Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம்
2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்

ஞாயிறு -4
திங்கள்- 4
செவ்வாய் -4
புதன் -4
வியாழன் -4
வெள்ளி-4
சனி-4

 

10940561_875089252529209_124668125674568

  • Replies 516
  • Views 131.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஊரில் விவசாயம் செய்யும்/செய்ய விரும்பும் (பாலபத்ரஓணாண்டி)நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.....!  👍 பி.கு: தோட்டத்தில் நின்று சுவையான தேநீர் அருந்தும் போது ஒரு கணம் சுவியையும் நினைக்கவும்.....!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

  • தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் :  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ::::::::::: வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலு

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம்

2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்

ஞாயிறு -4

திங்கள்- 4

செவ்வாய் -4

புதன் -4

வியாழன் -4

வெள்ளி-4

சனி-4

 

10940561_875089252529209_124668125674568

 

அடேங்கப்பா நாட்கள் குறைந்த மாதத்திலும் கிழமையின் எழுநாட்களும் நான்காக வருகின்றது.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


a3ab6a747cb89abd50f6e8a2c2d7816f
  • கருத்துக்கள உறவுகள்

----

கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்!

இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான்.

கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன.

இச்சீண்டல்களை தொடர்ந்து பெண் கடல் குதிரையின் உடல் சிலிர்த்து விடுகின்றது.

ஆண் கடல் குதிரையின் வயிற்றுப் பகுதியில் இனப் பெருக்க பை என்கிற உறுப்பு காணப்படுகின்றது.

ஆணின் இவ்வுறுப்புக்குள் பெண் கடல் குதிரை மிகவும் நுட்பமான முறையில் முட்டைகளை உட்செலுத்தி விடுகின்றது.

ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரித்து விடுகின்றது.

ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சுரக்கின்ற ஒரு வகை திரவம்தான் குட்டிகளுக்கு உணவு.

மூன்று வாரங்களின் பின் குட்டிகளை வெளித் தள்ளி விடுகின்றது ஆண் கடல் குதிரை.

ஒரு பெரிய படையை போல குட்டிகள் வெளியில் வந்து விடுகின்றன. பிரசவ வேதனை மிகவும் கொடுமையானது தான்.

 

தகவலுக்கு, நன்றி நுணா.

 

https://www.youtube.com/watch?v=MsHCqrrU-Gk

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேதைகளின் அப்பாக்கள்...!    

  உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர். இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன:

 

வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார். தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார். பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார். பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி. ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான். ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார். மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார். எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும். பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர். எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம். 

Copy and WIN : http://ow.ly/KNICZ

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…

ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.

மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.

அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.

அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்

மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்

கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.

யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.

டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்

823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம்

2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்

ஞாயிறு -4

திங்கள்- 4

செவ்வாய் -4

புதன் -4

வியாழன் -4

வெள்ளி-4

சனி-4

 

10940561_875089252529209_124668125674568

இந்த தகவல் பொய்.
2026ம் ஆண்டும் மாசி மாதம் இதை மதிரிவரும்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Surveyor , அரிய தகவலுக்கு நன்றி.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடாபியின் மறுபக்கம்......

1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.

5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.

7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.

8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.

9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.

10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.

11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.

12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.

13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.

14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.

15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.

16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.

fb

17671_478162869006692_724559665163381662

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்..!!

மாம்பழங்கள்
 
1000 வகை மாம்பழங்கள் சுவை, நிறம், வடிவம் என இந்தியாவில்
 
1000வகையான மாம்பழவகைகள் இருக்கின்றன. வேறு எந்த ஒரு கனியும் இவ்வளவு வகைகளில் கிடை ப்பதும் இல்லை. விளைவிக்கப்படுவதும் இல்லை.
 
கால நிலைகள்
 
6 கால நிலைகள் கோடை பருவ மழை, கோடை காலம், குளிர் பருவ மழை, குளிர் காலம், இலையுதிர் மற்றும் வசந்த காலம் என்று ஆறு கால நிலைகள் இந்தியாவில் நிலவுகி ன்றன.
 
அதிக மசூதிகள் கொண்ட இந்துக்கள் நாடு
 
இந்துக்கள் நாடு எனும் போதிலும் கூட, உலகிலேயே அதிக மசூதிகள் கொண்ட நாடு இந்தியா தான். உலகெங்கிலும் 4 லட்சம் மசூதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
சோம்நாத் கோவில்
 
சோம்நாத் கோவிலுக்கும் தென் துருவத்திற்கும் இடை யே எந்த நிலப் பரப்பும் கிடையாது.
 
உலகின் முதல் பல்கலைகழகம்
 
பீகாரில் இருக்கும் தக்ஷில்லா பல்கலை கழகம் தான் உலகின் பழமையான மற்றும் முதல் பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மாண வர்களுக்கு 60வது பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டுள்ள து.
 
உலகிலேயே நீளமான இராமேஸ்வரம் கோவில் நடைப்பாதை
 
இராமேஸ்வரம்கோவிலில் உள்ள நடைபாதை தான் உலகிலேயே நீளமான கோவில் நடைபாதை ஆகும். 4000 அடி நீளம் கொண்ட இந்த நடை பாதையின் இருப்புரங்களிலும் 985 தூண்கள் இருக்கின்றன. முதல் கண் அறுவைசிகிச்சை கண் மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும்.
 
அரபிக் எண்கள்
 
அரபிக் எண்கள், அரபிக் என்று பெயர் இருந்தாலும், அரபிக் எண்களைக் கண்டுப்பிடித்தவர்கள் இந்தியர்கள் தான். மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையின் தந்தையர்கள் இந்தியர்கள்மருத்துவத்தின் தந்தை 2500ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆயுர்வேதாதான் முதல் மருத்துவ முறையாகும். சுஷ்ருதா, இவர் 2600 வருடங்களுக்கு முன்பே அறுவைசிகிச்சை செய்துள்ளார். அதனால், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றின் தந்தைகள் இந்தியர்கள் தான்.
 
உலகின் பணக்கார கோவில்
 
உலகின்பணக்காரகோவில் எனும்பெருமை பத்மனா ப சுவாமி கோவிலையே சேரும். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கண்டெடுக்கப்பட்ட லட்சம் கோடிகளை தாண்டும் அரிய புதையலே இதற்கு காரணம்.
 
உலகின் பெரிய தபால் துறை
 
இந்தியாவில் மொத்தம் 1,50,000அஞ்சல் அலுவல கங்கள் இருக்கின்றன. உலகிலேயே பெரிய அஞ்சல் துறை இந்தியாவுடையது தான்.
 
வைரத்தை கண்டுபிடித்த‍வர்கள் இந்தியர்கள்
 
வைரத்தை கண்டுப்பிடித்தவர்கள் 1896 ஆம் ஆண்டு வரை வைரம் இருக்கும் ஒரே நாடாக அறியப்பட்டது இந்தியாதான். மற்றும் வைரத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவர்களும் இந்தியர்கள் தான்.
  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
netaji2.jpg
 
"Freedom is not given, it is taken."






 "One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next."
 
"Remember that the greatest crime is to compromise with injustice and wrong."
 
"A true soldier needs both military and spiritual training."
 
 
"No real change in history has ever been achieved by discussions."
 
"For an enslaved people, there can be no greater pride, no higher honor, than to be the first soldier in the army of liberation."
 
Nationalism is inspired by the highest ideals of the human race, satyam [the truth], shivam [the God], sundaram [the beautiful].
 
"You give me your blood and I will give you Independence"

http://www.bosearchive.blogspot.in/2015/11/great-quotes-of-subhas-bose.html#more

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ருதி என்றால் என்ன?

 
images?q=tbn:ANd9GcQdA7-pA47qsSKMeLHIcuz
 

சூப்பர் சிங்கரில் அடிக்கடி கேட்கும் வசனம் என்றால் "ஸ்ருதி கொஞ்சம் வெலகிடுச்சு"
சுருதினா என்னங்க? அது எப்புடிங்க விலகும்?
நான் ஒரு விளக்கம் தரேன்.
 
இசையில் எழு ஸ்வரங்கள் இருக்கிறது.
ச ரி க ம ப த நி
 
இன்னும் டெக்னிகலா சொன்னா ரி க ம த நி... இந்த ஐந்து ஸ்வரங்களுக்கும் இரண்டு நிலை உள்ளன. ரி1, ரி2, க1, க2, ம1, ம2, த1, த2, நி1, நி2 என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இவற்றை செமிடோன்ஸ் (semitones) என்பர். 
எனவே மொத்தம் பன்னிரண்டு செமி டோன்ஸ் (ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2 or C, C# D, D#, E, F, F#, G, G#, A, A#, B) இருக்கின்றது என்பதை அறிகிறோம். 
 
இது என்ன பன்னிரண்டு கணக்கு என்பதை வேறு ஒரு பதிவில் டீடைலாக சொல்கிறேன். 
 
இப்போது ஒரு கேள்வி உங்களுக்கு...
 
கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு புள்ளி தான் உள்ளது. அந்த புள்ளி வழியாக செல்லும் எத்தனை நேர் கோடுகளை உங்களால் வரைய முடியும்?
How many lines can you draw which can pass through a single point?
 
dot.png
 
விடை 'முடிவிலி' (infinity) ஆகும்.
lines%2Bthru%2Bone%2Bdot.png
 
இப்போது இந்த படத்தை பாருங்கள். இரண்டு புள்ளிகள் உள்ளன.
இப்போது நீங்கள் மறுபடியும் நேர்கோடு வரையவேண்டும். அந்த கோடு இந்த இரண்டு புள்ளிகளின் வழியாகவும் செல்லவேண்டும். இது போன்ற எத்தனை கோடுகளை உங்களால் வரைய முடியும்?
How many lines can you draw which can pass through two points?
 
 
dots.png
விடை: ஒன்று.
 
ஒரே ஒரு கோடு மட்டும் தான் உங்களால் வரைய முடியும்!
lines%2Bthru%2Btwo%2Bdot.png
அந்த கோடு தான் சுருதி.
அந்த இரண்டு புள்ளிகள் தான் 'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்கள்.
 
'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்களையும் ஏற்றிச் செல்லும் கோடு தான் சுருதி.
ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வெண் (frequency) உள்ளது. பொதுவாக 'ச' என்னும் ஸ்வரத்திற்கு '265.6 Hz' அதிர்வெண் இருக்கும்.

ஒரு பாடல் பாடப்படும்போதோ வாசிக்கப்படும்போதோ ஒரே ஸ்ருதியில்  (ஒரே நேர் கோடு) இருக்க வேண்டும். சில நேரம் நாம் நம்மை அறியாமல் 'ச', 'ப' வின் அதிர்வெண்ணை மாற்றி விடுவோம். அதாவது இரண்டு புள்ளிகளின் இடம் பாரி விடும். அப்போது மாறிய இடங்களில் உள்ள புள்ளிகளை இணைக்க வேறு ஒரு கோடு தான் நாம் வரைய வேண்டும். வேறு ஒரு கோடு என்றால் வேறு ஒரு ஸ்ருதி என்று அர்த்தம். இதுவே சுருதி விலகுதல் ஆகும்.

உதாரணம் சொன்னால் இன்னும் நன்றாக புரியும்...


இரண்டு பேர் சேர்ந்து ஒரு பாடலை பாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் முதலில் சரியான ஸ்ருதியில் படுகிறார்கள். நடுவில் ஒருவர், தன்னை அறியாமல், 'ச' வின் அதிர்வெண்ணை சற்று அதிகரித்து பாடி விடுகிறார். இன்னொருவர் மாற்றாமல் அதே நிலையில் பாடுகிறார் என்றால், கேட்பவருக்கு ஒரு பாடகர் ஸ்ருதியை மாற்றி விட்டார் என்பது தெரிந்து விடும்.
 
dev.png



சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் ஒருவர் சோலோவாக பாடுகிறார், ஆர்செஸ்ட்ராவுடன் என்றால், இசைக்குழுவும், பாடுபவரும் ஒரே ஸ்ருதியில் பாட வேண்டும். பொதுவாக வாசிப்பில் ஸ்ருதி அதிகம் பிறழாது, அதுவும் கீபோர்ட் போன்ற எலக்ட்ரானிக் வாதியங்களில். எனவே பாடகர், எங்கேயாவது 'ச' அல்லது 'ப'வின் அதிர்வெண்ணை மாற்றினால், அப்போது இசைக்குழுவின் ஸ்ருதிக்கும் பாடகர் ஸ்ருதிக்கும் உள்ள வேறுபாடு தெரிந்துவிடும்.

http://naaradha.blogspot.com/

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்?

ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்?
 
எல்லோருக்கும் வணக்கம், இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களே. உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100%பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.
சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணா அல்லது பெண்ணா என்று நம்மால் இலகுவாக கூறிவிட முடிகிறதுதானே, எப்படி நம்மால் கண்டறிந்துகொள்ள முடிகிறது என்றால், ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதால் தான். அதேவேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொண்டோமானால் அவர்களின் குரல் மென்மையாகவும் (Soft) இனிமையாகவும் இருக்கும் அந்த மென்மைதான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரலை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய முக்கிய காரணி ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயது வரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம் உணர்ந்து கொள்ள முடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விளக்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என்னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மனிதர்களின் தொண்டைப்பகுதியில் குறிப்பாக குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள் தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords)என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சப்தத்தை உண்டாக்குகிறது.
வீணையில் இழுத்துக்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும் போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவே விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. சாதாரணமாக குரல்நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், வளர்ந்த பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந்த ஆண்களில் வினாடிக்கு 120 – 130முறையும் வளர்ந்த பெண்ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைகளில் 300 முதல் 310முறையும் அதிர்கிறது.
நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம்முடைய குரல்நாண் மிகச் சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளரவளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையும். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில் தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்களில் குரல்நாண் வளர வளர அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலும் சரி வளர்ச்சியிலும் சரி குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல்நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டிவிடும். இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது.
பெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயது வரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ்ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனாக மாறிவிடுகிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல்நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவதால் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாமல் போகிறது.
நாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடையாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதற்க்காக நாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும் போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படைவதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவாசிப்பதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப்போதும் ஈரமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் நம்முடைய குரலில் இளமையை கட்டிவைத்திருக்க முடியும்.
குரல்நாண்கள் சப்தத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் தான் நம்மால் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனிதனை தவிர ஏனைய விலங்குகளில் இந்த குரல்நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடிந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல் போவதால் அவற்றால் மனிதர்களைப் போல வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க இயலுவதில்லை.
  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். 

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார். 

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள். 

நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.

பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!! 

எனவே,

வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள். 

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.........!!!
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆர்யா பெர்மானா என்னும் இந்த சிறுவனே உலகின் பருமனான சிறுவன் என சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.பத்து வயதில் 192 கிலோ எடையுடன் இந்தோனேசியாவில் வசிக்கிறார்...

13509055_1159236920763705_78743018097637

13507119_1159236947430369_44347233656856

13507224_1159236910763706_63338281745668

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்திற்கு (UK) அடுத்து இந்து மத மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது நெதர்லாந்து நாடு.
இந்திய வரலாற்றில் டச்சுக்காரர்கள் என்பவர்களை நாம் அறிந்திருப்போம் அவர்களின் நாடு தான் நெதர்லாந்து. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் மாபெரும் வர்த்தகத்தை கொண்டவர்கள் தான் இவர்கள். அப்பொழுது இந்தியர்களும், இலங்கை மக்களும் அடிமையாக அழைத்துச் செல்லப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர். பின்னர் பல நெதர்லாந்து மக்கள் இந்து மதத்தை ஏற்று வழிபடுகின்றனர்.
அங்கே, இந்துக்கள்
1980 ல் 34,000 ஆகவும்,
1990 ல் 61,000 ஆகவும்,
2000 ல் 90,000 ஆகவும், இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தற்பொழுது
இந்து மக்கள் தொகை 2,15, 000 ஆக உயர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது என நெதர்லாந்து இந்து கவுன்சில் தெரிவித்துள்ளது.
என்ன சிறப்புன்னா இந்துன்னா இந்தியா இந்தியர்களின் கலாச்சாரம் என்று அங்குள்ள மக்கள் சொல்வது,
அங்கு யாரும் அற்புத கூட்டங்கள் நடத்தி மக்களை மதம் மாற்றுவது இல்லைங்கோ...!!!
(படத்தில் ஐரோப்பாவிலேயே உள்ள மிக பெரிய இந்து கோவில் )
http://zeenews.india.com/…/europes-biggest-hindu-temple-in-…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமார் முப்பத்தைந்துஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதி கண்ணதாசனைப் பார்த்து "நீயெல்லாம் ஒரு கவிஞனா"? என்று கேட்டார்.6000 பாடல்களையும் ,5000 கவிதைகளையும் , 232 புத்தகங்களை எழுதியவரை பார்த்து இப்படி கேட்டார்.

கண்ணதாசனை பற்றி ஒரு வரியில் குறிப்பிட வேண்டும் என்றால்....

"போதையிலும் கவிபாடும் மேதை அவன்"

////////////////////////////////////////////////////

இதற்கு பதில் அளிக்கும் கவிஞரின் கவிதை....

////////////////////////////////////////////////

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்கு வைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகந்து நுனி உண்மையின்றி
நா ள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து

வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல..

//////////////////////////////////////////////

பசுமையான கவிஞரின் நினைவுகளுடன்....

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா....
-தமிழன். இரா.பெ. அரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடி என்றால் என்ன?

 

நாடி என்றால் என்ன?

அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி
சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?மனித
உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க
முடியும். இது மருத்துவம் – உடல் மாற்றம்
மற்றும் பல
விஷயங்களுக்கு நமது முன்னோர்கள்
பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர்.
பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட
இந்த நாடி டக்கென்றுடாக்டர் அல்லாத
ஒரு சாதாரண பாட்டி கூட சொல்ல
முடியும் அதிசயம். நாடி பெரும்பாலும்
கைமணிக்கட்டில் பார்ப்பது தான் பெஸ்ட் –
இதை பல்ஸ் ரீடிங் என கூறுவர்.
நாடி தலையில் இருந்து கீழ்
நோக்கி வரும்.
இதை மூன்று கை விரல்களில் கண்டு கொள்ள
முடியும்.கட்டை விரல் / மோதிர விரல் ஆள்
காட்டி விரல் தான் அவை. வாதம் /கபம் /
பித்தம் இந்த நாடி மூலம் மிக
துள்ளியமாக கணிக்க முடியும்.
இதை எப்ப்டி கண்டுபிடிப்பது மற்றும் பல
நாடிகளை பற்றி விலாவாரியாக
கூறுகிறேன்.
வாத நாடி – நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது Index finger
எனப்படும் ஆள்காட்டி விரலில் தெரியும்
வாத நாடி.
பித்த நாடி – நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது நடு Middle
Finger விரலில் தெரிவது வாத நாடி.
கப நாடி – நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது மோதிர
விரலில் Ring Finger தெரிந்தால் அது கப
நாடி.
ஆத்ம நாடி – .நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது சிறிய
விரலில் பிடித்து பார்ப்பது ஆத்ம நாடி
பூத நாடி – நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது Suzhumunai
Imbalance என்னும் மூளை தடுமாற்றம்
தான் பூத நாடி. இது கட்டை விரல் மற்றும்
ஆள்காட்டி விரல் நடுவே தெரியும்
அல்லது நெற்றியில் தெரியும்
இது பாலச்சந்திரா அடங்கல் எனப்படும்.
குரு நாடி – என்றால் வாதம் / கபம் /
பித்தம் / ஆத்ம மற்றூம் பூத நாடிகளின்
கூட்டு கலவை தான் குரு நாடி.
பிரனான் நாடி – இது சாதாரணமாக
யாருக்கும் பார்ப்பதில்லை. இது சில
விபத்து அல்லது பேச்சு மூச்சு இல்லாமல்
யாரவது இருப்பின் அவர்களின் பிராணம்
செல்கிறதா என்று பார்ப்பது.
ஆங்கில மருத்தவம் – அல்லது ஸ்டெத்தஸ்கோப்
சில வருடங்களுக்கு முன் தான்
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாடியை நம்
மூன்னோர்கள் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்தியம்
செய்திருக்கின்றனர். வாதம் / கபம் /
பித்தம் இந்த மூன்றை கன்ட்ரோல்
பண்ணீனாலே போதும் – முக்கால்வாசி நோய்கள்
மனிதனுக்கு வராது.

ravi-apr-19.jpg

http://rajramshivaa.blogspot.ca/2014/04/blog-post_19.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவ ர்களுக்கு

 
image005.jpg?w=300நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை. இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல்டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால் ஏற்படுகிறது தெரியுமா?
தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்
 
image004.jpg?w=300
image006.jpg?w=300
image007.jpg?w=300
 
image008.jpg?w=300
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

Who is Piyush Manush ? Why he is in Jail ? What he did for Salem ? Just see this video and know more details about him ? #StandWithPiyush?

Posted by It's a Medical MirAcle da MAchann on Montag, 18. Juli 2016

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிரோஷிமா

 
 
அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானம் சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று.
சாதரண தர்ப்பை புல்லினை அஸ்வத்தாமன் பெரும் அழிவாக்கும் பிரம்மாஸ்திரமாக மாற்றினான் என்கிறது அது, இந்நாளில் அப்படி யுரேனியம் எனும் மணல் கட்டியிலிருந்து உருவாக்கபடுவதுதான் அணுகுண்டு
அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் தமிழர்கள், நடராஜரின் சிலை தத்துவம் அதனைத்தான் குறிக்கின்றது, திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார், ஏதோ மூட நம்பிக்கையாளன், இந்துஸ்தான் வெறியன் என என்னை நீங்கள் சொல்லிவிடலாம், ஆனால் அமெரிக்க அணுஆய்வுகூடங்களில் நடராஜர் சிலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி.
அப்படி உலகமே அணுவை என்ன செய்யலாம் என நோக்கியபொழுதுதான் ஜாண் டால்டன் அணுவினை பற்றி புதிய கருத்துக்களை சொன்னார், பின்னாளில் அது ஜெர்மானிய விஞ்ஞானிகளின் ஆராய்சி ஆயிற்று. அன்று அவர்கள்தான் அறிவு களஞ்சியங்கள், அன்று என அன்று, இன்று வரை ஜெர்மானியர்கள் அப்படியே
நீல்ஸ்போர், ஐன்ஸ்டீன் எல்லோரும் மண்டையை போட்டு உருட்ட, உலகினை உருட்ட தொடங்கினான் ஹிட்லர். ஹிட்லரிடம் இருந்து தப்புவது யூதர்களுக்கு மகா சவாலானது. மதுவிற்கு எதிராக தமிழகம் போராடுவதை போல எப்படியாவது உயிர்தப்பிவிட கடும் முயற்சிசெய்த காலம், நிரந்தரமாக தப்பிக்க ஒரே வழி ஹிட்லரை கொல்வது.
அமெரிக்காவில் யூதரான ஐன்ஸ்டீனிடம் அணுஆராய்ச்சி செய்ய பணித்தனர், ஐன்ஸ்டீனும் அவருடன் இனொரு யூதரான‌ ஹைமரும் இணைந்தார், யூதர்களை காப்பாற்றும் ஒரே நம்பிக்கையாக அவர்கள் அமெரிக்காவை கண்டனர், இஸ்ரேல் கூட அன்று இல்லை. ஏதாவது செய்து ஹிட்லரை அடக்காவிட்டால் யூத இனம் பிரபஞ்சத்திலே இருக்காது.
அதுவரை ஐன்ஸ்டீனின் ஆற்றல் கொள்கை தாளில் மட்டும் இருந்தது, அது உண்மை என்றால் அணுகுண்டு வெடிக்கவேண்டும், இல்லாவிட்டால் ஐன்ஸ்டீனுக்கு "ராமர் பிள்ளை" நிலைதான். அவரும் பல்லை கடித்துகொண்டுதான் இருந்தார், ஹிட்லரிடம் உயிர்தப்பிய ஹைமரோ அணுகுண்டினை உருவாக்கி தீரவேண்டும் வெறியில்
இருந்தார்.
ஆனால் அணுகுண்டு ஆராய்ச்சியினை தொடங்கி இருந்தார் ஹிட்லர், ஆனால் அணுகுண்டினை விட அவரின் கவனம் விண்வெளி ஆதிக்கத்திலே இருந்தது, எனினும் கிட்டதட்ட பாதி அணுகுண்டு கிணற்றினை தாண்டியிருந்தார் ஹிட்லர், ரஷ்யாவில் அகலக்கால் வைத்து அகாலமரணமடைந்தார். அப்படி இல்லாவிடால் என்றோ அணுகுண்டு செய்திருப்பார், காலம் அவனுக்குத்தான் கனிந்திருந்தது
ஆனால் அவர் வீழ்த்தபட்ட பின்புதான் அணுகுண்டு தயாரிக்கபட்டது, அப்படி அதனை பயன்படுத்தாமலே விட்டிருக்கலாம்.
ஹிட்லர் தான் இல்லையே, இனி ஏன் அணுகுண்டு என யாரும் கேட்கவில்லை காரணம் ஜப்பான். கிழக்காசியாவில் சாமியாட்டம் ஆடிகொண்டிருந்தது, இன்னும் கொஞ்சநாளில் இந்தியா, நேதாஜி "இந்தியாவின் தேசிய தலைவர்" என அறிவிக்கபட இருந்த நிலை.
அது நேதாஜி மூலமாக ஜப்பானிய ஆதிக்கத்தை இந்தியாவில் கொண்டுவரும் முயற்சி என்பதும் தியரி, சொல்லமுடியாது, நேதாஜியினை விரட்டிவிட்டு ஜப்பானிய அரசரை இந்திய அரசராக்க அதிக நேரம் ஆகியிருக்காது, ஆனானபட்ட அமெரிக்காவினையே அன்று நம்ப வைத்து பேர்ஸ் ஹார்பரில் தாக்கியவர்கள்
ஐன்ஸ்டீன் & கோ ஒரு வழியாக 3 ஆண்டுகள் உழைத்து அணுகுண்டினை செய்து 100 அடி உயரகூண்டில் வைத்து சோதித்தார்கள். ஆயிரம் சூரியன் வெடித்த வெளிச்சம், பெரும் சக்தி. தான் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி என்பதை ஐன்ஸ்டீன் நிரூபித்த தருணமது.
அப்பொழுது ஹைமரின் மேற்கோள் குறிப்பிடதக்கது, "ஓராயிரம் சூரியன்கள் ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக இருக்கும்" என்ற பகவத் கீதையின் சுலோகமே தனக்கு நினைவு வந்த்தாக சொன்னார்.
(ஒரு யூதன், அதுவும் தலை சிறந்த விஞ்ஞானி அவரே பகவத்கீதையை படித்திருக்கிறார், அப்துல் கலாமும் அப்படி பட்டவரே. இன்றோ வேற்றுமத நூல்களை படிப்பது பாவம், படித்தால் நரகத்திற்கு போவாய் என் போதிக்கபடுகின்றது)
பின்னர் அந்த நுட்பம் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கபட்டது, அரசு ராணுவத்திற்கு அணுகுண்டு அனுமதி அளித்தது.
நினைத்தவுடன் செய்வதற்கு அணுகுண்டு ஒன்றும் உப்புமா அல்ல, மகா சிரமாமானது. 1 டன் யுரேனியத்தில் 1 கிலோதான் தேவைக்கு மிஞ்சும், அணுகுண்டின் மிக குறைந்த எடையே 50 டன், கணக்கிட்டுகொள்ளுங்கள்.
ஆனால் குறுகிய காலத்தில் 10 குண்டுகள் செய்தார்கள், பெர்லினில் வேண்டாம் அது நமது கையில், இத்தாலியும் தோற்றாகிவிட்டது, அன்று அமெரிக்காவிற்கு வேறு பெரும் எதிரி ஜப்பான் மட்டுமே, ரஷ்யா மறைமுக எதிரி ஆனால் ஆபத்தில்லை.
தனது பலத்தினை உலகிற்கு காட்டவேண்டும், முதல் முறையாக பேர்ள் ஹார்பரில் தனது சொந்த மண்ணில் மரித்த ராணுவத்திற்கு பழிவாங்க வேண்டும், அதைவிட மகா முக்கியம் அமெரிக்க தரத்தில் பொருளும்,கார்களும் செய்து அடிமாட்டு விலைக்கு விற்ற ஜப்பானையும்,ஜப்பான் கம்பெனிகளையும் அலறவைக்க வேண்டும்.
செய்தார்கள்,பேர்ள் ஹார்பர் போல ஹிரோஷிமா ஒரு துறைமுக நகரம், இதே ஆகஸ்ட் 6ம் தேதி, 1945
ஒரு விமானத்தில் அணுகுண்டினை ஏற்றி பைலட்டுக்கும் சொல்லாமல் அனுப்பினார்கள், அவரும் கடமையை செவ்வனே முடித்தார், எதற்கும் என்ன நடக்கிறது என பார்க்க சற்று விமானத்தினை திருப்பினார், அதிர்ச்சியில் உறைந்தார், அவசரமாக அமெரிக்கா திரும்பினார்.
10 கி.மி உயரத்திற்கு குடைகாளான் தோன்றியிருந்தது, வெப்பநிலை 2500 டிகிரிக்கு மேல் சென்றது. இரும்பு கட்டங்கள் உருகும் போது மனிதர்கள் அப்படியே ஆவியானார்கள், ஆறுகள் கொதித்தன. 1 லட்சம் பேர் உடனடி மரணம் எல்லாம் நடந்தது 5 நிமிடத்தில்.
என்ன நடந்தது என சொல்லகூட யாருமில்லை, சகலமும் அழிவு. அடக்கம் செய்யகூட ஒன்றுமில்லை, சர்வமும் சாம்பல்.
அதிர்ந்த ஜப்ப்பான் போரை நிறுத்தவில்லை, எப்படியும் இந்த குண்டுகளை எதிர்கொள்வோம் என நெஞ்சு நிமிர்த்தினார்கள். விளைவு ஆகஸ்ட் 9ல் அடுத்த குண்டு இம்முறை நாகசாகி, குண்டு கொஞ்சம் நகருக்கு தள்ளிவிழுந்ததில் 50,000 பேர் பலி ஆனால் கடும் சேதம்.
ஜப்பான் போரை நிறுத்தி ராணுவத்தையே கலைத்தது, ஜப்பானிய ஆதிக்கத்திலருந்த நாடுகள் விடுதலை ஆயின, இந்தியாவும் ஜப்பானிய மிரட்டலில் இருந்து தப்பியது, காரணம் சீனாவில் பிலிப்பைன்சில் ஜப்பானிய ராணுவம் ஆடிய ஆட்டம் அவ்வளவு கொடூரமானது.
(ஆனால் அமெரிக்காவை பழிதீர்போம் என சொல்லும்ஒரு கும்பல் இப்போதும் உண்டு) நேதாஜியின் தலைவிதி மாறிபோனது. உலகமே ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தது. பழிவாங்கிய அமெரிக்கா சந்தடி சாக்கில் ரஷ்யாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது "நான் யார் தெரியுமா? மவனே என்கிட்ட வச்சிகிட்ட அவ்வளவுதான்."
பெர்லினில் ஹிட்லரின் ராணுவம் மீது விழவேண்டிய குண்டு, அரசியல்வாதிகளால் ஜப்பானின் மீது விழுந்து அப்பாவிகள் செத்ததில் கலங்கினார் ஐன்ஸ்டீன், அணுஆராய்ச்சியை கைகழுவிவிட்டு வான்கொள்கள் ஆராய்ச்சிக்கு தாவினார் (மேலே சென்ற ஜப்பானியார்களை தேடியிருக்கலாம்),
பின்னாளில் இஸ்ரேல் அதிபர் பதவி தேடிவந்த போதும் மறுத்துவிட்டார். அரசியலும் விஞ்ஞானமும் கலப்பது பேரழிவு என்பது அவரின் இறுதிகால கொள்கை அது உண்மையும் கூட.
உலகெங்கும் அச்சமும்,பீதியும் ஆட்கொண்டன, வழக்கம்போல சில கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் இதுதான் கடைசிகாலம், மனம் திரும்புங்கள் என போதனையை தீவிரபடுத்தின (அவர்களுக்கென்ன ஒரு குடிசை தீயில் எரிந்தாலும் கடைசிகாலம் என கத்துபவர்களுக்கு, நகரமே எரிந்தால் விடுவார்களா?)
ஆனால் ஒருவர் மனம் திரும்பினார் அவர் ஜப்பானை எதிர்த்து போரிட்டு ஜப்பானை விரட்டிய‌ அமெரிக்க தளபதி மெக் ஆர்தர்.
மனம் திரும்பிய அவர் பெண்டகனில் அமெரிக்க அதிபரை சந்திக்கும் பொழுது, வாயில் இருந்த சிகரெட் பைப்பினை எடுத்துவிட்டு ஒரு கோரிக்கையை சொன்னார், எளிதான கோரிக்கைதான்
"மிஸ்டர் பிரசிடெண்ட், இது போன்று எனக்கு 15 குண்டுகள் தரமுடியுமா?, நான் சில நகரங்களை பட்டியலிட்டிருக்கின்றேன், ஒரு 25 வருடங்களுக்கு போர் இருக்காது"
மிக சீரியசாக அவர் சொன்னதை கேட்டு, வியர்த்து கொட்டியபடி எழுந்து அமர்ந்தார் அந்நாளைய அமெரிக்க அதிபர். அனுமதி மறுத்தார் அதனால் இன்றுவரை அணுகுண்டு வெடித்த கடைசி இடம் நாகசாகி
அமெரிக்கா செய்தால் ரஷ்யா செய்யவேண்டுமல்லா, தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், சீனா எல்லாம் செய்தன இன்றைய உலகில் சுமார் 12 நாடுகளிடம் அணுகுண்டு உண்டு
ஆனால் எந்த நாடும் அவ்வளவு எளிதில் இன்னொரு நாடு மீது அதனை ஏவாது, காரணம் அது ஒரு பாதுகாப்பே தவிர பயன்படுத்தினால் சர்வ அழிவு
இன்னும் அதற்கு மாற்று இல்லை, வீசிவிட்டால் அவ்வளவுதான்
ஆனால் மகா பாரதம் ஒரு தீர்வினை சொல்கிறது, அதாவது அஸ்வத்தாமனும் பிரம்மாஸ்திரம் வீசினான், அர்ஜூனனும் வீசினான், இரு பிரம்பாஸ்திரம் மோதினால் உலகழியும் என்பதால் அர்ஜுனன் அதன திரும்ப பெற்றான்
ஆனால் அஸ்வத்தாமனின் கனையால் அழிந்த அழிவினையும் அதே தான் சொல்கிறது,
அதாவது அந்த பெரும் சக்தியினை கட்டுபடுத்தும் சக்தி ஒன்று உள்ளது, பிரம்மாஸ்திரம் போல அணுகுண்டையும் கட்டுபடுத்தலாம் என பாரதம் சொல்கிறது,
அந்த கண்டுபிடிப்பு வரும் வரை நாகசாகியே அணுகுண்டு வெடித்த கடைசி இடமாக வரலாற்றில் இருக்கட்டும்
என்ன தான் சொல்லுங்கள், நவீன விஞ்ஞானத்திற்கு மகாபாரதம் ஒரு முன்னோடி. யானை குதிரை என வாகனம் வைத்திருக்கின்றார்களே தவிர, ஆயுதங்கள் எல்லாம் மகா நவீனமானவை
ஒப்பன் ஹைமர் எனும் யூத விஞ்ஞானியே அணுகுண்டில் கிருஷ்ணனைத்தான் கண்டிருக்கின்றான், அவனே சொல்லியும் இருக்கின்றான்
மகாபாரதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நவீன விஞ்ஞானமும் அதற்கான தீர்வுகளும் இருந்துகொண்டே இருக்கின்றன, மகா ஆச்சர்யமான விஷயம் இது
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1.ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.!
2.தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.!
3. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!
4.அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!.
5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!
6.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.!
7.மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.!
8.வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி> !
9.வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது !
10.நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை.
11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!
12.சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்
13.வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!!
14.கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம் !
15.நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டுவந்தா அது ஜாக்கிங் !
16.பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க !
17.ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான் !
On 26/08/2015 at 11:51 AM, nunavilan said:
உலகின் முதல் பல்கலைகழகம்
 
பீகாரில் இருக்கும் தக்ஷில்லா பல்கலை கழகம் தான் உலகின் பழமையான மற்றும் முதல் பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மாண வர்களுக்கு 60வது பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டுள்ள து.

தக்ஷில்லா பல்கலைகழகத்தை விட நாளந்தா பல்கலைகழகம் (பௌத்த) பழமையானது என்று ஞாபகத்தில் உள்ளது. தேடிப்பார்த்து இணைக்க முயற்சி செய்கின்றேன்.

ஆனாலும் தக்ஷில்லா பல்கலைகழகம் இருப்பது இன்றய பாகிஸ்தான் புஞ்சாபில் - இந்தியாவில் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.