Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக காங்கிரசை தூண்டிவிடுவது இந்திய மத்திய உளவுத்துறையே: அம்பலப்படுத்தியது ஜூனியர் விகடன்

Featured Replies

தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த் தமிழக உறவுகள் கிளர்ந்தெழுவதை சகிக்க முடியாத இந்திய மத்திய உளவுத்துறை, தமிழக காங்கிரஸ் கட்சியினரை தூண்டிவிட்டு வருவதை தமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் பிரபல ஏடான "ஜூனியர் விகடன்" அம்பலப்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பன உளவுத்துறை மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறது ! தமிழ்நாடு காங்கிரசு போடும் ஆட்டத்தின் பின்னால் இருப்பது இவர்கள்தான் என்பது தெளிவாகிவிட்டது.

இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்ட விரும்புவபர்களுக்கு இது சமர்ப்பணம்.

இது சொல்லும் செய்தி நாம் சாதாரண இந்திய மக்களோடான புரிந்துணர்வை அரசியல் கட்சிகளின் கீழ்மட்டங்களோடான உறவுகளை பலப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்பதே. அவர்களிற்கு எமது போராட்டம் பற்றி ஒரு தெளிவான பார்வையை உறுதி செய்ய வேண்டும்.

புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர்களில் அனுபவப்பட்டும் அக்கறையில்லாத வகள் எத்தனை பேர்? போர்சூழலில் வழராத புதிய சந்ததிகளில் எத்தனை பேரிற்கு விளக்கமில்லை? இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களிடம் நாம் எதிர்பார்ப்பது நியாயமானதா? அவர்களிற்கு புரிய வைக்க இதுவரை எந்தளவு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்?

உளவுத்துறை தனது கடமை எதிர்பார்த்தது போல் செய்தது இனியும் செய்யும். ஆனால் நாம் இருக்கும் கொஞ்சனஞ்ச உறவுப்பாலங்களையும் சிதைப்பதைத்தான் எமது பொழுதுபோக்காக கொண்டிருக்கிறோம். அந்தவகையில் இரு தரப்பு முயற்சிகளின் பலாபலன்கள் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான்,

தமிழ்நாட்டில் இருக்கும் தமிழீழ நேச சக்திகளை கொடூரமாக அடக்கி வரும் ஒரு அரசு எப்படி நாம் செய்யப்போகும் புதிய பிரச்சார, அறிவூட்டல் முயற்சிகளை விட்டு வைக்கப் போகிறது ? இதைச் செய்வது எவ்வாறு, எங்கிருந்து ? இணையத் தளங்களினூடாகச் செய்வதற்கு வழிகளிருந்தால் சொல்லுங்கள்.

உங்களை மாதிரி ஆக்கள் தீக்குளிக்கலாம். அதுக்கு வேணும் எண்டா நான் உதவி செய்யிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறுமனே பார்ப்பானி, இந்திய உளவுத்துறை சதி எண்ட மாதிரிக் கதைச்சுப் போட்டு நடையைக் கட்டுவதில் என்ன பிரியோசனம். ஏதாவது செய்ய வேணும்.

குறுக்காலபோவன்

புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் எண்ட ஆராய்வுக்கட்டுரையை எழுதினால் என்ன? கிருபாகரன் யுனொஸ்கோவிற்கு நன்றிக் கடிதம் அனுப்பச் சொல்லி;ச் சொன்னார். ஆனால் அது பற்றி ஒருத்தரும் அக்கறை காட்டவில்லை. புலிகளோடு சார்ந்து நின்றதாகக் கட்டியபடி நியாயங்களையும், தமிழர் படுகொலைகளையும் நாங்கள் சொல்ல வெளிக்கிடக்கே, சர்வதேசம் அதை ஒரு தரப்பின் கருத்தாகவே நோக்கும். கிருபாண்ணை செய்றது போல, தமிழரின் மனிதஉரிமைகளைப் பேசுகின்ற அமைப்பாகவும், சிறிலங்கா அரசைக் கடுமையாகவும், புலிகளை மெல்லமாகவும் கண்டிக்கின்ற மாதிரி அமை;பபுக்களைத் தொடங்கவேணும்.

எட்டப்பன் ராஜன் கூல் யாழ்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எண்ட பெயரில் சிறிலங்கா அரசுக்குச் சப்போட்டாக உதைத் தான் செய்து கொண்டிருக்கான்.

வெறுமனே இந்தியாப் புலனாய்வுத்துறையை திட்டுவதாலோ, தூசிப்பதால ஒரு கோதாரியும் நடக்காது. சாதிப்பம். சாதிக்க வேணும்.

புலிகள் சொல்லி, கிருபாண்ணை சொல்லியே செய்யாதை நான் "ஆய்வுக் கட்டுரை" எழுதிச் செய்யப் போயினமே?

முதலில் சிங்களவனை இந்தியாவை பார்பனை அமெரிக்காவை யப்பானை சர்வதேசத்தை திட்டி சிற்றின்பம் காணுறதை நிற்பாட்டிப் போட்டு அவர்களது நடத்தையை அவரவர் நலன்களின் கண்ணோட்டத்தில் பாருங்கோ அதன் மூலம் விளங்கிக் கொள்ள முயற்சியுங்கோ. அடுத்து எங்களிற்கு என்று என்ன நலன்கள் இருக்கு என்று பார்த்தால் இந்து சமயம், கோயில்கள் தேர், இராசகோபுரம், மணிமண்டபம், சாமத்தியச் சடங்கு, இராமர் பாலம், இராமாயணம், ரஜனி, திரிசா, அஜித், அசின், சங்கர், மெட்டி ஒலி, செல்வி, அவள் என்று கனக்க. அவற்றில கவனமாக எங்கடை நேரத்தையும் பொருளாதாரத்தையும் சிந்தனையையும் செலவளிக்கிறமே என்று பாத்தியள் என்றா ஓம் என்று தான் சொல்லுவன்.

அப்பிடியிருக்கேக்க உவர் கிருபா அண்ணைக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று தான் எனக்கு விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்சுத்தவறி உங்கட சொல்லைக் கேட்டால் என்ன செய்ய?

மெட்டியொலி போன்ற லிஸ்ரோட திராவிடத்துவம், பெரியார், மக்கிசம், கம்னியுசம், பகுத்தறிவு, புரட்சி, நவீனத்துவம், பின்னத்துவம் போன்றதையும் சேர்த்து விடுங்கோ. அதில் மட்டும் எங்கட சனம் குறைச்சலா என்ன. பிறகு கோவிச்சுப் போடுவினம் அவைகள்.

ஏன் தமிழ்தேசியத்தை விட்டனிங்கள். அப்பிடியும் கத்திக் கொண்டு கொஞ்சப் பேர் திரியினம் தானே. அவை கோவிக்கப் போயினமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை கந்தல். அதுக்குச் சப்போட் பண்ணத் தானே உப்படிக் கதைக்கின்றியள் எண்டு நினைச்சன்.

நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள்? :lol:

எல்லோரும் தங்களது நிலையிலிருந்தே மற்றவர்களையும் பார்க்கிறார்கள். நாடு, இனம், மொழி, பண்பாடு என எதிலுமே ஒன்றுபடாத இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம் என இவர்கள் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை. இன்றும்கூட சிறிய வட்டத்திற்குள்ளேயே நின்று கொண்டிருக்கிறார்கள். எங்கள் போராட்டமே ஒரு சிறிய நாட்டிற்குள்தான் நடக்கிறது. ஓரே நாடாக உருவாகி பத்து வருடங்களிற்குள்ளாகவே நாங்கள போராடத் தொடங்கிவிட்டோம். ஆனால் பலநூறு ஆண்டுகளாக வேற்று ஆட்களாக வாழத்தொடங்கிவிட்ட ஒரு நாட்டை எமக்கு ஆதரவு தரவேண்டுமென இன்னும் பிச்சை கேட்பதுபோல் கையேந்திக் கொண்டிருக்கிறோம்.

எல்லா நாடுகளுமே தங்கள் தங்கள் நலன்களைத்தான் முதலில் பார்க்கும். எங்களைச் சுற்றியிருக்கிறவர்களையே எங்களால் மாற்ற முடியவில்லை. பிறகெப்படி மற்ற நாட்டுக்காரர்களை மாற்ற முடியும்?

அதற்காக செயற்திறன் உள்ளவர்களையும் முடக்கி விடக்கூடாது. செயற்திறன் உள்ள ஓரிருவராகச் சேர்ந்தாவது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கி விடுவார்கள்.

எத்தனை போரோடு தொடங்கியது இந்தப் போராட்டம்? ஓரிருவர் தொடங்கிவிட இன்று உலகம் முழுவதும் பரவவில்லையா? இப்போது ஆதரவாளர்களாக இருப்பவர்கள் எல்லோரும் முதலிலிருந்தே ஆதரவாளர்களாக இருந்தவர்களா? தலைவர் அவர்கள் சொன்னதுபோல, செய்துவிட்டுத்தான் பேசவேண்டும்.

Edited by Thamilachchi

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது குறுக்காலபோவான்,

தீக்குளிப்பது இருக்கட்டும், ஏதாவது பிரயோசனமான கதை இருந்தால் கதையுங்கள். ஏனென்றால் நான் தீக்குளிப்பதற்கு முன்னால் சிலரைப் போட்டுத்தள்ளிவிட்டுத்தான் தீக்குளிப்பதாக உத்தேசம்.

தீக்குளிப்பது இருக்கட்டும், ஏதாவது பிரயோசனமான கதை இருந்தால் கதையுங்கள். ஏனென்றால் நான் தீக்குளிப்பதற்கு முன்னால் சிலரைப் போட்டுத்தள்ளிவிட்டுத்தான் தீக்குளிப்பதாக உத்தேசம்.

நிச்சயமாக!

தீக்குளிப்பது என்று வந்து விட்டால், ஒவ்வொரு தமிழனும் இரண்டு மூன்று துரோகிகளையாவது போட்டுத்தள்ளி விட்டுத்தான் தீக்குளிக்க வேண்டும்.

ஆனால் இன்று சில பகுத்தறிவு பேசும் பரதேசிகள் பட்டப்பகலிலே நட்டநடு தெருவிலே ஏழைத்தமிழனின் தலையில் மண்ணெணெய் ஊற்றி பற்ற வைத்து விட்டு, தீக்குளித்த தியாகி என் பட்டமளித்து 10,000 ரூபாய் காசோலையை நீட்டும், படுபாதக அரசியலை என்னவென்று சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நன்றி வெற்றி வேல் !

நாங்கள் தீக்குளிப்பதால் ஒரு சில துரோகிகளையாவது அழிக்க முடிந்தால் சந்தோசமாகவே தீக்குளிக்கலாம் !

நீங்கள் கூறியது போல தமிழ்நாட்டில் நடப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். கொலையை தீக்குளிப்பதாகக் காட்டும் அதிசயம் அங்கு மட்டும்தான் நடக்க முடியும்.

ரகுநாதன் அண்ணை நீங்கள் சிலரைப் போட்டுத்தள்ளுறது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை. உது தீக்குழிக்கிறதை தவிர்க்கிறதுக்கு விடுற புருடா போலதான் கிடக்கு.

ஏதோ நீங்கள் போட்டுத்தள்ளி முடிக்கும் மட்டும் இப்பிடியாவது அடுத்த இந்தியாவின் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில செய்யுங்கோ.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=31900&hl=

அப்பிடியே வெற்றிவேலும் ஏதாவது சமஸ்கிருதத்தில சொல்லிக் கொண்டு பின்னாலை ஓடினீங்கள் எண்டா நல்லம். நம் பிற்காலத்தில அந்தப் பொன்னாளை ஒரு திருவிழாவாகே கொண்டாடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: எங்களை தீக்குளிக்க வைப்பதெண்டு முடிவெடுத்திட்டியள். இனி என்னத்தைச் சொல்ல ? அதுசரி கண்டியில ஓடினது உங்கள மாதிரிக் கிடக்கெண்டு களத்தில ஒரு சேதி அடிபடுது....எதுக்கும் கவனம் !

:lol: ஆனாலும் உங்களின் நகைச்சுவை உணர்வைப் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை .....வாழ்த்துக்கள்!

அப்பிடியே வெற்றிவேலும் ஏதாவது சமஸ்கிருதத்தில சொல்லிக் கொண்டு பின்னாலை ஓடினீங்கள் எண்டா நல்லம். நம் பிற்காலத்தில அந்தப் பொன்னாளை ஒரு திருவிழாவாகே கொண்டாடலாம்.

நாம் ஓடும் போதும் குறுக்கால் போவான்

நடக்கும் போதும் குறுக்கால் போவான்

மூச்சுக்காற்றாய் உள்ளே போவான்

உள்ளே போனவன் வெளியே போவான்

சுற்றிச் சுழன்றிடும் புயலும் ஆவான்

களையுடன் சேர்த்து பயிரையும் சாய்ப்பான்

வடமொழி சொல்லும் அவனேயாவான்

தமிழ்மொழி சொல்லும் அவனேயாவன்

ஒலி மொழி இரண்டும் காவி வருவான்

அவனுக்கென்றொரு மொழியும் உண்டோ

கவிதையில் வரைந்த காற்றினை புரிந்தால்

மொழிகளின் ஒலிகளில் பேதங்கள் இல்லை!

:lol::lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.