Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அமைச்சர் மேர்வின் சில்வா அட்டகாசம்

Featured Replies

இன்று காலை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வாவும் அவரது குண்டர்களும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த செய்திப் பணிப்பாளரை தாக்கி விட்டு கூட்டுத்தாபனத் தலைவரின் அறைக்குள் அடாவடியாக நுழைந்துள்ளார். செய்தி அறிந்த ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் அவ் வறை சுற்றி வளைத்த மேவின் சில்வாவை வெளியே செல்ல விடாது தடுத்தனர். நேற்று மாத்தரையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்த்தில் மேர்வினின் பேச்சை நேற்றைய செய்தியில் இடம் பெறச் செய்யாமையே இந்த அடாவடித்தனத்திற்குக் காரணம் என அறியவருகின்றது.

பொலிஸார் வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முனைந்த போது ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் மேர்வினைக் கைது செய்யும் படியும் பக்கச் சார்பற்ற விசாரனை நடத்தும் படியும் கோஷமிட்டனர்.

தற்போதும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரததால் கலகமடக்கும் பொலிஸாரை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துன் குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி அறிந்த ஊடகவியலாளர்கள் இச் சம்பவத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இலங்கை பத்திரிகைச் சங்க தலைவர் தெரிவிக்கையில் : மேவின் சில்வாவினால் ஊடகத் துறையைச் சேர்ந்த பலர் இது போல் பல தடவைகள் பாதிப்படைந்துள்ளனர். இவரது இவ் அடாவடித்தனத்தை தட்டிக் கேட்க முடியமல் அரசும் வாழவிருப்பது இது போன்ற அடாவடித்தனத்தைத் தட்டிக்கொடுப்பது போல உள்ளது என சாரப்பட கருத்தத் தெரிவித்துள்ளார்.

இவரது மைந்தனும் சில நாட்களுக்கு முன் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் பணியாளர் ஒருவரைத் தாக்கியதால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்றிகளின் கூட்டத்தில் இதெல்லாம் சகயமப்பா.....

அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வாவை கைது செய்ய வேண்டுமென பணியாளர்கள் மறியல்

நேற்று (26) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் மாத்தறையில் திறந்து வைக்கப்பட்ட மகநாம பாலம் திறப்பு விழாவின் போது அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா பண்டாரநாயக்க குடும்பம் குறித்து பேசிய பேச்சுகள் மிக மோசமான வார்த்தைகளை உள்ளடக்கியதாக இருந்ததால் அதை ரூபவாகினி கூட்டுஸ்தாபனம் ஒளிபரப்பாமல் தவிர்த்து விட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வாவும் அவரது குழுவும் ரூபாவாகினி நிலையத்துள் புகுந்து அதன் செய்தி பொறுப்பாளரான டீ.எம்.ஜீ.சந்திரசேகரவை தாக்கி அடாவடித்தனங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வாவும் இப்படி பேசும் போது மேடையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தமை குறித்து பலரும் வியப்படைந்து இருக்கிறார்கள்.

அடாவடித்தனங்களில் ஈடுபட்டவர்கள் பணியாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பகிரங்க மன்னிப்புக் கேட்க வைத்து அவர்களை தப்ப வைக்க முயலும் அமைச்சர் பிரியதர்சன யாப்பாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பணியாளர்கள் அவர்களை கைது செய்ய வேண்டுமென கோரி வருகிறார்கள்.

Edited by AJeevan

அட, எப்படி என்றாலும் முதற்பக்க செய்தியை பிடித்து விடுவார்!

ஆசைப்பட்டது என்னவோ ரூபவாகினியில் மட்டும்தான், ஆனால் இன்று அனைத்து ஊடகங்களிலும் இவர் தான்! (Be famous or notorious!)

வாழ்த்துக்கள் மோடன் சில்வா! :)

அமைச்சர் மேர்வின் சில்வா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கினார்

சற்று நேரத்திற்கு முன்னர் தொழில் அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா, குருவினருடன் சென்று தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பணிப்பாளர் பீ.எம்.ஜீ. சந்திரசேகரவைத் தாக்கியதுடன், சக ஊழியர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அதன் பின்னர் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் உத்தியோகப+ர்வ அலுவலகத்திற்குள்

அமைச்சர் மேர்வின் சில்வா சென்றுள்ளதாகவும், அலுவலகத்தை கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சூழ்ந்துள்ளதாகவும் தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் வெளியே வந்த பின்னர் அமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே ஊழியர்கள் அலுவலகத்தை சூழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் வந்த குண்டர்கள், கூட்டுத்தாபனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கியுள்ளதாகவும், அதன்பின்னர் அவரை கூட்டுத்தாபனத்தின் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்றதாகவும், அதன்பின்னர் செய்திப் பணிப்பாளர் வெளியே வந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்களினல் தாக்கப்பட்டு, கூட்டுத்தாபனத்தின் தலைவரின் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பலத்த கண்டனம் வெளியிட்டுள்ள சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பாளர் சுனந்த தேசப்பிரிய தகவல் தருகையில், அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதும் அச்சுறுத்துவதும் இது முதல் தடவை அல்ல எனக் குறிப்பிட்டார்.

mervingroup.jpg

ஆரம்பத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த மோடன் சில்வா, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இயக்குனரின் அறையில் இருந்து வாகனத்திற்கு அழைத்து வரப்படுகையில், சூழ்ந்து கொண்ட ஊடகவியலாளர்களால் நன்கு தாக்கப்பட்டார் (தாக்க விடப்பட்டார்?) அப்போது தப்பிக் கொள்வதற்காக நவயுக துட்டுகெமுனு இளவரன் மன்னிப்பு கேட்டுள்ளார்! ஊழியர்களால் வீசப்பட்ட வர்ணம் மற்றும் வழிந்தோடிய இரத்தம் என்பவற்றுடன் அவர் வெற்றிகரமாக தப்பிச் சென்றார்!

Edited by சாணக்கியன்

Rupavahini staff lays siege to Mervyn Silva

[27-12-2007 2.30pm]

Staff of the Sri Lanka Rupavahini Corporation has cornered Labour Minister Mervyn Silva into a small room and laid siege after he assaulted SLRC News Director T.M.G. Chandrasekara this morning (Dec. 27th). Enraged staff has also switched off the air-conditioner of the room to bring him out.

They are staging a demonstration demanding an apology and for his arrest.

According to news staffer Rasika Gamage, Mervyn Silva and his armed henchmen had stormed the News Division and brutally assaulted Chandrasekara for failing to telecast footage of a speech by him that contained uncivilized language.

He should tender a public apology to the SLRC staff, and he should be arrested and brought to book, Gamage said.

The news staffer stressed that any attempt to curb the media freedom guaranteed by the ‘Mahinda Chintana’ would be fought with even life sacrifice.

(நல்லா போராடுங்கோ, தேவைப்பட்டா புலிகளிடம் கேளுங்கோ ஆயுதப்பயிற்சியும் தருவினம்)

Minister Mervyn Silva may have played games with other media institutions, but he cannot mess about with our institution, Gamage said.

Commenting on the harrowing experience he underwent, News Director T.M.G. Chandrasekara said that Mervyn Silva and his armed henchmen had stormed the Division at around 10.00 am.

He demanded to know as to why his speech in Matara yesterday was not aired at the 10.00 pm news, then dragged me out and assaulted me, before my colleagues saved me from his clutches, Chandrasekara said.

The minister also demanded the immediate sacking of the News Director, failing which, he vowed to bring down the SLRC building and take its keys home.

(மகிந்த இரகசியமா செய்யிறதைதான் இவர் நேரடியா செய்கிறார், அதான் பாருங்கோ அரசாங்கத்தை தனிப்பட்ட சொத்தாக பாவிக்கிறது!)

Media Ministers Anura Priyadarshana Yapa and Lakshman Yapa Abeywardena rushed to the scene where there is a large police presence, including anti-riot personnel.

All the SLRC staff has joined the demonstration, supported by the Free Media Movement, the Sri Lanka Broadcasting Corporation and other media organizations

Speaking here, Minister Abeywardena condemned the assault and said that the government is greatly inconvenienced by the incident.

However, he said that he could not guarantee an apology from the guilty party.

He also promised to take legal action against Mervyn Silva.

This is not the first occasion that the Labour Minister had threatened and assaulted media institutions and personnel.

However, the SLFP, to which he belongs, never took action against him, with the party’s Disciplinary Committee Chairman John Seneviratne saying that it was a personal matter of Mervyn Silva.

(அவரின்ட திறமையை அவர் காட்டுறார், ஏலாதவை பொறமைப்படுகினம் பாருங்கோ!)

At present, the SLRC premises are surrounded by his goon squads.

Police Special Task Force commandos have also been called in to bring the minister out of his hole safely.

However, the hostile SLRC staffers are preventing any moves to that end.

According to our correspondent at the scene, they are demanding Mervyn Silva holds a media briefing where he tenders a public apology, and counting down time at every five intervals, failing which they will assault him.

(இவை விஜய்யின்ட படம் பாத்திருக்கினம் போல!)

A thug who accompanied the Labour Minister has been hammered by the SLRC staff while another is in police custody.

mervingroup2.jpg

http://lankadissent.com/index.php?option=c...03&Itemid=1

கடவுளே என்று மகிந்த சிந்தனை தந்த மாணிக்கத்திற்கு எதுவும் நடந்துவிடக் கூடாது!

இவர் தொடர்ந்தும் மகிந்தவின் அரசசபையை அலங்கரித்து மகிந்தவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வாழ்த்துகள்!

Edited by சாணக்கியன்

மன்னிப்புக் கோர மறுத்த அமைச்சர் மேர்வின் சில்வா மீது ஊழியர்கள் தாக்குதல் - இரத்த காயங்களுடன் அமைச்சர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் சென்று கலகம் ஏற்படுத்தி அமைச்சர் சில்வாவை பொலிஸார் கூட்டுத்தாபனத்தின் உள்ளே இருந்து வெளியே அழைத்துவருவதில் கடும் முயற்சி மேற்கொள்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில், ஊழியர்களின்.

ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியல், வரவேற்பு அறைக்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர்

ஊழியர்களிடம் மன்னிப்புக் கோர மறுத்ததை அடுத்து, ஊழியர்கள் அமைச்சர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், அமைச்சர் மீது சிவப்பு நிற திரவம் வீசப்பட்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பின்னர் மன்னிப்புக் கோரிய அமைச்சர் இரத்த காயங்களுடன் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வெளியேறியுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணியளவில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்த அமைச்சர் குழுவினர் இன்று பிற்பகல் 1 மணியளவில் இரத்த காயங்களுடன் அமைச்சர் கூட்டுத்தாபனத்திற்கு வெளியே அழைத்துவரப்பட்டார்.

http://www.lankadissent.com/Tamil/Tamil/news/04_27_12.htm

Edited by சாணக்கியன்

தமிழர் போராட்டத்தை பயங்கரவாதம் என சித்தரிக்கும், எழுதும் சிங்கள ஊடக வியலாளர்களே வியாபாரிகளே!

ஒரு தீய சக்திக்கு எதிராக நீங்கள் எழுதி, பேசி, ஆர்பாட்டம், ஊர்வலம் எல்லாம் நடத்தியும் சாதிக்க முடியாததை இன்று வன்முறை மூலம் சாதித்துள்ளீர்கள். இதன் மூலம் உங்கள் நீண்டகால கோபங்களை தீர்த்துக் கொண்டதாக நீங்கள் திருப்தி அடைவீர்களாக இருந்தால் ஒரு முறை தமிழர் போராட்டம் குறித்து உங்களை நீங்களே மீள் பரிசீலனை செய்து கொள்ளுங்கள்!

  • தொடங்கியவர்

கடைசியில் மோடன் ஊழியர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தலை தப்பினால் போதும் என ரூபவாஹினியில் இருந்து தப்பித்து தேசிய வைத்தியசாலையில் பணம் செலுத்தி வைத்தியம் பார்க்கும் பிரிவில் போய் படுத்து வைத்தியம் பர்ர்க்கின்ரார். அப்பிரிவின் இயக்குனா மேர்வினுக்கு CT scan &X-ray எல்லாம் எடுத்துப்பார்த்தாராம். ஏதாவத அடிகிடி பட்டு உள்காயம் ஏதாவத இருக்குதோ என்று. மகனும் அப்பாவி ஊழியர் ஒருவரைத் தாக்கி விட்டு வைத்தியசாலையில் போய் படுத்துக் கிடந்தது ஞாபம் வருகின்றது.

வரும் மாதம் 2ம் திகதி இவருக்கெதிரான நடவடிக்கை எடுக்கப்டும் என சிரிலங்கா சு.க வின் அமைச்சர் மைத்திரி சிரி சேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜானா

சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபன செய்திப்பிரிவு அலுவலகத்திற்குள் இன்று வியாழக்கிழமை காலை அத்துமீறிப் பிரவேசித்த அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது குழுவினரும் அங்கிருந்த செய்திப் பணிப்பாளரை கடுமையாகத் தாக்கியதையடுத்து அங்கே பெரும் களேபரம் வெடித்தது.

தொடர்ந்து வாசிக்க

.

.

.

மேர்வின், பக்கத்திலிருப்பவர்...... சட்டையில் பட்டிருப்பது நிச்சயமாய் இரத்தம் இல்லை. :) .

.

.

  • தொடங்கியவர்

சட்டையில் பட்டிருப்பது கோழிச்சாயம். அபிஷேகம் நன்றாகவே நடத்தப்பட்டிருப்பதாக செய்தி. இனியாவது அட்டகாசம் அடங்குமா எனப் பார்ப்போம். இதுவும் மஹிந்த சிந்தனையில் ஒரு கட்டம் தான்.

ஜானா

.

.

.

மேர்வின், பக்கத்திலிருப்பவர்...... சட்டையில் பட்டிருப்பது நிச்சயமாய் இரத்தம் இல்லை. :) .

.

.

பணியாளர்கள் சிலர் தாக்க

சிலர் மேவின் மேல் ஊற்றிய கோழி சாயம் அது பனங்காய்.

அது அங்கு செய்திகளில் வந்திருக்கிறது.

கலாநிதி துட்டகைமுணு ரூபவாகினி ஊழியர்களிடம் அடி வாங்கி பள்ளத்தில்.........

என தலைப்பு செய்திகளும்

ஒரு அமைச்சர் மக்களிடம் அடி வாங்கியது இலங்கை சரித்திரத்திலே இதுவே முதல் முறை என

சிங்கள தினசரிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.lankaenews.com/Sinhala/news.php?id=3952

எப்படி இருந்த நான்....................?

2133Mervin%20Silva%20J.jpg

mervingroup.jpg

அது பிழைதானே அவற்றை நிகழ்ச்சியை போடாம விட்டது. குடுக்கதான் வேனும். என்ன ராய்பக்சே ஆட்சியா கொக்கா.

எல்லாரும் கவனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வாவை கைது செய்ய வேண்டுமென பணியாளர்கள் மறியல்

நேற்று (26) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் மாத்தறையில் திறந்து வைக்கப்பட்ட மகநாம பாலம் திறப்பு விழாவின் போது அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா பண்டாரநாயக்க குடும்பம் குறித்து பேசிய பேச்சுகள் மிக மோசமான வார்த்தைகளை உள்ளடக்கியதாக இருந்ததால் அதை ரூபவாகினி கூட்டுஸ்தாபனம் ஒளிபரப்பாமல் தவிர்த்து விட்டது.

பண்டாரனாயக்காவின் மகள் தான் இந்த மோடன் சில்வாவை அரசியலுக்குள் இழுத்துவந்தவர். சந்திரிகாவின் சில பின்பக்க வேலைகளுக்கு இவரையும் இவரது குடு குறுப்பையும் சந்திரிக்கா பயன்படுத்தினார். இப்போ இவர் சந்திரிக்காவின் குடும்பத்தையே திட்டுகிறார். மஹிந்த அரசியல் அனாதை ஆனபின்னர் இவர் மஹிந்தவையும் திட்டுவார்.

காலங்காலமாக நடக்காததா இண்டைக்கு நடந்தது? இலங்கையில இதெல்லாம் சகஜந்தானே. இதனைத்தானே ஜனநாயகம் என்கிறார்கள். இவங்களோடதானே சேர்ந்து வாழுங்கோ எண்டு அகில உலகும் சொல்லுது? இதப் பேப்பரில பாத்துப்போட்டு, உதவி செய்ய தகுதியான நாடு இலங்கை எண்டு அமெரிக்கன் அறிவிக்காட்டில் பாருங்கோ.

இதெல்லாம் சீமச் சாராயம் செய்யிற வேலதாங்கோ.

நன்றி ஜனா, அஜீவன்.

அது சரி.......ரூபவாகினிக்காரர் சிவப்புச்சாயமெல்லாம் தயாராக வைச்சிருந்தவையோ..???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேர்வின் சில்வாவைப் பற்றிய லேட்டஸ்ட் குறும் செய்தி. நேற்றிரவு பலரால் பலருக்கு அனுப்பப்பட்ட செய்தி இது"

Latest SMS

The CT Scan performed on Dr. Mervin Silva's head has shown a large " hollow space" and the doctors are conducting further investigations while sending pictures to California for a diognosis of this extremely rare condition. They also suspect similar condition may be found with a few more Sri Lankan politicians.

இவர் தேசிய பட்டியல் உறுப்பினரென்றால், அந்த கட்ச்சிக்குப் பெருமை. தெரிவாகி யிருந்தால் அந்த மந்தை.... ஓவ்... ஓவ்... ஓவ், மன்னிக்கவும் மக்களுக்குப் பெருமை. வாழ்க சனநாயகம்.

Dr. Dutugemunu retreats amidst attacks from Rupavahini workers

2095MervinAttacked_2J.jpg

(Lanka-e-News, 2007 December 27, 11.45 PM) Minister of Labor Mervin Silva, a self proclaimed relative of King Dutugemunu, was assaulted by the Sri Lanka Rupavahini Corporation workers this afternoon (SLRC) at the Rupavahini premises. The Minister guarded by Riot Police had to retreat amidst jeering of the workers.

The mediamen against the savagery and thuggery of this nature pays gratitude to the SLRC workers for teaching the thug a good lesson. It is irony of fate that the Minister who is ill famous for abusing media freedom was given the lesson by Government owned SLRC.

Mervin Silva was subjected to this treatment when he assaulted the News Director of SLRC in the Director�s room and dragged him into the Chairman�s room to be beaten by a bodyguard of the Minister named 'Malti'. This 'Malti', a son of a Secretary of Minister Silva was later taken to Police in handcuffs with torn clothes.

A top level official of the SLRC said to Lanka-e-News that Minister Mervin Silva entered the SLRC premises with ill famous thugs such as Colombo Municipal Councilor Lal Peiris alias Kudu Lal, Meethotamulle Nuwan (recently released from remand following a double murder in Meethotamulla Wadugewaththa and drugs charges), Thissa (the main suspect of murder of Dhammika Amarasinghe at Hulftsdorp Courts) and Bomb Saman.

The SLRC workers took the Minister Mervin Silva hostage and kept him in the Chairman�s room more than two hours. The authorities had to call Police and Riot Squad due to the chaos in the SLRC. They tried their best to take the Minister out, but he was washed in a red color liquid and the SLRC workers knocked on his head.

The SLRC workers urged the Minister to apologize for trespassing the SLRC premises and assaulting an official, but the Minister expressed his regret instead of apologizing. He emphasized that he did nothing wrong. Later he said he would apologize from SLRC and the workers jeered at him.

This is the first time in the history a Government Minister was man handled like this right inside a state media institute.

கலாநிதி தூள்காரன்

நாட்டை அழிக்கும் முட்டாள்

எனும் கோஸங்களுடன்

ரூபாவாகினி அரச தொலைக் காட்சி ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி

2084Mervinprotest_J.jpg

  • தொடங்கியவர்

விடயங்கள் இத்துடன் முடிவடையவில்லை. இன்று காலை கறுவாத்தோட்ட பொலிஸாரினால் நேற்றைய சம்பவத்தைப் பற்றி மேல்நீதிமன்றில் அறிக்கை சமாப்பித்துள்ளனர். மேல் நீதிமன்ற நீதவான் நிதிபதி மொஹமட் அவர்கள் பொலிஸாரின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், முழு நாடே பார்த்துக் கொண்டிருந்த ஒரு சம்பவத்துடன் தொடர்பு பட்ட அனைத்து குற்றவாளிகளையும் நீதியின் முன் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். நேற்று மோடனின் பாதுகாப்பாளன் பாதாளக் கோஸ்டியை சேர்ந்த ஒருவன் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. அத்துமீறிய சம்பவத்தில் தொடர்பு பட்ட அனைவரின் வாக்குமூலங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கும் படி நீதவான் உத்தரவிட்டு கைது செய்யபட்ட நபரை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. நீதி பக்கச் சார்பாக நடந்து கொள்ளாததையிட்டு மகிழ்வடைகின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.