Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் குரல் நிறுவனம் கிபிர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது

Featured Replies

அந்நிய விமான ஓட்டிகளுக்கு செலுத்தும் தொகையில் சிலவற்றையேனும் நாட்டின் வளர்ச்சிக்கு செலவழிக்க யோசித்திருப்பார்களானால் இந்ந்நிலை ஏற்பட்டிருக்காது.

சிங்களம் தானும் வாழ மாட்டான்

  • Replies 52
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இஸ்ரேலிய விமானப்படை அமெரிக்க விமானப்படை உக்ரேனிய விமானப்படை ரஷ்சிய விமானப்படை சீன விமானப்படை ஈரானிய விமானப்படை என்று எல்லா விமானப்படையும் சிறீலங்காவுக்கு உதவி செய்து. புலிகள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு நிற்பது ஈராக்கில் சதாம் தாங்கி நின்றதை விட மேலானது என்பதை உணரனும் முதலில..! :icon_idea:

உணர்ந்தாலும் என்ன பயன்? இப்படி அழிந்து கொண்டே போனால் நிலமை என்னவாகும்?

இவற்றை மீள கட்டியெழுப்ப எத்தனை நாளாகும் இப்போ இருக்கும் நிலைமையில்?

Edited by tamillinux

  • தொடங்கியவர்

இத்தாக்குதலில் புலிகளின் குரல் நிலைய பணியாளர்கள் 5 பேர் மற்றும் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

-புதினம்.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ந்தாலும் என்ன பயன்? இப்படி அழிந்து கொண்டே போனால் நிலமை என்னவாகும்?

இவற்றை மீள கட்டியெழுப்ப எத்தனை நாளாகும் இப்போ இருக்கும் நிலைமையில்?

விடுதலைப்புலிகள் தங்களின் பலம் பூரணமாக சிதைவடையும் படி எதிரிக்கு இலக்கை வைக்கார்கள்.

நிதர்சனம் 1990 ஆண்டு யாழ்ப்பாணத்தில் விமானத்தாக்குதலுக்கு இலக்கானது.

புலிகளின் குரல் அதன் பின்னர் இலக்கானது.

புலிகளின் குரல் சந்திரிக்கா அமையார் காலத்திலும் வான் தாக்குதலுக்கு இலக்கானது.

கடந்த ஆண்டும் புலிகளின் குரல் தாக்குதலுக்கு இலக்கானது.

இப்போதும் இலக்காகி இருக்கிறது.

தளபாட இழப்புக்களைக் காட்டிலும் பணியாளர்களின் பொதுமக்களின் இழப்புத்தான் முக்கியமானது. இந்தத் தாக்குதலியே புலிகளின் குரல் அநேகரைப் பலி கொடுத்துள்ளது. இது அசட்டுத்தனமான ஒரு நகர்வினால் ஏற்பட்ட இழப்பு. ஏலவே இலக்கு வைக்கப்பட்ட ஒரு இலக்கு இன்று இலக்காகக் கூடிய வாய்ப்பிருந்தும் அசட்டுத்தனம் தான் உயிரிழப்புகளுக்கு காரணமாகிவிட்டது.

சிறீலங்கா விமானப்படை உளவு வானூர்திகள் மூலம் உடனுக்குடன் தகவல்களைப் பெற்று தாக்குதலை உயர் தொழில்நுட்பத்தோடு இசைவு படுத்தி நடத்துவதால் பெரிய இலக்குகள் தெளிவாக இனங்கண்டு தாக்கப்படுகின்றன. குறிப்பாக கட்டடங்களில் அமைந்துள்ள இலக்குகள். வாகனங்களை இலக்கு வைக்க ஆழ ஊடுருவும் அணியை துணைக்கு இழுக்கிறது சிறீலங்கா விமானப்படை. ஆனால் இஸ்ரேலிடம் வாகனங்களைக் கூட அழிக்கவல்ல விமானத்தில் இருந்து ஏவும் ஏவுகணைகள் உள்ளன. இதன் மூலம் பல கமாஸ் தலைவர்களும் பலஸ்தீனப் போராளித் தலைவர்களும் இலக்காக்கப்பட்டனர் என்பதை இங்கு குறிப்பிடுதல் நன்று. இவை கூட சிங்களத்தின் கைகளில் இருக்கக் கூடும்.

எனவே நாம் தான் எதிரியைப் பற்றி சரியான மதிப்பீட்டோடு இருக்க வேண்டுமே தவிர.. அசட்டுத்தனமான நடவடிக்கைகள் வீண் இழப்புகளுக்கு வழியிடும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nedukkalapoovan

நீங்கள் சொல்வது 100% உண்மை. ஆனால் எமது நிலமையை நான் விரிவாக தற்போது எழுத விரும்பவில்லை. (என் கருத்தை)

நாம் இராணுவ தொழில் நுட்பத்தில் மேலும் வளர்சியடைய வேண்டும்.

புலிகளின் குரல் தாக்குதலின் போது அங்கு ஏன் உயிரிழப்பு ஏற்பட்டது? தொழில் நுட்பத்தில் நிலையத்தை தானாக இயங்கவிட்டிருக்கலாம் புலிகள்.

இந்த கால கட்டங்களில் தொலைத் தொடர்பு தான் மிகவும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பது புலிகளுக்கு தெரியாதது அல்ல

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் இன்று மாலை 4:30 மணிக்கு மிலேச்சத்தனமான வான்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா என்ன அற்புதம். இந்திய விசுவாசிகள் பேசுவது :icon_idea::lol::lol:.

அப்போ தமிழ் செல்வன் மீது எப்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது???

நான் எடுத்துக்காட்டும் சில ஆக்கங்கள் புரிய வேண்டியவர்களுக்கு நிட்சயம் புரியும். எல்லோருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

உண்மைதான் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அத்தனை ஆதிக்க நாடுகளும் புலிகளின் வீரத்துக்கும் தலைவரின் தன்மானத்துக்கும் சவால் விடுக்கின்றன. தமிழ்ச்செல்வன் அண்ணாவின் பேரிழப்பு..பேடித்தனமான சிங்களக் கொடியவர்களால் நடத்தப்பட்டது அதில் பெருமை ஒன்றும் இல்லை ஆனால் அந்தக் கோழைத் தனத்துக்கு அதிசக்தி வாய்ந்த குண்டுகளும், விமானங்களுமே காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 27-11-2007 18:48 மணி தமிழீழம் [மயூரன்]

புலிகளின் குரல் மீது நாசகார குண்டுத்தாக்குதல் : 9 பேர் பலி

சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான கிபிர் வான்கலங்கள் செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன. இத் தாக்குதலில் 5 புலிகளின்குரல் ஊடகவியலாளர்களும் நான்கு பொதுமக்களுமாக 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதில் 14அகவையுடைய சிறுமி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 12 குண்டுகளை இவ் விமானங்கள் வீசிச்சென்றுள்ளதாக தெரியவருகிறது. புலிகளின் குரல் கிளிநொச்சியில் இருந்து 3.5 கிலோமீற்றர் தெற்காக 55வது மைல் கல் பகுதியில் அமைந்துள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

முற்றாகத் தவிர்த்திருக்கப்படவேண்டிய ஒரு சம்பவம். வன்னியில் முடுக்கி விடப்பட்டிருக்கும் வான் தக்குதல்கள் பற்றித் தெரிந்தும் பலர் ஒன்றாக புலிகளுக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றில் கூடியது பெருந் தவறு !

அடுத்தது, வெளிப்படையாகவே புலிகளின் குரல் நிறுவனத்தை ஆ- 9 வீதியில் நடாத்துவது எவ்வளவு தூரத்திற்குச் சரியெனறும் தெரியவில்லை.

நாமே எம்மை இலக்குகளாக எதிரிக்குத் தெரிவு செய்து கொடுத்திருக்கிறோம்.

இது மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட ஒரு இலக்கு, திரும்பவும் (மாவீரர் தினத்தில்) கட்டாயம் தெரிவுசெயப்படும் வாய்ப்புகள் அதிகம் இருந்த இலக்கு. இது தெரிந்தும் நாம் அங்கு ஒன்று கூடியது எமது அலட்சியமே தவிர வேறென்ன?

எதிரியின் விவேகத்தைத் தவிர, எமது அலட்சியமும், பொறுப்பற்ற தன்மையுமே இதற்கு காரணம்.

எப்போதுதான் நாம் இவற்றைத் திருத்தப் போகிறோம் ??!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்றாகத் தவிர்த்திருக்கப்படவேண்டிய ஒரு சம்பவம். வன்னியில் முடுக்கி விடப்பட்டிருக்கும் வான் தக்குதல்கள் பற்றித் தெரிந்தும் பலர் ஒன்றாக புலிகளுக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றில் கூடியது பெருந் தவறு !

அடுத்தது, வெளிப்படையாகவே புலிகளின் குரல் நிறுவனத்தை ஆ- 9 வீதியில் நடாத்துவது எவ்வளவு தூரத்திற்குச் சரியெனறும் தெரியவில்லை.

நாமே எம்மை இலக்குகளாக எதிரிக்குத் தெரிவு செய்து கொடுத்திருக்கிறோம்.

இது மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட ஒரு இலக்கு, திரும்பவும் (மாவீரர் தினத்தில்) கட்டாயம் தெரிவுசெயப்படும் வாய்ப்புகள் அதிகம் இருந்த இலக்கு. இது தெரிந்தும் நாம் அங்கு ஒன்று கூடியது எமது அலட்சியமே தவிர வேறென்ன?

எதிரியின் விவேகத்தைத் தவிர, எமது அலட்சியமும், பொறுப்பற்ற தன்மையுமே இதற்கு காரணம்.

எப்போதுதான் நாம் இவற்றைத் திருத்தப் போகிறோம் ??!!!!!

உயிரிழப்புக்கு தான் நாம் மனம் வருந்த வேண்டியுள்ளது. ஆனால் .....??? புரிந்து கொண்டால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

27_11_07_vot_attack_01_65531_435.jpg

27_11_07_vot_03_65521_200.jpg

27_11_07_vot_04_65525_200.jpg

27_11_07_vot_02_65517_200.jpg

27_11_07_vot_01_65513_200.jpg

புலிகளின் குரல் மீதான தாக்குதலின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள்,காயங்கள் மற்றும் உடமை அழிவுகள்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23871

தொடர்ச்சியாக இப்போது சில முக்கிய இலக்குகள் தாக்கப்படுகின்றன, எப்படி?

சிலர் கூறுகிறார்கள், வன்னியில் சில எட்டப்பகூட்டங்களுக்கு சற்றலைற் தொலைபேசிகளை சிறிலங்காவின் புலனாய்வுத்துறை வழங்கியுள்ளதாம். அக்கூட்டம் இன்று நடக்கும் அழிவுகளுக்கு உதவுகின்றனவாம்.

இவ்வெட்டப்பர்களை குடும்பத்தோடு குலையறுக்க வேண்டும்!

மற்றும் தொடர்தாக்குதல்களை கேட்டுக்கேட்டு ...... உறுதியான நடவடிக்கை வேண்டும்!!

அண்மைக்காலங்களாக இடம்பெற்று வரும் விமானத்தாக்குதல் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அறிக்கைகளை மையப்படுத்தி சில களநண்பர்கள் தமக்கு அறிவியல் விஞ்ஞான தொழினுட்பங்கள் பற்றிய அறிவு அதிகம் இருப்பதாகவும், இலங்கை அரசு அதனை நன்கு பயன்படுத்துவதாகவும், புலிகள் இவற்றை பற்றி அறியாமால் அழிவுகளை சந்திப்பதாகவும் கருத்துக்களை கூறிவருகிறார்கள். சிலர் புலிகளுக்கு எவ்வாறு அவர்களை பாதுகாப்பது பற்றி அறிவுரைகளையும் கூறத் தொடங்கியுள்ளனார்.

புலிகள் அமைப்பில் தாக்குதல், பாதுகாப்பு யுத்திகள் நிறைந்த, அனுபவம் வாய்ந்த பல தளபதிகளும் போராளிகளும், தொழினுட்பவலர்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உங்களை விட இலங்கை விமானப் படையின் நவீனத்துவம், அவர்கள் பாவிக்கும் குண்டுகள்,தொழினுட்பம் எல்லாம் தெரியும். இலங்கை விமானப் படை, இராணுவ,கடல்படை என்பவற்றின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் புலிகள் அதற்கு எற்ப தம்மை வளர்த்தும் புதிய யுத்திகளையும் பயன்படுத்தியும் இராணுவத்தை வெற்றி கொள்வதற்கு அவர்களின் இராணுவ அறிவியல் விஞ்ஞான தொழினுட்ப வளர்ச்சியும் ஒரு காராணமாகும்.

புலிகளுக்கு தற்போதைய இலங்கை விமானப் படை பற்றிய முழு அறிவும் இருக்கும் என்பதே என் கருத்து. உடனடியாக விமானப் படையின் எல்லா தாக்குதல்களையும் இழப்புகளையும் நிறுத்த முடியாது. புலத்திலிருந்து கூறுவதை விட களத்தில் அவற்றை உடனடியாக நிடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இலங்கை விமானப் படையின் தாக்குதல்களில் பொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து வெளிப்படையாக இயங்கும் அரசியல்துறை சார்ந்த நிறுவனங்களுமே பாதிப்படைகிறது. சில காராணங்கள், தேவைகளுக்காக இவற்றின் இடங்களையே உடனடியாக மற்றவே, சேவையை நிறுத்தவே முடியாது.

இன்றும் தாக்குதல் நடைபெறலாம் என தெரிந்தும் அவர்கள் என் புலிகளின் குரல் நிலையத்தில் இருந்தார்கள் என்றால் நாட்டின் சேவை கருதியே. மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்புவதற்காக தங்கள் உயிர்களை பற்றி கவலைப் படமால் அங்கிருந்து சேவையற்றி தம் உயிர்த்தவர்களுக்கு என் வீரவணக்கங்கள். புலிகளின் குரல் நிலையத்தை கண்டுபிடிப்பதற்கு எந்த தொழினுட்ப வசதியும் தேவையில்லை. அது வெளிப்படையாக உள்ளது. அனைவருக்கும் தெரிந்த இடமாகும்.

நவீன தொழினுட்ப உபகரணங்களை பயன்படுத்தி ஒலிபரப்பு செய்வதன் மூலம் உயிர் இழப்பை குறைத்து இருக்கமுடியும் என ஒரு களநண்பர் கூறினார். இதை நான் எற்றுக் கொள்கிறேன். தொழினுட்பத்தில் புலிகள் இன்னும் வளர்வதற்கு நிறைய உள்ளது. இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம் எவ்வளவு தூரம் தொழினுட்ப துறைகளில் உள்ளவர்கள் புலிகளுக்கு அவர்களின் தொழினுட்ப வளர்ச்சியில் உதவுகிறார்கள்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பல தமிழ் மாணவர்கள் பொறிலியல் தொழினுட்ப துறைகளில் உயர் புள்ளிகளுடன் சித்தியடைகின்றனார். புலத்தில் ஒவ்வொரு துறையிலும் பெருமளவு தமிழ் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். புலத்திலும் இலங்கையில் பல பேர் பொறிலியல் தொழினுட்ப துறைகளில் விரிவுரையாளர்களாகவும், பல நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளிலும் இருக்கிறார்கள். ஏன் யாழ் களத்தில் இத்துறை சார்ந்த பலர் உள்ளனர். இவ்வளவும் இருந்தும் என்ன பயன். என்னை பொருத்தவரையில் இத்துறையில் புலிகள் அமைப்பில் இணைந்தவர்களும் புலிகளுக்கு நேரடியாக உதவுபவர்களும் மிக மிக குறைவு. இத்துறையில் இருக்கும் தமிழ்ர்களில் ஒரு சதவீதம் கூட வராது.

படித்து பட்டம் பெற்ற சிலருடன் இதுபற்றி கதைக்கும் போது அவர்கள் கூறுகின்றனர் இப்ப எமக்கு என் வேலை இருக்கு, தமிழீழம் கிடைத்தபின் தங்கள் உதவி செய்யலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் கூறினால் புலிகள் தொழினுட்பத்தில் மேலும் வளர்வது எப்படி. உயர் படிப்பு, பட்டப்படிப்பு கற்றவர்களில் புலிகளில் இணைவது குறைவு. ஆரும் இணைந்தாலும் செல்லுவது என்னென்றால் படித்த முட்டாள், இவ்வளவு படித்துவிட்டு பேயான் சாகுரதற்கு இயக்கத்திற்கு போட்டான். இந்த நிலை மாற வேண்டும். சுயநல வாதிகள், மற்றவர்களின் முன் புலிகளின் ஆதரவாளராக நடிப்பவர்கள், சுயநலத்துக்காக புலிகளை ஆதரிப்பவர்கள் என பல விசயங்களை கூறலாம் ஆனால் அவை உண்மையான பலரை பாதிக்கும் என்பதால் நிறுத்துகிறேன்.

புலத்தில் இருந்து இயக்கம் என்ன செய்து வேண்டும் என்றும் எப்படி செய்ய வேண்டும் என்றும் அறிவுரை கூற விரும்புபவார்கள் கள நிலமைகள், நடைமுறை சிக்கல் தெரியமால் சும்மா எல்லாவற்றையும் கதைக்க கூடாது.

தங்களினால் புலிகளையும் மக்களையும் விமானப் படையின் தாக்குதல்களிலும் ஆழ ஊடுறுவும் படைகளில் இருந்து பாதுகாக்கும் திட்டங்கள், அறிவுரைகள் இருந்தால் யாழ் களத்தில் எழுதுவதில் பிராயோசானம் இல்லை. புலத்தில் இருந்து வேறு விடயங்களில் உதவி செய்யலாம் ஆனால் கள நிலவரத்திற்கு ஏற்ப இங்கிருந்து பாதுகாப்பு திட்டங்களை வகுப்பது கடினம். ஏனவே புலிகளுடன் தொடர்பு கொண்டு வன்னிக்கு செல்லவும். உங்களின் மதிநுட்ப சிந்தனைகளினால் புலிகளுக்கு உதவி மலர போகும் தமிழீழத்துக்கு துணைபுரிய வாழ்த்துகிறேன்.

Edited by உமை

ரகுநாதன் உங்கள் கருத்துடன் நான் 100% உடன்படுகிறேன்.

தமிழ்ச்செல்வனின் இழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அநியாயமான இழப்பு. ஏறக்குறைய 45 நிமிட நேரத்துக்கு மேலாக வெளிநாட்டு தொலைபேசி அழைப்பில் இருந்திருக்கிறாராம். அதுவும் லான்ட்லைனில்!!! மிச்சத்தை .......

எனக்கு அருகில் இருக்கும் தருமபுரத்தை சேர்ந்தவர்கள் சொன்னார்கள், தங்களது உறவுகள் முதல் நாளே வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாக .... ஏனெனில் அதே கிபிர்கள் அங்கு முதல்நாளே பலதடவை வட்டமிட்டிருந்ததாம். அயலவர்கள் வெளியேறியும், தமிழ்ச்செல்வன் உட்பட்டோர் ஏன் வெளியேறவில்லை????

இன்று மாவீரர் நாள் நிகழ்வில் வேறொருவர் சொன்னார், தான் நேற்று வன்னிக்கு தொலைபேசியில் கதைத்ததாம். அப்போது மாவீரர் நிகழ்வில் சிங்களவன் குண்டு போட்டால்???? என்றதற்கு, குண்டு மழையிலும் நாம் சுடரேற்றுவதை நிறுத்த மாட்டோம் என்று!!! இன்று அதன் பலனை அனுபவித்துள்ளோம்!!!!!

உங்கள் கவலையீனங்களால் வரும் இழப்புகள், எங்களை சோகத்தில் ஆழ்த்துவது மட்டுமல்ல தலை குனியவும் வைக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமை,

இங்கு நாம் புலிகளை தவறாக எடை போடவில்லை. களத்தில் நிற்கும் ஒவ்வொருவரும் ஏதோ விதத்தில் திறமை மிக்கவர்கள் தான்.

ஆனால் நவீன யுத்த முறையை தான் இனி வருங்காலங்களில் எதிரி மேற்கொள்வான். அதற்கேற்ப புலிகளும் மாறத்தான் வேண்டும்.

இன்றும் தாக்குதல் நடைபெறலாம் என தெரிந்தும் அவர்கள் என் புலிகளின் குரல் நிலையத்தில் இருந்தார்கள் என்றால் நாட்டின் சேவை கருதியே. மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்புவதற்காக தங்கள் உயிர்களை பற்றி கவலைப் படமால் அங்கிருந்து சேவையற்றி தம் உயிர்த்தவர்களுக்கு என் வீரவணக்கங்கள். புலிகளின் குரல் நிலையத்தை கண்டுபிடிப்பதற்கு எந்த தொழினுட்ப வசதியும் தேவையில்லை. அது வெளிப்படையாக உள்ளது. அனைவருக்கும் தெரிந்த இடமாகும்.

உங்கள் இந்த கருத்தில் என்ன அர்தம் உள்ளது?? சில மணி நேர ஒலிபரப்புக்காக இத்தனை உயிர்களை பலிக்காடாக்குவதா?

சிங்களவனுக்கு மருத்துவ நிலையம் ஒன்றில் களத் தலைவர் ஒருவர் இருக்கின்றார் என தெரிந்தால் அதையும் தாக்குவான் என்பது கூட உங்களுக்கு தெரியாதா?

உடனே நாம் என்ன செய்வோம் கண்டித்து பக்கம் பக்கமாய் எழுதுவோம். இரண்டு நாளில் எல்லாம் மறந்து விடுவோம்.

30 வருடங்களாக எல்லாவற்றுக்கும் ஏதோ காரணம் காட்டிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

பிழைகளை திருத்தும் வழிகளை சிந்திக்கவே மாட்டோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமை,

சோழன் சொல்வதில் நம்பக தன்மை உள்ளது. அதை தான் மறைமுகமாக பல இடங்களில் தொலை தொடர்புகளில் புலிகள் அவதானமாக இருத்தல் வேண்டும் என கூறிப்பிட்டிருந்தேன்.

அதே போல தமிழ் நாட்டிலிருக்கும் நீண்ட கால ஈழ ஆதரவாளர் ஒருவர் ரோவின் முக்கிய கையாள் என இப்போ சொல்லப்படுகின்றது. புரிய வேண்டியவர்களுக்கு இது விளங்கும்.

நவீன தொழினுட்ப்பத்தால் செய்யக்கூடியது பல. அந்த ஆற்றலை இலங்கை பெற்று இருக்கலாம். ஆனாலு எங்கள் தலைமை இதையும் அறியும் என நினைக்கிரேன்.

மாவீரருரையி மேற்கோள் காட்டப்பட்டுமுள்ளது... (கோடி கோடியாய் கொட்டி.... என்ற்தில் இருந்து அறியலாம்).

சிங்களத்தை சிதைக்காமல் இதை திருத்த முடியாது. அதற்கான பிபுல ஆதரவை நாங்கள்தான் செய்யவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல தமிழ் நாட்டிலிருக்கும் நீண்ட கால ஈழ ஆதரவாளர் ஒருவர் ரோவின் முக்கிய கையாள் என இப்போ சொல்லப்படுகின்றது. புரிய வேண்டியவர்களுக்கு இது விளங்கும்.

யாரையும் தேவையில்லாமல் பழிபோடுவதையோ, அல்லது எதிராக எழுதுவதையோ நிறுத்துவது மிக மிக நன்று என நினைக்கின்றேன். யாரையும் எழுந்தமானமாகத் துரோகிப் பட்டம் சூட்டுவதை விடுத்து, குறித்த நபர் பற்றிய உண்மைகள், ஆதாரங்கள் எதுவும் உங்களிடம் இருந்தால் அதை புலிகளின் கவனத்திற்குக் கொண்டு வரலாம்.

நீங்கள் சொல்லவில்லைத் தான். ஆனால் யாராவது பொது இடங்களில் எவ்வித ஆதாரமும் இன்றிக் குற்றச்சாட்டை தெரிவிக்கும் பட்சத்தில் இருக்கின்ற உறவுகளையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்திடும்.

............ தங்களினால் புலிகளையும் மக்களையும் விமானப் படையின் தாக்குதல்களிலும் ஆழ ஊடுறுவும் படைகளில் இருந்து பாதுகாக்கும் திட்டங்கள், அறிவுரைகள் இருந்தால் யாழ் களத்தில் எழுதுவதில் பிராயோசானம் இல்லை. புலத்தில் இருந்து கள நிலவரத்திற்கு ஏற்ப திட்டங்களை வகுப்பது கடினம். ஏனவே புலிகளுடன் தொடர்பு கொண்டு வன்னிக்கு செல்லவும். உங்களின் மதிநுட்ப சிந்தனைகளினால் புலிகளுக்கு உதவி மலர போகும் தமிழீழத்துக்கு துணைபுரிய வாழ்த்துகிறேன்.

இந்த பாணியிலான பேச்சு தாம் சார்ந்த நிலைப்பாட்டிற்கு எதிரானவர்களை மட்டம் தட்டி எழுதவிடாது தடுக்கும் ஒரு தந்திரோபாயம், சுயநலம்!

உமை, உண்மையை சொல்லுங்கள், நீங்கள் இப்படிக் கூறுவதால் இவர்கள் வன்னிக்கு போய்விடுவார்கள் என்று நீங்கள் மனப்பூர்வமாக நம்புகிறீர்களா?

நீங்கள் இவ்வாறு செய்வதனால் நீங்கள் குறிப்பிடும் அறிவுசார்ந்த சமுகம் தயங்கித்தயங்கி முன்னோக்கி எடுத்து வைக்கும் சில காலடித்தடங்களிலேயே அவர்களை கொச்சைப்படுத்தி மீண்டும் முருங்கை மரத்தில் ஏற்றிவிடுவதாகவே அமைகிறது உங்கள் அறிவுரை.

அவர்களை அவர்கள் பாட்டில் விடுங்கள்! தமிழுணர்வு அவர்களை சரியான தடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்!

ரகுநாதன் உங்கள் கருத்துடன் நான் 100% உடன்படுகிறேன்.

தமிழ்ச்செல்வனின் இழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அநியாயமான இழப்பு. ஏறக்குறைய 45 நிமிட நேரத்துக்கு மேலாக வெளிநாட்டு தொலைபேசி அழைப்பில் இருந்திருக்கிறாராம். அதுவும் லான்ட்லைனில்!!! மிச்சத்தை .......

எனக்கு அருகில் இருக்கும் தருமபுரத்தை சேர்ந்தவர்கள் சொன்னார்கள், தங்களது உறவுகள் முதல் நாளே வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாக .... ஏனெனில் அதே கிபிர்கள் அங்கு முதல்நாளே பலதடவை வட்டமிட்டிருந்ததாம். அயலவர்கள் வெளியேறியும், தமிழ்ச்செல்வன் உட்பட்டோர் ஏன் வெளியேறவில்லை????

இன்று மாவீரர் நாள் நிகழ்வில் வேறொருவர் சொன்னார், தான் நேற்று வன்னிக்கு தொலைபேசியில் கதைத்ததாம். அப்போது மாவீரர் நிகழ்வில் சிங்களவன் குண்டு போட்டால்???? என்றதற்கு, குண்டு மழையிலும் நாம் சுடரேற்றுவதை நிறுத்த மாட்டோம் என்று!!! இன்று அதன் பலனை அனுபவித்துள்ளோம்!!!!!

உங்கள் கவலையீனங்களால் வரும் இழப்புகள், எங்களை சோகத்தில் ஆழ்த்துவது மட்டுமல்ல தலை குனியவும் வைக்கின்றது.

கடந்த 3 நாட்களில் கொல்லப்பட் சுமார் 25 இற்கம் அதிகமான பொதுமக்கள், மாணவிகள் என பெரும்பாலானோர் மாவீரர் தின நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளின் போதே கொத்ததாக குறிவைக்கப்பட்டு குலை அறுக்கப்பட்டிருக்கின்றனர்.

மாவீரர்கள் யாரை பாதுகாக்க போராடி உயிர் துறந்தனரோ அதே மாவீரர்கள் நினைவுதின கொண்டாட்டங்களினால் அதே மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது! இதை பார்த்து மாவீரர்களே வெட்கித் தலை குனிந்திருப்பர்.

இனிவருங்காலங்களில் போர் உச்சமடையும் போது இதைவிட மோசமான பொருளாதாரதடை, மருத்துவத்தடை போன்றவற்றை எதிர்நோக்கவுள்ள மக்களை பாதுகாப்பதே இன்று தலையாய கடமை! இதற்கு முன்னோடியாகத்தான் யுனிசெப் மற்றும் ஐ.நா போன்ற அமைப்புகள் மீது தற்போதே தடைகள் நெருக்குதல்களை அரசு ஜே.வி.பி உடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது!

இறுதிப் போர் என்ற மகுடத்தில் அனைத்தையும் துறந்து, எதையும் செய்ய ஆயத்தமாக இன்று சிங்கள அரசும் சிங்கள மக்களும் ஒன்றினைந்து நிற்கின்றனர்!

Edited by சாணக்கியன்

நன்றாகச் சொன்னீர்கள் உமை. இங்கிருந்து தொழில்நுட்பத்தைப் பற்றிக் கதைப்பவர்கள் அங்கு சென்று புலிகளுக்கு வகுப்பு எடுக்கலாமே. அறைக்குள் முடங்கிக் கிடந்து வலைப்பின்னலில் தகவல்களைப் பெற்று அதனை எழுதுபவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்? புலிகளிடம் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால்தான் சாட்டிலைற் போன்களைப் பாவித்து அனுராதபுரத்தில் தாக்குதல் நடத்தினார்களா? விளக்கம் உள்ளவர்களுக்கு விளங்க வைக்கலாம். விளங்காதது மாதிரி நடிப்பவர்களுக்கு என்றுமே விளங்க வைக்க முடியாது.

உணர்வுள்ள எந்தத் தமிழனும் மாவீரர் நாளைப் புறக்கணிக்க மாட்டான். அவ்வாறேதான் அங்குள்ள மக்களும் உணர்ச்சிப் பெருக்கில் தலைவர் அவர்களின் உரையைக் கேட்பதற்குக் கூடியிருக்கிறார்கள். கிபீர் வருவது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இவர்கள் போராட்டத்தைப் பற்றியும் இணையத்தளச் செய்திகளிலிருந்தே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். ஏனென்றால், தாயகத்துடன் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இவ்வளவு விளக்கமின்மை இருக்காது.

"கடந்த 3 நாட்களில் கொல்லப்பட் சுமார் 25 இற்கம் அதிகமான பொதுமக்கள், மாணவிகள் என பெரும்பாலானோர் மாவீரர் தின நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளின் போதே கொத்ததாக குறிவைக்கப்பட்டு குலை அறுக்கப்பட்டிருக்கின்றனர்.

மாவீரர்கள் யாரை பாதுகாக்க போராடி உயிர் துறந்தனரோ அதே மாவீரர்கள் நினைவுதின கொண்டாட்டங்களினால் அதே மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது! இதை பார்த்து மாவீரர்களே வெட்கித் தலை குனிந்திருப்பர்."

தங்களுக்காக உயிர்துறந்தவர்களை நினைவுகூருவதற்காகவே அவர்கள் அங்கு கூடியிருந்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வந்த நாங்கள்தான் தாயகஉணர்வின்றி இருக்கிறோம். எங்களுக்குத் தான் உயிரை விடப் பயம். ஆனால் அங்குள்ள மக்களுக்கு தமிழீழ உணர்வு மிக அதிகமாகவே இருக்கிறது.

"அவர்களை அவர்கள் பாட்டில் விடுங்கள்! தமிழுணர்வு அவர்களை சரியான தடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்!'

எனக்கு நம்பிக்கையில்லை :icon_idea:

என்னைப் பொறுத்தவரை, இதற்கு மேல் இவ்விடயத்தைப் பற்றி எழுதுவது வீண் விரயம். இதற்குப் பதில் எழுதுவதற்குப் பதிலாக நாம் எமது செயற்பாடுகளைக் கூட்டினோமானால், தாயகத்திற்கு உபயோகமாக இருக்கும்.

தலைவர் அவர்களின் இன்றைய உரையிலிருந்து ஒரு பகுதி:

"முப்பத்தைந்து ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீர விடுதலை வரலாற்றில் நாம் என்றுமில்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படையென முப்படைகளும் ஒன்றுசேர ஒரு பெரும் படையாக எழுந்து, நிமிர்ந்து நிற்கிறோம்.

நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுதபலம், ஆன்ம பலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்து நிற்கிறோம்."

மாவீரர்கள் யாரை பாதுகாக்க போராடி உயிர் துறந்தனரோ அதே மாவீரர்கள் நினைவுதின கொண்டாட்டங்களினால் அதே மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது! இதை பார்த்து மாவீரர்களே வெட்கித் தலை குனிந்திருப்பர்.

சிங்களவன் தாக்குகிறான் என்பதற்காக இனி மாவீரர் நாள் நிகழ்வுகளை நிறுத்தலாம் என்றிறீர்களா? புலிகளின் குரல் மீது இனியும் தாக்குவான் என்பதற்காக புலிகளின் குரல் ஒலிபரப்பையே முற்றாக நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றலாம் என்கிறீர்களா?

எமது உயிரைப் பாதுகாப்பதற்காக தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகூருவருவதை நாம் உயிருக்கு பயந்து நிறுத்தினால் நாம்தான் தலை குனியவேண்டும்.

Edited by மின்னல்

உணர்வுள்ள எந்தத் தமிழனும் மாவீரர் நாளைப் புறக்கணிக்க மாட்டான். அவ்வாறேதான் அங்குள்ள மக்களும் உணர்ச்சிப் பெருக்கில் தலைவர் அவர்களின் உரையைக் கேட்பதற்குக் கூடியிருக்கிறார்கள். கிபீர் வருவது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இவர்கள் போராட்டத்தைப் பற்றியும் இணையத்தளச் செய்திகளிலிருந்தே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். ஏனென்றால், தாயகத்துடன் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இவ்வளவு விளக்கமின்மை இருக்காது.

புறக்கணிக்கச் சொல்லவில்லையே, உணர்வுகளை வீட்டில் பாதுகாப்பான இடங்களில் இருந்தவாறு வெளிப்படுத்தலாம். சிவப்பு மஞ்சளில் அலங்கரித்த பொதுஇடங்களில் ஒன்று கூடல், பின்னர் "அப்பாவிப் பொதுமக்கள் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை" என்று தலைப்பிடுவதை தவிருங்கள். ஏனெனில் அதை கேட்க இன்று யாரும் இல்லை!

தங்களுக்காக உயிர்துறந்தவர்களை நினைவுகூருவதற்காகவே அவர்கள் அங்கு கூடியிருந்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்து வந்த நாங்கள்தான் தாயகஉணர்வின்றி இருக்கிறோம். எங்களுக்குத் தான் உயிரை விடப் பயம். ஆனால் அங்குள்ள மக்களுக்கு தமிழீழ உணர்வு மிக அதிகமாகவே இருக்கிறது.

அங்குள்ள மக்களை தன்னில் ஒருவராக நினைக்கும் எவரும் இந்த சம்பங்களுக்காக வருத்தப்படால் இருக்கமாட்டார்கள். மக்கள் விரும்பினாலும் கூட அதை அனுமதித்தது தவறு!

"சண்டையென்றால் வீரம் என்று சொல்லி நெஞ்சை நிமித்திக் கொண்டு போய் சாகிறதில்லை!" சொன்னது பிரபாகரன், ஒளிப்படக்காட்சி ஒன்றில்!

Edited by சாணக்கியன்

உம்ம் .......ஊங்களின் இங்த வாதத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் அநுசரிப்பதும், எமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதும் எமது வரலாற்றுக் கடமை ! அதில் மறுபேச்சுக்கே இடமில்லை. ஆனால் நாம் கூற வருவது, இழப்புகளைத் தவிர்த்து அந்தப் புனித நாளில் எமது கடமையைச் செய்யலாம் என்பதுதான். இழக்கும் ஒவ்வொரு தமிழ் உயிரும் மதிப்பற்றது. அது மாவீரனாக இருந்தாலென்ன, சாதாரண மக்களாக இருந்தாலென்ன. எமது உயிர் அனைத்தும் காக்கப்பட வேண்டியன. விரைவாக அழிந்து வரும் இனம் நாம்!

வெற்று வீராப்புக்கு இது நேரமல்ல, முடியுமானவரை இழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். இதில் கோழைத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஈவு இரக்கமற்ற ஒரு எதிரியுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். அவனுக்கு தமிழ் உயிர் அனைத்துமே ஒன்றுதான் என்பதை நினைவில் வைத்திருப்போம் !

சிறிது சிந்தித்துப் பாருங்கள், புலிகளின் ஆயுதக் களன்சியங்களும், முக்கிய பாசறைகலும் இன்றும் எதிரியின் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கக் காரணம், அவை இரகசியமாக மறைக்கப் பட்டிருப்பது தான். மாவீரர் தினமும் அவ்வாறே கொண்டாடப் படவேண்டும். எதிரி பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் கொண்டாடவில்லையே? பிறகு ஏன் கோழைத்தனம் பற்றியெல்லாம் பேசவேண்டியிருக்கிறது ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.