Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடு தேவாலயம் அருகே கடும் சமர்- சமாதான வலயமாக்கக் கோரி பொதுமக்கள் பேரணி

Featured Replies

மன்னார் மடு தேவாலயம் அருகே இன்று புதன்கிழமை கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் மடுத் திருத்தலத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மடு தேவாலயம் அருகே இன்று புதன்கிழமை கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் மடுத் திருத்தலத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

அப்ப மடு விரைவில் பறிபோயிடும் என்றீங்க. அதுதான் இளந்திரையன் சொல்லிட்டாரே.. மடுவுக்கு அவை வந்தா.. நாங்க மதவாச்சில நிப்பம் என்று..??! பாப்பம்..! மதவாச்சியில ஒரு கிளைமோரை வெடிக்க வைச்சிட்டு அங்க நிக்கிறம் என்று சொல்லாட்டிச் சரி. இந்தா யுத்தம் தெற்குக்கு விரியுது என்றிட்டு இரண்டு கிளைமோரோட.. ஏதோ நடக்குது நடக்கட்டும்..! சனங்கள வார்த்தை ஜாலத்தால ஜெயிக்கலாம் என்று யாரும் நினைச்சுப் போடக் கூடாது. அது புலிகளுக்கும் சரி அரசுக்கும் சரி..! :):wub::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருஷமாக வருவதற்குப் பட்ட கஸ்டங்களுக்குப் பலன் கிடைக்காமல் போகுமே.. வருவார்கள்.. வந்தபின் கொடுத்த விலையைக் கணக்குப் பார்க்கமாட்டார்கள்.. இன்னமும் வருவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் ஏதோ மடுவிலிருந்து வெகு தூரத்தில் சண்டை நடப்பது போலவும், மடுவைப் பிடிப்பதென்பது இப்போதைக்குச் சாத்தியமாகாது போலவும் எல்லாரும் கதைத்துக் கொண்டார்கள். ஊடகங்களும் தம் பங்கிற்கு வெட்டி விழுத்தி எழுதி வந்தன. இப்ப என்னெண்டு பாத்தா ராணுவமும் மெது மெதுவாக மடுவுக்க போட்டுது.

ம்.....பொறுத்தார் பூமியாள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், இப்போது....."பொறுத்தார் பூமியிழப்பார் " போலக் கிடக்கு. :unsure:

சும்மா சனங்களின் எதிர்பார்ப்பை வீணே வளர்க்கிறதில எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏதாவது செய்ய வேண்டும். இல்லாட்டி முல்லைத்தீவின் உற்பகுதிக்கேயும் ராணுவம் மெல்ல மெல்ல நுழையிறத நாங்கள் இதே களத்தில் தான் எழுதியும் அழவேண்டியிருக்கும். :lol:

இவ்வளவு நாளும் ஏதோ மடுவிலிருந்து வெகு தூரத்தில் சண்டை நடப்பது போலவும், மடுவைப் பிடிப்பதென்பது இப்போதைக்குச் சாத்தியமாகாது போலவும் எல்லாரும் கதைத்துக் கொண்டார்கள். ஊடகங்களும் தம் பங்கிற்கு வெட்டி விழுத்தி எழுதி வந்தன. இப்ப என்னெண்டு பாத்தா ராணுவமும் மெது மெதுவாக மடுவுக்க போட்டுது.

ம்.....பொறுத்தார் பூமியாள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், இப்போது....."பொறுத்தார் பூமியிழப்பார் " போலக் கிடக்கு. :unsure:

சும்மா சனங்களின் எதிர்பார்ப்பை வீணே வளர்க்கிறதில எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏதாவது செய்ய வேண்டும். இல்லாட்டி முல்லைத்தீவின் உற்பகுதிக்கேயும் ராணுவம் மெல்ல மெல்ல நுழையிறத நாங்கள் இதே களத்தில் தான் எழுதியும் அழவேண்டியிருக்கும். :lol:

அண்ணை சலிப்படையாதையுங்கோ

விரைவில் எல்லாம் நல்லதா நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: இல்லை மின்னல், இது சலிப்பில்லை. எமது கையாளாகாத்தனம். நாம் புலிகள் போராடுவார்கள் என்று எதுவும் செய்யாமல் இருந்ததன் விளைவு. களத்தில் நிற்கும் போராளிகளை நாம் காட்டிக் கொடுத்து விட்டோம் என்கிற உணர்வு.
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மடு விரைவில் பறிபோயிடும் என்றீங்க. அதுதான் இளந்திரையன் சொல்லிட்டாரே.. மடுவுக்கு அவை வந்தா.. நாங்க மதவாச்சில நிப்பம் என்று..??! பாப்பம்..! மதவாச்சியில ஒரு கிளைமோரை வெடிக்க வைச்சிட்டு அங்க நிக்கிறம் என்று சொல்லாட்டிச் சரி. இந்தா யுத்தம் தெற்குக்கு விரியுது என்றிட்டு இரண்டு கிளைமோரோட.. ஏதோ நடக்குது நடக்கட்டும்..! சனங்கள வார்த்தை ஜாலத்தால ஜெயிக்கலாம் என்று யாரும் நினைச்சுப் போடக் கூடாது. அது புலிகளுக்கும் சரி அரசுக்கும் சரி..! :lol::icon_mrgreen::o

என்ன சொல்ல வருகின்றீர்கள்?? அவர் என்ன லண்டனுக்கு ஓடி வந்து பதுங்கப்போவதாகவா சொன்னார்.

அவர்களைப் பற்றிக் கதைப்பதற்கு முதல் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய யோக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏதொ 4 சதத்தைக் கொடுத்து விட்டு, ஓடர் போடுவதாகவல்லோ பலரின் நினைப்பு. அவர்கள் எங்கு நின்றாலும் யாருக்கும் கதைப்பதற்கு உரிமை கிடையாது.

முன்னர் 1999 ம் ஆண்டு ரணகோச நடவடிக்கை மூலம் பலமான எதிர்ப்பு எதுவும் இல்லாமல் மடுப்பகுதி இலங்கை படைகளின் கைகளில் போனது...!

1999ம் ஆண்டு கார்த்திகை மாதம் இந்த கோயில் மீது நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலில் 42 பொது மக்கள் பலியாகினர்...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகின்றீர்கள்?? அவர் என்ன லண்டனுக்கு ஓடி வந்து பதுங்கப்போவதாகவா சொன்னார்.

அவர்களைப் பற்றிக் கதைப்பதற்கு முதல் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய யோக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏதொ 4 சதத்தைக் கொடுத்து விட்டு, ஓடர் போடுவதாகவல்லோ பலரின் நினைப்பு. அவர்கள் எங்கு நின்றாலும் யாருக்கும் கதைப்பதற்கு உரிமை கிடையாது.

இதை நீங்கள் எனக்குச் சொல்லவோ கொழும்பில இருந்து வந்து கனடாவில புகலிடம் தேடி இருக்கிறியள்..!

என்னுடைய உறவுகள் வன்னியில் வாழ்கிறார்கள். அவர்களை இட்டு நான் கவலைப்படுவது போல இன்று பல தளபதிகளும் வன்னி மக்கள் வழங்கி உலர் உணவுகளைப் பெற்றுக் கொண்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளை உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பதிலளித்திருப்பதைப் போய் படியுங்கள் முதலில்.

அடுத்தவனுக்கு ஆலோசனை சொல்ல முதல் உங்கள் நிலையையும் யோசிங்கோ...! :lol::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லவில்லையே. மேலே குறித்த கருத்தில் 2 கிளைமோரை வைச்சு, மதவாச்சியைப் பிடித்ததாகச் சொல்லப் போகின்றீர்களா என்று செப்பிய உங்களின் கருத்தைப் பற்றித் தான் என் விமர்சனம்.

அவர் ஒரு எடுகோளுக்கு மதவாச்சியில் நிற்போம் என்று சொல்லியிருக்கலாம். கட்டாயம் அது தான் வரவேண்டும் என்றில்லை. அது தமிழீழ எல்லைக்கு வெளியால் இருக்கின்ற ஒரு பிரதேசமும் ஆகும்.

நான் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குக் கட்டளை வழங்குவதில்லை. அவர்களின் கஸ்டங்களும் துன்பங்களும் எனக்குத் தெரியும்.

உயிர் பயத்தில் தான் புலத்துக்குத் தப்பி ஓடிவந்து விட்டு, இப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் வழங்குவதற்கு உரிமை கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பயத்தில் தான் புலத்துக்குத் தப்பி ஓடிவந்து விட்டு, இப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் வழங்குவதற்கு உரிமை கிடையாது

தாங்களும் உயிர் பயத்தில தானே கனடாவுக்கு குடிபெயர்ந்தனீங்கள்.

மக்களிடம் எவ்வகையான கேள்விகள் எழும் என்பதைப் புலிகள் அறிவார்கள். அவர்கள் அதற்குப் பொறுமையாகவும் உற்சாகம் ஊட்டும் வகையிலும் பதில் அளிக்க முற்படேக்க.. நீங்கள்.. உயிருக்குப் பயந்து ஓடினவர்கள்.. அவர்களுக்கு பேச்சாளர்கள் போல செயற்படுவது ஏற்புடையதல்ல. உங்கள் பேச்சை இவ்விடயத்தில் மதிக்கனும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது..!

மக்கள் இறுதிப் போர்.. தெற்கில் யுத்தம் வெடிக்கிறது.. மாவிலாறில் அரைஅங்குல நிலமும் ஆக்கிரமிக்க அனுமதிக்கப்படாது.. விமானங்கள் தமிழீழக் கட்டுமானங்களை எனித் தாக்க முடியாது என்ற வார்த்தைகளையும் கேட்டிட்டுத் தானே இருந்தனர். அப்படி இருக்கேக்க களத்தில உள்ள மக்களிடம் இப்ப ஒரு ஏக்கம் இருக்குது. அதைப் புலிகளும் அறிவார்கள். அதற்கேற்ப அவர்கள் இப்போ முன்னர் மாதிரி புளுகாம விளக்கம் அளிக்க முற்படுகின்றனர்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் எங்கே அவர்களின் செயற்பாட்டை விமர்சித்தேன்.விமர்சித்தவர்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக கிருஸ்தவ மக்களால் மிகவும் புனிதமாகப் போற்றப்படும் அருள்மிகு மடுத்தேவாலயத்தை

ஆக்கிரமித்துவிட வேண்டும் என்ற தீராத வெறியுடன் சிங்கள இராணுவம் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

உலகின் பல சர்வதிகார ஆட்சியாளர் கூடகோவில்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்துவதில்லை. ஆவ்வாலயங்களைச் சூழவும் முன்னேறுவதில்லை. அதனை ஒரு புனித பகுதியாக பிரகடனப் படுத்துவர்.

போர் நடைபெறுகின்ற போது கூட அப்பகுதிகளில் மக்கள் அடைக்க்ளம் தேடுவர் ஆனால் சிறிலங்கா அரசும் இராணுவமும் அதற்கு விதிவிலக்கானது என உணரப்பட்;டுள்ளது. பல தேவாலயங்கள் போன்ற வணக்கத்தங்கள் சிங்களப் படைகளின் கோரத்தாக்குதலுக்கு இலக்காகி அழிந்து போயுள்ளன என்பதும் உலகம் அறிந்த செய்தியே.

ஆயினும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுத்தேவாலயத்தை ஆக்கிரமிக்க இராணுவம் முயல்வது மிகவும் ஒரு கொடூரமான செயலாகவே பார்க்கப்படுகிறது.

மிகச் சிறந்த மடுத்தேவாலயப்பகுதியில் ஆயுதக் குழுக்கள் அற்ற சுதந்திரமான வலையமாக பிரகடனப்பட்டு இருந்திருக்கிறது அது ஒரு அமைதி வலையமாக உள்ளது மக்கள் சுதந்திரமாக உள்ளனர் அப்பகுதியில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இல்லை இந்நிலையில் அதனை ஆக்கிரமிக்க சிங்களப்படைகள் கங்கணம் கட்டி நிற்கிறது என்பது மிகவும் பாரதூரமான விடயமே இது போன்ற ஆக்கிரமிப்புப் போரை சர்வதேச சமூகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல.

மடுத்தேவாலயத்தைச் சுற்றியுள்ள அம் மக்களை விரட்டிவிட்டு அங்கு இராணுவம் நிலைகொள்வதால் மாற்றம் வந்துவிடப் போவதில்லை அது ஒரு வரலாற்றுப்பழியை சுமக்கும் நிலைக்கே தள்ளிவிடும்.

மடுவை இராணுவம் இலகுவில் ஆக்கிரமிக்க முடியதாது ஏனெனில் விடுதலைப் புலிகளின் காப்பரண்களை தாண்டி இராணுவம் வருவதென்பது இலகுவான விடயமல்ல முன்னகர்வு முயற்சியை மேற்கொள்ள முடியாது திணறும் இராணவம் மடுத் தேவாலயத்தின் சுற்றாடல் மீது செறிவான எறிகணை வீச்சை நடாத்துகிறது மழை போல் பொழியும் அந்த எறிகணைகளால் மடுத் தேவாலயப் பகுதியில் உள்ள குடியருப்புகள் சேதமடைந்தும் அழிவையும் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் தான் சுமார் 5000 ற்கும் மேற்பட்ட மடுவை அண்டியுள்ள மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடாத்தி உலகின் கவனத்திற்கு ஒரு செய்தி வலியுறுத்தியுள்ளது.

மடுத் தேவாலயப்பகுதியை சமாதான வலையமாக பிரகடனம் செய்ய வேண்டுமென சிறிலங்கா அரசைகோரியுள்ளனர் இக்கருத்தையே மன்னார் மறை மாவட்ட ஆண்டகை ராயப்பு ஜோசப் அவர்களும் வலியுறுத்தி உள்ளார்.

இக்கருத்தை ஏற்று மடுத்தேவாலயப்பகுதியை சமாதான வலையமாக அரசு பிரகடனப் படுத்த வேண்டும் அதுவே இன்றைய தேவை மகிந்த அரசாங்கம் இதனை நிராகரித்து மடுத் தேவாலயத்தை ஆக்கிரமிக்க முயல்வார்களானால் நிறைய விலை கொடுக்க நேரிடும்

http://www.sankathi.com/content/analyse_fu...amp;ucat=6&

  • கருத்துக்கள உறவுகள்

பிரசித்தி பெற்ற வணக்க தலங்கள் மீது ஆக்கிரமிப்பு அரசுகள் தமது ராணுவப் பேய்களை ஏவிவிடுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இலங்கையின் சிங்களப் பேரினவாதம் தனது தமிழின ஒழிப்பு யுத்தத்தின் ஒரு பகுதியாக தமிழ்க் கிறீச்த்தவர்களின் புனிதத் தலங்களில் பிரசித்தமான மடுத் திருப்பதிமேல் அட்டூழியத்தாக்குதல் நடத்துவது இது ரெண்டாவது முறை. ஏற்கனவே வல்லைச் சன்னிதி, வற்றாப்பளை அம்மண் என்று அது ரத்தம் குடித்த வணக்கச்த் தலங்கள் ஏராளம்.

இவ்வாறே எமக்குத் தெரிந்த இன்னொரு நாடும் தனது வல்லாதிக்க ராணுவத்தை ஏவி ஒரு புனிதக் கோயிலை துவசம் செய்த வரலாறும் உண்டு. 1984 ஆம் ஆண்டு அப்போதய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது ராணுவத்தை சீக்கியர்களின் ஒரே புனிதத் தலமான அம்ரிதசரசு நகரிலிருந்த பொற்கோயிலுக்குள் அனுப்பி பெரும் மனிதப் படுகொலை ஒன்றைச் செய்தார். இதன்போது பெரும் எண்ணிக்கையில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர். அதற்கு அவர் கூறிய விளக்கம் பொற்கோயிலுக்குள் இருந்து காலிச்த்தான் போராளிகளும் அதன் தலைவருமான பிந்தரன் வாலேயும் போரிடுகிறார்கள் என்பதுதான். சிங்களப் பேரினவாதம் மடுவை ஆக்கிரமிக்க இன்று கூறும் "புலிகள் மடுவைத் தமது மோட்டர், பீரங்கித் தளமாகப் பாவிப்பதோடு, மடுவை நோக்கி அவர்களே ஷெல்த் தாக்குதலும் நடத்துகிறார்கள்" என்பதுதான் இந்திய அரசும் ராணுவமும் அன்று தமது ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூறிய காரணங்கள். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்திய ராணுவ நடவடிக்கையான " ஒப்பெரேஷன் புளு ச்டார்" இற்குத் தலைமை தாங்கியவர் ஒரு தமிழர். அதேபோல் இந்த நடவடிக்கைக்குப் பழி வாங்கும் நோகில்த்தான் பின்னர் தனது சீக்கிய மெய்ப்பாதுகாப்பு அதிகாரியால் இந்திராவும் கொல்லப்பட்டார்.

இந்தியாவின் ஆலோசனைகளுக்கேற்ப செயற்படும் பெரினவாதச் சிங்களமும் இந்தியாவின் புளித்துப்போன தந்திரங்களைப் பாவிக்கும் என்பதில் ஐய்யமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மதவாச்சியில் நிற்கும் காலம் வந்தால்தான் தமிழினம் விடிவு பெறும் என்பதைப் புரிந்தால் சரி...

  • தொடங்கியவர்

மடு தேவாலய வளாகத்தில் உள்ள இருதயநாதர் கோவில் மீதும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் சிறிலங்காப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.