Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதரவு கேட்கும் ராமேஸ்வரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாடுகளும் தான் இலங்கைக்கு உதவுகிறது.ஆகவே அந்நாடுகளின் பொருட்களை நுகர்தல் மூலம் நாங்கள் மறமுகமாக உதவுகிறோமா?

இப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டாலும் எமது கலைஞர்களின் மிக பெரிய பங்கு உண்டு.இப்படத்தின் மூலம் எமது போராட்டத்தின் அறியாத தமிழ் நாட்டு மக்களும் அறிய பெரியவாய்ப்புள்ளது. இது ஒரு மிக பெரிய பிரச்சார வடிவமும் கூட.எனவே இப்படத்தை புறக்கணிப்பது எமது தலையில் நாமே மண் அள்ளி போடுவதற்கு ஈடாகும்.

  • Replies 55
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா நாடுகளும் தான் இலங்கைக்கு உதவுகிறது.ஆகவே அந்நாடுகளின் பொருட்களை நுகர்தல் மூலம் நாங்கள் மறமுகமாக உதவுகிறோமா?

இப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டாலும் எமது கலைஞர்களின் மிக பெரிய பங்கு உண்டு.இப்படத்தின் மூலம் எமது போராட்டத்தின் அறியாத தமிழ் நாட்டு மக்களும் அறிய பெரியவாய்ப்புள்ளது. இது ஒரு மிக பெரிய பிரச்சார வடிவமும் கூட.எனவே இப்படத்தை புறக்கணிப்பது எமது தலையில் நாமே மண் அள்ளி போடுவதற்கு ஈடாகும்.

எல்லா நாடுகளும் தான் இலங்கைக்கு உதவுகிறது.ஆகவே அந்நாடுகளின் பொருட்களை நுகர்தல் மூலம் நாங்கள் மறமுகமாக உதவுகிறோமா? ஈழத்தமிழருக்கு முதல் எதிரி இந்தியா தான். இது தெரியாதா?

அந்த நாடுகளில் இருக்கும் ஈழத் தமிழருடாக ஈழத்துக்கு வழங்கப்படும் உதவிகளை எப்படி எடுத்துக் கொள்வது?

இதை பிரச்சாரம் என்று எடுப்பதா???. இந்திய அரசு தனது கொள்கைக்கு எதிரான ஒரு வசனம் இந்த திரைப்படத்திலிருந்தாலும் வெட்டி எறியும் என்று தெரியாதா?? சாதாரண விளம்பர பதாதைகளையே (போஸ்டர்) படுத்தும் பாடு எமக்கு தெரியாதா?

உங்கள் பிரச்சாரத்துக்கு இந்திய அரசு உதவும் என்று கூட எழுதுவிங்க போல இருக்கு :wub:

ஒன்றை மட்டும் கவனமாக ஈழத்தமிழர் புரிந்து கொள்்ளல் வேண்டும் பிற நாட்டு புலனாய்வு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் அவர்களால் திட்டமிட்ட முறையில் நம்மிடையே பல வடிவங்களில் வரலாம்

எமது கலைஞர்களின் மிக பெரிய பங்கு உண்டு விரல் விட்டு என்னலாம் எத்தனை பேர் என்று.

அதிலும் ஈழத்துக்க ஆதரவானவர் எத்தனை பேர்?

அப்போ ஈழத்திலிருக்கும் கலைஞர்கள் எல்லாம் என்ன??

இப்படத்தை புறக்கணிப்பது எமது தலையில் நாமே மண் அள்ளி போடுவதற்கு ஈடாகும். எமது ஈழத்தமிழரிடையே தொலை துர சிந்தனை இன்னும் வளர்சியடைய வேண்டும்

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிரச்சாரத்துக்கு இந்திய அரசு உதவும் என்று கூட எழுதுவிங்க போல இருக்கு

எமது ஈழத்தமிழரிடையே தொலை துர சிந்தனை இன்னும் வளர்சியடைய வேண்டும்

சீமானின் பேச்சின் மூலம் தமிழ் நாட்டின் பலருக்கு ஈழபிரச்சனை பற்றி தெரியாது என கூறியிருந்தார்.ஆகவே தமிழ் நாட்டு மக்களுக்கான பிரச்சார வடிவம் என நான் கருதி இருந்தேன்.

எப்படி தூர சிந்தனை வளர வேண்டும் என உங்கள் கண்ணோட்டத்தில் நினக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் பேச்சின் மூலம் தமிழ் நாட்டின் பலருக்கு ஈழபிரச்சனை பற்றி தெரியாது என கூறியிருந்தார்.ஆகவே தமிழ் நாட்டு மக்களுக்கான பிரச்சார வடிவம் என நான் கருதி இருந்தேன்.

எப்படி தூர சிந்தனை வளர வேண்டும் என உங்கள் கண்ணோட்டத்தில் நினக்கிறீர்கள்.

இதையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்

சீமானின் பேச்சின் மூலம் தமிழ் நாட்டின் பலருக்கு சீமான் என்பவர் ஈழ ஆதளவாரராக இருக்கலாம்.

எம்.ஜி.ஆர் அவர்கள் உதவவில்லையா. (இப்போ அதன் வழி வந்த ஜெயலலிதா எதிரியாக மாறியது வேறு விடயம்)

வைகோ நெடுமாறன் ஜயா போன்றவர்கள் எத்தனை வருடங்களாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்?

சீமான் எப்போ தொடக்கம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கினார்?

சீமான் அரசியலில் இணையபோகின்றாரா என்று தெரியவில்லை

தமிழ் நாட்டின் பலருக்கு ஈழபிரச்சனை பற்றி தெரியாது இது பல ஆண்டுகளாக சொல்லப்படும் ஒரு பொதுவான வாக்கியம் :wub:

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் பலருக்கு ஈழபிரச்சனை பற்றி தெரியாது இது பல ஆண்டுகளாக சொல்லப்படும் ஒரு பொதுவான வாக்கியம்

உண்மையும் கூட என்பது சிரிப்பதுக்குரிய விடயமல்லவே. மாறாக மிகவும் கவலைக்குரிய விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டின் பலருக்கு ஈழபிரச்சனை பற்றி தெரியாது இது பல ஆண்டுகளாக சொல்லப்படும் ஒரு பொதுவான வாக்கியம்

உண்மையும் கூட என்பது சிரிப்பதுக்குரிய விடயமல்லவே. மாறாக மிகவும் கவலைக்குரிய விடயம்.

இதை நினைத்து அழவா முடியும். தற்போதைய நிலைமையில் தமிழ் நாட்டு தமிழரால் ஈழத்தமிழருக்கு முழுமையான ஆதரவோ அல்லது உதவியோ செய்ய முடியாது. அவர்கள் நிலமை அப்படி. அவர்கள் இருப்பது ஒரு குறுகிய வட்டத்துக்கள். அதில் முதலிடம் வகிப்பது சினிமா. அவர்களுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள்.

அந்த மேல் வர்க்கம் தான் புலத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களையும் அதே நிலைமைக்கு கொண்டுவர முயற்சிக்கிறதா???

உதாரணமாக யாழ்களத்தில் ஒரு சினி செய்தி வந்தாலே போதும்..... விமர்சனங்கள் பக்கம் பக்கமாய் புரளும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக யாழ்களத்தில் ஒரு சினி செய்தி வந்தாலே போதும்..... விமர்சனங்கள் பக்கம் பக்கமாய் புரளும்

அதில் என்ன பிழை கண்டீர் தோழரே?

  • தொடங்கியவர்

சில சின்ன பிரச்சனைகளை

நெடு தூரம் என்று விவாதித்தால்

நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான் இருக்க முடியும்.

பல வேளைகளில் நாமே நமக்கு எதிரி.

வேறு யாருமில்லை?

உதாரணமாக

இலங்கையில் உள்ள பலருக்கு

இந்த யுத்தம் எதுக்கென்றே தெரியாது?

நாமே அப்படி இருக்கும் போது

அடுத்தவர்களை நொந்து ஒரு பயனுமில்லை.

நாம் ஒருவருக்கு உதவினால்தான்

மற்றவர் நமக்கு உதவுவார்.

ஒருவன் தன்னால் முடிந்த விதத்தில்

உதவ நினைக்கும் ஒருவனை

அதைக் கூட செய்யவிடாது தடுத்துக் கொண்டே

உதவவில்லை என்பது

நாம் செய்யும் பெரும் தவறு!

இலங்கையில் இருந்து எத்தனை தமிழ் படங்கள் உருவாகின்றன?

சிந்தித்தால் வருடத்தில் ஒன்று கூட இல்லை.

நம்மவரால் அதை எப்போது செய்ய முடியும் என்று வருகிறதோ

அன்று அதை பார்ப்போம்?

இந்திய சினிமாவை தடுப்பதால்

எதையும் யாராலும் சாதிக்க முடியாது.

கலை வேறு

அரசியல் வேறு

மக்கள் வேறு

அரசியல்வாதிகள் வேறு

எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளக் கூடாது.

புலம் பெயர் நாடுகளில் வந்த

தொலைக் காட்சிகள்

புலம் பெயர் கலைஞர்களை வளர்க்கவேயில்லை.

அது அனைவருக்கும் தெரியும்.

முதலாளிகளும் வால் பிடித்தவர்களுமே வளர்ந்தார்கள்.

என்ன?

அவர்கள் கூட

தமிழக நிகழ்வுகளைத்தான்

கொட்டினார்கள்.

நம் கலைஞர்களை எத்தனை சதவீதம் எட்டிப் பார்த்தார்கள்?

இன்றும் இந்திய நிகழ்ச்சிகளைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சிகள் கூட இல்லாவிட்டால்

தொலைக்காட்சியில் வானோலி நிகழ்ச்சிதான் நடத்த வேண்டும்.

அதற்கும் அவர்களது பாடல்களைத்தான் ஒலிக்க வைக்க வேண்டும். :lol::lol:

நமது அனைத்து படைப்புகளையும்

ஒன்றாக சேர்த்தால் கூட

ஒரு மாதம் கூட தொடர்ந்து நிகழ்ச்சிகளை தர முடியுமோ நானறியேன்? :wub:

புலம் பெயர்ந்தவர்கள்

நிகழ்வுகள் எதுவுமே தரமாக வர வாய்ப்பில்லை.

காரணம்

இங்கு செலவு செய்யும் தொகையில்

1 சதவீதம் கூட இங்குள்ள தொலைக் காட்சிகள் தராது.

இங்கு பேசுவோர் எவராவது

ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு பணம் வாங்கிக் கொடுங்கள்.

நான் தற்கொலை கூட செய்து கொள்ளத் தயார்.

நம் படைப்புகளை போடவே

பணம் கேட்கும் தொலைக் காட்சிகள்?

இவற்றை போடுவதே பெரிய பிரச்சனை என்று

அங்கலாய்த்துக் கொள்ளும் தொலைக் காட்சிகள்?

நம் பணத்திலேயே கெசட்டும் வாங்கி

தபாலிலும் அனுப்பி எப்ப போடுவீங்க என்று

நூறு முறை தொலைபேசியில் அழைத்து

அதற்கும் செலவு செய்தாலும் வருமோ தெரியாது.

அண்ண

நீங்க செய்ற புரோகிராம் எல்லாம் பார்க்கிறன் சுப்பர் என்று

காக்கா வடைக் கதை போல ஏதாவது நரித்தனம் பண்ணினால்தான் வரும்.

தொலைக் காட்சிகளில் என் நண்பர்கள் இருக்கிறார்கள்.

அதற்காக நான் பொய் பேசுவதில்லை.

அவர்களிடம் எழுதுவதை விட திட்டுவது அதிகம்.

அவர்களும் என்ன பண்ண

அதிபர்கள் கருணை காட்ட வேண்டும் என்கிறார்கள்.

நான் எப்பவோ

தமிழ் படைப்புகளை விட்டு

ஜெர்மன் படைப்புகளுக்கு போய் விட்டேன்.

நான் இருந்தால்தான்

கலையும் கத்தரிக்காயும்.

தமிழ் என்றால் சட்டி எரியாது

முடிதான் இன்னும் கொட்டும்? :wub:

நம் கலைஞர்களை

கலைஞர்களாக பார்க்காமல்

அரசியல் காழ்புணர்வுகளை காட்டிய தொலைக் காட்சிகள்?

தமிழன் பணத்திலேயே

தமிழனை சாகடித்த தொலைக்காட்சிகளை

இப்படி எத்தனையை

நான் பார்த்திருக்கிறேன்.

புலம்பெயர் நாட்டில் உருவான முதல் தமிழ் தொலைக் காட்சியின்

சுவிஸ் கலையகம் என் பழைய வீடுதான்.

என் பணத்தில் தமிழ் வளர்க்க நினைத்தேன்.

என் நண்பர்கள் சுவிஸ் முழுவது சட்டி பூட்டினார்கள் (சட்லைட்)

ஆர்வக் கோளாறு

அவர்கள் முகத்தில் கூட கரிதான் பூசப்பட்டது.

அதை அவர்களோடு பேசினால்

முட்டாள்தனம் போதும் என்கிறார்கள்.

காட் விற்பவனுக்கு கமிசனாவது கிடைக்கும்

கலைஞனுக்கு அது கூட இல்லை.

இவை எல்லாம் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

என் அனுபவத்தில் பேசுகிறேன்.

இது பொய்யல்ல : உண்மை.

வட்டங்களுக்குள் இருப்போர் அழிந்தே போவார்கள்.

அதை எவராலும் தடுக்க முடியாது.

அது குறித்து கவலைப்படக் கூடாது.

நம்மவருக்கு

பயிற்சிகள் போதாது.

நாம் ஏனைய சமூகத்தவருடன் சேர்ந்தாவது

பயிற்சிகளை பெற வேண்டும்.

அதற்காகவாவது மற்றவர்களோடு சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

உதாரணமாக சிங்கள சினிமாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆரம்பத்தில் இந்தியாவில்தான் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

அடுத்து அவர்கள் இலங்கைக்கு வந்து பணியாற்றினார்கள்.

இன்று தானாகவே பல படைப்புகளை உருவாக்குகிறார்கள்.

இந்தியாவை விட உலக விருதுகளை பெற்றிருக்கிறது சிங்கள சினிமா!.

இருந்தாலும் தொழி நுட்ப காரணங்களுக்காக

இன்றும் சென்னைக்குத்தான் செல்கிறார்கள்.

தரம் முக்கியம்

குறைந்த செலவில் நிறைந்த தரம் தேவை.

நம்ம படைப்பு தேவை என்று

இங்கு மாட்டு வண்டி ஓட்ட வேண்டும் என நினைப்பது எப்படியோ

அப்படித்தான் இதுவும்?

முதலில் தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு முதலில் வழியை தேட வேண்டுமே தவிர

எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டால்

நாம்தான் முட்டி மோதிக் கொள்வோம்.

ஆணிவேரில் முக்கிய பங்காற்றியவர்கள்

இந்தியர்கள்தானே?

ஏன் அதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கவில்லை.

மரண பயம்தானே?

உங்கள் வீட்டில் வானோலியில்

இந்திய இசை கேட்டால் நிறுத்தி விடுங்கள்.

நாம் வணங்கும் தெய்வத்தை தூக்கி எறிந்்து விடுங்கள்

நமக்கென்று தெய்வங்கள் உருவாகும் வரை?

முதலில் நம்மவரில் ஒரு சிலரையாவது வளர விடுங்கள்

பின்னர் காய் பறிக்கலாம்.

அடுத்தவன் தோட்டம் ஏற்கனவே பூத்து குலுங்குகிறது.

இந்திய சினிமா எம்மை நம்பி இல்லை.

நம்மை நம்பித்தான் என்றால்

மலையாள - தெலுங்கு - கிந்தி - கன்னடம் மற்றும்

ஏனைய இந்திய மொழி சினமாக்கள்

அழிந்து வெகு காலமாகி இருக்கும்?

மன்னிக்கவும்

உண்மை பேசுவதற்காக.................

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதாரணமாக யாழ்களத்தில் ஒரு சினி செய்தி வந்தாலே போதும்..... விமர்சனங்கள் பக்கம் பக்கமாய் புரளும்

அதில் என்ன பிழை கண்டீர் தோழரே?

:wub::wub::lol::lol::D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகோரம் ஆவேசம் இல்லாமல் எல்லோருக்கும் பொருந்தும் படியாக நல்ல கருத்துக்களை எடுத்துரைத்த அஜீவன் அண்ணாவுக்கு நன்றிகள். இதே போன்ற உங்கள் கருத்துக்கள் ஏனைய பகுதிகளிலும் வந்தால் நன்றாக இருக்குமென நினைக்கின்றேன் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஒருவருக்கு உதவினால்தான்

மற்றவர் நமக்கு உதவுவார்.

ஒருவன் தன்னால் முடிந்த விதத்தில்

உதவ நினைக்கும் ஒருவனை

அதைக் கூட செய்யவிடாது தடுத்துக் கொண்டே

உதவவில்லை என்பது

நாம் செய்யும் பெரும் தவறு!

உதவுவது எந்த இடத்திலிருந்து செய்வதை பொறுத்தது. இந்தியாவில் இருந்து கொண்டு ஈழ ஆதரவு திரைப்படங்களை எடுப்பதென்பது?????????????

இலங்கையில் இருந்து எத்தனை தமிழ் படங்கள் உருவாகின்றன?

சிந்தித்தால் வருடத்தில் ஒன்று கூட இல்லை.

நம்மவரால் அதை எப்போது செய்ய முடியும் என்று வருகிறதோ

அன்று அதை பார்ப்போம்?

அதற்கான காரணம் என்ன?

இந்திய சினிமாவை தடுப்பதால்

எதையும் யாராலும் சாதிக்க முடியாது.

கலை வேறு

அரசியல் வேறு

மக்கள் வேறு

அரசியல்வாதிகள் வேறு

எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளக் கூடாது.

அப்படியென்றால் தமிழ் நாட்டில் தொடர்சியாக அரசியலில் இருப்பவர்கள் எங்கிருந்து வந்தனர்?

வைகோ நெடுமாறன் ஜயா போன்ற தமிழ் பற்றாளர்கள் அரசியலில் முதன்மை இடத்திற்கு வர முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

நமது அனைத்து படைப்புகளையும்

ஒன்றாக சேர்த்தால் கூட

ஒரு மாதம் கூட தொடர்ந்து நிகழ்ச்சிகளை தர முடியுமோ நானறியேன்? :wub:

அதாவது ஈழத்தமிழர்கள் படைப்புகளுக்கு தொடர்சியாக இந்தியாவில் தான் தங்கியிருக்க தான் வேண்டும் என்று கூறுகின்றீர்கள்???

புலம் பெயர்ந்தவர்கள்

நிகழ்வுகள் எதுவுமே தரமாக வர வாய்ப்பில்லை.

காரணம்

இங்கு செலவு செய்யும் தொகையில்

1 சதவீதம் கூட இங்குள்ள தொலைக் காட்சிகள் தராது.

அதற்கு தான் ஈழத்திலுள்ள கலைஞர்களை வளர்கவேண்டும்.

இங்கு பேசுவோர் எவராவது

ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு பணம் வாங்கிக் கொடுங்கள்.

நான் தற்கொலை கூட செய்து கொள்ளத் தயார்.

புரியவில்லை? தற்கொலை என்பது இயலாத்தனம். (கரும்புலிகளை சொல்லவில்லை)

நான் எப்பவோ

தமிழ் படைப்புகளை விட்டு

ஜெர்மன் படைப்புகளுக்கு போய் விட்டேன்.

நான் இருந்தால்தான்

கலையும் கத்தரிக்காயும்.

தமிழ் என்றால் சட்டி எரியாது

முடிதான் இன்னும் கொட்டும்? :wub:

வெளிநாடுகளில் தமிழ் படைப்புகளை எடுப்பதில் பொருளாதார பிசச்சனை இருப்பது உண்மை தான்

காட் விற்பவனுக்கு கமிசனாவது கிடைக்கும்

கலைஞனுக்கு அது கூட இல்லை.

இவை எல்லாம் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

என் அனுபவத்தில் பேசுகிறேன்.

இது பொய்யல்ல : உண்மை.

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இதற்கும் ஈழத்தில் கலையை வளர்பதற்கும் தொடர்பில்லை

உதாரணமாக சிங்கள சினிமாவை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆரம்பத்தில் இந்தியாவில்தான் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

அடுத்து அவர்கள் இலங்கைக்கு வந்து பணியாற்றினார்கள்.

இன்று தானாகவே பல படைப்புகளை உருவாக்குகிறார்கள்.

இந்தியாவை விட உலக விருதுகளை பெற்றிருக்கிறது சிங்கள சினிமா!.

இருந்தாலும் தொழி நுட்ப காரணங்களுக்காக

இன்றும் சென்னைக்குத்தான் செல்கிறார்கள்.

ஆனால் தமிழீழம் உருவாகிய பின்னர் நமது கலைஞர்கள் ஹொலிவூட்டிலேயே தேவையானதை பெறலாம்.

இந்தியாவை நம்பி இருக்க தேவையில்லை.

ஆணிவேரில் முக்கிய பங்காற்றியவர்கள்

இந்தியர்கள்தானே?

ஏன் அதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கவில்லை.

மரண பயம்தானே?

யாருக்கு மரண பயம்? உங்கள் கருத்தின் படி புலிகள் ஈழ தமிழ் மக்களை வெருட்டி வைத்திருக்கின்றனர் என்பதா?

முதலில் நம்மவரில் ஒரு சிலரையாவது வளர விடுங்கள்

பின்னர் காய் பறிக்கலாம்.

அடுத்தவன் தோட்டம் ஏற்கனவே பூத்து குலுங்குகிறது.

இந்திய சினிமா எம்மை நம்பி இல்லை.

நம்மை நம்பித்தான் என்றால்

மலையாள - தெலுங்கு - கிந்தி - கன்னடம் மற்றும்

ஏனைய இந்திய மொழி சினமாக்கள்

அழிந்து வெகு காலமாகி இருக்கும்?

இந்திய சினிமா ஈழத்தமிழரை நம்பி இருப்பதாக சொல்வரவில்லை

ஈழத்தமிழரின் பணம் இந்திய பொருளாதாரத்திற்கோ அல்லது அவர்களின் மறைமுக அரசியல் திணிப்புக்களோ இடம் கொடுக்க கூடாது என்பது தான் அடிப்படை கருத்து.

சில ஊடகங்கள்

தமிழர் தொடர்பான செய்திகளை

தாங்கள் மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று

எத்தனித்ததன் பயன் காரணமாக

பல தமிழ் ஆர்வு ஊடகங்கள் சோர்ந்து போயின.

சில எதிரணிகளின் கைகளில் சிக்கின.

இவை யதார்த்த உண்மை!

பல கலைஞர்களும் ஆர்வலர்களும் கூட இங்கே அடக்கம்.

TTN போன்ற ஊடகங்களின் தடை நிலைக்கு பின்னர்

ஏனைய ஊடகங்களால்தான்

செய்திகளை ஒளி - ஒலிபரப்ப முடிகின்றன.

ஆரம்பம் முதலே

செய்திகளையும் - நிகழ்்வுகளையும்

அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தால்

அனைத்து ஊடகங்களையும் வளர்க்க வழி செய்திருந்தால்

பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டே இருக்கும்.

அது நம்மில் ஒரு ஒற்றுமை உணர்வை மேலும் ஏற்படுத்தியேயிருக்கும்.

ஒரு பக்க தடை ஏற்பட்ட போது

மறு புறத்தே சிலவற்றை செய்ய

ஒரு சில சகோதர ஊடகங்கள் இருக்கிறது எனும்

நம்பிக்கை கூட நமக்குள் இருந்திருக்கும்.

உண்மைதான் அஜீவன் அண்ணா. இனி அந்த நிலை

வராது என்றே நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியாது.

கொலிவூட்டுக்கு போகும் வரை இருக்கிறேன்.

நன்றி!

இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியாது.

கொலிவூட்டுக்கு போகும் வரை இருக்கிறேன்.

நன்றி!

கோபிக்காதீங்கோ அஜீவன் அண்ணா :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா உங்களின் கருத்துகளுக்கு நன்றி.ஒரு கலைஞனின் ஆதங்கம் புரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியாது.

கொலிவூட்டுக்கு போகும் வரை இருக்கிறேன்.

நன்றி!

Ajeevan,

போராட்டம் தான் வாழ்க்கை. ஆனால் அதற்காக சோர்வடைந்தால் ??? உங்கள் மனத்தாக்கல் எனக்கு புரிகிறது. உங்களை போன்ற கலைஞர்கள் மேன்மேலும் வளர ஒரே வழி தமிழீழம் என்பது தான் என்று நான் நினைக்கிறேன்.

இங்கு நமது பொருளாதார நிலை இடம் கொடுப்பது மிகவும் கடினம். அதற்கேற்ப நாம் நகருவதே சால சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

சுருக்கமாக சொல்வதானால் உங்கள் எழுத்து வடிவிலேயே உங்கள் திறமை தெரிகின்றது.

  • தொடங்கியவர்

சத்தமில்லாமல் ஒரு தமிழ் திரைப்படத்தை செய்து முடித்திருக்கிறேன்.

விரைவில் முடிவுறும்..............

இங்கே கருத்து வைக்கும் உறவுகளை நினைக்க மகிழ்வாய் இருக்கிறது.

யார் உங்களில் அதை வெளியிட

உங்கள் நாடுகளில் திரையிட உதவ முடியும்?

அப்படி முடிந்த நண்பர்கள்

தயவு செய்து

உங்கள் உண்மையான பெயரையும்

முகவரி மற்றும்

தொலைபேசி தொடர்பு இலக்கங்களையும்

ajeevan@ajeevan.com

க்கு அனுப்புங்கள்.

தவிர

சுனாமி சிறுவர்களுக்கு உதவி வரும் அமைப்புக்காக

ஒரு இசைவட்டு கடந்த டிசம்பர் 1 ம் திகதி

வெளிட்டோம்.

அதையும் பெற்று முடிந்ததை

நம் பிஞ்சுகளை வாழ வைக்க உதவுங்கள்

இதற்கு விலை இல்லை

எது முடியுமோ அதை கொடுங்கள்.

அது ஒரு டொலராக கூட இருக்கலாம்.

இல்லாதவர்கள் இலவசமாக பெறுங்கள்.

முடிந்தோர் உதவுங்கள்.................

பேச்சை விட்டு செயலை காட்டுவோம்

பார்ப்போம்?

87354995nu2.jpg

25252411tv7.jpg

இசைவட்டின் ஒரு பகுதியை கேட்க:-

http://www.esnips.com/doc/4e88894c-7da1-4f...et=flash_record

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைவட்டின் ஒரு பகுதியை கேட்க:-

http://www.esnips.com/doc/4e88894c-7da1-4f...et=flash_record

மிகவும் இனிமையாகவும் கருத்துள்ளதாகவும் நன்றாகவும் உள்ளது பாடல். :wub:

  • தொடங்கியவர்

சத்தமில்லாமல் ஒரு தமிழ் திரைப்படத்தை செய்து முடித்திருக்கிறேன்.

விரைவில் முடிவுறும்..............

இங்கே கருத்து வைக்கும் உறவுகளை நினைக்க மகிழ்வாய் இருக்கிறது.

யார் உங்களில் அதை வெளியிட

உங்கள் நாடுகளில் திரையிட உதவ முடியும்?

இதற்கு இதுவரை யாரும் பதில் தரவில்லை?

பேசாதீர்கள்

அது மிக இலகுவான விடயம்

அதை செயலில் காட்டுங்கள்.

ஏன் மெளனம்?

இதுதான் பிரச்சனை!

புரிகிறதா?

நமக்கு சந்தை மட்டுமில்ல சப்போட் கூட இல்ல சாமி!

அனைவருக்கும் நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

ஈரம் திரைப்படத்தில் வரும் உலகம் தந்த துயரம் என்ற பாடலைப் பாடும் அனிதா யாழ்கள உறுப்பினரான அனிதாவா?

  • தொடங்கியவர்

ஈரம் திரைப்படத்தில் வரும் உலகம் தந்த துயரம் என்ற பாடலைப் பாடும் அனிதா யாழ்கள உறுப்பினரான அனிதாவா?

கந்தப்பூ

நீங்க அனிதாகிட்ட இருந்து அடி வாங்கி தரவா போறீங்க............. :)

பாடும் அனிதா வேறு கந்தப்பூ!

இவரல்ல அவர்

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணன். இணைத்த பாடலும் உணர்வு பூர்வமானது. உங்கள் முயற்சிக்கு என்னாலான உதவியாக முடிந்தவரை இறுவெட்டுக்களை கொடுத்து அவர்கள் தரும் உதவிகளை அனுப்பி வைக்கின்றேன். இது சம்மந்தமாக மேலதிக விபரங்களுடன் தனிமடலில் தொடர்பு கொள்கின்றேன்.

  • தொடங்கியவர்

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணன். இணைத்த பாடலும் உணர்வு பூர்வமானது. உங்கள் முயற்சிக்கு என்னாலான உதவியாக முடிந்தவரை இறுவெட்டுக்களை கொடுத்து அவர்கள் தரும் உதவிகளை அனுப்பி வைக்கின்றேன். இது சம்மந்தமாக மேலதிக விபரங்களுடன் தனிமடலில் தொடர்பு கொள்கின்றேன்.

நன்றி சுகன்

நீங்களும் குமாரசாமியும் மட்டுமே எனக்கு தனிமடல் எழுதியிருக்கிறீர்கள்.

இங்கே தமிழ்

தமிழ் கலைஞர்கள்

எமது படைப்பு என பேசும் நண்பர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?

இது அனைவருக்கும் இப்போது புரியும் :lol::unsure::lol:

1990ம் வருடம் தொடக்கம் புலத்தில் தமிழ் படைப்புகள் உருவாக்கி வருகிறேன்.

மேடையில் பேசுவோர்

கை தட்டலின் பின் இல்லாமல் போனதை

நான் இன்று நேற்று கண்டதில்லை. :lol:

எனவே

நான் கோபப்படுவதில்லை.

இவர்கள் கரம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் இல்லை.

நான் ஒரு பொழுது போக்காக அழிவாகவேதான்

நான் தமிழ் படைப்புகளை உருவாக்குகிறேன்.

பொய் பேச முடிந்தால்

வால் பிடிக்க முடிந்தால்

என்னாலும் சுருட்ட முடியும்.

இருந்தாலும்

ஒரு நாள் வருந்த வேண்டி வரும்.

எனது படைப்புகள் போல

நான் வாழ முயல்கிறேன்.

அது நிம்மதி தருகிறது.

உங்களைப் போன்ற ஒரு சிலர்

வைரங்கள் போன்றவர்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இசைவட்டின் ஒரு பகுதியை கேட்க:-

அஜீவன் அண்ணா, மிகவும் நன்றாக உள்ளது. உங்களுக்கும் அணைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். :unsure:

சத்தமில்லாமல் ஒரு தமிழ் திரைப்படத்தை செய்து முடித்திருக்கிறேன்.

விரைவில் முடிவுறும்..............

இன்றுவரை அதை எதிர்பார்த்துள்ளோ(ன்) ம்.... நன்றி நய்நா... :lol::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.