Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொனராகல பகுதியில் 2000 சிங்களக் குடும்பங்கள் இடப்பெயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 20-01-2008 15:18 மணி தமிழீழம் [முகிலன்]

மொனராகல பகுதியில் 2000 சிங்களக் குடும்பங்கள் இடப்பெயர்வு

மொனராகலக பகுதில் இருந்து இரண்டாயிரம் சிங்களக் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களின் முன்னர் நடந்த தாக்குதல்களை அடுத்தே பாதுகாப்பு அச்சுறுத்தலை எழுந்துள்ள நிலையில் இவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

தமிழர்கள் பட்ட வேதனைகளையும் வலிகளையும் சிங்கள மக்களும் உணரும் காலம் ஆரம்பமாகிவிட்டது.

அவலங்கள் முழுமட்டத்திலும் நிகழும்போதே தீர்வுபற்றிய தேவை உருவாகும்.

முழுமட்டத்தில் உருவாகும் அவலங்கள் தமிழருக்கு சார்பான தீர்வாக இருக்கப் போவதில்லை. அங்கீகாரம் கொண்ட அரசு ஒன்று உருவாக்கும் அவலத்திற்கு சர்வதேசம் இதுவரை கொடுத்த இனியும் கொடுக்கும் பதில் தீர்வு என்பது ஒரு அங்கீகாரம் அற்ற தரப்பு உருவாக்கும் அவலத்திற்கான பதில் தீர்வு என்பவை முற்றிலும் வேறானது.

தீர்வு என்பது, உள்மட்டத்தில் சிந்திக்கப்பட வேண்டியது. சர்வதேசம் தீர்வைத்தரும், என எண்ணுவது தவறு. அதைத்தான் சர்வதேசமும் இதுவரை செய்து கொண்டிருக்கிறது. ஒரு பகுதி அவலத்திலும் மறுபகுதி அமைதிவாழ்க்கையிலும் இருக்கும்போது, அமைதி தீர்வு பற்றிய சிந்தனை அவலத்திலுள்ளவர்களுக்குத்தா

நாமக்குத் தேவையான தீர்விற்கு சர்வதேச அங்கீகரம் தேவை. இதை "சர்வதேசம் நமக்கு தீர்வைப் பெற்றுத்தரும்" என்று குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. சர்வதேசத்திற்கோ நோர்வேக்கோ அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ யப்பானிற்கோ அல்லது வேறு யாருக்குமோ எமக்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று எந்த கடமையோ நிர்ப்பந்தமோ இல்லை. அதிகபட்சம் அவர்களிற்கு இருக்கக் கூடிய நிர்ப்பந்தம் பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்பது தான். அதையும் தமது நலன்கள் சார்ந்ததாக நகர்த்தி முடிவிற்கு கொண்டுவரத்தான் முயல்வார்கள்.

அதற்கான பேரம்பேசலில் அவர்கள் 2 தரப்பையும் நெருக்குவார்கள். சிறீலங்காவைப் பொறுத்தவரை இறமையுள்ள நாடு அங்கீகாரம் கொண்ட தரப்பு என்ற வரையறைக்குள் தான் நெருக்க முடியும். அதற்கு அப்பால் போவதற்குரிய அளவிற்கு நாம் பலமாக இல்லை. எனவே சர்வதேசத்திற்கு தேவையும் இல்லை.

எமக்கு அங்கீகாரம் அற்ற தரப்பு என்ற பலவீனம் இருக்கிறது. எம்மீதான நெருக்குதல்களிற்கு எதிராக சர்வதேச அளவில் சட்டரீதியாக பெரிதாக எதுவும் இல்லை. தற்போதைய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சூழலும் இதை மேலும் எமக்கு கடினமாக்கியது.

எதுவிதா அங்கீகாரமும் அற்ற நாம் எதிர்பார்க்கும் தீர்வை தருவதற்குரிய அளவு அவலத்தை தென்னிலங்கைக்கு நாமாக வலிந்து நேரடியாகக் கொடுக்க முடியாது. அது பயங்கரவாதம்.

இது சிறீலங்காவிற்கும் தெரியும். கடந்த 6 வருடகாலத்தில் எமது பொறுமை மூலம் கிடைத்த சர்வதேச அளவிலான நம்பிக்கை நன்மதிப்பு என்பவை அங்கீகாரத்திற்கான முதற் சிறு படியாகக் கூட மாறிவிடக் கூடாது என்பதில் சிறீலங்கா உறுதியாக இருக்கிறது. அதற்காக பல விதநாடகங்களை அரங்கேற்றுகிறது.

அவலத்தைப் பரப்பி தமிழீழம் புடுங்கலாம் எண்டு புலம்பி அதற்கு துணை போவதை எப்ப நிறுத்தப் போகுதுகளோ எங்கடை சனம்.

"பிச்சை வேண்டாம் நாயைப்பிடி"

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான், நீங்கள் சொல்வது சரிதான். அங்கீகாரம் இல்லாத ஒரு தரப்பு எதிர்வினையாகச் செய்யும் தாக்குதல்கள் பயங்கரவாதமாகிவிடும்.

ஆனால் எதிரியின் படுகொலைகளுக்கு சர்வதேசத்திடம் பதில் இல்லாதபோது அந்தச் சமூகமே தம்மை தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதுபற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லையே ? அப்படியானால் அவர்கள் எவ்வளவு அவலங்களையும் சரி தாங்கிக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்பதுதான் பதிலா ?

தமக்கு ஏற்படும் அவலங்களை நிறுத்துவதற்கு ஒரு சமூகம் நடவடிக்கை எடுக்கும்போது அந்நடவடிக்கைகள் பயங்கரவாதமாகப் பட்டாலும் அதைச் செய்ய வேண்டிய கட்டாயமும் தேவையும் இருக்கிறதல்லவா ?

சர்வதேசத்தின் முன்னால் எமக்கு அங்கீகாரம் இல்லை என்ற ஒன்றை வைத்துக்கொண்டு சிங்களம் செய்யும் மனிதப் படுகொலைகள் நிறுத்தப்படாவிட்டல் ஒரு காலத்தில் எமது சமூகமே அழிந்து விடும். சர்வதேசத்திற்குப் பணிந்து சிங்களம் செய்யும் அக்கிரமங்களை பார்த்துக் கொண்டு இருப்பதற்கு எமக்கு ஒரு போராட்டம் தேவையில்லை. ஏனென்றால் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே அதுதான் நடந்து கொண்டிருந்தது.

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. நான் புலிகள் சார்பாகவோ, அல்லது தமிழ்மக்கள் சார்பாகவோ உரிமை கோரவில்லை.

சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தின் பல கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் பதற்றம் தோன்றியுள்ளதுடன், பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

அங்கீகாரம் என்று எதைச் சொல்ல வருகிறீர்கள். எதையும் உருவாக்கிய பின்புதான் அங்கீகாரம் என்பது கிடைக்கும். அங்கீகாரம் கிடைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என்றிருந்தால் அதோகதிதான். தமிழர்களும் இறைமையுள்ளவர்கள்தான். இதை மறுக்கப்போகின்றீர்களா? சர்வதேச நாடுகள் என தற்போதிருப்பவை முன்னிருந்த நாடுகளின் எண்ணிக்கையில் இல்லை. அவை அதிகரித்துள்ளன. அதிகரித்துக்கொண்டும் செல்கின்றன.

அங்கீகாரம் பெற்ற இறைமையுள்ள ஒருநாடான இலங்கை சிறுபான்மையினருக்கெதிராக ஏற்படுத்தும் அவலங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால்,அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால், அதன்வலி மற்றவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

எனது வலியை உணராதவன், என்னை ஊதாசீனம் செய்து கொண்டேயிருப்பான். நானும் திருப்பித்தாக்க முற்படும்போதே, எனது வலிமையை உணர்வான். குட்டுப்படுபவர்களாக தமிழர் தொடர்ந்து இருந்திருப்பின் பேரம்பேசுதல், படைவலுச் சமநிலை, அரசியல் பேச்சுக்கள், ஒப்பந்தங்கள் என்பன ஏற்பட்டிருக்காது. இவையனைத்தும் ஒருவகையில் அங்கீகாரமெனக் கொள்ளலாம்.

இடம்பெயரும் தமிழர்களின் அவலங்களை சிங்கள அரசு உணரவில்லை. இடப் பெயர்வுகள் ஏற்படுத்தும் அவலத்தை சிங்களவரும் உணரட்டும். தமது பரம்பரையாக வாழ்ந்த இருப்பிடங்களைக் கைவிட்டு அகதிவாழ்க்கை வாழும் தமிழினம் அமைதி வாழ்க்கை வாழவேண்டுமென்றால், அந்த அவலத்தின் தன்மை அதனை ஏற்படுத்துபவனுக்கும் உணர்த்தப்பட வேண்டும்.

வெறும் அறிக்கைகள் விடும் சர்வதேசம், ஏற்கெனவே யுத்தநிறுத்த ஒப்பந்தம் என்ற ஒன்றின் மூலம் ஒருவகை சர்வதேச அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. அதனால்தான் அதனை விளங்கிக் கொண்டு இலங்கையரசு அதிலிருந்து விலகி நிற்கிறது. ஆனாலும் தமிழர் தரப்பின் அறிக்கைகள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உட்கிடையாக அவை நோக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகள் மீதான தடைவிதிப்பு, அதன் வெளி நாட்டுச் செயற்பாட்டாளர்களின் கைதுகள் என்பவற்றிகு என்ன நடந்தது, இவைகளெல்லாம் அங்கீகாரத்துள் அடங்காவிட்டாலும் அவை குற்றமற்றவை என விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அங்கீகாரத்தைக் காலம் தரலாம், அதுவரை நம்மைப் பாதுகாத்து நகர்ந்து செல்ல வேண்டியதுதான்.

எங்களிடமிருந்து புடுங்குவதற்கு ஒன்றுமில்லை. இனி நாங்கள்தான் புடுங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன், உங்கள் கருத்துத்தான் எனது கருத்தும்.

நான் நினைக்கிறேன் இங்கு சிலர் கூற விரும்புவது அரச தாக்குதல்களுக்கான எதிர்தாக்குதல்கள் பிழை என்றில்லாமல் அவை தமிழர் தரப்பால் செய்யப்படுகின்றன என்பதை நாம் உரிமை கோரக்கூடாது என்பதைத்தான். ஏனென்றால் இவ்வாறு தமிழர்களால் உரிமை கோரப்படும் சில எதிர் நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் புலிகளுக்கெதிராக சர்வதேசத்தினால் பாவிக்கப்படலாம் என்ற கவலையாக இருக்கலாம்.

மற்றும்படி எதிரியின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அவர்களுக்கும் வேறு கருத்து இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை.

இறைவன், உங்கள் கருத்துத்தான் எனது கருத்தும்.

நான் நினைக்கிறேன் இங்கு சிலர் கூற விரும்புவது அரச தாக்குதல்களுக்கான எதிர்தாக்குதல்கள் பிழை என்றில்லாமல் அவை தமிழர் தரப்பால் செய்யப்படுகின்றன என்பதை நாம் உரிமை கோரக்கூடாது என்பதைத்தான். ஏனென்றால் இவ்வாறு தமிழர்களால் உரிமை கோரப்படும் சில எதிர் நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் புலிகளுக்கெதிராக சர்வதேசத்தினால் பாவிக்கப்படலாம் என்ற கவலையாக இருக்கலாம்.

மற்றும்படி எதிரியின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அவர்களுக்கும் வேறு கருத்து இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை.

சரியாக இருக்கலாம்.

நிச்சயமாக எமக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலை தான். இதனால் தான் எமது தரப்பில் அர்ப்பணிப்புகள் உறுதிகள் பொறுமை நிதானம் என்பன ஒப்பீட்டளவில் அதிகம் தேவை. அதேபோல் அங்கீகாரம் என்ற நிலையில் கூட இழபதற்கு எதுவும் இல்லை சிறுகச் சிறுக ஆரம்பத்தில் இருந்து கட்டி எழுப்ப வேண்டிய நிலை. அங்கீகாரம் எதுவும் இல்லை எனவே எப்படியும் இயங்கலாம் என்று தான் ஆபிரிக்க தென்அமெரிக்க போன்ற இடங்களில் பல போராட்டங்கள் திசை மாறி war lords ஆகி சர்வதேச பயங்கரவாதிகளாகி இருக்கிறார்கள்.

அங்கீகாரம் என்பது உருவாக்கிய பின்னர் தான் கிடைக்கும். ஆனால் அங்கீகாரத்தை தர வேண்டிய தரப்பின் விதிகள் ஒழுங்குமுறைகளை முழுக்கப் பின்னபற்றாவிட்டாலும் அப்பட்டமாக மிலேச்சத்தனமாக மீறிய படி ஒன்றை உருவாக்கி விட்டு அங்கீகாரம் கேட்க முடியாது. இது ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தா கலியாணம் கட்ட சம்மதம் கிடைக்கு மாதிரியான கதையாகக் கிடக்கு.

அங்கீகாரம் இல்லாத தரப்பு அங்கீகாரம் உள்ள தரப்பு போன்று நடந்துகொள்ள முடியாது.

இதை இன்னொரு வழியில் சொல்வதானால் முன்பு பரீட்சையில் சித்தியடைந்த ஒருவர் தற்போதைய வேறொருவருக்கான பரீட்சையின் கேள்விக்கு விடை தெரியாது இருப்பது போல். அல்லது நாம் வாகன ஓட்டுனர் அனுமதி பெற முதல் ஓடும் போது கைகள் 2 உம் குறொஸ்பண்ணக் கூடாது என்பது முதல் பல்வேறு முனநிபந்தனைகளுடன் தான் சித்தியடைவம். ஆனால் அதன் பின்னர் அவற்றையெல்லம் பொருட்டாக எடுத்து தண்டனை கிடைப்பதும் இல்லை. ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தை இழக்க மகிப்பெரிய தவறு செய்ய வேண்டும்.

இங்கு கூட சிறீலங்கா இனப்படுகொலை செய்கிறது என்று இறுதியாக ஏற்றுக் கொண்டாலும் சிறீலங்காவின் குறித்த அரசை நீக்கி சர்வதேச மனித உரிமை மீறல் விசாரணையை மேற்கொண்ட படி ஆட்சி மாற்றத்தை உருவாக்கி ஐநா போன்ற படைகளை போட்டு நிலமையை சுமூகமாக்கும் முயற்சியைத்தான் சர்வதேசம் செய்ய முனையுமே அன்றி சிறீலங்கா இனப்படுகொலை செய்கிறது எனவே சிறீலங்காவை துண்டுகளாக உடைப்பம் என்ற முடிவிற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமிழரும் தற்பொழுது இங்கு சிலர் ஊழையிடுவது போல் அப்பாவி சிங்களவர்களை கொன்று பதிலடி கொடுத்து அவலம்பரப்பி சிங்களத்தை தீர்வு பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக சர்வதேசம் புரிந்து கொண்டால் தமிழர் தலமைக்கும் அதே கதிதான். தமிழர் தரப்பு பொறுப்பாக நடந்தது சர்வதேச அரங்கில் நாடுகள் என்ற குடும்பத்தில் ஒரு பொறுப்புள்ள அங்கத்தவராக இருக்கும் என்ற ஆதாரங்கள் இருந்தால் நாம் போராடிப் பெறும் தீர்விற்கு அங்கீகாரம் கிடைக்கும். சர்வதேசம் ஒரு பிரச்சனையை இறுதியில் 2 பிரச்சனையாக (2 தோல்வியடைந்த ஆபிரிக்க நாடுகள் மாறி மாறி இனப்படுகொலையில் ஈடுபடுவது போல் பேரவலமாக) மாறி விடும் என்ற சந்தேகம் இருந்தாலே போதும் எமது போராட்டத்தை அழிப்பதற்கு.

ஒன்றை மட்டும் தமிழர்கள் வடிவாகப் புரிய வேண்டும். சர்வதேசம் அமெரிக்க இந்தியா யப்பான் என எவரும் தமிழர் தரப்பை பேச்சளவில் தான் பயங்கரவாதிகளாக நடத்துகிறார்கள் தமது நலன்களிற்காக. அவர்கள் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு காட்டும் தீவிரத்தை எம்மீது காட்டாது இருப்பது எம்மது தேசிய தலமை மீது அவர்களது கடந்த கால நடத்தையின் அடிப்படையில் உள்ள ஒரு நம்பிக்கை.

அமெரிக்கா பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை கடந்த காலங்களில் ஒன்றுக் மேற்பட்ட தடவை சொன்னது "தமிழரின் போராட்ட இலக்கு நியாயமானது அது தவறில்லை. ஆனால் அந்த இலக்கை அடைவதற்கான அணுகுமுறையாக பயங்கரவாதம் இருப்பது தவறு" என்பது தான். இது அவர்களது வழமையான இராஜதந்திர சொல்லாடல் என்றாலும் அதற்கு பலம் சேர்பதாகத்தான் இன்று நம்மவர்களின் கொக்கரிப்புகள் வியாக்கியானங்கள் இருக்கிறது.

சிறீலங்காவின் பயங்கரவாதத்திற்கு எதிராக நீதியாக நியாயமாக போராடுவது ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடிப்பது சிறீலங்காவின் இராணு இயந்திரத்தை முடக்குவது அதைப் பலப்படுத்தும் பொருளாதாரத்தை தகர்ப்பது என்பன வேறு அப்பாவி சிங்கள மக்களை படுகொலை செய்து பழிக்குப் பழி வாங்குவதையும் அவலம் பரப்புவதையும் போராட்டமாகவோ தீர்விற்கு தூண்டும் தந்திரோபாயமாகவோ வியாக்கியானப்படுத்துபவர்கள

குறுக்காலபோவானின் !

கதையைப் பார்த்தால் வாசிக்க நல்லாயிருக்குது ஆனால் 2001 ஆண்டு ஏற்பட்ட சமபல த்துடன் ஏற்படுத்தபட்ட புரிந்துணர்வு தமிழிழம் - சீறிலங்கா என்பவற்கு மட்டும் நின்றுவிடவில்லை அது சர்வதேசத்துடனும் தொடர்புபட்டதுமல்ல சர்வதேசங்களின் விருப்புடன் தான் அரங்கேறியது .

ஆனால் 2006 மற்றும் 2007 மட்டக்களப்பில் சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் ஏற்படுத்தபட்ட புரிந்தணர்வு பெயரளவில் நடைமுறையில் இருந்த பொழுது தான் நடைபெற்றதாக ஞாபகம் அப்பொழுதும் சர்வதேச நாடுகள் என்ன செய்தார்கள்.

ஏன் 2006 ஆகசுடன் முடப்பட்ட யாழ் வீதி முடப்பட்ட பொழுது வாசிங்ரனில் சீறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தடையை தான் கொண்டுவந்தார்கள்.???.

இதுவெல்லாம் தெரியவி;லை எம்மில் பலபேருக்கு !

ஆனால் சிங்கள இடத்தில் குண்டு வெடித்தால் அல்லது சிங்கள மாணவர்கள் பலியானால் அல்லது சிங்கள

கிராமங்கள் இடம்பெர்ந்தால் மட்டும் வேதனை வருத்தம் .சர்வதேசம் கோபிக்கும் குறை நினைக்கும்.

இறுதியாக இதை புலிகள் செய்தார்களோ அல்லது சிங்களவன் செய்தானோ என்பது பிரச்சனையில்லை !

ஏன் எனில் எம்மில் எத்ததைன பேர் சிங்களவனின் கைகூலிகாளாகிய தமிழ் கூலிக் கூட்டத்தால் இழந்திருப்போம். ஆக மொத்தத்தில் தமிழர்கள் பட்ட துன்பங்கள் அனைத்தும் சிங்களவனும் படும் பொழு தான் கொஞ்சமாவது புரியும்.

.

சும்மா குறுக்குபக்கம் நெடுக்குப்பக்கமெண்டில்லாமல

நன்றாகத்தான் எழுதுகிறார்கள். எப்படித்தான் முடிகிறதோ? இதை நம்புகிறவர்களும் உண்டு.

இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு எதுவித ஆதரவையும் தெரிவிக்காத இந்த எழுத்து, 2000 சிங்களக் குடும்பங்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறது. அது மட்டுமல்ல, எது பயங்கரவாதமென்றும் முத்திரை குத்தி தனது முகத் திரையைக் கிழித்து தான் யார் என்றும் காட்டிவிட்டது.

எவ்வாறு மற்றவர்களைப் பயமூட்டி தனது கருத்தை நிலைநாட்ட முயலும் தன்மை எல்லோரிடமும் வேகாது. அல்வா கொடுப்பதையே கருவாகக் கொண்டுள்ளார்கள். ஆகவே அவதானம் தேவை.

அமைதியாய் இருந்துகொள், அடிவாங்கினாலும் ஆத்திரப்படாதே, அழகாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. தேசியத் தலைமை மீது சர்வதேசம் கொண்டுள்ள நம்பிக்கையையும் சாட்சிக்கு இழுக்கிறது.

தோல்வியடைந்த போராட்ங்களை உதாரணத்திற்குக் கையாண்டு, தனது எழுத்தை அழகாக, மற்றவர்கள் அதில் நியாயம் இருக்கிறது என்று நம்பும்படியான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் ஒன்று மட்டும் உறுதியாக என்னால் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கையாளப்பட்ட அனைத்து விடயங்களும், எதிர்மறைக் கருத்துடையவை.

போராட்டங்களில் வெற்றி பெற்ற நாடுகளின் பட்டியலை அறிந்திருந்தும் அதனைத் தெரிவிக்காத தன்மையைப் பார்க்கும்போது, யாருக்காகவோ கூலிக்கு எழுதும் கையாளாகத்தான் தோன்றுகிறது.

இப்போது தான் சரியாகப்புரிந்துள்ளீர்கள் இறைவன்... இவங்கள் அந்தக்கூட்டம் தான்.... இடைக்கிடை ஆதரவா எளுதுராமாதிரி காட்டுரது... ஆனா விசுவாசம் எசமானிற்கு... ஜ்டியா கூட எங்கிருந்துதான் வருதோவுந்தெரியாது.

தமிழரின் மனவலிமையை உடைக்கிரதில குறியா வேலை செய்யினம்... உவங்களை விட்டுவிடக்கூடாது....

ரகுநாதனும் இதை உணருவார் என்றே நினைக்கிறேன்... தயவு செய்து அனைவரும் இந்த விசமிகளிடம் விழிப்பாஇருக்கவும்...

  • கருத்துக்கள உறவுகள்

:) சூராவளி, அவர்கள் சொன்னதில் ஒரு உண்மை இருப்பதாக நினைத்தேன். அதுதான் அப்படி எழுதினேன். அதற்காக அவர்கள் எழுதும் எல்லாக் கருத்துக்களோடும் உடன்பாடில்லை. சர்வதேச அழுத்தம் பற்றி இவர்கள் இப்போது கதைத்தாலும், தமிழரின் நியாயமான பிரச்சனைகள் பற்றிப் பேசும்போது ஒன்றில் விதண்டாவாதமாகவோ அல்லது கேலியாகவோ பேசுபவர்கள்.

நீங்கள் சொன்னமாதிரி இவர்கள் பற்றி அவதானமாயிருப்பது நல்லதுதான்.

ரகுநாதன்! அவங்கள் அப்பிடித்தான் கதைச்சு உன்மை மாதிரி காட்டிக்கொள்வார்கள்... இவர்களின் பாணி முன்னர் மக்களின் குரலெண்ற வானொலியை ஒத்தது.... இப்போது புரிகிறதா இவர்களின் பின்னணி? யாரிவர்கலென்று?

இறைவன்! சுராவளி !

நான் எழுதியவற்றில் ஏதாவது பிழைகள் அல்லது தவறுகள் இருந்தால் நேரடியாக சுட்டிக்காட்டவும்.

என்னைப் பொறுத்தவரை நான் எழுதியவற்றில் தமிழ்தேசியத்திற்கு பங்கமாக எதனையும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் யார் இந்த சர்வதேச சமூகம் என்பதை கருத்தில் எடுக்கனும்..

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே சர்வதேச சமூகம் என்றாகின்றனர்..!

இவர்களின் அங்கீகாரம் கிடைத்த எல்லா இடமும் நீதி நிலைத்திருக்கிறதா..???!

ஏன் பலஸ்தீன தேசம் இன்னும் பிரச்சனைக்குள் இழுபடுகிறது..??!

வியட்நாமில்.. ஈராக்கில்... ஆப்கானிஸ்தானில்.. சோமாலியாவில்.. அமெரிக்கப்படைகள் செய்த மனிதப் படுகொலைகளை சர்வதேசம் விசாரித்து ஏதாவது தீர்ப்பு வழங்கி இருக்கிறதா...???! அப்படி வழங்கப்படும் தீர்ப்புக்களுக்கு அமெரிக்காவை கட்டுப்பட வைக்கும் சக்தி ஏனைய உலக நாடுகளுக்கு உண்டா...???!

இந்திய அமைதிப்படைக்கு அவர்களின் பணிக்காக இன்று சிங்கள தேசம் சிலை வைக்கிறது. இதே சிங்கள அரசுதான் 1990 இல் இந்திய அமைதிப்படையை.. கொலைகாரப்படை என்று ஆக்கிரமிப்புப் படையென்று நாட்டை விட்டு வெளியேறு என்றும் சொல்லியது..??!

இந்திய அமைதிப்படை செய்த தமிழின அழிப்பு என்பது நியாயமானதா....???! அதை எந்த சர்வதேசம் விசாரணைக்கு உட்படுத்தி.. இந்தியப் படைகள் செய்தவற்றுக்கு என்ன தண்டனை வழங்கின..??! எவ்வளவு நட்ட ஈடுகளைப் பெற்றுத்தந்தன..??!

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னர் 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா பிரச்சாரப்படுத்தவிடாமல் தடுக்கிறதே...??! இந்தக் கொலைகளை இட்டு ஏன் சர்வதேசம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.. நீதி விசாரணை செய்யவில்லை.. கொலைகளுக்கான பின்னணியில் உள்ள காரணிகளை இனங்காணவில்லை..! கொலைகாரர்களை (அமெரிக்கப்படைகள் அதன் உளவாளிகள் தூண்டிவிட்ட கொலைகள் உள்ளடங்க) ஏன் நீதியின் முன் கொண்டு வரவில்லை..??!

சதாம் குசைன் அணு ஆயுதம் வைத்திருக்கிறார் படு பயங்கர இரசாயன ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பிழையான தகவல் வழங்கி செய்யப்பட்ட ஒரு வன்பறிப்பு நகர்வை சர்வதேசம் அடையாளம் கண்டும்.. ஏன் அது தொடர்பில் அமெரிக்காவை தண்டிக்க முன்வரவில்லை..??!

இதே நிலை கொங்கோவில்.. நிகழ்ந்தால் அமெரிக்க சார்பு ஊடகங்கள் சும்மா இருக்குமா..??!

உலகில் நீதி என்பது அமெரிக்கா விரும்பும் வடிவில் தான் இருக்க வேண்டும் என்ற நியாயமில்லை..!

தமிழ் மக்கள் 30 வருட காலத்துக்கும் மேலாக அநீதிகளை சந்தித்து வருகின்றனர். 1983 கலவரத்தின் பின் சிறீலங்கா தந்த தீர்வுகள் என்ன..??!

அப்படி இருக்கும் போது இந்தியா வந்த பிறவுன் காத்திரமான தீர்வை முன் வையுங்கள் என்று மட்டும் அறிக்கை விடுவது உண்மையான அக்கறையின் வெளிப்பாடா..??!

பிரிட்டனின் இயன் பொக்ஸின் வரவை எதிர்த்தவர்களே இன்று தீர்வுப் பொதியை செய்கின்றனர் எனும் போது எப்படி காத்திரமான தீர்வு பெறப்படும்..???!

சர்வதேச நலனுக்கு ஏற்பதான் தீர்வென்றால்.. தமிழ் மக்கள் என்ன அமெரிக்க அடிமைகளா...??! அமெரிக்கா விரும்பும் வடிவில் தான் தீர்வை பெற முடியும் என்பது என்ன.. ஜனநாயகமா..???!

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குரிய உரிமையை அவனே தீர்மானிக்க உரிமை உண்டு. தமிழர்கள் தங்கள் உரிமையை தங்கள் நிலத்தில் தீர்மானிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது..! தமிழர்கள் அடுத்தவரின் உரிமையை தட்டிப்பறித்து தனது உரிமையைப் பெறுவது என்பது அநீதியானது. ஆனால் தமிழர்கள் தங்கள் உரிமையை தங்கள் நிலத்தில் தக்க வைக்க எவரையும் எந்த சர்வதேசத்தின் அங்கீகாரத்துக்காகவும் மண்டியிட்டுக் கிடக்க வேண்டும் என்ற தேவையில்லை.

சர்வதேசத்துக்கு தமிழர்கள் மதிப்பளிக்கின்றனர் என்று காட்டத்தான் சர்வதேச உறவாடல்களே ஒழிய சர்வதேசம் தமிழர்களின் உரிமையை பெற்று தங்கத் தட்டில் வைத்து தமிழர்களிடம் ஒப்படைக்கும் என்பது முழு மு வாதம்..!

அதேபோல் சர்வதேசத்துக்கு நாம் அஞ்சி எமது போராட்டத்தில் நாம் உறுதியற்று இருக்கவும் முடியாது. சர்வதேசத்தின் நகர்வுகளுக்கு ஏற்ப தந்திரோபாயமாக நகர்ந்து எமது போராட்டத்தை உறுதிப்படுத்தி சர்வதேசம் முன் வைக்கும் சவாலை முறியடிக்கும் போதே எமது பலத்தை இட்டு சர்வதேசம் தனது பார்வையை மாற்றும்..!

இன்றைய தீர்வுத் திட்டம் என்பது ஒரு போலியானது. சர்வதேசமும் சிறீலங்காவும் சேர்ந்து போடும் நாடகம். கிழக்கை ஆக்கிரமிக்கும் போது அப்பட்டமாக மீறப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்டிக்காத சர்வதேசம் செத்துப்போன ஒப்பந்தத்தில் இருந்து சிறீலங்கா விலகப் போகிறது என்றதும் குரல் கொடுத்தது வெறும் பாசாங்கு. கிழக்கை ஆக்கிரமிக்க உதவியதே இதே சர்வதேசம் தான்.

கிழக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பின் தனது தூதுவர் குழுவை அமெரிக்கா அனுப்பியது. ஜப்பான் அனுப்பியது. இந்தியா அனுப்பியது. ஏன்..????! அங்கு யுத்த நிறுத்த ஒப்பந்தம் படுமோசமாக மீறப்பட்டத்தை சர்வதேசம் அறியவில்லையா..??! அப்போ ஏன் கண்டிக்கவில்லை..!

கிழக்கின் முக்கியத்துவம் கருதி.. அதனை புலிகளிடம் இருந்து ஆக்கிரமிக்க சர்வதேசம் சிறீலங்காவுக்கு உதவியது. தங்கள் நலனுக்காக கிழக்கு மண்ணைப் பாவிக்க அங்கு இன்று ஆயுதக் குழுக்களை அப்பட்டமாக அரசியல் குழுக்களாகப் பதிவு செய்து களத்தில் இறக்கிவிடுவதை அமெரிக்கா தூதரம் உட்பட சர்வதேசம் கண்ணை மூடிக் கொண்டு அங்கீகரித்து நிற்கிறது..??!

இதுதான் ஜனநாயமா..??! இல்லை. அமெரிக்காவின் நலனுக்கு எது அவசியமோ அதுதான் ஜனநாயகம்.

இப்படிப்பட்ட சர்வதேசத்திடம் தமிழரின் உரிமையை எதிர்பார்க்க முடியுமா..??! இவர்களுக்கு அஞ்சி தமிழர்கள் தங்கள் போராட்டத்தை உறை நிலையில் வைக்க முடியுமா..??!

தமிழர்களின் போராட்டம் என்பது அமெரிக்காவால் தீர்மானிக்கப்பட்டதல்ல. இந்தியாவால் தீர்மானிக்கப்பட்டதல்ல. சிறீலங்கா அரசின் தமிழர் உரிமைப் பறிப்பால் தீர்மானிக்கப்பட்டது. சிங்கள அரசு அதன் கொள்கையில் உறுதியாகவே இருக்கிறது. அதையேன் சர்வதேசம் உணராதபடி நடிக்கிறது.

சர்வதேசத்துக்கு மகிந்த அரசை 50% பிடிக்கும் என்றால் ரணிலின் அரசை 90% பிடிக்கும். எனவே சிறீலங்கா சிங்கள அரசியலில் குழப்பங்களை உண்டு பண்ணும் நகர்வுகளையும் சர்வதேசம் இந்தியா போன்றன எடுக்காமல் இருக்கா.. அதற்கேற்ப மகிந்தவை சிக்கலில் மாற்றவும் அவை பின்னிற்கா. இதை எல்லாம் புலிகளிடம் செய்ய முடியல்ல என்ற கவலைதான் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி மோதிகிட்டே இருப்பதன் பின்னணியும்..!

சர்வ கட்சி குழுவின் தீர்வுப்பொதியை ஏதோ பெரிய எதிர்பார்ப்புடன் சமர்பிக்கச் சொல்கிறது சர்வதேசம். இதுவும் அதன் நாடகம் தான். சர்வ கட்சிக் குழு என்பது பெயரளவில் தான். பிரதான எதிர்கட்சியே அதில் இடம்பெறவில்லை. ஜே வி பி இல்லை. தமிழர் தரப்பில் பலமான சக்தியான விடுதலைப்புலிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் இல்லை. இப்படியான ஒரு சர்வ கட்சிக் குழு சமர்பிக்கும் தீர்வு என்பதில் எப்படி சர்வ தேச சமூகம் நியாயமான தீர்வை எதிர்பார்க்கும். இந்த சர்வ கட்சிக் குழுவும் சர்வ தேசமும் ஒன்றுதான். அமெரிக்காவும் அதன் வல்லாதிக்க ஆதரவு வால்களும் எப்படி சர்வதேசம் என்றாகினதோ அப்படித்தான் மகிந்த அரசும் அதன் பேரினவாத வால்பிடிகளும் தமிழர் விரோத சிங்களப் பேரினவாத தமிழ் ஆயுதக் கும்பல்களும் அதில் இடம் பிடித்துள்ளன.

இதில் எப்படி நீதி பிறக்கும். இந்தத் தீர்வுப் பொதியினூடு எப்படி சமாதானம் வரும் என்று இந்தியாவும் கோடன் பிறவுனும் அமெரிக்காவும் ஜப்பானும் எதிர்பார்க்கின்றன. இந்த ஒன்றே போதும் சர்வதேசத்தை தமிழர்கள் தெளிவாக இனங்காண.

இவை எல்லாம் சுத்துமாத்து நாடகங்கள். அவர்கள் தெரிந்து கொண்டே தமிழர்களை ஏமாற்றுகின்றனர். அப்படியான ஒரு நிலையில்.. தமிழர்கள் மட்டும் 100% சர்வதேசத்தை நம்பி.. அவர்கள் எங்களை அங்கீகரிக்கனும் என்று நடக்கச் சொல்வது.. குழந்தைக்கு அரசில் சொல்லிக் கொடுப்பது போன்றது. இது தமிழ் மக்களை அகல பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு.. அதுதான் சுதந்தரம் என்று காட்டுவது போன்றுள்ளது.

விடுதலைப்புலிகள் சர்வதேசத்தை எப்படிக் கையாளனும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளதாகவே தெரிகிறது. எப்படி சர்வதேசம் எம்மை ஏமாற்ற முனைகிறதோ அப்படி நாமும் அதனை அணுக வேண்டும். எப்போ சர்வதேசம் எம்மை நோக்கிய நியாயத்தோடு வருகிறதோ அப்போ நாமும் நியாயத்தோடு அதனை நோக்கிச் செல்ல வேண்டும். மற்றும் படி.. இராஜதந்திரத்துக்கு இராஜதந்திரமாகத்தான் பதிலளிக்க வேண்டும்..! தமிழர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்காதவரை தமிழர்களுக்கு யாரும் உரிமை பெற்றுத்தர அக்கறை செலுத்தப் போவதில்லை..!

எனவே தமிழ் மக்கள் எங்கிருப்பினும் ஒருங்கிணைந்து ஒற்றுமையோடு செயற்பட்டு விடுதலைப்புலிகள் பலத்தை சர்வதேசம் உணர அதிகரிப்பதும் தக்க வைப்பதுமே தமிழர்கள் உலகில் உரிமை பெற்ற நிலத்தில் வாழ வகை செய்யும்..!

இரத்தம் சிந்தாமல் தமிழர்களுக்கு விடிவில்லை என்பது துரதிஸ்டவசமான உண்மை..! :)

கொழும்பில் நடக்கும் குண்டு வெடிப்புக்கள் உட்பட இன்றைய மொன்றாகல வரை.. அமெரிக்கத் தூதரகம் விட்ட அறிக்கைகள் புலிகளை வசைபாடியதன் பின்னணி இருக்க.. மகிந்த எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள். இப்படி நிலை இருக்க.. அமெரிக்க சர்வதேசத்தையும் இந்திய பிராந்தியத்தையும் நம்பி தமிழர்கள் எப்படி உரிமை பெற முடியும்..???!

Colombo bombs not work of LTTE - President

President Mahinda Rajapaksa told media heads and editors today that recent blasts in Colombo was not the work of the LTTE, but some ‘other group’ with political and business interests.

-----------------

Armed group registering as political party "historical" - Ranil

Opposition Leader Ranil Wickremesinghe today called for the establishment of independent Commissions immediately to ensure a free and fair local government election in the East. He also charged that an armed group is for the first time being registered as a political party.

டெயிலிமிரர்.

Edited by nedukkalapoovan

புதியவன்! உங்களின் கருத்தை நாங்கள் குறிப்பிடவில்லை... நாம் கூறுவது துரோகிகளை....

உங்களது கருத்துத் தொடர்பில் ஒவ்வொன்றாக விவாதிக்கப்படவேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதற்கு இன்று நேரமின்மையால் எனக்கு அவசியமாகப் படுகின்ற ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

அங்கீகாரம் என்பது உருவாக்கிய பின்னர் தான் கிடைக்கும். ஆனால் அங்கீகாரத்தை தர வேண்டிய தரப்பின் விதிகள் ஒழுங்குமுறைகளை முழுக்கப் பின்னபற்றாவிட்டாலும் அப்பட்டமாக மிலேச்சத்தனமாக மீறிய படி ஒன்றை உருவாக்கி விட்டு அங்கீகாரம் கேட்க முடியாது. இது ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தா கலியாணம் கட்ட சம்மதம் கிடைக்கு மாதிரியான கதையாகக் கிடக்கு.

இந்த உதாரணம் அபாண்டமானது. இந்த உதாரணத்திற்கான அடிப்படை என்பது மூலப் பிரச்சினையையே திரித்துப் பேசுகின்றது. அநேகமாக இது தவறுதலாக ஏற்பட்ட தறவறான உதாரணமாக இருக்கும் என்று தான் கருதுகின்றேன்.

இவ்வுதாரணத்தைப் நான் எவ்வாறு புரிந்து கொள்கின்றேன் என்றால், ஒரு பெண்ணும் அவளது பெற்றோரும் சம்மதியாதபோதும் அவள் மீது தீராத ஈர்ப்புக் கொண்ட ஒரு ஆண் எவ்வாறாவது அவளை அடைந்தே தீருவேன் என்று அதற்கான வழிமுறையாக அவளை வன்புணர்வு செய்கிறான்....என்ற அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது. இவ்வுதாரணத்தில் அப்பெண்ணோ அல்லது அவளது பெற்றோரோ எவ்விதத்திலும் குறிப்பிட்ட ஆணின் உடமையோ உரிமையோ அல்ல.

ஆனால், தமிழர் போராட்டம் என்பது இன்னொருவன் நாட்டை, அதாவது சிங்கள நாட்டை அடைய தமிழர் மேற்கொள்ளும் ஆசைப் போரல்ல. இது மறுக்கப்பட்ட வாழ்வை மீளப் பெற மேற்கொள்ளப்படும் வாழ்வாதார, உரிமைப் போராட்டம். இங்கு ஆசை, ideology என்ற superficial விடயங்கள் எதுவும் இல்லை.

ஒருவேளை நீங்கள் பின்வருமாறு உங்கள் உதாரணத்தை இட்டிருந்தால் எனக்கு இப்பதிவு தேவைப் பட்டிராது:

ஒரு ஆணும் பெண்ணும் மனதாரக் காதலிக்கிறார்கள். பெரியவர்கள் ஏதேதோ காரணம் கூறி திருமணத்திற்கு மறுக்கிறாhர்கள். அத்தோடு நில்லாது வேறு ஒரு மணமகனை அப்பெண்ணிற்கு நிச்சயம் செய்து மூன்று மாதத்தில் திருமண நாளும் குறித்துள்ளார்கள். இந்நிலையில், தனது உரிமை ஒடுக்கப்பட்டு, தனது வாழ்வு

பிறரால் நிர்ணயிக்கப்பட்டு, தான் ஒரு அடிமைபோன்று தனது அபிலாசைகளிற்கு முரணாக நடத்தப்படுவதை அப்பெண்ணாலும் அப்பையனாலும் ஜீரணிக்க முடியவில்லை. எனினும் எவரும் இவர்களின் உதவிக்கு வருவதாய் இல்லை. அனைவரும் பெரியவர்களின் கட்சியிலேயே உள்ளார்கள். இந்நிலையில், திருமண நாள் நிச்சயிக்கப்பட்டு விட்ட நிலைலயில், வேறு வழியின்றி காதலர்கள் அப்பெண் கர்ப்பமாவதே வளர்ந்தவர்களின் சமூகக் கட்டமைப்பில் மனஒளுங்கில் எழுந்த வரட்டுக்கௌரவத்தில் இருந்து தம்மை மீட்கும், தமது இணைவிற்கு வழி சமைக்கும் என்ற அடிப்டையில் சிந்திக்கின்றார்கள். பெண் கர்ப்பமாகிறாள். இந்தக் கர்ப்பமாகிய நிகழ்வானது அவர்களது பெற்றோரின் பெறுமதிகளிற்கு முற்றாக முரண்பட்டது. தமது மானம் இழந்ததாய் ஒப்பாரி வைக்கிறார்கள் பெற்றோர். தம் வாழ்வைத்த தகர்த்ததாய்க் காறித் துப்புகிறார்கள். அயலவர் பலரும் தம்பங்கிற்குத் துப்பியபின் பெற்றோரை ஆசுவாசப் படுத்த முயலுகிறார்கள்.

தமது கலாச்சாரப் பெறுமதிகளிற்கு முரண்பட்டதால் வளர்ந்தவர்கள் அச்சோடியை ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்கள் இரு வீட்டார் அங்கீhரமும் இன்றி, புதிதாக அவதரித்த தமது மகவையும் சுமந்து கொண்டு தமது சுய உழைப்பில் தமது வாழ்வை உயர்த்தப் பாடுபடுகின்றார்கள், ஆனால் ஒவ்வொரு நாட்களும் வறுமையில் செம்மையாய் நகர்கிறது...

அவர்களைப் பொறுத்தவரை பெற்றோர் அங்கீகாரம் என்பது பல பிரச்சினைகளிற்கு முற்றுப் புள்ளி வைத்துத் தமது வாழ்வை இலகுவாக்கும் என்பது நன்கு உணரப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு அங்கீகாரத்திற்கு இன்னும் சாத்தியமுள்ளது என்பதும் அவர்களிற்குத் தெரிகிறது. ஆனால் மாறாக, அவர்கள் தமது பெற்றோர் சொன்னது போல் நிரந்தரமாய் பிரிந்து போயிருந்தால் அங்கீகாரம் என்ற சொல்லே அவர்களிற்கு அவசியமற்றதாய் அர்த்தமற்றதாய்ப் போயிருக்கும்....

Edited by Innumoruvan

இறைவன்! சுராவளி !

நான் எழுதியவற்றில் ஏதாவது பிழைகள் அல்லது தவறுகள் இருந்தால் நேரடியாக சுட்டிக்காட்டவும்.

என்னைப் பொறுத்தவரை நான் எழுதியவற்றில் தமிழ்தேசியத்திற்கு பங்கமாக எதனையும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்.

உங்கள் பற்றியதல்ல இங்கு வைக்கப்படும் கருத்து. சிலர் கொஞ்ச நாளைக்கு அந்தப் பெயரில் தங்களை வெளிக்காட்டமாட்டார்கள். வேறு பெயர்களில் எழுதுகிறார்களோ தெரியாது.

சுராவளி ! இறைவன் !

நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.