Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவர்தான் பெரியார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் தமிழ் தேசியவாதியா அல்லது திராவிடத்தை காட்டி தமிழரை ஏய்த்த ஒரு தெலுங்கனா என்று எனக்குத்தெரியாது. ஆனால் இந்த வகையில் பார்த்தால் எமது அன்புக்குரிய வைகோவும் விஜயகாந்தும்கூட தெலுங்கர்களே என்பது மட்டும் புரிகிறது.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது சு. சுவாமி, ஜெ, ராஜீவ் காந்தி, கே என் தீக்சித், எம் ஆர் நாராயண் சிவ சங்கர் மேனன், இந்து ராம், வாசந்தி, சோ என ஈழப் போராட்டத்தை கருவறுத்தே தீருவது என கங்கணம் கட்டியுள்ள அனை வரும் பிராமணர்களாயிருக்க,

வைகோ, திருமா, சுபவீ, நெடுமாறன்(இவர் தி கவில்தான் அரசியலை தொடங்கினார்), வீரமணி, சீமான், சத்யராஜ், ராமதாசு, எம் ஜி ஆர், கெளத்தூர் மணி, தியாகு என பெரியாரின் வழி வந்த அனைவரும் நம் பக்கம் நிக்கிறார்கள்!

இது என்ன தற்செயலாக நடந்ததா? அல்லது வரலாற்று எதிரிகளின் வகையீடா?

நீங்களே முடிவு செய்யுங்கள்

  • Replies 110
  • Views 15.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தருணத்தில் ஈழப்போராட்டத்தில் இணைந்து ஆகுதியாகிய கணிசமானளவு பிராமண சமூக சகோதரர்களையும் நெஞ்சில் நிறுத்துவோம்.

ஆண்டவன் கிருபையால் தமிழகம் போலன்றி ஈழத்தில் பிராமணர் பிராமணர் அல்லாதார் எனும் பகுப்பு பெரிதாக இல்லை என்பதை இட்டு மனம் தேறுவோம்.

பெரியார் தமிழ் தேசியவாதியா அல்லது திராவிடத்தை காட்டி தமிழரை ஏய்த்த ஒரு தெலுங்கனா என்று எனக்குத்தெரியாது. ஆனால் இந்த வகையில் பார்த்தால் எமது அன்புக்குரிய வைகோவும் விஜயகாந்தும்கூட தெலுங்கர்களே என்பது மட்டும் புரிகிறது.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது சு. சுவாமி, ஜெ, ராஜீவ் காந்தி, கே என் தீக்சித், எம் ஆர் நாராயண் சிவ சங்கர் மேனன், இந்து ராம், வாசந்தி, சோ என ஈழப் போராட்டத்தை கருவறுத்தே தீருவது என கங்கணம் கட்டியுள்ள அனை வரும் பிராமணர்களாயிருக்க,

வைகோ, திருமா, சுபவீ, நெடுமாறன்(இவர் தி கவில்தான் அரசியலை தொடங்கினார்), வீரமணி, சீமான், சத்யராஜ், ராமதாசு, எம் ஜி ஆர், கெளத்தூர் மணி, தியாகு என பெரியாரின் வழி வந்த அனைவரும் நம் பக்கம் நிக்கிறார்கள்!

இது என்ன தற்செயலாக நடந்ததா? அல்லது வரலாற்று எதிரிகளின் வகையீடா?

நீங்களே முடிவு செய்யுங்கள்

ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் யாரும் என் நினைவுக்கும் வரவில்லை :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

ஈ வெ ராமசாமியின் உண்மைத் தோற்றம்....

"ஈவேராவின் சுய உருவமும், அவரது பார்ப்பன சாதிக்காழ்ப்பின் அடிமூலமும் வெளிப்படையாகியிருப்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியம். 'ராஜாஜியும் பார்ப்பனர்தானே, நல்லவர் இல்லையா' என்ற கேள்விக்கு பதில் சொல்கையில், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அவர் உண்மையான தொண்டர் என்பதாகவும் "ஆனால் , என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது" என்றும் மனம் திறக்கிறார் ஈ.வே .ராமசாமி நாயக்கர் . அதாவது, ஆதிக்க சாதிகளில் ஒன்றாக இருந்த தனது சாதியின் நலனை , தன் சாதியை விட மேலானதாகக்கருதப்படும் பார்ப்பன சாதிக்காரரின் கையில் கொடுக்க மனம் வராது என்கிறார் ராமசாமி நாயக்கர். 'தன் சாதியினரை விட மேல் தட்டில் உள்ள பார்ப்பனரை கீழிறக்க வேண்டும் ' என்ற சாக்கினில் வடிகட்டிய சாதிப்பாசம்தான் பார்ப்பன வெறுப்பாக அவரால் இங்கே உமிழப்படுகிறது. உண்மையில் இதில் வெளியாகியிருப்பது ஈ.வே .ராமசாமி நாயக்கரின் பார்ப்பன வெறுப்பின் அடிமூலம்தானே தவிர , சாதியற்ற சமூகம் என்ற சமரச எண்ணமோ, ஹரிஜன மேம்பாடு என்ற சீர்திருத்தச் சிந்தனையோ அல்ல. படிநிலையாய் சாதியமைப்பைக்கண்டு அதில் மேலே உள்ளவனைக் கீழே தள்ளும் நோக்கம் மட்டுமே இதில் வெளியாகிறதேயன்றி, கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற செயல் திட்டமோ அனைவரும் சம நலன் பெற வேண்டும் என்ற சமரச எண்ணமோ வெளிப்படவில்லை. பார்ப்பனர் மேல் இருந்த துவேஷம் மட்டுமே பார்ப்பனரல்லாத அனைவர்மீதும் பரிவை உருவாக்கி விடாதுதான். இதனால்தான் ஆதிக்க சாதிகளால் ஹரிஜனங்கள் கொளுத்தப்பட்டபோது கூட அதனை எதிர்த்துப் பேசாமல் ஈ .வே.ரா .வால் இடிபோன்ற மவுனம் காக்க முடிந்தது. எது தனக்கு அதிகம் பிடித்தமானது என்பதை விட, யார் மேல் தனக்கு துவேஷம் அதிகம் என்பதை வைத்தே தனது கொள்கைகளை வகுத்துக்கொண்டவர் ராமசாமி நாயக்கர் . "இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ் மேலே அன்பா மாறித்து. அதுதான் உண்மை" * என்று சொல்கையில் தனது இந்த வெறுப்பியல் மனப்பான்மையைத்தான் ஈவேரா வெளிச்சம் போடுகிறார். யாருக்கு உதவ வேண்டும் என்பதை அடிப்படையாய்க்கொண்டு சமூக அரசியல் நடத்தியவர் காந்தியடிகள், தாழ்த்தப்பட்ட சாதியை மேம்படுத்த அவர்களினூடே அறிவியக்கம் நடத்தி செயல்பட்டவர் நாராயண குரு , ஆன்மீகத்தின் துணையுடன் சாதிக்கொடுமைகளுக்கெதிராக சண்டமாருதமாய்க் குரலெழுப்பிய்வர் துறவி விவேகானந்தர். யாரை அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே அடிப்படையாக்கி அரசியல் கூட்டம் வளர்த்த தமிழக பாசிஸ்டு ஈ. வே.ராமசாமி. "

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மீ-தமிழன்

***

மேலும் சாதி பற்றிப் பாடம் எடுக்கின்றீர்கள். அச் சாதியமே வேண்டாம். எதிர்காலத்தில் அது எம்மைப் பலவீனப்படுத்தி விடும் என்பதையே நாங்கள் வலியுறுத்தும்போது நீங்கள் கதைப்பது எனக்குப் புரியவே இல்லை.

தமிழகத்தில் தான் அதிகபட்ச சாதிப் பிரிவுகளை வலுப்படுத்தும் சங்கங்கள் இருக்கின்றன என்பதைத் தாங்கள் மறுப்பீர்களா?

ராமசாமி வந்து ஒன்று தமிழனுக்குக் கிழிக்கவில்லை. மற்றய மாநிலங்களிலும் இவ்வாறன வேலைவாய்ப்புக்கள், தொழிகளில் மற்றவர்கள் வளர்ந்திருக்கின்றார்கள். அதற்குக் காரணம், தொழில் அதிகரிப்பும், மனிதம் பற்றிய சிந்தனை உலகப்போருக்குப் பின்னர் வெளிப்பட்டமையுமாகும்.

அதனால் தான் கறுப்பினத்தவரை அடிமையாக வைத்திருந்த மேற்குலமும் அதில் இருந்து விடுபட்டது. சாதியங்களைத் தாண்டி அனைத்து இந்தியாவில் எழுச்சியும் ஏற்பட்டது. இதற்கு எல்லோருக்கும் கிடைத்த கல்வியறிவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மற்றும்படி ஒன்றும் கிழிக்கவில்லை. சும்மா புகழ்பாட வேண்டும் என்றால் பாடுங்கள். ஆனால் இப்படிப் புழுகுமு;போது மற்றவர்கள் எம்மை விட வளர்ந்து;ளளார்களா என்பதையும் பாருங்கள்.

ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் யாரும் என் நினைவுக்கும் வரவில்லை :mellow:

ஈழப்போராட்டத்தை எதிர்ப்பவர்களில் ராமசாமியின் பேரனாகிய ஈவே.இளங்கோவன் இருக்கின்றார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதற்காக ராசாமியின் நாயக்கர் சமுதாயமே ........

Edited by வலைஞன்
மூலக் கருத்து நீக்கப்பட்டுள்ளதால், அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

ஈ வெ ராமசாமியின் உண்மைத் தோற்றம்....

"ஈவேராவின் சுய உருவமும், அவரது பார்ப்பன சாதிக்காழ்ப்பின் அடிமூலமும் வெளிப்படையாகியிருப்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியம். 'ராஜாஜியும் பார்ப்பனர்தானே, நல்லவர் இல்லையா' என்ற கேள்விக்கு பதில் சொல்கையில், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அவர் உண்மையான தொண்டர் என்பதாகவும் "ஆனால் , என் வகுப்பு நலத்தை அவரிடம் ஒப்படைத்துவிடச் சுலபத்தில் எனக்கு மனம் வராது" என்றும் மனம் திறக்கிறார் ஈ.வே .ராமசாமி நாயக்கர் . அதாவது, ஆதிக்க சாதிகளில் ஒன்றாக இருந்த தனது சாதியின் நலனை , தன் சாதியை விட மேலானதாகக்கருதப்படும் பார்ப்பன சாதிக்காரரின் கையில் கொடுக்க மனம் வராது என்கிறார் ராமசாமி நாயக்கர். 'தன் சாதியினரை விட மேல் தட்டில் உள்ள பார்ப்பனரை கீழிறக்க வேண்டும் ' என்ற சாக்கினில் வடிகட்டிய சாதிப்பாசம்தான் பார்ப்பன வெறுப்பாக அவரால் இங்கே உமிழப்படுகிறது. உண்மையில் இதில் வெளியாகியிருப்பது ஈ.வே .ராமசாமி நாயக்கரின் பார்ப்பன வெறுப்பின் அடிமூலம்தானே தவிர , சாதியற்ற சமூகம் என்ற சமரச எண்ணமோ, ஹரிஜன மேம்பாடு என்ற சீர்திருத்தச் சிந்தனையோ அல்ல. படிநிலையாய் சாதியமைப்பைக்கண்டு அதில் மேலே உள்ளவனைக் கீழே தள்ளும் நோக்கம் மட்டுமே இதில் வெளியாகிறதேயன்றி, கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற செயல் திட்டமோ அனைவரும் சம நலன் பெற வேண்டும் என்ற சமரச எண்ணமோ வெளிப்படவில்லை. பார்ப்பனர் மேல் இருந்த துவேஷம் மட்டுமே பார்ப்பனரல்லாத அனைவர்மீதும் பரிவை உருவாக்கி விடாதுதான். இதனால்தான் ஆதிக்க சாதிகளால் ஹரிஜனங்கள் கொளுத்தப்பட்டபோது கூட அதனை எதிர்த்துப் பேசாமல் ஈ .வே.ரா .வால் இடிபோன்ற மவுனம் காக்க முடிந்தது. எது தனக்கு அதிகம் பிடித்தமானது என்பதை விட, யார் மேல் தனக்கு துவேஷம் அதிகம் என்பதை வைத்தே தனது கொள்கைகளை வகுத்துக்கொண்டவர் ராமசாமி நாயக்கர் . "இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ் மேலே அன்பா மாறித்து. அதுதான் உண்மை" * என்று சொல்கையில் தனது இந்த வெறுப்பியல் மனப்பான்மையைத்தான் ஈவேரா வெளிச்சம் போடுகிறார். யாருக்கு உதவ வேண்டும் என்பதை அடிப்படையாய்க்கொண்டு சமூக அரசியல் நடத்தியவர் காந்தியடிகள், தாழ்த்தப்பட்ட சாதியை மேம்படுத்த அவர்களினூடே அறிவியக்கம் நடத்தி செயல்பட்டவர் நாராயண குரு , ஆன்மீகத்தின் துணையுடன் சாதிக்கொடுமைகளுக்கெதிராக சண்டமாருதமாய்க் குரலெழுப்பிய்வர் துறவி விவேகானந்தர். யாரை அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே அடிப்படையாக்கி அரசியல் கூட்டம் வளர்த்த தமிழக பாசிஸ்டு ஈ. வே.ராமசாமி. "

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

இணையத்தில் பார்ப்பனர்களால் இதுபோல டன் கணக்கில் குப்பை கொட்டப்பட்டிருக்கிறது. அந்த குப்பைகளை எல்லாம் இங்கே வந்து கொட்டுவதை விட்டு விட்டும் உங்களுக்கென்றிருக்கும் கருத்தை எடுத்து சொல்லுங்கள்! :mellow:

ஈழப்போராட்டத்தை எதிர்ப்பவர்களில் ராமசாமியின் பேரனாகிய ஈவே.இளங்கோவன் இருக்கின்றார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதற்காக ராசாமியின் நாயக்கர் சமுதாயமே ........

ஈழப்போராட்டத்தை இளங்கோவன் எதிர்க்கிறாரா என்று எனக்குத் தெரியாது. இதுவரை போராட்டம் தவறு என்று அவர் எப்போதும் சொன்னதில்லை. மணிசங்கர் அய்யர் மாதிரியும், ஹிந்து என்.ராம் மாதிரியும் சந்திரிகாவிடம் அவர் கொஞ்சி குலாவியதுமில்லை.

நிற்க... எனக்கு இளங்கோவனுக்கு கொட்டை தாங்கி ஏதும் ஆகப்போவதில்லை.. இளங்கோவனை உங்களைப் போலவே எனக்கும் பிடிக்காது... அவரை நீங்கள் எதுவேண்டுமானாலும் திட்டிக் கொள்ளலாம்.

நான் கேட்டபடி ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் பார்ப்பனர் யாரையும் நீங்கள் இன்னமும் குறிப்பிடவில்லை. இந்தியாவில் வாழும் மூன்று கோடி பார்ப்பனர்களில் ஒருவரின் பெயரை கூட உங்களால் சொல்ல முடியவில்லையே? என்ன பரிதாபம்?

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வன் அண்ணா வீரச்சாவு அடைந்தபோது இனிப்பு வழங்கிக் கொண்டாடிய காங்கிரசில் முக்கிய பொறுப்பில் வகிக்கின்ற இவர் எதிர்க்கவில்லை என்று சொல்லவருகின்றீர்களா? அல்லது தெரியாது என்று சொல்வதன் மூலம் தப்பிக்க முயற்சிக்கின்றீர்களா?

உங்களுக்குப் பிடிக்காது என்பதற்காக நாயக்கர் தமிழீழப் போராட்டத்தை ஆதரிப்பார்கள் என அர்த்தமா? நாயக்கர் யாராவது ஈழப்போராட்டத்தை ஆதரிக்கின்றார்களா? என்று கேட்டால் உங்களால் பதில் தரமுடியுமா? அவ்வாறு தான் எனக்கும் நான் யாரையும் சாதி நோக்கிப் பார்ப்பதில்லை என்பதால் ஆதரிக்கின்ற எல்லோரும் என்ன சாதி என்றே எனக்குத் தெரியாது. ராசாமியின் சாதி கூட நான் பிற்பாடு அறிந்து கொண்டது தான். பால்தாக்ரே, இல.கணேசன் போன்ற ஆதுரிக்கின்றவர்கள் மட்டும் தான் பிராமணர்கள் என்பது எனக்குத் தெரியும்.

மேலும் கருணாநிதி குறித்த ஈழம் தொடர்பான சம்பவத்தை ஆதரிக்கின்றாரோ, இல்லையோ என்று பார்த்தபின் வலைப்பூக்களில கருத்தெழும் ; உங்களையும் பற்றி நன்றாகத் தெரியும் நண்பரே.

ராம், சோ போன்ற ஓரிரண்டு பேருக்காக, ஒட்டுமொத்த சமுதாயத்தேயே குற்றம் சாட்டலாம் என்றால், இளங்கோவனுக்காக அவரது குடும்பதையும், சாதியையும் குற்றம் சாட்டுவதில் தவறு ஒன்றுமில்லை.

இந்து ராம் என்பவர் தன்மை மாக்கிசவாதியாக்க காட்டிக் கொள்பவர். மாக்கிசவரிதகளோடு கொஞ்சிக் குலாவுவது தானே திராவிடக்காரர்களுக்குப் பிடிக்கும். அத்தோடு நல்லக்கண்ணு ஜேவிபி என்ற சிங்களவெறியர்களின் மேடைகளில் தோன்றுபவர்.

இளங்கோவன் யாருக்கும் இனிப்பு கொடுத்து தமிழ்ச்செல்வனின் மரணத்தை கொண்டாடவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

இன்னமும் நீங்கள் ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் ஒரே ஒரு பார்ப்பனனின் பெயரை சொல்லமுடியவில்லை. மூன்று கோடி பேரில் ஒருவன் பெயர் கூட உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? அய்யகோ என்ன கொடுமை இது.... :D

தூயவன்!

என்னால் ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் ஓரிரு பார்ப்பனரை காட்ட முடியும். பிரச்சினை என்னவென்றால் அவர்களை பார்ப்பனர் என்று சொன்னாலே என்னை செருப்பால் அடிப்பார்கள். அந்த அளவுக்கு பார்ப்பன இனத்தின் யோக்கியதை இங்கே இருக்கிறது. :mellow:

Edited by இணையவன்
*** உறுப்பினர் தொடர்பான கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

*** லக்கிலுக்... நீங்கள் கருத்தைப் படிக்கவே இல்லை போலிருக்கின்றது. அந்தப் பிராமணியைப பாராட்டுகின்றேன். சாதி அடையாளம் கொண்டு தாங்கள் அழைக்கப்படுவதை வெறுக்கின்ற உண்மையான மனிதர்கள்.

பிரிந்துபோயிருந்த பிராமணர்களைச் சாதி மூலம் பார்க்கப் போய், ஒற்றுமைப்படுத்திய பெருமை ராசாமியைத் தான் சாரும். சும்மா இருந்ததை எல்லாம் கிளப்பி விட்டான்டா என சந்திரமுகி வடிவேலு பாணியில் அழத்தான் முடியும்..

Edited by இணையவன்
உறுப்பினர் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

http://ta.wikipedia.org/wiki

பிராமணியம் அல்லது பார்ப்பனியம் என்பது ஒருவகைப்பட்ட நடைமுறையைக் குறிப்பதேயன்றி பிராமணர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குறிப்பிட்ட குழுக்களைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களின் பண்பாட்டையோ, கலாசாரத்தையோ, உலகப் பார்வையையோ மட்டுமே குறிப்பன அன்று.

ஆரிய வேதங்களின் அடிப்படையிலமைந்த 'நால்வருணசாதி' அமைப்பின் கண்ணோட்டத்தைக் கொண்டு உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் விளக்கம் கூறி நியாயம் கற்பிக்க முயலும் அணுகுமுறையையே பிராமணியம் அல்லது பார்ப்பனியம் எனப் பொதுவாக அழைக்கலாம்.

பார்ப்பனியக் கருத்துக்களை நியாயப்படுத்தும் ஈழத்தவர் பொதுவாகப் பிராமண குலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்..

  • கருத்துக்கள உறவுகள்

***

நான் கேட்ட ஆதரிக்கின்ற நாயக்கர் பெயரைத் தாருங்கள் என்பதற்கு என்னும் பதில் வரவில்லையே?? நானாவது பரவாயில்லை. தமிழ்நாட்டைப் ப்றி அறியாதவன். 6 கோடித் தமிழரினுள் வசிக்கின்ற உங்களுக்கு ஒ நாயக்கரைக் காட்ட இயலாமல் போய்விட்டதைப் பார்க்கப் பாவமாக இருக்கின்றது லக்கி.

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

வை.கோபால்சாமி நாயக்கர் ஈழத்தமிழரை ஆதரிக்கிறார். உதாரணம் போதுமா தூயவன்?

பார்ப்பனர் நேம் ப்ளீஸ்.....

Edited by இணையவன்
உறுப்பினர் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

பிராமணியம் அல்லது பார்ப்பனியம் என்பது ஒருவகைப்பட்ட நடைமுறையைக் குறிப்பதேயன்றி பிராமணர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குறிப்பிட்ட குழுக்களைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களின் பண்பாட்டையோ, கலாசாரத்தையோ, உலகப் பார்வையையோ மட்டுமே குறிப்பன அன்று.

ஆரிய வேதங்களின் அடிப்படையிலமைந்த 'நால்வருணசாதி' அமைப்பின் கண்ணோட்டத்தைக் கொண்டு உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் விளக்கம் கூறி நியாயம் கற்பிக்க முயலும் அணுகுமுறையையே பிராமணியம் அல்லது பார்ப்பனியம் எனப் பொதுவாக அழைக்கலாம்.

தங்களுக்கு எதிராக வருகின்ற கருத்துக்களை பார்ப்பானியின் கருத்து என்று ஒதுக்கித் தள்ள முனைகின்ற மூளைச்சலவை செய்யப்பட்ட திராவிடக்கும்பல்கள், பிராமணர்கள் இல்லாதவர்களிடம் இருந்து அந்தக் கருத்து வருகின்றபோது அதற்கு கண்டுபிடித்த ஆயுதம் தான் இது.

நால் வருணம் என்று 4 வகைச் சாதிகள் தான் உண்டெனில் அவற்றுக்குள் இருக்கின்ற ஆயிரம் தொழில்களுக்கும் சாதி வகைப்படுத்தி ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டு வந்தது யார்?? சொல்லப் போனால் அத்குக் காரணம் நாட்டை ஆண்ட அரசர்கள் தாம்.

:mellow::D:D

சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகுது.....

இன்றும் கூட மனுதர்மத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது அரசர்கள் தானா? :lol:

அதிருக்கட்டும் தூயவன்... ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் ஒரு நாயக்கரின் பேரை சொல்லிவிட்டேன். ஒரு பார்ப்பனரின் பெயரையாவது சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். வேலைக்கு ஆகலையே?

நீங்கள் சொல்லும் பார்ப்பனர் தமிழ்நாட்டு பார்ப்பனராக கூட இருக்கவேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலத்து பார்ப்பனராக இருந்தால் கூட பரவாயில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

*** ஆனால் அவர்கள் தங்களைத் தனிக்குழுமம் எனச் சிந்திக்கவெளிக்கிட்டது இந்தச் சாதியம் பார்க்கப் போன விடயத்தால் தான்.

ஈழத்தில் எப்போது சிங்களவன் தமிழனை இனவாத அடிப்படையில் நோக்கி, தமிழினம் பற்றிக் கவலைப்படாமல் இருந்த தமிழன் ஒற்றுமைப்பட வைத்ததோ, அது போலத் தான் பிராமணிகள் குறித்தான திராவிடப்பார்வை என்பது தான் அவர்களை ஒற்றுமைப்பட வைத்தது.

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்தின் பண்பான சாதி அடக்குமுறை நிறைந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான் ஈழத்தமிழர்கள்.. போராட்டம் வலுப்பெற்ற கடந்த 30 வருடங்கள் பார்ப்பனியத்தின் தாக்கத்தை ஈழத்தில் குறைத்திருக்கலாம். ஆனால் முற்றுமுழுதாக அழிக்கப்படவில்லை. புலம்பெயர்ந்த சூழலில் வசிக்கும் சிலர் தமது சுய அடையாளம் என்று பார்ப்பனியத்தின் எச்சங்களைக் காவித்திரிவதும், அதனைக் காப்பாற்ற முனைவதும் நடைமுறையில் உள்ளது.. இத்தகைய போக்குகளை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், உள்ள பார்ப்பனியத்துடன் நேரடியாக ஒப்பிடமுடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவும் தன் சாதி குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாதவரோ? அல்லது தன் சாதியைச் சொன்னால் காறித்துப்புவரோ... அதிருக்கட்டும். பிராமணியின் பெயர் கேட்டீர்கள். இது வரை காலமும் சாதி கொண்டு யாரையும் பார்க்காததால் அது பற்றிச் சிந்திக்கவில்லை. ஆகவே ஆராய்ந்து விட்டுத் தருகின்றேன்.

தவிரவும் உடனே சொல்வதற்கு சாதி பற்றிய பொது அறிவுப்போட்டியா வைக்கின்றீர்கள்? அடுத்தவனின் சாதி பற்றி அறிவதில் எனக்கு உடன்பாடுமில்லை. விருப்புமில்லை.

***

தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்தின் பண்பான சாதி அடக்குமுறை நிறைந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான் ஈழத்தமிழர்கள்.. போராட்டம் வலுப்பெற்ற கடந்த 30 வருடங்கள் பார்ப்பனியத்தின் தாக்கத்தை ஈழத்தில் குறைத்திருக்கலாம். ஆனால் முற்றுமுழுதாக அழிக்கப்படவில்லை. புலம்பெயர்ந்த சூழலில் வசிக்கும் சிலர் தமது சுய அடையாளம் என்று பார்ப்பனியத்தின் எச்சங்களைக் காவித்திரிவதும், அதனைக் காப்பாற்ற முனைவதும் நடைமுறையில் உள்ளது.. இத்தகைய போக்குகளை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், உள்ள பார்ப்பனியத்துடன் நேரடியாக ஒப்பிடமுடியாது..

ஈழத்துப் பார்ப்பனியத்தை நான் நேரில் கண்டதில்லை. ஆனால் தமிழ்நாட்டு பார்ப்பணியம் மனிதநேயமற்றது.. தமிழக பார்ப்பனர்கள் சுயநலத்தின் மொத்த உருவம்!

Edited by இணையவன்
உறுப்பினர் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் யாரும் என் நினைவுக்கும் வரவில்லை smile.gif

பார்ப்பனர் நேம் ப்ளீஸ்.....

1. பால் தக்கரே

2. முன்னாள் வெளியுறவு செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் போன்றவர்களை சொல்லலாம்!

சாதி ஏற்றத்தாழவுகளையும், பால்தக்கரேயின் பல்வேறு கொள்கைகளையும் நான் ஆதரிப்பவனல்ல. நீங்கள் பலதடவை கேட்டதால் இந்த பெயர்கள் இணைக்கப்பட்டுள்ள்து

அத்தோடு மாயன்(M) கோட்டே(K) நாராயணனும் சிவசங்கர் மேனனும் பிராமணர்கள் அல்ல!

திரு.எம்.ஜீ.ஆர் அவர்களும் மேனன் பிரிவை சேர்ந்தவர் தான்

Menon was a title of dignity bestowed upon the Nairs of Cochin by its king. It corresponds to the Pillai of Travancore and was the most common title of Central Kerala. The term Menon is derived from Melevan (mel means superior and avan, he). The recipient of the title held it lifelong or his family held it in perpetuity, depending on the amount of money known as Adiyara paid for securing the same. According to Edgar Thurston, in his Castes and Tribes of Southern India, as soon as a person was bestowed with this title of Menon he was presented with an Ola (palmyra leaf for writing on) and a style, the symbols of an accountant.

http://en.wikipedia.org/wiki/Menon

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது நடை பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் ஈழ விடுதலைக்கு இந்த விவாதம் வலு சேர்க்குமா நண்பர்களே ?

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது நடை பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் ஈழ விடுதலைக்கு இந்த விவாதம் வலு சேர்க்குமா நண்பர்களே ?

தமிழ்நாட்டில் இருந்து ஆதரவுக் கரம் நீட்டுவோரில் பெரும்பான்மையினர் பகுத்தறிவுப் பாசறையில் இருந்தே வந்துள்ளனர். பார்ப்பனிய ஆதரவாளர்கள் மிகவும் சிலரே.. அப்படியானவர்களும் இதயசுத்தியோடு ஆதரவு தந்தார்கள் என்று சொல்லமுடியாது.. எனவே அடக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் எமது போராட்டத்தையும் அத்தகைய ஒன்றாகக் கருதியே ஆதரவு தருகின்றார்கள்.. அவர்களுக்கு நாம் பார்ப்பனியத்தின் ஆதரவாளர்களாக இருப்பது சோர்வைத் தரலாம். அந்த வகையில் இந்த விவாதம் தேவையானதுதான்..

தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்தின் பண்பான சாதி அடக்குமுறை நிறைந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான் ஈழத்தமிழர்கள்.. போராட்டம் வலுப்பெற்ற கடந்த 30 வருடங்கள் பார்ப்பனியத்தின் தாக்கத்தை ஈழத்தில் குறைத்திருக்கலாம். ஆனால் முற்றுமுழுதாக அழிக்கப்படவில்லை. புலம்பெயர்ந்த சூழலில் வசிக்கும் சிலர் தமது சுய அடையாளம் என்று பார்ப்பனியத்தின் எச்சங்களைக் காவித்திரிவதும், அதனைக் காப்பாற்ற முனைவதும் நடைமுறையில் உள்ளது.. இத்தகைய போக்குகளை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், உள்ள பார்ப்பனியத்துடன் நேரடியாக ஒப்பிடமுடியாது..

நீங்கள் கூறுவது உண்மை தான். போராட்டத்துக்கு முந்திய ஈழத்துச் சூழலில் இல்லாத அளவு பார்ப்பன வக்காலத்து இப்போது புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் பலரிடம் உள்ளது.

ஈழப்போராட்டத்தை சிதைப்பதில் இந்திய ஆழும் ஆதிக்க பிரிவின் செயற்பாடுகளை அனைவரும் அறிந்த நிலையில் ஏன் இப்படி என்று தமிழகத் தமிழர்களுக்கு புரிந்து கொள்ள கஸ்டமானதாகவே இருக்கும்.

ஈழத்தில் ஆதிக்க சாதி என்பது அடயாளப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட அடயாளங்களை கொண்டதல்ல. பூணூலும் கிடையாது சமஸ்கிருத ஆழுமையும் கிடையாது. அரசு சார்ந்த அதிகார பதவிகளும் புலம்பெயர் தேசத்தில் தனித்துவத்துடன் இல்லை. அதாவது காலனித்துவ அரசு காலத்திலும் அதன் பின்னான சிங்கள அரசு காலத்திலும் இருந்த அதிகார பாதவிகளுக்கும் சாதியத் தனித்துவத்துக்கும் உள்ள தொடர்பு புலம்பெயர் தேசத்தில் இல்லை.

பல சாதிகளும் உயர் சாதிகளாக அடயாளப்படுத்தும் முயற்சிகளுக்கு ஏதுவான சூழல் வரலாற்றில் அதிகளவு புலம்பெயர் தேசத்து வாழ்வில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்சாதி அந்தஸ்தில் இருந்தவர்கள் அதை தக்க வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் செயற்படுவதும் உண்டு.

கல்வி அந்தஸ்த்து , கொளரவமான உத்தியோகம் , ஆங்கில புலமை மற்றும் பொருளாதார சமநிலை என்பன அனைத்துப் பிரிவனரும் அடையக்கூடிய நிலையில் புலம்பெயர் தேசத்து சூழல் அமைந்திருக்கின்றது. இதிலிருந்து தனித்துவமாக மேம்பட்ட அடயாளமாக தம்மை நிலைநிறுத்துவதற்கு பார்பன வக்காலத்தை பயன்படுத்துபவர்கள் அதிகம்.

இந்தியாவின் பார்பன ஆதிக்கம் , சாதிய அடக்குமுறைகள் மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எதிரான பர்பன சதிகள் ஒடுக்கு முறைகள் என்பனவற்றை அறிந்தும் அதற்கு வக்காலத்து வாங்கும் போக்கை கடைப்பிடிக்கும் ஈழத்தவர்களின் நிலைப்பாட்டுக்கு பின்னால் உள்ள காரணிகளை விளங்கிக் கொள்வது அவசியமானது. சமயத்தில் இது ஒரு பார்பனனை விட அதிகப்படியான திராவிட எதிர்ப்பிற்கு வித்திடுகின்றது. ஆனால் இந்த போக்கும் கருத்து நிலையும் ஒட்டுமொத்த ஈழத்தமிழனுடையதல்ல.

ஈழத்து ஆதிக்கப்பிரிவுகள் பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறக்கவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்

ஈழப்போராட்டத்துக்கு பார்பானியம் எதிரானது என்பது அனைவருக்கும் தெரியும்

போராட்டத்தின் நிமிர்த்தம் தமிழ்தேசியத்தின் கீழ் மக்கள் ஒருங்கணைந்துள்னர். எழுச்சி கொண்டுள்ளனர். அந்த எழுச்சி என்பது சிங்கள அடக்குமுறை சார்ந்தது. அதன் வீச்சு எல்லைக்கு உட்பட்டு சமூக விடுதலைக்கு வித்திடுகின்றது. சமூக விடுதலை சார்ந்து தமிழீழ தாயத்து மக்களின் நிலை வேறு புலம்பெயர் தமிழரின் நிலை வேறு. தாயகத் தமிழர்கள் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக சாதி மத வர்க்க பேதங்களை கடந்து தமிழராக ஒருங்கிணைந்து போராட வேண்டிய தேவை உள்ளது. இந்த ஒருங்கிணைவு ஆனது கால நீட்சியின் பிரகாரம் சமூக விடுதலையை சாத்தியமாக்குகின்றது. தமிழர் என்ற உறவு நிலை பலமாகின்றது.

இவ்வாறான பல காரணிகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் எமது தாயக விடுதலைக்காக குரல்கொடுப்பவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். திராவிட கொள்கை சார்பானவர்கள் எமக்காக தொடர்ச்சியாக குரல்கொடுக்கின்றபோதும் அவர்களை எதிர்த்து பார்பன வக்காலத்து வாங்கும் ஈழத்தமிழர்கள் ஊடாக தயாக விடுதலைப்போராட்டத்தையோ தாயக மக்களின் நிலைப்பாட்டையோ விளங்கி கொள்ளக் கூடாது என்பதையே தமிழகத்தில் இருந்து வரும் களஉறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு பழைய நிகழ்வு நினைவில் வருகிறது.

1991 மே மாதம்.. அப்போது தமிழ் நாட்டில் இருக்கிறேன். ஒரு நாள் விடிகாலையில் பக்கத்து வீட்டுக்கு முன்னால் ஒரே கூட்டம். கிட்டத்தட்ட ஒரு 20 அல்லது 25 சனம் இருக்கும். காரசாரமான விவாதங்களும் பரபரப்புமாக நிறைந்திருந்தது அந்த இடம். ஈழத்தமிழர் குறித்த வசைபாடல் அதிகம் இருந்தது. அந்த வீட்டில் அப்படி ஒரு நிகழ்வைக் கண்டதேயில்லை. அந்த வீட்டில் யார் இருக்கிறார், வருகிறார் போகிறார் என்பதே வழமையாகத் தெரியாது.

பிறகுதான் தெரிந்தது ராஜீவ் காந்தி முதல் நாள் இரவு கொல்லப்பட்டார் என்று. வானொலி முதல் தொலக்காட்சி வரை அழுது வடிந்தார்கள். பக்கத்து வீட்டுக்கு வந்த அவாளெல்லாம் சில மணிநேரத்துக்குப் பின் கலைந்து சென்றுவிட்டார்கள் புறுபுறுத்தபடியே..

ஓரிரு நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். நாங்கள் எங்களுக்குள் பக்கத்து வீட்டில் நடந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டோம். ஒருத்தன் கூவினான்..

மாப்பிளை.. புலியைச் சாட்டி நமக்கெல்லாம் வைக்கப்போறாண்டா ஆப்பு..! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்ஸ்:

தமிழ்நாட்டில் இருந்து ஆதரவுக் கரம் நீட்டுவோரில் பெரும்பான்மையினர் பகுத்தறிவுப் பாசறையில் இருந்தே வந்துள்ளனர். பார்ப்பனிய ஆதரவாளர்கள் மிகவும் சிலரே.. அப்படியானவர்களும் இதயசுத்தியோடு ஆதரவு தந்தார்கள் என்று சொல்லமுடியாது.. எனவே அடக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் எமது போராட்டத்தையும் அத்தகைய ஒன்றாகக் கருதியே ஆதரவு தருகின்றார்கள்.. அவர்களுக்கு நாம் பார்ப்பனியத்தின் ஆதரவாளர்களாக இருப்பது சோர்வைத் தரலாம். அந்த வகையில் இந்த விவாதம் தேவையானதுதான்..

கிருபன்ஸ், நீங்கள் சொல்வது நூற்றிற்கு நூறு வீதம் உண்மை.

அதற்காக தற்போதுள்ள நிலைமையில் சாதீயக்குத்துகு தூசு தட்ட வேண்டாம் என்பதே என் ஆதங்கம் .

சாதீயம் மூலம் தமிழர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு எத்தனையோ ஆட்கள் வாயில் நீர் வழிய பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை எல்லோரும் அறிவோம்.

இதனால் எம் விடுதலைப் போராட்டம் மேலும் பின் தங்குமோ என்ற பயம் எனக்கு உள்ளது.

எல்லோரும் மனிதர் தானே. மேற்கு நாடுகளில் அப்படித்தானே வாழ்கிறார்கள். தமிழராய் ஒன்று படுவோம். வெற்றி நிச்சயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.