Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தியது

[28 - December - 2007] [Font Size - A - A - A]

ரஷ்யா கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

ஆர்.எஸ் - 24 என்ற முதல் ஏவுகணையானது 7000 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள ஹம்செற்கா மாகாணத்திலுள்ள இலக்கை சென்று தாக்கியுள்ளது.

இரண்டாவது ஏவுகணை ரஷ்யக் கடற்பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஹம்செற்கா மாகாணத்திலுள்ள இலக்கை குறியாகக் கொண்டு தாக்கப்பட்டுள்ளது.

ஏவுகணைப் பரிசோதனை தொடர்பில் ரஷ்யா அதன் வரையறையை மீறி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதென அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு மேலாக இப்பரிசோதனையை ரஷ்யா நடத்தியுள்ளது.

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் காரணமாக ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஐரோப்பாவில் அமைக்கப்போவதாக அமெரிக்கா கூறிவருகினறது.

அத்துடன் ரஷ்யாவின் இந்த ஏவுகணைப் பரிசோதனை தமக்கு எவ்வித்திலும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டாதென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இப்புதிய ஏவுகணை மூன்று அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/12/28...s_page43117.htm

அமெரிக்காவிற்கான எதிர் முகாங்கள் வலுப்பெற்றுவருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கான எதிர் முகாங்கள் வலுப்பெற்றுவருகின்றன.

அதுதான் அமெரிக்காவே சொல்லிட்டே ரஷ்சிய ஏவுகணைப் பரிசோதனை.. தனக்கு பிரச்சனை இல்லை என்று...??! :unsure::rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூசணிக்காயை விடப் பெரிய சைஸில் இரும்பினால் ஆன உருண்டை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த இரும்புக் குண்டு தன் பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கும். ஆனால் அதுவே புளூட்டோனியம் என்ற உலோகத்தால் ஆன உருண்டையாக இருந்தால் அதுதான் அணுகுண்டு. ஆனால் ஒரு முக்கிய விஷயம். இந்தியா மற்றும் வல்லரசு நாடுகளைத் தவிர வேறு யாராலும் புளூட்டோனியத்தை உற்பத்தி செய்ய முடியாது. தவிர, புளூட்டோனியத்தை அப்படி உருண்டையாக உருட்டி வைத்த அடுத்த கணமே அது வெடித்து விடும். ஆகவே அதை அந்த வடிவில் வைக்க முற்படமாட்டார்கள்.

யுரேனியம் என்ற உலோகம் உள்ளது. யுரேனியக் கட்டி ஒன்றில் யுரேனியம்-238 அணுக்கள் என்று, யுரேனியம்-235 அணுக்கள் என்றும் இரண்டு வகை அணுக்கள் உள்ளன. யுரேனியத்திலிருந்து மிகச் சிரமமான முறையில் யுரேனியம்-235 அணுக்களை மட்டும் தனியே திரட்டி அதைக் கொண்டு பெரிய உருண்டை செய்தால் அதுவும் அணுகுண்டு தான்.

யுரேனியம்-235 ஆகட்டும், புளூட்டோனியம் ஆகட்டும், அவற்றை குறிப்பிட்ட சைஸýக்கு உருண்டையாகத் தயாரித்தால் அணுகுண்டாக வெடிப்பதற்குக் காரணம் உண்டு. இந்த இரண்டுமே கதிரியக்கத்தை வெளிப்படுத்துகிற பொருட்கள், தவிர, இவற்றின் அணுக்களை நோக்கி நியூட்ரானை செலுத்தினால் இவை பிளவுபடும். உதாரணமாக புளூட்டோனிய அணு ஒன்றின் மீது நியூட்ரான் மோதினால் அந்த அணு பிளவுபடும் போது அந்த அணுவிலிருந்து உபரியாக நியூட்ரான்கள் வெளிப்படும். அந்த நியூட்ரான்கள் அருகில் உள்ள இதர நியூட்ரான்களைத் தாக்கும். அப்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு அவையும் பிற புளூட்டோனிய அணுக்களைத் தாக்கும். இதுவே தொடர் அணுப்பிளப்பு ஆகும். இப்படி ஒரு கணத்துக்குள் கோடானு கோடி புளூட்டோனிய அணுக்கள் தொடர்ந்து பிளவுபடும். இதன் விளைவாக பிரம்மாண்டமான சக்தி வெளிப்படும். இது தான் அணுகுண்டு வெடிப்பு.

அணுகுண்டு ஒன்று வெடிக்கும் போது பயங்கரமான அளவுக்கு வெப்பம் உண்டாகும். கடும் அதிர்ச்சி அலைகள் தோன்றும். உடலைப் பாதிக்கிற ஆபத்தான கதிர்வீச்சு வெளிப்படும். யுரேனியம்-233 என்ற அணுக்களைத் தனியே பிரித்தும் அணுகுண்டு செய்ய முடியும். ஆனால் இவ்வித அணுகுண்டுகளை சேமித்து வைப்பதில் பிரச்சினை உள்ளது.

யுரேனியம், புளூட்டோனியம் ஆகிய இரு உலோகங்களையும் மிக சுத்தமான அளவுக்குத் தயாரித்து குறிப்பிட்ட அளவுள்ள உருண்டையாக ஆக்கினால் அவை வெடித்து விடும் என்பதால் அவற்றை சிறு சிறு துண்டுகளாகத் தயாரிக்கிறார்கள். அணுகுண்டு ஒன்றினுள் இந்த சிறு துண்டுகள் பொருத்தப்பட்டு அணுகுண்டாக வெடிக்க வேண்டிய கட்டத்தில் இந்த துண்டுகள் ஒன்றுசேர்ந்து முழு உருண்டையாகும்படி செய்கிறார்கள். அணுகுண்டு ஒன்றினுள் இதற்கான ஏற்பாடு இருக்கும். முழு உருண்டையாக வடிவம் பெறும்படி செய்வதற்கான சாதனம் அணுகுண்டுக்குள் பொருத்தப்படாதவரையில் அணுகுண்டினால் ஆபத்து இல்லை.

கடந்த காலத்தில் பல தடவை அமெரிக்க ராணுவ விமானங்களிலிருந்து தற்செயலாக அணுகுண்டுகள் கீழே கடலில் விழுந்த போது அவை வெடிக்காததற்கு இதுவே காரணம். வீடுகளில் பயன்படுத்தப்படுகிற காஸ் சிலிண்டர் தீப்பற்றினால் ஒரேயடியாக வெடிக்கிறது. அப்படி இன்றி அடுப்புக்கு சமையல் காஸ் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீராக வெளிவரும்போது பிரச்சினை கிடையாது. அது போலவே அணுமின்சார நிலையங்களில் இவ்விதம் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர் அணுப்பிளப்பு நிகழ்வதால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிகிறது. அந்த வகையில் அணுசக்தி ஆக்கப் பணிகளுக்கும் பயனாகிறது.

பொதுவில் - குறிப்பாக இந்தியாவில் - அணுமின்சார நிலையங்களில் சாதாரண யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வித அணுமின் நிலையங்களில் ஓரளவு எரிந்து தீர்ந்த யுரேனியத்திலிருந்து விசேஷ முறைகள் மூலம் அணுகுண்டு தயாரிப்புக்கான புளூட்டோனியத்தைப் பெற இயலும்.

http://vizhippu.net

Edited by nunavilan

அதுதான் அமெரிக்காவே சொல்லிட்டே ரஷ்சிய ஏவுகணைப் பரிசோதனை.. தனக்கு பிரச்சனை இல்லை என்று...??! :unsure::rolleyes:

எதிர்மறை நிகழ்வுகள். என்ன செய்வது கைமீறிப் போய்க் கொண்டிருப்பதை, அமெரிக்க சார்பு நாடுகளும் துயரத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஆதிக்கத்தால் நசுக்கப்படுபவர்கள் சிறுது சந்தோசமடைவார்கள்

பூசணிக்காயை விடப் பெரிய சைஸில் இரும்பினால் ஆன உருண்டை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த இரும்புக் குண்டு தன் பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கும். ஆனால் அதுவே புளூட்டோனியம் என்ற உலோகத்தால் ஆன உருண்டையாக இருந்தால் அதுதான் அணுகுண்டு. ஆனால் ஒரு முக்கிய விஷயம். இந்தியா மற்றும் வல்லரசு நாடுகளைத் தவிர வேறு யாராலும் புளூட்டோனியத்தை உற்பத்தி செய்ய முடியாது. தவிர, புளூட்டோனியத்தை அப்படி உருண்டையாக உருட்டி வைத்த அடுத்த கணமே அது வெடித்து விடும். ஆகவே அதை அந்த வடிவில் வைக்க முற்படமாட்டார்கள்.

பூசனிக்காய் அளவிலா? ஏம்பா பயமுறுத்திப் பார்க்கிறீங்க. ஒரு சின்ன "கிரனைட்டுக்கே" பயம். உது வெடிக்கும். உப்படியெல்லாம் நடக்கும், என்றால் மிகப் பயந்தான். என்ன இருந்தாலும் அதை உபயோகிப்பவனுக்கு அறுபவிக்காததினால் பயமிருக்காது. ஆனால் ஜப்பானியருக்கு இன்னமும் பயம் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூசனிக்காய் அளவிலா? ஏம்பா பயமுறுத்திப் பார்க்கிறீங்க. ஒரு சின்ன "கிரனைட்டுக்கே" பயம். உது வெடிக்கும். உப்படியெல்லாம் நடக்கும், என்றால் மிகப் பயந்தான். என்ன இருந்தாலும் அதை உபயோகிப்பவனுக்கு அறுபவிக்காததினால் பயமிருக்காது. ஆனால் ஜப்பானியருக்கு இன்னமும் பயம் இருக்கும்.

யதார்த்தத்தை யார் தான் எதிர் கொள்ள முனைகிறார்கள்? இறைவன் நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா சும்மாத்தான் கேக்கிறேன். எங்களைப்போல நாடுகளை வளரவிடாம செய்து வைச்சிருக்கிற இந்த வல்லரசுகளுக்கெல்லாம் நாங்கள் ஒருநாளைக்கெண்டாலும் எதிர்காலத்திலை இந்த பூசினிக்காய் வெடியை செய்திடுவம் எண்ட பயமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Topol-M ன் மறுவடிவமே இந்த RS-24 என்று சொல்லப்படுகின்றது. It is possible that the RS-24 will have a significantly increased throw-weight. If this is the case it can be considered a new missile.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.