Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பலி

Featured Replies

உழவரின் பண்டிகை என்றது அவர்களுக்குக் கொடுக்கின்ற உயர்ந்த பட்ச மரியாதை. உங்களின் செயலால் அவர்களைத் தாழ்த்தி விடாதீர்கள்.

இப்ப எதுக்கு புடுங்குப்பாடு... உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்... ஜனவரி 14 அறுவடை நாள் உழவர் திருநாள்... ஜனவரி 1 புது வருடம்... போதுமா...??

இந்த புடுங்குப்பாட்டை ஜெயராஜ் பெனாண்டோ பிள்ளை ஆவி கேட்டா சந்தோசப்படுமோ, இல்லையோ...?

Edited by தயா

  • Replies 86
  • Views 13.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாபஸ்

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரதன் ஓட்டம் தொடர வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்
:D வாங்க சாணக்கியன், எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? ஏதாச்சும் களத்தில விஷேஷம் எண்டால்த்தான் ஆளைக் காண முடியுது. அதுக்காக வாறதுக்கு முதல் பெரிய தலையெல்லாத்தையும் போட்டுத்தளி விட்டு வாங்கோ எண்டு கேட்கவில்லை( முடிந்தால் போட்டுவிட்டே வாங்கோ).
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிவேல்,

துரோகியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பலத்த சந்தேகங்கள் எழுந்திருக்கு. இங்கு யாரும் அதைச் செய்தது புலிகள்தான் என்று கருத்தெழுதவில்லை என்று நினைக்கிறேன். மாவீரன் என்று குறிப்பிட்டதும் அந்தத் துரோகியைத்தான். தன்னுடன் சேர்த்து இன்னும் 10 இனவாதிகளைக் கூட்டிக் கொண்டு போனபடியினால் அவருக்கு இந்த நக்கல் கலந்த கவுரவப் பட்டம், அவ்வளவுதான்.

வெலிவேரிய பகுதியில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க.........................

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_138.html

சில தினங்களுக்கு முன்னர் காண்டம் பார்த்து பரிகாரம் செய்த அமைச்சர் ஜெயராஜ் :lol::o

அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சில தினங்களுக்கு முன்னர் காண்டம் பார்த்துள்ளதுடன் அதற்கான பரிகாரங்களையும் மேற்கொண்டிருந்ததாக நம்பகரமாக தெரியவருகின்றது. காண்டம் பார்த்த அமைச்சர் அதற்கான பரிகாரங்களை வீட்டில் வைத்து மேற்கொண்டுள்ளார் என்று அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

1953ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி நீர்கொழும்பு கொச்சிக்கடை வெலிகனப் பகுதியில் பிறந்த அவர் நீர்கொழும்பு ஆவேமரியா கன்னியர் மடத்திலும், மாரிஸ்ரெல்லா வித்தியாலயத்திலும் பயின்று, 1970ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையினை ஆரம்பித்தார்.

அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே 1983ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கந்தான தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அவர் 1996, 2000, 2001, 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக பிறந்த இவருக்கு 3 சகோதரர்கள் உள்ளனர்.

1994ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசாங்கம் ஆட்சி அமைத்ததும் பிரதி நிதி மற்றும் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் பின் வர்த்தக நுகர்வோர் அமைச்சராகவும் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகித்தார். 2004ஆம் ஆண்டு முதல் ஐ.ம.சு.மு. அரசாங்கத்தில் அரசின் பிரதம கொறடாவாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1972ஆம் ஆண்டு கணித ஆசிரியராக பணியாற்றிய அவர் சட்டக் கல்லூரியில் பயின்று 1974ஆம் ஆண்டு சட்டத்தரணியானார். 1977 ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியாக கடமையாற்றினார்.

அமைச்சர் ஜெயராஜ்ஜின் மனைவியின் பெயர் சுதர்ஷினியாகும். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சிறந்த சட்டத்தரணியாக விளங்கிய அமைச்சர் ஜெயராஜ் கடந்த வருடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டார்

http://www.tamilwin.com/

நல்ல ஆடவிட்டு கறந்துட்டாங்களே அய்யா!!!

தமிழனா இல்லாட்டிலும் அந்த எச்சம் மிச்சம் இருந்தாலேகாணும்.. அவயல் எல்லாம் நக்கிறதுக்க தான் சரி.. பிரதமரா வரபோறன் எண்டா?

இந்த வெடி மாம்பழ மாமாவுக்கு ஒரு தூக்கி வாரி போட்டு இருக்கும்... :lol::o:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவிமனுசன் றோட்டுக்கு தார் ஊத்துற வேலையை மட்டும் பாத்துக்கொண்டிருக்கலாம் :lol:

என்ன சாணக்கியன் களநாளைக்குப் பிறகு !

நான் நினைச்சன் நீங்கள் காண்டம் கீண்டம் பாக்க போட்டியள் எண்டு !

என்னென்றாலும் உப்பிடிச் செய்யக் கூடாது பாருங்கோ ! வர குள்ள ஆட்களை போட்டுத் தள்ளுறது . பாவம் தானே மகிந்த தன்னோட இருந்த ஓரளவு விசர் முத்தினது போட்டுது இனி தாடியும் மாம்பழமும் மிஞ்சியிருக்குது.

குமாரசாமி அண்ணை!

அவர் என்னமொண்டுக்கும் தொழிலதிபர்.. அது என்ன தெரியுமே? அதுதான் வீட்டுக்கு வெள்ளை அடிக்குறது...

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ் குறித்து அரசியல் பிரமுகர்கள்

[09 - April - 2008]

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் சேவைகள் மற்றும் அவரின் குணநலன்கள் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள் நேற்று திங்கட்கிழமை வெகுவாக பாராட்டி கருத்துத் தெரிவித்தனர்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஜெயராஜின் பூதவுடல் நேற்று திங்கட்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு சபாநாயகர் வி.ஜே.மு.லொக்கு பண்டார கருத்து தெரிவிக்கையில்;

சபாநாயகர்

பாராளுமன்ற அனுபவம் கொண்ட சிறந்த வாதத்திறமையுடையவராக ஜெயராஜ் விளங்கினார். ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்த அவர் ஏனைய எம்.பி.களின் நலன்குறித்தும் கரிசனை கொண்டிருந்தார். ஆளும்கட்சியின் பிரதம கொரடாவாக நியமிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை கற்றறிவதில் ஈடுபாடு காட்டிய அவரின் மறைவு பேரிழப்பாகும் என்றார்.

ஆர்.சம்பந்தன்

ஜெயராஜ் கபடமற்ற ஒருவராக விளங்கினார். அரசாங்கத்திற்கு ஆதரவாக மிகத்துணிவாக குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.

இது அரசாங்கத் தரப்புக்கு பாரிய இழப்பாகும்.

ரவூப் ஹக்கீம்

ஜெயராஜின் படுகொலையை எவ்விதத்திலும் ஏற்கமுடியாது மூன்று தெழிகளிலும் பரிச்சயம்பெற்று விளங்கிய அவர் அரசாங்கத் தரப்பின் சிறந்த பாதுகாவலனாக விளங்கினார். ஜனநாயகவாதியாக செயற்பட்ட அவரின் இழப்பு சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமல்ல, சகலருக்கும் பேரிழப்பாகும். அவரின் குடும்பத்தினருக்கு முஸ்லிம் காங்கிரஸின் அனுதாபங்கள் என்றார்.

விமல் வீரவன்ச எம்.பி.

நட்புடன் பழகிய அந்த அரசியல் வாதியின் இழப்பு பயங்கரவாதத்திற்கெதிரான பேராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது. படுபாதகமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட்ட ஜெயராஜிக்கு எம் வீரவணக்கங்கள் :lol: உரித்தாகட்டும் என்றார்.

அமைச்சர் டக்ளஸ்

கோரமான முறையில் ஜெயராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் மற்றுமொரு சேவையாளனை படுகொலை செய்ததன் மூலம் எட்டப்பட்ட நன்மைகள் யாவை? சிறந்த ஜனநாயகவாதியாக செயற்பட்ட அவர் ஜனநாயக விரோதசக்திகளின் பழி வாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பிரதியமைச்சர் சச்சி

நடுநிலையுடன் பிரச்சினைகளை அணுகும் அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸீடன் நெருங்கிச் செயற்பட்டதுடன், எமக்கு சிறந்த அறிவுரை நல்குபவராகவும் விளங்கினார்.

பசில் ராஜபக்ஷ

சிறந்த தோழன், புத்திக்கூர்மை வாதாட்டத்திறன், தூரநோக்கு, சேவை மனப்பான்மை, பற்றுறுதி என ஜெயராஜின் தனித்துவம் நீளமானது. எனக்கும், எனது கட்சிக்கும், நாட்டுக்கும் இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றார்.

அமைச்சர் டிலான்

அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பிய ஜெயராஜ் துணிவுடனும் வாதத்திறமை பெற்றும் விளங்கினார். தமிழ் சமூகத்தின் பாலும் அவர் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டார்.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.