Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரம்ப கால யாழ் இணையம்

Featured Replies

வசி சூட நடந்த விவாதங்களை தேட கஸ்ட பட வேணுமே தாலி, சாமத்திய சடங்கு எண்டு தேடினா கிடைக்குமே... <_<

அத விட முருகனை பற்றியும் ஏதோ கதைச்ச மாதிரி கிடந்திச்சு. ஆனா நெக்கு 2004 இல் இருந்து தான் யாழ் அறிமுகம். அதாலை பழைய களத்திலை உள்ள விசயங்கள் பெரிசா தெரியா.

  • Replies 60
  • Views 7.6k
  • Created
  • Last Reply

யாழ் தொடங்கப்பட்ட காலத்தில் சொந்த கொம்பியூட்டர் இல்லை. வேலையிடத்தில் நண்பரொருவர்தான் இப்படி ஓர் இணையம் இருப்பதாக சில யாழ்கள பக்கங்களை அச்சிட்ட களவாக கொப்பி எடுத்து தந்தார். அப்போ மாமனிதர் சிவராம் சம்பந்தமான சில சூடான விவாதம் சின்று கொண்டிருந்த நேரம் என்று நினைக்கிறேன்.

சில காலம் வாசகனாக இருந்து எழுத ஆசை! தமிழில் எழுதுவது பிரட்சனை! பின் அதற்கு யாழ்களம் சுரதாவை அறிமுகப்படுத்தியவுடன் தொடங்கிய அறுவை இன்றும் தொடர்கிறது.

ஏதோ நாலை எழுதுகிறோம் என்றால் அதற்கு காரணம் யாழ்களமே!

நன்றிகள் மோகனுக்கு!!!

எப்படித்தான் இருப்பினும் பழையயாழ்களம் சூப்பர்ப். 2004 இல் இணைந்து இன்றுவரை யாழில் ஓடித்திரிகிறேன் என்பதையிட்டு மகிழ்ச்சியே.

நான் எழுதிய ஒரு கிறுக்கலை இன்று நினைவுபடுத்துவதிலும் மகிழ்ச்சியே.

எங்கே இவர்கள் எங்கே....?

இரண்டாயிரத்து நான்கில்

இனிய யாழ்களத்தில்

இணைந்த என்னோடு

இன்புடன் பழகிய

உறவுகள் பலரை சோக

உணர்வோடு தேடுகின்றேன்

எங்கே இவர்கள் எங்கே

ஏங்குகின்றேன் பதில் கூறுங்கள்

குதூகலமாக பறக்கும் குருவி எங்கே

தட்டிக்கொடுக்கும் தமிழினி எங்கே

கவிவடிக்கும் கவிதன் எங்கே

மழலை பேசும் மழலை எங்கே

இளங்கவிஞன் இளைஞன் எங்கே

இளகிய மனம் கொண்ட இளங்கோ எங்கே

சிரிக்க வைக்கும் சின்னப்பு எங்கே

வியக்க வைக்கும் விகடகவி எங்கே

மதிமுகம் கொண்ட மதிவதனன் எங்கே

முகம் மலரவைக்கும் முகத்தார் எங்கே

வீரமுள்ள வினீத் எங்கே

விளையாட்டுபிள்ளை விஷ்ணு எங்கே

பறந்து திரியும் பறவைகள் எங்கே

பெருமூச்சுவிடும் பெரியப்பு எங்கே

கலகத்தோடு வரும் நாரதர் எங்கே

எல்லோருக்கும் பிடித்த எல்லாளன் எங்கே

அரவணைக்கும் அருவி எங்கே

அரிவாளோடு வரும் இராவணன் எங்கே

பண்பாடுடைய பரணி எங்கே

புதிர்போடும் பரஞ்சோதி எங்கே

நிதானமான நிதர்சன் எங்கே

நித்தம் பேசும் நித்திலா எங்கே

சாந்தமுள்ள சந்திரவதனா எங்கே

சங்கடமின்றி பேசும் சண்முகி எங்கே

வாஞ்சையோடு பேசும் வசிசுதா எங்கே

விளக்கத்தோடு வரும் வியாசன் எங்கே

தயக்கத்தோடு உலாவும் தியாகம் எங்கே

தகவல்மன்னன் வானம்பாடி எங்கே

சுடர்விட்டெரியும் சுடர் எங்கே

சுடசுட பேசும் சுண்டல் எங்கே

செங்கோல் புரிந்த ஹரி எங்கே

சிரித்த முக சந்தியா எங்கே

காதல்கவி வடிக்கும் கெளரிபாலன் எங்கே

சத்தமின்றி கருத்தாடும் சயந்தன் எங்கே

சினேகமான சினேகா எங்கே

கீதங்கள் பலபாடும் கீதா எங்கே

வரம்போடு பேசும் வசம்பு எங்கே

வேகத்தோடு பேசும் புயல் எங்கே

சுடோக் போடும் ரமா எங்கே

லுக்கான லக்கிலுக் எங்கே

இவர்களோடு சேர்ந்து

இன்னும் பலர் களத்தினில்

இன்றுவரை காணவில்லை

இரக்கத்தோடு தேடுகின்றேன்

மேற்குறிப்பிட்டோரே

மாற்று நாமத்தில்

தற்போதும் களத்தில்

சுற்றுபவராக இருந்தால்

தேடும் என் மனதை

நோகடிக்காமல் சீக்கிரமே

நாடுங்கள் தனிமடல் மூலம்

நயந்து நான் கேட்கின்றேன்

:D:D:D:D:D

http://www.yarl.com/forum3/index.php?showt...t=0&start=0

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இவர்கள் எங்கே....? என்று தேடுறீங்கள். ஆனால் நீங்க எழுதிய சிலர் இப்போதும் எழுதுறாங்களே கவனிக்கத் தவறிவிட்டிங்களா

  • கருத்துக்கள உறவுகள்

அது பாருங்கோ வென்னிலா...அவர்கள் ஆரம்ப காலத்தில் தேசியத்திற்க்கு ஆதரவாக கருத்து எழுதினவுடன், சிலர் அவர்களை கிண்டலடித்தவர்கள் இப்படி "புலத்தில் இருந்து புலம்பாமல் களத்தில் போய் போராடலாம்தானே என்று "....அதுதான் அவர்களுக்கு ரோசம் வந்து வெளியே சென்று விட்டார்கள்

தேசியத்திற்க்கு விராதமாக கருத்து வைச்ச கோஷ்டியினருக்கும் கோபம் வந்து அவர்கள் ஆழவுடுருவும் கடமை செய்ய சென்றுவிட்டார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தமின்றி கருத்தாடும் சயந்தன் எங்கே

இங்கைதான் :lol:

நான் 2001 களின் இறுதியில் யாழில் எழுத ஆரம்பித்திருப்பேன். (என்னோடு படித்த ஒருவவின் கவிதைகளை அவவின் பெயரில் ஒரு கணக்குத் திறந்து யாழில் வெளியிட்டு அதற்கு வரும் மறுமொழிகளை அவவிற்கு கொண்டு போய்க்காட்டி கருத்தாடுவதற்குரிய காரணங்களைத் தேடிக்கொண்டேன் ) :::lol:))))

2004 வரை தொடர்ச்சியாக இருந்து விட்டு பிறகு சேது அண்ணையுடன் தேவையின்றி (அதாவது எனக்குத் தேவையின்றி) பிரச்சனைப்பட்டு அது தந்த அதிர்ச்சியில் அப்படியே ஓடிப்போனவன் இப்

எங்கே இவர்கள் எங்கே....? என்று தேடுறீங்கள். ஆனால் நீங்க எழுதிய சிலர் இப்போதும் எழுதுறாங்களே கவனிக்கத் தவறிவிட்டிங்களா

:lol: நண்பியே நான் இக்கவிதை 2007 இல் எழுதினப்போ பலர் இங்கு இல்லை. அதையே மீண்டும் போட்டேன். ஆனால் தற்போது தேடியவர்கள் பலர் களத்தில் நடமாடுகிறார்கள் என்பது உண்மை தான். :lol: நீங்களும் பழைய உறுப்பினர் தான் இப்போ புது பெயரில் உலாவுவதாக ஒரு திடுக்கிடும் தகவல் உண்மையோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நண்பியே நான் இக்கவிதை 2007 இல் எழுதினப்போ பலர் இங்கு இல்லை. அதையே மீண்டும் போட்டேன். ஆனால் தற்போது தேடியவர்கள் பலர் களத்தில் நடமாடுகிறார்கள் என்பது உண்மை தான். :lol: நீங்களும் பழைய உறுப்பினர் தான் இப்போ புது பெயரில் உலாவுவதாக ஒரு திடுக்கிடும் தகவல் உண்மையோ :lol:

மனசுல பட்டதை கேட்டால் இப்படி ஒரு வதந்தியா ஆஆஆஆஆஆ.....

அது பாருங்கோ வென்னிலா...அவர்கள் ஆரம்ப காலத்தில் தேசியத்திற்க்கு ஆதரவாக கருத்து எழுதினவுடன், சிலர் அவர்களை கிண்டலடித்தவர்கள் இப்படி "புலத்தில் இருந்து புலம்பாமல் களத்தில் போய் போராடலாம்தானே என்று "....அதுதான் அவர்களுக்கு ரோசம் வந்து வெளியே சென்று விட்டார்கள்

தேசியத்திற்க்கு விராதமாக கருத்து வைச்ச கோஷ்டியினருக்கும் கோபம் வந்து அவர்கள் ஆழவுடுருவும் கடமை செய்ய சென்றுவிட்டார்கள்

புத்திசாலியான புத்துமாமா எல்லோரும் ஆழவூடுருவும் பணிக்குச் என்று விட்டனரா? நீங்கள் எங்கை போயிருந்தியள் மாமோய்? :lol: ஏன் இப்போ குட்டி குட்டி கதை எழுதுவதில்லை

சத்தமின்றி கருத்தாடும் சயந்தன் எங்கே

இங்கைதான் :D

நான் 2001 களின் இறுதியில் யாழில் எழுத ஆரம்பித்திருப்பேன். (என்னோடு படித்த ஒருவவின் கவிதைகளை அவவின் பெயரில் ஒரு கணக்குத் திறந்து யாழில் வெளியிட்டு அதற்கு வரும் மறுமொழிகளை அவவிற்கு கொண்டு போய்க்காட்டி கருத்தாடுவதற்குரிய காரணங்களைத் தேடிக்கொண்டேன் ) :::lol:))))

2004 வரை தொடர்ச்சியாக இருந்து விட்டு பிறகு சேது அண்ணையுடன் தேவையின்றி (அதாவது எனக்குத் தேவையின்றி) பிரச்சனைப்பட்டு அது தந்த அதிர்ச்சியில் அப்படியே ஓடிப்போனவன் இப்

:lol::lol: ஓ இங்கை இருக்கிறியளோ. சரி சரி வாங்கோ. எப்படி இருக்கிறீங்க?

என்னது உங்களோடு அப்டிச்ச ஒருவவின் கவிதைகளை அவவின் பெயரில் கணக்கு திறந்து போட்டியளோ அப்போ இது யர பெயர் சயந்தன் என்பது? பின்பு பெயர் மாத்தினியளோ>

அட அட அட நீங்களும் சேதுவோடு பிரச்சினைப்பட்டு அதிர்ச்சியில் ஓடியவர்களுள் ஒருவரோ. இப்போ நல்லா இருக்கிறியளோ? :lol: அதிர்வினால் ஏதும்..................... :lol: அபப்டி எதுவும் இல்லை தானே சயந்தன்?

மனசுல பட்டதை கேட்டால் இப்படி ஒரு வதந்தியா ஆஆஆஆஆஆ.....

:lol::lol: இப்போ ஏன் ரென்சன் ஆகிறீங்க? சரி சரி கூல். உங்களின் ஆஆஆஆஆ.. இதுவே உங்களை காட்டிக்கொடுக்க போகுது.

:D

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D ஓ இங்கை இருக்கிறியளோ. சரி சரி வாங்கோ. எப்படி இருக்கிறீங்க?

என்னது உங்களோடு அப்டிச்ச ஒருவவின் கவிதைகளை அவவின் பெயரில் கணக்கு திறந்து போட்டியளோ அப்போ இது யர பெயர் சயந்தன் என்பது? பின்பு பெயர் மாத்தினியளோ>

அட அட அட நீங்களும் சேதுவோடு பிரச்சினைப்பட்டு அதிர்ச்சியில் ஓடியவர்களுள் ஒருவரோ. இப்போ நல்லா இருக்கிறியளோ? :lol: அதிர்வினால் ஏதும்..................... :lol: அபப்டி எதுவும் இல்லை தானே சயந்தன்?

:lol::lol: இப்போ ஏன் ரென்சன் ஆகிறீங்க? சரி சரி கூல். உங்களின் ஆஆஆஆஆ.. இதுவே உங்களை காட்டிக்கொடுக்க போகுது.

:D

இதுக்கெல்லாம் டென்சன் படுவோமா வெண்ணிலா :lol:

நிலா அக்கா....நிலா அக்கா நேக்கு உது பிடிகல... :lol: (நான் நிலா அக்கா கூட டூஊஊஊஊஊ :lol: )....என்ட பெயர் என்ட குருவின்ட பெயர் மற்றது டங்கு மாமாவின்ட பெயர் :lol: ஒன்றையும் காணலையே.... :lol: (ஓ உது காணாம போன ஆட்களோ :lol: )...சரி அப்ப இப்ப இருக்கிற ஆட்களையும் வைத்து இப்படி கவிதை எழுதுறியள் சொல்லி போட்டேன் :lol: இல்லாட்டி...(நான் நிலா அக்கா கூட டூஊஊஊஊ போட்டிடுவேன் சொல்லிட்டேன் :D ) அது சரி உவை எல்லாம் காணாம போயிட்டீனம் என்று நினைக்கிறியளோ :D அச்சோ அச்சோ உவை எல்லாம் மற்ற கெட்டப்பில இருக்கீனம் பாருங்கோ... :lol: (என்னால முடியல :( )....

அப்ப நான் வரட்டா!!

வணக்கம் வெண்ணிலா,

நலமா? வெறுமனே மற்றவர்களை விமர்சிப்பதிலும் விதண்டாவாதம் செய்வதிலும் செலவிடும் நேரத்தை பிரியோசனமாகச் செலவிட்டால் எனக்கும் மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதால், சில கருதுக்களை யாழ் செய்திக் குழுமத்திலும் மற்றைய செயற்படும் பிரிவுகளிலும் எழுதுவது உண்டு.விதண்டாவாதம் செய்வதிலும் விவாதிப்பது பயன் உள்ளது என்பதாலும் ,ஓரளவு விடயம் தெரிந்தவருடன் விவாதிப்பதன் மூலம் எமது அறிவைப் பெருக்கக் கூடியதாகவும் விவாதத்தால் விவாதிப்பவர்கள் வாசிப்பவர்கள் பயன் அடைகிறார்கள் என்பதாலும் இருக்கும் கொஞ்ச நஞ்ச நேரத்தை வலைப்பதிவுகளில் வாசிப்பதாலும்/விவாதிப்பதாலும் தற்போது யாழ்க்களம் வருவது குறைவு.

இவை யாழ்க் களத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள்.அதற்கு என்றும் யாழ்க்களத்திற்க்கும் மோகனுக்கும் வலைஞனுக்கும் நன்றிகள்.எப்போதும் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்தால் நாம் மேல் நகரமுடியாது அல்லவா.யாழ்க் களத்திற்கு புதியவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.மற்றவர்கள் விட்ட இடங்களை நிரப்புவார்கள்.இதில் சிலர் புதிய முகமூடியுடனும் வருகிறார்கள்.அவர்கள் யார் யார் என்று எல்லோருக்கும் தெரியும்.இதில் ஏன் புதிய முகமூடியோ தெரியாது.அது அவர் அவர் விருப்பம்.

நன்றி,

வணக்கம்

நான் களத்தில் இணைந்த காலத்துடன் ஒப்பிடும் போது இப்போது யாழ்களம் தொய்வடைந்து இருப்பது கண்கூடு.

அந்தக் காலப் பகுதியில் நல்ல கருத்துக்களை, ஆக்கங்களைத் தந்த பலர் இன்று களத்தில் எழுதுவதில்லை. அல்லது மிகக் குறைவாகவே எழுதுகின்றனர்.

லக்கிலுக், கந்தப்பு, கானா பிரபா, ரமா, சினேகிதி, தூயா, செல்லமுத்து மாஸ்டர், பிரியசகி, நாரதர், ரசிகை, .கௌரிபாலன்.... இன்னும் பலர்.

யாழ் களத்தின் ஆரம்ப கால சுதந்திரம் பறிக்கப்பட்டு பூட்டுக்கள் போடப்பட்டதும் ஒரு சில மட்டுநிறுத்தினர்களின் நடவடிக்கைகளும் இதற்குக் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

மோகன் அண்ணாவின் காலத்தில் (முழுமையான கட்டுப்பாட்டில்) இருந்தது போல் களம் தற்போது இல்லை. மீண்டும் களம் உற்சாகமடைய வேண்டும் நல்ல பல ஆக்கங்களும் படைப்பாளிகளும் மனக் கசப்பின்றி வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதில என்ர "விலாசத்தைக்" காட்ட விரும்பல்ல..! :wub::wub:

Edited by nedukkalapoovan

விலாசத்த காட்ட வேண்டாம். விசயத்த சொன்னாலே போதும் நெடுக்கு.. :wub:

நானும் யாழ் இணையத்தில 2000 ஆண்டுலயே இணைஞ்சு இருப்பன். ஆனா எனக்கு தமிழில எப்பிடி எழுதுறது எண்டு தெரியாது.

அப்ப தமிழில எழுதத்தெரியாததால ஆங்கில போரம்களுக்கு போய் ஏதாவது எழுதுறது.

சொன்னா சிரிப்பீங்கள். நான் முதன்முதலா போனவருசம் இணணயேக்க எப்பிடி தமிழில எழுதுறனான் எண்டால்... ஒவ்வொரு தமிழ எழுத்தா யாழில கொப்பி பண்ணி பிறகு அதுகள சேத்து பேஸ்ட் பண்ணி எழுத்துக்கூட்டி எழுதிறது. இதால ஆரம்பத்தில எனக்கு ஒரு வசனம் எழுதவே பத்து நிமிசம் சொச்சம் எடுக்கும்.

இதுக்காக நான் இன்னொரு விண்டோவ யாழில ஓப்பின் பண்ணி எழுத்துக்கள ஒவ்வொண்டா தேடுறது.

பிறகு ஒரு மாதிரி ஆங்கிலம் மூலம் யாழில கீழ பெட்டியில எழுதி தமிழில எழூதுறத கண்டுபிடிச்சன்.

அதுக்குபிறகு யாழ் ஆக்களோட எம்.எஸ்.என் இல அரட்டை அடிக்கப்போன இடத்தில அருவிதான் தமிழில கீமான பாவிச்சு எப்பிடி எழுதுறது எண்டு சொல்லித்தந்தார்.

அதுக்குபிறகு 24 மணிநேரமும் யாழில - தமிழில அடியோ அடி எண்டு அடிச்சு இப்ப எல்லாரையும் சித்திரவதை செய்து கொண்டு இருக்கிறன். என்னில ஏதாவது கோவம், இல்லாட்டி நான் எழுதுறது ஏதும் பிடிக்க இல்லை எண்டால் என்னை திட்டாமல் அருவியை திட்டுங்கோ. :wub:

இனி கீமானை எனக்கு காட்டித்தந்த குற்றத்துக்காக நான் எழுதுறதுகள எல்லாரும் சகிச்சுத்தான் ஆகவேணும். வேற என்னத்த சொல்லிறது?

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா எழுதிய கவிதை சென்றவருடத்தில் காணாமல் போனவர்களைப் பற்றியது என நினைக்கின்றேன்.

எனக்குத் தெரிந்த, தனிப்பட்ட விதத்தில் அறிமுகமான சிலர்...

டங்ளஸ்- 7 நாள் வேலை

விஸ்ணுவும், ஹரியும், ரசிகையும் திருமணமான காரணத்தால் வருவது குறைவு.

சின்னப்புவும் வேலை காரணமாகத் தான் வருவதில்லை என அறிந்தேன்.

கானாபிரபா- ஒதுங்க வைக்கப்பட்டார்.

வியாசன்- தனிப்பட்ட காரணம்

வர்ணன்- யாழ்க் குழப்பங்கள்

தமிழினி- அவரும் யாழ்களத்தில் ஏற்பட்ட மனவருத்தங்களால் ஒதுங்கியிருக்கலாம்.

சந்திரவதனா- பேரப்பிள்ளையை கவனிக்க வேண்டியிருப்பதாலும், யாழ்களத்தின் கடவுச்சொல்லைத் திருப்பிப் பெற முடியததாலும் வரமுடியவில்லை என்றார்.

வசந்தன்: களநிலமைகள் சரி வந்தப்புறம் வாறன் என்று எப்பவோ சொன்னதாக நினைவு.

சினேகிதி: பல்கலைக்கழகத்தில் கடைசி வருடம்

தூயா: கல்வி காரணமாக யாழ்களத்தில் மட்டுமில்லை. எம்எஸ்என் பக்கம் கூட வருவதைத் தவிர்க்கப் போவதாகச் சொல்லியிருந்தார்.

பிரியசகி- தெரியவில்லை... :wub::wub:

லக்கிலுக் : வாசித்து எழுத நேரமில்லை என்றார்.

தம்பியுடையான், செந்தில்: அவர் தன் ஊருக்குத் திரும்பிச் சென்று சுயதொழிலில் ஈடுபடுவதாலும், இணையவசதி இல்லை என்பதாலும் வரமுடியவில்லை என்றார். அவர் தொலைபேசி இலக்கத்தை யாழில் கொடுத்திருப்பதால் விரும்பியவர்கள் கதைக்கலாம்.

இவ்வளவு தான் எனக்குத் தெரிந்தது.

பொதுவாகப் பெரும்பாலானோர், அரசியல், இராணுவ மாற்றங்களில் தமிழர்கள் வெற்றி பெறும்வரை எழுதுவதைத் தவிர்க்கின்றார்கள் என்றே சொல்வேன். வலைப்பூக்களிலும் பங்களிப்புக்கள் குறையக் காரணமாக அதுவும் ஒரு காரணம்.

அன்று, யாழ்களத்தில் காரசாரமாகச் சண்டை பிடித்தாலும், தனிப்பட்ட விதத்தில் அன்பு பாராட்டுகின்ற உறவு இப்போது இல்லை என்பது ஏதோ உண்மை தான். என்ன கதைக்கின்றார்கள் என்றே புரியவதில்லை.

என்ன எழுதினாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அங்கு வாடுகின்ற மக்களையும், மறக்காமல் எதையும் செய்யுங்கள். அவர்களுக்கும் நாமும், எமக்கு அவர்களையும் விட்டால் உலகத்தில் சொந்தமென்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை.

  • தொடங்கியவர்

பழைய கருத்துக்களத்தில் இருந்து ஒரு பகுதி - 04.01.2003

அடிக்கடி கடைக்கு போகும் நபரா நீங்கள்?

நளாயினி

அங்கத்துவர்

சுவிற்சலாந்து.

04.01.2003 அடிக்கடி கடைக்கு போகும் நபரா நீங்கள்.

--------------------------------------------------------------------------------

அடிக்கடி கடைக்கு போகும் நபரா நீங்கள்? அடிக்கடி கடைக்கு போவதால் செலவு அதிகம். அதை தவிற்பது எப்படி? இதோ எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1) பொருள்கள் மலிய போடுகிறபோது திகதி மாதம் ஆண்டைப்பார்த்து கிலோ கணக்கில் வாங்கி அடுக்கிவிடுங்கள். உதாரணமா பால் மா அரிசி சீனி குளிர்பானங்கள் -------- போன்றன.

2) சில மரக்கறி வகை கூட இவை போல செய்யலாம். உ.கிழங்கு வெங்காய் உள்ளி போன்றவையை ஒரு மூன்னு நான் மாதத்திற்கு தேவையானதை வாங்கி நிலவறையில் வைத்துக்கொள்ளலாம். பழுதாக சந்தற்பம் குறைவு.

3) கத்தரிக்காய் வெண்டிக்காய் போன்றவற்றை பொரித்தெடுத்து டீபிறிச்சில் எமக்கு அளவளவாக கட்டி வைத்துக்கொள்ளலாம். தேங்காய் பாவிப்பதை இயன்ற வரை குறைப்பது நல்லது ஆனால் நாம் சில சமயம் பாவித்துகொள்கிறோம் அப்படி பாவிப்பவர்கள் நல்ல தேங்காய் கிடைக்கும் போது அவற்றை வாங்கி துருவி தேவையான பல அளவுகளில் பைகளில் போட்டு கட்டி டீ பிறிச்சில் வைக்கலாம்.

4) இறைச்சி மீன் வகைகளையும் பல கிலோவில் வாங்கி துப்பரவு செய்து பைகளில் எமக்கு அன்றாட தேவைக்கு ஏற்ப பைகளில் கட்டி வைக்கலாம்.

5) இறைச்சி மீன் வகை தாராளமாக கிடைக்கும் போது (குறைந்த விலையில்) ரோல்£ கட்லெட் வகைகளை செய்து அளவளவாக பைகளில் கட்டி டீபிறிச்சில் வைத்தக்கொள்ளலாம்.

6) அன்றாட மரக்கறிகளை வாங்குவதற்கு கிழமையில் ஒரு நாளை மட்டும் அழகாக தேர்ந்தெடுங்கள் போதும். திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் சமைக்க போகும் மரக்கறியை தீர்மானித்து அதற்கேற்ப வாங்குங்கள். வீணாக சந்தற்பம் கிடையாது.

7) திடீர்விருந்தினர் வந்த விட்டால் என்ன செய்வது என முறைப்பது தெரிகிறது . அதற்கு ரின்களில் அடைத்து வைத்திருக்கும் சில மரக்கறிவகையையும் டீபிறிச்சில் வைத்திருக்கக் கூடிய கீரை போஞ்சி மற்றும் இதர மரக்கறிவகையை காய்ந்த மரக்கறிவகையையும் ( காய்ந்த போஞ்சி சோயா பீன்சு பாவற்காய் வத்தல் ) போன்றன வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். விருந்தினர்க்கு வித்தியாசமாக இருக்கும் உங்கள் சமையல். அசத்த மாட்டீர்களா என்ன!!

அடிக்கடி எமது தழிழ்கடைகளுக்கு போவதையும் தவிற்து கொள்ளுங்கள். தேவையான மளிகைச்சாமான்களை 6 மாதத்திற்கு அல்லது அதற்கும் மேலான மாதத்திற்கு தேவையானதை வாங்கிவிடுங்கள். (ஒரே தரத்தில்) இப்படி செய்வதால் இந்த நகையாசை புடவையாசை உள்ள பெண்களின் தொல்லையில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள். நகையாசை புடவை ஆசை அளவுக்கு அதிகமாகிவிட்டது ஆனால் திருந்த முடிகிறதில்லையே என அங்கலாய்க்கும் பெண்களுக்கு இது நல்ல தொரு வாய்ப்பாக அமையும் தம்மை மாற்றிக்கொள்ள.

9) அடிக்கடி குழந்தைகளையும் கடைகளிற்கு அழைத்து செல்வதால் அடம்பிடித்தே பலதை வாங்கி குவித்துவிடுகிறார்கள். அவர்களையும் பல கூடாத பழக்கத்திற்கு ஆளாக்குவதில் இருந்து இந்த முறை காக்கும்.

10) அதிக செலவை இது கட்டுப்படுத்தும். நாம் 2 மரக்கறி வாங்க வென கடைக்கு போவாம். அனால் பல பொருள்களுடன் வந்து இறங்குவோம். இவை கூட தவிற்கப்படும்.

மேலும் உங்கள் கருத்தக்களையும் உங்கள் அனுபவங்களையம் பகிர்ந்து கொள்ளுங்களன்.

நளாயினி தாமரைச்செல்வன். சுவிற்சலாந்து

கண்ணன்

அங்கத்துவர்

நெதர்லாண்ட்

Pழளவநன: 04.01.2003 14:17

--------------------------------------------------------------------------------

நல்ல ஐடியா தான்

ஆனால் சில உணவு வகைகளை உரியகாலத்திற்கு காலத்திற்கு பயன்படுத்தாவிடிலோ அல்லது குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பதன் மூலமோ அல்லது பொரிப்பதன் மூலமோ அதிலுள்ள சில உயிர்ச்சத்துக்கள் (விற்றமின்கள்) அழிந்து போவதாக அறிந்தேன்.

நீங்கள் சொல்லுவது

பெட்டிச்சாப்பாடு கலாச்சாரக்காரக்கு பிரயோசனப்படும்.

யாழ்

பொறுப்பாளர்

ஜேர்மனி

Pழளவநன: 04.01.2003 15:46

--------------------------------------------------------------------------------

கருத்துக் களத்தில் பல காலத்திற்குபின் பிரயோசனமான ஒரு கருத்து.

வேறும் உதவிகள் இருந்தால் குறிப்பிடுங்கள்.

_________________

பசித்திரு,தனித்திரு,விழித்தி

ரு.

-வள்ளலார்-

சந்திரவதனா

அங்கத்துவர்

யேர்மனி

Pழளவநன: 04.01.2003 17:31

--------------------------------------------------------------------------------

3) கத்தரிக்காய் வெண்டிக்காய் போன்றவற்றை பொரித்தெடுத்து டீபிறிச்சில் எமக்கு அளவளவாக கட்டி வைத்துக்கொள்ளலாம். தேங்காய் பாவிப்பதை இயன்ற வரை குறைப்பது நல்லது ஆனால் நாம் சில சமயம் பாவித்துகொள்கிறோம் அப்படி பாவிப்பவர்கள் நல்ல தேங்காய் கிடைக்கும் போது அவற்றை வாங்கி துருவி தேவையான பல அளவுகளில் பைகளில் போட்டு கட்டி டீ பிறிச்சில் வைக்கலாம்.

5) இறைச்சி மீன் வகை தாராளமாக கிடைக்கும் போது (குறைந்த விலையில்) ரோல்£ கட்லெட் வகைகளை செய்து அளவளவாக பைகளில் கட்டி டீபிறிச்சில் வைத்தக்கொள்ளலாம்.

மேலும் உங்கள் கருத்தக்களையும் உங்கள் அனுபவங்களையம் பகிர்ந்து கொள்ளுங்களன்.

நளாயினி தாமரைச்செல்வன். சுவிற்சலாந்து

நளாயினி

உங்கள் கருத்தை வாசிக்க சுலபமாகத்தான் தெரிகிறது.

ஆனாலும் எங்கள் வீட்டில் இவையெல்லாம் அவியாது.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று சொல்லி எங்கள் வீட்டில் பட்டினி கிடப்பார்களே தவிர ஜகயஉநஸ்ரீயசயைட:டி4207யகன70ஸகுசன

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்களின் மலரும் நினைவுகளை எங்களுக்கு பகிருங்கள் வசிசுதா.

  • கருத்துக்கள உறவுகள்

2002 இல் இருந்தான பழைய களம்,

http://www.yarl.com/kalam/

கருத்துக்களத்தின் முகப்புப் பக்கத்தில் இணைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க சுவையாக இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

காவிய சொன்னது போல வெண்ணிலா சொன்னது போல நானும் அந்த உறவுகளை தேடுகின்றேன்....

  • கருத்துக்கள உறவுகள்

கானாபிரபா- ஒதுங்க வைக்கப்பட்டார்.

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் தூயவன் ஒரு கருத்தாளனின் அல்லது படைப்பாளியை என்னொருவன் கடைசி மட்டும் ஒதுக்க முடியாது அப்படி அவர் ஒதுங்கினார் என்றால் அவர் சிறந்த படைப்பாளி அல்ல அதை விட கருத்தாளனே இல்லை..(கருத்துகளத்தில் களமாட தகுதி இல்லை).பாராட்டை மட்டும் ஏற்பவன் படைப்பாளியும் அல்ல கருத்தாளனும் அல்ல.இங்கு சிலரை பலர் நாய்,பூனை என்று பலவாறு திட்டி உள்ளார்கள் இருந்தும் கருத்தால் கருத்தை வென்றவர்கள் தான் யாழில் நிலைத்து நிற்கிறார்கள் :)

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் தூயவன் ஒரு கருத்தாளனின் அல்லது படைப்பாளியை என்னொருவன் கடைசி மட்டும் ஒதுக்க முடியாது அப்படி அவர் ஒதுங்கினார் என்றால் அவர் சிறந்த படைப்பாளி அல்ல அதை விட கருத்தாளனே இல்லை..(கருத்துகளத்தில் களமாட தகுதி இல்லை).பாராட்டை மட்டும் ஏற்பவன் படைப்பாளியும் அல்ல கருத்தாளனும் அல்ல.இங்கு சிலரை பலர் நாய்,பூனை என்று பலவாறு திட்டி உள்ளார்கள் இருந்தும் கருத்தால் கருத்தை வென்றவர்கள் தான் யாழில் நிலைத்து நிற்கிறார்கள்.

கானாபிரபா சிறந்த படைப்பாளியா இருக்கலாம் ஆனால் அவர் ஒதுக்கபட்டார் என்று சொல்வதை எந்த காரணம் கொண்டும் ஏற்று கொள்ளமுடியாது அவராக ஒதுங்கி கொண்டார்.(ஒரு படைப்பாளியையும் ஒருத்தராலும் ஒதுக்க முடியாது).

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்

கானாபிரபா ஒதுக்க வைப்பட்டதற்கான காரணம் அவரது படைப்பியல் தொடர்பாக இல்லையே. எனவே உங்களுடைய கருத்துக்கள் பொருத்தமாக இல்லை.

விமர்சனங்கள் என்பது ஒரு தரமற்ற விதத்தில் அமையும்போது, எந்தப் படைப்பாளியும் ஏற்பான். அதற்குக் காரணம் சொல்லுவான். ஆனால் அது வெறுமனே சீண்டலாக அமையும்போது ஒரு உண்மையான படைப்பாளியால் நிச்சயம் பதில் சொல்லமுடியாது. நியாயமாக அதில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுவான்.

இந்த விமர்சனங்களை வைப்பதில் நானும் விதி விலக்குக் கிடையாது. அதே பிழையை நானும் செய்திருக்கக் கூடும்.

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் தூயவன் ஒரு கருத்தாளனின் அல்லது படைப்பாளியை என்னொருவன் கடைசி மட்டும் ஒதுக்க முடியாது அப்படி அவர் ஒதுங்கினார் என்றால் அவர் சிறந்த படைப்பாளி அல்ல அதை விட கருத்தாளனே இல்லை..(கருத்துகளத்தில் களமாட தகுதி இல்லை).பாராட்டை மட்டும் ஏற்பவன் படைப்பாளியும் அல்ல கருத்தாளனும் அல்ல.இங்கு சிலரை பலர் நாய்,பூனை என்று பலவாறு திட்டி உள்ளார்கள் இருந்தும் கருத்தால் கருத்தை வென்றவர்கள் தான் யாழில் நிலைத்து நிற்கிறார்கள்.

மாம்ஸ் நேக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணி விடுறியளே :D ...படைபாளி என்றா என்ன..(அவைக்கு தலையில இரண்டு கொம்பு முளைத்து இருக்கோ :o )...களி மண்ணை எடுத்து மட்பாண்டம் செய்யிறானே அவனும் படைப்பாளி தானே... :( (அவன் தலைகணம் அற்றவனா தானே இருக்கிறான் :D )... நான் படைப்பாளியை பற்றி தான் கேட்கிறேன்...(பிறகு ஒருத்தரும் டென்சன் ஆக வேண்டாம்)... :lol:

அத்தோட ஒரு படைப்பாளி என்றா இருக்கிற புத்தகத்தை எல்லாம் வாசித்து போட்டு..(ஆங்கில புத்தகத்தை எல்லாம் வாசித்து போட்டு :D )..பிலிம் காட்டுறவனும் படைப்பாளியா மாமா நிசமா நேக்கு டவுட் ஆக்கும்.. :D (ம்ம் பாராட்டலாம் தான் ஏனேன்றா அடுத்த லாங்வேஜ் புக்ஸை வாசித்து அதை தாய் மொழியில் சொல்வது லேசுபட்ட காரியமில்லை :( )...ஆனா வாசித்த புக்சின் ரெவிரன்சை கொடுக்கிறது அழகு என்று நினைக்கிறேன்..

பட் மாம்ஸ் நேக்கு உந்த டவுட்டை கிளியர் பண்ணிவிடுங்கோ என்ன... :(

ஜம்மு பேபி பஞ் -

"படைப்பவன் எல்லாம் படைப்பாளியாகவும் ஆகிட ஏலாது காக்கிறவன் காவலாளியும் ஆகிட முடியாது" :lol:

அப்ப நான் வரட்டா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.