Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'காதலர் தினம்' ஹீரோ நடிகர் குணால் தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'காதலர் தினம்' ஹீரோ நடிகர் குணால் தற்கொலை

வியாழக்கிழமை, பிப்ரவரி 7, 2008

மும்பை: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

காதலர் தினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் குணார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

ஆனாலும் முன்னணிக்கு வரவில்லை. மும்பையில் லாவண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். அவரையே திருமணமும் செய்ய இருந்தார்.

இந் நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

http://thatstamil.oneindia.in/news/2008/02...ts-suicide.html

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nedukkalapoovan

மும்பை: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையைச் சேர்ந்தவர் நடிகர் குணால் என்ற குணால் சிங். காதலர் தினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சிம்ரனின் தங்கை மோனலுடன் (இவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவுகூறத்தக்கது) பார்வை ஒன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசுமே, நண்பனின் காதலி, வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் குணால். கடைசியாக அவர் நடித்த படம் நண்பனின் காதலி.

மும்பையில் ஓஷிவாரா பகுதியில் நடிகை லாவண்யாவுடன் வசித்து வந்தார். அவரையே திருமணமும் செய்யவும் நிச்சயிக்கப்பட்டிருந்தது. லாவண்யா இப்போது தான் இந்தியில் நடிக்க ஆரம்பித்துள்ள புதுமுக நடிகையாவார்.

இந் நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் குணால் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டதால் அவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

காதலர் தினம் படத்திற்குப் பின்னர் அவர் நடித்த எந்தப் படமும் ஹிட் ஆகவில்லை. இதனால் பெரிய ஹீரோவாக முடியாமல் போனதால் பெரும் வருத்தத்தில் இருந்தார் குணால். கடந்த சில மாதங்களாகவே அவர் கடும் டிப்ரஷனில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குணால் மரணத்திற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், இயக்குநர் கதிர், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Edited by kirubakaran

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினம் நெருங்கும் சமயத்தில் ஒரு காதல் மரணம். :icon_mrgreen::lol:

இதய அஞ்சலிகள்... செய்தியை பார்க்க மிகவும் அதிர்ச்சியாக இருக்கின்றது. என்னை மிகவும் கவர்ந்த ஒரு நடிகர்.

எத்தனை கோடி தமிழர் இவரது படத்தை, பாடல்களை, நடிப்பை பார்த்து இரசித்து இருப்பார்கள். கடைசியில் இவருக்கு கூட ஒரு பெண்ணால் நிறைந்த வாழ்வை கொடுக்கமுடியவில்லையா? துயரமான சம்பவம்..

ஆழ்ந்த இரங்கல்கள்!

என்னுடைய டீபஸ்ட் சிம்பத்தி குணால் அண்ணாவிற்கு :wub: ...அது சரி யாழ் களமெம்பர்ஸ் சரியா பீல் பண்ணுற மாதிரி இருக்கு ஒருத்தரும் பீல் பண்ணாதையுங்கோ :wub: நாளைக்கு நீங்களும் தான் மேல போக போறியள் பிறகேன் பீல் பண்ணுறியள் :lol: ...எல்லாருக்கும் இப்பவே என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் இன்கூலூட் மீ.... :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதலித்தவர்கள் இறக்கலாம் ஆனால் காதல் என்றும் இறப்பதில்லை" :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சினிமா உலகத்தில் அதிகம் பெண்கள் தான் தற்கொலை செய்யிறாங்க. இப்ப தான் முதன் முதலா கேள்விப்படுறேன். ஒரு ஆண் தற்கொலை செய்திருக்கிறது பற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான சம்பவம். எத்தனையோ உள்ளங்களை கொள்ளை கொண்டவர்.கடைசியில் தற்கொலை செய்து கொண்டாரா? நம்பவே முடியவில்லை.ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரிண்ட நினைவா எண்டு நினைக்கிறன். இப்ப கனடா ரீ.வி.ஐ தொலைக்காட்சியில இல காதலர் தினம் படம் போடுறாங்கள். பார்க்க விசரா இருக்கிது. நான் படத்தில ஆள பாத்துப்புட்டு என்னமோ மாதிரி ஜாலியாய் வாழுவார் எண்டு நினைச்சன். ஆனா கடைசியில கதை முடிவப்பாத்தா இப்பிடியாப் போச்சிது.

சோகமான சம்பவம். எத்தனையோ உள்ளங்களை கொள்ளை கொண்டவர்.கடைசியில் தற்கொலை செய்து கொண்டாரா? நம்பவே முடியவில்லை.ஆழ்ந்த அனுதாபங்கள்.

உங்கட உள்ளத்தையும் அவர் கொள்ளை கொண்டு விட்டாரா? .அதுசரி குணாலுடன் கிசு கிசுக்கப்பட்ட (உள்ளம் கொள்ளை கொண்ட)மோனல் (அதுதான் சிம்ரனின் சகோதரி) முன்பு தற்கொலை செய்தது தெரியும் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி குணாலுடன் கிசு கிசுக்கப்பட்ட (உள்ளம் கொள்ளை கொண்ட)மோனல் (அதுதான் சிம்ரனின் சகோதரி) முன்பு தற்கொலை செய்தது தெரியும் தானே.

ஒரு வேளை மோனலின் ஆவி காரணமாய் இருக்குமோ? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

மோனலின் ஆவியோ என்னவோ, இப்பவும் ஒரு ஆவியுடன் தானாம் இருந்தவர் என வதந்தி. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகளும் இருக்கினமாம். மோனலோட ஏற்கனவே கசமுசாவாகி மோனலும் கோணலாப் போட்டுது. பிறகு இன்னொரு பெண்ணோட லிவிங்ஸ்டன்.. :wub:

ம்ம்ம்.. ஆள் பூனை மாதிரி இருந்தாலும் குளப்படி போல இருக்குது. :huh:

மோனலோ கோணலோ... ஒருவன் தற்கொலை செய்யுறான் என்டால்... கொஞ்சம் யோசிக்க வேணும். ஒரு ரவுடி இல்லாட்டி பொறுக்கி தற்கொலை செய்வானா? ஒரு அப்பாவிதான் பொதுவா தற்கொலை செய்வான். நீங்கள் சொல்லிற மோனல் கதை விளங்கவில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

மோனலோ கோணலோ... ஒருவன் தற்கொலை செய்யுறான் என்டால்... கொஞ்சம் யோசிக்க வேணும். ஒரு ரவுடி இல்லாட்டி பொறுக்கி தற்கொலை செய்வானா? ஒரு அப்பாவிதான் பொதுவா தற்கொலை செய்வான். நீங்கள் சொல்லிற மோனல் கதை விளங்கவில்ல.

கலைஞன்,

இவரென்ன உத்தம புத்திரரோ? இவராலதான் மோனல் தற்கொலை செஞ்சவ எண்டு அவவிண்ட அம்மா சொன்னதாக ஞாபகம். உண்மை பொய் தெரியாது. ஆனால் மனைவி பிள்ளையை விட்டுவிட்டு (விவாகரத்து செய்யவில்லை) இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியிருக்கிறார். அந்தப்பெண்ணை கல்யாணம் செய்யவும் நிச்சயித்திருக்கினம். பிறகு அதில என்னவோ பிரச்சினையாம். இது தற்கொலையெண்டு இன்னும் உறுதியில்லை. இவர் குடும்பம் நடத்தின லேடி இவர் தொங்கேக்குள்ள பாத்ரூமில இருந்தவவாம். ஒரே கசமுசாதான் :wub:

காதல் ஒழிப்பு சங்கத்தில போட்டு இந்த விசயத்தை நாறடிக்கலாம்.. :huh:

மன்னிக்கவும் டங்குவார். எனது பொதுவான அனுதாபம் இவர் நடிப்பு மீது உள்ள ஈடுபாடே. இவரது தனிப்பட்ட விசயங்கள் பற்றி எனக்கு தெரியாது. மேலும், சினிமா கசமுசாக்கள் பற்றிய செய்திகள் ஒன்றும் நான் பார்ப்பதில்லை.

சில காலத்தின் முன் கமலகாசன் அவர்கள் ஒரு கருத்து கூறி இருந்தார். அதாவது எமது படத்தை பார்த்து பொழுதுபோக்குவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளுங்கள். தயவுசெய்து எங்களது தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கைகளினுள் மூக்கைப்போட்டு நுழைக்காதீர்கள் என்று...

நீங்கள் சொல்வது உண்மைதான். இவருக்கு இரண்டு பிள்ளைகள், மனைவி உள்ளனர். மனைவி தனது பெற்றோரை பார்க்க வேற்று ஊர் சென்ற சமயத்தில் இந்த விபரீதம் நடந்துள்ளது. இவரது நண்பி லவீணா இவர் கூட தற்கொலை நடந்த நேரம் இருந்துள்ளார். அவர் வோஸ்ரூமுக்கு சென்ற சமயம் தற்கொலை செய்து உள்ளார். தான் இவர் தற்கொலை செய்ததை பார்க்கவில்லை என்று நண்பி கூறியுள்ளார்.

தற்கொலை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிது. ஒரு பெண் தன்னுடன் கூட இருந்த நேரம் அந்தப்பெண்ணுக்கு எதுவித பாதிப்பும் நடக்காத சமயத்தில் ஓர் ஆண் தற்கொலை செய்கின்றான் என்றால் பல விசயங்களை பற்றி சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

என்ன இருந்தாலும் இது எங்களுக்கு தேவையில்லாத ஒரு ஆராய்ச்சி.

இந்த நடிகன் எனது மனம் கவர்ந்த நடிகன். இப்படியான ஒரு முடிவு இவனுக்கு ஏற்பட்டது மிகவும் துர் அதிஸ்டவசமானது. அவரது ஆத்மா சாந்தி அடைவதாக!

குணால் காதலி பரபரப்பு வாக்குமூலம்!!

நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டபோது அவருடன் தங்கியிருந்த அவரது காதலியும், வளரும் இளம் நடிகையுமான லோவினா பாட்டியா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.

காதலர் தினம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் குணால் மும்பையில் உள்ள தனது அடுக்கு மாடிக் குடியிருப்பில் நேற்று அதிகாலை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டபோது அவரது வீட்டில், இளம் நடிகை லோவினா பாட்டியா மட்டுமே இருந்தார். இதையடுத்து லோவினாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குணால் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்து கொண்ட தினத்தன்று குணாலின் மனைவி அனுராதா தனது இரு குழந்தைகளுடன் அகமத்நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அன்று முழுவதும் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தாராம் குணால். லோவினாவுடன், குணால் நெருங்கிப் பழகியதால் அனுராதா மனமுடைந்தார் எனவும், இதனால்தான் தாய் வீட்டுக்கு அவர் போனதாகவும் கூறப்படுகிறது.

பேஷன் டிசைனராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர் லோவினா பாட்டியா. நடிப்பு மற்றும் திரைப்பட உருவாக்கத்தில் டிப்ளமோ பெற்றுள்ள இவர், ஷாகித் கபூர், அம்ரிதா ராவ் ஆகியோர் நடித்த விவாஹ் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இந் நிலையில், குணாலுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குணால் தயாரித்து நடிக்கவிருந்த புதிய இந்திப் படத்தில் லோவினா ஹீரோயினாக அறிமுகமாகவிருந்தார்.

இதுதொடர்பாக அவருடன் விவாதிக்கவும், தான் அணியப் போகும் புதிய ஆடைகளை அவரிடம் காட்டவும் குணால் வீட்டுக்கு வந்ததாகவும், அங்கேயே தங்கிவிட்டு, அதிகாலையில்தான் தான் குளியலறைக்குச் சென்றபோது குணால் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் லோவினா கூறியுள்ளார்.

நான் பாத்ரூமுக்கு சென்றிருந்தேன். பத்து நிமிடம் கழித்து திரும்பியபோது மின்விசிறியில் குணல் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளார் லோவினா.

உடனடியாக தனது தந்தைக்கும், குணலின் தந்தைக்கும் போன் மூலம் தகவல் கொடுத்துவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே திருமணமான குணாலுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் லோவினா. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனக்கும், குணாலுக்கும் இடையே எந்தவித காதலும் இல்லை என்றும், சாதாரண நண்பர்களாகத்தான் பழகி வந்ததாகவும் கூறியுள்ளார் லோவினா.

குணால் தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடிக்க, லோவினா நாயகியாக நடிக்க புதிய படம் ஒன்றை வருகிற 15ம் தேதி தொடங்கவிருந்தனர். அப்படத்துக்கு யோகி எனவும் பெயர் சூட்டியிருந்தார் குணால் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ்தமிழ்

ஏற்கனவே திருமணமான குணாலுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் லோவினா. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனக்கும், குணாலுக்கும் இடையே எந்தவித காதலும் இல்லை என்றும், சாதாரண நண்பர்களாகத்தான் பழகி வந்ததாகவும் கூறியுள்ளார் லோவினா.

இது உண்மையா இருந்தாலும் சனம் நம்பவா போகிது? சும்மாவே கண், மூக்கு, வாய், காது வைக்கிறதுகள்... இந்த வாக்குமூலங்களை நம்பவா போகிதுகள்?

  • கருத்துக்கள உறவுகள்

குணால் தந்தை குற்றச்சாட்டு

Monday, 11 February, 2008 03:15 PM

.

மும்பை, பிப்.11: நடிகர் குணால் தற்கொலை செய்து கொள்ள எந்த காரணமும் இல்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது தந்தை கூறியுள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு இந்த வழக்கில் பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

காதலர் தினம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுக மான குணால் சிங் பல படங்களில் நடித்துள்ளார்.மும்பை ஆஷிர்வாரா பகுதியில் உள்ள வென்ட்சார் அடுக்குமாடி குடியிருப் பில் மனைவி அனுராதா, 2 குழந்தைகளுடன் வசித்து வந்த குணால், கடந்த 6ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்ட போது மனைவி குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். குணால் தூக்கில் தொங்கிய போது அவரது காதலி லவினா அதே வீட்டில் இருந்திருக்கிறார். தான் குளியல் அறையில் இருந்தபோது குணால் தூக்கில் தொங்கியதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆனால், போலீசார் அந்த வாக்குமூலத்தை நம்ப மறுத்துவருவதாக கூறப்படுகிறது. குணாலின் மரணத்தில் மர்மம் நீடித்துவரும் இந்த நிலையில், திடீர் திருப்பமாக குணாலின் தந்தை ராஜேந்திர சிங், குணால் தற்கொலை செய்து கொண்டதை மறுத்துள்ளார்.

என் மகன் குணாலுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எந்த மனக்கவலையும் இல்லை. சம்பவம் நடந்த அன்று கூட அவன் சந்தோஷமாகவே இருந்தான்.

எனவே, அவன் தற்கொலை செய்து கொண்டான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ள அவனுக்கு எந்த காரணமும் இல்லை.

எனவே, குணால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். இதில் உண்மை என்ன என்பதை போலீசாரும், பத்திரிகையாளர்களும் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டால் குணால் மரணம் தொடர்பான வழக்கில் சூடுபிடித்துள்ளது. லவினா மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது.

மனைவியை விவகாரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லவினா, குணாலிடம் வலியுறுத்தி வந்ததாக வும், இதனால் அடிக்கடி இவர்களுக் கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிலரை வைத்து குணாலை கொன்று அவரது பிணத்தை தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.

malaisudar.com

அப்பா இப்படி அறிக்கை விட்டு இருக்கிறாரோ? :huh:

ஆனா ஒரு பெண் இவ்வளவு மோட்டுத்தனமாக கொலை செய்து இருப்பா என்பது நம்பமுடியாதது. கொலை செய்வது என்றால் வேற மாதிரி செய்து இருக்கலாம். இப்படி எல்லாம் கஸ்டப்பட்டு இருக்க தேவை இல்லை.

தற்கொலை செய்து இருக்கவே வாய்ப்பு அதிகம். கொலை செய்யப்பட்டு இருப்பார் எண்டு நான் நினைக்க இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.