Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடுவை நெருங்கிச் சண்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் முக்கிய இடமான மடுப்பகுதியை அண்மித்து இன்று சிறிய அளவிலான சண்டைகள் நடந்துள்ளதாக தமிழ்நெட் தெரிவித்திருக்கிறது. மடுவை அண்டிய சின்னப் பண்டிவிரிச்சானிலேயே இந்த மோதல்கள் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்துள்ளது.

இதற்கிடையே பாலக்குழி மோதலில் 35 படையினர் பலியாகி 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர். பலியான படை அதிகாரிகளின் சடலங்களைத் தவிர பல சாதாரண படைவீரர்களின் சடலங்களை இராணுவம் கள முனையிலேயே புதைத்து வருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி மடுவைக் கைப்பெற்றும் நோக்கோடு இராணுவம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்..!

SLA steps up minor clashes in Madu region

[TamilNet, Monday, 28 January 2008, 19:34 GMT]

Sri Lanka Army, that has suffered casualties in medium scale offensive operations in Mannaar, has stepped up minor clashes as Tigers have successfully utilized booby traps and sniper attacks to confronting large number of SLA troops engaged in offensive operations. On Monday, Six clashes were reported in Pa'ndivirichchaan and Chinna Pa'ndivirichchaan areas in Madu division of Mannaar district and two clashes were reported in Vi'laaththikku'lam area bordering the Vavuniyaa district, in addition to another clash in Paalamoaddai.

Meanwhile, informed military sources in Colombo said that dead soldiers, except officers, were being buried in Mannaar. The number of SLA soldiers losing legs in LTTE laid booby traps have increased, forcing SLA to transport only the wounded from the battle zone. Recently, a high ranking officer was killed in a heavy fighting with the Tigers in Paalaikkuzhi area. Tigers claimed that at least 35 troopers were killed in the clash. 75 were wounded. However, informed sources in Colombo put the death toll at sixty and more than 100 injured.

On Monday, six minor offensive thrusts by the SLA were reported in Pa'ndivirichchaan area between 9:30 a.m. and 7:30 p.m., according to LTTE's Operations Command in Mannaar.

Meanwhile, two separate clashes lasted for 20 minutes in Vi'laaththikku'lam Monday noon.

SLA troops and Tigers clashed from 11:10 a.m. till 12:45 p.m. in Paalamoaddai in Vavuniyaa district.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24460

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திக்கு நன்றி நெடுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கும்& சகோதரங்களுக்கும் ஒரு வெற்றி ஒன்று சுதந்திர தின விழாவுக்கு முதல் தேவையாக உள்ளது. அதற்கு படாதபாடு பட்டு பல இராணுவத்தை இழந்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

mannarzl8.jpg

மன்னார் வவுனியா மாவட்டங்களை ஒட்டி சண்டை நடைபெறும் பகுதிகள் சிவப்பு வளையமிடப்பட்டு மத்தியில் சிவப்பு பொட்டிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

குறிப்பு:- இராணுவ இணையத்தளம் மற்றும் தமிழ்நெட் செய்திப்படி இது நெடுக்காலபோவனாகிய என்னால் உருவாக்கப்பட்டது. உண்மையான கள நிலவரத்தை நேரடியாக அவதானிதல்ல. வளைய அளவுகள் பருமட்டானவை. உண்மையான அளவுகள் அல்ல.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நெடுக்காலபோவான்,

உண்மை எழுதுவதற்கு களத்துக்குத்தான் சென்று பார்க்க வேண்டியதில்லை. களத்துக்குச் சென்று தான் பார்த்து எழுத வேண்டுமென்றால் இன்று பாதிப்பேர் உயிருடன் இருக்க முடியாது.

சிங்களம் மறைத்தாலும் அதன் இழப்புக்கள் வெளியில் கசிவதை அதனால் தடுக்க முடியாது.

நல்ல செய்தி !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mannarzl8.jpg

மன்னார் வவுனியா மாவட்டங்களை ஒட்டி சண்டை நடைபெறும் பகுதிகள் சிவப்பு வளையமிடப்பட்டு மத்தியில் சிவப்பு பொட்டிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

குறிப்பு:- இராணுவ இணையத்தளம் மற்றும் தமிழ்நெட் செய்திப்படி இது நெடுக்காலபோவனாகிய என்னால் உருவாக்கப்பட்டது. உண்மையான கள நிலவரத்தை நேரடியாக அவதானிதல்ல. வளைய அளவுகள் பருமட்டானவை. உண்மையான அளவுகள் அல்ல.

என்ன அண்னே சொல்ல வரீங்க? சிரீலங்க ராணுவம் மடுவ நெருங்கீட்டுது எண்டு சொல்லுரியலா அல்லது இந்த அறிக்க எல்லாம் பொய் எண்டு சொல்ல வரீளா? தமிழ் நெற்றில வந்த செய்தி என்று கதை விட்டு பிரிப்பேர் பன்னுரேளா? அல்லது ராணுவம் அடி வாங்குது என்று சொல்ல வரீளா? சொல்ல வந்த செய்தி என்ன????????????????

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்னே சொல்ல வரீங்க? சிரீலங்க ராணுவம் மடுவ நெருங்கீட்டுது எண்டு சொல்லுரியலா அல்லது இந்த அறிக்க எல்லாம் பொய் எண்டு சொல்ல வரீளா? தமிழ் நெற்றில வந்த செய்தி என்று கதை விட்டு பிரிப்பேர் பன்னுரேளா? அல்லது ராணுவம் அடி வாங்குது என்று சொல்ல வரீளா? சொல்ல வந்த செய்தி என்ன????????????????

இவர் இப்படித்தான் மக்களைக்குழப்பிறதே தொழில்

இப்படியென்றால் அப்படியென்பார்

அப்படியென்றால்இப்படியென்பா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் அடம்பனுக்கு அருகில் இன்று காலை நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் இராணுவம் ஒரு கிராமத்தைக் கைப்பெற்றிவிட்டதாக அறிவித்துள்ளதுடன். பல போராளிகளைக் கொன்று பல பங்கர்களையும் அழித்துள்ளதாகக் கூறுகிறது, இது குறித்து புலிகள் இன்னும் செய்தி வெளியிடவில்லை. அதுமட்டுமன்றி இந்த இராணுவத்தின் வெற்றிச் செய்தி குறித்து நடுநிலையான உறுதிப்படுத்தல்களும் ஊடகங்களுக்கு கிடைக்கவில்லை..!

Army overrun village close to Adampan in Mannar

The army captured Viyattamkulam this morning, a village west of the Adampan town in Mannar, following a fierce battle with the LTTE. The Military claimed that over sixteen rebel bunkers were destroyed during the clash killing at least 22 cadres.

டெயிலிமிரர்.

என்ன அண்னே சொல்ல வரீங்க? சிரீலங்க ராணுவம் மடுவ நெருங்கீட்டுது எண்டு சொல்லுரியலா அல்லது இந்த அறிக்க எல்லாம் பொய் எண்டு சொல்ல வரீளா? தமிழ் நெற்றில வந்த செய்தி என்று கதை விட்டு பிரிப்பேர் பன்னுரேளா? அல்லது ராணுவம் அடி வாங்குது என்று சொல்ல வரீளா? சொல்ல வந்த செய்தி என்ன????????????????

நான் எதுவும் புதிசா சொல்லவில்லை. அரச சார்பு மற்றும் தமிழர் சார்பு ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை தொகுத்து இடங்களைக் குறித்துக் காட்டியுள்ளேன்.

சண்டை போர் நிறுத்த கால எல்லைக் கோட்டைத் தாண்டி நடக்கிறது என்பது மட்டும் புலனாகிறது..! :lol::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

நாம் தொடர்ந்து கள நிலவரங்களை மறைப்பதனாலேயே சில இழப்புக்களையும் எம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை!! இழப்புகள் எங்கேயாவது பெரிய தலைகள் விழும்போதோ, அல்லது சடலங்கள் கையளிக்கப்படும் போதோ தான் உணர்கிறோம்!!!

ஆனால் எம் ஊடகங்களோ எம்மைத் திருப்திப்படுத்த தொடர்ந்து வானவேடிக்கைகள் நடத்திக் கொடிருக்கின்றன.!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை போர் நிறுத்த கால எல்லைக் கோட்டைத் தாண்டி நடக்கிறது என்பது மட்டும் புலனாகிறது..! :rolleyes::mellow:

நெடுக்காலபோவான் என்ன சொல்ல எத்தனிக்கிறீர்கள் என்று புரியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் என்ன சொல்ல எத்தனிக்கிறீர்கள் என்று புரியவில்லை

சண்டை CFA காலத்து FDL ஐத் தாண்டி நடக்குது. ஆனால் தமிழ் ஊடகங்களில எல்லாம் முறியடிப்பாத்தான் செய்தி வருகுது. முறியடிக்க அடிக்க.. எப்படி சண்டை எல்லை தாண்டினது..??!

போன கிழமை உயிலங்குளத்தில நடந்த சண்டை இன்று அடம்பனுக்கு அருகில நடக்கு எண்டா.. எப்படி..???! உயிலங்குளம் அடம்பனுக்கு இடம்பெயர்ந்திட்டா..??! :rolleyes::o

இன்றைய இராணுவத்தின் வெற்றிப் படத்தைப் பார்த்தா.. இராணுவம் மடுவையும் தாண்டின மாதிரி படம் போடுறாங்க..??!

இதில எதுதான் கள நிலவரமோ..???! :mellow::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக் களமுனைகளில் படையினரின் பலமுன்நகர்வு முயற்சிகள் முறியடிப்பு

29.01.2008 / நிருபர் எல்லாளன்

-இழப்புக்களுடன் படைத்தரப்பு திரும்பியது -

வன்னிக் களமுனைகளில் நேற்றும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பல்வேறு முன்நகர்வுத் தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பிற்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார் பண்டிவிரிச்சான், சின்னப்பண்டிவிரிச்சான் களமுனைகளில் சிறிலங்காப் படையினர் நேற்று ஆறிற்கும் அதிக தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டனர். படையினரின் இந்தத் தாக்குதல் முயற்சிகள் யாவும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டதோடு படையினருக்கு இழப்புக்களும் ஏற்படுத்தப்பட்டன.

நேற்று காலை 9.30 மணிமுதல் மாலை 7.00 மணிவரையான பத்து மணிநேரங்களிற்குள் படையினர் இந்த ஆறு தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆட்லெறி மற்றும் மோட்டார்த் தாக்குதல்களுடன் படையினரின் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. படையினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டன. படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் பொறிவெடிகளில் சிக்கியும் படையினர் மேலும் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதேவேளை மன்னார் விளாத்திக்குளம் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னரண்கள் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இரண்டு தாக்குதல் முயற்சிகளும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டு இராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நண்பகல் 12.00மணிக்கு முதலாவது முயற்சியும் பின்னர் 2.45 மணிக்கு இரண்டாவது முயற்சியும் மேற்கொள்ளப்பட்டன. படையினர் எறிகளின் உதவியுடன் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதற்கு எதிரான விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து படையினர் இழப்புக்களுடன் தப்பி ஓடியுள்ளனர்.

விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏற்படவில்லை.

மற்றுமொரு தாக்குதல் சம்பவம் வவுனியா பாலமோட்டைப்பகுதியில் இடம்பெற்றது. விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்துவதற்கு வந்தபடையினர் விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர்.

நேற்றுப் பகல் 11.20மணிமுதல் 45 நிமிட மணிநேரத்திற்குள் இந்த இரண்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. படையினர் கடுமையான எறிகணைகளின் சூட்டாதரவுடன் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். இதன்போது இழப்புக்களைச் சந்தித்த படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர். விடுதலைப்புலிகள் தரப்பில் உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை.

மேலும் மணலாறு, கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, ஜனகபுரம் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

நேற்று மதியம் 12.00 மணிதொடக்கம் மாலை 6.00 மணிவரை சரமாரியான எறிகணை சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிநோக்கி காவலரண்களைக் கைப்பற்றும் நோக்குடன் முன்நகர்ந்த இராணுவத்தினரை வழிமறித்து விடுதலைப்புலிகள் நடத்திய எதிர்ச்சமரிற்கு முகம் கொடுக்க முடியாத படையினர் இறந்த மற்றும் காயமடைந்த தமது சகாக்களையும் தூக்கிக்கொண்டு படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கினர்.

இச்சமரின் போது விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கியும் படையினர் இழப்புக்களைச் சந்தித்தனர்.

மன்னார் அடம்பன் நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தடுத்து நிறுத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்காப் படை உயர்அதிகாரி ஒருவர் உட்பட 35 இற்கும் அதிக படையினர் கொல்லப்பட்டும் 75 இற்கும் அதிக படையினர் காயமடைந்துமுள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி சிறிலங்காப் படையினர் மன்னார். அடம்பன் நோக்கிய முன்னேற்ற முயற்சியை ஆரம்பித்தனர். படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதல்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. பல்குழல் வெடிகணைகளினதும் ஆட்லெறி மோட்டார்களினதும் செறிவான சூட்டாரவுடன் படையினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். இரண்டு தரப்பினருக்கும் இடையில் நான்கு மணி நேரம் இந்தச் சமர் நடைபெற்றது.

படையினரின் இந்த நகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட உக்கிர சண்டையில் படைத்தரப்பில் மூன்று படையினர் கொல்லப்பட்டு ஒன்பது படையினர் காயமடைந்தனர் என்று ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் பிந்திய தகல்களின் படி உயர் அதிகாரி ஒருவர் உட்பட 35படையினர் கொல்லப்பட்டு 75 படையினர் காயமடைந்திருக்கின்றனர். சம்பவத்தில் கொல்லப்பட்ட படை உயர்அதிகாரியின் இறுதி நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் படைத்துறையினர் பெருமளவில் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக வன்னிக் களமுனைகளில் கொல்லப்படும் படையினரின் உடல்கள் மன்னார் காட்டுப்பகுதிகளில் புதைக்கப்படுவதாகவும் காயமடைந்த படையினர் மாத்திரமே தென்பகுதிகளிற்குக் கொண்டுசெல்லப்படுவதாகவும் செய்திகள் தெரிவித்தன.

இதேவேளை வரணிப் படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் ஆட்லெறி எறிகணைத்தாக்குதல்களை நேற்று நடத்தியுள்ளனர்.

பலாலிக் கூட்டுப்படைத்தளம் மீது எறிகணைத்தாக்குதுல் நடத்தியபின்னர் வரணியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையத்தளம் மீதும் விடுதலைப்புலிகளால் ஆட்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் எற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

sankathi.com

ஏழு வருஷமா சவுண்ட் விட்டதிலேயே கலம் போனது தெரியேலை!! ஓகோ யுத்த நிறுத்தம் முறிந்தோ/முடிந்தோ விட்டுதோ!!!! அப்ப இனி சர்வதேசம் என்டெல்லாம் சொல்லேதாது!!!

நாங்கள் சிங்கள ஆமியைத்தான் கொல்ல முடியா விட்டாலும் சிங்களச் சனத்தையாவுது ..... ம்ம்ம்கூம்ம்ம்ம் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.