Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும், திராவிடமும்!

Featured Replies

உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.

சமயம் மட்டுமே இம்மொழியைக் காத்தது என்ற புனையுரைகள் இணையத்தில் புனையப்பட்டு வரும் சூழ்நிலையில் இனமான திராவிட இயக்கத்தின் பங்களிப்பு இம்மொழியின் வளர்ச்சிக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் நமக்கு இயல்பாகவே எழுகிறது.

பண்டிதர்களும், சமயத் தலைவர்களும் தங்களுக்குள்ளாகவே நம் மொழியின் பயன்பாட்டினை பிரித்து எடுத்துக் கொண்டு சமயம் பரப்ப மொழியைப் பயன்படுத்திய வேளையிலே திராவிடர் இயக்கம் மட்டுமே தமிழை பாமரருக்கும் உரிமை கொண்டதாக்கியது.

தமிழிலே புதிய சொற்களை அறிமுகப்படுத்தியதில் முன்னோடிகளாக மறைமலையடிகளாரும், திரு.வி.க.வும் மற்ற பேராசிரியர்களும் பாடுபட்ட போதிலும், அவர்களது பணி எந்த அளவுக்கு மக்களை அடைந்தது என்பது கேள்விக்குறியே. புதுத்தமிழை சாமானியனும் பயன்படுத்தலாம், படைப்புகளை உருவாக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க முன்னோடிகள்.

தேசிய இன உணர்வானது தேசிய மொழியையே நேசிக்கச் செய்யும் இயல்பு கொண்டது என்ற நிலையில் மண்டல மொழியான தமிழின் தனித்தன்மையை காக்கும் வேலையை திராவிடர் இயக்கம் செவ்வனே செய்தது. சமயங்கள் தமிழை வாழவைத்தது என்ற கருத்தாக்கத்தை நாமும் ஒப்புக் கொண்டாலும் கூட சமயத்தமிழால் அடித்தட்டு தமிழனுக்கு விளைந்த நன்மை என்ன என்ற நியாயமான துணைக்கேள்வியையும் நம்மால் புறந்தள்ள முடியாது.

கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது.

திராவிடர்கள் நடத்திய பத்திரிகைகளான குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல், தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம், முல்லை, நீட்டோலை, புதுவாழ்வு, தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை, முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி, திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு, திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு, பூம்புகார், வெள்ளி வீதி, கனவு, அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு, முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம், திருவிடம், பூமாலை, சங்கநாதம், எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு ஆகியவவை எளிய உரைநடையில் புதுத்தமிழ் சொற்களை சாமானிய மக்களிடையே பரப்பியது.

வேறு வழியில்லாமல் கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன் போன்ற ஆரியப் பத்திரிகைகளும் தங்களது சொந்த அடையாள நடையை மாற்றவேண்டிய கட்டாயம் இப்பத்திரிகைகளால் ஏற்படுத்தப்பட்டது. பழைய ஆனந்தவிகடன், கல்கி இதழ்களை இன்றைய இதழ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இந்த உண்மை புலப்படும்.

இதுமட்டுமல்லாமல் சிறுகதை, நெடுங்கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என இலக்கியத்தின் மற்ற கூறுகளிலும் திராவிட இயக்கத்தின் அழகுத்தமிழ் அரசாட்சி மொழியின் பயன்பாட்டை அதற்குரியவர்களுக்கு கொண்டு சென்றது. துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியே பலமுறை ஒத்துக் கொண்ட ஒரு உண்மை “திராவிட இயக்கத்தினரால் தமிழர்களுக்கு நல்ல தமிழ் கிடைத்தது” என்பது.

புலவர் குழந்தையின் “இராவணக் காவியம்”, அதுவரை இருந்த இதிகாசத் தமிழ் செயற்பாட்டுக்கு மரண அடி கொடுத்தது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா முதற்கொண்டு திராவிட இயக்கத்தின் கடைநிலை எழுத்தாளர் வரை இனமான எழுச்சித் தொடரினை தமிழரிடையே தொடக்கி வைத்தார்கள்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் தினத்தந்தி எளியத் தமிழில் தினச்செய்திகளை தமிழருக்கு தரத் தொடங்கியது.

தமிழர்களின் வாழ்விலையில் முறையில் நடக்கும் இயல்பான நிகழ்ச்சிகளின் தலைப்புகள் தனித்தமிழில் மாற்றப்பட்டது திராவிட இயக்கம் தமிழ் மொழிக்கு செய்த மறுக்க முடியாத சாதனை எனலாம்.

விவாகசுபமுகூர்த்தப் பத்திரிகை – திருமண அழைப்பிதழ்

கர்ணபூஷனம் – காதணிவிழா

ருதுசாந்தி – மஞ்சள்நீராட்டு விழா

கிரஹப்பிரவேசம் – புதுமனை புகுவிழா

உத்தரகிரியை – நீத்தார் வழிபாடு

நமஸ்காரம் – வணக்கம்

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் தமிழன் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகள் நீக்கப்பட்டு, தமிழின் அழகுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வர திராவிட இயக்கம் அடிகோலியது.

அதுமட்டுமா? அரசியல் மேடைகளிலும் தமிழ் கொஞ்சத் தொடங்கியது

அக்ரசானர் – அவைத்தலைவர்

காரியதரிசி – செயலாளர்

அபேட்சகர் – வேட்பாளர்

இவ்வாறாகத் துறைதோறும் தனித்தமிழ் வளர்ச்சி திராவிட இயக்கத்தாரால் நித்தமும் நடைபெற்றது.

வேட்பாளர் என்ற சொல்லை திமுக 1957ல் தேர்தலிலே முதன்முறையாக கலந்துகொண்ட போது தான் தமிழகத்திலே பயன்பாட்டுக்கு வந்தது. இம்மாற்றத்தை பாராட்டி அக்காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகை தலையங்கமே எழுதியது.

“சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றியபோது எதிர்த்தார்கள். மந்திரிகளை அமைச்சர்கள் என்றபோது எதிர்த்தார்கள். மகாஜனம் வேண்டாம், பொதுமக்கள் போதும் என்றபோது எதிர்த்தார்கள். உபன்யாசத்தை சொற்பொழிவு என்றபோதும் எதிர்த்தார்கள்.

இவர்கள் எங்கேயிருந்து தமிழை வாழவைக்கப் போகிறார்கள். நெருப்பு எரிகிறவரையே குளிர்தெரியாமல் இருக்கும். நெருப்பு அணைந்துவிட்டால் மீண்டும் குளிர் நடுங்க வைக்கும்.

தமிழ்மொழி மீது ஆர்வமும், சுறுசுறுப்பும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே தமிழ் வாழும். இல்லாவிட்டால் மீண்டும் மகாஜனம் வந்துவிடும். பொதுமக்கள் அழிந்துவிடும்” என்று பேரறிஞர் அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார்.

அதாவது திராவிடர் இயக்கம் என்ற நெருப்பு அணைந்துவிட்டால், மீண்டும் மணிப்பிரவாள குளிர்நடுக்கம் தமிழனுக்கு ஏற்படும் என்பதையே பேரறிஞர் சூசகமாக குறிப்பிட்டார்.

இன்றைய தேதியிலும் தமிழ்வளர்ச்சி, தமிழ் முன்னேற்றம், தமிழர் வாழ்வாதாரம் போன்ற சொற்களைக் கேட்டாலே ஒரு கூட்டத்துக்கு வலிப்புநோய் கண்டுவிடுகிறது. திராவிடர்கள் தமிழ், தமிழர் நலனில் தனித்தன்மை கெடாமல் எதைச் செய்தாலும் அக்கூட்டம் எதிர்த்து வந்திருப்பதே வரலாறு.

இந்த குள்ளநரிக்கூட்டம் எதையெல்லாம் எதிர்க்கிறதோ, அதுவெல்லாம் தமிழனுக்கு நன்மை செய்யும் விடயங்கள் என்று அறிந்துக் கொள்ளலாம். அவர்களது எதிர்ப்பு நமக்கெதிராக எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் நாம் சரியான பாதையில் வீறுநடை போட்டு வருகிறோம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி.

்கல்லும் , மண்ணும் தோண்ற முன்னம் உயிர்கள் எப்படி தோண்றி இருக்கும் தலைவா...??? தண்ணியிலை, கடலிலை எண்டால் அங்கேயா மொழி தோண்றியது.. பகுத்தறிவிற்கு இது பிசகாக அல்லவா இருக்கு...!

"கல்" என்பது கல்வி, மண் என்பது பிழை அதை "மன்" எண்று படியுங்கள்... "மன்" என்பது மன்னன் அல்லது முடியாட்ச்சி .. கல்வி அறிவும் அரச ஆட்ச்சி களும் தோண்ற முன்னம் தோண்றிய தமிழ். என்பது தான் அதன் பொருள்..!!

வேட்பாளர் என்ற சொல்லை திமுக 1957ல் தேர்தலிலே முதன்முறையாக கலந்துகொண்ட போது தான் தமிழகத்திலே பயன்பாட்டுக்கு வந்தது. இம்மாற்றத்தை பாராட்டி அக்காலக்கட்டத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகை தலையங்கமே எழுதியது.

“சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றியபோது எதிர்த்தார்கள். மந்திரிகளை அமைச்சர்கள் என்றபோது எதிர்த்தார்கள். மகாஜனம் வேண்டாம், பொதுமக்கள் போதும் என்றபோது எதிர்த்தார்கள். உபன்யாசத்தை சொற்பொழிவு என்றபோதும் எதிர்த்தார்கள்.

திமுக என்ன திமுக நேரடியாக திமுக நிறுவுனர் அண்ணாத்துரை அவர்களுக்கு இந்த பாராட்டை சேர்த்து விடுங்கள்...

  • தொடங்கியவர்

்கல்லும் , மண்ணும் தோண்ற முன்னம் உயிர்கள் எப்படி தோண்றி இருக்கும் தலைவா...??? தண்ணியிலை, கடலிலை எண்டால் அங்கேயா மொழி தோண்றியது.. பகுத்தறிவிற்கு இது பிசகாக அல்லவா இருக்கு...!

"கல்" என்பது கல்வி, மண் என்பது பிழை அதை "மன்" எண்று படியுங்கள்... "மன்" என்பது மன்னன் அல்லது முடியாட்ச்சி .. கல்வி அறிவும் அரச ஆட்ச்சி களும் தோண்ற முன்னம் தோண்றிய தமிழ். என்பது தான் அதன் பொருள்..!!

நான் சொல்ல வேண்டிய விடையையும் நீங்களே சேர்த்து சொன்னதற்கு நன்றி தயா. விடை தெரிந்தும் ஒரு கேள்வி கேட்பது நல்ல மனநிலையில் இருப்பவருக்கு அழகல்ல... :mellow:

திமுக என்ன திமுக நேரடியாக திமுக நிறுவுனர் அண்ணாத்துரை அவர்களுக்கு இந்த பாராட்டை சேர்த்து விடுங்கள்...

திமுகவுக்கு அண்ணா என்ன சர்வாதிகாரியாகவா இருந்தார்? திமுக என்ற இயக்கத்துக்கு பொதுக்குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு மற்றும் ஏனைய அமைப்புகளும் உண்டு!

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வேண்டிய விடையையும் நீங்களே சேர்த்து சொன்னதற்கு நன்றி தயா. விடை தெரிந்தும் ஒரு கேள்வி கேட்பது நல்ல மனநிலையில் இருப்பவருக்கு அழகல்ல... :(

எப்படி அசடு வழிகின்றார் பாருங்கள். :mellow:

-------------

இன்று வரை தமிழ் மக்களிடம் தாக்கமாகவும், தமிழ் உணர்வோடும், இலக்கியநயத்தோடும் மக்கள் விரும்பிப்படிப்பவை என்றால் அது குமுதம், ஆனந்தவிகடன் போன்ற ஏடுகள் தான்.

ஒரு திராவிடப்பத்திரிகை விற்பனையில் ஒரு 50 கூடத் தேறுமா? அடுத்தவனைத் திட்டுவதும், கேலிப் பேசுவதும் தான் ஒரு கொள்கையாக்க கொண்டவர்களின் பத்திரிகையை மக்கள் எப்படி விரும்பிப் படிப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

"கல்" என்பது கல்வி, மண் என்பது பிழை அதை "மன்" எண்று படியுங்கள்... "மன்" என்பது மன்னன் அல்லது முடியாட்ச்சி .. கல்வி அறிவும் அரச ஆட்ச்சி களும் தோண்ற முன்னம் தோண்றிய தமிழ். என்பது தான் அதன் பொருள்..!!

தயா,

கல் தோன்றி மண் தோன்றாக் காலம் என்றல்லவா வருகிறது. இது உங்கள் விளக்கப்படி கல்வி அறிவு தோன்றி அரசாட்சிகள் தோன்றாத காலத்திற்கு முன் தோன்றிய மொழி என்றல்லவா வருகிறது? இது எந்தக்காலம்?

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வரை தமிழ் மக்களிடம் தாக்கமாகவும், தமிழ் உணர்வோடும், இலக்கியநயத்தோடும் மக்கள் விரும்பிப்படிப்பவை என்றால் அது குமுதம், ஆனந்தவிகடன் போன்ற ஏடுகள் தான்.

ஒரு திராவிடப்பத்திரிகை விற்பனையில் ஒரு 50 கூடத் தேறுமா? அடுத்தவனைத் திட்டுவதும், கேலிப் பேசுவதும் தான் ஒரு கொள்கையாக்க கொண்டவர்களின் பத்திரிகையை மக்கள் எப்படி விரும்பிப் படிப்பார்கள்?

*** குமுதத்தையும் ஆனந்த விகடனையும் போற்றும் உங்களுக்கு, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் சில வரிகள்:

தமிழனுக்கு உலைவைக்கும் தமிழ் செய்தி ஏட்டை

தமிழனே படிக்கிறான் பார் வெட்ககேட்டை

இதை யாரிடம் சொல்லி அழ

இவன் தலையில் இடி விழ!

நடிகையின் கவர்ச்சிப் படம் முன் பக்கத்தில் அடிக்கிறான்

நாள் தோறும் பச்சைகளை செய்திகளாய் வடிக்கிறான்

கொடியவன் நம் தமிழன் பண்பாட்டை அழிக்கிறான்

குப்பைகளை இந்த முண்டம் ஏன் வாங்கி படிக்கிறான்?

Edited by வலைஞன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

***

இன்றைக்கு மறுத்தாலும், ஏற்றாலும் ஆனந்தவிகடன், குமுதம் போன்றவைகளால் தான் தமிழில் பலர் ஆர்வம் கொண்டிருப்பதை எள்ளவும் மறுக்க முடியாது. திராவிடம் பேசுகின்றவர்களால் தமிழ் மணத்தில் எப்படி எல்லாம் கொச்சைத் தமிழும், ஆங்கிலக் கலப்பும் உலாவுகின்றது என்பதில் இருந்து அவர்களின் தமிழ்ப் பற்றுப் புரிந்து விடும்.

மதிப்புக்குரிய காசியணந்தன் திராவிட அமைப்பினரின் ஊடகங்கள் எதையும் படித்ததில்லையோ, பார்த்ததில்லையோ என்று தெரியவில்லை. கவர்ச்சிப் படம் பற்றிப் பேசுகின்றார். கலைஞர் தொ.கா இல் இப்போது எல்லாம் கும்மாங்குத்து, தூக்கிக் குத்துப் பாடல்கள் தானே போகின்றன.

தவிரவும் கலைஞர் ஒரு தடவை தனது பேரப்பிள்ளை "கட்டிப்பிடிடா கண்டபடி கட்டிப்பிடிடா" பாட்டுக்கு ஆடுவதைப் பார்த்து மகிழ்வதாக வேறு சொல்லியிருந்தார். அவரது பளழவிழாவிற்கு நடிகைகள் இரட்டைத் துணியோடு ஆடியதையும் பார்த்து மகிழ்ந்ததைப் பார்த்துக் கவர்ச்சி என்ற பதம் வராமல் போய்விட்டதே? அது கலைநயத்தோடு பார்க்கப்பட்டிருக்குமோ?

Edited by வலைஞன்
மூலக் கருத்து நீக்கப்பட்டுள்ளதால், அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நடிகைகள் இரட்டைத் துணியோடு ஆடியதையும் பார்த்து மகிழ்ந்ததைப் பார்த்துக் கவர்ச்சி என்ற பதம் வராமல் போய்விட்டதே? அது கலைநயத்தோடு பார்க்கப்பட்டிருக்குமோ?

உண்மையாகவா??தூயவன் சே....சே.....கருணாநிதி பலபேர்முன்னிலையிலை அப்பிடியெல்லாம் செய்யிற ஆளில்லை *********************************சுய தணிக்கை செய்யப்பட்டுள்ளது. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் ஒரு தடவை தனது பேரப்பிள்ளை "கட்டிப்பிடிடா கண்டபடி கட்டிப்பிடிடா" பாட்டுக்கு ஆடுவதைப் பார்த்து மகிழ்வதாக வேறு சொல்லியிருந்தார். அவரது பளழவிழாவிற்கு நடிகைகள் இரட்டைத் துணியோடு ஆடியதையும் பார்த்து மகிழ்ந்ததைப் பார்த்துக் கவர்ச்சி என்ற பதம் வராமல் போய்விட்டதே? அது கலைநயத்தோடு பார்க்கப்பட்டிருக்குமோ?

அம்மா ஜெயலலிதா பறவாயில்லை போலை கிடக்கு :lol:

தயா,

கல் தோன்றி மண் தோன்றாக் காலம் என்றல்லவா வருகிறது. இது உங்கள் விளக்கப்படி கல்வி அறிவு தோன்றி அரசாட்சிகள் தோன்றாத காலத்திற்கு முன் தோன்றிய மொழி என்றல்லவா வருகிறது? இது எந்தக்காலம்?

அனேகமாக கற்காலமாக இருக்கலாம்... அப்போதுதான் விலங்குகளை கற்களால் தாக்கி உணவு உண்டார்கள்.... அதன் பின்னர் தான் மனிதர்கள் கூட்டமாக வேட்டையாடினர்... உணவு உண்டனர்...

மக்கள் கூட்டமாக இருக்கும் போது பரிபாசைக்கு மொழி தேவைப்பட்டு இருக்கும்..

அந்த மக்கள் மொழி வந்தபின்னர் அதுக்கு தலைமை ஏற்க ஒருவர் பின்னர் ஆராட்ச்சிகள் புதிய கண்டு பிடிப்புக்கள் நிகழ்ந்தவை...!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா??தூயவன் சே....சே.....கருணாநிதி பலபேர்முன்னிலையிலை அப்பிடியெல்லாம் செய்யிற ஆளில்லை *********************************சுய தணிக்கை செய்யப்பட்டுள்ளது. :lol::lol:

ஹிஹி.

கண்ணதாசன் எழுதிய நூல் ஒன்று நன்றாக அது பற்றிச் சொல்லுமே!

  • தொடங்கியவர்

கண்ணதாசன் எழுதிய நூல் ஒன்று நன்றாக அது பற்றிச் சொல்லுமே!

”யோக்கியன் வர்றான், சொம்பை மறைச்சு வையுங்கோ!” என்றொரு சொலவடை தமிழ்நாட்டில் உண்டு.

கண்ணதாசனுக்கு அது அழகாக பொருந்தும் :wub::):D

***

இன்றைக்கு மறுத்தாலும், ஏற்றாலும் ஆனந்தவிகடன், குமுதம் போன்றவைகளால் தான் தமிழில் பலர் ஆர்வம் கொண்டிருப்பதை எள்ளவும் மறுக்க முடியாது.

ஆனந்தவிகடனும், குமுதமும் இல்லாவிட்டால் தமிழ் எப்போதோ அழிந்துப் போயிருக்கும் என்ற தூயவனின் கூற்று கவனிக்கத்தக்கது :lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கிலுக்!

உங்கள் ஆக்கங்கள் அருமை. ***

Edited by வலைஞன்
தனிநபர் மீதான விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.