Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருவி - விமர்சனம்! [விஜய்-திரிஷா]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img1080506043_1_1.jpg

வைர சுரங்கத்துக்காக ஒரு கூட்டம் மக்களை அடிமையாக்கி வைத்திருக்கும் வில்லன். வில்லனிடமிருந்து தனது அப்பாவையும், அப்பாவி ஜனங்களையும் காப்பாற்றும் ஹீரோ. காப்பாற்றும் வேலைகளுக்கு நடுவில் வில்லனின் அழகான தங்கையுடன் காதல். முடிவில் எல்லோரும் எதிர்பார்த்த சுபம்!

பழைய பிளாக் அண்டு ஒயிட் ஜெய்சங்கரின் கெளபாய் ஸ்டைல் கதைதான் குருவி. விஜயின் அப்பா மணிவண்ணன் தனது மூன்று மனைவிகளையும், ஒரு டஜன் பிள்ளைகளையும் அம்போவென விட்டுவிட்டு தலைமறைவாகிறார். கடன் தொல்லைக்குப் பயந்து ஓடிப்போனார் என்று நினைத்திருக்க, மலேசியாவில் தான் சந்தித்த தாதா கோச்சாதான் (சுமன்) தனது அப்பாவை அடிமையாக்கி வைத்திருக்கிறான் என்ற விவரம் விஜய்க்கு தெரிய வருகிறது. அப்பாவை காப்பாற்ற வைரச் சுரங்கம் இருக்கும் ஆந்திரா கடப்பாவுக்கு வரும் விஜய் வில்லன்களை அழித்து அடிமைகளை மீட்கிறார்.

3638B_kur03.jpg

ஆட்டத்திலும், அடிதடியிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் விஜய். அடிக்கடி பஞ்ச் டயலாக்கும் பேசுகிறார். என்னதான் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் பல நூறு மீட்டர் பறந்து ரயிலைப் பிடிப்பதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா.

விவேக்கிற்கு டபுள் மீனிங் இல்லாமல் டயலாக் பேசவே தெரியவில்லை. த்ரிஷா? நாலே பாட்டோடு ஒதுங்கி விடுகிறார்.

சுமன் குழந்தையை கையில் வைத்து துப்பாக்கியால் மிரட்டுவதெல்லாம் நம்பியார் காலத்திலேயே பார்த்தாயிற்று. கொண்டா ரெட்டியாக வரும் ஆசிஷ் வித்யார்த்தி சுமனைவிட தேவலை. கல்குவாரி எ·பெக்டில் இருக்கும் கடப்பா லொகேஷனும் அந்த கடப்பா வில்லனும் பக்கா தெலுங்கு ஸ்டைல்.

குருவியில் குறிப்பிட்டு சொல்லும்படி இருப்பவை வித்யாசாகரின் இசையும், கோபிநாத்தின் கேமராவும். ஒவ்வொரு ஃபிரேமும் அற்புதம்.

படம் நெடுக பத்தடி தூரத்தில் நின்று விஜயை சுடுகிறார்கள். ஏ.கே.47-ம் உண்டு. ஆனால் ஒரு குண்டு அவர் மீது பட வேண்டுமே? ம்ஹூம்...!

ஹைடெக் டெக்னீஷியன்களின் உழைப்பை கந்தலான திரைக்கதை காலி செய்து விடுகிறது. விஜயை நம்பியதில் பாதி கதையையும் நம்பியிருக்கலாம் தரணி

வெப் உலகம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீர் அபிஷேகம், பிரமாண்டமான ஓபனிங், பிரமாதமான கூட்டணி. எல்லாம் இருந்தும் எதிர்பார்த்த அளவு இல்லையாம் குருவி. சைலண்டாக குமுறிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல் ஒரு செய்தி.

சூப்பர் ஸ்டாரின் சிவாஜியையே சைக்கிள் கேப்பில், ஸாரி... தியேட்டர் கேப்பில் தாண்டியிருக்கிறது குருவி. இதுவரை ஒரு காம்ப்ளக்ஸில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற சாதனை சிவாஜிக்கு இருந்தது.

சென்னையிலுள்ள மல்டி ஃபினிக்ஸ் ஒன்றில் 25 காட்சிகள் (ஒரு தினத்தில்) திரையிடப்பட்டது சிவாஜி. இந்த சாதனையை குருவி முறியடித்திருக்கிறது.

தமிழ் திரையரங்கு சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒரே நாளில் 33 காட்சிகள் குருவி திரையிடப்பட்டது. இளம் ஹீரோக்கள் யாரும் அண்ட முடியாத அபார சாதனை இது. தசாவதாரம் குருவியின் சாதனையை உடைத்தால்தான் உண்டு.

webulagam.com

Edited by கறுப்பன்

அண்ணா..என்னங்கண்ணா இது....குருவி சரியில்லீங்களா..நம்ம நாட்டு வைத்தியர் விஜய் எவ்வளவுசு கஸ்ரப்பட்டு நடிச்சிருக்கார் இப்டி சரி இல்லன்னுட்டுங்க அண்ணா....

--- அறுந்த அச்சீலேட்டர் கேபிளை வாயால இழுத்திட்டு ரேஸ்ல ஜெயிக்கிறாரு...

அவர் வேகமா வாயால ஒரு இழுவை இழுப்பாரு கார் பறந்து போய் ஜெயிக்கும் தெரியுமா.....

----- சும்மா ஆயிரம் அடி உச்சியில இருந்து காடெல்லாம் தாண்டி பாஞ்சு...பாலத்தில(தண்ணில இல்ல)..

சுமார் 60-90 மைல் வேகத்தில போய்க்கொண்டிருக்கிற ரெயினை விரட்டி (காலால) பிடிச்சு ஏறி தொத்தி...கலக்கினாரு ..

---- கடைசி சண்டைக்காக.. நான் கத்தி அருவாளாலதான் சண்டை பிடிப்பன் எண்டு இணக்குனர்கிட்ட சொல்லி வில்லஙக கிட்ட இருந்தா எல்லா துப்பாக்கியையும் மறைச்சிட்டு அது காட்டாமலே க்ளைமாக்ஜ் எடுத்துருக்கோம்..

எவ்வளவு மாஜிக்.. எவ்வளவு பில்டப்.. சவுண்ட் வேற காதை பிக்கும்.. பின்னுக்கு வேற படம் தொய்யுதுன்னு முன்னுக்கு எவ்வளவு கலகல விவேக் வந்ததால... கில்லில 10 வீதம் இல்லண்டாலும் இரண்டு கில்லின்னு பேட்டி வேற குடுத்தோம்ல..

முடிவு பண்ணிட்டோம் நம்ம மசால சினிமாவ தமிழனைத் தவிர வேற யாரும் பாக்க கூடாது..நாம இப்டியே... படம் எடுத்து மக்கள் தலையில மிளகாய் அரைப்போம்... :D

என்கிட்ட நீங்க கேட்க ஆசைப்படுறீங்க..

நீங்க நல்லவரா?.. கெட்டவரான்னுதானே...

தெரியல்லியே... :mellow::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைக்காலங்களில் வரும் திரைப்படங்களில் கொடூரசித்திரவதைகள்,அவதூறான வசனநடைகள் கதாநாயகனின் முழுமுட்டாள்த்தனமான வீரதீரச்செயல்கள் நிறையவே இடம்பெற்று வருகின்றன.இதில் ஆந்திராவில் இருப்பதை அப்படியே பிரதிபண்ணும் விஜயும் விதிவிலக்கல்ல.

"குருவி" எனும் தலைசிறந்த திரைப்படம் திரையரங்கைவிட்டு விரைவில் பறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
:D இவரெல்லாம் ஒரு "இளைய தளபதி", இவருக்கெல்லாம் ஒரு படம். தமிழ்நாட்டு ஜனங்களே ! என்ன பாவம் பண்ணினீங்களோ ?@!

உதாலைதான் நான் விஜயோடை படமே பார்ப்பதில்லை. :D:lol::lol:

நடிகர்கள், இயக்குனர்களை வைத்தே, படம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நல்ல வேளை நீயூட்டன், ஐன்ஷ்டைன் எல்லாரும் முன்னமே போய் சேர்ந்திட்டினம்... விஜய் பண்ணினதில நல்ல நகைச்சுவை (அதாவது காமெடி) படம் இது தான்...! விஜயகாந் பரவாயில்லை

என்ன தான் சொன்னாலும் விஜய் அண்ணா சொல்லுவாரே ஒரு "டயலக்" நான் திருப்பி போறவன் இல்ல திருப்பி கொடுக்கிறவன் என்று :D ..(நானே விசிலடித்து போட்டன்)...அப்ப நேக்கு நெடுக்ஸ் தாத்தா ஞாபகம் தான் வந்தது என்றா பாருங்கோவன்... :lol:

அப்ப நான் வரட்டா!!

ரசிகர்களும் நுழைவுச்சீட்டை திருப்பிக்கொடுத்து...அந்த வசனத்தை சொல்லிப்பார்க்கலாம்

யுத்ததத்தாலை அரைவாசி சாகிறது. இப்படி அருமையான படங்களை வெளியிட்டு மிச்சத்தையும் கொல்றாங்கள்

ரசிகர்களும் நுழைவுச்சீட்டை திருப்பிக்கொடுத்து...அந்த வசனத்தை சொல்லிப்பார்க்கலாம்

என்ன இப்படி சொல்லிட்டியள் "லீ" அண்ணா :lol: ...விஜய் அண்ணா கார் ரேசில அந்த பழைய காரை வைத்து கொண்டு ஓடுவாரே ஓரு ஓட்டம்..(அடடடடட)..அத எல்லாம் பார்க்க இரண்டு கண் போதாது பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருப்பன் பஞ்ச். கண்ணா படம் பார்க்க இரண்டு கண்கள் இருக்கிறது முக்கியம் இல்லை. அத ஒத்த கண் ஆகாம பார்த்துக்குறது ரொம்ப முக்கியம்

கருப்பன் பஞ்ச். கண்ணா படம் பார்க்க இரண்டு கண்கள் இருக்கிறது முக்கியம் இல்லை. அத ஒத்த கண் ஆகாம பார்த்துக்குறது ரொம்ப முக்கியம்

அட நீங்களுமா முடியல்ல என்னால :lol: ...இப்ப நான் சொல்லுறன் கண்ணா படம் பார்க்கிறது முக்கியமல "தியேட்டரில" பக்கத்தில இருக்கிறவாவை பார்க்கிறது தான் முக்கியம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ன இப்படி சொல்லிட்டியள் "லீ" அண்ணா :rolleyes: ...விஜய் அண்ணா கார் ரேசில அந்த பழைய காரை வைத்து கொண்டு ஓடுவாரே ஓரு ஓட்டம்..(அடடடடட)..அத எல்லாம் பார்க்க இரண்டு கண் போதாது பாருங்கோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

விட்டால் காரை விட்டு இறங்கி ஓட்டமாக ஒடியே மற்ற காரை எல்லாம் பிடிச்சிருப்பார்,..! அது சரி சிட்னியிலே முதல்நாள் காட்சி பாத்திட்டியள் போல..! படம் பாத்தியளோ..இல்ல பக்கத்திலே உள்ளவையள பத்திரமா பாத்தியளோ..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நீங்களுமா முடியல்ல என்னால :wub: ...இப்ப நான் சொல்லுறன் கண்ணா படம் பார்க்கிறது முக்கியமல "தியேட்டரில" பக்கத்தில இருக்கிறவாவை பார்க்கிறது தான் முக்கியம்.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

அட எல்லாம் உங்களால வந்ததுதான்.

இம்புட்டு நாளும் அத தானே பண்ணிக்கிட்டிருந்தேன்.

நீங்களூம் அத தான் பார்க்குறியள் போல....

அப்ப படம் நல்லா இருந்தா என்ன.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் தமிழ்த்திரையுலகில் ஓரிரண்டு படங்களைத் தவிர சகஜம்தானே? இப்படியான திரைப்படங்கள் இதுதான் முதற்தடவையா என்ன? வந்தமா, இருந்து பார்த்தோமா, போனோமா என்று இருக்கிறத விட்டிட்டு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மார்க்கெட் தொய்வடையும் போதெல்லாம் தூக்கி நிறுத்த விஜய்க்கு ஒரு ரீ-மேக் படம் வேண்டும். அழகிய தமிழ் மகன், குருவி இரண்டும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால் ரீ-மேக் சப்ஜெக்டில் கவனம் பதித்துள்ளார் விஜய்.

பிரபுதேவா விஜயின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். சிங்கம் என்று படத்துக்குப் பெயரும் வைத்தாகிவிட்டது. சிங்கம் உலவ காடு (கதை) வேண்டுமே?

இந்தி 'போக்கிரி'யை இயக்கிவரும் பிரபுதேவா, பாபிதியோல், ப்ரீத்தி ஜிந்தா நடித்த சோல்ட்ஜர் படத்தை விஜய்க்கு பரிந்துரை செய்துள்ளாராம். இதுவரை விஜய் தரப்பிலிருந்து பரிந்துரைக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்றாலும், சிப்புக் கொடியும் காட்டவில்லையாம்.

அநேகமாக சோல்ட்ஜரே சிங்கமாக உறுமும் என்கிறார்கள்.

webulagam.com

விட்டால் காரை விட்டு இறங்கி ஓட்டமாக ஒடியே மற்ற காரை எல்லாம் பிடிச்சிருப்பார்,..! அது சரி சிட்னியிலே முதல்நாள் காட்சி பாத்திட்டியள் போல..! படம் பாத்தியளோ..இல்ல பக்கத்திலே உள்ளவையள பத்திரமா பாத்தியளோ..!

அட..விஜய் அண்ணா நினைத்தா வானத்தில பறக்கிற ஏரோபிளேனை கூட பிடித்திடுவார் போங்கோ :D ...அட ஏன் கேட்பான் லீ அண்ணா வழமையா நாம போய் முதல் காட்சி பார்த்திடுவோம் ஆனா அன்னைக்கு என்று பார்த்து நேக்கு அவசர வேலை ஒன்னு :lol: ..அதானல என்னால போக ஏலாம போச்சு முதல் காச்சிக்கு..(நம்ம "பிரண்ஸ்" எல்லாரும் போனவை தான் பாருங்கோ).. :lol:

அட வழமையா நாங்க பக்கதில இருக்கிறவைய பத்திரமா பார்க்க தானே.."தியேட்டர்" பக்கமே போறனாங்க யார் மிணகட்டு படம் பார்க்க எல்லாம் போவாங்க :unsure: ..(ஆனா ஒன்னு விஜய் அண்ணாவின்ட படதிற்கு கனக்க பொண்ணுங்க வருவாங்க ஏனோ தெரியல அது தான்).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

அட எல்லாம் உங்களால வந்ததுதான்.

இம்புட்டு நாளும் அத தானே பண்ணிக்கிட்டிருந்தேன்.

நீங்களூம் அத தான் பார்க்குறியள் போல....

அப்ப படம் நல்லா இருந்தா என்ன.......

அட என்னாலையா வந்தது...(சா..சா தும்பலு,விக்கலு எல்லாம் எப்படி வருது) :unsure: ..தானா வருது அத மாதிரி தானும் "பஞ்சும்" பாருங்கோ கருப்பன் அண்ணா :lol: ..அட அப்படி போடுங்கோன்னா அரிவாள அப்ப நீங்களும் நம்ம ஆளு தான்..படம் ஓடி கொண்டே இருக்கும் அதே நேரம் நாமளும் பார்த்துகிட்டே இருப்போம் என்று சொல்ல வந்தனான் பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

இதெல்லாம் தமிழ்த்திரையுலகில் ஓரிரண்டு படங்களைத் தவிர சகஜம்தானே? இப்படியான திரைப்படங்கள் இதுதான் முதற்தடவையா என்ன? வந்தமா, இருந்து பார்த்தோமா, போனோமா என்று இருக்கிறத விட்டிட்டு...

ம்ம்..அண்ணா நீங்க சொல்லுறதும் சரி தான் :lol: ..(ஆனாலும் இந்த படம் கொஞ்சம் ஓவர் தான் பாருங்கோ)..ஆனாலும் அப்படி இருந்தா தானே நம்மால பார்க்கவும் முடியும்.. :lol:

கடசியா வந்த தமிழ் படங்களிள யாரடி நீ மோகினி,சந்தோஷ் சுப்பிரமணியம்,வெள்ளிதிரை..இந

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதான் நீங்களே சொல்லிவிட்டீங்களே, இப்படியான படங்கள் வந்தால்த்தான் பார்ப்பீர்கள் என்று? பெரும்பாலானா மக்களும் இப்படியான படங்களைத் தான் விரும்பி பார்க்கிறார்கள். இப்படி நிலமை இருக்கும்போது, எப்படி நீங்கள் வேறுவிதமான, வித்தியாசமான திரைப்படங்களை எதிர்பார்க்கலாம்? :rolleyes:

நான் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு, கடைசியாக பார்த்தது கல்லூரி. படம் எல்லாவிதத்திலும் நல்லதென்று சொல்லலாம்; கதை, இசையமைப்பு, நடிப்பு, ...என்று அடிக்கிக்கொண்டே போகலாம். நீங்கள் பார்த்தீர்களா?

Edited by Tigerblade

உதோ விசயம்.. நான் இது தெரியாமால் இணையத்திலே தரவிறக்கி அல்லோ பார்க்கிறனான்ன்

அதான் நீங்களே சொல்லிவிட்டீங்களே, இப்படியான படங்கள் வந்தால்த்தான் பார்ப்பீர்கள் என்று? பெரும்பாலானா மக்களும் இப்படியான படங்களைத் தான் விரும்பி பார்க்கிறார்கள். இப்படி நிலமை இருக்கும்போது, எப்படி நீங்கள் வேறுவிதமான, வித்திசயமானா திரைப்படங்களை எதிர்பார்க்கலாம்? :wub:

நான் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு, கடைசியாக பார்த்தது கல்லூரி. படம் எல்லாவிதத்திலும் நல்லதென்று சொல்லலாம்; கதை, இசையமைப்பு, நடிப்பு, ...என்று அடிக்கிக்கொண்டே போகலாம். நீங்கள் பார்த்தீர்களா?

ம்ம்..நீங்க சொல்லுறதும் சரி தான் அண்ணா ஆனா பாருங்கோ மிணகட்டு திரையரங்குகளிற்கு போகக்க..( இப்படியான ரசனையுடன் கூடிய படத்தை பார்க்கும் போது தான் ஒரு வித உற்சாகமாக இருக்கு)..அதிலையும் வந்து அழுது கொண்டு இருந்தா எப்படி தான் பார்க்கிறது..(வீட்ட இருந்து பார்க்கலாம் அப்படியான படங்களை).. :D

வித்தியாசமான திரைபடங்களை தரும் போது குறிபிட்ட காலத்துடன் ஒன்றியதாகவும் அவ் திரைபடங்கள் இருந்தால் கண்டிப்பாக அந்த திரைபடம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்..இல்லாட்டி அத வேற நான் சொல்லனுமா என்ன??

சில நல்ல தமிழ் படங்கள் வந்திருக்கு ஆனால் பெரிதாக ஓடவில்லை அதுக்கு காரணம் திரைகதை நன்றாக இருக்கும் ஆனால் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி அதனை கொடுக்கமாட்டார்கள் :) ..சில படங்களிள கதையே இல்லாம இருக்கும் ஆனா படம் நன்னா போகும் ஏனேன்டா இன்றைய காலகட்டதில் மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்று பார்த்து கொடுப்பதே ஆகும்..அதில் தான் வெற்றி தங்கியுள்ளது என்பது என் கருத்து... :D

மற்றது எங்கன்ட தமிழ் சினிமாவில சில பேர் கையை காட்டினாலே படம் ஓடுது அது வேற கதை பாருங்கோ..(அப்படியான படங்கள் எனக்கும் நன்ன விருப்பம் தான்).. :lol:

மற்றது நீங்கள் குறிபிட்டு இருந்தீர்கள் "கல்லூரி" திரைபடத்தை பற்றி கள்ள இறுவட்டில் (கள்ள சீடியில்) பார்த்தனான் இங்க திரையரங்குகளிள போடவில்லை இந்த படத்தை..(போட்டிருந்தாலும் சனம் போயிருக்குமோ என்பது வேற விசயம் பாருங்கோ).. :D

அருமையான ஒரு கதை என்று சொல்லலாம் இறுதி வரை செயற்கைதனமில்லாத நடிப்பும் கதையமைப்பும் அருமை என்று கூறினாலும்..(சில இடங்களில் சோர்வை தருகிறது என்பது உண்மை :) )..குறிப்பாக அந்த "கல்லூரி" என்ற திரைகதை இந்தியாவில் ஒரு அரசகல்லூரியில் ஒன்றில் நடக்கும் நட்பு,காதல்.போராட்டம்,வாழ்க்

உதோ விசயம்.. நான் இது தெரியாமால் இணையத்திலே தரவிறக்கி அல்லோ பார்க்கிறனான்ன்

ம்ம்...உது தான் விசயம் பாருங்கோ :wub: ...எனி விஜய் அண்ணா மற்றது சூர்யா அண்ணாவின்ட..(அட நீயூ படத்தில வாற சூர்யா இல்ல சொல்லிபோட்டன்) :lol: ..படத்தை எல்லாம் "தியேட்டரில" போய் பாருங்கோ படமும் பார்த்த மாதிரி போயிடும் பக்கத்தில இருக்கிறவாவையும் பார்த்த மாதிரி போயிடும் :lol: ..உவையள் இரண்டு பேரின்ட படமும் தான் பொண்ணுகளுக்கு கூடவா பிடிக்கும் என்னு நம்ம ஆராய்ச்சி சொல்லுது.. :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.