Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு பிரிட்டன் ஆயுதத் தடை அரசின் நடவடிக்கையில் அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Thu Jan 17 9:50:00 2008

பிரிட்டிஷ் நாடாளுமன்றில் இன்று இலங்கை விடயம் எதிரொலிக்கும்

இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கான பிரிட்டனின் உதவிகள் குறித்து இன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படவுள்ளது.

பிரிட்டனின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் கீயுஸ் இது குறித்து சபை ஒத்திவைப்பு வேளையின்போது கேள்வி எழுப்பவுள்ளார்.

கடந்த வாரம் இலங்கை நிலைவரம் குறித்து இவர் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதன்போது பதிலளித்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாதமை குறித்துத் தமது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார். (சி)

http://www.uthayan.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நாடாளுமன்றில் ஈழப்பிரச்சினை தொடர்பாக விவாதம்

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற இருக்கின்றது.

தாராண்மைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழப்பிரச்சினையில் அதிக கவனம் செலுத்தி வருபவருமான சைமன் ஹியூஸ் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த ஒத்திவைப்பு விவாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கை நேற்றுடன் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஈழப்பிரச்சினையை அமைதி முறையில் தீர்பதற்கு பிரித்தானியா எந்த வகையில் பங்காற்றலாம் என்பது தொடர்பாக இன்றைய விவாதத்தில் ஆராயப்பட இருக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈழப்பிரச்சினை தொடர்பான விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெறவிருந்த போதிலும், அது இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டிருந்தது.

2006ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஈழப்பிரச்சினை தொடர்பான விவாதத்தில் அப்போதைய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச்செல்வனை பிரித்தானிய நாடாளுமன்றுக்கு அழைத்து ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக கேட்டறிய வேண்டும் என்ற கோரிக்கை ஈழப்பிரச்சினை தொடர்பான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் முன்வைக்கப்பட்டிருந்தது.

போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகியுள்ளதால், அனைத்துலக மட்டத்தில் ஈழத்தமிழ் மக்களிற்கு ஆதரவான நிலை தோன்றி வருவதால், பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

நேற்று நடந்த விவாதம் நன்றாக இருந்தது அமைச்சர்கள் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 18-01-2008 01:30 மணி தமிழீழம் [மயூரன்]

போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

இன்று இலண்டன் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் (Simon Huges) சைமன் ஹியூஸ் அவர்களால் கொண்டுவரப்பட்ட, ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய,பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலக அமைச்சர் (Kim Howells) கிம் ஹொவொல்ஸ போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்

கொண்ட சிறீலங்கா அரசாங்கம், அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

''படைவழியில் இனப்பிரச்சினைக்கு ஒருபொழுதும் தீர்வு காணமுடியாது என்பது எமது தெளிவான நிலைப்பாடாகும்.

வன்முறைகளுக்கு முடிவு கட்டி, அமைதி வழியில் இனப்பிரச்சினைக்கு

தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் குறிப்பாக

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்து, அவர்களின் சந்தேகங்களை நீக்கி, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்

வகையில் சிறீலங்கா அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கம் ஊடாக, அரசியல் தீர்வை ஏற்படுத்துவது கடினமான பணி என்பதை நாம் அறிவோம்.

அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகள் சபையின் செயற்பாடுகளும் கடினமானவை என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் சபையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்ளத் தவறியதன் மூலம், சிறீலங்கா அரசாங்கம் பெரும் தவறிழைத்துள்ளது.

இனிவரும் காலங்களில், போலியான நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என நாம் நம்புகின்றோம். வன்முறைகள் ஊடாக பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் சிலர் கருதினால், அது தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் கருத்தாக அமையாது. எனவே, சனநாயக வழிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் நாம் அழைப்பு விடுக்கின்றோம் அமைதி வழியில் தமது இலக்குகளை அடைவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட வேண்டும் அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து, பகிரங்கமான விவாதம் ஒன்றை நடத்துவதற்கு

இடமளிப்பதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வர வேண்டும்.

போர்நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்துள்ள பொழுதும், இருதரப்பும் புதிய போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு முற்பட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான மூல காரணங்களை இனம்காண்பதன் ஊடாகவே, நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

எவ்வாறாயினும், மனிதநேயப் பணிகளுக்கான உதவிகளைத் தவிர, வேறு எந்த படைத்துறை உதவிகளையும் சிறீலங்கா

அரசாங்கத்திற்கு நாம் வழங்க மாட்டோம்.||

இவ்வாறு பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலக அமைச்சர் கிம்ஹொவெல்ஸ் அவர்கள், தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

பிரிட்டிஷ் நாடாளுமன்றில் இன்று இலங்கை விடயம் எதிரொலிக்கும்

வெறும் எட்டுப் பத்து பேர் வெறுமையான நாடாளுமன்றில் பேசிய போது சுவரில் பட்டு எதிரொலித்தது!

Edited by சாணக்கியன்

ஒருவரோ, இருவர் கதைத்தார்களோ? அது முக்கியமல்ல! இந்த நாட்டு பாராளுமன்றத்துக்கு ஒரு விடயம் எடுக்கப்படுவதென்பது சும்மா காரியமல்ல! முதலில் அதை புரிய வேண்டும்! இது என்ன இலங்கை/இந்திய பாராளுமன்றங்களோ? கண்ட குப்பை கூழாங்களையெல்லாம் கக்கித் துப்ப!!

சர்வதேச ஓட்டத்துக்கு அப்பால் பிரித்தானிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை நாம் நன்றியுடன் நினைவு கோர வேண்டும்

1) அழுத்தங்களுக்கு மேல் மாவீரர் நாள் மிக சிறப்பாக நடைபெற அனுமதித்தது!

2) மாவீரர் வாரத்தில் பிரித்தானியாவிற்கான ததே செயற்பாட்டாளர் விடுதலை!

3) இலங்கை/இந்திய அரசுகள் மட்டுமல்லாது அமெரிக்க அரசின் அழுத்தங்களையும் மீறி பிரித்தானியாவில் வென்புறாவின், எமது தொப்புள்கொடி உறவுகளுக்கான செயற்பாடுகள்!

நாங்கள் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமானாலும், "எறும்பூர கற்குளியும்"!! சிறிய முயற்சிகளை தலர விடக்கூடாது!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரோ, இருவர் கதைத்தார்களோ? அது முக்கியமல்ல! இந்த நாட்டு பாராளுமன்றத்துக்கு ஒரு விடயம் எடுக்கப்படுவதென்பது சும்மா காரியமல்ல! முதலில் அதை புரிய வேண்டும்! இது என்ன இலங்கை/இந்திய பாராளுமன்றங்களோ? கண்ட குப்பை கூழாங்களையெல்லாம் கக்கித் துப்ப!!

நாங்கள் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமானாலும், "எறும்பூர கற்குளியும்"!! சிறிய முயற்சிகளை தலர விடக்கூடாது!!!

உண்மை தான். நான் பார்க்கும் போது பாராளுமன்றத்தில் ஒரு சிலர் தான் இருந்தனர்(10-20). ஆனால் வீடியோவில் பலர் பார்த்திருப்பார்கள்.

எமது தலையீட்டை சிறிலங்காவில் உள்ள சிலர் விரும்புவதில்லை. அமைதியை எவ்வாறு முன்நகர்த்துவது என்பது தொடர்பாகவே எமது தலையீடுகள் இருக்கும். அதில் எமக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இலங்கைக்கு எந்தவித இராணுவ தளபாடங்களையோ ஆயதங்களையோ பிரிட்டிஷ அரசு வழங்கமாட்டாது.' இவ்வாறு பொதுநலவாய வெளிவாவகார அமைச்சர் கிம் கவுலஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ நாடளுமன்றில் நேற்று முன்தினம் அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தவை வருமாறு

இலங்கையில் சமீபத்தில் இடம் பெற்ற பஸ் தாக்குதலின் போது சுமார் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் வன்முறைகள் ஆரம்பமாகி இருப்பதற்கான உதாரணம் இது. இலங்கையில் சமாதானத்தை உருவாக்க சாவதேச சமூகம் தொடர்ந்து முயற்சிளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கக் கூடிய சமாதான சூழலை உருவாக்கவும் சர்வதேச சமூகம் உதவவேண்டும்.

இலங்கையின் தற்போதைய அரசமைப்பில் சிறுபான்மை இனத்தவர்களை பாதுகாப்பதற்கு உள்ள ஏற்பாடுகளை விட முன்னேற்றகரமான யோசனைகள் சர்வகட்சிக் குழுவின் யோசனைகளில் இடம் பெற வேண்டும்.

துணிச்சலாகவும் தைரியத்துடனும் செயற்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நேர்மையான யோசனைகளை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதியைக் கேட்டுள்ளோம்.

விடுதலைப் புலிகள் வன்முறைளைக் கைவிட்டு ஜனநாயகக் கொள்கைகளுக்கான உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். அப்படியான சந்தர்ப்பத்திலேயே அவர்கள் சர்வதேச அளவில் நியாயமான அமைப்பாக கருதப்படுவர்கள்.

ஐக்கிய இலங்கைக்குள் தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்பதனாலேயே இராணுவ வழிமுறை ஊடாக சுயநிர்ணய உரிமையை அடைய முயல்வதாக தமிழர்கள் தெரிவிக்கன்றனர். இலங்கை அரசு அவர்களது இந்த அச்சத்தைப் போக்க முயல வேண்டும்.

அதிகாரப்பகிர்வுக்காக முன்வைக்கப்படும் எந்த யோசனையையும் பெற்றுக் கொள்ளக் கூடிய நேர்மையான நல்லெண்ணத்துக்கான அறிகுறியையும் இலங்கை அரசிடம் இருந்து காணவில்லை. இதே போன்று தமிழ் மக்களும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு மாற்றீடு குறித்தும் சிந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். நம்பிக்கையை ஏற்படுத்தாமல் இது சாத்தியமல்ல.

இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெளியேறியமை மனித உரிiமை மற்றும் மனிதாபிமான நிலை குறித்த கவலையை அதிகரிக்கச் செய்கின்றது. இலங்கையில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்புக்குழு நிலை கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். பிரட்டிஷ் நாடாளுமன்றில் ஏனைய உறுப்பினர்களும் இது மிகவும் முக்கியமான கொள்கை என்பதால் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இலங்கைiயில் மனித உரிமைகளுக்காக போராடுகின்றவர்களை நிந்திக்கும் சிலர் சொல்வது போல அந்த நாட்டின் மனித உரிமை நெருக்கடி சர்வதேச சமூகத்தின் கற்பனை அல்ல. அது உண்மையானது. விடுதலைப்புலிகள், அரசாங்கம், கருணா பிரிவு என அனைவரும் இதற்கு காரணம். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் அதிலிருந்து இலகுவாக தப்பிக்கக்கூடிய சூழ்நிலைக்கு முடிவு காணவேண்டும்.

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் காண்காணிப்பகத்தின் பிரசன்னத்திற்கான தேவைகள் அதிகரித்துள்ளன.

இலங்கைத் தமிழ் மக்கள் பிரிட்டனின் எந்தப் பகுதியிலும் சட்டபூர்வமாக ஒன்று கூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்தலாம். இலங்கையை இரண்டாகப் பிரிப்பதற்கு பதில் வேறு எந்த் தீர்வு சாத்தியம் என்பது குறித்து தமிழ் சமூகத்திற்குள் திறந்த விவாதம் அவசியம்.

பாகிஸ்தான், பங்களதேஷ், உருவாக்கத்;தின் போது இடம் பெற்றது போன்று மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழக்கலாம். இலங்கையில் இந்த நிலை ஏற்படுவதை நாம் விரும்பவில்லை.

மோதலுக்கான அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணப்பட்டாலே நிரந்தர சமாதானம் சாத்தியம். வன்முறைகளைத் தொடர்வதன் மூலம் எதுவும் சாதியமில்லை என்பதை சம்பந்தப்பட்வர்கள் உணரும் வரை சமாதானம் சாத்தியமில்லை.

இலங்கையிலுள்ள சிலா எமது பங்களிப்பை விரும்பவில்லை. அவர்கள் எமது நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது விரும்பவில்லை என்பது குறித்துக் கவலையடைகிறேன். எங்களுக்கு வேறு நோக்கமில்லை. சமாதானத்தைத் தேடும் முயற்சிகளில் உதவ நாம் தயாராக உள்ளோம்.

இந்த சவாலான நேரத்தில் நாங்கள் என்ன செய்யலாம் என என்னிடம் பல தடவைகள் கேட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்பதை உணர்த்துவதற்காக சர்வதேச சமூகங்களுடன் இணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

நன்றி சுடர் ஒளி

உதவுகிறோம் என்று உள்நுழைந்து உபத்திரவம் கொடுக்கும் நாட்டினர். பரவாயில்லை என்று மூக்கை நுழைக்கட்டும் என்றுவிட்டால் அரசினால் மூக்குடைபட்டு நிற்கிறார்கள். அந்த உடைவிற்கு கட்டுப்போடத்தான் இவ்வளவு தாஜாவும். ஆனாலும் படைத்தளபதிகள் வருவார்கள் ஆலோசனை வழங்குவார்கள், ஆயுதங்களும் வழங்குவார்கள்.

உதவுகிறோம் என்று உள்நுழைந்து உபத்திரவம் கொடுக்கும் நாட்டினர். பரவாயில்லை என்று மூக்கை நுழைக்கட்டும் என்றுவிட்டால் அரசினால் மூக்குடைபட்டு நிற்கிறார்கள். அந்த உடைவிற்கு கட்டுப்போடத்தான் இவ்வளவு தாஜாவும். ஆனாலும் படைத்தளபதிகள் வருவார்கள் ஆலோசனை வழங்குவார்கள், ஆயுதங்களும் வழங்குவார்கள்.

ஆர்விரும்பாட்டத்தானென்ன... மதியார் வாசல் மிக்கப்படாதென்று தெரியாதுபோலகிடக்கு. சுய நலத்தோட தலையிட்டா யார்தான் விரும்புவாங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா கொஞ்சம் முந்திதானே சிறிலங்கா அரசு அறிக்கைவிட்டது சர்வதேச சமுகம் அனைவருக்கும் தாங்கள் ஏன் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறினதெண்டு விளக்கமாய் சொல்ல அவையளும் ஏத்துக்கொண்டவையெண்டு. இவையள் என்ன அந்தக்கூட்டத்திலை தூங்கிவிட்டினமே, திடீரெண்டு குண்டைதூக்கிபோடுகினம்.

இதே போன்று தமிழ் மக்களும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு மாற்றீடு குறித்தும் சிந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

சொன்னது சரி தமிழ்மக்களை இவனுகள் என்ன ஆடுமாடு எண்டே நினைக்கிறானுகள், சுயநிர்ணய உரிமையை நாங்கள் விட்டுக்குடுக்கிறதுக்கு. இருந்திருந்து மடியிலையெல்லே இப்ப கைவைக்கினம்.

கருணாவை பிடிச்சு வைச்சு அவனுக்கு என்ன நடக்குது எண்டு ஆருக்காவது தெரியுமே. புது ஐ.டி குடுத்து வேறை ஒரு இடத்திலை அரச செலவிலை கண்காணாத இடத்திலை இராஜபோகத்தோடை குடிவைக்கிற பிளானும் நான் கேள்விபட்டிருக்கிறன். வெளியுலகத்துக்கு கைதுசெய்து சிறைவைக்கிறமாதிரி காட்டி சனங்களின்ரை மத்தியிலையிருந்து ஆளை அப்புறப்படுத்தி பிறகு கண்காணாத இடத்திலை விஐபி மாதிரி ஆட்கள் எத்தனைபேரை இங்கிலாந்திலை குடிவைச்சிருக்கினம்.

ஒரு பொலோ அப் செய்யிற மாதிரி கருணாவிடை இங்கிலாந்து வழக்கு சமாச்சாரம் எப்பிடி இருக்கெண்டு என்னைப்போல பொதுசனங்கள் அறியிறதுக்காவது யாழ்களத்திலை விசயம் தெரிஞ்சவை ஒரு தலைப்பு தொடங்கி அப்பப்ப செய்திகளை போஸ்ட் பண்ணினால் எப்பிடியிருக்கும்?

கருனாவின் களிவறைக்குக் கூட ஆங்கில காவல்த்துறை பாதுகாப்புக்குடுக்குதாம். அது சரி புலிகள்தான் ஏற்கனவே தமது இடைக்கால அறிக்கை வடிவில் தமது தெரிவைச்சொல்லீட்டீனம்தானே... பிறகேன் தழர்கள் மாற்றுத்தீர்வை முன்வைக்கவில்லை எண்டும் அப்பிடி இப்பிடி என்று சும்மா உலம்புறார்?

அந்த திட்டம் வைத்தது தெரியாதோ அல்லது அது விருப்பமில்லையோ? அல்லது வேனுமெண்டுதானோவுந்தெரியாது.

இலங்கை தனது காலனித்துவ ஆதிக்கத்திலேயே தற்போதும் இருப்பதாக பிரித்தானியா கற்பனை உலகில் மிதப்பதாக ஜே.வி.பி.யின் விமல் வீரசன்ச விசனம் தெரிவித்தார்.

பிரிடிஷ் பாராளுமன்றில் இலங்கை நிலவரம் தொடர்பாக நடைபெற்ற விவாதம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை அரசு தற்போதைய தேவை கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து விடுவித்தது போல வடமாகணத்தையும் விடுவித்து அங்குள்ள தமிழ் மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் இதுவே பிரதான தெரிவாகும். சர்வதேசத்தின் அழுத்தங்களை நாம் நிராகரிக்க வேண்டும் பிரித்தானியா பாராளுமன்றில் நடைபெற்ற இலங்கை பற்றிய விவாதத்தை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

எமது நாடு இன்னும் அவர்களின் காலனியாக உள்தென்ற கற்பனை உலகில் அவாகள் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.

போர் நிறுத்த உடன்படிக்கை இரத்து செய்யபட்டமை தேசப்பற்றாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். பிரித்தானியாவின் அழுத்தத்திற்கு உட்பட்ட மற்றுமொரு ஒப்பந்தம் எமக்கு அவசியமில்லை. அதனை ஜே.வி.பி எதிர்க்கிறது.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனையை பின்பற்ற வேண்டிய தேவை நாட்டுக்கு அவசியமில்லை. பிரித்தானியா இது பற்றி எமக்கு அறிவுரை கூறத்தேவையில்லை. அவாகள் தமது வேலையைப் பார்ததுக் கொண்டால் மாத்திரம் போதுமானது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் எம்மீது திணிக்கபட்டது. அது வெற்றியளித்ததா? பிரச்சனையை தீர்க்க உதவியதா? எமது பிரச்சினையை எவ்வாறு, எப்படித் தீhக்க வேண்டுமென்பதை இலங்கையர்கள் அறிந்துள்ளனர். எவருடைய உபதேசங்களையும் நாம் இரந்து கேட்கவில்லை என்றார்.

நன்றி : தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-01-20

பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்து; எழுந்துள்ள மூன்று கேள்விகள்

இலங்கையில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு சர்வதேச சமூகம் முயல வேண்டும். பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவுல்ஸ் இந்தக் கருத்தை (கோரிக்கையை என் றும் கொள்ளலாம்) பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கின்றார்.

நோர்வேயின் அனுசரணையின் கீழ் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுத லைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர னுக்கும் இடையில் ஆறு வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ஒப்பந்தம் அரசாங்கத்தினால் முறிக்கப் பட்டுவிட்டது.

அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு அரசு ஆலோசிக்கத் தொடங்கிய காலத்திலேயே, அத னைத் தொடர்ந்து வேகம் கொள்ளத்தக்க பெரும் போர் குறித்தும், அதனால் உண்டாகக் கூடிய மனிதப் பேரவ லங்கள் குறித்தும் சர்வதேசங்கள் உட்பட பல தரப்புக ளும் எச்சரித்திருந்தன.

ஆனால் அவை யாவும், செவிடன் காதில் ஊதிய சங்கொலியாயிற்று. தனது படைப்பலம் கொண்டு தமி ழர்களை ஒழித்து, அடக்கி ஒடுக்கி, உப்புச் சப்பற்ற கீழ் மட்ட அரசியல் தீர்வு ஒன்றை உயர்த்திக் காட்டி அவர் களைத் தன் காலடியில் விழச் செய்து அடிமைகளாக்க வேண்டும் என்ற பேரினவாதப் பேராண்மை வாத அத் திவாரத்திலேயே அரசு எழுந்து நிற்கின்றது.

அதனால், இந்தியா உட்பட சர்வதேசம் என்ன, எங் கிருந்து கோரிக்கை அல்லது வேண்டுதல் அழுத்தம் வந்தாலும் அதனைப் புறக்கணித்துத் தள்ளி, நினைத் ததைச் செய்யும் எவரையும் பொருட்படுத்தாத போக்கை அரசு கையில் எடுத்தது.

மொத்தத்தில் தான் நினைத்ததைச் செய்வதைத் தடுப்போரும் இல்லை, எவருக்கும் செவிசாய்க்கப் போவதுமில்லை என்ற ஆணவப் போக்குடனேயே அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண் டது.

அதுமட்டுமல்ல. போர் நிறுத்தத்தைத் தான் முறித் துக் கொண்ட பின்னர், இப்பத்தியில் நேற்றுக் குறிப் பிட்டதுபோல, சர்வதேச சமூகம் சற்று அடக்கி வாசித்ததை அவற்றின் மெத்தனப் போக்கை தனது செயலுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் ஆதரவாகவும் அர்த்தப்ப டுத்திக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.

பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே இருண்டுவிட்டதாக நினைத்துக் கொள்வதாக ஒரு முதுமொழி. அந்த நிலையில் நின்று தன்னைத் தட்டிக் கேட்க எவரும் இல்லை என்ற அகங்காரத்தில் திளைத் திருக்கிறது மஹிந்த அரசு.

அதன் வெளிப்பாடே, நாம் இப்பத்தியில் நேற்று எடுத் துக் காட்டிய ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர் சன யாப்பாவின் விளங்காத் தன்மை கொண்ட கூற்று.

அமைச்சர் கொழும்பில் கருத்து வெளியிட்ட அதே நாளில், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவுல்ஸ் தமது நாட்டு நாடாளுமன்றத்தில் அதற்கு நேர் மாறான கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

அவர், புதிய போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்கு மாறு சர்வதேசத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, இலங்கை நடந்துகொண்ட செயற்பட்ட விதம் குறித்து சர்வதேசம் அதிருப்தி அடைந்துள்ளது என்பத னையே வெளிப்படுத்துகின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்தை அவ்வாறு கொள்வது பொருத்தமானதே.

சிங்களப் பேரினவாத, இனவாதக் கடுங்கோட்பாட்டா ளர்களின் வலையில் சிக்கி, அவர்கள் சுழற்றும் நூலில் ஆடும் பொம்மையாகத் தவிக்கும் அரசின் கோலம் பரிதாபத்துக்குரியது என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் அதுவும் தமிழினத்தை ஒடுக்கவேண்டும் என்ற பேரின வாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டையே.

ஆகையால் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின் கருத்து மஹிந்த அரசின் சபையில் ஒரு போதும் ஏறாது என்பதில் எவரும் ஐயம் கொள்ள இடமில்லை.

எனினும்

பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்து சர்வதேசத்துக்குரிய அழைப்பு வெளி உலகின் கண்களைத் திறப்பதற்கு ஓர் எடுகோள் ஒரு சிறிய தொடுகை எனக் கொள்ளலாம். பிரிட்டிஷ் அமைச்சர் சொல்லில் கூறியதை அவரும் அவரது அரசும் முன்னெடுக்க மனதாரச் செயற்பட்டால், இலங்கை அரசுக்குச் சர்வதேச அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்பதனை நிராகரிக்கவும் முடியாது.

மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த முடியாத இலங்கை என்ற கறுப்பு முத்திரை மட்டுமன்றி மற்றும் பல துறைகளிலும் பல விதங்களிலும் சர்வதேச மட்டத்தில் தான் தாழ்ந்து போய்க் கிடப்பதை அரசு பூசி மெழுக முயற்சிக்கலாம். ஆனால் முந்திய நாள்கள் போன்று அது இலகுவானதன்று.

இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதப் பேர ழிவையும் போரழிவையும் தடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் அக்கறையுடன் செயற்படுமானால்

அரசாங்கத்துக்கு அரசாங்கம் நல்லுறவு ஒத்துழைப்பு என்ற ராஜீக விதிகளையும் தமது சொந்த வர்த்தக மற்றும் பூகோள அரசியல் நலன்களையும் முன்னிறுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இலங்கைத் தீவில் ஒரு உகந்த தீர்வைக் கொண்டு வரு வதற்கு சர்வதேச சமூகம் உதவமுடியும்.

ஆனால் அது நடைமுறைச் சாத்தியமானதா, இலகுவானதா, குறுகிய காலத்தில் கைக்கு வரக்கூடியதா என்பதே எழுந்து நிற்கும் முக்கிய மூன்று வினாக்கள்!

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமோர் தடவை சிறிலங்கா அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டவே வேண்டாம்.

சர்வதேச அழுத்தங்களுக்காக ஒப்பந்தமொன்று ஏற்படும் பட்சத்தில் எங்கள் அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் அண்ணா அண்மையில் கூறியதுபோல் 2002-ஒப்பந்தத்தை சொல்லுக்குச்சொல் கடைப்படிக்க விடுதலைப்புலிகள் இன்றும் தயாராயிருக்கின்றனர் என்பதுதான் தொடர்ந்தும் தமிழ்தரப்பினரின் வாதமாயிருக்கவேண்டும். அத்துமீறி ஆக்கிரமித்த தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து சிறிலங்கா அரசபடை 22.02.2002க்கு முன்னிருந்த நிலைகளுக்கு திரும்பி முழு அளவிலான வாபஸ் பெறாதபட்சத்தில் இனிமேல் தமிழர் தரப்பு ஒப்பந்தங்களைப்பற்றி பேச்சே எடுக்கக்கூடாது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மாதிரிச் செய்திகள உவங்கள் சிங்களத்தில விடுகினமா அல்லது இங்கிலீசில விடுகினமா எண்டு தெரிய இல்ல. தூதராலயங்களில போய் தலையச் சொறிஞ்சுகொண்டு நிப்பினம். வெளியில வந்து சிங்கள மக்களிட்ட வாய்ச் சவடால் விடுவினம். தற்செயலாக ஆட்சிக்கு வந்தால் கடன் கேட்டும் உதவிகேட்டும் நக்கரைக்கக்குள்ள இந்தமாதிரியெல்லாம் தங்களச் சந்திக் வாற பிரதிநிதியளிட்டச் சொல்ல ஏலுமே. வெளியில இருந்து கொண்டு அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து ஆட்டுவிவக்கக்குள்ள மட்டும்தான் இப்பிடியெல்லாம் அறிக்கைவிட முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.