Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் இந்தத தடை ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல விடயங்கள் சம்பந்தமாக என்:னிடம் பல்வேறு கருத்துகள் உண்டு. இத்தளத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது எனது நம்பிக்கை. அதற்கான உரிமையை எனக்கு வழங்குவீர்களா ?

எனது கருத்துகளுடன் உடன்பாடற்ற நிலையில் என் கருத்துரிமையை மறுப்பதற்குத் தங்களுக்கு உரிமையுண்டுதானே ! எதற்கு அஞ்சுகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தயங்குகிறீர்கள்.? அற நனைந்து விட்டீர்கள்.இனி கூதல் என்ன குளிரென்ன?

நாகரீகமாகவும், பொறுமையாகவும், உங்கள் வாதங்களை முன்வையுங்கள். உங்கள் கருத்தில் நியாயமும் உண்மையும் உண்டு என்று தோன்றினால் என்னால் முடிந்த ஆதரவை நான் தருவேன். இங்கு மேலும் பலரும் உங்களுக்கு உதவுவார்கள்!

அன்புடன்,

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் சொல்லிட்டாரெல்ல.நிச்சயமாக சாணக்கியமாக தான் இருக்க வேண்டும்.நன்றி சாணக்கியன்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாகரீகமாகவும், பொறுமையாகவும், உங்கள் வாதங்களை முன்வையுங்கள். உங்கள் கருத்தில் நியாயமும் உண்மையும் உண்டு என்று தோன்றினால் என்னால் முடிந்த ஆதரவை நான் தருவேன். இங்கு மேலும் பலரும் உங்களுக்கு உதவுவார்கள்!

அன்புடன்,

என்னால் நம்பவே முடியவில்லை!!!!!!!!!!!சாணக்கியரா இவரை ஆமோதிப்பது? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதேசி எனும் பெயரின் அர்த்தம் வெளிநாட்டான் என்பதுதான். நான் வெளிநாட்டான் என்றபடியால்தான் அப்படியாரு பெயரைத் தெரிந்தேன். இதில் ஏன் உங்களுக்குத் தொந்தரவாக உள்ளது என எனக்குத் தெரியவில்லை. "குறுக்கால போவான்' போன்ற பெயர்களுடன் ஒப்பிடும்போது எனது தெரிவுப் பெயர் பாரதூரமானதாக எனக்குப் புரியவில்லை. இப்பெயரை மாற்றும்படி கூறுவதில் நியாயம் உள்ளதாக எனக்குப் படவில்லை. தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள்.

வணக்கம் அண்ணா,

பரதேசி என்பது ஒன்றுமில்லாதவன் என்பது பொருள்படும். ஆகவே அண்ணா இந்தபெயரை மாற்றி பொஸிட்டீவாக நிர்வாகம் சொல்லுவதுபோல வையுங்களேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தங்கையே,

பரதேசி என்றால் ஒன்றுமில்லாதவன் எனும் அர்த்தத்தை எந்த அகராதியில் பார்த்தீர்கள். உண்மையில் இச்சொல்லின் சரியான அர்த்தம் அந்நியன் என்பதாகும். இது தொடர்பில் நான் யாருடனும் பந்தயம் பிடிக்கத் தயாராக உள்ளேன். பரதேசி என்ற பெயரை நான் தெரிவு செய்தமைக்கா காரணமும் இச்சொல்லின் சரியான அர்த்தத்தை அதற்கு வழங்க வேண்டும் என்பது தான். தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஐயய்யோ அண்ணா நீங்கள் பெரியவர்கள். நீங்கள் சொல்லுவதே சரி. கதைப்புத்தகங்களில் \" இவன் சுத்த பரதேசி\" என்று வாசித்தபடியால அப்படி சொன்னேன். உள்நோக்கம் எதுவுமில்லை எனக்கு. அழகான பெயர் \"பரதேசி\" அதாவது பரந்த தேசத்தில் சிதறியிருப்பவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தீபிகா !

புலம் பெயர்ந்தவர்கள் எனும் வகையில் நாம் அனைவரும் உண்மையில் பரதேசிகளே. (சொல்லின் சிறப்பான அர்த்தத்தில்). எது எப்படியிருப்பினும், அதாவது பரதேசி என்றால் எதுவுமற்றவன் எனும் அர்தத்தில் பார்ப்பினும், எதுவுமற்றவர்கள் என்பது ஒரு இழிவான சொல்லல்ல. காரணம் அவர்களும் மனிதர்களே. நம் வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் நாம் அனைவருமே எதுமற்றவர்களாக இருந்திருக்கிறோம் எனபதை எவ்வாறு மறுக்க முடியும் ?

நம்முள் புதைந்து நம்மைத் தேடும் நேர்மை நமக்கிருக்குமெனில்... நாம் வெறும் சம்பிரதாயங்களுக்குள் அகப்பட்டு நம்மை ஏமாற்றிக்கொள்ளாது இருக்கமுடியும் என்பது எனது நம்பிக்கை. புரிகிறீர்களா தீபிகா ?

பராதெசி என்று மாற்றுங்களேன்? எனக்கும் நாவூற என்பது சாத்துவாய் என கேள்விப்பட்டிருக்கிறன். அத யாழ்களம் இல்லை என்கிறது. யாரிடம் சொல்லி அழ :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தள நண்பர்களே நண்பிகளே,

படைப்புப் பக்கத்தில் சில அழகான கவிதைகளை வாசித்தேன். நன்றாக இருக்கின்றன. அவைபற்றி அந்தந்த இடங்களிலேயே சிறு விமர்சனக்குறிப்புகளை எழுதலாம் என எண்ணினேன். ஆனால் அதற்கான உரிமை எனக்கு வழங்கப்படவில்லை.

வாழ்க புத்திஜீவிதம்.

வாழ்க கருத்துச் சுதந்திரம்.

வாழ்க ஆதாரமற்ற முன்னனுமானங்களும். ]

- பரதேசி.

(நம் வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் நாம் அனைவருமே எதுமற்றவர்களாக இருந்திருக்கிறோம் எனபதை எவ்வாறு மறுக்க முடியும் ? )

பரசி அண்ணா,

உங்களின் அறிவியல் தத்துவம் அற்புதம். கீதையில் சொல்லியவைகளில் இருந்து உயிரினங்கள் இவ்வுலகில் உதயமாகும் போது கொண்டுவருவது எமது வெற்றுக்கண்களுகு ஒன்றுமேயில்லை. அதே போல மறையும் போதும் கொண்டுபோவதும் ஒன்றுமேயில்லை,

ஆனால் நான் நினைக்கிறேன். வாழும் போது நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் எமக்குச்சொந்தமானவையே. அவை எம்முயிருடன் இறப்பின் பின்பும் தொடர்கிறது. ஆகவே பாவம் செய்தவனும் மூட்டையை சுமக்கிறான், நன்மை செய்தவனும் சுமக்கிறான் மூட்டையை. எப்படிச்சொல்லமுடியும் நாம் எல்லோரும் ஒன்றுமேயில்லாதவர்கள் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையைக் கூறுவதானால் எனக்குக் கீதை போன்ற உபதேசங்களில் நம்பிக்கை கிடையாது. இருப்பினும், வாழ்க்கை எமக்கு வழங்கும் அனுபவங்களுடாக நாம் பல வியடங்களைப் புரிந்து கொள்கிறோம்.

வாழ்வின் செயற்பாடும் அதன் விளைவுகளும்தான் எமக்கு மிகுதியாக உள்ள செல்வங்கள். நாம் வாழ்ந்ததற்கான சுவடுகள். ஏற்ற இறக்கங்களும் இன்ப துன்பங்களும் இல்லாத நேர்கோட்டு வாழ்க்கை எமக்கு எதையும் கற்பிப்பதில்லை. வாழ்வை அனுபவத்தினூக உற்று நோக்காத பட்சத்தில் எந்த உபதேசமும் அர்த்தமற்றதாகப் படுகிறது.

வாழ்க்கை உபதேசிக்கும் பாடங்களே உயர்ந்தவையும் சரியானவையுமெனப்படுகிறது.

நான் ஒரு அண்ணனுடன் தான் விவாதிக்கிறேன். அதனால் பிழையாக என்னை விளங்கிக்கொள்ளவேண்டும். என் சிறுகதைகளே மனித வாழ்க்கை, கானல் நீரோட்டம் போன்றது என்பதை அடிப்படையாக கொண்டவை.

எப்படி ஒருவர் தன் வாழ்க்கை சரியான திசையில்தான் செல்லுகின்றது எனபதை அவரவர் வாழ்க்கையில் இருந்து அறிந்துகொள்ளமுடியும். எனக்கு சரியெண்டு படுவது என்னுமொருவருக்கு பிழையாக தெரியும். எனக்கு பிழையாக தெரிவது மற்றவருக்கு சரியாக தெரியும். ஒரு மனித உடலுக்கு எப்படி ஒரு வெப்பநிலை அள்வீடாக இருக்கிறதோ அந்த அளவீட்டிற்கு கீழே, மேலே என்று தொடங்குகிறது எமது உடலின் தொழிற்பாடு. அது எல்லா மானிடர்களுக்கும் பொது. அப்படியிருக்க வாழ்க்கையின் தொழிற்பாடு ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதை எப்படி நான் ஒரு அள்வு கோளில்லாது எதேச்சையாக ஒவ்வொருவரும் தீர்மானிக்கலாம். ஆகவே நீங்கள் சொல்லவருவது, ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவத்தில் ஒரு அளவு கோள் ஒன்றினை தயாரித்து வைத்திருக்கவேண்டும் அவரவர் அனுபவத்தினூடு.

ஆப்படியானால் எப்படி அந்த அள்வு கோளை நான் கணித்துக்கொள்வது? இங்கே தான் கீதை போன்ற, பைபிள், குர்ரான் என்பவை ஒரு மனிதனுக்கு சில ஆலோசனைகளை வள்ங்கிறது என்று நான் என் அனுபவத்தில் அறிந்துகொண்டேன். என்ன சொல்லுகிறீர்கள் பரிசி அண்ணா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதர்களும் மற்றைய விலங்குகளைப்போன்று எண்ணிக்கையற்ற பலவீனம் கொண்டவர்கள். இருப்பினும் மனிதர்களுக்கெனப் பிரத்தியேகமான பலவீனங்களும் உண்டு. ஆவற்றில் முக்கியமானது சுயநலம். காரணம், சிந்தனையின் விளைவாகவே சுயநலம் தோன்றுகிறது.

உபதேசம் எனபதும், ஒழுக்கம் என்பதும் தன்னளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனுபவப் பெறுமானங்களே. ஒரு சமூகத்தில் ஒழுக்கம் என்பது இன்னொரு சமூகத்தில் ஒழுக்கமின்மையாகக் கணிக்கப்படுகிறது. இது எப்படியுருவாகியிருக்க முடியும் ?

என் நண்பர் ஒருவர் கூறியது எனக்கு ஞாபகம் வருகிறது: ஓட்டபந்தப்பந்தயக்காரனுக்கு முடவனின் ஒழுக்கம் உவப்பில்லாதது. முடவனுக்கு ஓட்டப்பந்தயக்காரரின் ஒழுக்கம் ஒத்துவராதது.

அவருடன் கருத்துடன் நான் முழுதாக உடன்படுகிறேன். அதற்காக என்னுடன் மற்றவர்கள் உடன்படவேண்டுமென்பதில்லை.

என்னால் முழுமையக அறியப்பட்ட பிரபஞ்சம் நான் மட்டுமே. என்னிலிருந்துதான் நான் உலகத்தையும் மிகுதியையும் தீர்மானிக்கிறேன். எனக்குப் பசிக்கும்; பசிக்கு நான் மட்டும்தான் உண்ணமுடியும். எனது தாகத்திற்கு நான் மட்டுமே பருகமுடியும்.

அவ்வாறெனில் புறவயப்பட்ட ஒன்னு என் அகவயப்பட்டதனுடன் எவ்வாறு முற்றுமுழுதாக இசைவடையக்கூடும்.

எனது நிலைக்குப் பொருத்தமானதை ஒழுக்கம் என்று என்னால் ஏற்றுக்கொளவதற்கு எனக்கு எவ்விதத் துணிவும் தேவையில்லை. உபதேசங்களும் அவ்வாறே. ஆனால் அனுபவம் அதைத் தாண்டியது. வேட்டை நாயைப்போன்று எகிறிப்பாயும் ஒரு சிந்தனை ஒழுக்கம் அல்லது உபதேசம் எனும் எல்லைகளைக் கண்டுகொள்வதில்லை. தரமான எந்நக் கலைஞைகளை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் உபதேசங்களுக்குள்ளும் ஒழுக்கங்களுக்கும் தம்மைச் சிறைப்பிடித்துக் கொளவதில்லை என்பதை உணர்வீர்கள்

இதுதான் எனது அபிப்பிராயம்.

உங்கள் பதிலில் மிகுந்த கருத்துகள் இருக்கின்றது அண்ணா, ஆனாலும் இந்த தங்கைக்கு சிலவற்றை விவாதிக்கவேண்டும் என்று நினைப்பதால், அதனை உங்களிடம் தாழ்மையுடன் கேட்டு, உங்கள் அனுமதியுடன் விவாதிக்கவிரும்புகிறேன் அண்ணா? இது ஒரு அறிமுகப்பகுதி ஆகவே நான் இந்த கருத்துக்களினை தொடர்ந்திழுப்பது கள்விதிகளை மீறிய ஒரு செயலாக இருக்கும் என்று நினைப்பதால் உங்களிடம் மீண்டும் ஒரு சந்தர்ப்பந்தில் இதைப்பற்றி விவாதிக்கிறேன் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா பாசமலர் படம் போகின்றது :rolleyes:

அண்ணா எனக்கு நீங்கள் எழுதியவற்றில் ஆழம் உள்ள பகுதிகளாக தெரிந்துவிவாதிக்க விரும்புவது இவற்றையே.

1. நம்முள் புதைந்து நம்மைத் தேடும் நேர்மை நமக்கிருக்குமெனில்... நாம் வெறும் சம்பிரதாயங்களுக்குள் அகப்பட்டு நம்மை ஏமாற்றிக்கொள்ளாது இருக்கமுடியும் என்பது எனது நம்பிக்கை. புரிகிறீர்களா தீபிகா ?

2.நம் வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் நாம் அனைவருமே எதுமற்றவர்களாக இருந்திருக்கிறோம் எனபதை எவ்வாறு மறுக்க முடியும் ?

3.இருப்பினும், வாழ்க்கை எமக்கு வழங்கும் அனுபவங்களுடாக நாம் பல வியடங்களைப் புரிந்து கொள்கிறோம்.

4.வாழ்வின் செயற்பாடும் அதன் விளைவுகளும்தான் எமக்கு மிகுதியாக உள்ள செல்வங்கள். நாம் வாழ்ந்ததற்கான சுவடுகள். ஏற்ற இறக்கங்களும் இன்ப துன்பங்களும் இல்லாத நேர்கோட்டு வாழ்க்கை எமக்கு எதையும் கற்பிப்பதில்லை. வாழ்வை அனுபவத்தினூக உற்று நோக்காத பட்சத்தில் எந்த உபதேசமும் அர்த்தமற்றதாகப் படுகிறது.

5.வாழ்க்கை உபதேசிக்கும் பாடங்களே உயர்ந்தவையும் சரியானவையுமெனப்படுகிறது.

6.உபதேசம் எனபதும், ஒழுக்கம் என்பதும் தன்னளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனுபவப் பெறுமானங்களே. ஒரு சமூகத்தில் ஒழுக்கம் என்பது இன்னொரு சமூகத்தில் ஒழுக்கமின்மையாகக் கணிக்கப்படுகிறது. இது எப்படியுருவாகியிருக்க முடியும் ?

7.ஓட்டபந்தப்பந்தயக்காரனுக்கு முடவனின் ஒழுக்கம் உவப்பில்லாதது. முடவனுக்கு ஓட்டப்பந்தயக்காரரின் ஒழுக்கம் ஒத்துவராதது.

8.என்னால் முழுமையக அறியப்பட்ட பிரபஞ்சம் நான் மட்டுமே. என்னிலிருந்துதான் நான் உலகத்தையும் மிகுதியையும் தீர்மானிக்கிறேன். எனக்குப் பசிக்கும்; பசிக்கு நான் மட்டும்தான் உண்ணமுடியும். எனது தாகத்திற்கு நான் மட்டுமே பருகமுடியும்.

அவ்வாறெனில் புறவயப்பட்ட ஒன்னு என் அகவயப்பட்டதனுடன் எவ்வாறு முற்றுமுழுதாக இசைவடையக்கூடும். ?

9.எனது நிலைக்குப் பொருத்தமானதை ஒழுக்கம் என்று என்னால் ஏற்றுக்கொளவதற்கு எனக்கு எவ்விதத் துணிவும் தேவையில்லை. உபதேசங்களும் அவ்வாறே. ஆனால் அனுபவம் அதைத் தாண்டியது. வேட்டை நாயைப்போன்று எகிறிப்பாயும் ஒரு சிந்தனை ஒழுக்கம் அல்லது உபதேசம் எனும் எல்லைகளைக் கண்டுகொள்வதில்லை. தரமான எந்நக் கலைஞைகளை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் உபதேசங்களுக்குள்ளும் ஒழுக்கங்களுக்கும் தம்மைச் சிறைப்பிடித்துக் கொளவதில்லை என்பதை உணர்வீர்கள்

அருமையான கருத்துக்கள். இவற்றினை ஒவ்வொன்றாக விவாதித்தால் மிகவும் பலமுள்ள கருத்தாளத்தினை பார்க்கலாம் அண்ணா.

முதலாவது நமக்கிருக்கும் நேர்மை நேர்மையானதாக இருக்கிறது எமக்கு ஆனால் உலககவாழ்க்கையில் அது மற்றவர்களுக்கு நேர்மையாக இருக்கமுடியுமா? உதாரணம் எமது தமிழர் போராட்டம் எமக்கு தெரிகிறது அதில் நேர்த்தி இருக்கிறது. உண்மை இருக்கிறது. அப்படியானால் அது ஏன் உலக அரங்கத்தில் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. கால ஒட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறோம். ஆகவே தமிழராகிய எமக்கு ஏற்பட்ட அனுபவங்களே எமது சொத்துக்கள். அவற்றினை உபதேசமாக கொண்டுதான் எமது போராட்டம் இன்று பெரும் இடர்களின் மத்தியிலும் கொண்டு எடுக்கமுடியும். சுப்பர் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க வளர்க!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் உளறல்களைத் துல்லியமான முறையில் ஒழுங்கமைத்து அவற்றிற்குத் தெளிவு கிடைக்கும் வகையில் அமைத்தது மட்டுமல்லாது, அவற்றை தமிழர்களாகிய எமது போராட்டத்துடன் இணைத்துப் பார்த்ததும் அற்புதம்.

நேர்மையான எம் போராட்டம் வெற்றியடைந்தே தீரும்.

அப்பழுக்கற்ற உறுதியுடன் நம்பிச் செயற்படுவோமாக.

எனக்கு ஒன்று மட்டும் நல்லா புரிந்து போச்சு உங்களிற்கு "பரதேசி" என்ற பெயர் ரொம்ப விருப்பம் என்று :lol: ......ஆனாலும் பரதேசி என்றா "வெளிநாட்டான்" என்று டெவினிசன் கொடுத்திருக்கிறியள் அது தான் நேக்கு விளங்கவில்லை :D ......எனிவே நேக்கு உந்த பெயர் ரொம்ப பிடித்திருக்கு உண்மையாகவே உங்க பெயர் இது தானோ பரதேசி அண்ணா இல்லை இப்படி அடம்பிடிக்கிறியள் அது தான் டவுட்டில கேட்டனான் :D ..பரதேசி அண்ணே உங்களை புரிந்து கொள்ளும்வரை உண்ணா விரதம் இருந்து பாருங்கோவேன் :) ஆனா உண்ணா விரத்தில எல்லாம் நான் பங்குபற்ற முடியாது நான் பேபியாக்கும் :lol: ......எனிவே குட்லக் மறுபடி சந்திப்போம் உண்ணா விரத்தில தப்பினீங்க என்றா :) (தப்பிடுவியள் என்று நினைக்கிறேன் )...

விளங்குது உங்கள் ஏக்கம் சாணக்கியன் அண்ணாவின் கருத்து தான் என்னுடைய கருத்தும் பட் ஒரு விசயம் தமிழீழ தேசிய போராட்டத்தை கொச்சைபடுத்தும் கருத்தாக இருந்தால் வெறி சொறி பரதேசி அண்ணா :) ........மோகண் அண்ணாவிற்கு ஜம்மு பேபியின் அட்வைஸ் என்ன தெரியுமோ :) எனி மெடிக்கல் செக்கப் பண்ணிட்டு கருத்துகளத்திள ஆட்களை எழுத விடுங்கோ :) அப்ப ஒரு பிரச்சினையும் வராது உங்களிற்கும் பிரச்சினை இருக்கா :lol: .....விளங்கிச்சோ பிறகு என்னையே மெடிக்கலிற்கு அனுப்புறதில்லை சொல்லிட்டேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

உங்கள் பெயரில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பெயரை விடுத்து, கருத்துக்களில் கவனம் செலுத்துவது நல்லது என நினைக்கிறேன். நல்ல பெயரை வைத்துக் கொண்டு, தவறான கருத்துக்களை எழுதுபவர்களை விட்டு விட்டு, நல்ல கருத்துக்கள் எழுதக்கூடிய உங்களைத் தடை செய்வது எனக்குச் சரியாகப் படவில்லை. முயற்சியை விடாது, உங்கள் கருத்துக்களை உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள். காலப்போக்கில் அனுமதி கிடைக்கும். ஆரம்பத்தில், பல பகுதிகளில் எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டுத்தான் இருந்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் எழுதத் தொடங்கிய பின்னர், அனுமதி தரப்பட்டது.

  • 4 weeks later...

ஆகா பாசமலர் படம் போகின்றது :D

ஹாஹா.. :D:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.