Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சம்பிரதாயம்" என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!

Featured Replies

"சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்" என்ற தலைப்பில் கணவனின் இறுதி நிகழ்வில் மனைவியின் தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தோம்.

இந்தச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்திருந்தது. ஆனால் பலருக்கு இது ஒரு சாதரண விடயமாகத்தான் பட்டது. அது மட்டும் அல்ல. தாலி அறுப்புச் சடங்கை ஆதரிக்கவும் செய்தார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட பெண்ணின் கதறலை நையாண்டி செய்து நகைச்சுவைப் பதிவுகளையும் எழுதினார்கள்.

இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களை ஆதரித்து, கட்டிக் காப்பாற்றுவதற்கு எமது தமிழ் சமூகம் முனைவதற்கு என்ன காரணம்? கணவனை இழந்து கதறுகின்ற பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்யும் சடங்குகளை விடமாட்டோம் என்று படித்தவர்கள் கூட அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்?

இதற்கு மதவெறி ஒரு முக்கிய காரணம். இதனோடு சாதிவெறியும் ஒரு காரணம். சாவுவீட்டில் நடக்கின்ற சம்பிரதாயங்களுக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் ஆச்சரியப்படலாம். சம்பந்தம் இருக்கிறது. இதைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். அதற்கு முன் அண்மையில் டென்மார்க்கில் நடந்த ஒரு கூத்தைப் பார்ப்போம்.

சில வாரங்களுக்கு முன்பு டென்மார்க்கில் ஒருவர் இறந்து விட்டார். அவருக்கான இறுதி நிகழ்வுகளை நடத்தித் தர ஒரு பார்ப்பனரை அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். தன்னுடைய சாதிப் பிரிவு அதைச் செய்வது இல்லை என்றும், பார்ப்பனர்களில் உள்ள "சைவஐயர்" என்னும் பிரிவுதான் சாவுவீட்டில் இறுதி நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார். அப்படி செய்யவில்லையென்றால் தான் 31ம் நாள் நிகழ்வுகளை செய்து தரமாட்டேன் என்றும் சொல்லி விட்டார். அவர் ஆலயங்களில் பூசை செய்யும் பிரிவைச் சேர்ந்தவர். இவர்களை ஈழத்தில் "சிவாச்சாரியார்கள்" என்று சொல்வார்கள்.

இறந்தவரின் உறவினர்கள் "சைவஐயரை" தேடி கடைசியில் லண்டனில் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஏறக்குறைய 1000 யுரோக்களை கூலியாகக் கேட்டார். அத்துடன் இறுதி நிகழ்வுகளுக்கு தேவையானவை என்று மிக நீளமான பொருட்களின் பட்டியலைக் கொடுத்திருந்தார். எல்லாவற்றிற்கும் சம்மதித்து அவரை லண்டனில் இருந்து வரவழைத்து இறுதி நிகழ்வுகளை செய்தார்கள்.

இனிமேல் இறப்பு ஏதாவது நடந்தால் லண்டனில் இருந்துதான் "சைவஐயரை" அழைக்க வேண்டும் என்பதால், டென்மார்க்கில் உள்ள சில தமிழர்கள் கூடி இதற்காக ஒரு சங்கம் அமைத்துள்ளார்கள். தமிழுக்கு சங்கம் அமைத்த காலம் போய், இன்றைக்கு ஐரோப்பாவில் செத்த வீடு செய்வதற்கு சங்கம் அமைக்கின்ற அளவிற்கு தமிழன் வந்து விட்டான்.

இந்தச் சங்கத்தின் மூலம் தமிழர் கலாச்சாரப்படி இறுதி நிகழ்வுகள் செய்ய என்று சொல்லி டென்மார்க் அரசிடம் பணம் பெற்று, அதன் மூலம் "சைவஐயரால்" ஆகும் செலவை ஈடு செய்வதுதான் அவர்கள் திட்டம்.

இந்தச் சங்கத்தை அமைப்பதற்கான முதலாவது கூட்டம் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட ஒருவர் இப்படிச் சொன்னார், "நான் ஒரு செத்த வீட்டிற்கு கொள்ளிப் பானை கொத்தினேன், அதன் பிறகு எல்லோரும் என்னைத்தான் கொள்ளிப்பானை கொத்தக் கூப்பிடுகிறார்கள், நாங்கள் என்ன அந்த ஆட்களோ?". இப்படி கோபமாகவும் வருத்தமாகவும் கேட்ட அவர் நிறையப் புரட்சிக் கவிதைகளை எழுதுபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சங்கத்தின் நோக்கம் டென்மார்க் அரசிடம் இருந்து பணம் பெறுவது மட்டும் அல்ல. சாதியையும் கட்டிக் காப்பதுதான். தனியாளாக கொள்ளிப் பானை கொத்தினால், அவர்களுடைய சாதி மானம் போய் விடுமாம். சங்கத்தின் பெயரில் கொத்தினால், அது பறவாயில்லையாம்.

சாவு வீட்டிற்கு சைவஐயரை அழைத்து 31ஆம் நாள் நிகழ்விற்கு சிவாச்சாரியர்களை அழைத்து, பார்ப்பன வர்ணத்தில் உள்ள சாதிகளின் இருப்பையும் பிழைப்பையும் காப்பதோடு, வேளாள சாதியினரின் ஆதிக்கத்தின் அடையாளத்தையும் தக்க வைப்பதே இந்த சங்கத்தின் நோக்கம்.

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். இந்துத் தமிழர்கள் தமது வாழ்க்கையில் பல நிகழ்வுகளை சந்திக்கின்றார்கள். பிறந்தநாள், பூப்புனிதநீராட்டு விழா, திருமணம் என்று நிறைய நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றர்கள். ஆனால் ஒரு சாவு நிகழ்வில் வெளிப்படுவது போன்று வேறு எந்த நிகழ்விலும் சாதிகளின் இருப்பு வெளிப்படுத்தப்படுவது இல்லை.

ஒரு சாவின் போது சலவைத் தொழில் செய்யும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து வெள்ளை கட்டுவார்கள். பறை அடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து பறை அடிப்பார்கள். இறந்தவரின் மகனுக்கு மொட்டை அடிக்கும் வேலையோடு, வேறு சிறு வேலைகள் செய்வதற்கு முடி வெட்டும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். பூசை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய "சைவஐயர்" சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். இடுகாட்டில் விறகுகளை வெட்டியான் சமூகத்தை சேர்ந்தவர் அடுக்கி வைப்பார். இத்தனை சாதிகளும் வந்து போன பின்னர் 31ஆம் நாள் "சிவாச்சாரியார்கள்" வருவார்கள்.

இதுதான் இந்து சம்பிரதாயப்படி நடக்கின்ற சாவு ஒன்றின் இறுதி நிகழ்வு. ஒரு சாவு நிகழ்வில் கூட மனிதர்களுக்குள் பல சாதிகள் உண்டு என்பதையும், அவர்களுக்கு என்று தனியான தொழில்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தச் சாதிகளில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பன உண்டு என்பதையும் வெளிப்படுத்தும் மனிதத்திற்கு விரோதமான ஒரு சம்பிரதாயமே இந்த இந்து மதச் சம்பிரதாயம் எனப்படுவது.

இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த சம்பிரதாயங்களை அப்படியே நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது வேளாள பார்ப்பனிய சாதி வெறியனருக்கு ஒரு குறையாகவே இருக்கின்றது. இதனால் சங்கங்கள் அமைத்து "இந்து சம்பிரதாயம்" என்ற பெயரில் சாதிகளின் இருப்பை முடிந்தவரை தக்க வைக்க முனைகின்றார்கள்.

சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதற்கும் இந்த சாதி வெறியர்கள் தயாராக இல்லை. மிகவும் உணர்வுபூர்வமானதாக கருதப்படும் தாலி விடயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதானது, பின்பு மற்றைய விடயங்களிலும் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஒரு உந்துகோலாக அமைந்து விடும் என்பதுதான் இவர்களுடைய முக்கிய அச்சம்.

சாம்பல் கரைப்பதற்கு சைவஐயர்கள் வரவேண்டும் என்பதும் 31ஆம் நாள் சிவாச்சாரியார் வரவேண்டும் என்பதும் சம்பரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. தாலியை அணிந்தபடி வந்து பின்பு தாலியை கழற்றி கணவனின் பிணத்தின் மீது வைக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. ஒரு சம்பிரதாயத்தை முற்றிலும் இல்லாமல் செய்வது என்பது மற்றைய சம்பிரதாயங்களையும் காலப் போக்கில் இல்லாமல் செய்து விடக் கூடும். இதனால் சாதிவெறி பிடித்தவர்கள் சம்பிரதாயங்களை மாற்ற மாட்டோம் என்று பிடிவாதமாக நிற்கிறார்கள்.

ஒரு புறம் பெண்கள் மறுமணம் செய்யக் கூடாது என்ற பிற்போக்குச் சிந்தனை, மறுபுறம் இந்தச் சம்பிரதாயங்களை நீக்கி விட்டால் இந்து மதத்தில் வேறு ஒரு மண்ணும் இல்லையே என்ற கவலை, இன்னொரு புறம் சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்ற வெறித்தனம், இவைகள் எல்லாம் சேர்ந்துதான் இவர்களை "சம்பிரதாயம்" என்று கூக்குரல் இட வைக்கின்றது. காட்டுமிராண்டித்தனமாக நடக்கச் செய்கிறது.

http://www.webeelam.com

Edited by சபேசன்

  • Replies 117
  • Views 15.6k
  • Created
  • Last Reply

சரி சரி கவலைப்படாதீர்கள்.

உங்களுக்குச் சடங்கு நடக்கும் போது உங்களது விருப்பப்படியே செய்து விடும்படி உங்களது வீட்டிலுள்ளவர்களுக்கும் உறவினர் நண்பர்கள் (அப்படி எவராவது இருந்தால்) அனைவருக்கும் அறிவித்துவிடுங்கள். *** :(:lol:

*** ஒருமையில் எழுதப்பட்ட கருத்து திருத்தப்பட்டு தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

வசம்பு எமது புலம் பெயர் சமூகத்தின் பிரச்சினைகளை சபேசன் எழுதவதை ஏன் அவரின் தனி நபர் பிரச்சினையாகப் பார்கிறீர்கள்? சாதிகள் புலம் பெயர் சமூகத்திலும் கட்டிக் காக்கப்பட வேண்டும் என்பதா உங்கள் விருப்பம்? ஏன் மாற்றங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்?

டென்மார்க் அரசுக்கு இவர்களின் நோக்கம் பற்றி விரிவாக எழுதி அனுப்பினால் ,இவர்களின் மனித இனப் பாகுபாடான துவேசக் கொள்கையின் அடிப்படையிலான மனுவை அவர்கள் நிச்சயமாக நிராகரிக்காபார்கள்.

நாரதர்

ஒரு விடயத்தை எழுத வருபவருக்கு கொஞ்சமாவது அடிப்படை ஞானம் இருக்க வேண்டும். ஒரு மரணச்சடங்கில் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்கள் செய்ய வருவதில்லை. அதற்கு புறிம்பாக சைவ ஜயர் எனப்படுபவரே வருவார். ஆனால் அவர் பிராமண குலத்தைச் சார்ந்தவரல்ல. ஒரு மரணச்சடங்கில் பிராமண குலத்தைச் சார்ந்தவர் சடங்கு செய்ய வந்தால் அவர் துடக்குக் கழித்த பின்தான் கோவில் பூஜை செய்யப் போகலாம். ஆனால் இவர் பிராமணரும் சைவ ஜயரும் ஒரே இனம்தான் என்று ஏதேதோ எல்லாம் பிதற்றுகின்றார். இப்போது நடைபெற்று வரும் பல சடங்குகள் எமது பிள்ளைகளின் காலத்திலேயே தொடருமா என்பதே கேள்விக்குறி. *** :lol::(:(:(

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

வசம்பு!

நீங்கள் என் மீது அர்த்தமற்ற வகையில் வெறுப்புணர்வை வளர்த்திருக்கிறீர்கள். அதை நான் யாழ் களத்தில் இணைந்த காலத்தில் இருந்து கவனித்து வருகின்றேன்.

என்னுடன் அடிக்கடி கருத்துக்களில் மோதுகின்ற நெடுக்காலபோவான், தூயவன் போன்றவர்கள் போல் அன்றி, நீங்கள் ஒரு தனிப்பட்ட வெறுப்புணர்வை கொண்டிருக்கிறீர்கள்.

நான் உங்களை எந்த வகையில் பாதித்தேன் என்று புரியவில்லை.

அடுத்தது நீங்கள் சொன்ன சாதி பற்றிய கருத்துக்கு வருகின்றேன்.

நான் பார்ப்பன வர்ணம் என்று சொல்லை பயன்படுத்தியிருப்பதை கவனித்திருப்பீர்கள்.

பார்ப்பன சாதி என்ற சொல்லைப் பயன்படுத்தாது, வர்ணம் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினேன் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நான்கு வர்ணங்களில் ஒன்று பார்ப்பன வர்ணம். சூத்திர வர்ணத்திற்குள் நிறைய சாதிப் பிரிவுகள் இருப்பது போன்று, பார்ப்பண வர்ணத்திற்குள்ளும் நிறைய சாதிப் பிரிவுகள் உண்டு. ஈழத்தை விட தமிழ்நாட்டில் மிக அதிகளவிலான சாதிப் பிரிவுகள் பார்ப்பன வாணத்தில் உண்டு.

ஈழத்தில் அப்படி அதிகளவு பிரிவுகள் இல்லை.

சைவஐயர், சிவாச்சாரியர்கள் என்ற ஒரு சில சாதிப் பிரிவுகள்தான் உண்டு. ஆனால் இவர்கள் எல்லோரும் பார்ப்பன வர்ணத்தை சேர்ந்தவர்கள்தான்.

சைவஐயர் எனப்படுபவர்கள் சுத்திர, வைசிய, சத்திரிய வர்ணத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களும் பார்ப்பனர்கள்தான்.

இது உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கின்றேன். பறவாயில்லை. இன்று அறிந்து கொண்டீர்கள். உங்களுக்கு என்னுடைய தகவலில் நம்பிக்கை இல்லை என்றால் யாராவது ஒரு பார்ப்பனரிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன் நீங்கள் சொல்வது போன்று, நிறைய விடயங்கள் அழிந்து கொண்டு வருகின்றன. அவைகள் உண்மையில் அழிந்து போக வேண்டிய விடயங்கள்தான்.

ஆனால் சிலர் அவைகளை "சம்பிரதாயம்" என்று சொல்லி காக்க முனைகின்ற போது, நாம் எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டி வருகின்றது. எதையும் நாம் அலட்சிப்படுத்தி விடக் கூடாது என்று நினைக்கின்றேன்.

Edited by சபேசன்

சபேசன், நீங்கள் கூறிய விடயங்கள் சரிதான். ஆனால் அதற்கு சாதி முலாம் பூசியதுதான் தவறு. மீண்டும் மீண்டும் சாதியைப் பற்றிக் கதைப்பதும்கூட அதனை வளர்ப்பதற்கு உதவுகிறது என்பதை மறவாதீர்கள். பல்லாண்டு காலமாகச் செய்து வந்த விடயங்களை ஓரிரு வருடங்களில் இல்லாதொழிக்க முடியாது. படிப்படியாகத் தான் செய்ய முடியும். தண்ணீர் கொடுப்பதற்கே சாதி பார்த்த காலம் போய் திருமணத்திற்கு மட்டும் பார்க்கும் ஒரு நிலை வந்திருப்பது மிகப் பெரிய முன்னேற்றம். அதற்காக எல்லோரும் அப்படித்தான் என்று நான் இங்கு கூற வரவில்லை. ஆனால் குறுகிய காலத்தில் பெரியதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இவைகூட அடுத்த தலைமுறையோடு போய்விடும். அடுத்த தலைமுறையிலும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அது இயல்பும்கூட.

எந்த ஒரு விடயமும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் உள்ளது. முதலில், எங்களுக்குள் இருக்கும் சாதி வெறியை ஒழிக்க வேண்டும். உங்களுக்குள் அப்படியான ஒரு எண்ணம் இருந்திருக்காவிட்டால், நீங்கள் இந்த விடயத்தைச் சாதிக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களுக்குள்ளும் சாதி பார்க்கும் எண்ணம் இருப்பதால்தான் அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறீர்கள்.

நீங்கள் கூறிய சம்பிரதாயங்கள், அநேகமான பகுதியினருக்கும் பொருந்தும். அதற்காக ஒரு பகுதியினரை மட்டும் குறிப்பிட்டுக் கூறியுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்

தமிழச்சி!

சாதிக் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்று எந்த அர்த்த்தில் சொல்கிறீர்கள்? டென்மார்க்கில் நடந்த சம்பவத்தை பாருங்கள்.

இந்தச் சாதி வந்து சாம்பலைக் கரைத்தால்தான் 31ஆம் நாள் வந்து தான் மிச்சத்தை செய்வேன் என்று இன்னொரு சாதி சொல்கிறது. இன்னொரு சாதி தான் கொள்ளிப்பானை கொத்தும் சாதி இல்லை என்று கூட்டத்தில் அழுகிறது.

இதை எந்தக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது?

அவர்களே தங்களுடைய சாதிகளை பிரகடனப்படுத்துகின்ற போது, அதைச் சுட்டிக் காட்டுபவர்கள் சாதியைக் குறிப்பிடாது எப்படி இருக்க முடியும்?

இந்தச் சாதிகளைப் பற்றிக் கதைப்பவர்கள் போன தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை மறக்காதீர்கள். அப்படிப் பட்டவர்கள் இந்தத் தளங்களில் மிகவும் குறைவு. இந்தத் தளங்களில் இருப்பர்களில் பலர், இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களே. பல பிள்ளைகள் குடும்பத்தினரிடமிருந்து சாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை. நண்பர்கள் மூலமும், வெளியிடங்களிலிருந்தும்தான் தெரிந்து கொள்கிறார்கள். அவர்களின் திருமண விடயங்களின்போது மட்டும்தான், பல பிள்ளைகளுக்கு குடும்பங்களின் மூலம் சாதியைப் பற்றித் தெரியவருகிறது. சாதியைப் பற்றி, தளங்களில் விவாதிப்பது நல்லதல்ல என நினைக்கிறேன். போன தலைமுறையினர் இருக்கும்வரை இந்தப் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இளைய தலைமுறையினராகிய நாம் இதனைப் பற்றி அலசி ஆராய்வதன் மூலம், அதனை வளர்க்கிறோமே தவிர, அழியச் செய்வதில்லை. முடிந்தவரை, இளைய தலைமுறையினரை இவ்வாறான சிந்தனைக்குள் புகுத்தாமல் இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித் தமிழச்சி அது சாத்தியமாகும்.

சாதி பற்றிக் கதைக்காமல் விட்டால், எம் அடுத்த தலைமுறை அதை வைத்து எப்படி பகுத்தறிவு கதைக்காமல் இருப்பது? இதனால் அடுத்த எம் சந்தததியினருக்குக் கிடைக்கவேண்டிய பெயரும், புகழும் இல்லாமல் போய் விடுமே!

ஐயகோ! இதை ஒரு காலமும் அனுமதிக்க மாட்டேன். என் பகுத்தறிவுப் பாசறை தொடரவேண்டுமானால், தொடர்ந்து சாதிப் பிரச்சனையைக் கிளப்பி, அதில் தீர்வாளனாக நானும், என் தலைமுறையும் வந்து கொண்டு தான் இருப்போம்

  • தொடங்கியவர்

தமிழச்சி!

நீங்கள் சாதி எம்மிடம் இருந்து விலக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அல்லவா?

எம்மிடம் உள்ள நோய் ஒன்று பற்றி நாம் பேசாது இருந்தால், அது குணமாகாது. எங்கே நோய் இருக்கின்றது என்று தேடி அதைக் கண்டுபிடித்து இல்லாது செய்ய வேண்டும்.

தற்பொழுது திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கப்படுகிறது என்பது இன்றைக்கு பலருடைய கருத்து.

ஆனால் எம்மை அறியாமலேயே வேறு பல இடங்களிலும் சாதி இருக்கின்றது. நாம் அவைகளை உணர்ந்து கொள்வது இல்லை. அவைகளைப் பற்றி பேசுவதும் இல்லை.

திருமணத்தை தவிர வேறு எங்கு சாதி இருக்கின்றது என்பதை நாம் ஆராய்ந்து, அங்கிருந்தும் சாதிகளை விலக்க வேண்டும்.

சாதி இருப்பதே எமக்குத் தெரியாத போது, அதை எப்படி விரட்ட முடியும்?

நீங்கள் நம்புவது போன்று "சாதி" என்ற பதமும் சாதிகளை குறிக்கின்ற "பெயர்களில்" பலவும் விரைவில் இல்லாது போய்விடும்.

ஆனால் அதனுடைய "தொழிற்பாடு" வேறு பெயர்களில் தொடர்ந்தும் எம்மோடு இருக்கும்.

நாம் எதையாவது இல்லாது ஒழிக்கப் போகின்றோம் என்றால், அதை முழு இதயசுத்தியோடு செய்ய வேண்டும்.

பெயர்களை மட்டும் ஒழித்து என்ன பயன்?

சபேசன், உங்களின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். ஆனால் அதனை நாகரீகமான முறையில் சொல்லவேண்டுமென நினைக்கிறேன். அவர்களைப் போன்றே நாமும் சாதிகளைப் பெயர் சொல்லியோ, அல்லது அவர்களது தொழில்களைக் கொண்டோ அவர்களைப் பற்றிப் பேசுவதைத்தான் தவிர்க்கச் சொல்கிறேன். அவர்கள்தான் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் என்றால், நாங்களும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமா? நாம் தாயகத்தில் இருந்தபோது இருந்த நிலைமைக்கும் இப்போது நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இது குறுகிய காலத்தில் நடந்த ஒரு பெரிய விடயமாகத்தான் நான் நினைக்கிறேன். புலம்பெயர்ந்த ஆரம்பத்தில், எல்லா நாடுகளிலும் தமிழர்கள் மிகக் குறைவாக இருந்ததன் காரணத்தால், ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டிய கட்டாயத்தினால், சாதி பார்க்காமல் தமிழன் என்ற ஒரே குடைக்குள் இருந்தார்கள். ஆனால், அவர்களின் சொந்தங்கள், ஊரார் பெருகத்தொடங்கியதும், ஊர்ச்சங்கங்கள் என்ற பெயரில், சாதீயம் புலம்பெயர் நாடுகளிலும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. புலம்பெயர்ந்த ஆரம்பத்தில், நல்ல நண்பர்களாக இருந்த பலர், அவர்களது குடும்பங்கள் வந்தபின்னர், அந்நியராகி விட்டனர். இதற்குச் சாதீயம்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றும் எல்லா நாடுகளிலும் சாதீயம் இருக்கிறது. அவற்றை நாம் நிச்சயம் இல்லாதொழிக்கச் செய்யத்தான் வேண்டும். அதனை நாம் முதலில் எம்மிலிருந்துதான் தொடங்கவேண்டும். ஆத்திரப் படுவதாலோ, அவர்களைத் திட்டித் தீர்ப்பதாலோ, நாம் எதனையும் சாதிக்கப் போவதில்லை.

தூயவன், நானும் என்ரை சாதியை விடமாட்டேன். அவர்கள் முதலில் என்ன தொழில் செய்தார்களோ, அதைத்தான் நானும் செய்வேன். அதைப் பெரிதாக்கி, எனது சாதிதான் உயர்ந்த சாதி என்று நிரூபிப்பேன். அதுவரை நான் ஓயமாட்டேன். எனது சாதிக்கென்று ஒரு சங்கம் வளர்த்து (தமிழ்ச்சங்கம் வளர்த்ததுபோல), அதற்குரிய நிதியை நான் வாழும் நாட்டின் அரசாங்கத்திடமிருந்து பெற்று, எனக்கும் எனது குடும்பத்திற்கும் மட்டுமே செலவழிப்பேன். இப்பிடி எல்லாம் செய்யாவிட்டால், என்ர சாதியிலை பிறந்ததற்கும் அர்த்தமில்லை. தமிழன் என்று பெருமைப்படவும் முடியாதே. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் சாதிக்கு அநீதி என அரசியல் சங்கங்கள் அமைப்பேன். இந்கே இருந்தால் தான் சாதி இருக்குத என மதம் மாறி அ;ஙகேயும் சாதிக் கட்சியமைப்பேன். பிரான்சு, லண்டன் என்று மாநாடு எல்லாம் நடத்துவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்மார்க்கில் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவை

Saiva Tamil Cultural Organization.Denmark

FYRREVANGET.311, 7190 BILLUND D.K

டென்மார்க் வாழ் சைவத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமயம் சம்பந்தமான வாழ்வியல் பிரச்சனைகளை. கருத்தில் கொண்டு அவர்களின் எதிர்கால சந்ததிகளின் வருங்கால நடை முறைகளையும் கருத்தில் இணைத்து. அவைகளுக்கு தீர்வு தேடும். சிந்தனையில். சைவத் தமிழ் மக்கள் சிலரால் ஒன்று பட்டு இணைந்து உருவாக்கியதே மேற்படி பேரவை என்ற அமைப்பாகும்.

இவ்வபை;பின் பொதுச்சபைக் கூட்டம் கடந்த 05-01.2008 சனிக்கிழமை அன்று பில்லூண்ட் நகரசபை நூல் நிலைய மண்டபத்தில். திரு பொ. தியாகராசா

( வேலணையூர் பொன்னண்ணா) அவர்கள் தலையில் நடைபெற்றது. இச்சபையின் செயல்பாட்டுத் திட்டங்களாக பல உறுப்பினர்கள் பல தீர்மானங்களை முன் வைத்தனர் அவைகளின் அதி முக்கியமான தீர்மாங்களை சபையினரால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்படது. அவையாவன,

1. டென்மார்கில் வாழும் சைவத்தமிழ் மக்களால் தினம்தினம் சந்திக்கும் சமய சம்பிரதாய நடைமுறைச் சிக்கல்களை. அவர்களை தேடிச்சென்று கேட்டறிந்து உதவி செய்வது. ஆலோசனை வழங்குவது என்றும். இந்த அமை;பு அரசியல் சாதி சமயங்களுக்கு அப்பால் எந்தவித பேதமும் இன்றி செயல்படுவது என்றும்..இது பணத்துக்காகவோ புகழுக்காகவோ பதவிக்காகவோ செயல்படாமல். ஒரு சீவகாருணிய அமைப்பாக மனிதனை மனிதனாய் மனித நேயத்தோடு அணுகி அவர்கள் விரும்பினால் மட்டும் உதவி. அவரை உறுப்பிராக்கி இணைத்து செயல்படுவது என்றும். கொள்கையாக ஏற்றுக் கௌ;ளப்பட்டது.

மேலும் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

2. சைவத்தையும் தமிழையும் டென்மார்வாழ் சைவத் தமிழ் மக்களியே பேணிக் கார்பது.

3. சைவசமயம் சம்பந்தமான சிறப்பு மாநாடுகளை வருடந்தோறும் நடாத்துவது நகரசபை ரீதியாக.

4 சமயம் சம்பந்தமான அறிவுத்திறன் போட்டிகளை டென்மார்க் நகரசபை ரீதியாக நடத்துவது எதிர்கால சந்ததிக்கு ஊக்கப்பரிசளிப்பது

5 தேவாரப் பண் பட்டறை நடத்துவது.

6 சைவ சமய நூல்களை பெற்றுப் படிக்கக்கூடிய ஒரு நூல் நிலையம் அமைப்பது.

7 அந்திமக் கிரியைக்கு சம்தப்பட்வர்கள் அழைத்தால் போய் உதவி செய்வது அறிவுரை வழங்குவது

8. தமிழ்மக்களுக்கு தமிழ் மருத்தவரை அழைத்து ஆலோசனை வழங்குவது. போன்ற பல தீர்மானங்களை செயல்புடுத்துவதோடு. ஒவ்வோரு நகரசபைக்கும் தேடிச்சென்று மக்களின் தேழ்வைகள். அறிந்து அதற்கேற்ப செயல்படுவது எனவும். தீர்மானமாக நிறைவேற்றுpயதோடு. நிர்வாக சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது .

நிர்வாக சபைக்கு கீழ்க்கண்டோர் தெரிவாகினர்

தலைவராக திரு .பொன். தியாகராஜா அவர்களும் (பில்லூண்ட்)

உப தலைவராக. திரு சொ. பேரின்பநாயகம் அவர்களும் (கேர்னிங்)

செயலாளராக திரு தி. ஸ்ரீதரன் அவர்களும் ( ஸ்கனபோ )

உப செயலாளராக திரு கு. குலசிங்கம் அவர்களும் (கோசன்ஸ்)

பொருளாளராக திரு செ. சோதிராசா அவர்களும் (பரடேசியா)

நிர்வாக சபை உறுப்பினர்களாக 15 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் நிர்வாக சபையை நகரசபை ரீதியாக சேர்த்து எதிர்காலத்தில் நிர்வாகசபையை கூட்டலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நகர சபைக்கு சென்று மக்களைக்கூட்டி பேரவையை அறிமுகம் செய்வதோடு அவர்களின் தேவை அறிந்து செயற்படுவதோடு உறுப்பனர்களை அவர்களின் விருப்பமறிந்து இணைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது

தேநீர் விருந்தின் பின் கூட்டம் இனிதே முடிவு பெற்றது.

தகவல்

நிர்வாக சபை

http://www.alaikal.com/news/?p=126

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருத்தர் தொழிலும் இங்கே சாதியாக கணக்கிடப்படுகின்றது.

ஏனைய மதங்களிலும் இப்படிபல விடயங்கள் இருக்கின்றன.

அதாவது பிறப்பு இறப்பு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களுக்கு அதததிற்கு அவரவர்கள் தான் வந்து அததை நிறைவேற்ற வேண்டும்.

சந்தேகக்கண்ணுடனும் இளிவுப்புத்தியுடனும் எமது சம்பிரதாயங்களை நோக்கும்போது எல்லாமே கறுப்பாகத்தான் தெரியும்.

எதையும் தொழில் ரீதியாக பாருங்கள் ஏராளமான பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும்

ஒருசில சிறிய பிரச்சனைகளை பெரிதாக்கி சுகம் காணாதீர்கள்.

நீங்கள் உங்கள் சுட்டுவிரலை மற்றவரை நோக்கி காட்டும்போது ஏனைய விரல்கள் உங்களை ........... :D

ஆளாளுக்கு ஏதேதோ எழுதி இருக்கிறீங்கள். ஒண்டும் விளங்க இல்ல. சாதி வெறி, இனவெறி, மதவெறி இதுகள நாங்களா எப்பிடி கலையுறது? தானா கலைஞ்சாத்தான் உண்டு.

வசம்பு சொன்னமாதிரி கோயிலில பூச செய்யுற ஐயரும், செத்தவீடு செய்யுற ஐயரும் வேற வேற ஆக்கள் எண்டுற விசயம் சபேசன் அண்ணைக்கு தெரியாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு சபேசன் அவர்களுக்கு உங்கள் கருத்துக்களை நான் ஆவலுடன் வாசிக்கும் ஒரு இரசிகன் ஆனால் நீங்கள்

இங்கு சில விடயங்களை நன்கு தெரிந்து கொள்வில்லை.பார்ப்பனர்கள் என்பது பிராமணர்களை என்று உங்களுக்கு தெரியும். சைவக்குருக்கள் எனப்படுபவர்கள் பிராமணர்கள் இல்லை.

உ+மாக மரண கிரிகைகள் செய்பவர்கள் சைவக் குருக்கள்மார். அதேபோல 31ம்நாள்(அந்தியேட்டி)கிரிகைகள

  • தொடங்கியவர்

பார்ப்பனர்களிடம் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட சாதிப்பிரிவுகள் இருக்கின்றன. அதிலே மிகவும் உச்சியிலே இருக்கின்ற பிரிவு தாம்தான் உண்மையான பார்ப்பனர் என்று சொல்வது வழமை.

இதனால்தான் "சைவஐயர்" பற்றிய குழப்பம் வருகின்றது.

ஈழத்திலே "சைவஐயர்கள்" தங்களை "சைவக்குருக்கள்" என்று சொல்வார்கள். "சிவாச்சாரியார்கள்" தங்களை "பிராமணக் குருக்கள்" என்பார்கள்.

சிவாச்சாரியார்கள் தங்களை "பிராமணக் குருக்கள்" என்று சொல்வதால்தான், "சைவஐயர்கள்" பார்ப்பனர்கள் இல்லை என்ற கருத்து பல இடங்களில் இருக்கின்றது.

அதுவும் "பிராமணக் குருக்கள்மாரை" கேட்டால் தாம்தான் உண்மையான பிராமணர் என்று சொல்வார்கள். "சைவஐயர்" பிராமணர் இல்லை என்றும் சில நேரங்களில் சொல்வார்கள். இதனுடைய அர்த்தம் அவர்கள் "பிராமணக் குருக்கள்" இல்லை என்பதுதான்.

;இது எல்லாம் அவர்களுக்கு இடையில் இருக்கின்ற சாதிப் பிரச்சனையில் சொல்லப்படுபவை.

ஆனால் "சைவஐயர்கள்" பார்ப்பனர்களுக்குள் இருக்கின்ற நூற்றுக் கணக்கான சாதிகளில் ஒரு சாதியினரே!

இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். நான் அறிந்த தகவல்களின் அடிப்படையில்தான் இதை நான் சொல்கிறேன்.

என்றாலும் நீங்கள் நிறையப் பேர் வேறு விதமான கருத்தை தெரிவிப்பதால், இதை மேலும் ஆராய்ந்து பார்க்கிறேன்.

சபேசன்.. ஆரம்பத்திலேயே தவறு.. அந்திமக் கிரியைகளை நடாத்துபவர்கள் பிராமணர்களின் பிரிவினர் அல்ல. அவர்கள் 'சைவர்' அல்லது 'வீர சைவர்' என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் புலாலும் உண்பார்கள்.. காளி கோயில்களில் ஆடு வெட்டி அல்லது மீன் முட்டை அவித்து நடைபெறும் வேள்விகளிலும் அவர்கள்தான் பூசகர்கள்.

சம்பிரதாயங்களுக்கும் சாதிக்கும் தொடர்புகளில்லை. ஏனெனில் ஒவ்வொரு வகையான தொழிலாளர்கள் ஒவ்வொரு பெயர்களால் அழைக்கப்பட்டு.. அவை சமநநிலை இல்லாத சாதிகளாக உருவாக்கப்பட்டன. தொழீல்களுக்கு பின்பே சாதிகள் தோன்றின.

தமிழர் சமூகத்தில் ஒரு தொழிலை இன்னொரு சமூகத்தினர் செய்ய முன்வராத நிலையில்.. அந்தந்தத் தொழில்களை அதைச் செய்யும் பிரிவினரே செய்யவேண்டியதனால் இது ஒரு சாதியினரின் பொறுப்பாக்கப்பட்டிருப்பதா

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D அது தானே? அது எப்படி சாதியை மறைக்க குலத்தொழிலைக் கைவிடலாம்? தொழில் செய்யாதவிடத்து பொழுது போக்க உங்களைச் சரி சமமாக நடத்தும் பைபிள் காரரிடம் போய் வேறு சேருவீர்கள். உங்கள் மேல் சவாரி செய்த உங்கள் முன்னாள் மதம் பயணிகள் ஏறாத இபோச பஸ் போல வெறிச்சோடிப் போகவும் வைக்கிறீர்கள். நச்சென்று கேட்டீர்களே சோலியன், உங்களைப் போல "முற்போக்கு" மனிதர்கள் நாலு பேர் போதும் தமிழர்கள் உருப்பட. ஆனாலும் அந்த தெருவிளக்கு உடைப்பு, பெண் பிரச்சினை கொஞ்சம் உங்களுக்கே ஓவராகத் தெரியேல்ல? இது போன்ற மனித நடத்தைகள் வெள்ளாளருக்கு வரவே வராது போல! :D
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் சோழியன்

மீன் பிடித்தல், முடி வெட்டுதல், பறை, மேளம் அடித்தல் உற்பட்ட அனைத்துக் கலைளையும், ஒரு தகுதி காண், கல்வியாக்கும் பட்சத்தில் அது தொடர்பாக எல்லோரும் கற்றுக் கொள்ள முடியும்.

இன்று மிருதங்கம், பரதம் உற்பட்ட கலைகள் கூட, மதிக்கப்படும் நிலைக்கும், பேணப்படும் நிலைக்கும் வரக் காரணமாக அமைந்தது, இவைகள் தாம்.

------------

சில பைபிள் காரர்கள், மதம் கூவிக் கூவி விக்கின்றதற்கு யாழ்களத்திலும் திரிகினம் போல. சோழியன் என்ன விலை வரும் எண்டு பார்த்து, நல்ல விலை என்றால் இறங்கிடுங்கோ! ஆனால் பாருங்கோ, பைபிளைத் தூக்கினால், மதம் இல்லை என்று புளிச்சுப் போன ஏமாற்றுத் தத்துவத்தைச் சொல்லுகினம்.

யாழ்பாணத்தில் குருநகர் காரருக்கும், பாசையூர்காரருக்கும் இடையில் பிரச்சனை வாரதே அந்தக் கோதாரிக்காகத் தான்.

பரிசுத்த பிசாசு உங்களைக் காப்பாற்றட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சில பைபிள் காரர்கள், மதம் கூவிக் கூவி விக்கின்றதற்கு யாழ்களத்திலும் திரிகினம் போல. சோழியன் என்ன விலை வரும் எண்டு பார்த்து, நல்ல விலை என்றால் இறங்கிடுங்கோ! ஆனால் பாருங்கோ, பைபிளைத் தூக்கினால், மதம் இல்லை என்று புளிச்சுப் போன ஏமாற்றுத் தத்துவத்தைச் சொல்லுகினம்.

யாழ்பாணத்தில் குருநகர் காரருக்கும், பாசையூர்காரருக்கும் இடையில் பிரச்சனை வாரதே அந்தக் கோதாரிக்காகத் தான்.

பரிசுத்த பிசாசு உங்களைக் காப்பாற்றட்டும்.

1. தனிமனித அனுபவமாகிய மதம் இங்கே பகிரங்கப் பேசு பொருளாக மாறியதே உங்களால் தான். ஒவ்வோர் முறையும் சபேசன் ஒரு பிற்போக்குத் தனத்தைச் சுட்டிக் காட்டும் போதெல்லாம் "தொப்பி எனக்கே அளவு"என்கிற கணக்காய் நீங்கள் தான் குதிப்பீர்கள். சாதியினால் மக்கள் மதத்தை விட்டோடுகின்றனர் என்று சிலர் மீண்டும் மீண்டும் இங்கே சொல்லும் போதெல்லாம் அவர்களை ஏற்றுக் கொள்ளும் மதத்தையும் உங்கள் மதத்தை விட்டோடுவோரையும் மட்டுமே பிழை என்பீர்கள். சாதியைத் தலையிலிருந்து இறக்கி வைக்க மறுக்கும் நீங்கள் தான் அர்த்தமுள்ள ஒரு மதத்தை சாதியம் போன்ற சில்லறைச் சம்பிரதாயங்களில் சிறைவைத்து ஒரு பிற்போக்கு மதமாக அடையாளப் படுத்துகிறீர்கள்.மற்றபடி எந்த மதமும் வியாபாரப் பொருளல்ல, கூவிக் கூவி விற்கவும், அல்லது விட்டுட்டுப் போறானே போறானே என்று அழவும்.

2. "பரிசுத்த பிசாசு?"- பரிசுத்த ஆவி என்பது கிறிஸ்தவர்களின் புனித கொள்கைகளில் ஒன்று. தனிமனித கோபங்களை ஒரு மதத்தை இழித்துரைக்கும் அளவுக்குக் கொண்டுவந்திருப்பது குறித்து வருந்துகிறேன். இந்துக் கடவுளரைப் பிசாசுகள் என்று அழைக்கும் கிறிஸ்தவக் குழு உறுப்பினர்களை என் வீட்டிலிருந்து விரட்டியிருக்கிறேன். அது என் மற்றைய மதங்கள் பற்றிய மதிப்பின் அடையாளம். நீங்கள் இப்போது கூறியிருப்பது உங்கள் தனிப்பட்ட நாகரிகத்தின் அடையாளம் என்று எடுத்துக் கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

"சைவஐயர்" அல்லது "வீரசைவர்" பிரிவானது பார்ப்பன சாதிக்குள் அடங்காது என்று இங்கே பலர் சொன்னதனாலும், நானும் பல இடங்களில் விசாரித்துப் பார்த்தேன்.

பார்ப்பனர்களுக்குள் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்தப் பிரிவுகளில் ஒன்றுதான் "சைவஐயர்கள்" என்பவர்களும்.

நான் சில பார்ப்பனர்களை "சைவஐயர்கள்" பற்றிக் கேட்ட பொழுது, அவர்கள் உடனடியாகச் சொன்ன பதில் "சைவஐயர்கள் பிராமணர்கள் இல்லை" என்பதுதான்.

என்னுடைய அடுத்த கேள்வி: அப்படியென்றால் "சைவஐயர்கள்" எந்த வர்ணத்திற்குள் அடங்குவார்கள்?

அதாவது இந்த மத வேதங்களும், சாத்திரங்களும் சொல்கின்ற நால்வகை வர்ணத்திற்குள் "சைவஐயர்கள்" எதற்குள் அடங்குவார்கள் என்பதாக என்னுடைய கேள்வி அமைந்தது.

அதன்பிறகுதான் அவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

"சைவஐயர்களும் (வீரசைவர்) பிராமணர்கள்தான், ஆனால் பிராமணர்களுக்குள் அவர்கள்தான் மிகவும் தாழ்ந்த சாதி"

இப்படிக் கடைசியாக "சைவஐயர்கள்" என்பவர்களும் பார்ப்பனர்கள்தான் என்று ஒத்துக் கொண்டார்கள்.

இங்கே பிரச்சனை இதுதான். பார்ப்பன வர்ணத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், தமது வர்ணத்திற்குள்ளேயே உள்ள மற்றைய பிரிவுகளை "உண்மையான" பார்ப்பனர்களாக ஒத்துக்கொள்வது இல்லை. சற்றுத் துருவிக் கேட்டால்தான் உண்மையை சொல்வார்கள்.

இதிலே இன்னும் ஒரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும்

சைவ சமயத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் யாரும் உண்மையான பார்ப்பனர்கள் இல்லையாம். வைணவத்தில் இருப்பவர்கள் மட்டும்தான் உண்மையான பர்ர்ப்பனர்களாம்.

சைவத்தில் இருப்பவர்கள் "வேளாளர்கள்" என்றும் வைணவத்தில் இருப்பவர்கள்தான் உண்மையான "பிராமணர்கள்" என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு பெரும் சர்ச்சை நடந்தது.

இப்படி இந்தப் பார்ப்பன வர்ணத்திற்குள் நிறையக் குத்துவெட்டுகள் இருக்கின்றன.

ஆகவே நீங்கள் "சைவஐயர்" பற்றி ஒரு பார்ப்பனரிடம் கேட்கும் போது, "சைவஐயர்" எந்த வர்ணத்திற்குள் அடங்குவார் என்றும் கேளுங்கள். அப்பொழுதுதான் உண்மையான பதில் கிடைக்கும்.

பார்ப்பனர்களில் மாமிசம் சாப்பிடும் பல பிரிவுகள் உண்டு. ஒரு காலத்தில் அனைத்துப் பார்ப்பனர்களுமே மாமிசம் சாப்பிட்டவர்கள்தான். அதிலே சில பிரிவுகள் இப்பொழுதும் மாமிசம் சாப்பிடுகின்றார்கள். இதை வைத்து நாம் எதையும் முடிவு செய்ய முடியாது.

தற்பொழுது "சிவாச்சாரியார்கள்" எனப்படுகின்ற பிரிவும் சாவுவீட்டுச் சடங்குகளுக்கு செல்கின்றது. மனைவியை இழந்த சிவாச்சாரியார் கோயிலில் பூசை செய்ய முடியாதாம். அந்த நிலையில் அவர்களும் சாவுவீட்டுச் சடங்குகளுக்கு செல்கின்றார்கள்.

இதிலே முக்கியமானது ஒன்றுதான்.

பார்ப்பனர் என்பது பல உட்பிரிவுகளைக் கொண்ட ஒரு வர்ணம்.

நான்கு வர்ணங்கள் உண்டு.

பார்ப்பனர்

சத்திரியர்

வைசிகர்

சூத்திரர்

இந்த நான்கு வர்ணத்தில் "சைவஐயர்" எனப்படுபவர்கள் பார்ப்பன வர்ணத்திற்குள்தான் அடங்குகிறார்கள். சில உயர்சாதிப் பார்ப்பனர்கள் இதை மறைக்க முயன்றாலும், இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாத்தீகர்களுக்கு ஏன் தேவையில்லாத ஆராய்ச்சி?

இவர்கள் கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதை ஆய்வு செய்வதற்கே பொருத்தமானவர்கள்.

ஒரு சிலர் இங்கே இந்துமதத்தை எப்படி அழித்தொழிக்கலாம் என சிந்தித்துக்கொண்டிருக்கும் போது அங்கே சிங்களவன் எமது மண்ணில் மூலைக்குமூலை கிராமத்திற்குகிராமமாக வெளிநாட்டு பணத்தின் உதவியுடன் புத்தவிகாரைகளை புதிதாக உருவாக்கி வருகின்றான்.

நான் புத்த மதத்திற்கு எதிரானவன் அல்ல.இருப்பினும் அதனை பலாத்காரமாக திணிப்பதுதான் அதுவும் அரசியல் லாபத்திற்க்காக செய்வதுதான் கொடுமையாக உள்ளது?

என் மனதை அதிகம் பாதித்த விடயம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில் புத்தவிகாரையை புதிதாக புகுத்தியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் ஐயர் அல்லது குருக்கள்

ஓரிரு பரம்பரை மாமிசம் உண்ணாமல் இருந்து அவர்கள் தீட்சை பெற்று குருக்கள் ஆகலாம். ஆனால் அவர்கள் மந்திரம் கற்றுக்கொள்ளமுடியாது. இவர்களுக்கு தொழில் மரண கிரிகைள் செய்வது அங்கு கவனித்தால் மந்திரம் ஒன்றும் சொல்வதில்லை என்பது உங்களுக்கு தெரியும் ஆனால் இவர்கள் பிராமணர்கள் இல்லை. இவர்கள் பூசையும் செய்வார்கள் காவல் தெய்வங்களுக்கு அங்கும் மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை.

  • தொடங்கியவர்

நடா,

நீங்கள் சொல்கின்ற, நம்புகின்ற "பிராமணர்கள்" அவர்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் "பிராமணர்களாக" நினைப்பவர்கள் மட்டும்தான் பார்ப்பனர்கள் என்று இல்லை.

பார்ப்பனர் என்பது ஒரு வர்ணம். பல நூற்றுக் கணக்கான உட்பிரிவுகளைக் கொண்ட ஒரு வர்ணம்.

நீங்கள் "பிராமணர்கள்" என்று நம்புபவர்களைக் கேட்டால், அவர்களும் சைவஐயர்கள் "பிராமணர்கள்" இல்லை என்றுதான் முதலில் சொல்வார்கள்.

ஈழத்தில் சிவாச்சாரியார்களை மட்டும்தான் "பிராமணக் குருக்கள்" என்று அழைப்பார்கள். சைவஐயர்களை பிராமணக் குருக்கள் என்று அழைப்பது இல்லை.

அதனால் நீங்கள் "சைவஐயர்களை" பிராமணர்கள் இல்லை என்று நம்புகின்றீர்கள்.

ஆனால் அது தவறு

நீங்கள் எந்த ஒரு பார்ப்பனரை என்றாலும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் எடுத்தவுடன் "சைவஐயர்கள்" பிராமணர்கள் இல்லை என்று பதில் சொல்லி, பின்பு வர்ணம் பற்றி விசாரிக்கும் போது ஒத்துக் கொள்வார்கள்.

அப்படி அவர்கள் பார்ப்பனர்கள் இல்லை என்றால், அவர்கள் எந்த வர்ணத்திற்குள் அடங்குவார்கள்?

இந்தக் கேள்விக்கு உங்களுடைய பதில் என்ன?

"பார்ப்பனர்கள் இல்லை" என்று மீண்டும் மீண்டும் சொன்னால் போதுமா? அவர்கள் எந்த வர்ணத்தில் வருவார்கள் என்று சொல்ல வேண்டாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.