Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படி வாழ்த்துவது சரிதானா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதப் பெண்களுக்கு இயற்கையாக மாதவிடாய் என்பது நிகழ்கிறது. குறிப்பாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த மாதவிடாய் மாதத்தில் எப்பவோ 3 - 5 நாட்கள் வந்தே தீரும். அது கிட்டத்தட்ட 28 நாட்கள் என்ற தவணை முறையில் வருகிறது.

இக்காலத்தில் பெண்களின் உடல்நிலை மட்டுமன்றி மனநிலையிலும் மாற்றங்கள்.. சோர்வு.. கோபம்.. எரிச்சல்.. தலையிடி.. வயிற்றுவலி போன்றன ஏற்பட்டு அவர்கள் சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பது என்னவோ வருந்தத்தக்க ஒன்றுதான்.

அண்மைய நாட்களாக இந்திய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில்.. விளம்பரங்களில் ஒரு 30% விளம்பரங்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் உபகரணம் தொடர்பானது என்று அமைகிறது.

அதில் ஒரு விளம்பரத்தின் இறுதியில் "Have a nice day" என்பது போல "Have a happy period" என்று வாழ்த்துறார்கள். இப்படி நாமும் வாழ்த்தலாமா..??! சரிதானா இது.. இல்ல பெண்களின் பிறைவேசியில் தலையிடும் வேண்டாத செயலா இது..??! இல்ல வாழ்த்தினா செருப்படி விழுமா..??!

சாமத்தியவீடு என்று இதே காரணத்துக்காக விழா எடுக்கும் நம்மவர்கள்.. இப்படி வாழ்த்துவதை வரவேற்கிறார்களா.. குறிப்பாக பெண்கள்..!

அண்மையில் இதே இந்திய தேசத்தில் பெண்களின் மாதவிடாய் தொடர்பான விபரங்களை மருத்துவமனைகளில் அலுவலகங்களில் ஆவணப்படுத்தக் கோரப்பட்ட போது அதை அப்போ பெண்கள் தீவிரமாக எதிர்த்தார்கள் என்பதுடன் பெண்களின் பிரைவேசியில் இது தலையீடு செய்வது என்று குற்றமும் சாட்டினர். பின்னர் அத்திட்டம் கைவிடப்படுவதாக இந்திய அரசும் அறிவித்தது.

சமூகம் என்ன சொல்லுறீங்க.. இதைப்பற்றி..!

சத்தியமா இது பெண்களை கிண்டல் பண்ணப் போடேல்ல..! எது எதுக்கு வாழ்த்திறது என்ற ஒரு விபரத்துக்காக.. கேட்கிறம்..! <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் அம்மா நான் தாய் ஆகி விட்டேன் என்று ஓடி வந்து சாத்திரி பாணியில் வீடியோப் படம் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சே...............இதுக்கெல்லாம் நீங்க ஏங்க போய் வாழ்த்து சொல்றிங்க. அது விளம்பரங்க

ஏதுக்கு எதற்கு வாழ்த்தறதுனு தெரியாமம் போச்சுது இந்த நெடுக்குக்கு.

வாழ்த்தத்தான் வேணும் எண்டு ஆசைப்பட்டு அடம்பிடிச்சிங்கன்னா , அதையும் வாங்கிக்கொடுத்துட்டு வாழ்த்திட்டு போங்க :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சே...............இதுக்கெல்லாம் நீங்க ஏங்க போய் வாழ்த்து சொல்றிங்க. அது விளம்பரங்க

ஏதுக்கு எதற்கு வாழ்த்தறதுனு தெரியாமம் போச்சுது இந்த நெடுக்குக்கு.

வாழ்த்தத்தான் வேணும் எண்டு ஆசைப்பட்டு அடம்பிடிச்சிங்கன்னா , அதையும் வாங்கிக்கொடுத்துட்டு வாழ்த்திட்டு போங்க :lol::lol:

வாங்கிக் கொடுத்து வேற வாழ்த்திறதோ. ஆண் பெண் வேறுபாடில்லாமல் பழகிறதா நம்மாக்கள் உதாரணம் காட்டிற வெள்ளையளில கூட பொடியள் ( ஆண்கள்) உதுகள் வாங்கிக் கொடுக்கிறது ரெம்பக் குறைவு.

அவை வாங்கிறதெல்லாம் ரப்பர் பலூன் தான். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா இப்படியான டவுட்டெல்லாம் உங்களுக்கு வரலாமா??? :lol::lol:

யாரையாவது வாழ்த்தி அடி வாங்காட்டி சரி :D:lol:

நானும் எதாவது நல்லதாய் இருக்குமென்று வந்து பார்த்தால், அட இப்படி இருக்கு. நாங்களும் தான் இந்த விளம்பரத்தை ஒவ்வோரு நாளும் பார்க்கின்றம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதாவது நல்லதாய் இருக்குமென்று வந்து பார்த்தால், அட இப்படி இருக்கு. நாங்களும் தான் இந்த விளம்பரத்தை ஒவ்வோரு நாளும் பார்க்கின்றம் :lol:

பார்த்திட்டு சும்மா போயிடுறீங்களே. வாங்கினமில்லையே. அதுதான் விளம்பரத்தை வியாபிக்கிறன்..! :D

சும்மா இருக்கீங்களா..??!

விளம்பரத்தைப் பார்த்துத்தானே மக்கள் பொருட்களை சேவைகள் விசயங்களைப் பெறுகினம்.. ஏன் உது பெறப்பட்டக் கூடாது என்றிருக்கா..??! :lol::lol:

ஏன் நீங்கள் இந்த வியாபாரம் செய்யலாமென இருக்கிறீங்களோ, வியாபாரம் பெருக வாழ்த்துக்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா எதுக்கெதுக்கு வாழ்த்திறதுஎன்ற விவவஸ்த்தையே இல்லையா :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் இந்த வியாபாரம் செய்யலாமென இருக்கிறீங்களோ, வியாபாரம் பெருக வாழ்த்துக்கள் :lol:

அதுதான் யாழில ஓசி விளம்பரம் செய்யுறமில்ல..! :D:lol:

ம்ம்ம்...தாத்தா உங்களுக்கு இப்படி ஒரு டவுட் வந்திட்டே என்று நான் வந்து பக்ரிக்கலா டெஸ்ட் பண்ணி பார்த்தனான் பாருங்கோ... :D (பிகோஸ் பக்ரிக்கலா டெஸ்ட் பண்ணிணா தானே எப்படி என்று ஈசியா அறியலாம் தாத்தா)...என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறீங்க...சரி மாட்டருக்கு வாரேன்... :rolleyes:

அக்சுவலா யாரென்று சொல்லமாட்டேன்..(பட் குட் பிரண்ட் ஜம்மு பேபியின்ட யாழில எழுதுறவா தான் யாழில சில மாட்டர்ஸை என்னோட பேர்சனல் மெசெஜ் மூலம் ஆர்கீயூ பண்ணுவா :D )...சோ அவாவிற்கு இன்னைக்கு தாத்தாவின்ட பதிவை பார்த்து "காவ கப்பி பீரியட்" என்று மெயில் போட்டனான்.. :D (எப்படி ரியாக்சன் வருது என்று பார்க்க)....வந்த ரியாக்சன் இது தான் தாத்தா... :D

@#2%@#@#@#@#@@&*

என்னவோ நன்னா ஏசி இருக்கா என்று விளங்குது என்னவென்று தான் விளங்கவில்லை..(சோ அதில நான் கப்பி ஆக்கும் :D )...பிறகு அவாவை சமாதானபடுத்தவே நேக்கு டைம் போச்சு...(அச்சா பேபி என்று பார்த்தா இப்படியோ என்று ஏசி போட்டா அல்லோ தாத்தா :D )....

பிறகு தான் தாத்தாவின்ட பதிவை பார்க்க சொன்னனான் அதை பார்த்தா பிறகு தான் மாட்டரே விளங்கினது அவாவிற்கு...(எப்படி தாத்தா என்ட பக்ரிக்கல் டெஸ்டிங் பட் என்ன பேபிக்கு நன்னா ஏச்சு விழுந்து போட்டு)..சோ இதை இப்ப ஏன் சொல்லுறேன் என்றா அவை அதை ஏற்கும் மனபாங்கில் இல்லை தாத்தா என்பது நன்கு தெரிகிறது... :D (குறிப்பாக நம் பெண்கள்)பிற இனத்து பெண்களை பற்றி நேக்கு தெரியவில்லை வேண்டும் என்றா அதையும் பக்ரிக்கலா டெஸ்ட் பண்ணிட்டு சொல்லவோ...(இது எப்படி இருக்கு)... :D

இதை பற்றி எனக்கு பெரிசா தெரியாது...அதற்காக தான் மெயில் போட்டு டிரை பண்ணிணான் வந்த ரீபிளையில இருந்து அதை புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது என்று தான் சொல்லலாம் பாருங்கோ...சோ தாத்தா எதற்கும் கவனமா பார்த்து வாழ்த்துங்கோ அது மட்டும் சொல்லிட்டன் மெயில் என்ற படியா எனக்கு விளங்காத பாசையில ஏச்சு தான் விழுந்தது...(நேரா சொன்னா நிலைமை எப்படி இருக்கும் என்பதை யோசித்து செய்யுங்கோ என்ன)...

இது தான் நமது சமுகத்தின் ரீபிளை தாத்தா ஒகேயா...ஏனைய சமுகத்தை டெஸ்ட் பண்ணி தான் சொல்லலாம் பாருங்கோ..(எனிவே கேயார்வுள் தாத்தா)...

என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் என்னை நேக்கு பயமா இருக்கு அடித்து போடாதையுங்கோ என்ன...அன்ட் சொறி ஜம்மு பேபியின் யாழ் பெஸ் பிரண்டிற்கு..(அவாவிற்கு பேபியை பற்றி தெரியாதா என்ன)...என்னும் பக்ரிக்கலா டெஸ்ட் பண்ணவேண்டும் என்றா நேக்கு சொல்லுங்கோ தாத்தா சரியோ... :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்த்துறது முக்கியமில்லை என்னதிற்கு வாழ்த்துறோம் என்பது தான் முக்கியம்"

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் யாழில ஓசி விளம்பரம் செய்யுறமில்ல..! :D:rolleyes:

நீங்கதான் முகவரா இதற்கு :D:D

ரீவியிலை எத்தினையோ விளம்பரங்கள் போக, தாத்தாவிற்கு இந்த விளம்பரம்தான் கண்ணைப் பறிச்சிருக்கு. என்னதான் தாத்தா பெண்களுக்கு எதிராகப் பேசினாலும், அவரைக் கவருவது பெண்கள் பற்றின விடயங்கள்தான் எண்டது நல்லா விளங்குது. பெண்கள் பற்றிய விடயங்களை அவர் தேடித் தேடிப் போடுறாரே. :D:D:D

இங்க என்ன நடக்குது???? :D:D

சத்தியமா இது பெண்களை கிண்டல் பண்ணப் போடேல்ல..! எது எதுக்கு வாழ்த்திறது என்ற ஒரு விபரத்துக்காக.. கேட்கிறம்..! :D

எது எதர்க்கு டிஸ்கஸ் செய்ற என்று ஒரு விவஷ்தை வேண்டாம்??? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரீவியிலை எத்தினையோ விளம்பரங்கள் போக, தாத்தாவிற்கு இந்த விளம்பரம்தான் கண்ணைப் பறிச்சிருக்கு. என்னதான் தாத்தா பெண்களுக்கு எதிராகப் பேசினாலும், அவரைக் கவருவது பெண்கள் பற்றின விடயங்கள்தான் எண்டது நல்லா விளங்குது. பெண்கள் பற்றிய விடயங்களை அவர் தேடித் தேடிப் போடுறாரே. :D:D:D

பப்பிளிக் பப்ளிக்கா வாற விசயங்களை பார்க்கும்.. அலசும் .. ஆராயும் தான். என்னைப் போல எத்தனையோ பேருக்கு உப்படி டவுட் எழலாம். பலருக்கு எழும் வெளில கேட்க வெட்கமா இருக்கும். சா... சா அசிங்கம் என்று. எனக்கு உதில அசிங்கமா எதுவும் தெரியல்ல. அப்படி அசிங்கமென்றா ஏன் பப்ளிக்கில விளம்பரம் செய்யினம்..??! :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

பப்பிளிக் பப்ளிக்கா வாற விசயங்களை பார்க்கும்.. அலசும் .. ஆராயும் தான். என்னைப் போல எத்தனையோ பேருக்கு உப்படி டவுட் எழலாம். பலருக்கு எழும் வெளில கேட்க வெட்கமா இருக்கும். சா... சா அசிங்கம் என்று. எனக்கு உதில அசிங்கமா எதுவும் தெரியல்ல. அப்படி அசிங்கமென்றா ஏன் பப்ளிக்கில விளம்பரம் செய்யினம்..??! :D:lol::lol:

விளம்பரம் பப்ளிக்கில செய்யாமல் என்ன இரகசியமாகவா செய்கிறது :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்ஸ் அண்ணா whisper chois STOCK ல் நிறைய காசை போட்டிருக்கிறிங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரம் பப்ளிக்கில செய்யாமல் என்ன இரகசியமாகவா செய்கிறது :lol::lol:

உதைத்தான் நானும் சொல்லுறன்..! :D:lol:

என்ன நெடுக்ஸ் அண்ணா whisper chois STOCK ல் நிறைய காசை போட்டிருக்கிறிங்களோ?

ஐயையோ நம்ம மாற்றரை கண்டு பிடிச்சிட்டாய்ங்களே......! :D:lol:

Edited by nedukkalapoovan

அந்த நேரங்களில் பல அசௌகரியங்கள் உள்ளன. அவை எதுவுமின்றி, அந்த நாட்களிலும் சந்தோசமாக இருங்கள் என்பதே அக்கூற்றின் கருத்து. அதைப் போய் பெரிதாக்கி, ஒரு விவாதமே நடத்திவிட்டீர்களே. இருந்தாலும் நல்லது செய்ததற்காக உங்களைப் பாராட்டத்தான் வேண்டும். இங்குள்ள மெம்பர்சுக்கு இதைப் பற்றித் தெரிய வைத்தீர்களே. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடி விழுவாருக்கு ஒரு விவஸ்தையே இல்லை..நான் சொன்னது விளம்பரம் செய்யுறவங்களை :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.