Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொசோவா நாளை 17:02:08 சுதந்திர நாடாகிறது.

Featured Replies

கொசோவா நாளை 17:02:08 சுதந்திர நாடாகிறது. நாளை கொசோவா தனது சுதந்திர பிரகடனத்தை அறிவிக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாம் உண்மையில் ஒரு சக்த்திவாய்ந்த உண்மையான மதம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்லாம் உண்மையில் ஒரு சக்த்திவாய்ந்த உண்மையான மதம் தான்.

கப்பாத்து எடுத்தாச்சு போலை கிடக்கு <_<

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை பெறும் கொசொவோ தேசத்திற்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SL rejects Kosovo independence

Sri Lanka does not endorse the unilateral secession of Kosovo from the Republic of Serbia, the Foreign Ministry said.

“We note that the declaration of independence was made without the consent of the majority of the people of Serbia. The Unilateral Declaration of Independence by Kosovo could set an unmanageable precedent in the conduct of international relations, the established global order of sovereign States and could thus pose a grave threat to international peace and security,” the statement said.

Dailymirror

  • கருத்துக்கள உறவுகள்

SL rejects Kosovo independence

Sri Lanka does not endorse the unilateral secession of Kosovo from the Republic of Serbia, the Foreign Ministry said.

“We note that the declaration of independence was made without the consent of the majority of the people of Serbia. The Unilateral Declaration of Independence by Kosovo could set an unmanageable precedent in the conduct of international relations, the established global order of sovereign States and could thus pose a grave threat to international peace and security,” the statement said.

Dailymirror

<_<:D:D ஒருக்கா பிறிஸ்ரினாப் பக்கம் யாராவது போனால், சிறிலங்கா எங்க இருக்குது எண்டு யாராவது ஒரு கொசோவோ அதிகாரியிட்டக் கேட்டுப் பாருங்கோ. "அது இந்தியாவின் ஒரு மாநிலம் தானே? இல்லையா?" என்று தான் பதில் வரும். அந்தளவுக்கு சர்வதேச அரங்கில ஒரு புள்ளியா இருக்கிற ஒரு தோல்வியடைஞ்ச நாடு ஒரு புதிய நாட்டை ஏற்றுக் கொள்ளேல்ல எண்டு யார் அழுகினமோ தெரியாது. நல்ல பகிடி தான் போங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

கொசொவோவின் விடுதலை உலகில் புதிய அத்தியாத்துக்கான ஆரம்பம். அதாவது அமெரிக்கா தனது நலனுக்காக நாடுகளை துண்டாடி தனி நாடுகளை உருவாக்கி அவற்றை தனது சார்பு தேசங்களாக்கி அங்கு தான் நிரந்தரமாகக் குடியமர பிந்நிற்காது என்பதுதான் அது..! <_<

எதுஎப்படியோ அல்பேனிய முஸ்லீம்கள் மீது அமெரிக்கா காட்டியுள்ள அக்கறை என்பது போலியானதாக இருப்பினும்.. அல்பேனிய மக்களின் விடுதலைக் கனவை நனவாக்க அமெரிக்காவின் கொள்கையைப் பாவித்த அல்பேனிய மக்களைப் பாராட்டியே ஆக வேண்டும்..!

விடுதலை பெற்றுதிக்கும் கொசொவோ தேசத்துக்கு வாழ்த்துக்கள்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொசோவோ - தமிழீழம் யாருக்கு அதிக உரிமை உண்டு தனிநாடாக..??!

kosovote03ok7.jpg

http://www.tamilnet.com/img/publish/2008/02/KosovoTE_02.jpg

tamilnet.com

Edited by nedukkalapoovan

கொசவோவின் மேற்பார்வை செய்யப்பட்ட சுதந்திரம் என்பதற்கு கொடுத்த விலைகள் ( KLA அய் KPC ஆக்கியது, றமுஸ் அய் கெயிக் நீதிமன்றத்திற்கு அனுப்பியது முதல் பல விபரங்கள் இன்றை கொண்டாட்டத்தில் மறைக்க அல்லது மறக்கப்பட்டிருக்கு) என்ன என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேணும். கொசவே சுதந்திரப்பிரகடனம் செய்துள்ளது அதை பெயரளவில் அங்கீகரிக்கலாம். ஆனால் நடைமுறையில் அவர்களிற்கு எந்தளவு சுதந்திரம் இருக்கிறது அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்க என்ற கேள்வி கொசவோ மக்களிடமே இருக்கு.

http://en.wikipedia.org/wiki/Kosovo_Liberation_Army

http://en.wikipedia.org/wiki/Ramush_Haradinaj

அப்படிப்பட்ட ஒரு தீர்விற்கு நாம் தயாரா?

ஓம் குறுக்கா... ஓம்.... இண்டைக்கு ஏதோ நீல நிலவு மாதிரி ஒரு நல்ல விசயம் சொல்லியிருக்கிறியள்...

உப்புடித்தான் கிழக்கு-தைமோருக்கு சுதந்திரம் கொடுத்து... இண்டைக்கும் பேரழவில சுதந்திரத்தை வைச்சுகொண்டு தைமோர் சனங்கள் நாடு நாடா அலையுதுகள்...

சுதந்திரத்தை கொடுத்து வாழ்க்கையை பறிக்கக்கூடது...

உண்மை தான் உப்பிடி சுதந்திரம் பெற்று என்னத்தை காண்றது அதிலும் பார்க்க ஒற்றையாட்சிக்குள்ளேயே இருக்கலாம் என்றியள்.

  • கருத்துக்கள உறவுகள்

சேர்பியாவிலிருந்து பிரிந்து கொசோவோ தனிநாடானது

[18 - February - 2008]

* நேற்று சுதந்திரப் பிரகடனம்

முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த சேர்பியாவிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கொசோ வோ சுதந்திரப் பிரகடனம் செய்து தனிநாடாக மலர்ந்துள்ளது.

மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு பூரண ஆதரவு வழங்கியும் ரஷ்யாவும் சேர்பியாவும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலுமேயே கொசோவோ நேற்று மாலை சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து உலகின் புதியதொரு நாடாக உருவெடுத்துள்ளது.

சேர்பியாவின் முன்னாள் மாகாணமான கொசோவோவின் பாராளுமன்றத்தில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுதந்திரப் பிரகடனத்திற்கு, அனைத்து அல்பேனிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கைகளை உயர்த்தி பூரண ஆதரவை வழங்கினர்.

கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்காக அதன் தலைநகர் பிரிஸ்ரினாவில் பாராளுமன்றம் விசேடமாகக் கூட்டப்பட்டபோதே, சேர்பியாவிலிருந்து பிரிந்து தனிநாட்டை அமைக்கும் இந்த சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டது.

கொசோவோவின் பிரதமர் ஹாசிம் தாசி இந்தப் பிரகடனத்தை அல்பேனியன், சேர்பியன் மற்றும் ஆங்கில மொழியில் அறிவித்தபோது, பாராளுமன்றத்திலிருந்த 109 அல்பேனிய உறுப்பினர்களும் எழுந்து நின்று தங்கள் கைகளை உயர்த்தி சுதந்திரப் பிரகடனத்திற்கு தங்கள் பூரண ஆதரவைத் தெரிவித்தனர்.

எனினும், இந்தப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சேர்பிய உறுப்பினர்கள் உட்பட 11 பேர் பாராளுமன்றத்திற்கு வருகை தராது இந்தச் சுதந்திரப் பிரகடனத்திற்கு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்தப் பிரகடனத்தை பிரதமர் ஹாசிம் தாசி வெளியிட்டபோது, ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் இந்தப் பிரகடனத்தின் மூலம், கொசோவோ சுதந்திரமானதும் இறைமையுள்ள நாடெனவும் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

இந்தச் சுதந்திரப் பிரகடனமானது மக்களின் பூரண அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.

கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு பாராளுமன்றம் பூரண அங்கீகாரம் வழங்கிய பின்னர், கொசோவோவானது சுதந்திரமான, இறைமையுள்ள ஒரு ஜனநாயக நாடென பாராளுமன்ற சபாநாயகர் ஜக்கப் கிராஸ்னிகி அறிவித்தார்.இந்த சுதந்திரப் பிரகடனத்தை ஏற்று அதனை உடனடியாக அங்கீகரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரும்பாலான நாடுகளும் அமெரிக்காவும் தயாராகவுள்ள போதும், தனது நாட்டிலிருந்து கொசோவோ பிரிவதை சேர்பியா எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது.

ரஷ்யாவும் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முற்றாக மறுத்துள்ளதுடன், கொசோவோவை தனிநாடாக அங்கீகரிக்கப் போவதில்லையெனவும் கூறியுள்ளதுடன், இது தொடர்பாக ஆராய ஐ.நா. பாதுகாப்புச் சபையை உடனடியாகக் கூட்டுமாறும் அழைப்பு விடுத்தது.

கொசோவோ சுதந்திரப் பிரகடனம் செய்த சில நிமிட நேரத்தில் சேர்பிய பிரதமர் வொஜிஸ்லாவ் கொஸ்ரினிக்கா தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தனதுரையில் அவர், தங்கள் நாட்டின் தெற்குப் பிராந்தியமானது (கொசோவோ) ஒரு ?பொய்யான நாடென?க் குறிப்பிட்டதுடன், தனது இராணுவ நலன்களுக்காக சர்வதேச ஒழுங்கமைப்பையே மீறும் அமெரிக்காவினால் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டதே இந்தப் பிரகடனமென்றும் குறிப்பிட்டார்.

இதேநேரம், சேர்பியரை பெரும்பான்மையினமாகக் கொண்ட யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த ஆறாவது நாடாக கொசோவோ கருதப்படுகிறது.

1991க்குப் பின் யூகோஸ்லாவியாவிலிருந்து ஸ்லோவேனியா, குரோஸியா, மஸிடோனியா, பொஸ்னியா மற்றும் மொன்ரிநிக்ரோ ஆகிய நாடுகள் பிரிந்தன.

தற்போது உலகின் 193 ஆவது சுதந்திர நாடாக கொசோவோ நேற்று மலர்ந்துள்ளபோதும், கொசோவோவால் ஐ.நா. சபையில் இடம்பிடிக்க முடியாதென சேர்பியா தெரிவித்துள்ளது.

இதேநேரம், கொசோவோ சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் 1979 - 80 களிள் யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த பத்திரிகை ஒன்றிற்கு இவ்வாறு பேட்டி அளித்திருந்தார் தமீழீழத்தின் அரசியல் யாப்பு ஒரளவு யூகோஸ்லோவியாவின் அரசியல் யாப்பை ஓத்ததாக இருக்க வேண்டும் என்று ஒரு பேட்டி அளித்திருந்தார் இது யாருக்கும் நினைவிருக்கிறதோ இருந்தா விபரமாய் தரமுடியுமா??

விரும்பியோர் விரும்பிய தேசிய இனம் விரும்பிய நேரத்தில் பிரிந்து செல்ல கூடியதாக இருக்க வேண்டும் என்று யூகோஸ்லாவியாவின் அரசியல் யாப்பு இருந்ததாக நினைக்கிறேன்..

கொசவா இலகுவாக சுகந்திரமடைய கூடியகாக இருந்தது அவர்களை ஆண்டவர்கள் ரஷ்யர்கள் எனவே மேற்கத்தையை நாடுகளும் அமெரிக்காவும் உடனே அங்கீகரித்து விட்டன ஆனால் ஆபிரிக்காவிலும்,ஆசியாவிலும் சுகந்திரத்திற்காக போராடும் தேசிய இனங்களின் எஜமானராக இருந்தவர்கள் பிரித்தானியா,பிரான்ஸ்,அமெரிக

்கா,ஸ்பேயின் போன்ற மேற்குலக நாடுகள்.அவர்களின் அடிமைகள் பிரிந்து செல்வதை இந்த மேற்குலகம் விரும்பாது காரணம் அவர்களின் அடிமைகள் யாவரும் ஜனநாயக மரபை பின்பற்றுவர்கள் என்று நினைப்பு..

சிறிலங்காவையும் ரஷ்யாகாரன் ஆண்டிருந்தால் இப்பொழுது நாம் ஈழம் கேட்கும் போது எந்த வித யோசணையும் இல்லாமல் மேற்குலகமும்,அமெரிக்காவும் அங்கீகரித்து இருக்கும்..

கூட்டி கழித்து பார்த்தா பாருங்கோ கோசவாவிற்கு சுகந்திரம் கிடைத்ததிற்கு முக்கிய காரணம் ரஷ்யாவினதும்,அமெரிக்காவினது

  • கருத்துக்கள உறவுகள்

ொசோவோவை முதன்முதல் அங்கீகரித்த சார்க் நாடாக ஆப்கன் சீனா, ரஷ்யாவின் நிலைப்பாட்டை நோக்கி சாயும் இந்தியா

[Wednesday February 20 2008 09:01:18 AM GMT] [யாழ் வாணன்]

Tamilwin.com பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சமூகத்தின் (சார்க்) பிந்திய உறுப்பினரான ஆப்கானிஸ்தான் கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை உடனடியாகவே அங்கீகரித்துள்ள நிலையில், தெற்காசிய பிராந்தியத்தின் பெரியநாடும் வல்லரசுமான இந்தியா இது தொடர்பாக தீவிரமாக பரிசீலனை செய்துவரும் அதேசமயம் ரஷ்யா, சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் அபிப்பிராயத்திற்கு சார்பான நிலைப்பாட்டையே மேற்கொள்ளும் சாத்தியமிருப்பதாக இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரசாங்க மதமாக இஸ்லாத்தை கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் கொசோவோவை முதன் முதலாக அங்கீகரித்திருக்கும் தெற்காசிய நாடாகியுள்ளது. மக்களின் தீர்மானத்திற்கு நாம் ஆதரவளிப்பதுடன் கொசோவோவின் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறோம் என்று ஆப்கான் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளரான சுல்தான் அகமட் பாகின் தெரிவித்திருப்பதாக ஏபி செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

நாங்கள் கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை கவனத்திற்கு எடுத்துள்ளோம். இந்தப் பிரகடனத்தில் சட்டரீதியான பல விடயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. முன்னேற்றமடைந்துவரும் நிலைமை குறித்தும் நாம் ஆராய்ந்து வருகிறோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகம் தெரிவித்ததாக இந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட ஆட்புல எல்லை; (கொசோவோவின் விடயத்தில் சர்ச்சைக்குரியது) உரிய முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கம் (கொசோவோவில் இடைக்கால நிர்வாகம்) மற்றும் குறிப்பிட்ட பகுதியில் ஆட்சி செய்யும் கட்டுப்பாடு (கொசோவோ விடயத்தில் அவ்வாறு இல்லை) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே நாடொன்றுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவே இந்தியாவின் நிலைப்பாடாகும். அதாவது சகல நாடுகளினதும் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு சகல அரசாங்கங்களும் மதிப்பளிக்க வேண்டும். கொசோவோ விவகாரத்திற்கு சமாதானவழியில் தீர்வு காணப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் கலந்தாலோசனை, பேச்சுவார்த்தை மூலம் இதனை மேற்கொள்ளவேண்டும் என்று நாம் நம்புகின்றோம்ீ என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இலங்கை

இதேவேளை, கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனமானது சர்வதேச உறவுகளின் தன்மை, இறைமையுடைய நாடுகள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள உலக ஒழுங்கு முறைமை என்பன தொடர்பாக கற்பனை செய்து பார்க்க முடியாத முன்னுதாரணமான சம்பவமென்றும் சர்வதேச சமாதானம், பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தல் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

அதேசமயம் கொசோவோ-இலங்கைக்கான பாடங்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரையில் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியான தயான் ஜயதிலக கருத்தொன்றை முன்வைத்துள்ளார். அதாவது இலங்கை தனது எந்தவொரு பகுதியிலிருந்தும் தனது ஆயுதப்படைகளை விலக்கிக்கொள்ளப் போவதில்லையெனவும் வெளியாரின் பிரசன்னத்திற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொசோவோவினை சேர்பியாவின் பகுதியென்று 1999 இல் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா.வின் 1244 தீர்மானம் அடையாளப்படுத்துகின்றது. ஆனால், கொசோவோவின் பிரிவினையை மேற்குலக நாடுகள் உடனடியாக அங்கீகரிப்பது ஐ.நா.வின் தீர்மானத்திற்கு முரண்பட்டதொன்று என்று தயான் ஜயதிலக கூறியுள்ளார்.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.