Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்: கருப்பான ஆண்களே பெண்களின் தேர்வு

Featured Replies

அப்பிடி ஓடக்கூடியரை நான் செய்வன் என்று நினைச்சீங்களா? இதிலை எல்லாம் நான் நல்ல தெளிவாத்தான் இருக்கிறன். எனது எதிர்பார்ப்புகளுக்கு ஒத்தவராக இருப்பவரைத்தான் நான் செய்து கொள்ளுவன். சும்மா ஒருத்தரைப் பார்த்தவுடனை கல்யாணம் செய்வீங்கள் எண்டு நினைச்சீங்களா? உடனே முடிவெடுத்துப் போட்டு பிறகு கவலைப்படவா? வாழ்க்கை முழுவதும் வாழப் போறவரைப் பற்றி ஓரளவாவது தெரிஞ்சாப் பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ளுவன். அப்பிடிப் பழகும்போது, அவர் ஓடிப் போறவரா இல்லையா என்று கண்டுபிடிக்கமுடியாதா என்ன?

ம்ம்..தமிழச்சி அக்கா நீங்க ஓடகூடியவரை செய்ய மாட்டீங்க என்று நேக்கு நன்னா தெரியும் ஆனா வாறவர் வந்த பிறகு ஓடினா என்ன செய்வியள் :) ..ம்ம்ம் பார்த்தவுடனே கல்யாணம் செய்ய ஏலாது தான் தமிழச்சி அக்கா..(ஆனா ஒருவரை பார்த்தவுடனே அவரை பற்றி புரிந்து கொள்ளளாம் என்று நினைக்கிறேன் :wub: )..

ம்ம்ம்..இப்ப நாங்க ஆசையா ஒரு கிளியை வளர்கிறோம் என்று வையுங்கோவேன்.. :) (கிளிக்கு நம்மளை பற்றி நல்லா தெரியும் கிளியை பற்றி நம்மளுக்கு நல்லா தெரியும் :) )...ஆனா சில நேரம் கிளி தன்னையும் அறியாம பறந்து விடுகிறது தமிழச்சி அக்கா..(சோ ஓடி போறதை எல்லாம் கண்டு பிடிக்கிறது கஷ்டம் :) )...வேண்டும் என்றா ஒன்று செய்யலாம் இரண்டு காலையும் உடைத்து விட்டா சரி.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • Replies 103
  • Views 14.2k
  • Created
  • Last Reply

இரண்டு பேரும் ஒத்துச் செய்வதுதான் திருமணம். இரண்டு பேருக்கும் பிடித்திருந்தால்தான் திருமணம் செய்து கொள்வார்கள். பொருத்தம் பார்த்துச் செய்கிற எங்கட சமூகத்திலை இருந்து கொண்டே உங்களுக்கு இது விளங்கவில்லை என்றால் நான் இனி என்ன சொல்லி உங்களுக்கு விளங்க வைப்பது என்று விளங்கவில்லை. பொருத்தம் பார்ப்பது போல், மனப் பொருத்தத்தையும் பார்த்துச் செய்யும்போது, வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம், எதிர்பார்ப்புகள் இருக்கும். அவற்றிற்கேற்றவாறு வாழ்க்கை அமையும்போதுதானே அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க முடியும். சும்மா ஓரிரு முறை சந்தித்தவுடன் அவர்களின் விருப்பு வெறுப்புகள் தெரிந்து விடுமா?

புலம்பெயர்ந்து வந்தாலும், எமது பெற்றோர்கள் இன்னும் பழைய முறையையே பின்பற்றி, பொருத்தம் மட்டும் பார்த்துத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். எனக்குத் தெரிந்த பலர், இவ்வாறு மாட்டுப்பட்டு, வாழ்க்கையில் பிரச்சனைகளோடு அல்லாடுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் மிகச்சிறிய வயதிலேயே இங்கு வந்தவர்கள். பெற்றோருக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தங்கள் சந்தோசங்களைத் தொலைத்துவிட்டு, வாழ்வில் ஒரு பிடிப்பின்றியே வாழ்ந்து வருகிறார்கள். சிலர், விவாகரத்து வரை சென்றும் இருக்கிறார்கள்.

ம்ம்...தமிழச்சி அக்கா பொருத்தம் பார்த்து கல்யாணத்தை செய்வதை இருவரின் மன பொருத்தம் என்பது முக்கியமானது..(மற்றும்படி சாதக பொறுத்தம் என்பது எல்லாம் சுத்த வேஸ்ட் பாருங்கோ தமிழச்சி அக்கா :) )...

ஆனாலும் மனபொருத்ததை பார்த்து செய்து வைத்த திருமணங்களிள் பல விவாகரத்தில் அல்லவா போய் நிற்கிறது தமிழச்சி அக்கா :wub: ..பொருத்தங்களை விட விட்டு கொடுத்து போகும் மன பாங்கு தான் வாழ்க்கைக்கு சிறந்தது பாருங்கோ..(என்னிடம் அது இல்லை :) )..இப்படி இரு உள்ளங்கள் இணையும் போது அந்த வாழ்க்கை வசந்தமாக அமையும்..(மிச்ச எல்லாம் அதை வேற நான் சொல்ல வேண்டுமா என்ன :wub: )..

தமிழச்சி அக்கா உங்கள் கனவு நாயகன் மிக விரைவில் உங்களிடம் வர நானும் கடவுளை கும்பிடுறேன் :) ..வாழ்க்கையில நாம ஒன்றை நினைக்கிறோம் பட் அவன் என்னொன்றை அல்லவா நினைக்கிறான்.. :)

அப்ப நான் வரட்டா!!

இதுல காமடி என்னான்ன லவ்வோ லவ்னு ல:வ்வி ன வ தான் றொம்ப அவஸ்தை படினம.; தமிழ் வாழ்த்துக்கள்...

ம்ம்..உண்மையாவே சுண்டல் அண்ணா..(ரொம்பவே அவஸ்தை படுறீங்க போல இருக்கு :) )...காதல் சுகம் வந்து தனி சுகம் பாருங்கோ சுண்டல் அண்ணா.. :) (இதை கூட நீங்க தான் நேக்கு சொல்லி தந்தனியள் பாருங்கோ :wub: )..

"கங்கை நீரின் சுவை கடலை சேரும் வரை

சுண்ட அண்ணாவின் சுவை கடலை போடும் வரை

காதல் சுவை ஒன்று தானே பூமி உள்ள வரை" :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காதல பூமியோட மட்டு படுத்திறிங்க...

காதல் எனறது னாற்றோட பூமியோட ழூச்சோட ஆகயத்தொட உயிர்களோட என்று எல்லா இடமும் கலந்திருக்கு

சோ பூமி இல்லான்னாலும் காதல் நிலைச்சிறுக்கும்

என்ன சொல்றிங்க தமிழ்?

ஏன் காதல பூமியோட மட்டு படுத்திறிங்க...

காதல் எனறது னாற்றோட பூமியோட ழூச்சோட ஆகயத்தொட உயிர்களோட என்று எல்லா இடமும் கலந்திருக்கு

சோ பூமி இல்லான்னாலும் காதல் நிலைச்சிறுக்கும்

ஓ .....அப்படியோ :unsure::)

யம்மு, நிச்சயமா திருமணத்திற்குப்பின், சில விடயங்களை விட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஒன்றாகப் பிறந்து வளர்ந்த சகோதரர்களுக்கிடையிலேயே வித்தியாசங்கள் இருக்கும்போது, வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்களுக்கிடையில் நிச்சயம் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் அவ்வேறுபாடு, அதிகமாக இல்லாமல், குறைந்தளவு இருக்கும்போது, ஒருவர் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, ஒரு மதத்திற்குள் திருமணம் செய்வதற்கும் வேறு மதத்தில் திருமணம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா? அதுபோல்தான் இதுவும்.

புலம்பெயர்ந்த நாட்டில் கல்வி கற்கும் பெண்கள் பல வித்தியாசமான வேலைகளைச் செய்து வருகிறார்கள். உதாரணமாக, மார்க்கெட்டிங் துறையிலுள்ள பெண்கள், பல இடங்களுக்கும் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது. அப்படிப்பட்ட ஒருவர், பெண்கள் தனியாக வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதை விரும்பாத ஒருவரை மணந்தால் எப்படி இருக்கும்? அதேபோல், சமூக சேவையில் உள்ள பெண்களையும் பல ஆண்கள் திருமணம் செய்ய விரும்புவதில்லை. தங்களுக்கேற்ற மாதிரியான வாழ்வு அமைய விரும்புவர்கள் தங்களுக்கேற்றவர்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வதுதான் நல்லது. இன்று பல பெண்கள், தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறார்கள். ஆனால், பல பெண்களுக்கு திருமணத்திற்குப் பின்னர், அதனைக் கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. திருமணம் ஆனபின்பு, அவர்களும் குடும்பத்திற்கு மதிப்புக் கொடுத்து, தங்கள் இலட்சியங்களைக் கைவிடுகிறார்கள். படிக்கும்போது, அவர்களது இலட்சியங்கள் வானளவாக இருந்தன. திருமணமானபின், அப்படி ஒன்று இருந்ததா என்பதுபோல் நடந்து கொள்வார்கள். இது மட்டுமின்றி, வேலைகளில் கிடைக்கும் பிறமோஷன், இவரைவிட மனைவி அதிகமாக சம்பளம் எடுத்தல் போன்றனவும் இதில் அடங்கும். இவ்வாறான நிலை வருவதைத் தடுப்பதற்காகவே, தமக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது எனக் கூறுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே வாறவன் வேலைக்கே போக கூடாது வீட்ல தான் இருக்கனும்னா இப்ப என்ன பன்னுவிங்க இப்ப என்ன பன்னுவிங்க...

அட அணிதா அது உங்களுக்கு தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி அண்ணா அது என்ன நீல நிறம் நேக்கு அப்படி ஒரு நிற பெண்களை தெரியாதே... :) (எனகொருக்கா சொல்லுங்கோ பார்போம் :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

நீல நிற பெண்கள் என்றால்............... நீல படம் (blue film) நடிப்பினம் அவைதான்.

பேசாமல் சாத்திரியார் தலைமையில யாழ் கல்யாண மாலையை தொடங்கபோறன் உங்கட உங்கட போட்டோக்களோட விபரங்கள அணுப்புங்கோ..

முகத்தார் தான் செயலாளர்...

கோரல்றோ போட்டோசொப் போன்ற புரோகிராம்களை பாவித்து படத்தை கொஞ்சம் சிவப்பாக்க யாருக்காவது தெரிந்திருந்தால் தயவுசெய்து அறியதாருங்கள். சாத்திரியிடம் எனது போட்டோவை கொடுக்கலாம் என்றிருக்கேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கும் எங்க கைவசம் ஆள் இருக்கு

கறுப்ப சிவப்பாக்கணுமா இல்ல சிவப்ப கறுப்பாக்கணுமா? எல்லா விதமான மாஜா ஜால வேலைகலையும் செற்து உங்கள்க்கு சிறந்த துணையை தேடி தந்து உங்க்ள் வாழ்வில் ஒளி யேற்ற வருகின்றது யாழ்.கொம் மின் கல்யாண மாலை...இன்றே பதிவு செய்து கொண்டு உங்க்ள ஆமாற்றத்தை தவிறுங்கள்...

சாத்திரி சோதிட நிலையம்....

முகத்தார் புறோக்கர்நிலையம்...

கந்தப்பு கல்யாண பொருட்க்கள்; விற்பனை நிலையம்...

சுண்டல் அல்வா கடை

ஜமுனா பூக்கடை

அஜீவன் வீடியோ நிலையம்...

குளக்காட்டான் புகைப்பட ஸ்தாபனம்...

துயாஸ் கேட்டரிங்....

மாப்பிளை புறோகிதர் சேவை நிலையம்..

நெடுக்ஸ் மணமுறிவு ஆலோசனை நிலையம்....

புத்தன் மனநல மருத்துவர்..

சகல வசதிகளுடணும் யாழ்.கொம்மின் கல்யாணமாலை.... :lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கும் எங்க கைவசம் ஆள் இருக்கு

கறுப்ப சிவப்பாக்கணுமா இல்ல சிவப்ப கறுப்பாக்கணுமா? எல்லா விதமான மாஜா ஜால வேலைகலையும் செற்து உங்கள்க்கு சிறந்த துணையை தேடி தந்து உங்க்ள் வாழ்வில் ஒளி யேற்ற வருகின்றது யாழ்.கொம் மின் கல்யாண மாலை...இன்றே பதிவு செய்து கொண்டு உங்க்ள ஆமாற்றத்தை தவிறுங்கள்...

சாத்திரி சோதிட நிலையம்....

முகத்தார் புறோக்கர்நிலையம்...

கந்தப்பு கல்யாண பொருட்க்கள்; விற்பனை நிலையம்...

சுண்டல் அல்வா கடை

ஜமுனா பூக்கடை

அஜீவன் வீடியோ நிலையம்...

குளக்காட்டான் புகைப்பட ஸ்தாபனம்...

துயாஸ் கேட்டரிங்....

மாப்பிளை புறோகிதர் சேவை நிலையம்..

நெடுக்ஸ் மணமுறிவு ஆலோசனை நிலையம்....

புத்தன் மனநல மருத்துவர்..

சகல வசதிகளுடணும் யாழ்.கொம்மின் கல்யாணமாலை.... :lol::D:D

இவ்வளவு வசதிகள் இதில் இருக்கின்றதா. :lol: கொஞ்சம் இருந்தால் என் வாழ்வை தொலைக்க இருந்தேனே :lol:

அப்பிடியே வாறவன் வேலைக்கே போக கூடாது வீட்ல தான் இருக்கனும்னா இப்ப என்ன பன்னுவிங்க இப்ப என்ன பன்னுவிங்க...

அட அணிதா அது உங்களுக்கு தெரியாதா?

கல்யாணத்திற்குப் பிறகு அவர்கள் மனம் மாறும்போது, பெண்கள் மட்டும் விட்டுக் கொடுக்க வேண்டுமா? கொள்கைதான் முக்கியம் என நினைப்பவர்கள் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டும்தான் விருப்பு வெறுப்பு இருக்க முடியுமா? பெண்களுக்கும் உள்ளது என்பதை எப்போதுதான் ஆண்கள் உணரப் போகிறார்களோ? :lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்திற்குப் பிறகு அவர்கள் மனம் மாறும்போது, பெண்கள் மட்டும் விட்டுக் கொடுக்க வேண்டுமா? கொள்கைதான் முக்கியம் என நினைப்பவர்கள் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டும்தான் விருப்பு வெறுப்பு இருக்க முடியுமா? பெண்களுக்கும் உள்ளது என்பதை எப்போதுதான் ஆண்கள் உணரப் போகிறார்களோ? :lol::lol::D

நீங்கள் எப்ப ஆண்களை உணருறீங்களோ அப்ப உணர்வார்கள் அவர்கள் பெண்களைப் பற்றி. வெறுமனவே பெண்களை உணரனும் என்றது ஆணுக்கு ஒன்றும் தலையெழுத்தில்லையே..! ஆணின் விருப்பு வெறுப்பை பெண்கள் திருமணத்துக்கு அப்புறம் மதிக்கிறது மிகக் குறைவு. அதனால் தான் பல ஆண்கள் எதேச்சதிகாரமா முடிவெடுக்கிறார்கள். பெண்களுக்கு அது பிடிக்காத நிலையில்.. கருத்து வேறுபாடு முளைக்க... தேனாக இனித்த உறவுகள் சிதைந்து போகின்றன. என்னதான்.. மனசும் மனசும் ஒத்துப் போறவர் என்று தேடினாலும் அவனும் நீங்களும் இரண்டு தனிமனிதர்கள் என்பதை எப்ப உணருறீங்களோ அப்பவே.. உங்கள் விருப்பம் அல்லது எண்ணத்தில் உள்ள போலித்தனத்தை அடையாளம் கண்டு கொள்வீர்கள். :D

நீங்கள் எப்ப ஆண்களை உணருறீங்களோ அப்ப உணர்வார்கள் அவர்கள் பெண்களைப் பற்றி. வெறுமனவே பெண்களை உணரனும் என்றது ஆணுக்கு ஒன்றும் தலையெழுத்தில்லையே..! ஆணின் விருப்பு வெறுப்பை பெண்கள் திருமணத்துக்கு அப்புறம் மதிக்கிறது மிகக் குறைவு. அதனால் தான் பல ஆண்கள் எதேச்சதிகாரமா முடிவெடுக்கிறார்கள். பெண்களுக்கு அது பிடிக்காத நிலையில்.. கருத்து வேறுபாடு முளைக்க... தேனாக இனித்த உறவுகள் சிதைந்து போகின்றன. என்னதான்.. மனசும் மனசும் ஒத்துப் போறவர் என்று தேடினாலும் அவனும் நீங்களும் இரண்டு தனிமனிதர்கள் என்பதை எப்ப உணருறீங்களோ அப்பவே.. உங்கள் விருப்பம் அல்லது எண்ணத்தில் உள்ள போலித்தனத்தை அடையாளம் கண்டு கொள்வீர்கள். :lol:

அதனை உணர்ந்தபடியால்தானே இவ்வளவும் கதைக்கிறேன். வாழ்க்கையில் விருப்பு வெறுப்பே இருக்கக்கூடாது போலல்லவா உங்களின் வாதங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அதனை உணர்ந்தபடியால்தானே இவ்வளவும் கதைக்கிறேன். வாழ்க்கையில் விருப்பு வெறுப்பே இருக்கக்கூடாது போலல்லவா உங்களின் வாதங்கள் இருக்கின்றன.

நாமல்ல சகோதரி. நீங்களே அந்த வாதத்தை முன் வைத்தீர்கள். அதாவது நீங்கள் தான் குறிப்பிட்டீர்கள்.. நீங்கள் தேடுபவர் உங்கள் விருப்பங்களுக்கு ஒத்திசைவா வாறவரா இருக்க வேண்டும் என்று. ஒரு தனிமனிதனின் விருப்பு வெறுப்பை அங்கீகரிப்பதாகப் பேசும் நீங்கள்.. எப்படி ஒத்திசைவானவர் வரனும் என்று மட்டும் எதிர்பார்க்கலாம். எந்த மனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் உங்களை ஒத்திசைவது என்று எப்போதும் அமையாதே. :lol::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே அம்மா வீட்ட போகாத கும்பத்தக்கு காசு அணுப்பாத இப்பிடி எத்தனை நிபந்தனைகள் போடுற பொண்ணுங்கள இந்த சழூகத்தில பாக்கிறம;? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே அம்மா வீட்ட போகாத குடும்பத்தக்கு காசு அணுப்பாத இப்பிடி எத்தனை நிபந்தனைகள் போடுற பொண்ணுங்கள இந்த சழூகத்தில பாக்கிறம் ? :lol::D

இப்படி புலத்தில் இருந்து புகலிடத்துக்கு வந்த ஆண்களைப் பார்த்து.. புகலிடத்துக்கு வந்த பெண்கள் போடுறாங்க. ஆனால் புகலிடத்தில பிறந்த ஆண்களைப் பார்த்து அவ்வகைப் பெண்கள் என்ன நிபந்தனை போடுறாங்க என்றதையும் சொல்லுங்க.. உங்க கொஞ்சப் பேர் அந்தக் கற்றகரிக்க வருகினம்..!

நான் சொல்லிடுவன்.. அப்புறம் சந்தி சிரிக்கும்.. சா களம் சிரிக்கும்.. பெண்களைப் பார்த்து..! :D:lol:

யம்மு, நிச்சயமா திருமணத்திற்குப்பின், சில விடயங்களை விட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஒன்றாகப் பிறந்து வளர்ந்த சகோதரர்களுக்கிடையிலேயே வித்தியாசங்கள் இருக்கும்போது, வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்களுக்கிடையில் நிச்சயம் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் அவ்வேறுபாடு, அதிகமாக இல்லாமல், குறைந்தளவு இருக்கும்போது, ஒருவர் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, ஒரு மதத்திற்குள் திருமணம் செய்வதற்கும் வேறு மதத்தில் திருமணம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா? அதுபோல்தான் இதுவும்.

புலம்பெயர்ந்த நாட்டில் கல்வி கற்கும் பெண்கள் பல வித்தியாசமான வேலைகளைச் செய்து வருகிறார்கள். உதாரணமாக, மார்க்கெட்டிங் துறையிலுள்ள பெண்கள், பல இடங்களுக்கும் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது. அப்படிப்பட்ட ஒருவர், பெண்கள் தனியாக வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதை விரும்பாத ஒருவரை மணந்தால் எப்படி இருக்கும்? அதேபோல், சமூக சேவையில் உள்ள பெண்களையும் பல ஆண்கள் திருமணம் செய்ய விரும்புவதில்லை. தங்களுக்கேற்ற மாதிரியான வாழ்வு அமைய விரும்புவர்கள் தங்களுக்கேற்றவர்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வதுதான் நல்லது. இன்று பல பெண்கள், தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறார்கள். ஆனால், பல பெண்களுக்கு திருமணத்திற்குப் பின்னர், அதனைக் கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. திருமணம் ஆனபின்பு, அவர்களும் குடும்பத்திற்கு மதிப்புக் கொடுத்து, தங்கள் இலட்சியங்களைக் கைவிடுகிறார்கள். படிக்கும்போது, அவர்களது இலட்சியங்கள் வானளவாக இருந்தன. திருமணமானபின், அப்படி ஒன்று இருந்ததா என்பதுபோல் நடந்து கொள்வார்கள். இது மட்டுமின்றி, வேலைகளில் கிடைக்கும் பிறமோஷன், இவரைவிட மனைவி அதிகமாக சம்பளம் எடுத்தல் போன்றனவும் இதில் அடங்கும். இவ்வாறான நிலை வருவதைத் தடுப்பதற்காகவே, தமக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது எனக் கூறுகிறேன்.

ம்ம்..தமிழச்சி அக்கா நீங்க சொல்வது சரி தான்.. :lol: (ஆனால் அதிக வேறுபாடு இல்லாம குறைந்தளவாக எமக்கு ஏற்றவர் போல் ஒருவரையோ அல்லது ஒருவாவையோ தேடுவதை விட வாறவையை நமக்கு ஏற்ற மாதிரியும் நாம் அவைக்கு ஏற்ற மாதிரியும் சில விசயங்களிள் விட்டு கொடுத்தாலே ஒகே தானே..(இதை பற்றி என்ன நினைக்கிறீங்க தமிழச்சி அக்கா :lol: )..ஒரு மதமோ பிறொதொரு மதமோ இருவருக்கும் பிடித்திருந்தா அதற்கு பிறகு மதம் பெரிதல்ல மனதை விட என்பது என்னுடைய கருத்து..(குறிப்பாக வெவ்வெறு மதத்தில திருமணம் செய்தவை அமைதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறதை காண கூடியதாக இருக்கிறதே).. :D

ம்ம்..நீங்கள் குறிபிட்டது போல சில துறைகளில் பணி புரியும் பெண்கள் வேறு இடம் சென்று வரதான் வேண்டும் இல்லை என்று சொல்லவில்லை..(இதற்குள் ஆண்களும் அடங்கும் :D )..இவ்வாறனவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை தெரிவு செய்தது சாலவும் சிறந்தது தான் ஆனாலும் இப்படியே அங்கையும் இங்கையும் போய் கொண்டிருந்தா..(குடும்பம் என்னதிற்கு ஆகிறது என்பதனையும் சிந்திக்க வேண்டுமல்லவா :lol: )...

ம்ம்..இவர்கள் தங்களுக்கு ஏற்ற திருமணத்தை செய்த போதிலும்..(குடும்பம் பொறுப்பு என்று வரக்க இப்படி அங்கையும் இங்கையும் போய் திரிவதை நிற்பாட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தானே தள்ளபடுகிறார்கள்).. :lol:

திருமணம் ஆன பின் பெண்கள் ஏன் இலட்சியங்களை கைவிடவேண்டும்..(அவர்கள் தொடரலாமே)..குடும்பம் என்று வந்தவுடன் அவர்களாள் ஏலாமல் கைவிடுகிறார்கள் தவிர எல்லா ஆண்களையும் குற்றம் சுமத்த முடியாது பாருங்கோ தமிழச்சி அக்கா..படிக்கும் போது வானளவாக இருந்த இலட்சியங்கள் திருமணதிற்கு பின் அந்த இலட்சியங்கள் எல்லாம் பெண்களுக்கு பஞ்சியில கைவிட்டு விடுகிறார்கள் என்று சொல்லுங்கோ :lol: ..(வானளாவன இலட்சியம் என்று ஒன்று இருந்தா கட்டாயம் அதை அடைய தான் யாரும் முயற்சிப்பீனம் நான் சொல்லுறது சரி தானே தமிழச்சி அக்கா)..

உங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுத்தாலும்.(உங்களை நன்கு புரிந்தவர்களாக இருக்கலாம் ஆணா இருக்கலாம் பெண்ணா இருக்கலாம்)..இருவரும் படித்து நல்ல தொழிலை இருந்தாலும் புரோமசன் முதலியன கிடைத்தா நிச்சயம் மனதிற்குள் ஜேலஸ் வரும் ஆனா காட்டி கொள்ள மாட்டார்கள்..(இதில் பெண்கள் தான் அதிகம் ஆண்கள் இதை எல்லாம் கண்டு கொள்ளுறதில்லையாக்கும் :D )..

இப்ப பாருங்கோ பயணம் போகும் போது வாகனத்தை எவ்வளவு நல்லதா செலக்ட் பண்ணிட்டு போனாலும் சில வேளையிள பிரேக்டவுன் ஆகுது தானே அதை போல தான் என்ன இப்ப விளங்கிச்சோ..(நாம தேர்ந்தெடுக்கிற வாகனமே இப்படி ஆகும் போது வாறவன்/வாறவள் எந்த மூலை தமிழச்சி அக்கா.. :lol: (நிசமா என்னால முடியல)..

அப்ப நான் வரட்டா!!

புத்தன் மனநல மருத்துவர்..

சகல வசதிகளுடணும் யாழ்.கொம்மின் கல்யாணமாலை....

சுண்டல் மாமா வெறி சாறி சுண்டல் அண்ணா எப்ப இருந்து இதை தொடங்கினீங்க எனக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லை பாருங்கோ.. :lol: (அச்சோ...அச்சோ)..

அது எல்லாம் இருகட்டும் என்ன சுண்டல் அல்வா கடையோ..(அது கரக்டா தான் இருக்கு :D )...ஆனா ஜமுனா பூகடை நன்னா இல்ல சொல்லிட்டேன்..(உந்த வியாபாரதிற்கு எப்படி புரோவிட் அதை சொல்லுங்கோ அதற்கு பிறகு யோசிப்போம் :lol: )...ஆனா சுண்டல் அண்ணாவிற்கு இலவசமா பூ எல்லாம் தருவன் என்று மட்டும் யோசிக்காதையுங்கோ என்ன..வேண்டும் என்றா சுண்டல் அண்ணாவின்ட காதில பூவை வைக்கிறன் :D

பரவால்ல தூயிஸ் கேட்டரிங்கா..(அப்ப சாப்பிடுறவையின்ட பாடு எல்லாம் பாவம் வெஸ்மீட் கொஸ்பிட்டலில இப்பவே புக் பண்ணி வைக்க வேண்டும் என்ன)...அட தூயிஸ் பிறகு எனோட கோவிக்கிறதில்ல... :lol:

எல்லாம் சரி உந்த புத்து மாமா மனநல மருத்துவரோ..(நாசமா போச்சு :D )...அங்க போறவை எல்லாம் தான் அப்படி ஆக வேண்டும்..(இது என்ன கொடுமை)..எல்லாம் ஒகேயா தான் இருக்கு முதலில நேக்கு நன்னதா ஒரு பொண்ணை பாருங்கோ சுண்டல் மாமா..(எனக்கு அவாவை பார்த்தவுடன நெஞ்சில தோட்டா ஏறின மாதிரி இருக்கணும் சரியா உது காணும் நேக்கு :lol: )..

எப்ப பொண்ணை காட்டுவியள் எங்கே காட்டுவியள் என்று சொன்னா இன்னும் நன்னா இருக்கும்..(ஆனா உந்த மாப்பிள்ளை புறோகிதர் சேவை நிலையத்தை தான் நம்ம ஏலாது சுண்டல் அண்ணா கவனமா இருக்க வேண்டும் கடசியில மாப்பு வைத்திட்டான்யா ஆப்பு என்று கஸ்டம்ர்ஸ் எல்லாரும் சொல்ல போயீனம் பாருங்கோ :lol: )..

அப்ப நான் வரட்டா!!

நீல நிற பெண்கள் என்றால்............... நீல படம் (blue film) நடிப்பினம் அவைதான்.

ம்ம்ம்..அண்ணா இப்படியும் ஒரு பிலிம் இருக்கா பேபிகள் பார்க்கலாமோ அண்ணா.. :huh: (கடசியா முடியக்க பிலிம் பை பாரதிராஜா என்று வருமா அண்ணா :wub: )..நானும் உந்த நீல நிற பெண்களை பார்க்க வேண்டும் அண்ணா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்டைக்கு பாத்தது ஞாபகம் இல்லையோ?

சரி முதல்ல போட்டோவ அணுப்புங்கோ..

என்ன அண்டைக்கு பாத்தது ஞாபகம் இல்லையோ?

சரி முதல்ல போட்டோவ அணுப்புங்கோ..

சுண்டல் மாமா அன்னைக்கு பார்த்தது உங்களுக்கு அல்லோ..(நேக்கு பார்க்கலையே :wub: )...என்னாது என்ட போட்டவோ..(தமிழ் நாட்டிற்கே சா சிட்னிக்கே நம்ம போட்டோ தெரியும் இதில என்னதிற்கு சுண்டல் மாமா நான் போட்டோவை அனுப்ப வேண்டும் :wub: )...அந்த அஜித்தின்ட போட்டோவை அனுப்பினா என்ன என்ட போட்டோவை அனுப்பினா என்ன எல்லாம் ஒன்னு தான்.. :huh: (அச்சோ...அச்சோ)...சப்பா..இப்பவே கண்ணை கட்டுதே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செருப்பு தான் அணுப்புவாங்க பருவால்லையா.............. :huh:

சந்தேகப்படும் ஆணோடு வாழ்வதை விட கல்யாணமே பண்ணிக்காம தானுண்டு தன் வேலையுண்டு என சந்தோஷமாக பெண்கள் வாழலாம்.

வாழ்க்கையில் பிரச்சினை வரலாம் பிரச்சினையே வாழ்க்கையாகிட கூடாதுங்கோ

வாழ்க்கையில் ஒரு முறைதான் சாகலாம். செத்து செத்து வாழமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீ ஆ?

நல்லா சொல்லுறியள்.......... :huh::)

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகப்படும் ஆணோடு வாழ்வதை விட கல்யாணமே பண்ணிக்காம தானுண்டு தன் வேலையுண்டு என சந்தோஷமாக பெண்கள் வாழலாம்.

வாழ்க்கையில் பிரச்சினை வரலாம் பிரச்சினையே வாழ்க்கையாகிட கூடாதுங்கோ

வாழ்க்கையில் ஒரு முறைதான் சாகலாம். செத்து செத்து வாழமுடியாது.

சந்தேகம் மனிதரில யாருக்கில்ல. ஏதோ ஆண்களுக்குத்தான் உள்ளது போலச் சொல்லுறீங்க. கொஞ்சம் லேட்டானா பெத்த பிள்ளை மீதே பெற்றோருக்கு சந்தேம வரேக்க.. ஆண்களுக்கு பெண்கள் மீது வாறது தப்பில்ல. அதேபோல பெண்களுக்கு ஆண்கள் மீது வாறதுதப்பில்ல. ஆணோ பெண்ணோ சந்தேகம் ஏற்படாதபடிக்கு நேர்மையா நடந்து கொள்ளுறதுதான் முக்கியம். சந்தேகம் எழாத மனிதன் உலகில் இருக்கவே முடியாது. அப்படி இருப்பதாகச் சொன்னால் அது பொய்..! :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.