Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப் படையின் வெறித்தாக்குதலில் மடு தேவாலய "மாதா"வும் அகதியானார்

Featured Replies

வீரகேசரி இணையம் 4-3-2008 12:42:33 -

மன்னாரில் மடுவை அண்டிய பகுதிகளில் படையினருக்கும்,விடுதலைப்புல

பண்டிவிரிச்சானில் சண்டை நடை பெறுவதாக புலிகளின் குரல் கூறியது... மடு ஆலயத்தில் இருந்து 1 மைல் சுற்றாடலில்..!

400 வருடம் பழமையான கோயில்.. முன்னர் மாந்தை பகுதியில் போத்துகேயரால் அமைக்க பட்ட கோயில் ஒல்லாந்தர் வருகையால் அழிக்கப்படும் நிலைமையை அடைந்தது.. அப்போது மக்கள் மாதாவின் சுருவத்தை தூக்கி கொண்டு காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டன்.. பின்னர் சில காலங்களின் பின்னர் இப்போது இருக்கும் இடத்தில் கோயில் நிர்மானிக்க பட்டது...!!

வழமை போல எங்கட குறுக்கால போனதுகள் இந்த கோயில் மணியையும் களட்டி ஆயுதம் செய்வோம் எண்டு இன்னும் சொல்லாதது மகிழ்ச்சி...

அப்ப இனி மடுவிலையும் புத்தம் சரணம் கச்சாமிதான் போலகிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி மடுவிலையும் புத்தம் சரணம் கச்சாமிதான் போலகிடக்கு

சந்திரிக்கா காலத்தில் மடுவைப் பிடித்து.. திருவிழாக் கொண்டாடினார்கள். ஆனால் மகிந்த திருவிழா மட்டுமல்ல.. தேர்தலும் நடத்துவார்.. அருகில் புத்தகயாவும் அமைப்பார். பெர்னாண்டோ புள்ளே இருக்கேக்க மகிந்தவுக்கு உதுகளைச் செய்ய என்ன பஞ்சம்..! :icon_mrgreen:

mannarod4.jpg

போர்வலயமும் மடுப் பகுதியும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மாதாவின் சுருவத்துடன் காடுகளுக்குள் ஓடி ஒழிந்தவர்கள் போர்த்துக்கேயரா அல்லது போர்த்துக்கேயரால் மதமாற்றம் செய்யப்பட்ட இந்துக்களா, மேலும் விளக்கம் தேவை !!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த பேரினவாத அரசு செய்யும் கொடிய ஈவிரக்கமற்ற யுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள அபாய சூழ்நிலை கருதி.. மடு தேவாயலத்தை பாதுகாக்க மன்னார் ஆண்டகை விடுத்த கோரிக்கையையும் சிங்கள அரசும் அதன் படைகளும் உதாசீனம் செய்து மடுக் கோவிலை இலக்கு வைத்து கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால்.. மிகப் பழமை மிக்க மடு மாதா சொரூபம் மடு ஆலயத்தில் இருந்து வேறு பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தப்பட உள்ளதாக மன்னார் ஆண்டகை அறிவித்திருக்கிறார்.

Madhu statue to be removed

The statue of Our lady of Madhu is to be removed from the Church and taken to a safer location because of heavy shelling in the area, Mannar Bishop Ryapu Joseph told the Daily Mirror.

டெயிலிமிரர்.

மடு ஆத்தா உன்க்குமா இந்த நிலை..

  • கருத்துக்கள உறவுகள்

Madu Shrine premises comes under shelling: Priest

our_lady_madu_shrine_67578_445.jpg

[TamilNet, Thursday, 03 April 2008, 10:24 GMT]

Shells were exploding near the Shrine of Our Lady of Madu as Sri Lanka Army (SLA) continued to fire shells from Periyavirichchaan and Chinna Pa'ndivirichchaan areas since noon Wednesday, one of the priests staying in the Church told TamilNet when contacted over phone Thursday. The shelling ceased only for two hours from 3:30 a.m. till 5:30 a.m. Thursday. "If you manage to look outside from here, you only see smoke and dust in the atmosphere amid deafening noise," he said.

There were also heavy exchange of gunfire 1 km away from the Church, according to the priest. A few windows of the Church were damaged and pieces from the exploded shells fell into the building where they were staying.

Confirming that there were no combatants in the vicinity, he said most of the explosions of exploding shells were heard along the road from Madu to Paalampiddi.

Shells exploded inside the cemetery of the Church, located 500 meters away, he said.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: வணங்காமுடி,

மாதா சுருவத்துடன் காட்டுக்குள் ஓடி ஒளிந்தவர்கள் மதம் மாறிய தமிழர்தான். கிறீச்தவர்களை அழிக்கவென யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் மன்னாருக்குள் புகுந்து சுமார் அவ்வாறு மதம் மாறிய 800 தமிழரை படுகொலை செய்த இடம்தான் மடு. கொல்லப்பட்ட் அந்த 800 வேத சாட்சிகளின் நினைவாகத்தான் மடுமாதா ஆலயமும் அமைக்கப்பட்டது.

அதுசரி, இந்தச் சரித்திரம் எல்லாம் இப்ப எதற்கு ? தோண்டியெடுத்து இந்துக்கள்,கிறீச்தவர் என்று பாகுபாடு பாக்கப் போகிறீர்களா ?

மடு திருத்தல வளாகத்திற்குள் இன்று பிற்பகல் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடித்த சிறிலங்காப் படையினரின் எறிகணைகளால் அங்கிருந்த பங்குத்தந்தை எமிலியானுஸ்பிள்ளை மற்றும் ஆலய பரிபாலகர்கள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பாயிண்டைதான் நானும் சொல்ல வந்தேன் அண்ணாச்சி. நீங்க முந்திட்டிங்க !

மடு திருத்தல வளாகத்திற்குள் இன்று பிற்பகல் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடித்த சிறிலங்காப் படையினரின் எறிகணைகளால் அங்கிருந்த பங்குத்தந்தை எமிலியானுஸ்பிள்ளை மற்றும் ஆலய பரிபாலகர்கள் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

மடு தேவாலயத்தின் மீது சிறிலங்காப் படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான எறிகணை மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களால், அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமயத்தை தாக்கி எழுதினால் மற்றும் சாதி வெறியை துண்டி எழுதுபவர்களுக்கு யாழ் களம் முதலிடம் கொடுக்கின்றது. ஆனால் வேறு சமயங்களை பற்றி எழுதினால் அகற்றுகின்றது. யாழ் களத்தின் லீலைகள் என்று புதிய தளம் ஆரம்பிக்க தான் இருக்கு. :icon_mrgreen:

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

மடு தொடர்பான மதவிடயங்களைப் பிறகொரு நாள் கதைப்பது நல்லது என நினைக்கின்றேன். இப்போது பாதிக்கப்பட்டப் போவது தமிழ்மக்கள் தான். அவர்கள் ஏமாற்றி மாற்றப்பட்டனாரா இல்லையா, யாழ்கள நிர்வாகம் அனுமதிக்கின்றதா இல்லையா என்பது பற்றிப் பிறகு தரம் விவாதிப்போம். எனக்கும் அது தொடர்பாக நிறையச் சொல்ல வேண்டியிருக்கின்றது.

தமிழ்மக்கள் மீதான சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கெதிரான இச் செயற்பாட்டை உலகிற்கு காட்ட முயலுங்கள்.

  • தொடங்கியவர்

வீரகேசரி இணையம் - மடுமாதா தேவாலய பகுதியில் எறிகணை மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் உக்கிரமடைந்ததையடுத்து பாதுகாப்புக் கருதி அங்கிருந்த குருமாரும் பணியாளர்களும் மாதா திருச்சொரூபத்தை எடுத்துச் சென்று மன்னார் மறை மாவட்டத்திலுள்ள தேவன்பிட்டி புனித சவேரியார் ஆலயத்தில் வைத்துள்ளனர்.

மடு பிரதேசத்தில் மோதல்கள் தீவிரமடைந்ததையடு த்து அங்கு தஞ்சமடைந்திருந்த மக் கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை வரை மடு தேவாலயத்தில் இருந்த நான்கு குருக்களும் நான்கு கன்னியாஸ்திரிகளும் பணியாளர்கள் 7 பேரும் நிலைமைகள் மோசமடைந்ததன் காரணமாக மன்னார் ஆயரின் அறிவுறுத்தலுக்கமைய புதுமை வாய்ந்த மடு மாதாவின் திருச்சொரூபத்தை பயபக்தியுடன் எடுத்துக்கொண்டு மாலை 6 மணிக்கு தேவாலயத்திலிருந்து வெளியேறி வான் ஒன்றின் மூலம் மாவட்டத்தின் வடக்கு பகுதியிலுள்ள தேவன்பிட்டி கிராமத்திற்கு இரவு 9 மணியளவில் சென்றடைந்ததாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்தது.

மடு பரிபாலகர் அருட் தந்தை எஸ். எமிலியான்ஸ்பிள்ளை மற்றும் அருட் தந்தையர்களான ஏ. ஞானப்பிரகாசம், இ. செபமாலை, ஏ. சகாயநாதன் ஆகியோரே திருச்சொரூபத்தை எடுத்துச் சென்றதாக ஆயர் இல்லம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் இன்று காலை ஆயர் இல்லத்தில் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக குரு முதல்வர் அருட் தந்தை விக்டர் சோசை தெரிவித்தார்.

இந்த தேவாலயம் பழைய சிறிய தேவாலயம் அத்தோடு இங்கு போதிய அளவு இடவசதி இல்லை ஆனதால் இம்மக்களின் ஆதாரத்தோடும் மன்னார் மறைவாவட்டத்தின் ஆதரவிலும் தேவன் பிட்டியில் அமைந்துள்ள சவேரரியார் ஆலயத்தை புணரமைப்பு செய்து அதனை மக்கள் வழிபாட்டுக்காக திறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் உரித்துடையோர் நடவடிக்கை படுத்தினால் நல்;;லாய் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக மாதாவை தினமும் வழிபடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வழிபாட்டு வழிமுறைகள் இனங்காட்டப்பட வேண்டும். உலகெங்கும் மத உரிமைகளை மக்கள் விரும்பிய வடிவில் கொண்டிருக்க வசதிகள் உள்ளன. இருப்பினும் இடர்மிகுந்த இவ்வேளையில் மக்களின் ஆகக்குறைந்த தேவைகளையாவது பூர்த்தி செய்ய ஆவன செய்தல் நன்று..!

போரினால் பல கிறீஸ்தவ தேவாலயங்களும் இந்துக் கோவில்களும் முஸ்லீம் பள்ளிகளும் ஒரு சில விகாரைகளும் சேதமடைந்தன. ஆனால் மடு மாதா தேவாலயம் என்பது வத்திகான் வரை பிரசித்தமான ஒன்று..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.