Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்த சங்கரி ஐயாவிற்கு ஒரு கடிதம்

Featured Replies

என்ரை வயசுதான் இருக்கும் இந்த குறுக்கலை போண சங்கரிக்கு என்ன நடந்ததோ தெரியலை ஏன்தான் தலைகழண்ட மாதிரி பேப்பர்களுக்கு அறிக்கை எண்டு விடுகுதோ தெரியலை. இருக்கேலாமல் கிட்டடிலை ஒரு கடிதம் எமுதிப்போட்டனான் அதை கள உறவுகளின்ரை பார்வைக்கு வைக்கிறதிலை தப்பில்லைத்தானே..............

வடலியடைப்பு.

பண்டத்தரிப்பு.

தமிழ்ஈழம்

ஆனந்த சங்கரி ஐயாவிற்கு,

உங்கள் வயதிற்கு மட்டும்தான் இந்த ஐயாவும் மரியாதையும்.

அண்மையில் நீங்கள் உலகத் தமிழ் தலைவருக்காக எழுதிய மடலினினை ஆங்கில மொழியில் பேரினவாத ஊடகமொன்றில் வாசித்தேன். அதில் தற்போதைய கள நிலவரத்தின் தன்மையினையும் மற்றும் எமது தலைவரின், போராளிகளினுடைய, எதற்கும் எக்காலத்திலும் யாராலும் வெல்ல முடியாத தமிழ் வீரத்தினையும் முழுப்ப+சணியை சோற்றில் மறைப்பது போல் சிங்களம் உங்கள்; வாயால் சொல்ல விளைகின்றமை தெளிவாகின்றது. மரம் வெட்டும் கோடாரிப் பிடி மரத்தில் உள்ளது போல் தமிழ் வெட்டும் சிங்களத்திற்கு ஒரு பிடியாக ஏனைய துரோகிகளுடன் வட-ஆளுனராகக் கனாக் காணும் காலங்களில் நீங்கள் சஞ்சரிப்பது தங்களின் மடலின் உள்ளடக்கமாகத் தெரிகிறது. சாத்தான் ம(த)ந்திரம் ஓதுவதை கேட்டிருக்கின்றேன் இப்போது உங்கள் கடிதத்தில் பார்கிறேன். பதவி மோகத்தில் பல பல்டிகள் அடிக்கின்றீர்கள் வாஸ்தவம்தான்.

சிங்களத்தின் தன்மைகளை தந்தை செல்வா சொன்னதைக் கூடவா பதவி மோகத்தில் மறந்து போனீர்கள். தங்களைப் போன்றதொரு தமிழ் துரோகியொருவர்; கூட்டமொன்றில் தன்னையும் மறந்து, விடுதலைப் புலிகளின் தலைவராலேதான் தானும் கொழும்பில் வசதியுடன் சொகுசாக வாழ்வதாகக் கூறினார். அதேபோல் தமிழ் மக்களால் தூக்கியெறியப்பட்ட உங்கள் உப்புச் சப்பில்லா மனக்கிலேசங்களையும் தமிழுக்கு எதிரானவை என்பதினால் மட்டும் தானே சிங்களம் தூக்கிப்பிடிக்கிறது சற்று உங்கள் நரி மனதை தொட்டுப்பாருங்கள். சந்திரனைப்பாத்து நாய் குரைக்கும் யார் என்ன செய்வது அது நாயின் குனம், ஆனால் ஒன்று எல்லா நாய்களும் குரைப்பதல்ல வேலையற்ற தெரு நாய்கள் மத்திரம் தான்.

என்றோ நீங்கள் எதிர்த்த சிங்களத்தின் சூழ்ச்சித் தீர்வுத் திட்டங்களை மகுடிக்காடும் பாம்பினைப் போல் இப்போது ஆதரிப்பதும் வெகுளியாய், தமிழனை பார்றறியக் கொல்லும் சிங்களத்திற்காய் வக்காளத்து வாங்குவதும் ஏதோவொரு பதவியையும் மாண்டு போகுமுன் பற்றிவிடுவதுதான் உங்கள் இறுதி ஆசையென்பதை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவதாய் சிறுபிள்ளைத் தனமாய் எழுதியுள்ளீர்கள் உங்கள் பெயர் வெகுவிரைவில் நிற்சயமாக "ஆனந்த சங்கர"தான் மாற்றமில்லை.

என்நாட்டு போராட்டம் அல்லது விடுதலை இரத்தம் சிந்தாமல் கிடைத்துள்ளது? பல தர்ம யுத்தங்களைக் கொண்டது தமிழ் நாகரிமும் வேதங்களும். பல்லாயிரமாம் உலக மொழிகளிலே பதிநெட்டமிடத்தில் தமிழ் மொழி தற்போது. அதையழிக்க எத்தனை வியுகங்கள் உங்களுடையதையும் சேர்த்து. மற்றவரை வாசிக்காய் விமர்சிக்கும் உங்களுக்கு யாரை விமர்சிப்பது என்று தெரிந்திருக்க வேண்டும். கேணத்தனமாய் சனீஸ்வரன் விநாயகரிடம் மாட்டிக்கொண்டது போல் எம்மக்களிடம் நீங்கள் மூக்குடைந்து போயுள்ளீகள்.

யாரிடம் கேட்கின்றீர்கள் பதில்? என்ன மமதை உங்களுக்கு? பதில் இல்லை செயல் மட்டும் தான், அதன் வடிவம்தான் எம் தலைவன். தமிழ் மக்களிடம் நீங்கள் காட்டிய பூச்சாண்டிகள் மலையேறிவிட்டன. உங்கள் வஞ்சனைகளை தங்களின் பழைய அருவருடிகளும் அறிந்து திருந்திவிட்டனர். வீண்பேச்சுகள் வியாக்கியாணங்கள் வேண்டாம் இறுதிக்காலத்தில் இறையருள் வேண்டி இந்து சமயத்திற்கு பெயர்போன, நீங்கள் இருக்குமிடத்திலுள்ள ஆலயங்களுக்கு சென்று தமிழுக்கு செய்த மன்னிக்க, ஐPரணிக்க முடியா துரோகத்திற்காய் வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதும் எழுதத் தோன்றினால் பாலர் கதைகளாய் எழுதுங்கள் வேற்று மொழிகளில் மட்டும்.

இறைத்தூதர் ஏசு பிரானைக் காட்டிக் கொடுத்தனர், பண்டாரவன்னியனைக் காட்டிக் கொடுத்தனர் அதேபோல் தமிழைக் காட்டிக் கொடுக்கின்றனர் உங்களைப் போன்றோர். தமிழீழத்தில் உமக்கு இல்லை உமது பெயருக்கு ஒரு இடமுண்டு அது முன்வரிசை தமிழ்த் துரோகிகள் பட்டியலில். சூடு சொரணை இருந்தால் இனியும் இப்படி எழுதுவதை நிறுத்தி மற்றவருக்காவெனும் உமது நீலிக்கண்ணீரை துடைத்துக் கொள்ளும்.

மாற்றுக்குன்றா எம் தலைவனையும், தமிழுக்காய் தாய் மண்ணிற்காய் உயிர் நீத்த எம் மாவீரர்களையும், வீறு கொண்டு ஈழம்வெல்லப்போகும் எம் போராளிகளையும் தலைவன் வழிநிற்கும் எம்மக்களையும் உம்மால் மட்டுமல்ல எந்தக் கொம்பணாலும் எக்காலத்திலும் அசைக்கவோ நெருங்கவோ முடியாது இது உலகறிந்த உண்மை

வணக்கம்

மீண்டும் மறுமடலில் சந்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கடிதங்கள் எழுதியே காசுகள், விருதுகள் என்று சம்பாதித்தவர். அவருக்குக் கடிதம் எழுதினால் காசோ, விருதோ கிட்டாது.. எனவே ஐயாவுடன் கூட்டுச் சேர்ந்து வட மாகாணத்தில் மாமரங்கள் நட்டு மாம்பழங்கள் சாப்பிட்டு பசியாற எல்லோரும் முன்வந்தால் இனப் பிரச்சினை (அப்படி ஏதாவது இருந்தால்) தீர்ந்துவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள்,

தலைவர்,

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (சங்கரி பிரிவு)

சமிற் பிளற்ஸ், இராணுவக்காவல்,

கொழும்பு.

அன்புள்ள அண்ணன் மற்றும் பேக்கரிமாமா அவர்களுக்கு,

ஒரு பகுத்தறிவு வேண்டுகோள்!

நீங்கள் நீண்ட காலமாக கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். யாரிடமிருந்தும் பதில் வரவில்லை என்ற மனக்கவலையில் தொடர்ந்தும் பல பக்கங்களில் எழுதி வருகிறீர்கள். கடிதம் எழுதியே கவர்னர் ஆகவிருக்கும் தலைவர் ஒருவர் உலகில் இருக்கிறார் என்றால் அது நீங்களாகத்தான் இருப்பீர்கள். முதலில் அதற்காக வாழ்த்துகிறோம்.

உங்களுக்கு அறளை பெயர்ந்து விட்டது என்று பலரும் கூறுகின்றனர். அதில் உண்மையிருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. குறுக்கு வழியில் பணமும் புகழும் சேர்க்கத்தான் நீங்கள் கோரிய தமிழீழத்தை சிங்கள ஆட்சியாளரிடம் விற்றுவிட்டு புனித விடுதலையைக் கொச்சைப்படுத்தி கடிதம் எழுதுகிறீர்கள்.

முதலில் நீங்கள் பௌத்த மதத்தில் சேர்ந்தது பற்றி இதுவரையும் யாரிடமும் வெளிப்படுத்தாது இருந்ததையிட்டு நாம் ஆச்சரியப்படவில்லை. வயிறுகழுவ நாட்டைவிற்கும் நீங்கள் மதம் மாறுவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது?

“பௌத்தம் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இல்லை” என்று 20ம் திகதிக் கடிதத்தில் குறிப்பிட்டதுடன் பௌத்த சித்தாந்தம் பேராசையற்றது. அன்பு, இரக்கம், நீதி, கருணை போன்ற தத்துவங்களைப் போதிப்பதாகும் என்றும் அறிவுரை கூறியுள்ளீர்கள்.

கிறிஸ்தவம், இஸ்லாம், சைவம், ஜைனிசம் எல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றியா போதிக்கிறது? நீங்கள் மேலே சொன்னதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன.

ராஜபக்சேவையும் சிங்கள வெறியர்களையும் குளிரவைத்து கவர்னர் பதவியை விரைவில் அடையவே நீங்கள் இப்படி பௌத்தத்தை உயர்த்தியும் தமிழர் மதங்களை தாழ்த்தியும் கடிதம் எழுதி சிபார்சுகளுக்கு உரமேற்றுகிறீர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

கடந்த 2000ம் ஆண்டுகளாக சிங்களவர்கள் பௌத்த கோட்பாடுகளுடன் வாழ்கின்றனர் என்று மனசாட்சிக்கு விரோதமாக எழுதுவதற்கு உங்களுக்கு எப்படி மனசுவந்தது என்று விளங்கவில்லை?

நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கு ஓடிப்போய் 18 ஆண்டுகள் தமிழ் நாட்டில் இருந்தீர்கள். எதற்காக? எப்படித் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்பது பற்றி ஆராயவா அங்கு சென்றீர்கள்?

நீங்கள் யாராவது அப்போது கொழும்பில் இருந்திருந்தால், பண(ஒப்பாரி) ஓதியிருப்பார்கள் பௌத்த சகோதரர்கள் என்பதை மறந்து விட்டீர்கள்! மொத்தம் 7 இனக்கலவரங்களை நீங்கள் துதிபாடும் பௌத்தர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

கொதிக்கும் தார் பீப்பாயில் தமிழர்களைப் போடுவது, ரயருக்குள் போட்டு தமிழர்களை எரியூட்டுவது, தமிழர் கடைகளை சூறையாடுவது, திட்டமிட்டு சிங்களவர்களை தமிழர் பகுதியில் குடியேற்றி தமிழின அழிப்பை ஏற்படுத்துவது என்று ஆயிரக்கணக்கானவற்றைச் செய்தவர்கள் உங்களது பௌத்த தர்மவான்கள்தான் என்பதை ஆளுனர் பதவிக்காக மறைத்து புதிய கதை சொல்கிறீர்கள்.

பௌத்தர்கள் செய்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி தனிநாடு கேட்டு எம்.பி. பதவி பெற்று அதன்மூலம் பல சுகங்களை அனுபவித்த நீங்கள் இன்று கனவிலும் எட்டாத தமிழீழம் என்று அந்தர் பல்டி அடித்து பொருளீட்டுகிறீர்கள். அன்றும் உங்களுக்கு பிளைக்கத் தெரிந்திருந்தது. இன்றும் பிளைக்கத் தெரிந்திருக்கிறது.

செல்வநாயகம், பொன்னம்பலம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றவர்களது ஆவிகள் உங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படி ஓர் துரோகி எங்களுடன் மநை;திருந்ததை நாம் கண்டு கொள்ளாமல் விட்டதையிட்டு கண்டிப்பாக வருந்துவார்கள் அவர்கள். நேரில் சந்தித்தால் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று எண்ணியதுண்டா?

அனைத்தையும் போட்டுவிட்டு வாருங்கள் நான் எல்லாவற்றையும் வாங்கித் தருகிறேன் என்று வெட்கப்படாமல் கூறுகிறீர்கள்?

உங்களை முதலில் தமிழ் தலைவர் என்றுதான் நினைத்தோம், நீங்களோ வெறும் “புரோக்கர்” என்று உங்களைக் காட்டிக் கொள்கிறீர்கள். ஒரு நல்ல புரோக்கர் தேவை என்று தமிழினம் அலையவில்லை. வாங்கித் தருகிறேன் வாருங்கள் என்றால் அதன் அர்த்தம் இப்போது நான் வாங்கிக்கொண்டு இருக்கிறேன் என்பது தெளிவாகின்றது.

உப்புச்சப்பில்லாத கவர்னர் பதவியை அடைவதற்காக பௌத்தம் சிறந்த மதம் என்கிறீர்கள்? சிங்கள சிப்பாய்கள் பாவம் கூலிக்கு வரும் பாமரர்கள் என்கிறீர்கள், பேக்கறியில் பாணும் பணிசும் சாப்பிட்டதை என்னால் மறக்கமுடியவில்லை என்கிறீர்கள், தமிழீழமா! தூ… என்று துப்புகிறீர்கள், ராஜபக்சேயை கடவுளுக்கு அடுத்தப்படியானவர் என்கிறீர்கள், சிங்களப்பகுதியில் குண்டு வெடித்தால் வெகுண்டு எழுகிறீர்கள்! உண்மையில் நீங்கள் யார் என்று உங்களுக்கே குழப்பம் இருக்கும் போல் தோன்றுகிறது.

20ந் திகதிக் கடிதத்தில் “நாமெல்லாம் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆதலால்” என்று எழுதியுள்ளீர்கள்.

உண்மையில் இதுநாள்வரை உங்களை இலங்கைத் தமிழர் என்றுதான் நாங்கள் நினைத்திருந்தோம். வீரசிங்கம் பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர் என்பது இந்தக் கடிதத்தின் மூலமாகத்தான் தெரியவந்துள்ளது எங்கள் மக்களுக்கு.

கடல்க் கோள் ஏற்பட்டு இலங்கை பிரியும் போதும் தமிழர்கள்தான் இலங்கைத் தீவில் வாழ்ந்தாhகள் என்பது வரலாறு. அந்த வரலாற்றின் ஆதாரங்களைத்தான் உங்களது அப்பாவிப் பௌத்தர்கள் யாழ்ப்பாண நூலகத்துடன் தீயிட்டு எரித்துவிட்டனர். சிங்களவர்களின் வரலாறு என்ன என்பதை சங்கரி அவர்கள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் பௌத்தம் சிறந்தமதம் என்றும் சிங்களவர் தர்மவான்கள் என்றும் தமிழர்களே கொலைகாரர்கள் என்றெல்லாம் எழுதுவதனால்தான் சிங்களப் பத்திரிகைகள் தங்கள் கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கின்றன.

ஒரு தமிழனே தமிழரை இழிவு படுத்துவதை அவர்கள் பிரசுரிக்கின்றனர். நீங்கள்தான் சரியான ஆள் கவர்னர் பதவிக்கு என்பதை சிங்களத் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடிதம் எழுதுகிறீhகள்.

கருணா ஓடியவுடன் புலியின் முதுகெழும்பு ஒடிந்துவிட்டது என்று கூறியுள்ளீர்கள். முதுகெழும்பு உடைந்ததா? முழங்கால் உடைக்கப்பட்டதா என்பதைச் சொல்வதற்கு முதுகெழும்புள்ள ஒருவர் வேண்டும். உங்கள் முதுகெலும்பை காவலுக்கு நிற்கும் சிங்களச் சிப்பாய்களைக் கொண்டு தடவிப்பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

ஓநாய்களுடன் சகவாசம் வைத்திருக்கும் நரி மான்களுக்கு வழி காட்டப் புறப்பட்ட கதையாகவுள்ளது சங்கரி அவர்களின் கடிதங்கள்.

புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணாகதி அடைந்தால் ராஜபக்சே அனைத்து உரிமைகளையும் தந்துவிடுவார் என்பதுதானே சங்கரியாரின் கண்டுபிடிப்பு. ஒரு பேச்சுக்கு அப்படி செய்வதாக வைத்துக்கொள்வோம். சரணடைந்த பின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் இராணுவம் போட்டுத்தள்ளிவிடும். பின்னர் நாங்கள் சொல்வதுதான் தீர்வு என்று கூறி ஜே.வி.பி.யுடன் சேர்ந்து ராஜபக்சே புதிய ஒற்றையாட்சிக் கொள்கையை அறிவித்தால் சங்கரியார் என்ன செய்வார்? ஒப்படைத்த ஆயுதங்கள் அனைத்தையும் சிங்கள ஆட்சியாளரிடமிருந்து பறித்துப் போராடி நாட்டை மீட்பாரா சங்கரியார்?

இப்படிப்பட்ட என்னையே ஏமாற்றிப் போட்டார்கள் என்று கூறிக்கொண்டு முன்பு இந்தியாவுக்கு ஓடிச்சென்றது போல் இப்போ மகள் வசிக்கும் லண்டனுக்கோ அல்லது மகன் வசிக்கும் கனடாவுக்கோ ஓடிப்போய் விடுவார்.

உருப்படியாக ஒரு தொண்டர் கூட இல்லாத சங்கரியாரின் அறிவுரைகளைக் கேட்டால் எங்கள் இனம் மேலும் படுகுழியில் விழுவதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே சங்கரி அவர்கள் கவர்னர் ஆவதற்காக அவிழ்த்து விடும் துப்புக் கெட்ட அறிவுரைகளுக்கு நாம் காது கொடுக்க வேண்டியதில்லை.

இவை ஒருபுறமிருக்க வன்னியில் தமிழர் மீது விமானம் குண்டு பொழிவதை நீங்கள் ஏன் பேக்கரிமாமா கண்டு கொள்வதில்லை? தமிழர்கள் உங்களது எதிரிகள் என்பதனால்தானே நீங்கள் அறிக்கை விடுவதில்லை!

உங்களது கடிதம் ஒரு சிங்களவர் தமிழருக்கு அறிவுரை கூறுவது போன்று உள்ளது. தமிழ் இனத்தின் பக்கம் இருக்கும் நியாயங்களை ஒட்டு மொத்தமாக மறைத்துவிட்டு தமிழரைக் குற்றம் சொல்வதன் மூலம் நீங்கள் சிங்களவர் மத்தியில் புகழ் பெறுகிறீர்கள் என்பதனை நாம் அறிவோம்.

சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் உங்களது கடிதங்களை மிகவும் பெரிதுபடுத்தி வெளியிடுகின்றன. ஏனெனில் வெறிகொண்ட சிங்களவர் ஒருவர் செய்ய வேண்டிய வேலையை தமிழருக்கு எதிராக நீங்கள் செய்கிறீhகள் என்பதே அதன் முக்கயத்துவம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழினத்தை வேரோடு அழிக்க ஆனந்தசங்கரி அவர்கள் இனி செய்ய வேண்டியவை!

தமிழினததை அடியோடு வீழ்த்துவதற்கு உங்களாலான அனைத்து முயற்சிகளையும் ராஜபக்சேவுடன் இணைந்து பகிரங்கமாகவே செய்வது.

இரகசியமாகக் கடிதங்கள் எழுதி அனைத்து தூதராலயங்களுக்கும் வழக்கமாக அனுப்புவது போன்று அனுப்பி அதன் பிரதிகளை பத்திரிகைகளுக்கும் கொடுப்பது. இதனால் தமிழ் மக்கள் ஆத்திரம் கொள்ள மாட்டார்கள். கவர்னர் ஆவதற்காக சிபார்சுக்கு லண்டன் பகுதியினர் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்தும் யாரையாவது ஏற்பாடு செய்து சிபார்சுக்கு அனுப்பி வைப்பது நல்ல பயனளிக்கும்.

அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அவர்களை கவர்னர் பதவியின் பக்கம் அண்டவிடாமல் பார்த்துக்கொள்வதற்கான அண்டக்கிறவுண்ட் வேலைகளைச் செய்வது.

கோத்தபாயாவின் கையைப் பலப்படுத்துவதன் மூலம் கவர்னர் பதவியை உறுதி செய்து கொள்வது.

இந்தியா சொல்லித்தான் நீங்கள் இந்தப் பதவியை எடுப்பது போன்று தமிழர்கள் நம்பும்படி விசமப் பிரசாரம் செய்வது.

இறுதியாக நீங்கள் பதவி ஏற்றவுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற உங்கள் கட்சியின் பெயரை சிங்கள ஐக்கிய முன்னணி என்று மாற்றிக்கொள்வது. அத்துடன் தமிழர் கூட்டணிக் கட்சியினருக்கு (அப்படி யாராவது இருந்தால்) சாவுமணி அடித்துவிடுவது.

இதுவே நீங்கள் செய்யக்கூடிய திட்டங்கள் ஆகும். பகுத்தறிந்து பார்த்தால் உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். மனசச்சாட்சியை விற்றபின் எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது.

எங்களை விரோதிகள் என்று எண்ணவேண்டாம். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறோம். அதன்பின் அனைவரும் ஒன்றிணைந்து நியாயமானதோர் தீர்வைக் காண முடியும் என்று நம்புகிறோம்.

வாழ்க சங்கரியார்! பெறுக கவர்னர் பதவியை!

வணக்கம் ஐயா!

(குறிப்பு:- நீண்டநாட்களாக கடிதம் எழுதிக் காத்திருக்கும் சங்கரி அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக இந்தக் கடித்தை பதில் கடிதமாக அனுப்பியுள்ளோம். இதில் அவர் செய்து வரும் செயற்பாடுகளையும், இனிமேல் செய்ய வேண்டியவற்றையும் அவருக்குத் தெரிவித்துள்ளோம். அதிஸ்டக்காரனுக்கு ஆலோசனை தேவையில்லை. பேக்கரி மாமாவுக்கு இது அதிஸ்டக்காலம். எனவே, தொடர்ந்து அவருக்கு கடிதம் எழுதமுடியாது. அவருக்கு கடிதம் எழுதுவது மட்டும்தான் சிங்கள அரசு வழங்கியுள்ள தொழில். எமக்கு அப்படியல்ல, அவரது நீண்டநாள் ஆவலை நாம் பூர்த்தி செய்துள்ளோம் அவ்வளவுதான்.)

“கொழுத்து அடிமையினும் பார்க்க மெலிந்த சுதந்திரம் மேலானது”

தீப்பொறி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.