டது. இன்றைக்கு தஞ்சை கோயில் பற்றிய இணையத்தளங்களில் பெரும்பாலானவற்றில் "ஒரு கல்" பற்றி எதுவும் இல்லை. நீக்கப்பட்டுவிட்டன. காரணம் ஒரு கல் என்பது தவறு என்று நிறுவப்பட்டு விட்டது.

நீங்கள் இராமாயணத்தை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதை மக்களின் மனதில் ஒரு சிறப்பான இடம் பிடித்து விட்டது. அதன் அடிப்படையில் பல புதிய கதைகளை உருவாக்கினார்கள். அவைகள்தான் நீங்கள் சொல்கின்ற கதைகள்.

ஒரு பாறை வெட்டப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தைக் கண்டார்கள். உடனடியாக அதை இராவணன் வெட்டு என்று பாமர மக்கள் பெயரிட்டார்கள். ஆனால் இராவணன் பாறையை வெட்டியது பற்றி இராமாயணம் எதையும் சொல்லவில்லை. மக்களாக பின்பு உருவாக்கிய கதை அது.

இதுதான் இராவணன் வெட்டிய பாறை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

இங்குதான் சீதை இருந்தாள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன?

ஒரு கற்பனைக் கதைக்கு பிற்சேர்க்கையாக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகளை, அந்தக் கற்பனைக் கதைக்கு ஆதரமாகக் கட்டுவதில் எதாவது அர்த்தம் இருக்கிறதா?

நீங்கள் இராமாயணத்திற்கு புவியியல் ஆதாரங்களை காட்ட விரும்பினால், அதை சரியான முறையில் செய்யுங்கள்!

உதாரணத்திற்கு இராமாயணத்தால் வர்ணிக்கப்படும் ஒரு இடத்தை குறிப்பிடுங்கள். அந்த இடம் இராமாயணத்தில் எந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அதன் பிறகு அதையும் தற்பொழுது உள்ள இடங்களையும் ஒப்பிட்டு, இராமாயணத்தில் சொல்லப்பட்ட இடம் இதுதான் என்று தர்க்கரீதியாக நிறுவங்கள்.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

ஆனால் உங்களுக்கு இராமாயணமும் தெரியவில்லை. இராமாயணத்திற்கு பின்பு உருவான கதைகள் பற்றியும் தெரியவில்லை.

பாமர மக்கள் பொழுது போகமால் நாலு கதைகளை சொல்வார்கள். கேட்பதற்கு அவைகள் சுவையாக இருக்கும். இவைகளை கர்ண பரம்பரைக் கதைகள் போன்று கொள்ள முடியுமே தவிர, ஒரு ஆதாரமாக காட்ட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

அப்படி என்றால் இராமர் பாலம் அது இல்லை என்று வாதாட உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? அதை நீங்களும் தர்கரீதியாக நிறுவுங்கள்

அதன் பிறகே கோயில் பற்றிய ஆவணங்கள் பலவற்றில் இருந்து "ஒரு கல் விவகாரம்" நீக்கப்பட்டது.

இது பற்றி எனக்கு தெரியாது. விசாரித்து பார்த்து விட்டு சொல்கிறேன்

இது நீங்கள் எழுதியது தான்

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

இதுவும் உங்கள் பதில்தான்

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

:lol::unsure::o

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

இராமன் இவர்களுக்குப் பயன்படுதோ இல்லையோ, அது பற்றிய பழமொழி ஒன்று, இவர்கள் பற்றிய உவமைக்குப் பயன்படும்.

விடிய விடிய இராமன் கதை, விடிந்த பிறகு ராமன் சீதைக்கு என்ன முறை என்று சொல்லுவார்கள்.

என்ன தான் திருப்பித் திருப்பிச் சொன்னாலும், நாளைக்கும் கோடு விழுந்த சீடி மாதிரி திரும்பவும் இதைப் பற்றித் தான் தொடக்குவினம்.

தமிழ்லினக்ஸ்... உங்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் தொடருங்கோ! இவர்களுக்காக மினக்கெட்டால் நேரம் தான் வீணாகப் போகும்....

:lol: ..just make fun with them. sametime we can learn lot of things. I love to learn legend.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ..just make fun with them. sametime we can learn lot of things. I love to learn legend.

ஏன் நான் தமிழில் தானே கதைத்தேன். உடனே ஏன் ஆங்கிலத்துக்குத் தாவுகின்றீர்கள். இப்படிப் போனால் நல்லாத் தமிழ் உருப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நான் தமிழில் தானே கதைத்தேன். உடனே ஏன் ஆங்கிலத்துக்குத் தாவுகின்றீர்கள். இப்படிப் போனால் நல்லாத் தமிழ் உருப்படும்.

மன்னிக்கவும். வேறு வேலையாய் இருந்தேன். அது தான்.

இதை பாருங்கள். எமது மூதாதையரை பற்றியது

http://www.livescience.com/technology/0505...y_robotics.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பாருங்கள். எமது மூதாதையரை பற்றியது

http://www.dukenews.duke.edu/2005/05/monkeyrobot.html

http://www.livescience.com/technology/0505...y_robotics.html

http://newsroom.ucla.edu/portal/ucla/srp-view.aspx?id=15078

http://www.newscientist.com/article/dn1248...or-peanuts.html

http://english.pravda.ru/science/19/94/377/13706_monkey.html

எமது மூதாதையருக்கு விமானம் ஓட்டவும் நாசா பழக்கியதாக சொல்கின்றார்கள்

அப்போ நடந்த சம்பவம் இது என்று சொன்னார்கள். உண்மை தன்மை எனக்கு தெரியாது. ஆனால் இது வீடியோவில் இருப்பதாக சொல்கின்றார்கள்???

பயிற்சி கூடத்தில் நடந்தது கணனி மூலம்

இரண்டு நமது மூதாதையர்களை விமானியின் பகுதியில் இருத்தி பரிசோதனை பண்ணியிருக்கின்றார்கள்.

ஒரு கட்டத்தில் நாசா விஞ்ஞானிகள் ஓரு நமது மூதாதையருக்கு இப்படி செய்யென்று தகவல் அனுப்ப

அவர் உடனே நீ விருப்பம் என்றால் வந்து செய்யென்று பதில் அளித்தாராம்

சரி என்று அடுத்தவருக்கு அனுப்ப

அவர் உடனே பக்கத்தில் இருப்பருக்கு சொல்லுங்கள் என்று பதில் அனுப்பினாராம்.

இதை மறுதலிக்க வருக வருக என்று அழைக்கிறேன். :lol::unsure:

இது கற்பனையா நிஜமா என்று முடிவில் சொல்கிறேன் :o

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு எடுத்துக்காட்டு. இதற்கு முன்னரும் பல விடயங்கள் பலராலும் எழுதப்பட்டு இங்கு விடப்பட்டுள்ளது. இவற்றுள் பல இந்துக்களை மனம் நோகடிக்கச் செய்யும் செயல். மதக் கலவரத்தை தூண்டக் கூடியது. குஸ்பு என்ற இஸ்லாமிய நடிகை.. இந்துக்கடவுளின் முன் செருப்போட இருந்து அதைச் சொன்னா அது மதக்கலவரத்தைத் தூண்டும் என்றால்.. சீதையை பற்றிய பகுத்தரிவு துப்பிகளின் விவாதம் மட்டும் மதக்கலவரத்தைத் தூண்டாதாம்.

குஸ்பு இஸ்லாமியப் பெண் என்பது உண்மை. அவர் இஸ்லாத்துக்கு எதிரானவரோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால் மக்கள் மதிப்பளிக்கும் ஒரு விடயத்தில் அது அறிவுபூர்வமா இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்.. அதற்கு மதிப்புச் செய்ய வேண்டும். பள்ளிவாசலில் போய் குஸ்பு இப்படிச் செய்வாரா..??! குஸ்பு செய்யுறதை குஸ்பை வைச்சுத்தானே சொல்ல முடியும். அதுக்கு மதக்கலவரத்தை ஊட்டிறது என்று நுணுக்கம் பார்ப்பவர்களுக்கு இங்கு எத்தனையோ தலைப்புக்களில் இந்துக்களின் மதிப்புக்குரிய.. சீதை இராமர் என்ற நிலைகள் கேவலப்படுத்தப்படுகின்றன. அதையேன் மதக்கலவரத்தைத் தூண்டும் செயலாப் பார்க்காம.. சமூக விழிப்புணர்வாப் பாக்கினம்.

இஸ்லாமிய நாடுகளில் ஒரு இந்துக்கடவுளை வைத்து வணங்க முடியாது. ஆனால் குஸ்பு இந்துக்கடவுளின் முன் செருப்போட இருக்க முடியும். அந்தளவுக்கு இந்து மதத்தின் நெகிழ்வுப் போக்குத்தான் இவ்வளவுக்கும் சுதந்திரமான விமர்சனங்களை உள்வாங்க அனுமதிச்சிட்டு இருக்குது. இந்துக்களாலும் இவற்றை பெரிய விடயங்களாக்கி கலவரத்தை மூட்ட முடியும்..! ஆனால் அவங்க அந்தளவுக்கு தீவிரமான மதவெறியர்கள் அல்ல..!

எழுவானின் செயல் குஸ்புக்கு வழிபாடும் செய்யும் நிலையையே என்னில் பிரதிபலிக்கிறது. எழுவானின் செயலை வன்மையாகவே கண்டிக்கிறேன். எனிமேலும் அவர் பாரபட்சமாக நடக்கக் கூடாது. நடப்பின் அவரின் மட்டுறுத்தினர் பதவி என்பது எம்மாலும் மதிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது..! :wub::lol:

நெடுக்ஸ்! நீங்கள் இப்படி எல்லாம் மட்டுறுத்தின்ர்களிடம் முறையிடுவது எனக்கு சரியாகப் படவில்லை.

கம்பனால் சீதை பட்ட அசிங்கத்தின் ஒரு துளியைக்கூட யாழ்களத்தால் அசிங்கப்படபோவதில்லை சீதாபிராட்டி.

எனக்கு இன்னுமொரு சந்தேகம் அசோகவதனத்தில் சீதை சும்மா இருந்ததாகதானே கம்பன் மறைமுகமாக கூறுகின்றான். கண் அருவி அரசமிலைத் தளிர் வரைக்கும் சென்றதாகதானே கூறுகின்றான். ஆடை இருந்தால் இதன் பாதையில் றொம்ப மறிப்புக்கள் இருந்து விடுமே.

இதை எல்லாம் தானும் கண்டு சபையிலும் வெளிப்படுத்துவது கேவலமாக வேறு இல்லையா?

Edited by தேவன்

திமிழ்லினக்ஸிற்கும் மீண்டும் நான் எழுதியது புரியவில்லை.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

என்று சொல்லியிருக்கிறேன்

அதாவது இராமாயணத்தில் நீங்கள் சொல்கின்ற இடங்கள் குறித்த குறிப்புக்கள் எதுவும் இல்லை என்று சொல்கிறேன்.

ஆனால் அவ்வாறான குறிப்புக்கள் இருந்தால்தான் தர்க்கரீதியாக என்றாலும், இந்த இடங்களை இராமாயணத்திற்கான ஆதரமாகக் கொள்ளலாம்.

அதனால்தான் இராமாயணம் நீங்கள் சொல்கின்ற கதைகள் பற்றிய குறிப்புக்களை என்னுடைய அறிதலின்படி தரவில்லை என்று சொல்லி, அப்படி இருந்தால் தாருங்கள் என்று உங்களைக் கேட்கிறேன்.

இராமாயணம் நடந்திருக்கும் என்று நம்பிய பாமர மக்கள் சில இடங்களை, இங்குதான் அது நடந்தது இது நடந்தது என்று சொல்லி வைத்தார்கள். இவைகளை அறிவியல் ஆதாராங்கள் என்று சொல்வது மடமை.

நெடுக்காலபோவான் குஸ்பு பற்றி சொல்லியிருக்கிறார்.

குஸ்பு இந்துக் கோயிலுக்கு சென்ற இந்துக் கடவுள்களை அவமதிக்கவில்லை. ஒரு சினிமா விழா நடக்கின்ற மேடையில், மற்ற அனைத்து நடிகர்களைப் போன்று அவரும் பாதணியோடு அமர்ந்திருந்தார். அதிலே கடவுள் சிலையை வைத்ததற்கு அவர் என்ன செய்வார்?

கடவுள் சிலை இருப்பதனால் மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் பாதணிகளை களற்றிவிட்டு அமர்ந்திருக்க, குஸ்பு மட்டும் பாதணியோடு அமர்ந்திருந்தால் அதை அவமதிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

குஸ்பு முஸ்லீம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இந்து வெறியர்கள் வழக்குப் போட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமிழ்லினக்ஸிற்கும் மீண்டும் நான் எழுதியது புரியவில்லை.

உதாரணமாக சீதை இருந்த இடம் பற்றி இராமாயணம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்! அதில் குறிப்பிடப்படும் இடங்களோடு ஒப்பிடக்கூடிய அம்சங்கள் திஸ்சரகமவில் உள்ளனவா என்று பாருங்கள். இரண்டையும் ஒப்பிட்டு இராமாயணம் குறிப்பிடும் இடம் இதுதான் என்று தர்க்கியுங்கள்!

சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டதாக இராமாயணம் சொல்கிறது. ஆனால் இன்றைய இலங்கையில் இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று உறுதியாகச் சொல்லும்படி இராமாயணம் எந்தக் குறிப்பையும் தரவில்லை.

என்று சொல்லியிருக்கிறேன்

அதாவது இராமாயணத்தில் நீங்கள் சொல்கின்ற இடங்கள் குறித்த குறிப்புக்கள் எதுவும் இல்லை என்று சொல்கிறேன்.

ஆனால் அவ்வாறான குறிப்புக்கள் இருந்தால்தான் தர்க்கரீதியாக என்றாலும், இந்த இடங்களை இராமாயணத்திற்கான ஆதரமாகக் கொள்ளலாம்.

அதனால்தான் இராமாயணம் நீங்கள் சொல்கின்ற கதைகள் பற்றிய குறிப்புக்களை என்னுடைய அறிதலின்படி தரவில்லை என்று சொல்லி, அப்படி இருந்தால் தாருங்கள் என்று உங்களைக் கேட்கிறேன்.

இராமாயணம் நடந்திருக்கும் என்று நம்பிய பாமர மக்கள் சில இடங்களை, இங்குதான் அது நடந்தது இது நடந்தது என்று சொல்லி வைத்தார்கள். இவைகளை அறிவியல் ஆதாராங்கள் என்று சொல்வது மடமை.

இராமாயணத்தில் நீங்கள் சொல்கிறபடி கூறிப்புகள் இருப்பதாக நானும் அறியவில்லை..

இராமாயணம் நடந்திருக்கும் என்று நம்பிய ....இதை அப்படியென்று சொல்ல முடியாது. இராவணனை பற்றி செய்திகள் இலங்கையில் தான் அதிகம் இருக்கின்றது. அது இராமாயணத்தோடு தொடர்பு படுகின்றது.

திருகோணேஸ்வரத்தையே எடுத்து கொள்ளுங்கள் உதாரணமாக.

அப்போ அதுவும் கதையா? கடலுக்குள் இருப்பது கற்பனையா?

பல்லாண்டு காலமாக கதையாய் இருந்த கோவில் இப்போ கடலுக்குள் இருப்பது நிருபிக்கபட்டுள்ளது.

அதே போல தான் காரைக்காலுக்கு அண்மையில் கடலுக்கடியில் இருக்கும் நகரம் கதையாய் தான் இருந்தது இப்போ நிருபிக்கப்பட்டுள்ளது.

அப்போ இராமர் பாலம் பற்றி செய்தியும் உண்மையாக தான் இருக்க வேண்டும்.

கதைகளில் சில பகுதிகள் மிகைப்படுத்த பட்டிருக்கலாம். ஆனால் மூலம் உண்மையாக தான் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் இது தான் நீங்கள் கூறிப்பிட்ட டாக்டர். கலைக்கோவனனின் பேட்டி

1. தஞ்சைக் கோயிலின் விமானம் ஒரே கல்லால் னது அல்ல என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

சில வருடங்களுக்கு முன், ‘வரலாறு’ பத்திரிகைக்காக, பன்னிரண்டு நபர்கள் கொண்ட எங்கள் குழு, தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்யச் சென்றிருந்தது. தஞ்சைப் பெரிய கோயிலை பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை ஆய்வு செய்யக் கிளம்பினோம். அப்படிப் பிரித்ததில், தஞ்சை விமானத்தின் ஆய்வு, எங்கள் குழுவில் புதிதாகச் சேர்ந்த ஒருவருக்குச் சென்று சேர்ந்தது. விமானத்தில் அவர் பார்க்கும் கல்வெட்டுக்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவரது ஆய்வுக் கட்டுரையை எழுத வேண்டும் என்று நான் அவருக்குச் சொன்னேன். எனக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரையே விமானத்தின் மீதும் ஏறச் சொன்னேன். ஒரு பெரிய கயிற்றின் உதவியைக் கொண்டு அவரும் மேலே ஏறினார் (ASIயைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் ஏறுவது வழக்கம்)- ஆனால் அவரால் அங்கிருந்த கல்வெட்டுக்களை இன்னதென்று இனங்காண முடியவில்லை. வேறு வழியில்லாததால், நானே விமானத்தின் மீது ஏறினேன். அங்கே, பிரம்மரந்திரக் கல்லின் மீது சில சிமெண்ட் பூச்சுக்களைக் கண்டேன். ASIக்காக அங்கே வேலை செய்து கொண்டிருந்த கொத்தனர் ஒருவரை அழைத்து, அந்தப் பூச்சுக்களைப் பற்றிக் கேட்டேன். ‘விமானம் ஏழெட்டுக் கற்களால் ஆனது’ என்றும், ‘அதை ‘சுதை’யால்(சுதை என்பது சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவை) பூசி மூடியிருந்தனர்’ என்றும் அவர் கூறினார்.

என்னால் இதை நம்ப முடியவில்லை. நீலகண்ட ஸாஸ்திரிகளும், மற்ற சரித்திர நிபுணர்களும் ‘விமானம் ஒரே கல்லால் ஆனது’ என்று கூறியிருந்தனர்.

இதற்குப் பிறகு, 1930க்களில் வெளிவந்திருந்த ASIயின் வெளியீடுகளையும், மற்ற சரித்திர சிரியர்களின் புத்தகங்களையும் படித்துப் பார்த்தேன். அவர்கள் எல்லோருமே ‘விமானமும் பிரம்மரந்திரக் கல்லும் ஒரே கல்லால் ஆனது அல்ல’ என்றே குறிப்பிட்டிருந்தனர். உண்மையில், தஞ்சைக் கோயிலின் விமானத்தின் கற்கள் ஆரஞ்சுச் சுளைகளைப் போல் அடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். விமானத்தின் மீது சுதைப் பூச்சு இருப்பதைக் காணலாம். விமானம் ஒரே கல்லால் ஆனது என்றால், வெளியிலே சுதைப் பூச்சு எதற்கு?

விமானம் ஒரே கல்லால் ஆனது இல்லை என்பதால், சாரங்களுக்கும் தேவையில்லாமல் போய்விட்ட்து. ‘சாரப்பள்ளம்’ என்ற கிராமத்திலிருந்து சாரங்களை உபயோகித்தார்கள் என்பதற்கும் எந்த தாரமும் இல்லை. சிறிய அளவிலான கற்களை, உருளைகளை( pulley system) உபயோகித்து மேலே ஏற்றினார்கள்.

இதற்கான எதிர்தரப்பு கேள்வி டாக்டர். கலைக்கோவனனிடம்

தஞ்சை கோவிலில் பல இடங்களில் வெடிப்புகள் தோன்றியுள்ளன. அதாவது கற்கள் ஒன்றிலிருந்து ஒன்றுவிலக தொடங்கியுள்ளன.

உங்கள் ஆராச்சியின் படி தஞ்சைக் கோயிலின் விமானத்தின் கற்கள் ஆரஞ்சுச் சுளைகளைப் போல் அடுக்கப்பட்டிருக்கின்றன

அப்படியென்றால் அதில் ஏதாவது வெடிப்புகள் போன்ற அறிகுறி தெரிகின்றதா?

பதில் இல்லை இதற்கு

முனைவர் கலைக்கோவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டது யார்? எப்பொழுது இந்தக் கேள்வி கேட்கப்பட்டது?

இதை எங்கே அறிந்து கொண்டீர்கள்?

இதை முழுமையாக தர முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனைவர் கலைக்கோவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டது யார்? எப்பொழுது இந்தக் கேள்வி கேட்கப்பட்டது?

இதை எங்கே அறிந்து கொண்டீர்கள்?

இதை முழுமையாக தர முடியுமா?

இதை எனது இணைய நண்பர் ஒருவர் தான் அனுப்பியிருந்தார். யாரோ தொல் பொருள் ஆராச்சி குழுவினருக்கு தான் இந்த பேட்டியை வழங்கி இருத்தல் வேண்டும். அதன் பின்னர் கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்று சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வீடியோ விளையாட்டை விளையாடுபவர் ஏன் இராம பாலம் அமைக்க உதவியிருக்க முடியாது?

சொல்லி கொடுத்தால் செய்வார் போல தான் இருக்கு

ஆனால் விளையாடும் போது இடையில் விட்டுவிட்டு ஓடவும் பார்கிறார் போலவுமுள்ளது

அதுதான் இராமர் பாலம் இடைஇடையே முறிந்துள்ளதோ தெரியவில்லை :wub::lol::lol:

http://www.eelamtube.com

இத்தளம் இன்னும் முழுமையாக செய்து முடிக்கவில்லை. பார்க்க முடியாமல் இருந்தால் அறிய தரவும். (windows vista users)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.