Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்

Featured Replies

புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மே, 2008 - பிரசுர நேரம் 16:43 ஜிஎம்டி

செய்தியரங்கம்

விஜயகாந்த்

தமிழோசை

இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்.

புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``தமிழர்களுக்கு எதிராகக் கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். அது வியாபார ரீதியாகக்கூட இருக்கலாம்’’ என்றார்.

``சீனாவையும், பாகிஸ்தானையும் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள இலங்கை விரும்புகிறது. அது நடக்கக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. அதுதான் அங்கிருக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகள். அதனால், அதுபற்றி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் விஜயகாந்த்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

தகவல் பீபீசி தமிழோசை.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பண்ணுறார்போல

சரி

இது உயிர் சதை ரத்தம் எலும்பு கொடுத்து உருவாக்கியது

அதுவும் அவருக்கு நல்லாத்தெரியும்

ஏனெனில் எமது நீண்டநாள் தோழன் இவர்.......

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கலைஞரின் சீடராகவும் பலகாலம் இருந்தவர்??????

அவருக்கு இப்ப இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்படிக்கைக்கு தேவைப்படுகிறது போலும். இதொல்லாம் அரசியலிலை சகஜம் நாங்கள் விஜயகாந்தை தமிழனாக பார்க்க கூடாது. தெலுங்கனாகத்தான் பார்க்கவேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜகாந்த் அரசியலில் நன்றாக தேறிவிட்டார். பாவம் வைகோ :)

விஜகாந்த் அரசியலில் நன்றாக தேறிவிட்டார். பாவம் வைகோ :)

ஆயிரத்தில் ஒருவார்த்தை இதனால் தான் வைக்கோ தனியே நின்று கட்சியை பாதுகாக்க முடியவில்லை எதிரி ஆனால் விஜயகாந் தேறிவிட்டார்,,,

தன் மகனுக்கு பிரபாகரன் என தலைவரின் பெயரை வைத்திருப்பதாகவும் பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என சொல்லும் இந்த .......... உண்மை முகம் இன்றுதான் தெரியுது

ஈழக்கொள்கையில் என்றும் மாற்றம் இல்லாமல் இருந்தவர் வைக்கோ அவரை இவருடன் ஒப்பிடாதீர்கள்

Edited by இணையவன்
திருத்தம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

தன் மகனுக்கு பிரபாகரன் என தலைவரின் பெயரை வைத்திருப்பதாகவும் பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என சொல்லும் இந்த .......... உண்மை முகம் இன்றுதான் தெரியுது

ஈழக்கொள்கையில் என்றும் மாற்றம் இல்லாமல் இருந்தவர் வைக்கோ அவரை இவருடன் ஒப்பிடாதீர்கள்

யாருக்கு தெரியும் தமிழ்நாட்டில் பேட்டி கொடுக்கும் போது வேற மாதிரி கதைவிடுவாராரோ தெரியவில்லை :)

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

யாருக்கு தெரியும் தமிழ்நாட்டில் பேட்டி கொடுக்கும் போது வேற மாதிரி கதைவிடுவாராரோ தெரியவில்லை :)

யாரை சொல்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உண்மை எந்தளவு என்று தெரியமுன் மரியாதைக்குறைவான வார்த்தைகளைத்தவிர்க்கலாமே.??.?

சில விடயங்களை பத்திரிகைகள் கூட திரித்து எழுதுவதுண்டு???

யாரை சொல்கிறீர்கள்

வேற யார் விஜயகாந்த் தான் :)

இதில் உண்மை எந்தளவு என்று தெரியமுன் மரியாதைக்குறைவான வார்த்தைகளைத்தவிர்க்கலாமே.??.?

சில விடயங்களை பத்திரிகைகள் கூட திரித்து எழுதுவதுண்டு???

பிபிசியில் அந்த ..... சொல்வதை கேட்டு பாருங்கள்

விஜகாந்த் அரசியலில் நன்றாக தேறிவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

:) இவரைப்போய் நல்லவர் என்று நம்பினோமே ?!!! சரியான சந்தர்ப்பவாதி !

இவருக்கு ஈழத்தமிழர் கொல்லப்படுவது வெறும் வியாபாரமாகத் தான் தெரியுது.

இவருக்கும் கருனாநிதிக்கும் ரெண்டு ஒற்றுமைகள்,

முதலாவது, இருவரும் ஆரம்பத்தில் ஈழத்தமிழர் சார்பாகக் குரல் கொடுத்துவிட்டுப் பின்னர் தமது அரசியல் வாழ்வைப் பாதுகாப்பதற்காக இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழரை அழிக்கும் கொள்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள்.

ரெண்டாவது, இருவரும் தெலுங்கர்கள்.....இப்போது இங்குள்ள சிலர் வரப்போயினம் என்னெண்டு நீங்கள் அவரைத் தெலுங்கர் எண்டு சொல்லலாம் எண்டு கேட்டுக்கொண்டு. போதாக்குறைக்கு உங்கட வைக்கோவும் தமிழர் இல்லைத்தானே ? எண்டும் கேட்டு வைப்பினம் !

நாங்கள் கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்து மவுனியாய், காதிருந்தும் செவிடராய் இருப்போம். எம்மைக் கொன்று குவித்தாலும் கூட அது இந்தியாவாக இருப்பதால் பேசாமல் இருப்போம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசும் கொடுத்து சொல்லவேண்டிய வசனங்களையும் சொல்லிய பின் கமரா முன் 'அக்சன்' என்று இயக்குனர் சொன்னதும் செயற்படும் வாழ்வையே கொண்டிருருக்கும் இந்த விஜயகாந்தைப் பற்றி இவ்வளவு சிந்திப்பது ஏன்?

இப்போது கமரா இல்லாமல் மற்றவையெல்லாம் கிடைக்க மறைவிலிருந்து உரியவர்களால் சொடுக்கப்பட்டதும் தனது பாத்திரத்திற்கான வசனங்களை ஒப்பிக்கிறார்.

எய்தவன் இருக்க அம்பை நோகக் கூடாது.

இலங்கைக்கு ஆயுதம் வழங்க நினைக்கும் உயர் அதிகாரமையத்திற்கு ஆணையிடும் நிலையில் விஜயகாந்த் இல்லை. ஆனால் தாம் தொடரும் செய்கைகளுக்கான சாதகமான குரல் தமிழகத் தலைவர்களிடமிருந்து வரவில்லையே என்ற தேடலில் சிக்கிய நடிகன்தான் மன்னிக்க வேண்டும் அரசியல்வாதி விஜயகாந்த்.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே......

அடிடா விஜயகாந்து அடிடா....!

:mellow:

இன்றைய தமிழினம் ஏமாளித்தனமாக வாழாது.

இன்னொரு அரசியல்வாதி...

இது எல்லாம் அரசியலப்பா. என்று நாம் மற்றவர்களை நம்பாமல் எம்மை முழுமையாய் நம்புகின்றோமோ அன்றே விடிவு. கோமாளிகளின் கோமளிக் கதைகள் கேட்டு ஏமாந்தது போதும். நாற்காலி ஆசை யாரைவிட்டது.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசயகாந்துடன் ஒப்பிடும்போது விஜய டி ராஜேந்தர் எவ்வளவோ சிறந்தவர். சன் அரட்டை அரங்கத்தில் பல தடவை ஈழம் சம்பந்தமாக பேசும்போது மனிதர் உணர்ச்சி வசப்படுபவர்.

  • கருத்துக்கள உறவுகள்

பாய்ந்தடித்து உங்களின் கோபாவசத்தைக் காட்டுவது எம் போராட்டத்தைப் பலப்படுத்தக் கூடியதா?

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் கேள்வியிலும் நியாயம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிற்கு இந்தியா போர்கல உதவியளிப்பது ஈழத்தமி்ழர்களுக்கு கெதிரானது அல்ல. - விஜயகாந்த்

சிறிலங்காவிற்கு இந்தியா போர்கல உதவியளிப்பதை ஈழத்தமி்ழர்களுக் கெதிரான நடவடிக்கையாக பார்க்கக்கூடாது என்று தமிழகத்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசிற்கு இந்தியா போர்கல உதவிகளை செய்து வருவதாகவும் அது தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுவதாகவும் விஜயகாந்திடம் சில ஊடகங்கள் கேள்வி ஏழுப்பின. தெதறடகுகு பதிலளித்த அவர் தமிழர்களுக்கு எதிராக கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்! அது வணிக ரீதியாக கூட இருக்கலாம் என்று இந்தியாவின் போர்கல வழங்குகையை விஜயகாந்த் நியாயப்படுத்தியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான போருக்காகவே சிறிலங்கா இந்தியாவிடம் இருந்து போர்கலங்களை கொள்வனவு செய்கிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

அரசியல் அனுபவமற்ற திரு.விஜயகாந்த் பி.பி.சி போன்ற தளங்களில் கேட்கப்படும் சிக்கலான கேள்விகளுக்கு

நாசூக்காக பதில் அளித்து கேள்வி கேட்டவரையே மடக்கும் வித்தை தெரியாமல் கொஞ்சம் தடுமாறி இருக்கலாம்.

அதற்காக நாமும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு பி.பி.சி தமிழோசையின் சதிவேலைக்கு துணை போக வேண்டாமே!!!

பொறுத்திருந்து பார்ப்போம்!!! விஜயகாந்திடம் இருந்து ஏதாவது விளக்க அறிக்கை வருகிறதா என்று!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில்அரசியள்செய்தவர்கள் ஈழத்திற்குசதகமாக குரல்கொடுத்து பதவிக்குவந்தார்கள் ஆனாள்எதுவுமே செய்யவிள்லை. ஆனால்இவர்ஈழத்திற்கெதிராககு

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தன் 1,

உங்கள் தேற்றம் புரியவில்லை ? இந்திய அரசியல் வாதிகளில் நல்லவர்கள் இருக்கிறார்களா ?

விஜயகாந்

இந்திய அரசு சொன்ன கருத்தை

இங்கே முன் வைக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

இக் கேள்வியை விஜயகாந் அரசிடம் எழுப்பியிருக்கலாம்.

இந்தியா : இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காத போது

இலங்கை, சீனாவையும் பாகிஸ்தானையும் நாடி அதை பெறுகிறது.

அது இந்தியாவுக்கு தலையிடி!

அது போலவே

அமெரிக்கா உதவி வழங்காத போது

அமெரிக்காவுக்கு எதிரான

ஈரான் போன்ற நாடுகளை தேடிச் சென்று

அவர்களை அழைத்து உதவிகளை பெறுகிறது.

லண்டனில் இயங்கும் சிறீலங்காவின் கல்விமான்கள் குழுவொன்றே

இக் காய் நகர்த்தல்களை செய்ய சிறீலங்கா அரசுக்கு வழிகாட்டுகிறார்கள்.

தற்போதைய இந்திய அரசு

தமிழ் நாட்டில் மாறி வரும் தமிழீழ உணர்வு எழுச்சியை ஏற்பதா?

அல்லது

உலக வல்லரசான தனது தகமைகளை தக்க வைத்துக் கொள்ள முயல்வதா?

எனும் இக்கட்டுக்குள் சிக்கி இருக்கிறது.

அன்னை இந்திராவுக்கு பின்னர்

திடமாக முடிவுகளை எடுக்கக் கூடிய ஒரு தலைவர் இன்று இல்லை

என்பது ஒரு சோகம்.

இது தமிழக உணர்வை

தமிழகத்தில் உள்ள ஒருவரை வைத்து தணிக்க எடுத்த முயற்சியாகக் கூட இருக்கலாம்.

செய்தியாளர்கள் மத்தியில்

யாரோ ஒருவர் கேட்ட கேள்வி பீபீசீ சேகரித்து வெளியிட்டு விட்டது.

கேட்டவர் பீபீசீ நிருபராகவும் இருக்கலாம் வேறு ஒரு நிருபராகவும் இருக்கலாம்.

பல ஊடகங்கள் ஒரு பிரமுகரை சந்திக்கும் போது

நடைபெறும் பகிர்வே இது!

என்ன இருந்தாலும் விஜயகாந்

தனது சுயநலத்துக்காக இப்படி பேசியிருக்கக் கூடாது.

பண்டிருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள்

இவருக்கு அரசியல் தெளிவை உருவாக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இவரும்

இன்னொரு ஜெயலலிதாவாக வாய்ப்புண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.