Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனப்பொருத்தம்(Dating) அவசியமானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனப்பொருத்தம்(Dating) அவசியமானதா?

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

டேற்றிங் என்றால் மனப்பொருத்தம் பார்க்கிறதென்று.. விளம்பரம் செய்யுறீங்களோ. நல்லாத்தான் விடுறியள் கதை.. நீளமா..!

நான் பார்த்த அளவில.. யுனி வழிய.. இதில ஈடுபடுறவன் எல்லாம்.. கொண்டோம் பக்கற் கூட திரியுறானே..! நான் நினைக்கிறன்.. உடற் பொருத்தம் தான் அதிகம் பாக்கிறாங்க என்று.. கலியாணத்துக்கு முன்னால.. இப்படி பல வகைகளிலும் ரெஸ்ட் பண்ணினாத்தானே.. பின்னாடி வாழ்க்கையில் ஒரு சிலதாவது தேறும்..! :D

Edited by nedukkalapoovan

டேட்டிங் எண்டால் தமிழில என்ன அர்த்தம்? மனப்பொருத்தம் எண்டு நுணாவிலான் போட்டு இருக்கிறார் இது பிழை எண்டு நினைக்கிறன்.

ஆங்கில கலாச்சாரத்தில் கூறப்படும் டேட்டிங்கை எங்கட கலாச்சாரத்தில கூறப்படுற காதலுக்கும் ஒப்பிட முடியாது.

நான் அறிஞ்சவகையில டேட்டிங் எண்டு இஞ்ச ஆக்கள் என்ன செய்யுறாங்கள் எண்டால் மாதத்துக்கு மாதம் ஆக்கள மாத்தி மாத்தி குடித்தனம் செய்யுறாங்கள்.

முதலில இந்தத் தலைப்பிலையே பிழை இருக்கிறமாதிரி தெரியுது. ஆங்கிலத்தில டேட்டிங் எண்டு கூறப்படுறது ஒரு வித்தியாசமான விசயம்..

நெடுக்காலபோவானுக்கும் டேட்டிங் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு இருக்கிதுபோல..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டேட்டிங் எண்டால் தமிழில என்ன அர்த்தம்? மனப்பொருத்தம் எண்டு நுணாவிலான் போட்டு இருக்கிறார் இது பிழை எண்டு நினைக்கிறன்

நான் சொல்லவில்லை. காணொளியில், பேட்டியில் ஒரு அறிவாளி தான் சொல்கிறார்.

யார் நுணாவிலான் அந்த அறிவாளி. இந்தக்காணொளிய பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. இதை பிறகு ஆறுதலாக பார்த்துப்போட்டு கருத்து சொல்லிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன் மணமக்களுக்குப் பார்க்கிற சில முக்கியமான பொருத்தங்களில் 'யோனிப் பொருத்தமும்" ஒன்றுதான். (பழைய, புதிய எல்லாப் பஞ்சாங்கங்களிலும் இந்த விளக்கங்கள் உள்ளன.) என்ன இவர்கள் அதை பிராட்டிக்களாகவே பார்த்துக் கொள்கிறார்கள். :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன் மணமக்களுக்குப் பார்க்கிற சில முக்கியமான பொருத்தங்களில் 'யோனிப் பொருத்தமும்" ஒன்றுதான். (பழைய, புதிய எல்லாப் பஞ்சாங்கங்களிலும் இந்த விளக்கங்கள் உள்ளன.) என்ன இவர்கள் அதை பிராட்டிக்களாகவே பார்த்துக் கொள்கிறார்கள். :wub::lol:

:lol: அப்படி போடுங்கோ .......அறிவாளை சுவி :wub::lol::lol:

என்னமாதிரி காலுக்கு மேலை கால் போட்டு விளக்கம் கொடுக்கிறா பாருங்க.

இதே நாம செய்தால் என்ன தமிழ் கலாச்சாரம் ஆக்களுக்கு முன்னாலை காலுக்கு மேலை காலை போட்டு இருக்கிறாய் னு..................... ஐயோ

நல்லதொரு விடயத்தைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். பங்குபெற்ற நால்வரில் ஒருவரைத் தவிர, மற்ற மூவரும் டேற்றிங்கு ஆதரவாகக் கதைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். எந்தவொரு விடயத்திலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. அதனைச் சரியான முறையில் பயன்படுத்துவது அவரவர் குணத்தைப் பொறுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயத்தைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். பங்குபெற்ற நால்வரில் ஒருவரைத் தவிர, மற்ற மூவரும் டேற்றிங்கு ஆதரவாகக் கதைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். எந்தவொரு விடயத்திலும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. அதனைச் சரியான முறையில் பயன்படுத்துவது அவரவர் குணத்தைப் பொறுத்தது.

எனக்கு இறுதியாக பேசிய பெண்ணின் கருத்துக்கள் பலவற்றில் உடன்பாடில்லை.

அங்கிருக்கும் முதியவர்கள் டேற்றிங்கை ஆதரிக்கும் வேளையில் இவர் சொல்கிறார்.. முதியவர்களை அழைச்சு வந்திருக்கிறீங்க.. இன்னும் டேற்றிங் செய்யுற இளசுகளைக் கொண்டு வந்திருக்கலாமே என்று. நிச்சயமா எந்த இளசும்.. உண்மையை இந்த இடத்தில பேசாது. காரணம்.. அவைக்கே தெரியும் ஏனுன்னு..! :wub:

குறிப்புப் பார்க்கிறதையும் டேற்றிங்கையும் ஒப்பிடுறார் அவர். காகிதத்தையும்.. மனித மனத்தையும் நடத்தையையும் ஒன்றாப் பார்க்கிறார்..! இப்படியான சடப்பொருட்கள் உள்ள உலகில்...????! :lol:

டேற்றிங்கோ.. மற்றிங்கோ பிரச்சனை இல்லை. ஆனால் நடைமுறையில் அவை அவற்றுக்கான சரியான வழிமுறைகளில்.. அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் நோக்கியா கையாளப்படுகின்றன என்பதுதான் பிரச்சனையே..! டேற்றிங் என்ற போர்வையில்.. ஏமாற்றல்கள் தான் அதிகம் நிகழ்கின்றன.

குறித்த பெண்மணி சொல்கிறார்.. இப்ப இளசுகளுக்கு எதையும் தாங்கும் இதயமாம். நம்மலால முடியல்ல..!

இளசோ பெரிசோ.. மனசு என்பது எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பாதிப்பு என்பது அன்றும் இன்றும் ஒன்றுதான்..! இன்றையவர்கள் பாதிப்பில் இருந்து விரைந்து மீளத்தக்க வகையில் சமூகத்தை நிர்ணயிக்க விரும்பினமே தவிர.. பாதிப்பற்ற மனித உள்ளம் இது விடயமாக இருக்கப் போவதில்லை. எங்கையோ மனதின் ஓரத்தில் இவற்றின் பாதிப்புக்கள் இருக்கும்.

ஒருவனை காதலிச்சு விட்டிட்டுப் போறவளுக்கு.. அவள் எத்தனை போரோட பின்னர் வாழ்ந்தாலும்.. அந்தக் காதலிச்சவனின் நினைவுகள் இருக்கவே செய்யும். அதை அழிக்க முடியுமா..??! முடியும் என்றவள்.. மனிதனாக இருக்க சாத்தியமில்லை..! சடப்பொருளாக இருக்க வேண்டும் அல்லது மனப்பிரச்சனை உள்ளதுவா இருக்க வேண்டும். :lol:

இன்றைய உலகில் பெண் பிள்ளைகளின் நிலையை.. பாருங்கள்.. இவர்கள் தான் எதையும் தாங்கும் இதயங்கள் என்று கதை அளந்து தம்மையும் பெற்றோரையும் ஏமாற்றி வாழ முனைகிறார்கள்..

Third of girls 'have self-harmed'

Girls were more likely to admit to self-harming than boys

A third of UK girls aged 11 to 19 have tried to harm themselves, a survey for a mental healthcare provider suggests.

"Raising awareness to parents and those working in young people services will ensure parents have someone informed to turn to should their child be self harming." - இறுதியில் எல்லாத்தையும் கொண்டு வந்து பெற்றோரின் தலையில போடுங்க. பெற்றோர் சொல்லேக்க கேக்காதேங்கோ..! :)

http://news.bbc.co.uk/1/hi/health/7365192.stm

எதையும் தாங்கும் இதயங்கள் இதையும் தாங்க தங்களைத் தாங்களே வெட்டிக்கிறாங்களோ.. எங்க போய் முட்ட..! :)

ஜம்மு பேபி பஞ்:கண்ணா காலுக்கு மேல கால் போடுறது பெரிய விசயமில்ல.. கதைக்கேக்க கணக்குப் போட்டுக் கதைக்கிறதுதான் விசயமே..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Dating கட்டாயம் தேவை.

நெடுக்கு உங்களுக்கு ஒரு கேள்வி காத்திருக்கு.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry404404

  • கருத்துக்கள உறவுகள்

Dating கட்டாயம் தேவை.

டேற்றிங் கட்டாயம் தேவை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. டேற்றிங் அவசியமானவைக்கு தேவை என்று சொல்லலாம். அந்த அவசியமான வகைக்குள்ள.. நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கினம் என்பதை என்னால தெளிவாச் சொல்ல முடியும்..! :lol:

நன்றி கறுப்பி. பார்த்தேன். இப்படியான விடயங்களில் நெடுக்காலபோவன் என்ற தனிமனிதன் கருத்துச் சொல்வதிலும்.. கள நிர்வாகம் கள உறவுகள் அவை பற்றி தீர்மானிக்கிறது நல்லம்.. என்று விட்டிட்டன். சில விடயங்களுக்கு தெரிந்தே கருத்தெழுதுவதை தவிர்ப்பேன். ஏன்னா சில விசயங்கள் எம்மை சிக்கலுக்க இழுக்க என்றும் வருமெல்லோ. அவளைத் தொடுவானேன் கவலைப்படுவானேன்... என்ற நிலை எனக்கு..! :)

Edited by nedukkalapoovan

டேற்றிங் என்றால் நீங்கள் எதை நினைக்கிறிங்க நெடுக்ஸ்?

  • கருத்துக்கள உறவுகள்

டேற்றிங் என்றால் நீங்கள் எதை நினைக்கிறிங்க நெடுக்ஸ்?

ஒன் லைனிலோ.. இல்ல.. போனிலோ.. இல்ல நேரில கண்ட இடத்திலோ.. ஆள் புக் பண்ணிட்டு.. கொண்டோம் பக்கற்றோட போய் பார்க்கிறதைச் சொல்லுறன். இன்னும் விரிவாக் கேட்காதீங்க.. அழகில்ல..! :)

நாங்க நிஜத்தின் ஒரு பக்கத்தைப் பேசுறம்.. பெற்றோருக்கு நிஜத்தைச் சொல்லுறம்.. நாங்க பலபேரோட தொடர்பு வைக்கிறதை.. தாங்கிக்கும் சக்தி கொண்டவர்கள் என்று பிரகடனப்படுத்தவல்ல.. இதைச் சொல்லுறம்.

டேற்றிங் என்று போய் மனசு புரிஞ்சுக்க பழகிறவை.. எத்தனை.. பேர்..???! நேர உள்ள ஒருத்தனையே/ஒருத்தியையே மனசுக்கு ஏற்ப புரிஞ்சுக்க முடியாதவங்க.. எப்படி டேற்றிங்க என்று போய்.. நிகழ்தகவு அடிப்படையில் தேர்வு செய்யினம் என்றுதான் எனக்குப் புரியல்ல.

சாதாரணமா மனிதனுக்கு பல தேர்வு உள்ள இடத்தில் அர்ப்பணிப்புள்ள உறவுக்கு சந்தர்ப்பம் குறைவு. கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை எப்படி.. மனிதனை கட்டுப்பாடுள்ள நிலைக்குள் வைக்க உதவும்..??! எல்லா வழமாவும் பலத்த கேள்விகள் இது தொடர்பில் எழுகிறதே..??!

வெள்ளையளுக்கு இருக்கிற மன அழுத்தத்துக்கு அவைக்கு டேற்றிங் அவசியம். வெள்ளைகளை கொப்பி பண்ணினா தாங்களும் வெள்ளைகள் ஆயிடுவம் என்று நினைக்கிறவைக்கும்.. அது அவசியமா இருக்கும். எது எப்படி இருப்பினும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல உறவு நிலைகளைப் பேணும் வெள்ளைகள் உந்த டேற்றிங்கை தேர்வு செய்வதில்லை. இதை நான் நேரில் கேட்டு அறிந்திருக்கிறேன். நான் டேற்றிங்கை செய்யவில்லை. செய்ய முயற்சிக்கவும் இல்லை. :lol:

Edited by nedukkalapoovan

நன்றி நெடுக்ஸ்.

பொதுவாக ஒரு கேள்வியை கேட்டால், அதை தனிப்பட்ட தாக்குதலாக கருதும் காலகட்டத்தில்,

நான் கேட்டதின் அர்த்தன் சொல்லி பதில் சொன்னதற்கு.

Dating மனப்பொருத்தம் ஆ ???? அதுகும் பெரியவா இப்படி சொன்னா..... :rolleyes:

நான் நினைக்கவில்லை மனப்பொருத்தம் பார்ப்பதற்கு dating அவசியம் என்று. உண்மையில் dating செல்பவர்களில் கூடிய பகுதியினர் வேறு நோக்குடன் செல்கின்றார்கள் என்பதுதான் எனது கருத்து....

  • கருத்துக்கள உறவுகள்

டேற்றிங் கட்டாயம் தேவை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. டேற்றிங் அவசியமானவைக்கு தேவை என்று சொல்லலாம். அந்த அவசியமான வகைக்குள்ள.. நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கினம் என்பதை என்னால தெளிவாச் சொல்ல முடியும்..!

ஏமாற்றுக்காரரிடம் ஏமாறாமல் இருக்க இந்த டேற்றிங் துணை புரிந்தாலும், அதிலும் மூகமுடி போட்டு ஏமாற்றி விடுறாங்க இந்த ஆண்கள். பெண்களும்தான் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றுக்காரரிடம் ஏமாறாமல் இருக்க இந்த டேற்றிங் துணை புரிந்தாலும், அதிலும் மூகமுடி போட்டு ஏமாற்றி விடுறாங்க இந்த ஆண்கள். பெண்களும்தான் :rolleyes:

கறுப்பி உங்களின் வாதத்தில் உள்ள நியாயத்தை என்னால் கணக்கிட முடியவில்லை. ஏமாற்ற நினைக்கிறவன்/ள்.. டேற்றிங் என்று போய் ஏமாறாமல் இருக்கச் செயற்படுவான்/ள் என்று எப்படிக் கருதுறீங்க. டேற்றிங் என்பது ஜஸ்ட் ஒரு மீற்றிங் பொயிட்..! சில சந்திப்புக்களின் அடிப்படையில் எப்படி ஒருவன்/ள் இன் மனவோட்டத்தை இனங்காண்பீங்கள்.

நான் ஒரு இளைஞனைக் கண்டிருக்கிறேன்.. அவன் வாரா வாரம்.. டேற்றிங் என்று போவான். அந்தப் பெண்களுடன் கை போட்டிட்டுத் திரிவான். அப்புறம் பார்த்தால்.. இரண்டு வாரத்தின் பின் இன்னொரு டேற்றிங்குக்குப் போவான்..! இப்படி படிக்கும் காலம் பூரா செயற்பட்டவன்.. இன்று அவன் ஊருக்குப் போய் (ஐரோப்பாவில் பிறந்தவர்.. தென்னாசிய நாடு ஒன்றில் போய்) பெண்ணெடுத்து வந்திருக்கிறார்...!

இப்படித்தான் பலரும். டேற்றிங் என்று போய் 19 வயதுப் பெண் 60 பாட்டாவையும் மரி பண்ணி இருக்கினம். வெள்ளையள் மத்தியில். ஏன் எம்மவர் மத்தியில் கூட இருக்கினம்..! இதையெல்லாம் நீங்க செய்வீங்களா..??! உங்கட மெற்றாலிற்றி.. என்பது டேற்றிங் என்று போய்.. கிரடிட் ஸ்கோரும்.. காரும்.. ஆளும் பார்க்கிறதென்ற நிலையில் இருக்குது. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை அநேகருக்கு ஆளை முழுசாப் பார்க்கனும் என்ற நிலை இருக்குது..!

இது இரண்டும்.. உண்மையான அன்புக்கு எவ்வகையிலும் உதவாது. ஒரு ஒற்றுமையுள்ள ஒருமைத்தன்மையான குடும்ப அமைப்புக்கு புரிந்துணர்வுக்கு இவை எவ்வகையில் உதவும் என்றதும் புரியல்ல...??! பட் நீங்க சொல்லுறீங்க.. டேற்றிங் என்றால் ஏமாறாமல் இருக்கலாம் என்று. நான் நினைக்கல்ல... சில பெண்கள் நல்லவங்க போல நடிச்சிட்டு.. முன்னம் எத்தனை பேரை காதலிச்சிட்டு.. இல்ல.. ஏமாற்றிட்டு.. டேற்றிங் என்று புதுப்பெண் கோலத்தில வந்திறங்கினமோ யார் கண்டார்..! அப்படி இருக்க எப்படி.. நீங்க சொல்லுவீங்க.. டேற்றிங் என்று போறபோதே.. சில மன அளமானங்களை தூக்கி எறிஞ்சிடினம். அதாவது தனிநபர் ஒழுக்கம் என்பதை முதன்மைப் படுத்தக் கூடாத எவரும்.. டேற்றிங்குக்குப் போகலாம்..! அப்படி செய்ய யார் அதிகம் விரும்புவினம்.. தனிமனித ஒழுக்கம் என்பதை வேண்டாம் என்று கருதி.. வாழ்ந்திட்டவங்க தான். ஒருவன் தான் ஒழுங்கா இருக்கேக்க.. தனக்கு வாறதும் ஒழுங்கானதா இருக்கனும் என்றுதான் விரும்புவான். அப்படித்தான் பெண்களுக்கும். இதை இழந்தவங்க...????! என்ன செய்யுறது.. இப்படிப் போய்.. ஏதாச்சும் செய்து பிழைச்சுக்க வேண்டியதுதான். மாற்று வழிதான் என்ன..??! :rolleyes::unsure:

நால்வரில் 3 பேர் ஆதரித்துள்ளனர் என்பது தவறு. இருவர் தான் ஆதரவாகக் கதைக்கின்றனர். ஆனால் 3வதாக கருத்துச் சொன்னவர் அது மனம் சம்பந்தப்பட்டதாகவிருந்தால் தான் ஆதரிப்பதாகச் சொல்கின்றார். ஆகவே அவர் சொல்வது முழு ஆதரவல்ல.

அடுத்தாக அந்தப் பெண்,எவர் பற்றிய எந்தக் கவலையுமின்றி கால்மேல் கால் போட்டுக் கதையளந்தார். அவருக்கு முன்னால் அமர்ந்திருந்தவர் கண்டிப்பிற்கு பெயர் போன முன்னாள் மகாஜனாக்கல்லூரி அதிபர் திரு கனகசபாபதி அவர்கள். மேலும் அப்பெண் கூறிய ஒரு தகவல் பற்றி எவருமே கவனித்ததாகத் தெரியவில்லை. அதாவது பெற்றோர்களால் ஜாதகப் பொருத்தம் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும் ஜாதகம் பொருந்தினால் இருவரையும் பழகவிட்டு அவர்களுக்குள் ஒத்துப் போகின்றதாவென்று பார்ப்பதாகவும் ஒத்துப் போகாவிட்டால் வேறு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதாகவும். இப்படி இதுவரை நான் அறியவில்லை. நீங்கள் யாராவது இதுபற்றி அறிந்துள்ளீர்களா???

இறுதியாக Dating விடயத்திற்கு வருகின்றேன். உண்மையில் திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் பழகும் போது அவர்களது உண்மையான சுயரூபத்தை எவரும் வெளிக்காட்டுவதில்லை. இருவரும் நல்லவர்கள் போல் நடித்து ஒருவரையொருவர் ஏமாற்றுவதிலேயே முன் நிற்கின்றார்கள். இவ்விடயம் காதலிலும் பொருந்தும். அதனால்த் தான் என்னவோ பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களை விட காதல்த் திருமணங்களிலேயே விவாகரத்துக்கள் கூடுதலாகவுள்ளன. உண்மையில் தற்போது Dating பற்றிக் கதைப்பவர்கள் Dating என்ற போர்வையில் பலரோடும் கூத்தடிப்பதற்காகவே இதனைப் பாவிக்கின்றனர். மற்றும்படி மனப்பொருத்தம் பார்ப்பதென்பதெல்லாம் சும்மா கப்சாசாசாசாசா.................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.