Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவத்தினரால் 11 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 13 பேர் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதினொறு பள்ளிச் சிறுமிகள் உட்பட 13 அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வானில் செல்லும்போது கொக்காவில் பகுதியில் குறிவைப்பு.

உண்மையாகவா எங்கு நடந்தது

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை 11.30 மணியளவில் கொக்காவில் எனுமிடத்தில்.

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் மேற்கில் உள்ள ஐயன்கேணியில் இன்று செவ்வாய்க்கிழமை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாவீரர் நாளையொட்டி தமது உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்துவதற்காக பாடசாலைச் சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் வானில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை இலக்கு வைத்து கொக்காவில்- துணுக்காய் வீதியில் இன்று முற்பகல் 11:30 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊர்தி மீது கிளைமோர் தாக்குதல்

முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதி வெள்ளமலை என்னுமிடத்தில் நேற்றிரவு சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊர்தி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 8:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஊர்தியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

http://www.puthinam.com/

சிறிலங்கா இராணுவத்தினரால் 11 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 13 பேர் படுகொலை

[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007, 03:46 PM ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் மேற்கில் உள்ள ஐயன்கேணியில் இன்று செவ்வாய்க்கிழமை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாவீரர் நாளையொட்டி தமது உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்துவதற்காக பாடசாலைச் சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் வானில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை இலக்கு வைத்து கொக்காவில்- துணுக்காய் வீதியில் இன்று முற்பகல் 11:30 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

உண்மையிலேயே இது இராணுவத்தினரால்தான் செய்யப்படுகிறதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்கும் கேள்விக்கும் சம்பந்தமே இல்லை. அதுசரி, கொலயைச் செய்தது யார் என்று உங்கள் அதீத மூளையைக் குழப்பிக் கண்டுபிடியுங்களேன் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் உரையக் குழப்புவதுதானே எதிரியின் நோக்கம் ? நாமே அதற்குத் துணை போகலாமா ?

மாவீரர் உரை நிகழ்த்தப்பட வேண்டும், உரையில் சிங்களத்திற்கு மரணச் செய்தி கொடுக்கப்பட வேண்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி குழப்புறான் என்று புலம்புற நேரமில்லை இது. அவனுக்கு குழப்ப சந்தர்ப்பம் அளிச்சிட்டு இருக்கிறதுதான் ஆபத்தே.

இங்கும் சரி பல ஆய்வாளர்களும் சரி கடந்த கால இழப்புக்களும் சரி ஆழ ஊடுருவும் அணியின் ஆபத்தை உணர்த்தியும் அதைக் கட்டுப்படுத்துவதில் பரந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் சிரமங்கள் உள்ளதாகவே தோன்றுகிறது. ஏலவே எதிரி வன்னியின் பெரும் பகுதியை ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது ஆக்கிரமித்து நின்ற போது கையாண்ட அதே வழிமுறைகளை இப்போதும் கையாள்கிறான். இது மிகவும் ஆபத்தானது. வான் வழி அச்சுறுத்தல்கள் தொடரும் அதேவேளை தரையிலும் ஆழ ஊடுருவும் அணியின் துணிச்சலான நகர்வுகள் எதிரிக்குப் பலம் சேர்க்கும் அம்சங்களாகவே உள்ளன. அவனால் வன்னியில் எங்கும் ஊடுருவ முடிகிறது என்பது வன்னியில் போராளிகளுக்கும் மக்களுக்கும் ஆபத்தான ஒன்றே..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர் உரையக் குழப்புவதுதானே எதிரியின் நோக்கம் ? நாமே அதற்குத் துணை போகலாமா ?

மாவீரர் உரை நிகழ்த்தப்பட வேண்டும், உரையில் சிங்களத்திற்கு மரணச் செய்தி கொடுக்கப்பட வேண்டும் !

ஏன் இப்படியும் இருக்கக் கூடாது தேசியத் தலைவர் மாவீரர் உரையை ஆற்றாமல் தென்பகுதியில் மரண அடி வழக்கிவிட்டு அது தான் தனது மாவீரர் நாள் உரையாக வழங்களாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரண அடி கொடுக்க வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

மாவீரர்தின உரை எமது செயற்பாட்டு உரை- அதற்குப் பிறகு கூட பூசையை ஆரம்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்கும் கேள்விக்கும் சம்பந்தமே இல்லை. அதுசரி, கொலயைச் செய்தது யார் என்று உங்கள் அதீத மூளையைக் குழப்பிக் கண்டுபிடியுங்களேன் ?

பிரதானமாக இவ்வாறான தாக்குதலை நடத்துவதில் இரு தரப்பு மும்மரமாகச் செயற்படுகிறது..!

1. இராணுவத்தின் விசேட பயிற்சி பெற்ற காடுகளினூடு ஊடுருவித் தாக்கும் கமோண்டோ அணியினர். DPU என்று அழைக்கப்படும் பிரிவில் இடம்பெறுவோர்.

2. தமிழ்மக்களிடையே வாழ்ந்து கொண்டு எதிரிக்கு பணத்துக்காக கூலிக்கு குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயிற்சி பெற்ற துரோகிகள் அல்லது காட்டிக் கொடுங்கும் கைங்கரியம் செய்வோர்..! முன்னர் யாழ் குடாவில் ஊரியானில் நடந்த தாக்குதல் மற்றும் பொட்டம்மான் மீதான தாக்குதல் உட்பட்ட பல தாக்குதல்கள் இவ்வகையினதே..! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது திருப்திதானே சாணக்கியன் ? உங்கள் கேள்விக்கு நெடுக்காலபோவான் சரியான பதில் தந்திருப்பார் என்று நினைக்கிறேன் !

நெடுக்காலபோவான், உங்கள் கருத்தே எனது கருத்தும். ஒன்றில் எதிரியின் வேலையாக இருக்க வேண்டும், அல்லது ஒரு துரோகியின் வேலையாக இருக்க வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

கொக்காவில், முள்ளியவளைப் பகுதியிலான தாக்குதல் என்பது மிக ஆபத்தானதே. அது கிட்டத்தட்ட நடுப்பகுதியில் நடக்கின்ற தாக்குதல்.. ஆனால் அதில் இருக்கின்ற பிரச்சனை என்னவென்றால், வவுனியாவில் காட்டுக்குள் இறங்கினால் அவ்வளவு தூரம் வரைக்கும் காட்டுப்பாதை வழியாகவே வந்திட முடியும்.

நெடுங்கேணி, முள்ளியவளை வீதியியைக் கனகாலம் மக்கள் பாவிக்காமல் இருந்தமைக்கு, இராணுவத்தின் ஊடுருவல் முந்தி இருந்ததும், ஒரு காரணமாக இருந்தது.

கண்காணிக்கமுடியாத பகுதிகளை முள்வேலியோ, மிதிவெடி வேலியோ அமைப்பதே, சரியான வழி போலத் தோன்றுகின்றது. காட்டுப்பகுதியில் நிச்சயம் அது தேவைப்படும்.

அத்தோடு மக்களுக்கும் விழிப்பூட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பயங்கரவாத அரசின் இராணுவ வெறியாட்டத்துக்கு இரையான அப்பாவிப் பள்ளிச் சிறுமிகள்...

27_11_07_claymore_01_65490_200.jpg

இன்று கொக்கிளாய் துணுக்காய் வீதியில் இராணுவத்தின் கிளைமோருக்குப் பலியான பள்ளிச் சிறுமிகள்.

பலியான 7 மாணவிகளுக்கு மிகுது 3 தொண்டர்களுக்கும் வாகனச் சாரதிக்கும் கண்ணீரஞ்சலிகள்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23868

இதற்கிடையே புலிகளின் குரல் வானொலி நிலையத்தோடு நடுவப்பணியகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 9 பேர் பலியாகி 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த புலிகளின் குரல் பணியாளர்களின் விபரம் வருமாறு...

இத்தாக்குதலில் புலிகளின் குரல் நிலையப் பணியாளர்கள் 3 பேர் மற்றும் 6 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 4 புலிகளின் குரல் நிறுவனப் பணியாளர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வானொலி நிலைய அறிவிப்பாளர் இசைவிழி செம்பியன், வானொலி நிலையப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த கி.தர்மலிங்கம், சுரேஸ்லிம்பியோன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கா.சாந்தபோதினி, அன்பரசி ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு வானொலி நிலையப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

வான் தாக்குதலில் பலியான போராளிகள் பொதுமக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

தகவல் - புதினம்.கொம்

---------------------

விடுதலைப்புலிகள் விமானங்களை சுட்டு வீழ்த்தும் வசதியைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அதி வேக விமானங்களின் பறப்பை இனங்காட்டக் கூடிய ரடார்களைப் பாவித்து மக்களை விமானத்தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க என்றாலும் ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். எனியாவது செய்ய முயல வேண்டும்.

சிறீலங்கா வெறுமனவே சமாதானம் பேசிக் கொண்டிருக்கவில்லை. பேரழிவு ஆயுதங்களையும் போர்த்தளபாடங்களையும் இராணுவ விரிவாக்கத்தையும் சமாதான காலத்தில் திறம்படச் செய்துள்ளது..!

Best Early Warning System களைப் பெற்றாவது இந்த விமானங்கள் தொடர்பில் எச்சரிக்கை வழங்குவதும் பாதுகாப்புப் பெறுவதும் பெறுமதி மிக்க போராளிகளினதும் பொதுமக்களினதும் உயிரைப் பாதுகாப்பதோடு போரின் போக்கையும் மாற்றி அமைக்கும்..!

ஈரான் அமெரிக்காவின் அதிநவீன குண்டு வீச்சு விமானங்களை இனங்காண இப்படியான தொழில்நுட்பத்தைப் பெற்றுவைத்திருக்கிறது. பல நாடுகளிடமும் இது இருக்கிறது. சிறீலங்கா கூட விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதலை சமாளிக்க இந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. :icon_idea:

http://www.smirkingchimp.com/thread/972

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nedukkalapoovan,

அதைத்தான் நானும் சொல்லுகின்றேன். நாம் இப்போ நவீன தொழில் நுட்ப போரினுள் செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். எம்மிடம் மன உறுதி படைத்த போராளிகள் இருக்கின்றார்கள். ஆனால் தொழில் நுட்ப போரின் போது அவர்களால் அதை தாங்கி பிடிப்பதென்பது மிகவும் கடினம்.

நாம் பழைய வியட்னாம் போர் அந்த போர் என்று பழைய பல்லவியை பாடிக்கொண்டு இருக்க முடியாது.

காலத்திற்கேற்ப மாற தான் வேண்டும். (அரசியல் கொள்கையிலும்)

இதை நான் முன்பும் கூறிப்பிட்டிருந்தேன்

அமெரிக்க இராணுவ வல்லுனர் சொன்னது

1000 படை வீரர்கள் செய்ய வேண்டிய வேலையை இப்போ தொழில் நுட்பம் ஒரு படை வீரரை கொண்டு செய்கின்றது

Edited by tamillinux

சிங்களப் பகுதிகளிலும் மக்கள் வாகனங்களில் பிரயாணம் செய்கின்றார்கள்தானே? அவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப் பகுதிகளிலும் மக்கள் வாகனங்களில் பிரயாணம் செய்கின்றார்கள்தானே? அவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்தானே?

ஜயோ இது என்ன மனித உரிமை மீறல் என்று நான் சொல்லவில்லை. யாழ் கள இந்திய சிங்கள விசுவாசிகள்

கூக்குரல் இடப்போறார்கள் இப்போ.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ ஊடுருவும் அணியினர் ஒட்டிசுட்டான் வரை வந்துதான் கேணல் சங்கரையும் கிளைமோர் வைத்துக் கொன்றனர். வன்னியின் மேற்குப்பகுதியும், முல்லைத்தீவில் ஒட்டிசுட்டான் பகுதிவரையும் அவர்களால் வரமுடிகின்றது. தடுக்கவேண்டுமென்றால் பெரும் ஆளணிகளை விரயம் செய்ய வேண்டும். அதைவிட ஆளணிகளை வேறு விடயங்களுக்குப் பாவிக்கலாம். மேலும் இதுபோன்ற தாக்குதல்களை சிங்கள மக்கள் பகுதிகளில் மேற்கொள்வது பெரிய வேலையல்ல. ஆனால் தமிழீழம் மலர அப்படியான தாக்குதல்கள் உதவாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ ஊடுருவும் அணியினர் ஒட்டிசுட்டான் வரை வந்துதான் கேணல் சங்கரையும் கிளைமோர் வைத்துக் கொன்றனர். வன்னியின் மேற்குப்பகுதியும், முல்லைத்தீவில் ஒட்டிசுட்டான் பகுதிவரையும் அவர்களால் வரமுடிகின்றது. தடுக்கவேண்டுமென்றால் பெரும் ஆளணிகளை விரயம் செய்ய வேண்டும். அதைவிட ஆளணிகளை வேறு விடயங்களுக்குப் பாவிக்கலாம். மேலும் இதுபோன்ற தாக்குதல்களை சிங்கள மக்கள் பகுதிகளில் மேற்கொள்வது பெரிய வேலையல்ல. ஆனால் தமிழீழம் மலர அப்படியான தாக்குதல்கள் உதவாது.

காரணம் சொல்லிட்டீர்கள். இப்படியே சங்கர் கங்கை அமரன் தமிழ்செல்வன் என்று.. பட்டியல் தொடரனும் என்றீங்களா. கிழமைக்கு 10 பொதுமக்களை கிளைமோருக்கு தாரை வார்க்கனும் என்றீங்களா..??! உங்கட கருத்து சம்பவங்களைக் கட்டுப்படுத்த வழிசொல்லேல்ல.

இந்தச் சம்பவங்கள் வெறும் இழப்புக்களை மட்டும் தரல்ல எதிரிக்கு மனோவலிமையை அளிக்குது அதுமட்டுமன்றி தமிழ் மக்களுக்குப் பயத்தை உண்டு பண்ணுது. இதனால் அதிகம் பயனடையப் போவது யார்..??!

காட்டுக்குள்ளால் ஒரு 50 பேர் கொண்ட அணியை அனுப்பி அதிரடித்தாக்குதல் நடத்தி ஒரு முக்கிய இலக்கை அழித்தால் கூட அது இராணுவத்துக்கு பெரிய படையெடுப்பை நடத்தி சாதித்ததை விட பெறுமதிமிக்கதாகவே அமையும்..! இவற்றை அனுமதிப்பது தமிழர் தரப்பு அனுகூலமாகவா அமையும்..!

இவை தொடர்பில் போராளிகள் தீவிர கவனம் செலுத்து அவசியம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ ஊடுருவும் அணியினர் ஒட்டிசுட்டான் வரை வந்துதான் கேணல் சங்கரையும் கிளைமோர் வைத்துக் கொன்றனர். வன்னியின் மேற்குப்பகுதியும், முல்லைத்தீவில் ஒட்டிசுட்டான் பகுதிவரையும் அவர்களால் வரமுடிகின்றது. தடுக்கவேண்டுமென்றால் பெரும் ஆளணிகளை விரயம் செய்ய வேண்டும். அதைவிட ஆளணிகளை வேறு விடயங்களுக்குப் பாவிக்கலாம். மேலும் இதுபோன்ற தாக்குதல்களை சிங்கள மக்கள் பகுதிகளில் மேற்கொள்வது பெரிய வேலையல்ல. ஆனால் தமிழீழம் மலர அப்படியான தாக்குதல்கள் உதவாது.

சொல்லி வாயை மூட முதல் அறிவுரை வழங்க தொடங்கிவிட்டிங்க. ஒன்று கேட்கிறேன் ஜப்பான் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியது. இப்போ அமெரிக்கா என்ன நிலையில் இருக்கின்றது??

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka rebels claim 11 schoolchildren, 2 others killed by army roadside bomb

COLOMBO, Sri Lanka (AP) - A roadside bomb set off by Sri Lanka's military killed 11 schoolchildren and two other civilians Tuesday in the Tamil Tiger separatist rebels' stronghold area, the guerrillas said.

Military spokesman Brig. Udaya Nanayakkara, however, denied targeting the students. He said the attack had reportedly taken place deep within rebel territory,

where the military cannot go.

The children had been traveling to a cemetery to take part in an annual Heroes' Day ceremony to honor dead Tamil Tiger fighters when the blast hit their vehicle 25 kilometers (15.5 miles) west of the guerrillas' de facto capital, Kilinochchi, said a statement issued by a rebel spokesman, Selvy Navaruban.

The bomb also killed the driver and another adult traveling with the students, the statement said.

The same day, government troops crossed into rebel-held territory in northern Sri Lanka and attacked a Tamil Tiger bunker with grenades and rockets, killing four separatist fighters, Nanayakkara said. He said the bunker had been used to launch attacks on government forces.

The violence came hours before Tamil Tiger leader Velupillai Prabhakaran was scheduled to make his annual Heroes' Day speech. The reclusive leader's location was unknown.

The annual speech, which falls on Prabhakaran's birthday and caps a week of ceremonies commemorating slain Tamil Tigers, is carefully analyzed by the government and international observers for clues as to the rebel group's future plans.

In his speech last year, Prabhakaran declared a 2002 cease-fire defunct amid a new round of fighting between the rebels and the government.

Since then, the government has seized control of eastern Sri Lanka from the rebels for the first time in 13 years, and fighting has raged along the frontiers of the Tamil Tigers' de facto state in the north.

The rebels have been fighting since 1983 to create a separate homeland for Sri Lanka's minority ethnic Tamils in the country's north and east. The war that has killed an estimated 70,000 people.

In other violence, suspected rebels used handguns to kill two Tamil civilians Monday night in Jaffna, Nanayakkara said. He said no reason was known for the alleged killings.

Rebel spokesman Rasiah Ilanthirayan did not answer repeated calls from The Associated Press seeking comment on the latest reported developments in the fighting.

http://www.pr-inside.com/sri-lanka-rebels-...ren-r319193.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.