Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

என் புள்ள ராஜானு
அம்மா சொல்ல
என் புருசன் குழந்தை மாதிரினு
மனைவி சொல்ல
என் தம்பி தங்கம்னு
அக்கா சொல்ல
என் நண்பன் நல்லவன்னு
நண்பி சொல்ல
அப்பாதான் என் முதல் ஹீரோனு
மகள் சொல்ல...
ஒருவன் வாழ்ந்தா அவன்
கொண்டாடலாம் 
ஆண்கள் தினம்!

  • 2 weeks later...
  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நான் ஒன்று நினைத்தால்
நீ ஒன்று நினைப்பாய்
உன்னை வெல்ல என்னாலாகுமா?
கேட்கின்ற யாசகம்
கிடைப்பது இல்லையே
என்னில் கோபமா?
.
.
.
.
.
இறைவா என்னில் கோபமா?

-----

அம்மா இல்லாத போது
மட்டும் அவரது
பிறந்தநாளை
நினைவுப்படுத்தும்
இவன் புத்தி..
இவனைப்போல்
எதையும் தேவையான
பொழுதுகளில்
செய்வதில்லை!

 

  • தொடங்கியவர்

ஈரச்சாரலுக்குள்
இதயம் விரிந்தது 
சாளரம் வழியே
சந்திரன் நுழைந்தது 
குழுமி விண்மீன்கள்
தந்திரம் செய்தது 
காற்றின் இழுவைக்கு
முகில்கூட்டம் அலைந்தது 
நேற்றுச் சொன்னதையே
தென்னம்கீற்றும் சொன்னது
எங்கோ தவளை
எதையோ அழைத்தது
முற்றத்து மல்லிவாசம்
மூக்கில் இனித்தது 
அலாரம் அடித்ததில்
நினைவுகள் வியர்த்தது

  • தொடங்கியவர்

பருவப்பிழையல்ல..
அளவுப்பிழை..
பொழிவுப்பிழையல்ல
பகிர்வுப்பிழை
கூதல் பிழையல்ல
கூடல் பிழை

வா என்று வருந்தி
அழைத்தாலும்
வருவதில்லை நீ
போ என்றும்
போகவில்லை
போதுமென்றும்
கேட்கவில்லை

மகிந்த பக்ச போல
எம்மண்ணில் எம்மை
ஆக்குகிறாய் அகதி

ஏய் மழையே..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்வில்...இந்நாளில் 
பழியும் துயரும் வரும்...

  • தொடங்கியவர்

பார்த்துப் போ
கற்களும் முற்களும்
குண்டுகளும் குழிகளும் 
பள்ளங்களும் புட்டிகளும்
உன் வேகத்துக்கு தெரியாது..
உன் வாலிபத்துக்கு தெரியாது
உன் தேவைகளுக்கு தெரியாது
உன் பரபரக்கும்..
அழைபாயும் ..
விழிகளுக்கு தெரியாது..
பார்வையில்லா முதியவனின்
அறிவுரைதான்..
பார்த்துப்போ..

 

  • தொடங்கியவர்

அதிர்ஸ்டத்திற்கும்
நேரத்திற்கும்
காத்திராதே
உன்னைக் கரையேற்றக்கூடிய
உழைப்பு என்னும் படகில்
முயற்சி என்ற துடுப்பை
இயக்கக்கூடிய வலிமையை
இழந்துவிடுவாய்..

  • தொடங்கியவர்

வெறுப்பும் விரோதமும்
வளர்த்தேன்
நாளை நிஜமென நினைத்து

பாசம் மறந்து பேசாதிருந்தேன்
மீண்டும் இணைவோம் என்று

ஆயிரம் நல்லன செய்தான்
ஒரு பிழை பெரிதென
நினைத்தேன்

தண்டனை தருவதாய்
நினைத்தேன் ..அவனே 
தண்டித்து போனான்

 

தண்டனை தந்து போனான்
நட்பே நிஜம்
நாளை அல்ல

அன்பே நிஜம்
அழகு அல்ல

சொந்தபந்தமே நிஜம்
சொத்தும்பத்தும் அல்ல

நண்பா நிஜம்
சுட்டது...நிலையில்லா
வாழ்வில்
கிடைக்கும் மணிப்பொழுதில்
வெறுப்புகள் ஏனென்று..
நிஜம் சுட்டது..

நீ போனபின்தான்
நிஜம் சுட்டது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

திங்கள் (முகம்) கையேந்தி
செவ்வாயில் முத்தமிட்டேன்
புதன் சிவந்தே..
வெள்ளி(கள்) சிணுங்க
ஞாயிறாய் ஒளிர்ந்தாள்..
மீண்டும்..

  • தொடங்கியவர்

விலகி நிற்க முடியாத உறவாய்
விளங்கிக்கொள்ளமுடியாத மௌனமாய்..
அசையாத உடலில் தள்ளாடும் மனமே..
அன்பை புதைத்து நீரூற்றும் விழியே..
புத்தனின் ஞானமென்றால் நடிக்கின்றோம்
பூகோள இடைவெளியால் தவிக்கிறோம்
பிரிந்த ஆறுகள்தான்...கடலை மறந்தன..
கூடிய குயில்கள்தான் கூட்டை மறந்தன-தன்
தாயின் தா லாட்டை மறந்தன-தாய்மடி

நினைவில் காகித தாள்கள் நனைந்தன..

  • தொடங்கியவர்

யாரும் குழியூன்றி
விதை போடவில்லை
செடியுமில்லை
கிளையுமில்லை
இலையுமில்லை
யாரும் அங்கே நீர் வார்க்கவில்லை
அங்கிருந்துதான் நீர் வார்க்கபடுகிறது
அண்ணார்ந்து இரசிக்கிறோம்
நட்சத்திர பூக்களே
அந்த இரவில் யார்
கூந்தலுக்காக காத்திருக்கிறீர்கள்

  • தொடங்கியவர்

அம்மா பசிக்குதும்மா...
கொஞ்சம் பொறு அப்பு..என்று சொன்னாலும்..

மனசாறாமல்..

வடித்த கஞ்சியில்..சோறுடன்..தேங்காய்ப்பால்

கொஞ்சம் கலந்து உப்பும் போட்டு கொண்டு வந்து தருவார்...
அதுவும் அமுதங்களில் ஒன்றென..

விளக்கெரிந்த மின்சார சோற்றுப்பானை...

இப்போது சொன்னது.

  • தொடங்கியவர்

அப்பா

உன் பிறந்தநாளுக்கு பரிசு தர

தேடிக்கொண்டிருக்கிறேன் உன்

பணப்பையை..

எந்தக் காற்சட்டைப்பைக்குள்.. இருக்கிறது,?..

  • தொடங்கியவர்

அப்பா..

கருப்பையை இவர் வயிற்றில்
படைக்கவில்லை ..ஆனாலும்
சுமக்கிறார் ஆயுள் வரை

அவருக்கு மட்டும் அவர்
துயரம் தெரியும்..
இருட்டுக்கு மட்டும் அவர்
கண்கள் ஈரம் தெரியும்

பிள்ளைகளின் தேவை
ஒவ்வொன்றாய் கூட
தன் நீண்டகால ஆசைகளை
ஒவ்வொன்றாய் களைந்திடுவார்

குழந்தைகளின் சுகமான
எதிர்காலம் நினைத்து
தன் தற்கால சுகங்களை
ஒதுக்கிப்போவார்

ஓட்டுக்குள் ஒளிந்திருக்கும்
தேவையில்லை ஆனாலும்
வீட்டைச் சுமக்கின்றார்
ஆமை போல

உயரப் பறந்து 
விழுந்துவிடுமோ என்று
பிள்ளை கால்களில்
அக்கறையை
கட்டி வைப்பார்

தேய்ந்த செருப்பையும்
கிழிந்த உடையையும்
மாற்ற மறுப்பார்
எனக்கு எதற்கு என்று..

அப்பா..

விளம்பரம் செய்யாத
சேவகன்

கோபமாய் நடிக்கும்
பாசக்காரன்

அம்மாக்கு தெரிந்த
காதலன்

ஆண்டவன் அனுப்பிய
காவலன்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎/‎12‎/‎2015 at 3:03 PM, விகடகவி said:

திங்கள் (முகம்) கையேந்தி
செவ்வாயில் முத்தமிட்டேன்
புதன் சிவந்தே..
வெள்ளி(கள்) சிணுங்க
ஞாயிறாய் ஒளிர்ந்தாள்..
மீண்டும்..

கள்ள வியாழன்

கழுத்தறுத்திட்டுது....!

மந்தச் சனி

மறைந்து போச்சுது...!

கவிஞரே....!  :)

  • தொடங்கியவர்
17 minutes ago, suvy said:

கள்ள வியாழன்

கழுத்தறுத்திட்டுது....!

மந்தச் சனி

மறைந்து போச்சுது...!

கவிஞரே....!  :)

திங்கள் முகம் கையேந்தி

செவ்வாயில் முத்தமிட்டேன்

புதன் கண் சிவக்க

வியாழன் வெட்கம் கொள்ள

வெள்ளிகள் சிணுங்கி

சனி விரைந்தே விலகிவிட

ஞாயிறாய் ஒளிர்ந்தாள்..

மீண்டும்.. :)

  • தொடங்கியவர்

பூவை ஈன்று
புழுதியில் வீசிவிட்டு
அடுத்த காதலுக்கு
தயாராகும்..
சின்னத்தாய்கள்

 

காளையை அடக்கு
கழுத்தை நீட்டுகிறேன் என்றாள்..
மீசையை முறுக்கிகொண்டு
அடக்கி காட்டினான் காளையை..
சிரித்தாள் அவன் மீசை நாண..
கழுத்தை நீட்டினாள்..
மீசை முடங்கியது 
காளையை அடக்கிய கர்வம்
அடங்கியது..
கடைப்பார்வையில்!!

 

பூவை முழம் போட்டு ஏழை
மூதாட்டி விற்கிறாள்
பாதி விலை கேட்டு மகிழூந்தில் 
வந்த சீமாட்டி நிற்கிறாள்!

காதலன் காத்திருப்பானா என்று
காதலியே சோதிக்காதே...
காதல் காத்திருந்தாலும்
விதியின் கோலம் வீபரீத
விந்தையாகவும் மாறலாம்..

 

தன்னை சிலுவையில்
அறைந்தவர்களுக்கும்
பாவமன்னிப்பு வழங்கும்
தேவனிடம்..மன்னிப்பு
கேட்கலாம்.
ஒரே ஒரு முறை

 

உடைந்து நொருங்கிய பின்னரும்
உருவம் கலையாத காதல் புனிதமானது.

 

நாலு விதமாக பேசும்
நாலுபேரும் நல்லவிதமாக
பேசமாட்டாங்க...அவங்கள பத்தி
எதுக்கு கவலப்படணும்

 

 

  • தொடங்கியவர்

இடைவெளிகளை பற்றி
இதயம் போல்
இந்த விழிகள் கவலை
கொள்வதில்லை..
தூரமானாலும்..
பேசிக்கொள்கிறது..
உள்ளம் புகுந்து
உறவாடிச் செல்கிறது ..
இதயத்திற்கு ஆறுதலும்
காயத்திற்கு ஒத்தடமும்
மறுப்பும் அனுமதியும்..
கெஞ்சலும் கொஞ்சலும்..
தாபமும் கோபமும்..
ஊடலும் கூடலும்..
எத்தனை பாவங்கள்
அவள் விழிகளில்...

கருவண்டு கண்கள்
இரண்டால்..அவள்
கவிதை சொல்கிறாள்..
நான் அதை
கேட்டுச்சொல்கிறேன்...

  • தொடங்கியவர்

தோல்வியே..ஏன்
என்னை தழுவுகிறாய்...

நானா..இல்லை
நீதான் என்னைத் தழுவுகிறாய்..
வெற்றியைக் கேட்டுப்பார்
....

வெற்றியே ஏன்
என்னிடம் வர மறுக்கிறாய்

நானா இல்லை
நீதான்
என்னிடம் வர மறுக்கிறாய்
முயற்சியை கேட்டுப்பார்

.....

முயற்சியே ஏன் என்னால்
வெல்லமுடியவில்லை..நீயா
காரணம்...

நானா 
இல்லை..உன்
வெற்றி அருகில் இருந்தது ..நீயோ 
தோல்விகளை சலித்துக்கொண்டாய்..
அவையை அறிந்து கொள்ள மறந்தாய்..
அவற்றை ஆராய மறந்தாய்..
அவற்றை ஏற்க மறுத்தாய்..
அதனால் அவற்றை உன்னால்
தாண்டமுடியவில்லை..
அருகிருந்த வெற்றியை தீண்ட
முடியவில்லை...

...

தோல்விகள் பெருஞ்சுவர்களாய்..
எதிரே நின்றால்..
அங்கே ஓடு
அங்கே தேடு
அங்கே முட்டு
அங்கே தட்டு..
விடாமல்
அயராமல்
கலைத்துபோகாமல்
தளர்ந்து போகாமல்
வெற்றியின் கதவுகள்
தூரமாய் இல்லை.

மூச்சுள்ள வரை முயல்.

  • தொடங்கியவர்

ஆண்டாண்டு ஆண்டு
அடிமைப்பட்டபின்
அன்பு வழி
அகிம்சை வழி
ஆயுத வழி
எல்லாம் தோற்று
சுதந்திரத்திற்கு ஏங்கும்
ஒரே இனம்
தமிழ் இனம்.

  • தொடங்கியவர்

பணம் மீதமாயும்
நேரம் மீதமாயும்
போனதால்..
பேரும் பெருமையும்
தேடும் மனநோய்
மாந்தர்கள்..
விலங்குகள் நலம்
காப்பதாய் சொல்லி
தமிழ் மக்கள் மனங்களை
காயம் செய்வதை..
தமிழன் அதிகாரத்துடன்
கேட்கமுடியாது..
ஏனென்றால் தமிழனை
தெலுங்கன் ஆழ்கின்றான்
கன்னடன் ஆழ்கிறான்
குஜராத்திகாரன் ஆழ்கிறான்
கிந்திகாரன் ஆழ்கின்றான்..
சிங்களன் ஆழ்கின்றான்
எல்லோரும் ஆழ்கின்றனர்
தமிழனை தவிர..

8 hours ago, விகடகவி said:

ஆண்டாண்டு ஆண்டு
அடிமைப்பட்டபின்
அன்பு வழி
அகிம்சை வழி
ஆயுத வழி
எல்லாம் தோற்று
சுதந்திரத்திற்கு ஏங்கும்
ஒரே இனம்
தமிழ் இனம்.

பகிர்வுக்கு நன்றி.

எமது நிலையை அழகாக கூறியுள்ளீர்கள்.

மறுபடியும் நன்றி.

எனக்கு பிடித்த ஒரு சிறு திருத்தம் - மன்னிக்கவும்.

ஆண்டாண்டு ஆண்டு
அடிமைப்பட்டபின்
அன்பு வழி
அகிம்சை வழி
ஆயுத வழி
எல்லாம் தோற்று
ம்
சுதந்திரத்திற்கு ஏங்கும்
ஒரே இனம்
தமிழ் இனம்.

 

  • தொடங்கியவர்

காசு கொடுத்தால்
பாசம் வருமா..

பிச்சை போட்ட
அன்பு சுகமா..

பின்னால் திரிந்தால்
காதல் வருமா..

தேவை முடிந்தால்
அன்பு தீர்ந்து விடுமா..

பலன் எதிர்பார்க்கும்
நட்பு நிஜமா..

பள்ளி நட்பென்றும்
கூட வருமா..

கேள்விக்கெல்லாம்
பதில் வருமா..

பதில்கள் எல்லாம்
நிரந்தரமா..

உறவுப்பாலம்
உணர்வினிலா..
உன் வசதி வாழ்வினிலா..

  • தொடங்கியவர்

வேண்டும் போது
வருவதில்லை
விரட்டும்போது வருகிறது
இந்த தூக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎13‎/‎01‎/‎2016 at 6:13 PM, விகடகவி said:

பணம் மீதமாயும்
நேரம் மீதமாயும்
போனதால்..
பேரும் பெருமையும்
தேடும் மனநோய்
மாந்தர்கள்..
விலங்குகள் நலம்
காப்பதாய் சொல்லி
தமிழ் மக்கள் மனங்களை
காயம் செய்வதை..
தமிழன் அதிகாரத்துடன்
கேட்கமுடியாது..
ஏனென்றால் தமிழனை
தெலுங்கன் ஆழ்கின்றான்
கன்னடன் ஆழ்கிறான்
குஜராத்திகாரன் ஆழ்கிறான்
கிந்திகாரன் ஆழ்கின்றான்..
சிங்களன் ஆழ்கின்றான்
எல்லோரும் ஆழ்கின்றனர்
தமிழனை தவிர..

சரியாகச் சொன்னீர்கள், தமிழனைத் தமிழன் தவிர்த்து ஏனைய எல்லோரும் ஆள்கின்றனர்....!

ஆயினும் தமிழனைத் தமிழன் ஆளத் தமிழன் விடமாட்டான் , இது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்....!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.