Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிந்தனை செய் மனமே

Featured Replies

இந்த வருடமும்,சிட்னி முருகன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறையவே இருந்தது.சிட்னியில் வசித்த காலத்தில் திருவிழா நாட்களில் தினமும் போகாவிட்டாலும் ஒரிரு நாட்களாவது போவதிற்கு சந்தர்ப்பம் வந்து விடும்.கன்பராவிற்கு இடம் பெயர்ந்த பின்னால் இப்படி வந்து போவது இலகுவாக இல்லாம போனது இருந்தும் இந்த வருடம் தீர்த்த திருவிழா அன்று முருகனை கும்பிட வந்திருந்தேன்.எதிர்பார்த்த படியே அன்று கூட்டம் நிரம்பி வழிந்தது.

கூட்டதில் அதிகமானோர் பெண்கள் என்றே நினைக்கிறேன் அதிலும் நடுதர வர்க்கத்து பெண்களே அதிகமாக தென்பட்டார்கள்.பட்டுச் சேலைகளும் நிரம்பிய நகைகளுமாக அவர்கள் தெரிந்தார்கள்.

சிறு வயதில் அம்மாவிடம் கேட்ட கேள்வி ஒன்று எனக்கு ஞாபகதிற்கு வந்தது ஏன் அம்மா சாமிக்கு மட்டும் மிக அழகான பட்டும் நிறைய நகைகளும் போட்டு இருக்கிறார்கள் என்று.மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்தி காண்பிப்பதிற்கும் பளிச் சென்று தெரிவதற்குமே அப்படிச் அலங்காரம் செய்வார்கள் என்று அம்மா பதில் சொன்னதாக ஞாபகம்.

கடவுளிடம் காணபட்ட நகைகளையும்,சரிகைகளையும் விட நமது பெண்களிடம் காணபட்டவைகளே மிக அதிகாமாக தெரிந்தது.கண்ணை கூசும் பட்டுகளுடனும்.நகைகளுடனும் அவர்கள் தெரிந்தார்கள்.

அந்த சிந்தனையோடு நின்ற என்னை அனுஷா சூழ்ந்து கொண்டாள் அவள் எனது யூனி தோழி. கோயிலிற்கு அண்மையில் வசிப்பவள் அதனால் தினமும் வருவதாக சொன்னாள்.சாதாரண சாறியோடு சுகந்தி எளிமையாக தெரிந்தாள்.

அப்போது அங்கு நடமாடி கொண்டு இருந்த இரண்டு,மூன்று பெண்களை குறிப்பாக காட்டிய அனுஷா தினம் ஒரு கலர் சாறியும் அதிக நகைகளுடனும் இவர்கள் வந்து போகின்றார்கள் என்று சொன்னாள்.

இதில் விசேடம் என்னவென்றால் என் வயதை ஒத்த தோழிகள் மிக சிம்பிளாக சேலை கட்டி அதிக ஆடம்பரம் இன்றி வந்தது தான்.ஆலயம் என்பது இறைவனை தரிசிக்கும் இடமல்லவா? அங்கு எம்மை மற்றவர்கள் தரிசிப்பதிற்கு இடமளிக்கலாமா?

நமது பெண்கள் இப்போது இதை பற்றி சிந்திக்க போகிறார்கள்.என்னையும் சேர்த்து தான் குறிபிடுகிறேன்.

சிந்தனை செய் மனமே..

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ள கனிஸ்டா.. நீங்கள் சாமி தரிசனத்துக்குப் போறதால எளிமையாப் போய் மனசை ஒருநிலைப்படுத்திக்கலாம் என்றீங்க. உங்களைப் போலவே நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிந்திச்சனான். நான் யாழ் நல்லூரில் வாழ்ந்தவன். நான் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் கோவிலுக்குப் போவதைத் தவிர்ப்பேன். புதன் கிழமைகளில் போவேன். அப்படியே சேர்ச்சுக்கும் போவேன். நல்ல அமைதியா கடவுளையும் கும்பிடலாம்.. அங்கு நடக்கும் வழிபாட்டு முறைகளையும் அவதானிக்கலாம். மனதுக்கும் இதமாக இருக்கும். ஆக்களோட முட்டவும் தேவையில்ல மோதவும் தேவையில்ல.

ஆனால் புலம்பெயர் தேசத்துக்கு வந்த பின்னர் கோவில்களுக்கு போனதில்ல. எனக்கு அவற்றை கோவில்களா இனங்காணவே முடியல்ல. (ஒரு சில இந்தியர்கள் அமைத்துள்ள பிரமாண்டமான ஆகம முறைப்படி அமைந்த கோவில்களைத் தவிர).

ஆனால் புலம்பெயர் தமிழர் சமூகத்திடம் இப்ப போதிய அளவுக்கு பட்டுச் சேலையும் நகையும் இருக்குது. ஆனால் பிரச்சனை அதை அடுத்தவைக்கு காட்ட சந்தர்ப்பம் குறைவு. அதுக்கு உள்ள சந்தர்ப்பங்கள்.. கோவில் திருவிழா.. மாவீரர் நாள்.. கலியாண வீடு.. சாமத்திய வீடு.. பிறந்தநாள் கொண்டாட்டங்கள்..! அதேபோல.. நம்ம பொடி பெட்டையளுக்கு சைற் அடிக்க.. கோவில் தான் தரிசனம் அளிக்கும் இடங்களா இப்பவும் பாவிக்கப்படுகுது.

கோவில்கள் வியாபார இடங்களாக.. மக்கள் விளம்பரப் பொருட்களாகி.. ஒரு சோ நடக்குது. அவ்வளவும் தான்..! :blink:

Edited by மோகன்
தேவையற்ற திணிப்பு நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் கோயிலை பயபக்தியோடு கும்பிட வருகிறார்கள் என்றால் அது சந்தேகமே.

கனிஸ்டா

பொதுவாகவே பெண்களைப் பொறுத்தவரை நகை, சேலை போன்றவிடயங்களில் கவனம் செலுத்தாது இருக்க முடியாதென்பது உங்கள் கருத்திலும் தொக்கி நிக்கின்றதே :icon_mrgreen::icon_mrgreen:

அட கனி தங்கா(பேஷா எழுதி இருக்கிறியள்)...கெட்டிகாரி :wub: ..ரொம்பவே சிந்தனை செய்யிறியள் போல இருக்கு கவனம் சரியோ அச்சோ முருகனை கும்பிட கன்பராவில இருந்து எல்லாம் வர தேவையில்லையுங்கோ (அங்க இருந்தே பேஷா கும்பிடலாம் பாருங்கோ)..ம்ம்ம் இருக்கிற பிரண்ட்ஸ்மாரை எல்லாம் பார்க்க வீட்ட இப்படி ஒரு பிட்டை போட்டு விட்டு வந்திட்டு (முருகனை கும்பிட்டனியளோ) கடசியா அவருக்கும் காதில பூவா நிசமா என்னால முடியல.. :lol:

சரி..சரி உண்மையை சொல்லிட்டன் என்று கோவிக்கிறதில்ல என்ன..ம்ம் எல்லாரும் இந்தியாவில இருந்து திருவிழாவிற்காக சாறி ஓடர் பண்ணி வந்தவை அல்லோ..(அப்படி வந்தா தானே அவைய பற்றி நாலு பேர் கதைப்பீனம் பாருங்கோ)..உது தெரியாதோ என்ன..அதில அவைக்கு ஒரு சந்தோஷம் பாருங்கோ.. :lol:

இதுக்காகவே அடிகொருக்கா ..(யாரோடையும் கதைக்கும் போது)...சேலையை இழுத்து இழுத்து விடுவீனம் அது ஏன்..(தான் காட்டி இருக்கிற சேலையை பற்றி மற்றவா கேட்க தான் :lol: )..அப்ப தானே சொல்லாம் அக்சுவலா இது வந்து நயந்தரா சேலை சரியான கொஸ்ட்..என்ட கஸ்பன்ட் இந்தியாவில இருந்து வரக்க வாங்கி கொண்டு வந்தவர் என்று எல்லாம் பிலிம் காட்டலாம்..

ம்ம்..இப்படியான நாட்களிள காட்டாட்டி பிறகு எப்ப காட்டுறது..(தங்களிட்ட இருக்கிற சாமான் எல்லாத்தையும்)...இது என்ன சின்னபுள்ள தனமா இருக்கு..என்னங்கோ சொன்னியள் ஆலயம் இறவனை தரிசிக்கு இடமோ..(ம்ம்..அவன் அவனுக்கு கோயிலில இறைவன் வந்து அவையின்ட கேள்பிரண்ட் தான் பாருங்கோ :D )..திருவிழா நேரத்தில யார் கடவுளை எல்லாம் கண்டு கொண்டது..(மனிசன் பாவம்)..உதில என்ன பகிடி என்றா நேர்த்தி எடுப்பினம் அல்லோ..(வாயில எல்லாம் குத்துவீனம் வேல் )..இத பார்த்து ஒரு பெடி சொல்லுது எப்படியாச்சும் போய் இத நான் குத்த வேண்டும் அப்ப தான் கேள்ஸ் எல்லாம் தன்ன பார்பீனமாம்..(நாசமா போச்சு நேர்த்திக்கு செய்யிறது எல்லாம் கேள்சிற்கு கலர்ஸ் காட்ட குத்துவதா போச்சு என்றா பாருங்கோ :lol: )..

இப்படி லோகம் எங்கையோ போய் கொண்டிருக்கு நம்ம கனி தங்காவிற்கு ஏனப்பா இப்படி சிந்தனை எல்லாம்..(ஒழுங்கா தானே இருந்தவா என்ன ஆச்சு :icon_mrgreen: )..

என்னது உங்களின்ட வயசை ஒத்த தோழிகள் சிம்பிளா சேலை கட்டி வந்தவையோ..(முடியல என்னால)..அவை சேலை கட்டி வந்ததே தன்ட பெடியனிற்கு சேலை கட்டினதே காட்ட தான்..அச்சோ உது தெரியாம கனி தங்கா சரி சரி கனி தங்கா நீங்க யாருக்கு காட்ட சேலை கட்டினீங்க சொல்லவே இல்ல பாருங்கோ :lol: ..ம்ம் உங்க தோழிகள் ஒன்னும் சிம்பிளா சேலை அணியவில்லை எல்லா ஆண்டிமார்களும் அணிந்த சேலையில உங்க தோழிமாரின்ட சேலைகள் எல்லாம் எழும்பவில்லை என்று சொல்லுங்கோ..(அண்டிமார்களோட உங்களாள போட்டி போட முடியுமா என்ன)..முடிந்தா போட்டி போடுங்கோ பார்போம் என்ன.. :lol:

ம்ம்..முருகனை கோவிலில 365 நாளும் தரிசிக்கலாம் பாருங்கோ..(இப்படியான வங்கசன் நடக்கும் போது தான் அங்கால சொல்ல மாட்டன் பாருங்கோ)..

இப்ப எல்லாம் விளங்கிச்சோ தங்காவிற்கு..(ஏதாச்சும் டவுட் இருந்தா அண்ணாவிட்ட கேட்டா பேஷா தீர்த்து வைப்பன்)..எல்லாம் சரி உங்க தோழி அனுஷாவா நேக்கு தெரியாம எவா அவா சொல்லி இருந்தா நானும் அவாவை தரிசித்திருப்பன் என்று சொல்ல வந்தனான் பாருங்கோ.. :icon_mrgreen:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கோவிலில காதல சொல்லு செருபிருக்காது"

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனிஷ்டா நல்லாவே சிந்தனை செய்யிறியள்.:wub:

ம்ம் திருவிழா காலத்தில கோயிலுக்கு போய் யாரும் கும்பிடுறவை என்டு நான் நினைக்கவில்லை எல்லாரும் மற்ற ஆக்கள் என்ன போட்டவை, என்ன புது பாசன் என்டு பார்க்க தான் வாறவை என்டு தான் நான் நினைக்கிறன் :icon_mrgreen:

அதோட உங்களை மாதிரி எல்லாரும் சிம்பிளா வந்தா பிறகு ஜன்னல், கதவு பார்க்கிறதுக்காகவே கோயிலுக்கு வாற ஆக்களின் கதி என்ன ஆவது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முருகனிட்ட வாங்கின சீலைகளை பெண்கள் முருகனுக்கு உடுத்து காட்ட தானே வேண்டும் அதாவது ஒவ்வொரு வருடமும் முருகனுக்கு அலங்கரித்த சேலைகளை முருகன் கோயிலில் விற்பனை செய்வார்கள் அதனை அடியார்கள் விரும்பி மகிழ்வுடன் அணிவார்கள் எல்லாம் அவன் செயல்..

முருகனின் தேர்திருவிழா நடைபெறும் போது நாலு வீதியிலும் (பிளாட்) ஸ்கீரின் தொலைகாட்சி வைத்து அடியார்களுக்கு காட்சி தரும் போது,அடியார்கள் முக்கியமாக பெண் அடியார்கள் சேலையை கட்டி.நகை போட்டு முருகனுக்கு காட்சி அளிப்பது தப்பில்லை..

நானும் பிள்ள சிட்னி கோசிப்பில இப்படி எத்தனையோ எழுதினான் கிட்டதட்ட 40 மேல எழுதிட்டன் மேதாவிகள் ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை.ஆனால் தங்கச்சி எழுதினதை கூட பேர் கண்டு கொண்டிருக்கீனம் வாழ்த்துக்கள் தங்கச்சி.தொடர்ந்து இப்படியான அவுஸ்ரெலியாவில் நடக்கும் விசயங்களை தாங்கோ..

சிட்னி கோசிப் 41..

சிட்னி கோசிப் 41 ஜ உங்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறேன் ஏனேனில் அதுவும் சிட்னி முருகன் கோயில் சம்பந்தபட்டது,சிட்னி முருகன் தேர் திருவிழா அண்மையில் நடந்து முடிந்தது அடியேனும் தேர்,தீர்த்தம்,பூங்காவனம் என்று போய் கலந்து கொண்டேன் முருகனின் அருளும் பெற்று கொண்டேன்.

கோயில் கோபுரத்தில "ஓம்" என்று பெரிதாக கோபுர உயர்திற்கு எழுதி மின்விளக்குகளாள் அலங்கரித்து இருந்தார்கள் உண்மையிலே பாராட்ட வேண்டிய விடயம்,சமஸ்கிருத "ஓம்" தான் புலத்தில் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் பிரபலயமாகி கொண்டு வருகிறது ஏன் சில இளசுகளுக்கே அந்த "ஓம்" தான் தெரியும்.ஆனால் அதை போடாமல் தமிழ கடவுள் முருகனிற்கு தமிழில் "ஓம்" போட்ட சிட்னி முருகன் கோயில் நிர்வாகத்தினர் பாராட்டபட வேண்டியவர்கள் தான் எல்லாம் அவன் திருவிளையாடல்.

இளசுகளின் குறும்புகளை (சேட்டைகளை),பார்க்கும் போது எனக்கு ஊரில செய்த அதே சேட்டைகள் தான் நினைவிற்கு வந்தது என்ன வித்தியாசம் அங்க தமிழில் செய்தோம் இங்கே ஆங்கிலத்தில் செய்கிறார்கள் ஊரில் வேட்டி கட்டி கன்ன உச்சி இழுத்து,திருநீற்று குறி போட்டு ஆறு,ஏழு மைல்கள் சைக்கிளிள் ஓடி கோவிலில் நின்று கூத்தடிப்பது போல் இங்கும் இளசுகள்.

ஆனால் இங்கு இளசுகள் நல்ல நல்ல கார்களிள் வருகீனம்,தலை மயிர் .(ஸ்பைக் பண்ணி இருப்பீனம்).. காதில் ஒரு தோடும் இருக்கும்.முருகன் தீர்த்தம் ஆடி சென்றவுடன் கேணி அல்லது குளத்திள் குதித்து உடுத்த உடுப்புடன் பக்கத்தில் நின்றவனையும் இழுத்து கொண்டு விழுவது அவனை தள்ளு இவனை தள்ளு அவனை பிடித்து இழு என்று ஒரே சத்தமும்,கூத்தும் தான்,இவ்வளவு சேட்டைகளும் செய்ய காரணம் முருகனின் மீது ஏற்பட்ட பக்தியால் அல்ல,அங்க வந்து நிற்கின்ற பெண்களின் மனதில் தாங்கள் கீரோ என்று இடம் பிடிக்க தான்.

அதே சேட்டைகளையும் இங்கையும் காணகூடியதாக இருந்தது அங்கே கேணியும்,குளத்திளும் தீர்த்தம் ஆடினோம் இங்கே சுவிமிங் பூலில் முருகன் தீர்த்தம் ஆடினான்

அங்கு தமிழில் தள்ளு,இழு என்பார்கள் இங்கு மைட் புஸ் கிம்,மைட் புல் கிம் என்று ஆங்கிலத்தில் ஒரே சத்தமாகவும் இளசுகள் அட்டகாசம் செய்தார்கள்.சேட்டைகள் எல்லாம் ஒரே மாதிரி தான் ஆனால் உருவ மாற்றம்..(முள்ளு பன்னி தலை மயிர்,காதில் தோடு.,தத்து குத்து)..மொழி மாற்றம் ஆங்கிலம்.

சேட்டைகளும்,குறும்புகளும் பரம்பரை பரம்பரையாக வாறதோ அல்லது இந்த சேட்டைகளும் எங்கன்ட கலாச்சாரமோ.எனக்கு தெரியல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிள்ள சிட்னி கோசிப்பில இப்படி எத்தனையோ எழுதினான் கிட்டதட்ட 40 மேல எழுதிட்டன் மேதாவிகள் ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை.ஆனால் தங்கச்சி எழுதினதை கூட பேர் கண்டு கொண்டிருக்கீனம் வாழ்த்துக்கள் தங்கச்சி.தொடர்ந்து இப்படியான அவுஸ்ரெலியாவில் நடக்கும் விசயங்களை தாங்கோ..

புத்து நீங்க 4 சொன்னா என்ன 40 சொன்னா என்ன 400 சொன்னா என்ன.. அது புத்துவின் வழமையான பல்லவி என்றிட்டு சனம் போயிடும். ஆனால் கனிஸ்டா பிள்ள சொன்னாப் பாருங்க.. அது முதல் தடவை. அதால சனம் வாசிச்சு அபிப்பிராயம் சொல்லுது. இதையே கனிஸ்டா பிள்ள 40 தரம் சொன்னா.. சனம்...???! :icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புத்து நீங்க 4 சொன்னா என்ன 40 சொன்னா என்ன 400 சொன்னா என்ன.. அது புத்துவின் வழமையான பல்லவி என்றிட்டு சனம் போயிடும். ஆனால் கனிஸ்டா பிள்ள சொன்னாப் பாருங்க.. அது முதல் தடவை. அதால சனம் வாசிச்சு அபிப்பிராயம் சொல்லுது. இதையே கனிஸ்டா பிள்ள 40 தரம் சொன்னா.. சனம்...???! :D:)

40,000 சனம் சிட்னியில இருக்கும் போது நாலு கருத்து தான் திருப்பி திருப்பி வர போது.ஆறு கோடி தமிழன் இருந்தும் இன்னும் ஒரே மத கருத்தை தானே பரப்பி கொண்டு வருகிறான் ஆனால் புது கருத்தை பரப்ப முடியவில்லையே (விடுதலை புலிகள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்).ஆனால் நாங்கள் இன்னும் கோயிலும்,சேர்சும் என்று செல்வது மட்டும் அல்லது ஊடகத்திலும் அதையே கருத்தை திணிக்கின்றோமே மூவாயிரம் ஆண்டுகளாக ஒரே கருத்தை தானே திணிக்கின்றோம் உள் வாங்குகின்றோம்,அந்த ஜெனரேசனில வந்தது தான் கிரேட் புத்து அப்படி பார்க்கும் போது 4000 பார்வையாளர்களை கொண்ட யாழில் 40 கருத்தை திருப்பி திருப்பி சொல்வது தப்பில்லை என்பது அடியேனின் கருத்து.

அது சரி நான் ஒரே கருத்தை தான் 40 தரம் சொல்லியிருக்கிறேனா என்று எனக்கே டவுட்டா இருக்கு நான் எனகுள்ளே நினைத்தேன் 40 வித்தியாசமான கருத்தை சொல்லி இருக்கிறேன் என்று. :unsure:

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் தாத்தா,

கனிஷ்டாவும் நல்லூரில்

தான் பிறந்தவள்.சந்தோஷம்

பட்டும்,நகையும் அதிகமாக

இருப்பது என்றால்

நூல் சாறியே இல்லாமல்

கஷ்டபடும் எத்தனையோ

மக்களுக்கு கொடுத்து உதவலாமே.. :D

நுணாவிலான்,

நீங்கள் சொன்னது உண்மை.

நன்றி. :D

வசம்பு,

வசம்புவின் கூற்று சரி தான்

இன்னும் கொஞ்ச காலம் போனபின்

எங்கள் நிலைபாடும் அப்படி தான்

வந்துவிடுமோ தெரியாது.

நன்றி. :lol:

  • தொடங்கியவர்

ஜம்மு அண்ணா,

நீங்களே அறிவுகொழுந்து

அதில் கொஞ்சமாவது தங்கச்சிக்கு

இருக்க வேண்டாம். :D

அடடா..சரியாக கண்டுபிடித்து

விட்டீங்களே.

உங்களை மாதிரி யூனிக்கு போறன் என்று

சொல்லி போட்டு

கன்பரா,பிரிஸ்பன் எல்லாம்

திரியிற மாதிரியோ.

அது சரி என்னுடைய தோழிகளை

எல்லாம் கட்டாயம் சொல்ல வேண்டுமா?? :D

யாருக்கும் சேலை காட்ட நாங்கள்

கோயிலிற்கு வாறதில்லை.

கடவுளை கும்பிட தான் வாறனாங்கள்.

ஓம்..அண்ணா நீங்க சொல்லி

தந்தது எல்லாம் நல்லா விளங்கிட்டு

உங்களை போல அண்ணண் இருந்தா

எங்களை போன்ற தங்கச்சிமார் எல்லாம்

பாவங்கள் தான் :lol: ..

நன்றி ஜம்மு அண்ணா.. :)

  • தொடங்கியவர்

இன்னிசை,

உங்கள் கருதிற்கு நன்றி.

மற்றவர்கள் பாவம் என்பதிற்காக

நீங்கள் ஜன்னல்,கதவுகளுடன் தான்

கோயிலிற்கு செல்வீர்களோ. :D

ஆச்சரியம் தான். :lol:

புத்தன் அண்ணா,

கோவிலில் வாங்கிய சாறியை

கோவிலில் தான் கட்டி காட்ட

வேண்டும் என்ற கண்டுபிடிபிற்கு

பாரட்ட வேண்டும் போல் இருக்கிறது. :D

உங்கள் சிட்னி கோசிப்பை வாசித்து விட்டு

நானும்,அக்காவும் சிரித்து விட்டோம்

சிரித்தது மட்டுமில்லை சிந்திக்கவும்

வைத்து விட்டீர்கள். :)

உங்களுக்கு எங்களின் பாராட்டுக்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இன்னும் கோயிலும்,சேர்சும் என்று செல்வது மட்டும் அல்லது ஊடகத்திலும் அதையே கருத்தை திணிக்கின்றோமே மூவாயிரம் ஆண்டுகளாக ஒரே கருத்தை தானே திணிக்கின்றோம் உள் வாங்குகின்றோம்,அந்த ஜெனரேசனில வந்தது தான் கிரேட் புத்து அப்படி பார்க்கும் போது 4000 பார்வையாளர்களை கொண்ட யாழில் 40 கருத்தை திருப்பி திருப்பி சொல்வது தப்பில்லை என்பது அடியேனின் கருத்து.

புத்து.. எப்ப கடவுள் இருக்கிறான் என்ற சிந்தனை மனிதனிடம் வந்திச்சோ அப்ப இருந்து இல்லை என்ற சிந்தனையும் உருவாகிட்டுது. அதைச் சொல்லுறவனும் தன்ர சிந்தனையை திணிச்சிட்டுத்தான் இருக்கிறான். தீர்க்க முடியாத கேள்விகள் நிறைந்த இந்த மனித வாழ்வில்.. கடவுள் இருக்கிறது என்பதும் நிலைக்கும்.. இல்லை என்பதும் ஒரு பகுதியில் நிலைக்கும். இதுதான் யதார்த்தம். இதைப் புரிஞ்சு கொள்ள மறுத்து சண்டை செய்யுறதுதான்.. கொடுமை..! :):lol:

உங்கட கொசிப்புக்கும் கனிஸ்டாவிட எழுத்துக்கும் உள்ள வேறுபாடு.. உங்களின் கொசிப்பில் சனம் செய்யுறதை வைச்சு...மதத்தைப் பற்றிய கேவலப்படுத்தல் மிகுந்திருக்க.. கனிஷ்டாவின் எழுத்தில் சமூகம் மதத்தின் பெயரால் செய்யும் தவறுகளை இனங்காட்டுதல்.. மிகுந்திருக்குது..! :D

கனிஷ்டாவும் நல்லூரில்

தான் பிறந்தவள்.சந்தோஷம்

அதுதானே பார்த்தன் புள்ள கனிஷ்டா இவ்வளவு கனிவா பேசுதே என்று..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கொசிப்புக்கும் கனிஸ்டாவிட எழுத்துக்கும் உள்ள வேறுபாடு.. உங்களின் கொசிப்பில் சனம் செய்யுறதை வைச்சு...மதத்தைப் பற்றிய கேவலப்படுத்தல் மிகுந்திருக்க.. கனிஷ்டாவின் எழுத்தில் சமூகம் மதத்தின் பெயரால் செய்யும் தவறுகளை இனங்காட்டுதல்.. மிகுந்திருக்குது..!

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கு தான்.கடவுள் நம்பிக்கையோ மதங்களையோ நான் குறை கூறவில்லை அதை பின்பற்றும் மனிதர்களை தான் குறை கூறி உள்ளேன் ஏனேனில் நானும் சித்திரை வருச பிறப்பிற்கு குடும்பத்தோட கோயிலில நின்று வருசம் கொண்டாடின கோஷ்டி தான் பழக்கபட்ட விசயங்களை ஒரு நாளுடன் முடிவிற்கு கொண்டு வாறது சாத்தியமில்லை. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டதில் அதிகமானோர் பெண்கள் என்றே நினைக்கிறேன் அதிலும் நடுதர வர்க்கத்து பெண்களே அதிகமாக தென்பட்டார்கள்.பட்டுச் சேலைகளும் நிரம்பிய நகைகளுமாக அவர்கள் தெரிந்தார்கள்.

இதில தடித்த எழுத்தில சுட்டிக்காட்டிய சொற்றொடரின் மூலம் இதை எழுதியவர் என்னத்தைக் கூறவருகின்றார்.

வர்க்கம் எனும் போத பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு அல்லது சாதிப்பாகுபாட்டைக் குறிக்க பயன்படுத்தும் சொல்லென்பதே நான் இதுவரை அறிந்தது. நடுத்தர என்பதன் மூலம் இங்கு பொருளாதார வித்தியாசத்தைக் குறிப்பிட்டதாகவே உணர்கின்றேன். அப்படியானால் புலம்பெயர்ந்து வாழும் நாட்டிலும் எம் தமிழர்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வினாலான வர்க்கம் இருக்கிறதா. அப்படியாயின் அதை எவ்வாறு வகைப்படுத்தி பிரித்தறிகின்றார்கள். பொதுவாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பின்பற்றப்படும் வர்க்க வித்தியாசங்களைக் கணக்கெடுப்பின் அதன்கீழ் அநேகமான தமிழர்கள் நடுத்தரவர்க்கத்திற்குள் அடங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கு தான்.கடவுள் நம்பிக்கையோ மதங்களையோ நான் குறை கூறவில்லை அதை பின்பற்றும் மனிதர்களை தான் குறை கூறி உள்ளேன் ஏனேனில் நானும் சித்திரை வருச பிறப்பிற்கு குடும்பத்தோட கோயிலில நின்று வருசம் கொண்டாடின கோஷ்டி தான் பழக்கபட்ட விசயங்களை ஒரு நாளுடன் முடிவிற்கு கொண்டு வாறது சாத்தியமில்லை. :lol:

கோவணம் கட்டினவை.. ஜட்டி போடல்லையா.. வேட்டி உடுத்தவை.. ரவுசர் போடல்லையா..! மக்கள் மாற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள்.. அதற்கு சரியான விளக்கம்.. சான்று.. அதனால் உணரப்பட்ட தேவை என்பன உள்ள போது. இவை எதுவுமே இன்றி.. ஆளாளுக்கு.. வந்து ஒவ்வொரு பொய்யையும் நீட்டி நிமித்தி எழுதிட்டு.. மாறு என்றால்.. மாறிட மக்களில் எல்லோரும் என்ன மந்தைகளா..??! :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில தடித்த எழுத்தில சுட்டிக்காட்டிய சொற்றொடரின் மூலம் இதை எழுதியவர் என்னத்தைக் கூறவருகின்றார்.

வர்க்கம் எனும் போத பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு அல்லது சாதிப்பாகுபாட்டைக் குறிக்க பயன்படுத்தும் சொல்லென்பதே நான் இதுவரை அறிந்தது. நடுத்தர என்பதன் மூலம் இங்கு பொருளாதார வித்தியாசத்தைக் குறிப்பிட்டதாகவே உணர்கின்றேன். அப்படியானால் புலம்பெயர்ந்து வாழும் நாட்டிலும் எம் தமிழர்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வினாலான வர்க்கம் இருக்கிறதா. அப்படியாயின் அதை எவ்வாறு வகைப்படுத்தி பிரித்தறிகின்றார்கள். பொதுவாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பின்பற்றப்படும் வர்க்க வித்தியாசங்களைக் கணக்கெடுப்பின் அதன்கீழ் அநேகமான தமிழர்கள் நடுத்தரவர்க்கத்திற்குள் அடங்குவார்கள்.

கனிஷ்டா அதில் நடுதர வர்க்கம் என்று குறிபிட்டது நடுதர வயதினரை என்று நான் நினைக்கிறன் காரணம் அவர்களுக்கு தான் ஊரில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அதை இங்கு நிறைவேற்றுகிறார்கள் இங்கு இருக்கும் இளசுகளுக்கு அவ்வளவாக நகைகளிள் நாட்டமில்லை,வயது முதிர்ந்தோர்களுக்கு போகும் நாட்களை எண்ணி கொண்டிருப்பதில் அவர்களின் காலம் போய் விடும்.ஆகவே நடுதர வர்க்கம் என்று குறிபிட்டது நடுதர வயதினரை என்று நினைக்கிறேன்.

புலத்தில் இருக்கும் வர்க்கங்களை பற்றி கேட்டு இருந்தீர்கள் சிட்னியை பொறுத்தவரை பணம்,கல்வி.பொருளாதாரம் இவற்றை வைத்து வர்க்கபடுத்தலாம்.

80 களில் குடியேறியோர் அநேகமானோர் இலங்கை அல்லது இங்கிலாந்து பட்டதாரிகளான டாக்டர்கள்,இஞ்சிஜினர்கள்,கணக

்காளர்கள் போன்றோர் இவர்கள் செல்வ் மைக்கிரேசேசன் மூலம் இங்கு வந்தவர்கள் அவர்களின் பிள்ளைகள் இவர்களை போலவே நன்றாக படித்து இதையே பட்டங்களுடன் இருப்பார்கள்.இவர்கள் வாழும் பிராந்தியங்கள் வீடு,காணி விலைகள் அதி உயர்வானதான இருக்கும் இப்படியான பிராந்தியங்களிள் வாழ்பவர்கள் ஒரு வர்க்கத்தினர் இவர்களின் பிள்ளைகளின் திருமணங்கள் கூட அதே வர்க்கதிற்குள் தான் நிச்சயகின்றார்கள் பட்டம் பெற்றவுடன் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.இவர்களுக்கு மூன்று,நான்கு வீடுகள் இருக்கும்.

அடுத்த வர்க்கத்தினர் 80களிள் சுற்றுலா விசாவில் வந்து அகதி அந்தஸ்து கோரி ஒரு பிராந்தியங்களில் வாழ்ந்து தங்களது பிள்ளைகளை டாக்டர்,எஞ்ஞியராக வரபண்ணி அவர்களை அந்த மேட்டுகுடிகுள் சேர்ந்து விடுவதிற்கு முயற்சி செய்து வெற்றி கண்ட ஒரு குழுவினர்.

இன்னொரு வர்க்கத்தினர் சாதாரண தொழில் செய்து ஒரு சிறு வீடு பிள்ளைகளை படிப்புகளை புகட்டி கொண்டிருக்கும் வர்க்கத்தினர்,இவர்கள் அநேகமாக அகதிகளாக வந்தவர்கள் ஆனால் அகதியாக இப்போதில்லை அதை விட பலமடங்கு உயர்ந்து தான் இருக்கிறார்கள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கோவணம் கட்டினவை.. ஜட்டி போடல்லையா.. வேட்டி உடுத்தவை.. ரவுசர் போடல்லையா..! மக்கள் மாற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள்.. அதற்கு சரியான விளக்கம்.. சான்று.. அதனால் உணரப்பட்ட தேவை என்பன உள்ள போது. இவை எதுவுமே இன்றி.. ஆளாளுக்கு.. வந்து ஒவ்வொரு பொய்யையும் நீட்டி நிமித்தி எழுதிட்டு.. மாறு என்றால்.. மாறிட மக்களில் எல்லோரும் என்ன மந்தைகளா..??! :lol::icon_mrgreen:

கோவணம் கட்டினவை ஜட்டிக்கு மாறும் போது கொஞ்சம் பிரச்சினை இருந்திருக்கும்,ஒரடியா கோமணத்தை கழற்று ஜட்டியை போடு என்றா போட்டிருக்க மாட்டாங்க.இரண்டு தமிழன் போட்டு அது நல்லா இருக்கு என்று இன்னொரு தமிழன் சொல்ல சாதுவாக எரிச்சல் பட்டு மற்ற தமிழன் போட கிட்டதட்ட இரு நூறு வருசமாவது எடுத்திருக்கும்,இன்னும் எத்தனை பேர் கோமணமோ யாருக்கு தெரியும்,இளசுகளில் அரைவாசி ஜட்டி போடும் போது கிழசுகளிள முக்காவாசி கழற்றமாட்டோம் கோமணத்தை பரம்பரையாக போட்ட கோமணம் என்று அடம்பிடித்து தான் இருந்திருக்கும் அத மாதிரி தான் இப்பத்தையான் நம்ம ஸ்டோரியும்.. :icon_mrgreen::(

  • கருத்துக்கள உறவுகள்

கோவணம் கட்டினவை ஜட்டிக்கு மாறும் போது கொஞ்சம் பிரச்சினை இருந்திருக்கும்,ஒரடியா கோமணத்தை கழற்று ஜட்டியை போடு என்றா போட்டிருக்க மாட்டாங்க.இரண்டு தமிழன் போட்டு அது நல்லா இருக்கு என்று இன்னொரு தமிழன் சொல்ல சாதுவாக எரிச்சல் பட்டு மற்ற தமிழன் போட கிட்டதட்ட இரு நூறு வருசமாவது எடுத்திருக்கும்,இன்னும் எத்தனை பேர் கோமணமோ யாருக்கு தெரியும்,இளசுகளில் அரைவாசி ஜட்டி போடும் போது கிழசுகளிள முக்காவாசி கழற்றமாட்டோம் கோமணத்தை பரம்பரையாக போட்ட கோமணம் என்று அடம்பிடித்து தான் இருந்திருக்கும் அத மாதிரி தான் இப்பத்தையான் நம்ம ஸ்டோரியும்.. :icon_mrgreen::icon_mrgreen:

நான் உங்களைப் போல நினைக்கல்ல. மக்கள் எவரென்றாலும்.. அவர்களுக்கு செளகரியம் என்பதை உணரும் போது.. அதற்கான பிரதிபலன் இருக்கும் என்றால் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீனம். இப்ப எல்லாரும் ஜட்டிதான் போடினம் என்பது அதன் விற்பனையில அறிய முடியுது.

இதில இளசு.. கிழசு என்று சொல்ல எதுவுமில்லை என்றே நினைக்கிறேன். இந்த இளசு.. கிழசு என்று பார்க்கிற எங்கட மென்ராலிற்றிதான்.. எங்களை அறியாமலே எங்களை அடிமைப்படுத்தி வைச்சிருக்குது. உதுகள முதலில் களைய வேணும். அப்படிக் களையேக்க.. பலவற்றை ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நிலை வரும். எதையும் வெறுக்க வேண்டிய தேவை வராது..! அடுத்தவன் செய்யுறதைப் பார்த்து புலம்பத் தேவை இருக்காது..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களைப் போல நினைக்கல்ல. மக்கள் எவரென்றாலும்.. அவர்களுக்கு செளகரியம் என்பதை உணரும் போது.. அதற்கான பிரதிபலன் இருக்கும் என்றால் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீனம். இப்ப எல்லாரும் ஜட்டிதான் போடினம் என்பது அதன் விற்பனையில அறிய முடியுது.

இதில இளசு.. கிழசு என்று சொல்ல எதுவுமில்லை என்றே நினைக்கிறேன். இந்த இளசு.. கிழசு என்று பார்க்கிற எங்கட மென்ராலிற்றிதான்.. எங்களை அறியாமலே எங்களை அடிமைப்படுத்தி வைச்சிருக்குது. உதுகள முதலில் களைய வேணும். அப்படிக் களையேக்க.. பலவற்றை ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நிலை வரும். எதையும் வெறுக்க வேண்டிய தேவை வராது..! அடுத்தவன் செய்யுறதைப் பார்த்து புலம்பத் தேவை இருக்காது..! :icon_mrgreen:

இளசு,கிழசு என்ற மெண்டாலிட்டி எங்களை விட்டு போகுதில்லை நாங்க வாத்தியை சேர் என்று தான் சொன்னனாங்க இப்பவும் வாத்தியார்மார் சிலர் புலத்தில் பழைய மாணவ சங்கதிற்கு விருந்தினராக வந்தால் அவர்களை சேர் என்று தான் இப்பவும் அழைக்கின்றோம் ஆனால் என்ட பிள்ள நான்காம் வகுப்பு படிக்கிற பிள்ள வாத்தியை பார்த்து பெயரை சொல்லி தான் கூப்பிடுது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இளசு,கிழசு என்ற மெண்டாலிட்டி எங்களை விட்டு போகுதில்லை நாங்க வாத்தியை சேர் என்று தான் சொன்னனாங்க இப்பவும் வாத்தியார்மார் சிலர் புலத்தில் பழைய மாணவ சங்கதிற்கு விருந்தினராக வந்தால் அவர்களை சேர் என்று தான் இப்பவும் அழைக்கின்றோம் ஆனால் என்ட பிள்ள நான்காம் வகுப்பு படிக்கிற பிள்ள வாத்தியை பார்த்து பெயரை சொல்லி தான் கூப்பிடுது. :icon_mrgreen:

நான் சேர்.. ரீச்சர் என்று அவர்களின் முன் கூனிக்குறுகி நிற்கிறதில்ல. மிஸ் செல்லையா என்றுதான் சொல்வேன்.. (ஒரு உதாரணத்துக்கு) நீங்கள் சொல்வது போல அப்படி நிற்பவர்களைப் பார்த்திருக்கிறேன். புகலிடத்தில் கூட இந்திய மாணவர்கள் வழிஞ்சு எழும்புவாங்க.. ஆனால் வெள்ளையள் ஏன் என்று கண்டுக்கிறதில்ல. ஆனால் சில வெள்ளையளுக்கு அது பெருமை போல.. பலருக்கு அது பிடிப்பதில்லை..!

நான் அப்பா அம்மாவையே பெயர் சொல்லிக் கூப்பிடுவன். அவங்க அதற்காக எல்லாம் என்னை அதட்டிக்கிறதில்ல..! சில பெற்றோர் அதற்காக அடிப்பதைக் கண்டிருக்கிறேன்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

ஜம்மு அண்ணா,

நீங்களே அறிவுகொழுந்து

அதில் கொஞ்சமாவது தங்கச்சிக்கு

இருக்க வேண்டாம்.

அடடா..சரியாக கண்டுபிடித்து

விட்டீங்களே.

உங்களை மாதிரி யூனிக்கு போறன் என்று

சொல்லி போட்டு

கன்பரா,பிரிஸ்பன் எல்லாம்

திரியிற மாதிரியோ.

அது சரி என்னுடைய தோழிகளை

எல்லாம் கட்டாயம் சொல்ல வேண்டுமா??

யாருக்கும் சேலை காட்ட நாங்கள்

கோயிலிற்கு வாறதில்லை.

கடவுளை கும்பிட தான் வாறனாங்கள்.

ஓம்..அண்ணா நீங்க சொல்லி

தந்தது எல்லாம் நல்லா விளங்கிட்டு

உங்களை போல அண்ணண் இருந்தா

எங்களை போன்ற தங்கச்சிமார் எல்லாம்

பாவங்கள் தான் ..

நன்றி ஜம்மு அண்ணா..

இப்பவாச்சு ஜம்மு பேபியை பற்றி விளங்கிச்சே..(நிசமா முடியல்ல :( )...உது ஒன்னும் என்னை வைத்து காமேடி பண்ணல்ல தானே...ம்ம்ம் கட் அடிக்கிறது எல்லாம் சகஜம் தங்கச்சி..(யூனியை கட் அடித்து போட்டு ஊர்சுத்துற சுகமே தனி சுகம் பாருங்கோ :lol: )...அதை எல்லாம் இப்படி பப்ளிக்கா சொல்ல படாது அல்லோ தங்கச்சி..பிகோஸ் நம்ம பமிலி மெம்பர்ஸ் உங்க வாறவை அல்லோ பிறகு அண்ணா மாட்டுபட்டுவிடுவன் அல்லோ.. :wub:

ம்ம்ம்..இன்னொரு தங்கச்சியும் இருக்கிறா அல்லோ...(உந்த மாட்டர் தெரிந்தா அத வேற சொல்லணுமா என்ன :( )...அட தங்கச்சியின் தோழி எல்லாம் நம்ம தோழி மாதிரி அல்லோ இத கூட அண்ணாவிற்கு சொல்லாட்டி அண்ணா ரொம்ப பீல் பண்ணுவன் அல்லோ..(என்ன பார்க்கிறியள்)..அவையும் எனக்கு தங்கச்சி மாதிரி.. :lol:

அட எல்லாரும் கடவுளை கும்பிட தான் கோயிலிற்கு வாறவை...(அப்படியே சேலையையும் காட்டி போட்டு போறவை பாருங்கோ :lol: )...இத தான் சொல்லுறது ஒரு கல்லில இரண்டு மாங்காய் என்று...இது எப்படி இருக்கு..அட என்ன மாதிரி அண்ணா இருந்தா தங்கச்சிமார் எல்லாம் பாவமா உது கொஞ்டம் கூட நன்னா இல்ல சொல்லி போட்டன்..(எங்க என்ட இன்னி தங்கச்சி :( )...

நன்றி எல்லாம் வேண்டாம்..(நான் கனி கூட டூஊஊஊஊ)...ம்ம் நான் தானே நன்ன அண்ணா இல்ல போய் நன்னா அண்ணாவா பாருங்கோ :lol: .. அட ஜம்மு பேபி குட் அண்ணாவா பாட் அண்ணாவா நேக்கே டவுட்டா இருக்கு..நிசமா என்னால முடியல்ல...எல்லாம் சிட்னி முருகனின்ட செயல் தான் பாருங்கோ.. :lol:

ம்ம்...நான் கிறிஸ்ரியனா மாற போறன் இதை பற்றி என்ன நினைக்கிறியள்..(பிகோஸ் நான் கிஸ்ரியன் பெட்டையை லவ் பண்ண போறன்)..என்ன எல்லாரும் பார்க்கிறியள்... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னிசை,

உங்கள் கருதிற்கு நன்றி.

மற்றவர்கள் பாவம் என்பதிற்காக

நீங்கள் ஜன்னல்,கதவுகளுடன் தான்

கோயிலிற்கு செல்வீர்களோ. :lol:

ஆச்சரியம் தான். :wub:

கனிஷ்டா நான் அப்படித்தான் கோயிலுக்கு செல்வேன் என்டு கூறவில்லை. நம்மளுக்கு ஜன்னல் கதவு எல்லாம் சரிவராது.

ஆனா அப்படியும் ஆக்கள் போகிறார்கள் அப்ப தான் மற்றவர்கள் தங்களை பார்ப்பார்கள் என்டு கூற வந்தேன். :wub::lol:

நாம திருவிழா காலங்களில் கோயிலுக்கு போறது குறைவு ஏனென்டா அந்த நேரங்களில கடவுளை தெரியாத அளவு கன சனம் இருக்கும் அதோட உந்த இடிபாடு எல்லாம் சரிவராது. அதால அந்த நேரம் வீட்டில கும்பிடுறது தான் பெட்டர் என்டு நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்..இன்னொரு தங்கச்சியும் இருக்கிறா அல்லோ...(உந்த மாட்டர் தெரிந்தா அத வேற சொல்லணுமா என்ன :lol: )...அட தங்கச்சியின் தோழி எல்லாம் நம்ம தோழி மாதிரி அல்லோ இத கூட அண்ணாவிற்கு சொல்லாட்டி அண்ணா ரொம்ப பீல் பண்ணுவன் அல்லோ..(என்ன பார்க்கிறியள்)..அவையும் எனக்கு தங்கச்சி மாதிரி.. :lol:

அட எல்லாரும் கடவுளை கும்பிட தான் கோயிலிற்கு வாறவை...(அப்படியே சேலையையும் காட்டி போட்டு போறவை பாருங்கோ :wub: )...இத தான் சொல்லுறது ஒரு கல்லில இரண்டு மாங்காய் என்று...இது எப்படி இருக்கு..அட என்ன மாதிரி அண்ணா இருந்தா தங்கச்சிமார் எல்லாம் பாவமா உது கொஞ்டம் கூட நன்னா இல்ல சொல்லி போட்டன்..(எங்க என்ட இன்னி தங்கச்சி :lol: )...

ஜம்மு உங்க என்ன நடக்குது. நான் நீங்க ஒழுங்கா யுனியில போய் படிக்கிறீங்க என்டு பார்த்தா கதை வேற மாதிரி போகுது போல கிடக்கு????? :lol:

கனிஷ்டா ஜம்மு பாவம் உப்படி நீங்க நினைக்க கூடாது. ஜம்மு இப்ப திருந்தீட்டு. ஜம்மு ஒரு அச்சா அண்ணா. (ம் இது காணுமா ஜம்மு :lol: )

ஜம்முவோட நிக்கிற ஆக்கள் சைட் அடிச்சா ஜம்மு ஒன்டும் செய்ய இயலாது. ஜன்னல் கதவு போட்டு கொண்டு ஜம்முவுக்கு முன்னால வந்து நின்டா ஜம்மு என்ன செய்யும் பாவம் :wub:

  • தொடங்கியவர்

பிறேம் அவர்கள் நினைத்தது சரி தான்

நடுதர வர்க்கம் என்ற நோக்கம்,

பொருளாதார ஏற்றதாழ்வின்

மையத்தை தான் குறிபிட்டேன்

புலம் பெயர் அனைத்து நாடுகளிலும்

அப்படி இல்லாம இருக்கலாம் ஆனால்

அவுஸ்ரெலியா போன்ற நாடுகளிள்

வர்க்க பேதம் இல்லாம இல்லை :icon_idea:

இதை விளக்கிய புத்தன் அண்ணாவிற்கு

நன்றி. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.