Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றுபட்டிருந்தால் நேபாளம் போல ஈழத்திலும் வெற்றி கிடைத்திருக்கும்: கருணாநிதி

Featured Replies

ளன்க மப்

சென்னை: இலங்கையில் போராளி குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் ஒற்றுமையோடு இருந்திருந்தால் நேபாளத்தில் கிடைத்ததைப் போன்ற வெற்றி அவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கையில் அமைதி திரும்ப, அரசியல் ரீதியிலான சுமூக தீர்வு ஏற்பட சமாதான பேச்சுவார்த்தைக்கு, மத்திய அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசசபையில் இன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கை பிரச்சனை தொடர்பாக ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் சுதர்சனம் (காங்.), ஜி.கே.மணி (பாமக), கண்ணப்பன் (மதிமுக) ஆகியோர் பேசினர்கள்.

விவாதத்தில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதியும் தனது கருத்துக்களை தெரிவித்தார். பின்னர் அரசின் சார்பாக தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார்.

தீர்மானத்தை தாக்கல் செய்து கருணாநிதி பேசுகையில், இந்த அவையில் நிறைவேற்றப் படும் தீர்மானம் பரிவு உணர்வோடும், இரக்க சிந்தனையோடும், தமிழர் களுக்கு உதவிடும் பாச மனப்பான்மையோடும் கொண்டு வரவேண்டும். அதே அடிப்படையில் இதன் மீது விவாதம் நடைபெற்று இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

ஆனால் ஜி.கே.மணி என்ன நோக்கத்தில் இந்த தீர்மானத்தை கொண்டு வர நினைத்தாரோ அந்த நோக்கம் சிதையும் வகையில் சில வார்த்தை பிரயோகம் அமைந்து விட்டதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

இந்திய பேரரசின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நிர்வாகத்தை நாம் நடத்தி வருகிறோம். இந்த அவையில் எழுப்பப்படும் கருத்து, நிறைவேற்றப்படும் தீர்மானம் அந்த ஆணிவேரை அசைத்துவிடக்கூடாது. அதுதான் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகும்.

இங்கே பேசிய மதிமுக உறுப்பினர் கண்ணப்பன், சுதர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு மாறுபட்ட கருத்தை சொல்ல வந்த போது உணர்ச்சி வேகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்து விட்டார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு வேண்டுகிறேன்.

நேபாளம் போல வென்றிருக்கலாம்!

இலங்கை பிரச்சனை தொடங்கிய காலம் முதல் செல்வா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பல்வேறு அறவழிப்போராட்டங்கள், கிளர்ச்சிகள் நடத்தினார்கள். அது பயனளிக்காத நிலையில் இலங்கை ஆதிக்கத்தின் கொடுமையில் இருந்து விடுதலை பெற்றே ஆக வேண்டும் என்று சிலர் போராளிகளாக மாறினார்கள்.

அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக ஒற்றுமையுடன் இருந்து போராட்டம் நடத்தி இருந்தால் இப்போது நேபாளத்தில் கிடைத்திருப்பது போல ஒரு வெற்றியை அவர்கள் ஈட்டியிருக்க முடியும். ஆனால் அங்குள்ள போராளி குழுக்களுக்குள்ளே நடந்த போராட்டம் தான் இன்று இந்த அவையிலே அவர்களுக்காக பரிந்துரை செய்து பேசும் நிலைமை உருவாகி உள்ளது. அப்போதே கூட நான் சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

ஒரே குழுவாக இருந்து தமிழர்களுக்குரிய உரிமைகளை பெறும் எண்ணம் அவர்களிடம் இல்லாமல் ஒரு குழு மற்ற குழுவினரை மாய்க்க வேண்டும் என்று வெட்டிக் கொண்டும், சுடப்பட்டும் மாய்ந்தார்கள். அமிர்தலிங்கம் போன்ற தலைவர் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு என்று வந்து அவரையும், அவரது தோழர்களையும் பிணமாக சாய்த்தார்கள்.

தாங்கிப் பிடிக்கும் தாய் உள்ளம்:

அதனால் தான் உலகில் பல விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றும் கூட இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. நமக்குள்ளே ஒற்றுமையின்றி பகைவருக்கு இடம் கொடுத்துவிட்டதால் தான் சிங்கள ராணுவம் நம்மீது ஏறி மிதிக்கிறது. ஆனாலும் கூட நம் குழந்தை தவறி விழும் போது தாங்கி பிடிக்கும் தாய் உள்ளத்துடன் நாம் செயல்படுகிறோம்.

தொப்புள் கொடி உறவு என்று சொன்னால் மட்டும் போதாது. அந்த உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக இங்கே ஒரு தீர்மானம் வருவதை நானும் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் இந்திய அரசை குறை கூறி பயன் இல்லை. அவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே அவர்களை பழி சொல்லியும், குறை கூறியும் பயன் இல்லை.

அந்த குடும்பம் இன்னும் மனித நேயத்துடன் தான் இருக்கிறது என்பதற்கு வேலூர் சிறைச்சாலை சம்பவமும், சோனியா மன்னிப்பு அளித்ததும் உதாரணங்களாகும். அதன் அடிப்படையில் அவர்கள் தமிழர்களின் உயிருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். நீங்கள் இதை ஆதரித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல்வர்.

பின்னர் தீர்மானத்ைத அவர் வாசித்தார். அதில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு ஏற்படும் செய்ய வேண்டும்.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய சுதர்சனம், ஜி.கே.மணி, கண்ணப்பன் ஆகியோர் இத்தீர்மானத்தை தங்கள் கட்சி வரவேற்பதாக தெரிவித்தனர்.

http://isoorya.blogspot.com/

இலங்கையில் மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினர் இடையேயும் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு ஏற்படும் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குக் கதை சொல்லுகிறார் இந்த வயோதிபர் ? இயக்கங்களை கிள்ளுக்கீரையாகப் பாவித்தது மட்டுமல்லாமல், புலிகள் தம்மையும் மீறி வளர்ந்த போது மற்றய இயக்கங்களை புலிகளுக்கு எதிராக ஏவி விட்டு சகோதர பகைமையை தொடக்கி வைத்ததே இன்று இவர் சொல்லும் அரசாங்கமும் அதனை அன்று வழிநடத்திய அகங்காரம் பிடித்த காந்தி குடும்பமும்தான் என்பதை மறைக்கப் பார்க்கிறார்.

இன்றைக்கு துரோகிகளான வரதராஜப் பெருமாள், ஈ.என்.டி.எல்.எப் பரந்தன் ராஜன், நூற்றுக்கணக்கான கூலிப் படைகளை இந்தியா ஓரிசாவில் வைத்துக்கொண்டு அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி நரவேட்டை ஆடுவது யார் ? இந்தியா தானே ? இது எப்படித் தெரியாமல் போனது இவருக்கு ?

இவர்கள் எப்போது எங்களை ஒற்றுமையாக இருக்க விட்டார்கள் ? இந்தியப்படை ஈழத்தில் இருந்தபோது புலிகளிடம் ஆயுதங்களைக் களைந்து விட்டு, அவற்றை மற்ற இயக்கங்களிடம் கொடுத்தது யார் ? சீனாவா ? இந்தியா அல்லவா? இந்தியப்படைக் காலத்தில் துரோகிகளை கூட்டுச் சேர்த்துக்கொண்டு புலிகளையும் அப்பாவிகளையும் கொன்று குவித்தது யார் ? இவர் சொல்லும் அதே அரசாங்கமும்., காந்தி என்னும் அகம்பாவம் பிடித்த மனிதரும்தானே ? பிறகு எப்படி சகோதர சண்டையை விடுங்கள் என்று கூற முடியும் ?

உங்களது அரசாங்கமும், உளவுத்துறையும் திட்டமிட்டுத்தானெ எங்களுக்குள் பகையை வளர்த்தீர்கள் ? பிறகு எப்படி "நேபாளம் போல விடுதலை கிடைத்திருக்கும்" என்று ஒன்றும் தெரியாத பாப்பா போல கதை சொல்லுறியள் ?

வேணுமெண்டால் தமிழ்நாட்டுத் தமிழன் காதில சுத்திப் பாருங்கோ....இங்க ஒண்டும் அவியாது !!!!!

ஏன் இவர்கூட அமரர் எம்.ஜி.ஆர் புலிகளுக்கு பணம் கொடுத்தபோது போட்டிக்கு டெலோவுக்குப் பணம் கொடுக்க முன்வந்தவர்தானே ?

அமிர்தலிங்கம் ! அப்படியா ? அப்படியென்றால் யார் ? ஓ....அந்த கூட்டங்களில் தனித் தமிழ் ஈழம் தான் தீர்வு, வாருங்கள் போராடுவோம் என்று இளையவர்களை அறைகூவி அழைத்துவிட்டு. பின்னர் இந்திய அமைதிப்படை ஈழத்தில் எம்மைக் கொன்று குவித்த போது இந்தியாவில் இருந்து கொண்டு " வெற்றி மாலை " நிகழ்ச்சியில், " அமைத்திப்படைக்கு உதவுங்கள்., அவர்கள் உங்களைப் பாதுகாக்கத்தான் போராடுகிறார்கள் " என்று அழைப்பு விடுத்த மகானல்லவா ? அந்த நல்லவரைப் பற்றியா கதைக்கிறீர்கள்? இருந்திருந்தால் இன்று சங்கரிக்கு போட்டியாக இன்னொரு ஆள் கிடைத்திருக்கும் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்தும் சரிதான் ஆனால் நாம் அனைவரும் பிழை விட்டிருக்கிறோம். அதுதான் உண்மை. இன்றைய நிலையில் பழையவற்றை தூக்கி எறிந்துவிட்டு எமக்கு ஆதரவாக மற்றவர்களை அணைத்துக் கொள்வதுதான் எமது வெற்றிக்கு வழிகோலும். எனவே தமிழ்நாடு சட்டசபையில் எமக்காக தீர்மானம் நிறைவேற்றிக் குரல் கொடுத்துள்ள அனைத்துக் கட்சிகளையும் நன்றியுடன் வரவேற்பதுடன் இத்துடன் நின்றுவிடாமல் எமக்காக ஐ.நா.வரை குரல்கொடுக்க ஆதரவை வழங்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு சுலபமாக விட்டுவிட முடியாது புலிகேசி,

பிரித்தாளும் தந்திரத்தைப் பாவித்து விட்டு, இன்று எங்களையே பிழை சொல்லும் அந்தக் குள்ள நரித் தந்திரத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீங்களா ? இவரொன்றும் எமக்காகத் தீர்மானம் நிறைவேற்றவில்லை, எமது தோழமைக் கட்சிகள்தான் கொண்டு வருகின்றன. வைக்கோ, மருத்துவர் ராமதாசு, திருமா, சீமான்...என்று எங்களுக்கு ஒரு படையே இருக்கு. எக்காலத்திலும் அவர்கள் எங்களுக்ககக் குரல் கொடுப்பார்கள். அரசியல் நிலவரம் எப்படியிருக்கு, மக்கள் மனநிலை எப்படியிருக்கூ, காற்று எந்தப்பக்கம் அடிக்குது எண்டு மதில் மேல் பூனையா இருந்து கொண்டு நாக்கினால் மட்டும் தமிழ் கதைக்கும் ஒரு சாந்தர்ப்பவாதி தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, நாங்கள் விட்ட பிழை என்ன என்று சற்றுச் சொல்ல முடியுமா ?எது ரஜீவைக் கொன்றதைச் சொல்லுறீங்களா ? அது எப்படிப் பிழையாகும் ? அதைச் செய்தது யாரென்றுகூட இன்னும் தெரியாது !

சரி, ஒரு கதைக்குச் செய்தது யாரென்று தெரியும் என்று வைத்துக்கொள்வோம், பிறகு என்ன நடந்திருக்கும்? இந்தியப்படை மீண்டும் வந்திருக்குமா இல்லையா ? இனி வரும்போது தொட்ட குறை, விட்ட குறை எதுவுமில்லாமல் முழு யாழ்ப்பாணத்துச் சமூகத்தையும் அல்லவா அழித்திருக்கும். அது நடந்திருந்தால் பரவாயில்லை என்கிறீர்களா ? கொல்லப்பட்ட 7000 அப்பாவி மக்களின் உறவினர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள் ? மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் தாய்மாருக்கும் என்ன பதில் ?

ரஜீவ் சாகாது இருந்தால் இந்தியா வந்து உடனேயே ஈழம் எடுத்துத் தந்திருக்கும் என்கிறீர்களா ? 1987 இல் நடந்ததைப் பார்த்த பின்னுமா ஐய்யா இன்னும் உங்களுக்கு அந்த நம்பிக்கை ?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரகுநாதன் சொல்வதை ஆமோதிக்கின்றேன்.

இந்திய பேரரசின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு நிர்வாகத்தை நாம் நடத்தி வருகிறோம். இந்த அவையில் எழுப்பப்படும் கருத்து, நிறைவேற்றப்படும் தீர்மானம் அந்த ஆணிவேரை அசைத்துவிடக்கூடாது. அதுதான் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகும்.

கருணாநிதி சொல்வதில் ஏதோ சூட்சுமம் தெரிகிறது.

பிரிவினையை உருவாக்கி வளர்த்துவிட்டதே இந்தியா போன்ற ஆதிக்க சக்திகள் தான் என்ற உண்மை முதல்வருக்கு தெரியாத ஒன்றல்ல.

இதெல்லாம் ஏன் இப்போது சொல்லிவைத்தால் போல் நடக்கிறது?

ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா என்றுமே தனது சொந்த நிகழ்ச்சி நிரல்படி தான் நடந்து வந்திருக்கிறது.

அது தான் மீண்டும் இப்போது நடந்து கொண்டுவரும் சம்பவங்கள்.

ரகுநாதன் உணர்ச்சிவசப்படுவதால் ஒன்றும் பிரயோசனம் இல்லை...தமிழ் ஈழத்தை ஒரு போதும் இந்தியா தங்க தாம்பாளத்தில் வைத்து தர போவதில்லை.. ஆனால் அந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பு இன்று வரை நம்மவரை பாதிக்கின்றதா இல்லையா..?

இந்திய படையெடுப்பால் சில பல அரசியல் மாற்றங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் ஏற்பட்டன...மீண்டும் இந்தியப்படியெடுப்புக்கு இந்தியா வந்திருக்கும் என்பது ஒரு நகைப்புக்குரிய சிந்தனை.. இந்தியா மீண்டும் படையெடுக்கவேண்டும் என்றால் அச்சம்பவத்துக்கு பின் தாராளமா எடுத்திருக்கலாமே? ஏன் எடுக்கவில்லை..?

நான் ராஜிவ் காந்தியையோ அல்லது இந்திய படையெடுப்பையோ நியாயப்படுத்தவில்லை...அதே நேரம் தவறுகள் இரு பக்கமும் உள்ளன...அவற்றை சீர் படுத்துவது நம் மக்களின் விடுதலையை விரைவு படுத்தும்..

Edited by லீ

தவறு தவறு எண்டு சொல்லாதேங்கோ

நடந்து முடிஞ்சதெல்லாமே தானாவும் நடக்கேல்ல... எல்லாமே நல்லா திட்டமிட்டு தான் நடந்திருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய புலி உறவை சிதைக்கும் படி கருத்து சொல்லும் எவரும் ஈழ நலனில் அக்கறை கொண்டவராக இருக்க முடியாது.

இந்தியாவும் புலிகளும் நெருன்கிவிடுவார்களோ என்றபயம் முதலில்லெதிரிக்கு எடுத்தது இப்போது அது சில முகமூடி மனிதருக்கும் தொத்தி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய புலி உறவை சிதைக்கும் படி கருத்து சொல்லும் எவரும் ஈழ நலனில் அக்கறை கொண்டவராக இருக்க முடியாது.

இந்தியாவும் புலிகளும் நெருன்கிவிடுவார்களோ என்றபயம் முதலில்லெதிரிக்கு எடுத்தது இப்போது அது சில முகமூடி மனிதருக்கும் தொத்தி விட்டது.

இது வெறும் கனவுதான்

ஏனெனில் இது நடக்கவேண்டுமாயின் புலிகள் தமிழீழக்கேபரிக்கையை கைவிடவேண்டும்

அடுத்தபடி இந்தியாவின் சுயாட்சியில் இருக்கும் உள்ளூராட்சி அதிகாரங்களைக்கூட பறிக்க முயற்சி நடக்கிறது அங்கே......

எனவே எதை ஆதாரமாகக்கொண்டு இந்த எதிர்பார்ப்பு என விழங்கவில்லை.......

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களில் உண்மையிருப்பினும், அதை விவாதிப்பதுக்குரிய நேரம் இதுவல்ல.

அவர்களது அறிக்கைகளும், தீர்மானங்களும் சுயநலமாக இருந்தாலும் அதில் எங்களுக்குத்தான் அதிகம் நன்மை உள்ளது.

தயவு செய்து கனிந்துவரும் சூழ்நிலையை உங்கள் அறிவீனமான கருத்துக்களால் விபரீதமாக்கி விடாதீர்கள்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்களில் உண்மையிருப்பினும், அதை விவாதிப்பதுக்குரிய நேரம் இதுவல்ல.

அவர்களது அறிக்கைகளும், தீர்மானங்களும் சுயநலமாக இருந்தாலும் அதில் எங்களுக்குத்தான் அதிகம் நன்மை உள்ளது.

தயவு செய்து கனிந்துவரும் சூழ்நிலையை உங்கள் அறிவீனமான கருத்துக்களால் விபரீதமாக்கி விடாதீர்கள்.

''நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால்"

  • கருத்துக்கள உறவுகள்

''நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால்"

உங்கள் கருத்துக்கும் எழுத்துக்கும் கனவுக்கும் எதிர்பார்ப்புக்கும்........

சம்பந்தமே இல்லையே.....

இதில் எம்மை முட்டாள் என்கிறீர்........

உங்கள் கருத்துக்களில் உண்மையிருப்பினும், அதை விவாதிப்பதுக்குரிய நேரம் இதுவல்ல.

அவர்களது அறிக்கைகளும், தீர்மானங்களும் சுயநலமாக இருந்தாலும் அதில் எங்களுக்குத்தான் அதிகம் நன்மை உள்ளது.

தயவு செய்து கனிந்துவரும் சூழ்நிலையை உங்கள் அறிவீனமான கருத்துக்களால் விபரீதமாக்கி விடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரம் குகதாசன் அவர்களே!

உங்கள் பதில் கருத்துக்கும், எனது கருத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இருப்பதாக தெரியவில்லையே?

நான் எனது கருத்திலும், கொள்கையிலும் தெளிவாகத்தான் இருக்கின்றேன்.

நீங்கள் ஏதோ தப்பாக புரிந்துள்ளீர்கள்.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.