Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரையில் பெனோட்டோ புள்ளே. திராவிட கழகங்கள் மெளனம்.

Featured Replies

நான் 2 டம்ளர் முறை ஒழிப்பும் ஒரு சாதனை என்றேனே தவிர அது மட்டும் தான் என்று கூறவில்லை வெறிவேல் தன் குறுகிய எண்ணத்தில் இருந்து விடுபடுவாராக....

உங்கள் காழ்ப்புணர்ச்சிக்கு பதிலையும் நீங்களே சொல்லி விட்டீர்கள் நன்றி

மாற்றுக்கருத்தாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு அப்படியே புல்லரிக்க வைக்கிறது .

சீச்சீ! இதுவெல்லாம் காழ்ப்புணர்வல்ல. பகுத்தறிவு பாரம்பரியம். :(

Edited by vettri-vel

  • Replies 107
  • Views 10.3k
  • Created
  • Last Reply

ஆங்கிலேயர்க்கு ஆதரவாக இருந்ததற்கு உண்மையான காரணம் அவன் பார்ப்பன நரிகளை விட மேலானவன் .... தாழ்ந்த சாதிகளை உயர்த்தியதில் அவன் பங்கு மிக அதிகம்.... இதயெல்லாம் பற்றி பேச உங்களுக்கு உரிமையில்லை... ஏனென்றால் உங்களை நான் சக தமிழனாக எண்ண வில்லை ...உயர் சாதி ஆதிக்க வெறியராகவே உங்களை நான் பார்க்கிறேன்..

என் சொந்த ஊரில் என் முன்னோர்கள் பலர் பார்ப்பன சாதீயத்தில் பாதிக்கப்பட்டனர் .. அந்த வலி உங்களுக்குப்புரியாது....

மேலும் பெரியாரை விட்டு விட்டு தனிக்கட்சி தொடங்கியவர்கள் செய்தவற்றுக்கு எல்லாம் பெரியாரை பொறுப்பாக்குவது.????!!!!!... ஒட்டுக்குழு கருணா கூட புலிகளில் இருந்து பிரிந்து அந்த குழுவுக்கு புலிகளின் பெயரை வைத்தும் விட்டால் அது புலிகளின் வழித்தோன்றல் ஆகி விடுமா???

ஏதோ நாங்கள் திராவிட நாடு கேட்டதால் தான் இந்தியா ஈழப்போராட்டத்தை நசுக்க முனைவதாக நீங்கள் நம்பினால் உங்களை எண்ணி பரிதாபப்படுகிறேன்...

மீண்டும் ஒன்றை நினைவு கூர விரும்புகிறேன்..... பெரியார் தொண்டர்கள் ஈழ ஆதரவு போராட்டத்தில் திராவிடத்தை இழுப்பதில்லை .... அவர்கள் தமிழன் என்ற இனப்பாசத்தாலேயே அவ்வாறு போராடுகின்றனர் ... சிறை செல்லவும் தயங்காமல் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்

மன்னிக்கவும் வெற்றிவேல் ... விரைவாக தட்டச்சு செய்ததில் பிழை வந்துவிட்டது... வேறெந்த உள்னோக்கமும் இல்லை

மாற்றுக்கருத்தாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு அப்படியே புல்லரிக்க வைக்கிறது .

சீச்சீ! இதுவெல்லாம் காழ்ப்புணர்வல்ல. பகுத்தறிவு பாரம்பரியம். :(

மன்னிக்கவும் வெற்றிவேல் ... விரைவாக தட்டச்சு செய்ததில் பிழை வந்துவிட்டது... வேறெந்த உள்னோக்கமும் இல்லை

தூயவன் கூறிய தமிழின வெறியும், சாதி வெறியும் பிடித்த மூடர்களையும், வெற்றிவேல் குறிப்பிட்ட மனநோயாளிகளையும் இப்பொழுது குறிப்பிடுகிறேன்.

நான் தந்த வசனங்களுக்கு இலக்கமிட்டிருந்தேன். அதை சொன்னவர்களையும் அதே இலக்கத்துடன் குறிப்பிடுகிறேன்.

1. ஒளவையார்

2. திருமூலர்

3. திருமூலர்

4. விவேகானந்தர்

5. விவேகானந்தர்

6. மறைமலை அடிகள்

இங்கே நான் தந்த வசனங்களை மிகக் குறைவானவை. ஆரியப் பார்ப்னர்களுக்கும் இந்து மத வேதங்களுக்கும் எதிராக கருத்துச் சொல்லிப் போராடிய பல ஆயிரம் தமிழர்கள் உண்டு. அவர்கள் தமிழர்களை சிதைக்க வந்த பார்ப்பனிய ஆரியத்தை, வேதங்களை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக பலர் போராடி வந்திருக்கிறார்கள். திருவள்ளுவர் ஒரு மிகப் பெரிய ஆரிய எதிர்ப்பாளர் என்பது பல அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது.

அன்றைக்கு எமது முன்னோர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று வரை தொடர்கிறது. நீங்கள் பார்ப்பனர்களை, இந்து மதத்தை, வேதங்களை எதிர்ப்பதை தந்தை பெரியாரோடு முடிச்சுப் போடுகின்ற முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். பரந்து சிந்திக்கப் பழகுங்கள்.

ஆரிய திராவிடம் பேசியவர்கள் ஆரியர்களே தவிர நாம் அல்ல. ஆரிய திராவிடப் பிரச்சனையில் உள்ள உண்மைகளை பல வரலாற்று அறிஞர்கள்உலகுக்கு சொல்லியுள்ளார்கள். ஆரியம், வர்ணாச்சிரமம் தமிழர்களை சிதைத்தது என்பது உண்மை. இந்த உண்மையை இன்றைக்கு ஈழத்தில் வெளிப்படையாக பேசுகிறார்கள்.

நீங்கள் சென்ற நூற்றாண்டில் வந்த திராவிட இயக்கங்களை திட்டித் தீர்ப்பதால், ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்ற உண்மை மாறி விடாது.

ஆகவே அர்த்தமற்ற திசை திருப்பல்களை விட்டு விட்டு, உண்மையை ஏற்றுக் கொண்டு, தமிழினத்தை சரியான பாதையில் நடத்திச் செல்லும் பணிக்கு கை கொடுக்க வாருங்கள்.

மீண்டும் சொல்கிறேன். உங்களுடைய மத நம்பிக்கை உங்களுக்கு முக்கியம் என்றால், உங்களுடைய மதத்தை சீர்திருத்தம் பணியை நீங்களே செய்யுங்கள். அதுதான் உங்களுக்கு மானமும் மரியாதையும் ஆகும்.

ஓதுவார் ஆறுமுகசாமி சிதம்பரத்தில் தேவாரம் பாடச் சென்ற போது எத்தனை இந்துப் பக்தர்கள் துணையாக வந்தார்கள்? எந்த இந்து மடம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது? ஒன்றுமே இல்லை.

அவருக்கு ஆதரவாக வந்து நின்றவர்கள் எல்லோரும் கடவுள் மறுப்பாளர்கள். ஆயினும் கடவுளை நம்புபவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க என்று வந்திருந்தார்கள்.

ஆறுமுகசாமி தங்குவதற்கு கூட ஒரு வீடு இல்லாமல் கோயிலில் தங்குகிறார் என்ற செய்தி உங்களுக்கு தெரியுமா?

அவருக்கு மாத உதவித் தொகையாக மூவாயிரம் ருபாய்களும், மருத்தவ உதவித் தொகையும் கலைஞர் அறிவித்திருக்கிறார். கோடிகளில் திளைக்கின்ற எந்த மடமாவது அவருக்கு துணை நிற்க வந்ததா?

இதுதான் உண்மை நிலைமை. பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கவே நாம்தான் வர வேண்டி இருக்கிறது. தயவு செய்து "என்ன சொல்லி பெரியாரை திட்டலாம்" என்று ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு, இந்து மதத்தில் உள்ள அழுக்குகளை களைய போராடுங்கள். அதுவே நீங்கள் செய்கின்ற மிகப் பெரிய மதப் பணியாக இருக்கும்.

நாங்கள் இந்தியாவில் இருப்பது இப்போது பெரிய பிரச்சனை அல்ல ... முதலில் ஈழம் கிடைக்க வேண்டும் அது தான் முக்கியம் ...

தமிழகம் இனி இந்தியாவில் இருந்து பிரிய வாய்ப்பில்லை ஏனெனில் இங்கு 35 விழுக்காடு பிறமொழியினர்..

எனவே இந்தியாவில் இருந்து கொண்டே முடிந்தளவு சுய மரியாதையுடன் வாழ்வோம்...முடிந்தால் மந்திரிகள் கொண்டு வடக்கினையும் ஆள்வோம்.

எதற்கு பிடிக்காத இந்தியாவுடன் இணைந்து இருக்கிறீர்கள்! பேசாமல் மீண்டும் திராவிட நாடு கேளுங்களேன். அதற்கு தமிழக மக்களிடம் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று பார்த்து விடுவோம். ஓ! இல்லை திராவிட தலைவர்களுக்கு வருமான வரி பயமும், வாலை ஒட்ட நறுக்கி விடுவார்கள் என்ற பயமும் இருக்கிறதே என்ன செய்வது? :(

மன்னிக்கும் அளவுக்கு ஒரு பெரிய தவறும் நீங்கள் செய்து விடவில்லை. அடிக்கடி உங்கள் கச்சேரி கேட்க ஆர்வமாக இருக்கிறேன் :wub:

ம்ம்ம் சரி தான் உங்களை பிழையாக இல்லாமல் உண்மையாகவே அப்படி அழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது..... ஆனாலும் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஈழத்தில் சாதி வெறியர்கள் உண்டு என்று படித்து இருக்கிறேன் ...ஆனால் உங்களைப்பார்த்தபின்பு அதன் ஆழத்தை அறிந்து கொண்டேன்.

Edited by வேலவன்

ஆமா வெற்றிவேல் கொஞ்சம் அவசர புத்தி தான்..... சரி உங்களை ஒன்று கேட்கிறேன்....

நீங்கள் எல்லாம் உங்கள் தாய் மண்ணான தமிழீழத்தை விட்டு புலம் பெயர்ந்து வாழ்கிறீர்கள் ..... அங்கே போய் உங்கள் தாயக விடுதலைக்காக ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறீர்களா???

அதை விட உங்களுக்கு பெரியாரை இகழ்வதும் எனக்கும் அறிவுரை சொல்வதும் தான் முக்கியமாக போய்விட்டதோ???

கேட்டால் நான் ரகசியமாக பணம் கொடுப்பேன் என்று கதை விடுவீர்கள் ..... அல்லது ஏதாவது செய்வேன் என்பீர்கள் ஆனால் நீங்கள் செய்வதோ .... :(

திபெத் மக்களை ப்பார்த்தாவது திருந்துங்கள்

பாவம் நீங்கள்! உணர்ச்சிவசப்படுபவர்! கொஞ்சம் அவசர முடிவுகள் எடுப்பவர்! என்று தோன்றுகிறது. தியானம் செய்யும் பழக்கம் இதுவரையில் இல்லையென்றால் இனியாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நிறைய தெளிவு பிறக்கும் :wub:

Edited by வேலவன்

வேலவன்!

ஈழத்திலும் சாதி வெறி உண்டு. ஈழத்தில் உள்ள பார்ப்பனர்கள் மத்தியிலும் அது உண்டு. அவர்கள் தமது சாதிய நலனுக்கு பிரச்சனை என்றால் விடுதலைப் புலிகளைக் கூட எதிர்க்க துணிவார்கள்.

விடுதலைப் புலிகள் தைத் திருநாளை புத்தாண்டாக மாற்றுகின்ற நடைமுறையை செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு நல்லளிப்பு வழங்கி அதை ஆரம்பித்து வைத்தார்கள்.

அதன் பிறகு இலங்கை மண் நூல் வெளியிட்டில் இந்து மதத்தின் ஊடாக வருகின்ற ஆரிய, வர்ணாச்சிரம பிரச்சனைகளை சற்றுத் தொட்டார்கள்.

இதை கண்டு வெலுவெலுத்துப் போன பார்ப்பனர்கள் "சித்திரைப் புத்தாண்டுதான் தமிழர்களின் புத்தாண்டு" என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். சிங்கள பேரினவாதம் எங்களை நசுக்கிய போது இவர்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். தம்முடைய சாதிய நலன்களுக்காக இப்பொழுது விடுதலைப் புலிகளோடு மறைமுகமாக முரண்படத் தொடங்கியிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்களின் சாதி வெறியை புரிந்து கொள்ளலாம்.

போய் மதத்தை சீர்திருத்தங்கள் என்று சொன்னல், அதைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ள மாட்டார்கள். குறைகளை சொல்லும் பொழுது மட்டும் தேவையில்லாமல் திராவிட இயக்கங்களையும் தலைவர்களையும் திட்டிக் கொண்டு வருவார்கள்.

எனக்கு ப்புரிகிறது சபேசன்......

அது தான் அவர்களைப்பார்த்து கேட்கிறேன்.... நீங்கள் உங்கள் தாயக மண்ணின் விடுதலைக்காக சில பெரியார் தொண்டர்கள் பட்ட இன்னல்களில் ஒரு அளவாவதுபட்டீர்களா என்று அதை விடுத்து ... பெரியாரை இகழ்வதில் காட்டும் அக்கறையை ..... இனியாவது உங்கள் தாய்மண்ணின்விடுதலையில் செலுத்துங்கள்....

Edited by வேலவன்

ஆமா வெற்றிவேல் கொஞ்சம் அவசர புத்தி தான்..... சரி உங்களை ஒன்று கேட்கிறேன்....

நீங்கள் எல்லாம் உங்கள் தாய் மண்ணான தமிழீழத்தை விட்டு புலம் பெயர்ந்து வாழ்கிறீர்கள் ..... அங்கே போய் உங்கள் தாயக விடுதலைக்காக ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறீர்களா???

கேட்டால் நான் ரகசியமாக பணம் கொடுப்பேன் என்று கதை விடுவீர்கள் ..... அல்லது ஏதாவது செய்வேன் என்பீர்கள் ஆனால் நீங்கள் செய்வதோ .... :(

திபெத் மக்களை ப்பார்த்தாவது திருந்துங்கள்

ஈழப்போரட்டத்தின் இன்னொரு தளம் சர்வேதத்திலும் உள்ளது நண்பரே. ஆயுதம் ஏந்தாத அந்த போராட்டமும் மிக முக்கியமானது தான். மாநில எல்லைகளுக்குள் அடங்கி விடாத, கண்டங்கள் கடந்து வந்து விட்ட எங்கள் போராட்டத்தின் தன்மையில் உங்களுக்கு தெளிவு இருந்தால் மேலே கேட்ட கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள்.

ஆனாலும் ஈழப்போராட்டத்தின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக ஒரு ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் எங்களுடன் இவ்வளவு கருத்து பகிர்ந்து கொள்ளும் உங்கள் மேல் ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அது வேறு. ஆனாலும் கொள்கை முரண்பாடுகள் மனிதர்களிடம் இருக்கத்தான் செய்யும்.

Edited by vettri-vel

இதை கண்டு வெலுவெலுத்துப் போன பார்ப்பனர்கள் "சித்திரைப் புத்தாண்டுதான் தமிழர்களின் புத்தாண்டு" என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். சிங்கள பேரினவாதம் எங்களை நசுக்கிய போது இவர்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். தம்முடைய சாதிய நலன்களுக்காக இப்பொழுது விடுதலைப் புலிகளோடு மறைமுகமாக முரண்படத் தொடங்கியிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்களின் சாதி வெறியை புரிந்து கொள்ளலாம்.

இதோடா! ஈஸ்டருக்கு எந்த சேர்ச்சுக்கு போனீர்கள்? சபேசன்

ம்ம்ம் சகோதரா நமக்கு தற்பொழுது முக்கியம் ஈழ விடுதலை தான்...... அதற்காக நீங்கள் ஆயுதம் ஏந்தாமல் ஆனால் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்க போராடுவீர்களேயானால் மிகவும் நல்லது...

பின் ஏன் இப்போது தேவையில்லாத திராவிட ஆரிய சண்டை..... அதனை தமிழீழம் விடுதல பெற்ற பின்பு யாழ்ப்பாணத்தில் வைத்துக்கொள்ளலாம் ......

அது வரையாவது நமது குறிக்கோள் ஈழ விடுதலை ம்ட்டுமாக இருக்கட்டும்

அர்ச்சுனன் கண்களுக்கு தெரிவது குருவியின் கண்கள் என்பது போல்...

இதற்குப்பெயர் தான் உண்மையோ :(

ஐயோ பாவம். எந்த மார்வாடிச் சமணர்களிடம் பணம் வாங்கித் தமிழினத்தைச் சிதைக்க கன்னடவெறியன் ராமசாமி முயன்றாரோ, அந்தக் சமணர்கள் தாம் அப்பரையும் சம்பந்தரையும் கொலை செய்தார்கள். இப்போதும் இவரும் சேர்ந்து அந்தச் சமணர்களை நல்லவர் போல குருவிற்காகக் காட்ட முனைகின்றார்.

நந்தனை யாருமே கூப்பிட்டு வரவுமில்லை. சாகடிக்கவுமில்லை. சுயமாகக் கொள்கையில்லாதவர்கள் வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

தவிரவும் சிதம்பரத்தில் சிவடியார்களுக்கு எவனுமே உதவிட முன்வரவில்லை. யாரோ, 4,5 பேர் கடைசிநாள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். எல்லாம் முடிந்தபிறகே தவிர, மற்றும்படி ஒரு உதவியும் செய்யவில்லை.

பெருமையெடுக்கின்றதற்கு எங்கே இடம் கிடைக்கும் என்று அலைந்து திரிக்கின்ற கும்பல்கள்

நான் எழுதியதில் பொய்யும், புரட்டும், திரிப்பும், மறைப்பும் இல்லை. அது இந்து வெறியர்களின் வழக்கம்.

கோயிலுக்குள் நுழைய வந்த நந்தனையும், தமிழில் பாடி வந்த சம்பந்தனையும், சமண நண்பர்களோடு பேசிய அப்பரையும் கொன்றுவிட்டு இந்து வெறியர்கள் திரித்த திரிப்பு இருக்கிறதே, அதை விட பொய்யும், புரட்டும், திரிப்பும், மறைப்பும் யாரும் செய்ய முடியாது.

ஔவையாரோ விவேகானந்தரோ வேறு யாரோ எப்போது அந்த கருத்துக்களை சொன்னார்கள் என்ற ஆதாரங்கள் தரமுடியுமா? இல்லை இது, நரம்பில் இல்லாத நாவால் எதையும் வரம்பில் இல்லாமல் பேசினால் அதுவே காலப்போக்கில் உண்மையாகிவிடும் என்ற பகுத்தறிவா?

'''மதுரையில் பெனோட்டோ புள்ளே. திராவிட கழகங்கள் மெளனம்'''

பனங்காயின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

எல்லோரும் எதேதோ எழுதினம்............. எண்டு, நானும் எண்ட கருத்தை தெரிவித்துக்கொள்கிறேனுங்கோ..

... :(

கடவுள் மறுப்பாளர்கள் .... சிவனடியார்களுக்கு உதவிட வேண்டும் என எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்...

நந்தன் வயிறு வலியாலோ அல்லது காதல் தோல்வியாலோ தீக்குளித்து மாண்டாரோ...

நந்தனைக்கொளுத்தியவர்கள் வழியில் வந்த சிதம்பரம் தீட்சிதர்கள் இன்றும் தேவாரம் பாட விடாமல் சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கி கையை உடைத்து.... கேவலப்படுத்தியது கண்டு வெகுண்டு அவரை யானையில் வைத்து அழைத்துசசென்று தேவாரம் பாட வைத்து.... முதல்வரிடம் பரிந்துரைத்து....அவருக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை பெற்றுத்தந்தது யாரென ....

மூடர்கள் மனசாட்சியோடு சிந்தித்துப்பார்ப்பார்களா???

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனின் பரம்பரையினர் கோயில் உரித்துக்காரர்களாக இருந்தார்கள் என்ற செய்தி ஒன்று உள்ளது. இதனால் புலிகள் இந்துத்துவாக்கள் என்று நாராயணனுக்கும், மேனனுக்கும் யாராவது எடுத்துச் சொல்லுங்கள்.. உடனே மனம் மாறி அவர்களும் தமிழீழத்திற்காக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றிவிடுவார்கள்! :(:wub:

---------

Valveddiththu’rai is also home to three historic Hindu temples, the Sivan Temple, Muththumaariamman Temple, and the Aathiyanaadu Pillaiyaar Temple. The centuries old Sivan temple was managed and maintained for many generations by Pirapaharan’s family and their ancestors.

-----------

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25047

பின் ஏன் இப்போது தேவையில்லாத திராவிட ஆரிய சண்டை..... அதனை தமிழீழம் விடுதல பெற்ற பின்பு யாழ்ப்பாணத்தில் வைத்துக்கொள்ளலாம் ......

இந்த கருத்தை நான் பல தடவைகள் களத்தில் வைத்து அழுத்து போயாயிற்று. இது தான் இன்றைய தேவை

Edited by vettri-vel

நெடுக்காலப்போவான் இந்த தலைப்பில் திரி தொடங்கியதன் நோக்கம் என்ன???

தமிழகத்தில் பெர்னாண்டோ புள்ளே மதுரை வந்தது பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிட வில்லை(பார்ப்பன ஊடகங்கள் பற்றி தெரியவில்லை)

ஆனால் 3 த.தே.கூ எம்.பிக்கள் சிவாஜிலிங்கன் ,ஸ்ரீகந்தா ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பே முக்கிய செய்தியாக காட்டப்படுகிற்து

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இலங்கயின் தமிழின ழிப்பை இந்தியா கண்டும் காணாமல் இருக்கக்கூடாதென அவர்கள் கேட்டுக்கொண்டனர்

இந்தச் செய்தியைப் பார்த்தபோதே யாழ்களத்தில் 3,4 பேர் வயிறு எரிந்து சாகாமல் இருக்கின்றார்களே என்று நினைத்தேன். ஆனாலும் இந்துக்கள் விடுதலைப்போரட்டத்தை தங்களின் சுயநலத்திற்குப் பாவிக்காதவர்கள் என்பதால் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

இதைப் போய் நாராயணனிடம் காட்டினால் இன்னும் கோபிக்கக் கூடும். மதச்சார்பற்ற, நாத்திக ஆட்சியாம் காங்கிரஸ்காரனிடம் இது பலிக்குமா? கோவில் இடிப்பது போலக் காட்டினால் சிலவேளை உச்சி குளிரக்கூடும்.

பெரியாரின் தந்தையும் பின்னர் பெரியாரும் கூட கோயில் தர்மகர்த்தா தான்....

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா.... என்றும் மரியாள் யேசுவை பெற்றெடுத்தது பற்றியும் தி.கவினர் முன்பெல்லாம் அடிக்கடி தாக்கிப்பேசுவர் ஆனால் இப்போது அவர்கள் மத எதிர்ப்பை விட ஈழ விடுதலைப்போராட்டம் பற்றி தமிழகத்தில் பரப்புரை செய்வதையே முக்கியப்பணியாக செய்து வருகின்றனர்....

அதில் அவர்கள் மத துவேஷக்கருத்துக்கள் சொல்வதில்லை

தேசியத் தலைவரின் பரம்பரையினர் கோயிற் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். கிருபானந்தவாரியாரை ஈழத்திற்கு அழைத்து வந்ததும் தலைவரின் பரம்பரையினர்தான். இப்படி நிறையக் கோயிற் பணிகளை செய்திருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் பரம்பரையினரும் நிறையக் கோயிற் பணிகளை செய்திருக்கிறார்கள். தந்தை பெரியாரே கோயிலுக்கு பூக்களை பிடுங்கி கொடுத்திருக்கிறார். நிர்வாகியாக இருந்திருக்கிறார்

தமிழ்நாட்டு தமிழர்களால் போற்றப்படும் தலைவருக்கும் தமிழீழ தமிழர்களால் போற்றப்படும் தலைவருக்கும் என்னே ஒரு ஒற்றுமை!

அப்பர் பற்றி "மெய்யெனப்படுவது" பகுதியில் எழுதியிருக்கிறேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36304

Edited by சபேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலப்போவான் இந்த தலைப்பில் திரி தொடங்கியதன் நோக்கம் என்ன???

தமிழகத்தில் பெர்னாண்டோ புள்ளே மதுரை வந்தது பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிட வில்லை(பார்ப்பன ஊடகங்கள் பற்றி தெரியவில்லை)

ஆனால் 3 த.தே.கூ எம்.பிக்கள் சிவாஜிலிங்கன் ,ஸ்ரீகந்தா ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பே முக்கிய செய்தியாக காட்டப்படுகிற்து

விடுதலைப் புலிகளுடான மோதலுக்கு இந்தியா ஆதரவு ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே.

விடுதலை புலிகளுடான மோதலுக்கு இந்தியா தனது முழு ஆதரவையும் வழங்கி வருவதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே இந்தியாவில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே. மதுரைக்கு சென்று அங்குள்ள புனித மரியாள் தேவலாயத்தில் பெரிய வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்குபற்றினர்.

பிரார்த்தனையை முடித்துக்கொண்டு தேவலாயத்திலிருந்து வெளியேறிய அவர் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

------------

எனது கேள்வியே இதுதானே. ஒரு சிறீலங்கன் சிங்கள பேரினவாத அரசின் அமைச்சன் மதுரையில் வைத்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக விட்ட அறிக்கையை.. மூடி மறைத்து மெளனம் காப்பது ஏன் என்பதுதான்..???! ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களாகக் காட்டிக் கொள்வோரும் அதில் கூடியிருந்து மெளனம் காப்பதுதான் ஏன்...???! :wub::wub:

தேசியத் தலைவரின் பரம்பரையினர் கோயிற் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். கிருபானந்தவாரியாரை ஈழத்திற்கு அழைத்து வந்ததும் தலைவரின் பரம்பரையினர்தான். இப்படி நிறையக் கோயிற் பணிகளை செய்திருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் பரம்பரையினரும் நிறையக் கோயிற் பணிகளை செய்திருக்கிறார்கள். தந்தை பெரியாரே கோயிலுக்கு பூக்களை பிடுங்கி கொடுத்திருக்கிறார். நிர்வாகியாக இருந்திருக்கிறார்

தமிழ்நாட்டு தமிழர்களால் போற்றப்படும் தலைவருக்கும் தமிழீழ தமிழர்களால் போற்றப்படும் தலைவருக்கும் என்னே ஒரு ஒற்றுமை!

அப்பர் பற்றி "மெய்யெனப்படுவது" பகுதியில் எழுதியிருக்கிறேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36304

தலைவரின் கொள்கைக்கும் ஈ வெ ராமசாமி போன்ற பிராமண சமூகத்தையே அழிக்க வேண்டும் என்ற பாசிசவாதிகளின் கொள்கைகளுக்கும் இடையில் பலத்த வேறுபாடுண்டு. தலைவர் = ஈ வெ ராமசாமி என்று கணக்குப் போட முனையுறவை ராமசாமி தாடிவைச்ச படம் போட்ட மொக்காடை தலையில போட்டிட்டு ஓடுங்க தெரு வழிய..! நல்ல பனியா இருக்கும்..! :lol::(

Edited by nedukkalapoovan

பின்னர் தயா என்பவர் விதண்டாவதமாக கூறுவது போல் ஈழத்தமிழர்களை திராவிடர் என்பதால் அல்ல பெரியார் தொண்டர்கள் ஆதரிப்பது..... ஈழத்தமிழன் எங்கள் தொப்புள் கொடி உறவு ... நாங்களெல்லாம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் என்பதால் தான்.

நான் மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டேன் பெரியார் தொண்டர்கள் தமிழீழ ஆதரவு போராட்டங்களில் ...மத எதிர்ப்பையஓ அல்லது கடவுள் மறுப்பியோ எப்போதும் சொன்னது கிடையாது..... அவர்கள் போராட்டங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட தமிழின விடுதலை பற்றி மட்டுமே பேசுவார்கள்

அப்படி நான் சொன்னதில் என்ன குற்றம் கண்டீர்கள்....! பொருள் குற்றமா.? சொல்க்குற்றமா.? :(:wub::wub:

நான் இந்து அடிப்படையை(ஆரியன்) ஆதரித்தது இல்லை .. கருத்துக்களின் இருக்கும் சந்தேகங்களை மட்டும் கேட்டு கொள்வேன்.... நான் திராவிடத்தையும் வளி தொடர விரும்பவில்லை...!!

எனக்கு பால் ஊட்டி உணவை பழக்கிய தாயை விட அதற்கும் முன்னம் ஆப்பிள் சாப்பிட்டதாய் கேள்விப்படும் ஆதாம் ஏவாளையா தாயாக அங்கீகரிக்க சொல்கிறீர்கள், அதை நான் விரும்பவும் இல்லை...!

நான் திராவிடனும் இல்லை ஆரியனும் இல்லை... தமிழன்..! அதுவும் ஈழத்தமிழன்... எனது சொந்தங்கள் இலங்கை கலவரங்களாலை வயிறு பத்தி எரிஞ்ச போது தண்ணீர் அள்ளி ஊத்தி அணைச்ச தலைவர் இருக்கிறார்..... அவர் பெயர் பிரபாகரன்...

அந்த தலைவர் தெளிவாக எம்மை தொடர்ந்தும் வளி நடத்துவார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை...

நீங்கள் திராவிடனாக இருக்கலாம், இல்லை சமத்துவத்தை விரும்புபவனாக இருக்கலாம்... நீங்கள் எங்களின் துயருக்கும், குரல் கொடுக்கிறீர்கள் இயலாமைக்கு கைகொடுக்கிறீர்கள்... அதுக்காக உங்களின் கால்களில் விழுந்து வணங்க வேணும் எண்டாலும் தமிழருக்குள் என்ன எண்று விட்டு விடலாம்... ஆனால் உதவி செய்தீர்கள் என்பதுக்காக நாங்கள் உங்களின் கொள்கையை தான் பின் தொடரவேண்டுமா...?? காசுக்காகவும் உதவிக்காகவும் மதம் மாற்றுகிறார்களே அது போலவா இது...!!!

இதுதானா மனிதாபிமானம்...!!!

Edited by தயா

நாய் குரைக்கிறது என்று எண்ணியிருக்கலாம்..... அதற்கு கண்டனம் தெரிவித்து அந்த செய்திக்கு விளம்பரம் கிடைக்க வேண்டாம் என எண்ணியிருக்கலாம்..

இந்த செய்தி தமிழக ஊடகங்களில் இடம்பெறவே இல்லையே.......

விடுதலைப் புலிகளுடான மோதலுக்கு இந்தியா ஆதரவு – ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே

விடுதலை புலிகளுடான மோதலுக்கு இந்தியா தனது முழு ஆதரவையும் வழங்கி வருவதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே இந்தியாவில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே. மதுரைக்கு சென்று அங்குள்ள புனித மரியாள் தேவலாயத்தில் பெரிய வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்குபற்றினர்.

பிரார்த்தனையை முடித்துக்கொண்டு தேவலாயத்திலிருந்து வெளியேறிய அவர் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

------------

எனது கேள்வியே இதுதானே. ஒரு சிறீலங்கன் சிங்கள பேரினவாத அரசின் அமைச்சன் மதுரையில் வைத்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக விட்ட அறிக்கையை.. மூடி மறைத்து மெளனம் காப்பது ஏன் என்பதுதான்..???! ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களாகக் காட்டிக் கொள்வோரும் அதில் கூடியிருந்து மெளனம் காப்பதுதான் ஏன்...???! :wub::(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய் குரைக்கிறது என்று எண்ணியிருக்கலாம்..... அதற்கு கண்டனம் தெரிவித்து அந்த செய்திக்கு விளம்பரம் கிடைக்க வேண்டாம் என எண்ணியிருக்கலாம்..

இந்த செய்தி தமிழக ஊடகங்களில் இடம்பெறவே இல்லையே.......

நாய் குரைக்கவில்லை. இதை அவ்வளவு சீப்பான விடயமாகக் காட்ட வேண்டிய அவசியமில்லை. தமிழக மீனவன் சடலமாக கரை சேர்கிறான். அவனைச் சுட்ட சிங்களப் படையின் அமைச்சன் அதே மீனவனின் காலடியில் நின்று கொண்டு இரங்கல் செய்யாமல் பதிலுக்கு சவால் விடுகிறான்...! அப்படி இருக்க இதை நாய் குரைப்பதாக எடுத்துக் கொண்டால்.. தி க வினரும் டெல்லியில் தமிழகத்தில் ஊளையிட்டதாகத்தான் மத்திய அரசும் சிறீலங்கா அரசும் கருதும்...!

முன்னரெல்லாம் தமிழகம் வர சிங்கள அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டியவர்கள் இன்று கூட இருந்து விருந்துண்டு மகிழ்வதன் பின்னணி என்ன..???! :wub::(:wub:

Edited by nedukkalapoovan

அய்யா தயா நீங்கள் நான் சொன்னதை முற்றிலும் விளங்கிக்கொள்ள்வே இல்லை...... நீங்கள் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுங்கள் என்றோ பின்பற்ற வேண்டும் என்றோ பெரியார் தொண்டர்கள் என்றுமே சொன்னது கிடையாது....

நீங்கள் பெரியாடை இகழ வேண்டாம் என்று தான் சொல்கிறோம்...

எங்காவது உங்களை பெரியாரை பின்பற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறேனா???

அப்படி நான் சொன்னதில் என்ன குற்றம் கண்டீர்கள்....! பொருள் குற்றமா.? சொல்க்குற்றமா.? :(:wub::wub:

எனக்கு பால் ஊட்டி உணவை பழக்கிய தாயை விட அதற்கும் முன்னம் ஆப்பிள் சாப்பிட்டதாய் கேள்விப்படும் ஆதாம் ஏவாளையா தாயாக அங்கீகரிக்க சொல்கிறீர்கள், அதை நான் விரும்பவும் இல்லை...!

நான் திராவிடனும் இல்லை ஆரியனும் இல்லை... தமிழன், அதுவும் ஈழத்தமிழன்... எனது சொந்தங்கள் இலங்கை கலவரங்களாலை வயிறு பத்தி எரிஞ்ச போது தண்ணீர் அள்ளி ஊத்தி அணைச்ச தலைவர் இருக்கிறார்..... அவர் பெயர் பிரபாகரன்...

அந்த தலைவர் தெளிவாக எம்மை தொடர்ந்தும் வளி நடத்துவார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை...

நீங்கள் திராவிடனாக இருக்கலாம், இல்லை சமத்துவத்தை விரும்புபவனாக இருக்கலாம்... நீங்கள் எங்களின் துயருக்கும், குரல் கொடுக்கிறீர்கள் இயலாமைக்கு கைகொடுக்கிறீர்கள்... அதுக்காக உங்களின் கால்களில் விழுந்து வணங்க வேணும் எண்டாலும் தமிழருக்குள் என்ன எண்று விட்டு விடலாம்... ஆனால் உதவி செய்தீர்கள் என்பதுக்காக நாங்கள் உங்களின் கொள்கையை தான் பின் தொடரவேண்டுமா...?? காசுக்காகவும் உதவிக்காகவும் மதம் மாற்றுகிறார்களே அது போலவா இது...!!!

இதுதானா மனிதாபிமானம்...!!!

தூயவன்!

யாரையும் யாருடனும் ஒப்பிட முடியும். அதற்கு யாரும் தடை போட முடியாது. ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுவது என்பது சாதரணமானது. அதே போன்று வேற்றுமைகளையும் சுட்டிக் காட்ட முடியும்.

நான் தெளிவாக எழுதியிருக்கிறேன், தமிழ்நாட்டில் போற்றப்படும் தலைவரும், தமிழீழத்தில் போற்றப்படும் தலைவரும் என்று. ஒற்றுமை சுட்டிக்காட்டும் இடத்திலேயே வேற்றுமையையும் சொல்லியிருக்கிறேன்.

இருவரும் இரண்டு தனித்துவமான பெரும் தலைவர்கள். உலகின் அனைத்து தலைவர்களும் இப்படி ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் யாசீர் அரபாத்தோடு எமது தலைவரை பெருமையாக ஒப்பிட்டோம். பின்பு இறங்கிப் பொவதற்கு எம் தலைவன் யாசீh அராபாத் அல்ல என்றும் கவிதை எழுதினோம்.

அனைவரிலும் நிறைகளும் உண்டு. குறைகளும் உண்டு. நாங்கள் எதை ஒப்பிடுகிறோம் என்பதில்தான் அனைத்தும் தங்கியிருக்கிறது.

ஆமா நெடுக்காலப்போவான் மத்திய அரசு தி.க வினர் டில்லிக்கு வந்து ஊளையிட்டதாக த்தான் நினைக்கிறது....

நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது....

தி.க வினருக்கும் இந்து ராமுக்கு கொடுப்பது போல் கொடுப்பதாக புள்ளெ கூறியதால் ..... இந்து ராம் பாணியை பின்பற்ற தி.கவினர் முடிவெடுத்து விட்டனராம்..

எதற்கு கைதுக்கும் ரெய்டுக்கும் பொய் வழக்குக்கும் பயப்பட வேண்டும் .... இந்து ராம் போல் இனி சொகுசாக இருக்க முடிவெடுத்தாகி விட்டதாம்.

விரைவில் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து இனி தலையங்கம் தீட்டப்படுமாம்..

நீங்களாவது இனி நீங்க இருக்கும் நாட்டுக்கு இலங்கை மந்திரிகள் வந்தால் போய் கருப்புக்கொடி காட்டுங்க.... திபெத்தியர்கள் மாதிரி...

இதற்கு முன்னர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு புள்ளே போன்றோர் வந்த போது கருப்புக்கொடி காட்டியிருப்பீங்க தானே???

நாய் குரைக்கவில்லை. இதை அவ்வளவு சீப்பான விடயமாகக் காட்ட வேண்டிய அவசியமில்லை. தமிழக மீனவன் சடலமாக கரை சேர்கிறான். அவனைச் சுட்ட சிங்களப் படையின் அமைச்சன் அதே மீனவனின் காலடியில் நின்று கொண்டு இரங்கல் செய்யாமல் பதிலுக்கு சவால் விடுகிறான்...! அப்படி இருக்க இதை நாய் குரைப்பதாக எடுத்துக் கொண்டால்.. தி க வினரும் டெல்லியில் தமிழகத்தில் ஊளையிட்டதாகத்தான் மத்திய அரசும் சிறீலங்கா அரசும் கருதும்...!

முன்னரெல்லாம் தமிழகம் வர சிங்கள அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டியவர்கள் இன்று கூட இருந்து விருந்துண்டு மகிழ்வதன் பின்னணி என்ன..???! :wub::(:wub:

Edited by வேலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.