Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிசம்பரில் மட்டும் 68 சிறிலங்காப் படையினர் பலி- 468 பேர் படுகாயம்: சிறிலங்காப் பிரதமர் அறிவிப்பு

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 68 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 468 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு ஆதரவாக சிங்களவர்கள் சிலரும் செயற்பட்டு வருகின்றனர் - சபையில் பிரதமர் விக்கிரமநாயக்க

2/6/2008 7:15:03 PM

வீரகேசரி இணையம் - வடபகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள படையினரை திசை திருப்புவதற்காகவே விடுதலைப் புலி பயங்கரவாதிகள் தெற்கில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். தோல்வியடைந்து வரும் பயங்கரவாதிகளை முற்றாக ஒழிப்பதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். புலிகளுக்கு ஆதரவாக சிங்களவர்கள் சிலரும் செயற்படுகின்றனர் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் கோரிக்கை விடுத்தார்.

வீரமிக்க முப்படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விரக்தியடைந்து பொது மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு தங்கள் பலத்தை வெளிக்காட்ட புலி பயங்கரவாதிகள் முற்படுகின்றனர். ஆனால் யதார்த்தம் வேறு விதமாக பதில் கூறும் என்றும் பிரதமர் சொன்னார்.

பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்று காலை 9.30க்கு கூடியது. வழமையான தின பணிகள் முடிவடைந்ததும் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மேலும் கூறுகையில், மக்களின் வாழும் உரிமையை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பறிக்கின்றனர். வீரமிக்க முப்படைகளின் தாக்குதலில் தோல்வியடைந்து செய்வதறியாத நிலையிலேயே பொது மக்கள் மீதான தாக்குதல்களை நடத்துகின்றார்கள். விளக்கு அணைவதற்கு முன்னர் பிரகாசிப்பது போன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தி தங்கள் பலத்தை பயங்கரவாதிகள் நிரூபிக்கின்றனர். ஆனால் யதார்த்தம் அதற்கு வேறுவிதமாக பதில் கூறும்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 68 முப்படையினர் மரணமடைந்தனர். 468 பேர் காயமடைந்துமுள்ளனர். பொது மக்கள் 78 பேர் கொல்லப்பட்டும் 110 பேர் காயமடைந்துமுள்ளனர். புலிகளுக்கு ஆதரவாக சிங்களவர் சிலரும் செயற்படுகின்றனர். பாதுகாப்பு தரப்பினரில் சிலரும் புலிகளுக்கு உதவியளிக்கின்றனர். இவை தொடர்பாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

தோல்வியடையும் பயங்கரவாதிகள் தங்கள் சகாக்களை கைவிட்டு ஓடுகின்றனர். இந்த பயங்கரவாதிகளுக்கு ஒட்சிசன் கொடுக்க சிலர் முற்படுகின்றனர். சத்துணவுகளை பயங்கரவாதிகளின் பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல முற்படுகின்றனர். படையினரின் புத்தி சாதுரியத்தினால் அவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதிகள் பதுங்கி ஒடுங்கி ஓடும்போது அவர்களுக்கு ஒட்சிசன் கொடுக்க முற்படுபவர்கள் பற்றி நாங்கள் அறிந்திருக்கின்றோம் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

தை, மாசியில் இதை விட கூட வரும் போல கிடக்கு.ஸ்கோர் போட்டோடை ஒருத்தர் திரிகிறார். அவர் கவனத்தில் எடுக்கவும்.

இது உறவினர்களிடம் கையளித்தது. தெரியாமல் புதைக்கப்பட்டது??

வெளிநாட்டுச் செய்திகளில் இராணுவம் ஒரு மாதத்தில் 900 ற்கு மேற்பட்ட புலிகளை அழித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

According to the defence ministry, the rebels have lost at least 950 fighters since the beginning of the year, compared with just 42 government soldiers killed. - AFP

இன்னும் 6 மாதத்தில புலிகள அழிக்கிறதெண்டா புலிகள் இந்த தொகையில செத்தால்தானே முடியும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுச் செய்திகளில் இராணுவம் ஒரு மாதத்தில் 900 ற்கு மேற்பட்ட புலிகளை அழித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

QUOTE

According to the defence ministry, the rebels have lost at least 950 fighters since the beginning of the year, compared with just 42 government soldiers killed. - AFP

அப்பிடி பாத்தால் புலிகள் எல்லாம் கிட்ட தட்ட முடிஞ்சிது.இனி வன்னியிலே சிங்க கொடி ஏற்ற வேண்டியது தான் பாக்கி.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அவர்களுக்கு,

இன்றுவரை கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கை அரச தகவல்களின் படி யாழ்க் குடா நாட்டின் மக்கள் தொகையை விடக் கூடுதலானது. இதை நான் கூறவில்லை, சிங்கள ராணுவத்திற்கு அறிவுரை கூறும் ராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாசு கூறியது. அப்படியென்றால் எவ்வளவு தெரியுமா ? வெறும் 400,000 தான்!

எந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும் இதைப் பெரிசாக எடுப்பதில்லை. எல்லாச் செய்தியையும் வாசித்து விட்டு, " இதைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை " என்றுதான் முடிப்பார்கள். இப்போது தெரிகிறதல்லவா சிறிலங்காவின் நம்பகத்தன்மை.

31-01-2008 => 20251

31-12.2007 => 20066

20-11-2007 => 19887

31-08-2007 => 19539

31-07-2007 => 19476

15-05-2007 => 19204

20-11-2006 => 18742

இதன் படி தமிழர் தரப்பில 20.11.2007 இல இருந்து 31.12.2007 வரை 179 வீரச்சாவுகள்.

சிறீலங்கா உண்மையான இழப்புகளில வெறும் 10 வீதத்தை தான் சொல்லுது எண்டு வைச்சால்; 680.

சிங்களவரின் சனத்தொகை தமிழரின் சனத்தொகையை விட குறைந்த பட்சம் 5 மடங்காவது இருக்கும் எண்டு பாத்தாலே சமநிலையில இருக்கிறம் எண்டு சொல்லாம்.

காயப்படுகிறவையின்ரை கணக்கை எடுத்தாலும் சிறீலங்காவிலையும் தமிழர் தரப்பிடமும் சம அளவிலான மருத்துவ வசதிகள் இருக்கு ஆனபடியால் அந்தக் கணக்குப் படியும் சமநிலை பேணப்படுகுது.

சிறீலங்காவில இருக்கிற ம

காயப்படுகிறவையின்ரை கணக்கை எடுத்தாலும் சிறீலங்காவிலையும் தமிழர் தரப்பிடமும் சம அளவிலான மருத்துவ வசதிகள் இருக்கு ஆனபடியால் அந்தக் கணக்குப் படியும் சமநிலை பேணப்படுகுது.

சிறீலங்காவில இருக்கிற ம

எங்க குறுக்ஸ் மிச்சத்தை காணேல....?....."ம" வோட நிக்குது....!

Edited by சாணக்கியன்

சிறீலங்காவில மருத்துவ வசதிகளிற்கு வருடாந்த என்ன budget எண்டதைப் பற்றி எழுதினா எங்கடை உற்சாகமாக இருக்கிற சனம் வந்து அவதாரம் காவியநாயகர்கள் இறுதிப் புலியின் இறுதி மூச்சு வரை குமரி கடாரம் எண்ணுங்கள் அது தான் நிப்பாட்டிப் போட்டன்.

சிறீலங்காவில மருத்துவ வசதிகளிற்கு வருடாந்த என்ன budget எண்டதைப் பற்றி எழுதினா எங்கடை உற்சாகமாக இருக்கிற சனம் வந்து அவதாரம் காவியநாயகர்கள் இறுதிப் புலியின் இறுதி மூச்சு வரை குமரி கடாரம் எண்ணுங்கள் அது தான் நிப்பாட்டிப் போட்டன்.

நிஜங்கள் வலிக்கிறது!

மாயையில் வாழ்ந்திடவே நெஞ்சம் துடிக்கிறது!

வலித்தாலும் நிஜங்களே விடுதலையை வென்றுதரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.